Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

Featured Replies

264360_444844768890209_1521428482_n.jpg
  • Replies 109
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் நாங்கள் அடிச்சு பிடிப்போம் எமது நாட்டை பொத்திக்கொண்டு காசை மட்டும் தாங்கோ என்பது போலான ஒரு நிலைபாடுதான் உலக நாடுகள் இப்பத்தான் எங்கட பக்கம் நிற்கின்றது என்ற சுத்தலும் .

உண்மையில் இப்ப எங்கள் நிலை நடு றோடுதான் ,அதுதான் உண்மை .

தமிழ் நாட்டில் தன்னை தீ மூட்டியவனுக்கு வீரவணக்கம் செலுத்தி விட்டு அப்படியே போக பழகிவிட்டோம் .எல்லாம் ஒரு போர்மாலிட்டி ஆகிவிட்டது .தற்கொடையாளன் ,வீரவணக்கம் ,மாவீரர் ,என்றேல்லாம் வீர வசனம் பேசி விட்டு அவனவன் இளையராஜா கொன்செட்டிற்கு $150.00 கொடுத்து பார்க்க லைனில நிற்கின்றான் .ஒவ்வொரு கிழமையும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் .இந்த வருடம் மட்டும் கனடாவில் உன்னி கிருஷ்ணன் ,சித்திரா ,கார்த்திக் ,அன்றியா ,மதுபாலகிருஷ்ணன் எல்லோரது கச்சேரிகளும் தனிதனி நடந்தது .

வடக்கில் நாம் தேர்தலில் வெல்வதும் கேள்விக்குறியாகிவிட்டது .

***

சிங்களவன் நல்ல வடிவா அரசியல் செய்றான் முஸ்லிம் அதில குளிர் காயுறான்....நாங்க ஆஸ்திரேலியாக்கு கிழமைக்கு ரெண்டு போட் விடுவம்.....

என்னோட கருத்து என்னெண்டா இப்ப எதாவது கிடைக்கிற ஒண்டில இருந்தது தொடங்குவம்......சிங்களம் விரும்பாத எந்த தீர்வும் எங்களுக்கு கிடைக்க போறது. இல்லை....

.....புலம்பெயர் தமிளன நம்பி இலங்கையிலஅரசியல் நடத்திறது. சுத்த வேஸ்ட். இலங்கை அரசியல் இலங்கை தமிழர்களால் அங்குள்ள தமிழருக்காக நடத்தப்பட வேண்டும்..... இங்க இருந்து எவனும் அங்க பொய் இருக்க போறதில்ல

இது ஆயிரம் கோடி உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவன் எவன் அரசியல் அங்கு செய்கிறான்?இரானுவம் ,புலனாய்வுதுறை இவையளின்ட கண்ணில மண்னை தூவிப்போட்டு நாங்கள் எப்படி அரசியல் செய்யிறது....

புலம்பெயர்ந்தவன் கோவில் திருவிழா,கும்பாபிசேகம்,காணி வீடுகள் விற்க்க,வாடகைக்கு விட போன்ற செயல்களைசெய்யத்தான் தாயகம் போறான் அரசியல் செய்யவில்லை...

நாய்க்கு எங்க அடிச்சாலும் காலைத்தான் தூக்குமாம்...அது போல சிறிலங்காவில் என்ன நடந்தாலும் புலம் பெயர்ந்தவன் தான் காரணம் என்று சிலர் ......

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுன் அண்ணாவின் கருத்தில் இருந்து எதையாவது உருப்படியா எடுக்கக் கூடியதா இருந்திருக்கா. சும்மா விட்டுத் தள்ளுங்க. அவருக்கு வாந்தி எடுக்கல்லையன்னா.. பிரசர் கூடிடும்..! எடுத்திட்டுப் போகட்டும்..! இல்ல... உமாமகேஸ்வரனும்.. அமிர்தலிங்கமும் மட்டும் இருந்திருந்தால் தமிழ் மக்கள் சொர்க்கத்தில இருக்கிறது போல கனவு கண்டாரோ என்னவோ.. அதுதான் பகிர்ந்து கொள்கிறார் போல. :lol:

என்ன அவருக்கு ஒரு கவலை.. அடி மனசில.. தாங்கள் வீரமக்கள் தினம் என்று சொல்லிப் பறிக்கிறதை விட மாவீரர் தினம் என்று சொல்லிப் பறிக்கிறது கனக்க இருக்கென்று. என்ன செய்யுறது.. வாங்கின சோத்துப் பார்சலோட ஒரேயடியா ஊரவிட்டு ஓடினா.. கறக்கிறதும்.. கஸ்டம் தான்..! சனம் நம்ப வேணுமே..??! :icon_idea::):rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

<p>

அர்ச்சுன் அண்ணாவின் கருத்தில் இருந்து எதையாவது உருப்படியா எடுக்கக் கூடியதா இருந்திருக்கா. சும்மா விட்டுத் தள்ளுங்க. அவருக்கு வாந்தி எடுக்கல்லையன்னா.. பிரசர் கூடிடும்..! எடுத்திட்டுப் போகட்டும்..! இல்ல... உமாமகேஸ்வரனும்.. அமிர்தலிங்கமும் மட்டும் இருந்திருந்தால் :icon_idea::):rolleyes:

அவர் வாந்தி எடுத்துகொண்டே இருப்பார் நாங்கள் துடைச்சுகொண்டே இருக்கவேணுமோ?:D :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் விரக்தியின் உச்சத்திற்கே போய் விட்டார்.இப்ப தமிழனுக்கு ஒண்டும் இல்லை.நடுத்தெருவில இருக்கிறான்.மகிந்தரோட மனம் விட்டுப்பேசி இதுக்கு மேல என்னத்தைப் பெறப் போறீங்க?கருணாவும் பிள்ளையானும் டக்ளசும் மனம் விட்டுப் பேசி என்னத்தைக் கண்டாங்க தங்களைத் தான் வளரத்தாங்க.முன்பு தான் புலி ஒண்டும் செய்ய விடுகிது இல்லை எண்டு சொன்னாங்க.இப்ப 3 வருடமாய் புலி இல்லை! என்னத்தைச் செய்து கிழிச்சாங்க?நாங்க இப்ப இரக்கிற நிலையில இரந்து கொண்டு சர்வதேசத்திற்கு எங்கட பிரச்சனைகளைச் சொல்லுவம்.சமகிந்ரோட தற்போதைய கூட்டுக் காரணமாய் சர்வதேசம் ஏதாவது நீதியான தீர்வு பெற்றுத் தந்தால் சரி இல்லாவிட்டால் ஒண்டும் கெட்டுப்போகாது.ஆனால் மகிந்தவோட இணக்க அரசியல் செய்ய வெளிக்கிட்டால்.டக்கள் வீணச்சின்னத்தைக் கை விட்டு வெற்றிலையோட நிற்கிற மாதிரி ஒரு தீர்வு வரும். நாங்களும் மகிந்த எங்களுக்கு தீர்வு தந்து விட்டார் என்று போலியான வாழ்க்கையை வாழ்ந்து அழிய வேண்டியதுதான்.

சுண்டல் நாங்கள் அடிச்சு பிடிப்போம் எமது நாட்டை பொத்திக்கொண்டு காசை மட்டும் தாங்கோ என்பது போலான ஒரு நிலைபாடுதான் உலக நாடுகள் இப்பத்தான் எங்கட பக்கம் நிற்கின்றது என்ற சுத்தலும் .

உண்மையில் இப்ப எங்கள் நிலை நடு றோடுதான் ,அதுதான் உண்மை .

தமிழ் நாட்டில் தன்னை தீ மூட்டியவனுக்கு வீரவணக்கம் செலுத்தி விட்டு அப்படியே போக பழகிவிட்டோம் .எல்லாம் ஒரு போர்மாலிட்டி ஆகிவிட்டது .தற்கொடையாளன் ,வீரவணக்கம் ,மாவீரர் ,என்றேல்லாம் வீர வசனம் பேசி விட்டு அவனவன் இளையராஜா கொன்செட்டிற்கு $150.00 கொடுத்து பார்க்க லைனில நிற்கின்றான் .ஒவ்வொரு கிழமையும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் .இந்த வருடம் மட்டும் கனடாவில் உன்னி கிருஷ்ணன் ,சித்திரா ,கார்த்திக் ,அன்றியா ,மதுபாலகிருஷ்ணன் எல்லோரது கச்சேரிகளும் தனிதனி நடந்தது .

வடக்கில் நாம் தேர்தலில் வெல்வதும் கேள்விக்குறியாகிவிட்டது .

***

அர்சுன் திரும்பத்திரும்ப எதையோ எல்லாம் வாசிக்கிறதாகத்தான் பீத்துகிறார். ஆனால் குறைந்தது கிழக்கு தேர்தலில் மிகக்குறைந்த அறிவைத்தன்னும் பெற்ற ஒருவருக்கு தெரிந்த, ஆரம்பம் தொடக்கம் கக்கீம் எவ்வளவு முயற்சிகளை செய்தும், பள்ளி வாசல்கள் உடைக்கும் கட்சிக்கு எதிராக அவரால் போக முடியவில்லை என்பதை எதிலும் இன்னமும் படிக்கவில்லை.

கூட்டமைப்பு சும்மா தருகிறோம் என்ற முதல் அமைச்சர் பதவியை அவர் ஏற்க அந்த கட்சி அவருக்கு அனுமதி கொடுக்கவில்லை. அவரின் நீதி அமைச்சு பதவியை அவருக்கு மறுக்கப்படுவதால், அவர் இப்போ மந்திரி சபையில் இல்லாத கற்பனையான ஒரு மந்திரிப் பதவியான துறைமுகங்கள்,கப்பல் போக்குவரத்து மந்திரிப் பதவி கேட்கிறார். அப்படி ஒரு அமைச்சு இலங்கையில் தற்காலத்தில் இல்லை. எவ்வளவோ காலில் விழுந்தும், அந்த கட்சி, மு.கா வுக்கு கிழக்கு முதல் அமைச்சர் பதவியை கொடுக்கவில்லை. எந்த முஸ்லீம் கட்சிக்கும் அதை கொடுக்க வில்லை. சுதந்திர கட்சியில் சேர்ந்தால் மட்டுமே முதல் அமைச்சர் பதவி என்பதை மகிந்தா அவர்களுக்கு தெளிவாக சொல்லியிருக்கிறார். இவை எல்லாவற்றையும் கூட்டிபார்த்தால் அடுத்த தேர்தலில் கிழக்கில் முதல் அமைச்சர் பதவி என்று இருக்குமா என்பது கேள்வி. அப்படி இல்லாமல் போகப்போகும் பதவியை வைத்து, முஸ்லீம் கட்சிகள் அதை பெற உடைந்து போகப்போகின்றன. மாகாணசபையையும், 13ம் திருத்ததையும் மகிந்த தனது 2/3 பெரும்பான்மையை வைத்து இல்லாமல் செய்ய வேண்டும் என்பதுதான் சிங்கள் புத்தி ஜிவிகளின் கோரிக்கை. இதற்குள் வடமாகணம் இல்லாமல் போகப்போகின்றதென்பது அர்சுன் விடும் பகிடி.

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அன்று தொடக்கம் நாம் நடுத்தெருவில். அன்று எமக்கு பிருத்தானியா உதவவில்லை. இதனால் 1956 தொடக்கம் நமது பெண்கள் தாக்கப்படுவதையோ, நமது சொத்துப்பத்துகள் பறிக்கப்பட்டதையோ, நமது நிலங்கள் திருடப்பட்டதையோ, எமது உயிர்கள் பறிக்கப்படுவதையோ யாரும் எமக்காக நிற்பாட்டவில்லை. இதில் எப்படி நாம் வடக்கை மட்டும், இனிமேலைய காலத்தில், காப்பாற்றலாம் என்று அர்ச்சுன் சொல்கிறார்? இது வரையும் ஒருவரும் கேள்விப்படாத ஒரு தந்திரத்தை அரிச்சுன் மட்டும் தெரிந்து வைத்துக்கொண்டு அதை தமிழர் ஒருவருக்கும் சொல்லாமல் ஆனால் அவர்கள் தனது உத்தியை பாவித்து வடக்கை காப்பாற்றுகிறார்கள் இல்லை என்று அழுகிறார். ஆனால் இன்று பல வெளிநாட்டவர் நாம் எப்படி இருக்கிறோம் என்றாவது வந்து வடக்கு கிழக்கில் பார்க்கிறார்கள். இதை மறுத்து என்ன காண்கிறார்?

இந்த பார தூர நிலைகளுக்குள்ளால் தனது நிலையில் இருந்து தனது வீரத்துடன்தான் கூட்டமைப்பு அரசை எதிர்த்து தேர்தலில் நின்றது. ஆனால் இதை செய்ய மு.கா எவ்வளவு கஸ்டப்பட்டது என்று நாம் எல்லோரும் பார்த்தோம். பார்க்கபோக புதிய மூவி ஒன்றும் இல்லையென்றால் போத்தலின் மூடியைத்திறந்து வைத்து அரசியல் தத்துவம் எழுதும் பழக்கத்தை அரிச்சுன் நிறுத்த வேண்டும். போத்தலை திறந்து அரிச்சுன் தனக்கு மட்டும் தான் சுதந்திரத்தை காணலாம். அது இலங்கைவரை போய் தமிழ் ஈழத்தை விடுவிக்காது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை மல்லை அண்ணா முஸ்லிம் காங்கிரசின் பேரம் பேசல் யாருக்கும் தெரியா..... அவர்கள் அதை கேட்டார்கள் இதை கேட்டார்கள் என்பதெல்லாம் ஊடகங்களின் செய்தி அனால் இவர்கள் எனத்தை கேட்டார்கள் என்பதெல்லாம் இனி போக போக தான் தெரியும்.......

கிழக்கு மாகாண தேர்தலில் மு கா வை தனித்து களம் இறக்கியதே அரசாங்கம் தான் முஸ்லிம் காங்கிரசை மிரட்டி கூட்டணியில் வைத்து போட்டி போடுவது ஒண்டும் மகிந்த சகோதர்களுக்கு பெரிய விஷயமே அல்ல......பசில் லிbன் நல்ல இயக்கத்தில் மகிந்தவின் தயாரிப்பில் மு க என்ற கட்சியினர் நடித்தது தான் தனித்து போட்டி போடுதல் என்ற நாடகம்.....அது நல்லா வொர்க் அவுட் ஆகி இருக்கு........ அதாவது வாக்குல பிரிச்ஹு சிதறடிச்சு இருக்காங்க..... That's ஆல் யுவர் ஆனார்.....

  • கருத்துக்கள உறவுகள்

இது தமிழருக்கு எதிராக குற்றம் சாடபட்டிருக்கும் இரு தரப்பும் செய்த சதி என்பதை கனம் கோட்டார் அவர்கள் கருத்தில் எடுக்க வேண்டும்..... அப்பாவி மக்களை ஏமாற்றி தனித்துவம் என்ற நாடகம் ஆடி ...... பின்கதவு வழியால் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை இப்பொழுது செயற்படுத்துகின்றார்கள் என்பதனையும் இந்த நீதி மன்றுக்கு சுட்டி காட்ட விரும்பிகின்றேன்... :D

நீதிபதி யாரப்பா மகிந்தயா ஹக்கீமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

அக்கூதா அண்ணா அண்ட் மல்லை அண்ணா அடங்கிய பெஞ்ச் :D

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல்

தங்களது மனநிலை எனக்கும் வருவதுண்டு

ஆனால் இல்லையென தட்டி எழுப்புவது தாயக மக்களின் தேர்தல் தீர்ப்புக்களே...

அவர்கள் களைத்து சலித்து எல்லாவற்றையும் இழக்கத்தயாராகிவிட்டார்கள் என்று சொல்வதற்கும் புலம் பெயர்ந்த எமக்கு உரிமை இல்லையே???

சரி நானும் துரோகி இருந்திட்டு போறனே காசா பணமா..... இப்பிடி சொல்லி சொல்லி எண்ட அக்காவும் தங்கச்சியும் தம்பியும் அண்ணாவும் கஷ்ட பட்டாச்சு...... போராடியும் பாதச்சு எதுவுமே முடியல்ல இருக்கிறதும் ஒவோண்டா போய்கொண்டு இருக்கு இனியும் வரலாற பேசிட்டு இருக்கா முடியா இது orukkaa இணக்க அரசியலையும் பண்ணி பாப்பம்..... வர்களும் திறந்த மனதுடன் வரட்டும்.. நாங்களும் போவோம்.....மனம் விட்டு. பேசுவோம்.....இனியும் எங்களால அழ முடியா இனி எங்கள்ட்ட இழக்கவும் எதுவும் இல்லை......நேற்று வந்த முஸ்லிம் எங்களுக்கு எஹ்டிரா அரசியல் செய்றான் நாங்க? இலங்கையின் பூர்வீக குடிக்கலாம்....நடு ரோட்ல இப்ப. எங்களுக்கு தேவை வறட்டு கௌரவம் இல்லை இருப்ப தக்க வைப்பம் முதல்ல காலம் நேரம் வரும் போது மிச்சத்த பாப்பம்

அண்ணா, முதலில் எமக்கு நாமே துரோகிப்பட்டம் கட்டுவதை கைவிட வேண்டும்...

அடுத்து இணக்க அரசியலால் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை. நாம் மனம் விட்டு பேச போனாலும் அவர்கள் போலியாக தான் பேசுவார்கள். இறுதியில் ஏமாறப்போவது நாங்களாக தான் இருக்கும்.

சிங்களவர்கள் முஸ்லிம்களை நண்பர்களாக பார்த்தாலும் தமிழர்களை எப்பவும் எதிரியாகவே பார்ப்பார்கள். புலிகள் என்ற வட்டத்தை விட்டு நாம் வெளியில் வந்தாலும் அவர்கள் எம்மை புலிகளாக சித்தரித்து கதைப்பதை நிறுத்தப்போவதில்லை.

தமிழர்கள் இப்பொழுது அழுகிறார்கள், இழப்புகளை சந்திக்கிறார்கள் தான். ஆனால் இணக்க அரசியல் ஏற்பட்டால் மட்டும் இவை நடவாதென்று எப்படி நம்புகிறீர்கள். இணக்க அரசியல் மூலம் அரசியல் வாதிகள் மட்டும் நல்லபடி வாழலாம். ஆனால் நாட்டு மக்கள் அப்பொழுதும் சிங்களவனின் அடிமை தான். சிங்களவர்கள் என்ன செய்தாலும் எம்மால் எதிர் நடவடிக்கை எடுக்க முடியுமா? இல்லை தானே...

நீங்கள் கூறுவது போல் இன்று இணக்க அரசியலுக்கு போனால் நாம் சிங்களவர்களுடன் ஒற்றுமையாகி விட்டோம் என்று நினைத்து சர்வதேசம் இப்பொழுது எடுக்கும் நடவடிக்கையையும் கைவிட்டிடும். பின்னர் சிங்களவனிடம் மீண்டும் ஏமாந்த பின் வந்து சர்வதேசத்திடம் கையேந்தினால் அப்பொழுது சர்வதேசம் திரும்பியும் பார்க்காது.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

ஐ.நா சபையானது இனசிக்கலை தீர்க்க தனி அலகு முறையை கொண்டு வருவதை (சரி ஏதோ ஒன்று) எமது முஸ்லீம் சமூகம் முழு மனதுடன் ஆதரிப்பதுடன் . எமது தனி சமூக அலகையும் (கிழக்கு) உறுதிபடுத்த வேண்டும் என கிழக்கு மக்களின் முதல்வர் என்ற முறையில் கோரி நிற்கிறேன்..

கிழக்கில் பெரும்பான்மை முஸ்லீம் சமூகத்தின் விருப்பத்தினை பூர்த்தி செய்வதுடன் . தமிழர்களும் முஸ்லீம் சமூகமும் சகோதர இனங்கள் என இந்த சமயத்தில் கோட்டிட்டு காட்ட விரும்புகிறேன்..

இப்படிக்கு

நஜீப் ஏ. மஜீத்

கிழக்கு மாகாண முதல்வர்..

டிஸ்கி:

sucker-jumbo-lolly.jpg

இதற்கேல்லாம் போராடிய உங்களுக்கு எல்லாம் பரிசு...

லாலி பப்பு...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

கிழக்கிலங்கையில் இனி ஒருபோதும் தமிழர்களால் தனித்து தேர்தலில் வெற்றிபெற முடியாது. தமிழ் கூட்டமைப்பினரும் தேர்தலுக்கு முன்பே இதனை உணர்ந்திருந்தனர். யாழ் இணையத்திலும் இதுபற்றி விவாதிக்கப்பட்டது (நாங்கள் முஸ்லிம்களைத் தூக்கியெறிந்து வீரம் பேசியது வேறு கதை). கிழக்கில் தமிழர்கள் சிங்கள அரசுடன் அல்லது முஸ்லிம்களுடன் சேர்ந்துதான் ஆட்சியமைக்கலாம். கிழக்கில் எதிர்கால இருப்புக்காக இன்றைய நிலமையில் நாம் பாடம் படிக்காமல் வீரம் பேசுவதோ ஒருவருக்கொருவர் துரோகிப் பட்டம் கட்டுவதோ பயனற்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா, முதலில் எமக்கு நாமே துரோகிப்பட்டம் கட்டுவதை கைவிட வேண்டும்...

அடுத்து இணக்க அரசியலால் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை. நாம் மனம் விட்டு பேச போனாலும் அவர்கள் போலியாக தான் பேசுவார்கள். இறுதியில் ஏமாறப்போவது நாங்களாக தான் இருக்கும்.

சிங்களவர்கள் முஸ்லிம்களை நண்பர்களாக பார்த்தாலும் தமிழர்களை எப்பவும் எதிரியாகவே பார்ப்பார்கள். புலிகள் என்ற வட்டத்தை விட்டு நாம் வெளியில் வந்தாலும் அவர்கள் எம்மை புலிகளாக சித்தரித்து கதைப்பதை நிறுத்தப்போவதில்லை.

தமிழர்கள் இப்பொழுது அழுகிறார்கள், இழப்புகளை சந்திக்கிறார்கள் தான். ஆனால் இணக்க அரசியல் ஏற்பட்டால் மட்டும் இவை நடவாதென்று எப்படி நம்புகிறீர்கள். இணக்க அரசியல் மூலம் அரசியல் வாதிகள் மட்டும் நல்லபடி வாழலாம். ஆனால் நாட்டு மக்கள் அப்பொழுதும் சிங்களவனின் அடிமை தான். சிங்களவர்கள் என்ன செய்தாலும் எம்மால் எதிர் நடவடிக்கை எடுக்க முடியுமா? இல்லை தானே...

நீங்கள் கூறுவது போல் இன்று இணக்க அரசியலுக்கு போனால் நாம் சிங்களவர்களுடன் ஒற்றுமையாகி விட்டோம் என்று நினைத்து சர்வதேசம் இப்பொழுது எடுக்கும் நடவடிக்கையையும் கைவிட்டிடும். பின்னர் சிங்களவனிடம் மீண்டும் ஏமாந்த பின் வந்து சர்வதேசத்திடம் கையேந்தினால் அப்பொழுது சர்வதேசம் திரும்பியும் பார்க்காது.

வணக்கம்..... வாங்க அக்கா வாங்க உங்களை தான் பாத்துகொண்டு இருந்தானான்....எங்கடா பாப்பாவ இன்னும் காணேல்லையே பந்தி பந்தியா எழுத எண்டு......

அப்புறம்.....எப்பிடி ? சுகமா? டீ குடிக்கிரிங்களா? இன்னாது diet வேண்டாமா? சரி ஓகே மேட்டர் க்கு

வாறன் ......நான் சொல்லுறத நல்ல வடிவா கேக்கணும் ஓகே.....சரி எங்களுக்கும் யாருக்கும் பிரச்னை? சிங்களவனுக்கும் எங்களுக்கும் தானே அப்போ அவங்க கூட தானே பேசணும்? ஆப்கானிஸ்தான் காரன் கூடவா பேச முடியும்?

நீங்க வெளிநாடுகல நம்பி எனத்த கண்டிங்க? ஐக்கிய நாடுகள் சபைல தீர்மானம் போட்ட உடன எங்களுக்கு என்ன கிடைச்சிச்சு?

இண்டைக்கு நாங்க சிங்களவன் அறைஞ்ச அறைல 2009 ஆம் ஆண்டோட படுத்தது தான் இன்னும் எழும்பி இருக்கவே இல்லை....மிகவும் பலமான நிலையில் அவனும் மிக பலம் இழந்த நிலையில் நாங்களும்

இருக்கேக்க சில விட்டுகொடுப்புகளுடன் அவங்களோட பேசுறது தான் நீண்ட கால அடிபடையில Palani தரும்......சிங்கள மக்கள் விரும்பாத எந்த தீர்வும் நடைமுறையில சாத்தியப்படாது.......அப்புறம் முல்லிவைகால் நடந்து முடிஞ்சு நாலாவது வருஷமும் வர போகுது சர்வதேmசம் சர்வதேசம் என்டுரின்களே அவங்க என்ன செய்தவங்க?

ஆ அப்புறம் நான் சொல்லுறது முதல்ல எங்கடா இருப்பு முக்கியம் அதுக்கு பிறகு ிச்சத்த பாக்கலாம்.....

திரும்ப போராட்டம் தொடங்கினாலும் காட்டிக்கொடுக்கவும் கூடிக்கொடுக்கவும் 1000 கருணாக்கள் ready ஆ தான் இருக்காங்க சோ அதெல்லாம் தற்பொழுது சரிவராது....இப்போ நாம பொலிடிக்ஸ் பண்ணனும்.....அதுக்கு என்ன செய்யணும்? இளைஞர்கள் வரணும் அடுத்த முறை தேர்தலில ஒழுங்க நடக்க கூட முடியாம தள்ளாடிட்டு இருக்கிற அப்பாதுரை விநாயக மூர்த்தி போன்றவர்களுக்கு எல்லாம் சீட் கொடுக்னுமா? 50 சதவீதம் இளைஞர்கள்.... 25 சதவீதம் பெண்கள் 25 சதவீதம் மூத்த உறுப்பினர்கள் என்ற ரீதியில் சீட் ஒதுக்கி அரசியல் பண்ணி பாருங்க.. எங்க இளைஞனால முடியாததது எதுவும் இல்லை. ........அத விட்டுட்டு தந்தை செல்வா politics பேசிட்டு பழைய வரலாறுகளா எல்லாம் கிளறிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது மா...

இது face புக் காலம் நம்ம அரசியலையும் அதுக்கு. தக்க மாதிரி மாத்திக்கணும்.....

சிங்கள மக்கள் விரும்பாத எந்த தீர்வும் நடைமுறையில சாத்தியப்படாது.......

சர்வதேசம் தவிர்த்து இலங்கைக்குள் என்று பார்க்கும் போது இது உண்மை. அதே நேரம் எந்த இணக்க அரசியலுக்கு போனாலும் தமிழர்களுக்கு உரிய தீர்வு தர சிங்களம் விரும்பாது என்பதும் உண்மை.

அதன் பின்னர் எதுவும் சாத்தியமில்லை என்று உங்கள் கூற்றே சொல்கிறதே.... :D

அப்புறம் முல்லிவைகால் நடந்து முடிஞ்சு நாலாவது வருஷமும் வர போகுது சர்வதேmசம் சர்வதேசம் என்டுரின்களே அவங்க என்ன செய்தவங்க?

முதலில் சிங்களம் இவ்வளவு காலம் தமிழர்களுக்கு என்ன செய்தது என்று யோசித்து விட்டு சர்வதேசம் பற்றி சிந்தியுங்கள். :)

சர்வதேசம் தவிர்த்து இலங்கைக்குள் என்று பார்க்கும் போது இது உண்மை. அதே நேரம் எந்த இணக்க அரசியலுக்கு போனாலும் தமிழர்களுக்கு உரிய தீர்வு தர சிங்களம் விரும்பாது என்பதும் உண்மை.

அதன் பின்னர் எதுவும் சாத்தியமில்லை என்று உங்கள் கூற்றே சொல்கிறதே.... :D

முதலில் சிங்களம் இவ்வளவு காலம் தமிழர்களுக்கு என்ன செய்தது என்று யோசித்து விட்டு சர்வதேசம் பற்றி சிந்தியுங்கள். :)

சுண்டலைக் கிண்டல் அடிக்கும் உங்கள் துணிவைப் பாராட்டுகின்றேன். :D :D சுண்டலுக்கு சுட்டுப் போட்டாலும் உது விளங்காது என்பது என் எண்ணம் :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பதினெட்டு மில்லியன் சிங்களவன் இருக்கிற ஒரு நாட்டில நீங்க போய் ரொம்பா ஓவரா கேட்டா அவன் இன்னத்தா தாறது.... நாம இருந்து பேசணும் நம்ம எல்ஸ் மாதிரி தந்தை செல்வா காலத்து அரசியல் எல்லாம் வொர்க் அவுட் ஆகதும்மா ..... பிடிவாதங்களை விட்டிட்டு சமந்தர் தெரிவுகுளுக்கு போறது தான் பெட்டெர் இல்லடி அவர் அறிக்கை விட்டே சாக வேண்டியது தான் :D

பதினெட்டு மில்லியன் சிங்களவன் இருக்கிற ஒரு நாட்டில நீங்க போய் ரொம்பா ஓவரா கேட்டா அவன் இன்னத்தா தாறது.... நாம இருந்து பேசணும் நம்ம எல்ஸ் மாதிரி தந்தை செல்வா காலத்து அரசியல் எல்லாம் வொர்க் அவுட் ஆகதும்மா ..... பிடிவாதங்களை விட்டிட்டு சமந்தர் தெரிவுகுளுக்கு போறது தான் பெட்டெர் இல்லடி அவர் அறிக்கை விட்டே சாக வேண்டியது தான் :D

இப்பத் தான் சொன்னேன் ...சுண்டலுக்கு இது சுட்டுப் போட்டாலும் விளங்காது என்று.

1983 இற்கு முன் தமிழ் மக்களின் சனத்தொகை ..எவ்வளவு இருந்தது... அப்போது கேட்டதை மட்டும் சிங்களவன் தூக்கியா தந்து விட்டான்..? சுண்டெலியைத் தட்டத் தெரிந்தால் மட்டும் எல்லாம் தெரிந்துவிடும் என்ற என்ற அறியாமை என்னவென்பது?

மகிந்த கொடுத்து விட்ட அஜெண்டாவுடன் நீங்கள் "லோல்" படுவது மட்டும் விளங்குகின்றது?

சம்பந்தர் என்ன நெளிவு சுழிவு செய்கின்றார்? எத்தனை முறை அரசாங்கத்துடன் பேசிக் களைத்து வெறுங்கையுடன் திரும்பியிருக்கின்றார். இன்னும் வேறு என்ன "புடுங்கி அடுக்கப் போவதாக" அவர் உங்களுக்கு சொல்லியிருக்கின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்

இங்க பாருங்க இந்த 83 கதை எல்லாம் இப்ப வேண்டாம் இது 2012 பழச பேசிட்டு இருந்தா வடக்கும் போய்டும் ....எல்ஸ் கனடால கால ஆடிட்டு இருப்பார்....... தெரிவுகுளுக்குல போக சொல்லி தான் எல்லா நாடும் சொல்லுது போய் பாப்பம் இருந்து பேசுவம் நாங்களும் விட்டு கொடுப்பம் அவையளும் விட்டு தரட்டும் எல்லாம் முடியாது தானே அவங்களும் பொலிடிக்ஸ் பண்ண வேண்டாமா சிங்கள மக்கள்கிட்டா.... :D

  • கருத்துக்கள உறவுகள்

சரி பல அன்பு அண்ணன் மார்களின் வேண்டுகோளை ஏற்று இந்த திரியில் இருந்து விடைபெற்றுக்கொள்கின்றேன்...... யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை.....ஆனாலும் இப்பிடி தாய் நாட்டை விட்டு ஒவொரு மாதமும் பலர் வெளியேறும் நிலைமையை நினைக்க கவலையா இருக்கு முதல்ல எங்கட மன்னில எங்கட இருப்பு முக்கியம் என்று கூறி எங்களுக்காய் போராடிய அந்த மாவீரர்களை நெஞ்சங்களில் நிறுத்தி தொடர்ந்து பயணிப்போம் காலத்துக்கு ஏற்றவாறு

நன்றி

வணக்கம்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

சமந்தர் தெரிவுகுளுக்கு போறது தான் பெட்டெர் இல்லடி அவர் அறிக்கை விட்டே சாக வேண்டியது தான் :D

சிரித்தே விட்டேன் சுண்டல். நீங்கள் சொல்லும் இணக்க அரசியலில் தான் எனக்கும் 100% நம்பிக்கை இருக்கு. சர்வதேசமும், மண்ணாக் கட்டியும். சர்வதேசம் வரும், அமேரிக்கா வந்து இறங்குவான் எண்டெல்லாம் சொல்லித்தான் கடைசிச் சண்டை நேரம் இயக்கத்தை ஏமாத்தி கடக்கரையில கொண்டே விட்டவங்கள். சர்வதேசம் எமக்காக ஒன்றுமே எப்போதுமே செய்யப்போவதில்லை. செய்யப் போவதாக மட்டும் நடிப்பார்கள் :huh:

சிரித்தே விட்டேன் சுண்டல். நீங்கள் சொல்லும் இணக்க அரசியலில் தான் எனக்கும் 100% நம்பிக்கை இருக்கு. சர்வதேசமும், மண்ணாக் கட்டியும். சர்வதேசம் வரும், அமேரிக்கா வந்து இறங்குவான் எண்டெல்லாம் சொல்லித்தான் கடைசிச் சண்டை நேரம் இயக்கத்தை ஏமாத்தி கடக்கரையில கொண்டே விட்டவங்கள். சர்வதேசம் எமக்காக ஒன்றுமே எப்போதுமே செய்யப்போவதில்லை. செய்யப் போவதாக மட்டும் நடிப்பார்கள் :huh:

உங்கள் எழுத்தில் இருந்தே உங்கள் அறியாமை விளங்குகின்றது.

அமெரிக்கா உங்களுக்கு வாக்குத்தந்ததா? நந்திக்கடற்கரைக்கு கப்பல் கொண்டுவந்து காப்பாற்றுவோம் என்று.. அமெரிக்காவோ சர்வதேசமோ அவ்வகையான உறுதி தந்ததற்கு உங்களிடம் ஆதாரம் உண்டா? நீங்களாகவே கற்பிதம் செய்து கொண்டால் அது யார் தப்பு?

ஆனால் தமிழ் மக்களுக்கு சில பல உரிமைகள் கொடுக்கப்ப்ட வேண்டுமென்று பகிரங்கமாகவே அறிவித்து அதற்காக ஐ.நாடுகள் மூலம் சிங்களர்க்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் முயற்சி எடுக்கின்றது என்பதையாவது அறிவீர்களா?

மனித உரிமைகள் மன்ற ஆணையர் நவநீதம் பிள்ளை அம்மையாரின் முன்முயற்சிகளையாவது அறிந்திருக்கின்றீர்களா? இவை எல்லாம் நீங்களும் நானும் யாழ் களத்தில் விரக்தி மேலீட்டால் எழுதியதால் தான் நடைபெறுகின்றது என்று கருதுகிறீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.