Jump to content

கறிவேப்பிலை சாதம்

Recommended Posts

நமக்கு மிகவும் பிடிச்ச ஐட்டம். இருந்திட்டு சாப்பிடலாம். நல்லாயிருக்கும்.

2201012584_15df7b1ca1.jpg

தேவையானப் பொருட்கள்:

அரிசி - 2 கப்

கறிவேப்பிலை - 1 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 4

மிளகு - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - ஒரு சிறு துண்டு

நெய் - 1 டேபிள்ஸ்பூன்

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

முந்திரிப்பருப்பு - 10

உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியை வேகவைத்து, குழையாமல் பார்த்து, வடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் (pan) எண்ணை விட்டு, பெருங்காயம், கடலைப்பருப்பு, மிளகாய் அகியவற்றை சிவக்க வறுக்கவும். பின் அதில் மிளகு சேர்த்து, சிறிது வறுத்து, அதில் கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பின் தேங்காய் துருவலைச் சேர்த்து சிறிது வதக்கி, இறக்கி வைக்கவும். ஆறியபின், மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

வாணலியில் நெய்யை விட்டு, கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், முந்திரிப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவிப் போடவும். பின் சாதத்தைப் போட்டு லேசாகக் கிளறவும். கறிவேப்பிலைப்பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25-curry-leaf.jpgImage%2B003.jpg

நல்லதொரு சமையல் குறிப்புக்கு, நன்றி ஈசன்.

இங்கு கறிவேப்பிலை என்ற பெயரில்... அதன் வடிவத்தை ஒத்த, வேறொரு காட்டு மரத்தின் இலைகளை இறக்குமதி செய்ததால்...

ஜேர்மன் அரசாங்கம் பல இலைகளை.. குப்பைத் தொட்டிக்குள் வீசி.... கறிவேப்பிலை இறக்குமதியில், கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக, எனது தமிழ்க்கடைகாரர் சொன்னார். இறக்குமதி செய்யும் கறிவேப்பிலையிலும்.. கலப்படம் என்னும் போது..., எமது வியாபரிகளை நம்பி, பொருட்களை வாங்க யோசனையாக உள்ளது.

இப்போ... கறிவேப்பிலைக்கு பெரும் தட்டுப்பாடு. சுவிஸிலிருந்து, சஜீவனிடம் தான்... நல்ல கறிவேப்பிலை பார்சல் பண்ணி வாங்க வேணும் போலை கிடக்குது.

Link to comment
Share on other sites

தொன் கணக்கில் கறிவேப்பிலைக்கு அவர்கள் எங்குதான் போவார்கள்.அதனால்தான் காட்டுகறிவேப்பிலையை விற்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொன் கணக்கில் கறிவேப்பிலைக்கு அவர்கள் எங்குதான் போவார்கள்.அதனால்தான் காட்டுகறிவேப்பிலையை விற்கிறார்கள்.

curry-3.jpg

எங்கடை ஆக்கள், நோகாமல்... நொங்கு எடுக்கப் பார்க்கிறார்கள்.

வெளிநாட்டுக்கு... தொன்கணக்கில் கறிவேப்பிலை வேணுமென்றால்... புது கறிவேப்பிலை கன்றுகளை நட்டு, தோட்டம் மாதிரி செய்யலாம் தானே.....

பிளேனிலை வாறதுக்கு, ஒரிஜினல் இலையை அனுப்ப வேண்டும். அதை விட்டுட்டு... ஆடு, மாடும் தின்னாத காட்டு இலையை... அனுப்பினால், பிளேனுக்கே... மரியாதை இல்லை. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

25-curry-leaf.jpgImage%2B003.jpg

நல்லதொரு சமையல் குறிப்புக்கு, நன்றி ஈசன்.

இங்கு கறிவேப்பிலை என்ற பெயரில்... அதன் வடிவத்தை ஒத்த, வேறொரு காட்டு மரத்தின் இலைகளை இறக்குமதி செய்ததால்...

ஜேர்மன் அரசாங்கம் பல இலைகளை.. குப்பைத் தொட்டிக்குள் வீசி.... கறிவேப்பிலை இறக்குமதியில், கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக, எனது தமிழ்க்கடைகாரர் சொன்னார். இறக்குமதி செய்யும் கறிவேப்பிலையிலும்.. கலப்படம் என்னும் போது..., எமது வியாபரிகளை நம்பி, பொருட்களை வாங்க யோசனையாக உள்ளது.

இப்போ... கறிவேப்பிலைக்கு பெரும் தட்டுப்பாடு. சுவிஸிலிருந்து, சஜீவனிடம் தான்... நல்ல கறிவேப்பிலை பார்சல் பண்ணி வாங்க வேணும் போலை கிடக்குது.

அது உண்மை தான் சிறி அண்ணா, இப்ப களவாக எடுத்துக்கொண்டுவாறார்கள்.

நாங்கள் வாங்கும் கொள்விலை € 12.50 + 7% Mwst

விற்கும் விலை € 16.90 எப்படி இருக்கு???? :unsure: கருவேப்பிலைக்கு வந்த காலம். :o

Link to comment
Share on other sites

தொன் கணக்கில் கறிவேப்பிலைக்கு அவர்கள் எங்குதான் போவார்கள்.அதனால்தான் காட்டுகறிவேப்பிலையை விற்கிறார்கள்.

எவ்வளவுதான் இல்லை போட்டாலும் வாசம் வருகிதில்லை. இதுதானா காரணம்.

இதைவிட நிறைய இரசாயன உரம் பாவிக்கிறார்கள்.

இனி வீட்டிற்குள் வைத்து கருவேப்பிலைக் கன்று வளர்க்கப் போகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது உண்மை தான் சிறி அண்ணா, இப்ப களவாக எடுத்துக்கொண்டுவாறார்கள்.

நாங்கள் வாங்கும் கொள்விலை € 12.50 + 7% Mwst

விற்கும் விலை € 16.90 எப்படி இருக்கு???? :unsure: கருவேப்பிலைக்கு வந்த காலம். :o

ஜீவா, நீங்கள் வாங்கும் கொள் விலையுடன்... விற்பனை வரியையையும் சேர்த்து, விற்கும் போது... அதில் லாபம் அதிகமிருக்காதே...

கோடை காலங்களிலும், அதிக குளிர் காலங்களிலும்... கருவேப்பிலை விரைவில், பழுதாகியிருப்பதை கடைகளில் கண்டுள்ளேன்.

கருவேப்பிலையும் கள்ளக் கடத்தல், லிஸ்ரிலை... இருக்கும் போது, சிரிப்புத்தான்.. வருகின்றது. :rolleyes::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா, நீங்கள் வாங்கும் கொள் விலையுடன்... விற்பனை வரியையையும் சேர்த்து, விற்கும் போது... அதில் லாபம் அதிகமிருக்காதே...

கோடை காலங்களிலும், அதிக குளிர் காலங்களிலும்... கருவேப்பிலை விரைவில், பழுதாகியிருப்பதை கடைகளில் கண்டுள்ளேன்.

கருவேப்பிலையும் கள்ளக் கடத்தல், லிஸ்ரிலை... இருக்கும் போது, சிரிப்புத்தான்.. வருகின்றது. :rolleyes::)

கருவேப்பிலையும்,பச்சை மிளகாயும் எவ்வளவு விலை என்றாலும் எங்கடை சனம் வாங்கும், ஆனால் இதுக்கே ஆயிரம் கதை கதைக்குதுகள், இதைவிடக்கூட விற்பதும் கஸ்டம் சிறி அண்ணா.

மரக்கறியில் பெரிதால லாபம் இல்லை ஆனால் வாடிக்கையாளரை விடக்கூடாது,மற்ற சாமான்களில் ஒன்றில் விட்டதை,மற்றதில் எடுக்கலாம் என்பதால் பல்லைக்கடிச்சுக்கொண்டு சமாளிக்க வேண்டி இருக்குது. :rolleyes::D

Link to comment
Share on other sites

கறிவேப்பிலை இறக்குமதி சுவிஸ்சிலும் தடைசெய்யப்பட்டதாகக் கேள்வி. யேர்மனியிலும் அதுதான் நிலை.

1. காட்டுக் கறிவேப்பிலை.

2. கறிவேப்பிலை பழுதாகமல் இருக்க இரசாயனக் கலவை சோத்தது.

Link to comment
Share on other sites

இங்கு கறிவேப்பிலை என்ற பெயரில்... அதன் வடிவத்தை ஒத்த, வேறொரு காட்டு மரத்தின் இலைகளை இறக்குமதி செய்ததால்...

ஜேர்மன் அரசாங்கம் பல இலைகளை.. குப்பைத் தொட்டிக்குள் வீசி.... கறிவேப்பிலை இறக்குமதியில், கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக, எனது தமிழ்க்கடைகாரர் சொன்னார். இறக்குமதி செய்யும் கறிவேப்பிலையிலும்.. கலப்படம் என்னும் போது..., எமது வியாபரிகளை நம்பி, பொருட்களை வாங்க யோசனையாக உள்ளது.

இப்போ... கறிவேப்பிலைக்கு பெரும் தட்டுப்பாடு. சுவிஸிலிருந்து, சஜீவனிடம் தான்... நல்ல கறிவேப்பிலை பார்சல் பண்ணி வாங்க வேணும் போலை கிடக்குது.

என்னுடைய பின் வளவுக்குள்ள கறிவேப்பிலை மரமே நிற்கிறது.

இலைய தொட்டாலே கையில மணம் ஒட்டிவிடும். :unsure:

போன ஸ்ப்ரிங் இல் பூக்களை நுள்ளாமல் விட்டு விட்டேன். அதனால காய் காய் என்டு காய்ச்சுது. இதனால் இலைகள் குறைந்து, போன மாசம் அளவில் இலை முடிந்து விட்டது. மீண்டும் ஸ்ப்ரிங் ஆரம்பித்துள்ளதால் துளிர்க்கத் தொடங்கியுள்ளது. இந்தமுறை பூ எல்லாத்தையும் அரும்பிலேயே நுள்ளி விடப்போறன்.

நீங்க சொல்வதைப் பார்த்தால் ஐரோப்பாவிற்கு இங்கிருந்து கறிவேப்பில ஏற்றுமதி செய்யலாம் போல் இருக்கிறதே ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறிவேப்பிலை சாதம் சாப்பிட்டுவந்தால் பார்வை தெளிவாகும், தலை முடி கறுத்து உதிர்வதும் நின்று விடும் :)

பகிர்விற்கு நன்றி ஈசன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஈசன்.......எனக்கும் கருவேப்பிலை நல்ல விருப்பம்....மனுசி பிள்ளையளோடை சாப்பிடேக்கையும் அவையள் சயிற்றிலை ஒதுக்கிவைக்கிற கருவேப்பிலையையும் நான் தான்..... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவேப்பிலையும்,பச்சை மிளகாயும் எவ்வளவு விலை என்றாலும் எங்கடை சனம் வாங்கும், ஆனால் இதுக்கே ஆயிரம் கதை கதைக்குதுகள், இதைவிடக்கூட விற்பதும் கஸ்டம் சிறி அண்ணா.

மரக்கறியில் பெரிதால லாபம் இல்லை ஆனால் வாடிக்கையாளரை விடக்கூடாது,மற்ற சாமான்களில் ஒன்றில் விட்டதை,மற்றதில் எடுக்கலாம் என்பதால் பல்லைக்கடிச்சுக்கொண்டு சமாளிக்க வேண்டி இருக்குது. :rolleyes::D

வியாபாரியளுக்கு எப்ப பாத்தாலும் பஞ்சம்கொட்டுறதுதான் :D :D .......நாங்களும் வாற சம்பளத்திலைதான் வாயைவயித்தை கட்டி....மற்றவனுக்கு பல்லைக்காட்டி வாழுறம் :( .....இதெல்லாம் சகசமப்பா :) .......வாழ்க்கையெண்டால் றிஸ்க் இருக்கோணுமாம்.....கடல் எண்டால் அலையும் இருக்கோணுமாம்.....கனடாவிலையிருந்து ஒரு அம்மா என்ரை வீட்டை விசிட் வந்தப்ப சொன்னாங்க....சொன்னாங்க :lol:

Link to comment
Share on other sites

அகூதாவோ யாரோ ஒருவர் இணைத்த ஒரு பதிவில், இலங்கையில் இருந்து வரும் கறிவேப்பிலை இலகுவில் வாடாமல் இருக்க எக்கச்சக்கமாக மருந்தடிக்கின்றார்கள் என்று வாசிச்சதுக்கு பிறகு கறிவேப்பிலையை 2 மாசமாக தொடுவதே இல்லை. மனிசி எவ்வளவு கெஞ்சியும் மாட்டன் என்று அடம் பிடிக்கின்றன். சாப்பாட்டில் எப்பவாவது நான் நொட்டை சொன்னால், கறிவேப்பிலை போடாததால் தான் சுவை குறைவாக இருக்கு என்று ஒரு சாட்டு வேற மனிசிக்கு கிடைச்சு இருக்கு...

ஆனால் இந்த சமையல் முறையை வாசிக்கேக்க, ஒரு நாளைக்கு வாங்கினால் என்ன என்று தோன்றுகின்றது. கடைக்காரர் கறிவேப்பிலை ஜமெய்க்காவில் இருந்து தான் வருகுது என்று சொல்வதை ஒருக்கா நம்புவம் என்று பார்க்கின்றன்

சில கள உறவுகள், கருவேப்பிலையைப் பற்றி, ஆதங்கத்துடன் எழுதுவதைப் பார்க்கக், கண் கலங்குது!

போன கிழமை தான், ஒரு பெரிய 'garden Bin' நிரம்பக் கறிவேப்பிலையை வெட்டி அனுப்பினனான்!

பெரிய மரமா, வளர்ந்து போறதால, விருப்பமில்லாவிட்டாலும், ஒவ்வொரு வருசமும், வெட்டியெறிய வேண்டிக் கிடக்குது! :wub:

Link to comment
Share on other sites

கறிவேப்பிலை கன்று டொரோண்டோ தாவர விற்பனை நிலையங்கள் அல்லது தமிழ் நண்பர்களின் வீடுகளில் இருக்கும் கன்றுகளில் இருந்து நாற்றுகளை பெற முடியாதா? நான் இருக்கும் இடத்தில் பெரும்பாலான தமிழ் வீடுகளில் கறிவேப்பிலை கன்றுகள் உண்டு. ஆரமபத்தில் ஒரு வீட்டுக்காரர் எங்கிருந்தோ கன்றுகளை பெற்று வளர்த்தார். அவரிடம் இருந்து நாற்றுக்களை ஏனையவர்கள் பெற்றோம்.

கனடாவின் காலநிலைக்கு வளருமோ தெரியவில்லை. இது ஒரு outdoor தாவரம் என்றால், கண்டிப்பாக சூரிய வெளிச்சம் தேவையாக இருக்கும். வீட்டுக்குள் வைத்தும் வளர்க்க முடியாது.

Link to comment
Share on other sites

சில கள உறவுகள், கருவேப்பிலையைப் பற்றி, ஆதங்கத்துடன் எழுதுவதைப் பார்க்கக், கண் கலங்குது!

போன கிழமை தான், ஒரு பெரிய 'garden Bin' நிரம்பக் கறிவேப்பிலையை வெட்டி அனுப்பினனான்!

பெரிய மரமா, வளர்ந்து போறதால, விருப்பமில்லாவிட்டாலும், ஒவ்வொரு வருசமும், வெட்டியெறிய வேண்டிக் கிடக்குது! :wub:

வயிறு எரியுது. தண்டில் இருந்து வளர்க்க முயற்சி செய்தேன். முளைக்கவில்லை. இங்கு ஒரு சிறிய கன்று 9 பவுண்ட்கள் போகிறது. தபால் செலவு 6 பவுண்ட்கள். வீட்டிற்குள் கண்ணாடி கதவோரத்தில் வைத்து வளர்க்கலாமாம். எவ்வளவு காலத்திற்குத் தாக்குப் பிடிக்குமென்று தெரியாது.

சில Tesco வில் கறிவேப்பிலை விற்கிறார்கள். இனி அங்குதான் வாங்க வேண்டும்.

இதையும் கொஞ்சம் பாருங்கள்.

http://plants4presents.co.uk/GiftOptions.aspx?sit=2&gif=219&ad=mer&gclid=CKGHjped2LICFUbMtAodrH8A-w

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]எல்லாம் சரி[/size]

[size=5]கறிவேப்பிலையை எமது முன்னோர் எதற்கு பாவித்தார்கள்???[/size]

[size=5]எதற்கு ஒப்பிட்டார்கள்??[/size]

[size=5]இனி அந்தப்பழமொழி................??? :( [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறிவேப்பிலை மரம் புலம்பெயர் நாடுகளிலும் இலகுவாக உண்டாக்கமுடியும். இது நான் முயன்று வெற்றி கண்ட விடயம் .கடையில் வாங்கும் கறிவேப்பிலையில் குருத்து உள்ள தடிகளாக எடுத்து சிறிய சாடி ஒன்றில் நல்ல பசலை மண்ணாகப் போட்டு தடிகளின் அடியை சாய்வாக வெட்டி மண்ணுள் ஊன்றிவிடவும். தாராளமாகத் தண்ணீர் விட்டபின் தடிகளிலும் உயரமான வெள்ளைப் போத்தல் ஒன்றினால் காற்றுப் புகாதபடி மூடிவிட வேண்டும். மூன்று நாட்களின் பின் போத்தலை கவனமாகத் திறந்து அளவாக நீர் விட்டு மீண்டும் மூடிவிடவேண்டும்.ஒன்று இரண்டு வாரங்களில் குருத்து வளரத் தொடங்கும் அல்லது புதிய குருத்து வரும்.

இந்த முறையில் வைத்த கறிவேப்பிலை என்வீட்டில் ஒரு அடி உயரத்தில் இலைபரப்பி நிற்கிறது. கறிவேப்பிலை மட்டுமல்ல எல்லா மரங்களும் இம்முறையில் பதி வைக்கலாம். இப்படிப் பதியமிட்ட தூதுவளை,மாதுளை,முருங்கை மரங்கள் என்வீட்டில் உள்ளன.

தகவலுக்கு நன்றி மெசொபொத்தேமியா சுமேரியர்.

நான் வேறு முறையில் பதியம் வைத்தேன் முளைக்கவில்லை. இந்த முறையில் முயன்று பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

கறிவேப்பிலை மரம் புலம்பெயர் நாடுகளிலும் இலகுவாக உண்டாக்கமுடியும். இது நான் முயன்று வெற்றி கண்ட விடயம் .கடையில் வாங்கும் கறிவேப்பிலையில் குருத்து உள்ள தடிகளாக எடுத்து சிறிய சாடி ஒன்றில் நல்ல பசலை மண்ணாகப் போட்டு தடிகளின் அடியை சாய்வாக வெட்டி மண்ணுள் ஊன்றிவிடவும். தாராளமாகத் தண்ணீர் விட்டபின் தடிகளிலும் உயரமான வெள்ளைப் போத்தல் ஒன்றினால் காற்றுப் புகாதபடி மூடிவிட வேண்டும். மூன்று நாட்களின் பின் போத்தலை கவனமாகத் திறந்து அளவாக நீர் விட்டு மீண்டும் மூடிவிடவேண்டும்.ஒன்று இரண்டு வாரங்களில் குருத்து வளரத் தொடங்கும் அல்லது புதிய குருத்து வரும்.

இந்த முறையில் வைத்த கறிவேப்பிலை என்வீட்டில் ஒரு அடி உயரத்தில் இலைபரப்பி நிற்கிறது. கறிவேப்பிலை மட்டுமல்ல எல்லா மரங்களும் இம்முறையில் பதி வைக்கலாம். இப்படிப் பதியமிட்ட தூதுவளை,மாதுளை,முருங்கை மரங்கள் என்வீட்டில் உள்ளன.

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்,... இதனை யாராவது கனடாவில் வளர்த்து வெற்றி கண்டுள்ளீர்களா என. நான் இரு தடவை முயன்றும் பட்டுப் போயிட்டுது. அப்படி வளர்த்து நிழலிக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று பேசாமல் இருந்து பின்னர் நான் வீட்டுக்கு விசிட் பண்ணும் போது பிடிபட்டால், கட்டாயம் மரத்தை புடுங்கி விட்டு விடுவேன்..இப்பவே சொல்லிட்டன் :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50 Pence கொடுத்தால் கறிவேப்பிலை வாங்க முடியும் இதற்காக 5 Pounds கொடுத்து மரம் வர்க்கவேண்டுமா ? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறிவேப்பிலை தட்டுபாட்டுக்கு உண்மையான காரணம் புற்றுநோய்,மஞ்சள்குழந்தை(Blue baby syndrome),மற்றும் பல பயங்கரமான வருத்தங்களை உருவாக்கும் எண்டோசல்பன் (endosulfan)எனப்படும் பூச்சி கொள்ளி கறிவேப்பிலையில் அதிகம் கானப்படுவதாலேயே ஐரோப்பா அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது.

Curry Leaf from Coimbatore – a carrier of endosulfan menace

[size=3]

Curry leaf, with botanical name ‘Murraya Koenigii’ is rich in healing properties since it is an antiseptic. Curry leaf is cultivated on about 4000 acres of land in the Coimbatore-Mettupalayam region on both sides of the Bhavani River. Villages in and around Mettupalayam are the largest producers of curry leaves in Tamil Nadu. This region cultivates 13.9% of the total cultivation of curry leaves in India. According to the local farmers, the curry leaf cultivation will fetch them hardly Rs.5000 per month from one acre.[/size][size=3]

Lavish use of endosulfan[/size][size=3]

Use of endosulfan as pesticide is quite common in these curry leaf farms. The growers of curry leaf say that they are compelled to spray endosulfan to protect the plants from tea mosquitoes and other harmful insects. Moreover, since the curry leaves are transported to far away markets such as Chennai, southern Karnataka and Kerala, bunches of the leaves are immersed in endosulfan solution to prevent damage by insects by the time they reach the market. The farmers say that each tree is sprayed with endosulfan minimum six times prior to harvesting. Thus the curry leaves from Coimbatore are no more antiseptic but hazardously toxic due to spraying of endosulfan which has been identified as a dreaded pesticide and is to be phased out globally from March, 2012.[/size][size=3]

Kerala, the potential market[/size][size=3]

The major part of curry leaves produced in Coimbatore is being sold in Kerala market. Ironically, in the recent past there had been many severe anti-endosulfan protests in Kerala. The US and other domestic countries stopped buying curry leaves from India since last few years due to more presence of pesticide residue. There is good demand for curry leaves in the domestic market.[/size][size=3]

Curry leaf farming – an outcome of pollution[/size][size=3]

Interestingly, the farmers of this region switched over to curry leaf farming a few years back after giving up the cultivation of grains and pulses. According to a report from the International Water Management Institute, the water in Bhavani River became contaminated with industrial effluents from the chemical factories situated by its side. The polluted water destroyed the soil fertility in this region and consequently the farmers could find no other options but, to initiate curry leaf cultivation.[/size][size=3]

[size=1]

http://www.coimbatoreonline.info/news/curry-leaf-from-coimbatore-%E2%80%93-a-carrier-of-endosulfan-menace/[/size][/size]

Link to comment
Share on other sites

கனடாவின் காலநிலைக்கு வளருமோ தெரியவில்லை. இது ஒரு outdoor தாவரம் என்றால், கண்டிப்பாக சூரிய வெளிச்சம் தேவையாக இருக்கும். வீட்டுக்குள் வைத்தும் வளர்க்க முடியாது.

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்,... இதனை யாராவது கனடாவில் வளர்த்து வெற்றி கண்டுள்ளீர்களா என. நான் இரு தடவை முயன்றும் பட்டுப் போயிட்டுது. அப்படி வளர்த்து நிழலிக்கு சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று பேசாமல் இருந்து பின்னர் நான் வீட்டுக்கு விசிட் பண்ணும் போது பிடிபட்டால், கட்டாயம் மரத்தை புடுங்கி விட்டு விடுவேன்..இப்பவே சொல்லிட்டன் :icon_mrgreen:

நான் சொன்னது கனடா கதை தான். கனடா என்பது ஒன்ரரியோவுடன் முடிந்துவிடுவதில்லை. :D

நானும் கனடாவில் தான் இருக்கிறேன் அதுகும் குளிர் காலத்தில் -40 பாகை செல்சியஸ் வரை குளிர் வரும் இடத்தில் :) . வீட்டினுள் சூரிய ஒளி கிடைக்கும் யன்னல் ஓரத்தில் வைத்து வளர்க்கிறேன்.

இது 2008 ஆம் ஆண்டு சிறிய கன்றாக இருக்கும் பொது எடுத்தது.

http://viriyumsiraku...og-post_09.html

பொதுவாக கறிவேப்பிலை விதையில் இருந்து அல்லது ஏற்கனவே இருக்கும் கறிவேப்பிலை கன்றின் வேரில் இருந்து முளைத்துவரும் சிறிய கன்றுகளை தனியே பிரித்து வைத்தே இனம் பெருக்க முடியும் என நம்புகிறேன். ஊரில் இருந்த பொது வீட்டில் கறிவேப்பிலை பற்றையாக வளர்ந்து நின்றதால் தடி முலம் இனப்பெருக்கம் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை. மாதுளை, முருங்கை என்பவை தடி மூலம் இனப்பெருக்கம் செய்வது தெரியும். வீட்டில் அப்படி செய்தும் இருக்கிறேன். ஆனால் கறிவேப்பிலை தடி மூலம் இனப்பெருக்கம் செய்வது பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன் மோசப்பதேமியா சுமேரியன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.