Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடை கொடு விடை கொடு மண்ணே

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடை கொடு விடை கொடு மண்ணே...

வாகனம் ஓடும் சத்தம், காற்று வீசும் ஓசை, வண்டிக்குள் எம் மூச்சுக்காற்று இவை தவிர அந்தச் சூனியப் பிரதேசத்தில் வேறு சத்தமில்லை. சாம்பல் பூத்த வானம் சலனம் தீர்ந்து சயனித்திருந்தது. வெந்து கிடந்தது மண்; வேகம் இழந்து வீசியது காற்று. கருகிக் கிடந்தன மரங்கள். குவிந்து கிடந்தன எரியூட்டப்பட்ட வாகனங்கள். மூச்சடங்கிக் கிடந்தது முல்லை நிலப்பரப்பு. மொட்டையாய் நின்றன கற்பகத்தருக்கள். கோலமிழந்து கிடந்தன வாழ்வின் எச்சங்கள். கூரை இழந்து நின்றன குடியிருந்த கோயில்கள். விதவைக் கோலம் பூண்டிருந்தன தெருக்கள். இறுதிக்கட்ட போரின் பின் தொலைக்காட்சிகளிலும் கணனிகளிலும் பார்த்து மனம் கனத்த கொடுமையான நிகழ்வுகளின் ஒளிப்படங்கள் மனக்கண்ணில் ஒருகணம் நிழற்படமாய் விரிய மனதை சோகம் பிராண்டிக் கொண்டிருந்தது.

29612805.jpg

இது எம் மறவர் நடந்த மண் வீரம் விளைந்த நிலம் விழவிழ எழுந்து வீர வரலாறு படைத்த பூமி எம் தலைவன் தரிசித்த எல்லைகள் கொண்ட காடுகள். மகுடம் தொலைத்த மன்னன் போல் இன்று வெறுமையாய்.. தூரத்தில்..வெகு தூரத்தில் முகவரி இழந்த கிராமங்கள். எல்லைகளில்லாப் பெருவெளியாய் குருதியில் குளித்த நிலப்பரப்புகள். மரணித்த மாவீரரின் பூவுடல் சுமந்து மௌனித்துக் கிடக்கும் மணல் வெளிகள். வாகனம் ஓடிக்கொண்டிருந்த பொட்டல் வெளிக் காடுகளில் மனித நடமாட்டமற்று பாம்புகள் குடிகொண்ட பற்றை மூடிய குடிசைகள்.

இதுதானே அப்பாவி மக்களை அவலமாய் ஓலமிடவைத்த சூனியப் பிரதேசம். கண்முன்னே கதறக் கதற குண்டு வீச்சில் உடல் சிதறும் காட்சிகளைக் கண்டு வேதனை விளிம்பில் வேகவைத்த கந்தக பூமி. மனசுக்குள் சொல்ல முடியாத சோக ராகம். ஆற்றுவார் யாருமின்றி அத்தனை தெய்வங்களையும் கூவியழைத்தும் குரல் கேட்டு ஓடிவர முடியாமல் ஏமாந்து ஏதிலிகளாய் எம்மினம் அலைந்த அந்த இடர்மிகு நிலப்பரப்பு. கடலேரி எங்கும் காட்சிப் பொருளாய்க் கிடக்கும் எம் மக்களின் உடமைகள். வர்ணமிழந்து வடிவிழந்து 'நாங்கள் என்ன பாவம் செய்தோம்' என எம்மைப் பார்த்து குரலெழுப்பும் குழந்தைகளின் துவிச்சக்கர வண்டிகள்.

43912306.jpg

சமையல் பாத்திரங்கள் முதல் சாக்கு மூடைகளில் கட்டப்பட்டு கட்டவிழ்ந்து சிதறிக்கிடக்கும் தட்டுமுட்டுச் சாமான்கள் வரை ஆண்டுகள் பல கடந்தும் அடையாளம் காட்டும் அவலங்களாய் பார்க்குமிடம் எங்கும் பரந்து கிடந்தன. போராளிகள் தயாரித்த கவச வாகனம் பார்வைக்கு வைக்கப்பட்டு எம் மறவர்களின் வீரத்திற்குச் சான்று பகர்ந்தது.

மனித அவலங்கள் அத்தனையும் தனிமையில் கண்ட ஆயாசத்துடன் அமைதியாய்க் கிடந்தன மண்அணைகள். வீதியின் இருமருங்கிலும் வெட்டப்பட்டு தூர்ந்து கிடந்த பதுங்கு குழிகள் எம்மிடம் பல துயரக் கதைகள் பேசின.

அத்தனை வீரமும் தியாகமும் துணிவும் அந்த மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் மாபெரும் சோகம் மனதை பிராண்டிக் கொண்டிருக்க அடிக்கொரு இராணுவம் எம்மை அவதானித்துக் கொண்டிருக்க அந்த ஆளரவமற்று சிவந்து கிடந்த செம்மண் பாதையில் எம் வாகனம் மட்டும் ஒலிஎழுப்பியபடி ஓடிக்கொண்டிருந்தது. நாயாறு ஒதியமலை நந்திக்கடல் என்று ஒவ்வொரு இடங்களையும் வாகனம் தாண்டும்போது எம் ஒவ்வொரு அணுவும் வேதனையில் வெந்து தணிந்தது.

தலைவருடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்காக அமைக்கப்பட்ட மூன்றடுக்கு கொண்ட (மூன்றடுக்கும் நிலக்கீழ் அறைகளாய்) வீடு. அதன் வாயிலில் காவல் காக்கும் இராணுவம்.

38284151.jpg

51639753.jpg

45681553p.jpg

39424692.jpg

55986837.jpg

89839102.jpg

கண்காட்சியாய் இவ் வீட்டைப் பார்ப்பதற்கும் படங்களாய் பதிவு செய்வதற்கும் கூட்டம் கூட்டமாய் வந்திறங்கும் தென் இலங்கை மக்கள் அவர்களுடன் எம்மைப்போல் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்து ஆலய தரிசனம்போல் ஆன்மீக தரிசனம் பெறும் பக்தர்களாய் சிலர். இதில் அவலம் என்னவென்றால் எம் மண்ணில் வாழும் மக்களுக்கு இவ் இடங்களைப் பார்வையிட சந்தர்ப்பமுமில்லை இப்படியான இடங்களைப் பார்க்க வாய்ப்புமில்லை.

65541442.jpg

இவ் வீட்டின் முன் நிலக்கீழ் வாகனத்தரிப்பிடம் பக்கத்தில் மரணித்த மாவீரரை வைத்து இறுதி மரியாதை செலுத்தும் தமிழீழ வேலைப்பாடமைந்த கதவுடன் சிறிய மண்டபம்.

44308922.jpg

வீட்டிற்குள் காயம் பட்டவர்களுக்கு அறுவைச் சிகிச்சை நடைபெறம் பிரத்தியேக அறை. திட்டமிடல் நடைபெறும் சிறப்பு மணடபம். பிரமிக்க வைக்கும் பிரமாண்டமான வலை அமைப்பு. இவ் வீட்டைச் சுற்றி நான்கு சுற்றுக்களாக முட்கம்பி வேலி அமைப்பு. இத்தனை திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட ஒரு அமைப்பு எப்படி உடைக்கப்பட்டது என்ற ஏக்கம் உள்ளத்தில் உடைப்பெடுத்தது.

38403197.jpg

41671314.jpg

வரலாற்றின் பல பக்கங்களில் இரத்தக்கறை இருக்கிறது. துரோகம் அன்று தொட்டு இன்றுவரை மானிடத்தை மரணிக்க வைத்திருக்கின்றன. நேரமாகிவிட்டதால் கடற்புலிகள் பயிற்சிபெற அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான நீச்சல் தடாகத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது. இருந்தும் அதன் அமைப்பு பற்றியும் தொழில் நுட்பம் பற்றியும் எம்முடன் வந்திருந்த நண்பர்மூலம் கேட்டறிந்தோம்.

56524769.jpg

அந்திமாலைப்பொழுது அடிவானில் செம்மையைப் பூசிக்கொள்ள தொடுவானில் கதிரவன் தன் கடமையை முடித்து மறையத் தொடங்கியது. குண்டும் குழியுமான வீதிகளையும் மின் விளக்குகள் ஏதுமற்ற ஏகாந்கப் பெருவெளிகளையும் காட்டுப்பாதைகளையும் கடந்து வாகன ஓட்டுனர் லாவகமாக எமது வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்தார். மனதுக்குள் அழுத்திய பாரத்தால் வாகனத்துள் அமர்ந்திருந்த எமக்கு வார்த்தைகளுக்கு பஞ்சம். சில இடங்களில் இராணுவத்தினர் வாகனத்தை மறித்து விசாரித்து வழியனுப்பி வைத்தனர்.

வாகனம் வற்றாப்பளையை அண்மித்திருந்தது. வளமிழந்து வாய்மூடி மௌனமாய் தவமிருக்கும் வற்றாப்பளை அம்மன் கோவில் கோபுரம். இரவின் நிலவு வெளிச்சத்தில் பளபளப்பாய் விரிந்து கிடக்கும் வெண்மணல் பரப்பு. பக்கத்தே கண்ணாடியாய் மின்னும் கடலேரி. ஏப்பொழுதாவது வரும் பக்தர்களை எதிhகொள்ளும் கோயிற் குருக்கள். கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வாகனத்திலேறி முல்லைத்தீவை நோக்கி முன்னேறினோம்.

ஆழ்கடலின் அகலவிரித்த கொடும்கரங்களுக்குள் சிக்கி வாழ்விழந்த பல்லாயிரக்கணக்கானவாகளின் பெயர்களை தன் சுவரில் நிரந்தரமாக்கியபடி நிர்மலமாய் நிமிர்ந்து நிற்கும் அந்த சுனாமி நினைவாலயம்.

99231592.jpg

பெயர்களை வாசிக்கும்பொழுதே உள்ளுக்குள் உயிரெல்லாம் நசுங்குவதுபோல உணர்வு. பலர் குடுமபம் குடும்பமாக ஒரே இறுதிப் பெயருடன் அந்த அனர்த்தத்தில் முழுவதுமாகப் பலியாகி அங்கு பெயராகப் பொறிக்கப்பட்டிருந்தனர். பக்கத்தே முல்லைப் பெருங்கடல் மூச்சடங்கியபடி ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி அமைதியான அலைவீச்சுடன் வெண்மணலை முத்தமிட்டுக்கொண்டிருந்தது. அலைகளில் கால் நனைத்தபடி கடலை நோட்டமிட்டோம். கடலினுள் விரைவுப் படகிலுருந்து கரையை நோட்டமிடும் கடற்படையினரைக் கண்டதும் எம்முடன் கூட வந்தவர்கள் அதற்கு மேல் எம்மை அங்கு நிற்க அனுமதிக்கவில்லை.

37261655.jpg

சுனாமி நினைவு மண்டபத்தினுள் பித்தளையால் செய்யப்பட்ட ஒரு செப்புச்சிலை வைக்கப்பட்டிருந்தது. ஒரு பெண் பேரலையை எதிர்கொள்வதுபோல வடிவமைக்கப்பட்ட அந்தச்சிலை அத்தனை பேரின் ஆத்மீக அஞ்சலிக்காக உருவாக்கப்பட்டிருந்தது. கனத்த மனத்துடன் கனவாகிப் போனவர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மீண்டும் மாங்குளம் நோக்கி எம் பயணத்தை ஆரம்பித்தோம். கனத்த மனங்களும் கடிகார நேர மாற்றமும் எம்மை நிம்மதியாக நித்திரை கொள்ளவிடாது அலைக்கழித்தது.

பொழுது விடிந்ததும் அனைவரும் ஆயத்தமாகி நல்லாயன் அருட்சகோதரிகளால் பராமரிக்கப்படும் நூற்றுக்கணக்கான குழந்தைகளைச் சென்று சந்தித்தோம்.

86209088.jpg

அனைத்துக் குழந்தைகளும் போரினாலும் சுனாமியினாலும் பெற்றவர்களை இழந்து அநாதைகளாக்கப்பட்டவர்கள். அங்குள்ள சகோதரிகள் அக்குழந்தைகளைப் பராமரிப்பதில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. காரணம் அக் குழந்தைகள் உடலால் மட்டுமல்ல மனதாலும் பாதிக்கப்பட்டவர்கள். நாம் சென்று அவர்களுடன் உரையாடியது அவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அதைத்தொடர்ந்து இராணுவத்தினரிடம் சரணடைந்து

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் புனர்வாழ்விற்கென அமைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு நிலையத்திறப்புவிழாவில் கலந்து கொள்வதற்காக கணேசபுரம் சென்றோம்.திறப்பு விழாவிற்கு அநேக கன்னியர்களும் குருக்களும் பொதுநிலையினரும் வந்திருந்தனர். அவர்களில் பலர் பெற்றவர்களினாலும் குடும்ப உறுப்பினர்களாலும் புறக்கணிக்கப்பட்டவர்கள். அவர்களின் புன்னகையின்பின் ஆழ்ந்த சோகம் இழையோடிக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடம் அவர்களுக்கு தொழிற்கல்வி கற்கவும் அங்கு தங்கி இருக்கவும் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டிருந்தது.

83090214.jpg

தையல்; பின்னல் சுவர்ஓவியங்கள் சுவர் அலங்காரங்கள் தலையணைஉறை படுக்கைவிரிப்புகளில் அலங்கார வேலை சிறுவர்உடைகள் முதலிய பலவகையான கை வேலைகள் அங்கு பயிற்றுவிக்கப்படுவதற்காக தையல் இயந்திரங்களும் பலவித உபகரணங்களும் வைக்கப்பட்டிருந்தன. புலவித வேலைகளும் பயிற்றுவிக்கத்கூடிய ஆசிரியர்களும் நியமிக்கப்படடிருந்தனர். அங்குள்ள பெண்களால் உருவாக்கப்பட்ட பல பொருட்கள் அங்கு கண்காட்சிக்காக வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அநேகமானோர் அப் புனர்வாழ்வு நிலையத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அக் கைப்பணிப் பொருட்களை மகிழ்ச்சியுடன் வாங்கினர்.

எமக்கு அங்கு ஆச்சரியம் தரும் விடயம் என்னவென்றால் பாக்கிஸ்தான் இந்தியா போன்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் எம்இன மாணவிகள் சிலரும் தலைநகரில் வாழும் இளம் பெண்கள் சிலரும் விடுமுறை நாட்களில் அங்குவந்து அப் பெண்களை வழிநடத்துபவர்களாக செயற்பட்ட நிலையை அறிந்து எம் இனம் இன்னும் எம் வலிமையை இழந்து விடவில்லை என்று எண்ணத்தோன்றியது. அத்தனை இடர்களையும் தாண்டி வந்தபோதும் மனம் தளராது வாழ்க்கையை ஆரம்பித்த அந்த இளம் பெண்களின் எதிர்காலம் ஒளிமயமானதாக அமைய வாழ்த்தினோம்.

இவை தவிர இன்னும் இரண்டு மூன்று ஆதரவற்ற குழந்கைகளின் இல்லங்கள் இளம் தாய்மாரின் இருப்பிடங்கள் சிறுவர் பராமரிப்பு நிலையங்களையும் பார்வையிடவும் அவர்களுடன் உரையாடவும் சந்தர்ப்பம் கிடைத்தது.

17878683.jpg

வலி சுமந்து நிற்கும் அந்த சிறுவர்களுடன் உரையாடி ஆறுதல் கூறி விடைபெற்றாலும் பல நாட்களாகியும் அவர்களது ஏக்கம் ததும்பும் விழிகள் எம் நினைவை விட்டு அகல மறுக்கின்றன.

காலமிட்ட தீர்ப்பினால் பெற்றவரை இழந்து பிரியமானவர்களைப் பிரிந்து பெண்மையைப் பறி கொடுத்து. மலர்ந்து சிலநாட்களிலேயே மடியில் மழலைகளைச் சுமந்து. மனநிலை பாதிக்கப்பட்டு. வெவ்வேறு கூட்டிலடைக்கப்பட்ட பறவைகளாய் சொந்த சோதரரைப் பிரிந்து. விதவைகளாய். உடல் ஊனமுற்றவர்களாய். உளநலம் குன்றியவர்களாய் ஓர் ஆறுதல் வார்த்தைக்காக ஏங்கும் எம் மண்ணின் மைந்தர்களைத் தேற்றுவது எப்படி என்று எமக்குப் புரியவில்லை.

அங்கிருந்து மன்னார் நோக்கி எம் பயணம் ஆரம்பமாகியது. எனது சகோதரியின் சிநேகிதி விடத்தல் தீவைச் சேர்ந்தவர். அவர்களும் அங்கிருந்து இடம்பெயர்ந்து அயற்கிராமம் ஒன்றில் புதிதாக வீடுகள் அமைத்து தங்கி இருந்தனர். அந்த இடங்களிலும் யாரும் கடற்தொழிலுக்குச் செல்ல முடியாமல் தடை விதிக்கப்பட்டிருந்ததால் பல குடும்பங்கள் பசி பட்டினியால் வாடுவதாகவும் பேசிக்கொண்டார்கள். வரலாற்றுப் புகழ்மிக்க கேதீஸ்வரம் மாந்தை மற்றும் புனித சவேரியார் கல்லூரி வேதசாட்சிகள் ஆலயம் முதலியவற்றை தரிசித்தபின் மடு நோக்கி எம் பயணம் தொடர்ந்தது.

80003179.jpg

மடு போகும் வழியில் கட்டுக்கரைக்குளம் பெரிய நீண்ட மண் அணைகளுடன் காணப்பட்டது. வழியெங்கும் தமிழ் பேசும் மக்களைவிட சிங்களம் பேசும் மக்களே பெருமளவில் காணப்பட்டனர். அடுத்து அருவியாறு அமைந்துள்ள இடத்திற்குச் சென்றோம். பேராதனை பூங்காவில் அமைந்திருப்பதுபோல் தொங்குபாலம் அமைக்கப்பட்டிருந்தது.

67249498.jpg

இத்தனை இயற்கை அழகுகளையும் தன்னகத்தே கொண்டுள்ள எம் மண் இன்று கோலமிழந்து கிடப்பதை எண்ணி மனம் ஏங்கியது.

மடு அன்னையின் திருவிழா அன்று மடு அன்னையின் ஆலயத்தைச் சென்றடைந்தோம். கானகக் கன்னியாம் மடு அன்னை ஆலயம் புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளித்தது. நாடு முழுவதிலுமிருந்து அங்கு வந்திருந்த பக்தர்களினால் ஆலய வளவு நிறைந்து காணப்பட்டது. திருவிழாத் திருப்பலி முடிந்ததும் எமது பயணத்தை வவுனியா நோக்கி ஆரம்பித்தோம்.

வவுனியாவில் கொழும்பு செல்லும் சொகுசு பஸ் ஆயத்தமாக ஆரவாரமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு நின்றது. பஸ்சில் ஏறி அமர்ந்ததும் மீண்டும் எம் பிறந்த மண்ணைப் பிரியப்போகும் துயரம் மனதை அழுத்தியது. முதற்தடவையாக தொண்ணூறுகளில் தாண்டிக்குளம் தாண்டி நாம் சொந்த மண்ணிலேயே அகதிகளாக விரட்டப்பட்டது நினைவில் நிழலாடியது. இது இரண்டாவது தடைவையாக எம் புலப்பெயர்வு. மீண்டும் எம் தாயகத்தை தரிசிக்கும் நாளை எண்ணி ஏக்கமுடன் தலை நகரை நோக்கி பயணிக்கத் தொடங்கிய பஸ்சினுள் கண்முடி மௌனமாய் மனதுக்குள் எம் தாய் மண்ணிற்குத் தலை வணங்கி விடை கொடுத்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு......

தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மிக நீண்ட நாட்களின் பின் தாயகம் நோக்கிய [/size][size=4]அருமையான [/size][size=4]பதிவுடன் தங்களைக் காண்பதில் மகிழ்ச்சி ..........பகிர்வுக்கு நன்றி ..[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்காவை என்னால் யாழில் மறக்கமுடியாது..யாழுக்கு வந்த ஆரம்பகாலங்களில் கண்மணி அக்காவின் எழுத்துக்களையும் விரும்பிப் படிப்பேன்..அக்துடன் என்னை அப்பொழுது எழுத ஊக்கப்படுத்திய அக்கா...மீண்டும் ஒரு பதிவுடன் காண்பதில் மகிழ்ச்சியாக இருக்கிரது..அருமையான பதிவு..தொடருங்கள் அக்கா...

[size=5]சொல்வாயா கிளியே ?? [/size]

பச்சை கிளியே பச்சை கிளியே!

சுதந்தரமாய் பறக்குங் கிளியே !!

சொல்வாயா எனக்கொரு சேதி

சொல்வாயா...........எனக்கொரு சேதி ??

ஏறுமுகம் கண்ட வேளை

ஏற்றத்துடன் இருந்த தலைவனுடன்

படம் எடுத்து மகிழ்ந்திருந்தார்

புலத்து மக்கள்

இறங்கு முகம் கண்டவேளையிலும்,

ஏற்றத்தலைவன் ஏறுமுகங் காட்டியதலைவன்

சீறித் திரிந்த இடங்களை

சிங்காரமாய்படம் எடுத்து மகிழுகின்றார்

புலத்து மக்கள் !!!!!!!!!!

இவர்கள் சொல்லவரும் செய்தியென்ன

சொல்வாயா பச்சைக்கிளியே ???????????

Edited by கோமகன்

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே.......

  • கருத்துக்கள உறவுகள்

இறங்கு முகம் கண்டவேளையிலும்,

ஏற்றத்தலைவன் ஏறுமுகங் காட்டியதலைவன்

சீறித் திரிந்த இடங்களை

சிங்காரமாய்படம் எடுத்து மகிழுகின்றார்

புலத்து மக்கள் !!!!!!!!!!

இவர்கள் சொல்லவரும் செய்தியென்ன

சொல்வாயா பச்சைக்கிளியே ???????????

படங்களை மட்டும்தான் பார்த்தீர்கள் போலுள்ளது.. எழுத்தில் பின்வருமாறு உள்ளது.

கண்காட்சியாய் இவ் வீட்டைப் பார்ப்பதற்கும் படங்களாய் பதிவு செய்வதற்கும் கூட்டம் கூட்டமாய் வந்திறங்கும் தென் இலங்கை மக்கள் அவர்களுடன் எம்மைப்போல் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்து ஆலய தரிசனம்போல் ஆன்மீக தரிசனம் பெறும் பக்தர்களாய் சிலர். இதில் அவலம் என்னவென்றால் எம் மண்ணில் வாழும் மக்களுக்கு இவ் இடங்களைப் பார்வையிட சந்தர்ப்பமுமில்லை இப்படியான இடங்களைப் பார்க்க வாய்ப்புமில்லை.

படங்களை மட்டும்தான் பார்த்தீர்கள் போலுள்ளது.. எழுத்தில் பின்வருமாறு உள்ளது.

Quote

கண்காட்சியாய் இவ் வீட்டைப் பார்ப்பதற்கும் படங்களாய் பதிவு செய்வதற்கும் கூட்டம் கூட்டமாய் வந்திறங்கும் தென் இலங்கை மக்கள் அவர்களுடன் எம்மைப்போல் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்து ஆலய தரிசனம்போல் ஆன்மீக தரிசனம் பெறும் பக்தர்களாய் சிலர். இதில் அவலம் என்னவென்றால் எம் மண்ணில் வாழும் மக்களுக்கு இவ் இடங்களைப் பார்வையிட சந்தர்ப்பமுமில்லை இப்படியான இடங்களைப் பார்க்க வாய்ப்புமில்லை.

முக நூலில் யாழ் பரியோவான் கல்லூரி உயர்தர மணவர்கள் அடங்கிய மாணவர்கள் குழு பரியோவான் கல்லூரியால் புதுமாத்தளன் மற்றும் போரினால்பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சுற்றுலாவுக்கு அழைத்து சென்ற படங்கள் அண்மையில் வெளியாகி இருந்தன . என்னால் அவைகளை இங்கு ஆதாரமாக இணைக்க முடியாமைக்கு வருந்துகின்றேன் . காரணம் எனது அண்ணையின் மகனும் அதில் பங்குபற்றியிருந்தான் . ஆக உள்நாட்டு மக்கள் இப்படியான இடங்களை பார்க்க சந்தர்ப்பமும் வாய்ப்பும் இல்லை என்கின்ற வாதம் அடிபட்டுப் போகின்றது கிருபன் .

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டு மக்கள் இப்படியான இடங்களை பார்க்க சந்தர்ப்பமும் வாய்ப்பும் இல்லை என்கின்ற வாதம் அடிபட்டுப் போகின்றது கிருபன் .

அப்படியானால் புலத்து மக்களுடன் உள்நாட்டில் வசிப்பவர்களும் படம் எடுத்து மகிழ்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளமுடியுமா?

தமிழர்கள் பலரும் இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால், தலைவர் பிரபாகரனின் பங்கர் போன்ற இடங்களிற்குப் போகின்றார்கள்தான். எனினும் இந்த இடங்களை ஒரு மகிழ்ச்சிச் சுற்றுலாவாகச் சென்று பார்ப்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. துக்கம் தொண்டையை அடைத்தாலும், கண்ணீர் விழிகளில் முட்டினாலும் அதையும் மீறி எம்மின வீரர்கள் வாழ்ந்து, போராடி, வீழ்ந்த இடங்களைப் பார்வையிடச் செல்லுபவர்கள்தான் பலர். அங்கு அவலப்பட்ட மக்களின் அனுபவத்தில் ஒரு துளியையேனும் தாங்களும் அனுபவிக்கவேண்டும் என்றுதான் போகும் பலர் நினைக்கின்றனர் என்று நம்புகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி காவலூர் கண்மணி! இன்னும் எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் புலத்து மக்களுடன் உள்நாட்டில் வசிப்பவர்களும் படம் எடுத்து மகிழ்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளமுடியுமா?

தமிழர்கள் பலரும் இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால், தலைவர் பிரபாகரனின் பங்கர் போன்ற இடங்களிற்குப் போகின்றார்கள்தான். எனினும் இந்த இடங்களை ஒரு மகிழ்ச்சிச் சுற்றுலாவாகச் சென்று பார்ப்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. துக்கம் தொண்டையை அடைத்தாலும், கண்ணீர் விழிகளில் முட்டினாலும் அதையும் மீறி எம்மின வீரர்கள் வாழ்ந்து, போராடி, வீழ்ந்த இடங்களைப் பார்வையிடச் செல்லுபவர்கள்தான் பலர். அங்கு அவலப்பட்ட மக்களின் அனுபவத்தில் ஒரு துளியையேனும் தாங்களும் அனுபவிக்கவேண்டும் என்றுதான் போகும் பலர் நினைக்கின்றனர் என்று நம்புகின்றேன்.

சாதாரணமாக தன்னிச்சையாக யாரும் இந்த பகுதிகளிற்கு சென்றால் இராணுவத்தின் பயங்கர கெடுபிடி சோதனைகள் உண்டு ஆனால் தெற்கு சிங்கள வர்களிற்கும் புலம்பெயர் தமிழர்களிற்கும் எவ்வித சோதனைகளோ கெடுபிடிகளோ இராணுவம் கொடுப்பதில்லையாம் இன்முகத்துடன் வரவேற்கிறார்களாம். சுற்றுலா பயணிகள் இளைப்பாறி உணவருந்தி செல்வதற்கு வசதியாக அங்கேயெ இராணுவத்தினரின் சிற்றுண்டு சாலையும் உண்டு . அதே நேரம் வட கிழக்கு பாடசாலை மாணவர்களை தங்கள் வெற்றி சின்னங்களை பார்வையிட இலங்கை கல்வி அமைச்சே வழிவகைகள் செய்து ஆலோசனைகளும் வழங்குகிறது. அடுத்ததாக புதிய நிலக்கீழ் வீடுகளும் கண்டு பிடிக்கபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அவையும் சுற்றுலா தலங்களாக மாறும். போய் படமெடுக்கலாம். அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து முல்லைத்தீவு பகுதிகளிற்கு பயணிப்பவர்களது எண்ணிக்கை பதியப்படுகின்து காரணம் தங்காளால் வெற்றி கொள்ளப்பட்ட பயங்கர வாதத்தின் சுவடுகள் தங்கள் வெற்றி சின்னமாக்கப்பட்டுள்ளது அதனை மகிழ்ச்சியோடு புலம் பெயர் தமிழர்கள் வந்து பார்வையிட்டு படமெடுத்து செல்கின்றனர் என்கிற கணக்கு உலகத்திற்கு இலங்கையரசு காட்டி தனது படுகொலைகளை நியாயப்படுத்தும். நாங்கள் யாராவது தென்னிந்திய பாடகர் விசயம் தெரியாமல் போய் பாட்டு படிச்சால் அவனை திட்டி தீர்க்கலாம் :)

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றின் பல பக்கங்களில் இரத்தக்கறை இருக்கிறது. துரோகம் அன்று தொட்டு இன்றுவரை மானிடத்தை மரணிக்க வைத்திருக்கின்றன. நேரமாகிவிட்டதால் கடற்புலிகள் பயிற்சிபெற அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான நீச்சல் தடாகத்தை பார்க்க முடியாமல் போய்விட்டது. இருந்தும் அதன் அமைப்பு பற்றியும் தொழில் நுட்பம் பற்றியும் எம்முடன் வந்திருந்த நண்பர்மூலம் கேட்டறிந்தோம்.

உங்களுக்கே தனித்துவமான, கவிதை மொழியில், உண்மைகள் அப்படியே, புட்டுப் புட்டு, வைக்கப் பட்டிருக்கின்றன!

இழப்பின் ஏக்கங்களே, வருங்காலத்தைக் கட்டியமைக்க வேண்டிய தேவையையும், வைராக்கியத்தையும் உருவாகின்றன, என்பது வரலாறு கூறும் உண்மை!

தொடர்ந்து இவை போன்ற ஆக்கங்களைத் தாருங்கள்!!!.

இங்கிருந்து செல்வபவர்ள் திரும்பி வரும்போது அரசாங்கத்துக்கு நற்சான்றிதழ் வழங்குபவர்களாகவே திரும்பி வருகிறர்கள். இப்ப அங்கு எந்தப் பிரச்சினையும் இல்லை... றோட்டுக்களெல்லாம் அந்தமாதிரிப் போட்டிருக்குது. எங்களுக்கு அவங்கள் எந்தக் கஸ்டமும் கொடுக்கவில்லை. பாக்குகள்கூடத் திற்கவில்லை... என்று கூறுகிறார்கள். இதன் அர்த்தம் என்ன? இவர்களின் கூற்றுடன் அங்குள்ள மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள். இவர்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திம் அவர்களுக்கு வழங்கப்படுகிறதா,? சண்டை நடைபெற்ற காலத்தின் பின் என் நண்பர் ஒருவர் இலங்கை சென்றுவந்தார். அவர் பட்ட அவமானம் சொல்லும் தரமில்லை. அப்படி இராணுவம் செய்தது. இப்போது... தாங்கள் செய்த தமிழினப் படுகொலைகளை மறைப்பதற்கும் மறக்கச் செய்வதற்கும் பாடுபடுகிறார்கள். அதுமட்டுமல்ல புலம்பெயர்ந்து வாழும் ; தமிழ்மக்களை அங்கு வரவழைத்து தங்களின்; வெற்றியை பறைசாற்றி . அதனால் வருமானம் தேடப்பார்க்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்காவின் பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டைமைக்கு மிக்க நன்றி...

சொந்த நாட்டில் உள்ளவர்களையே அடிச்சு துரத்தி முகாம்,முகாமாக இருக்க வைச்சு சித்திரவதைப்படுத்திக் கொண்டு இருப்பவர்கள்..எதற்காக வெளி நாடுகளில் இருந்து போறவர்களை செங்கம்பளம் விரிக்காத குறையாக வரவேற்கிறது..அவர்கள் திரும்பி வந்து தங்களைப் பற்றி நல்ல விதமாக சொல்லட்டும் என்பதற்காக தானே...நாடு நல்லா இருக்கு,நல்லா வந்துட்டு என்று சொல்பவர்களாலும் தான் அனேகமானவர்களுடைய நிரந்தரவதிவிட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது..இப்படி நிறைய விடையங்களை சொல்லலாம்...கடந்த சில மாதங்களுக்கு முன் குடும்பமாக ஊர் போய் வந்த ஒரு பெண் வேலைக்கு போகிறா...காரணம் அடுத்த வருடமும் டூர் அடிக்கத் தான்..இப்படியான அறிவு ஜீவிகள் இருக்கும் மட்டும் யாரும் திருந்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது..

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் புலத்து மக்களுடன் உள்நாட்டில் வசிப்பவர்களும் படம் எடுத்து மகிழ்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளமுடியுமா?

தமிழர்கள் பலரும் இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால், தலைவர் பிரபாகரனின் பங்கர் போன்ற இடங்களிற்குப் போகின்றார்கள்தான். எனினும் இந்த இடங்களை ஒரு மகிழ்ச்சிச் சுற்றுலாவாகச் சென்று பார்ப்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. துக்கம் தொண்டையை அடைத்தாலும், கண்ணீர் விழிகளில் முட்டினாலும் அதையும் மீறி எம்மின வீரர்கள் வாழ்ந்து, போராடி, வீழ்ந்த இடங்களைப் பார்வையிடச் செல்லுபவர்கள்தான் பலர். அங்கு அவலப்பட்ட மக்களின் அனுபவத்தில் ஒரு துளியையேனும் தாங்களும் அனுபவிக்கவேண்டும் என்றுதான் போகும் பலர் நினைக்கின்றனர் என்று நம்புகின்றேன்.

இன்னும் சில காலத்தில்

புலிகள் என்று சொன்னால்

போராளிகள் அல்லது மாவீரர்கள் என்று சொன்னால்

தலைவர் என்று சொன்னால்

தமிழருக்கு உதவி செய்கின்றேன் என்று சொன்னால்

தேசியம் தாயகம் என்று சொன்னால்

கலைத்துக்கலைத்து அடிப்பது நடக்கும்.

இது யாழிலும் வரும்.

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வயிற்றைப்பற்றி எரியுது ....... தாங்க முடியாமல் இருக்கு

ஒரு நல்ல செய்திக்காக காத்து கிடக்கிறான் அந்த நம்பிக்கை உடைக்கப்பட்டால் நான் உயிர்வாளுவேனா என்று தெரியவில்லை

அப்படியானால் புலத்து மக்களுடன் உள்நாட்டில் வசிப்பவர்களும் படம் எடுத்து மகிழ்கின்றார்கள் என்று அர்த்தம் கொள்ளமுடியுமா?

தமிழர்கள் பலரும் இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்கால், தலைவர் பிரபாகரனின் பங்கர் போன்ற இடங்களிற்குப் போகின்றார்கள்தான். எனினும் இந்த இடங்களை ஒரு மகிழ்ச்சிச் சுற்றுலாவாகச் சென்று பார்ப்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே. துக்கம் தொண்டையை அடைத்தாலும், கண்ணீர் விழிகளில் முட்டினாலும் அதையும் மீறி எம்மின வீரர்கள் வாழ்ந்து, போராடி, வீழ்ந்த இடங்களைப் பார்வையிடச் செல்லுபவர்கள்தான் பலர். அங்கு அவலப்பட்ட மக்களின் அனுபவத்தில் ஒரு துளியையேனும் தாங்களும் அனுபவிக்கவேண்டும் என்றுதான் போகும் பலர் நினைக்கின்றனர் என்று நம்புகின்றேன்.

ஆம்.............. மகிழ்கின்றார்கள் தான் . எப்படியென்றால் , வெளிநாட்டுக்காசில் வாழும் யாழ்ப்பாணத்தவர்களும், கொழும்பில் சொகுசுவீடு வாங்கி சிங்களவனுடன் அப்பவும் சரி இப்பவும் சரி எப்பவும் ஒட்டி இருக்கும் தமிழர்களும், இப்பிடி போராடாமல் ஒளித்து களவாய் ஓடிவந்து இங்கிருந்து கள்ளவீரம் பேசும் இவர்களைப்போல இலங்கை போய்வந்து படம்போடும் தமிழர்களும் மகிழ்கிறார்கள்................ அதேவேளையில் , சிங்களத்தின் சர்வதேச பரப்புரைகளுக்கு இவர்களைப் போன்றவர்களது செயற்பாடுகள் வரலாற்று சாட்சிகளாக அமைகின்றது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றேன் மைலார்ட் :D :D :D.

Edited by கோமகன்

//அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து முல்லைத்தீவு பகுதிகளிற்கு பயணிப்பவர்களது எண்ணிக்கை பதியப்படுகின்து காரணம் தங்காளால் வெற்றி கொள்ளப்பட்ட பயங்கர வாதத்தின் சுவடுகள் தங்கள் வெற்றி சின்னமாக்கப்பட்டுள்ளது அதனை மகிழ்ச்சியோடு புலம் பெயர் தமிழர்கள் வந்து பார்வையிட்டு படமெடுத்து செல்கின்றனர் என்கிற கணக்கு உலகத்திற்கு இலங்கையரசு காட்டி தனது படுகொலைகளை நியாயப்படுத்தும். நாங்கள் யாராவது தென்னிந்திய பாடகர் விசயம் தெரியாமல் போய் பாட்டு படிச்சால் அவனை திட்டி தீர்க்கலாம் :)//

சர்வதேசமே ஏகோபித்து கண்டித்த தமிழினப் படுகொலைகளை ..ஒரு சில புலம்பெயர்ந்தவர்கள் போய்ப்பார்ப்பதால் ..சிரிப்பதால்..இல்லையென்று ஆக்கிவிட முடியாது..

தமிழர்கள் யாராயிருந்தாலும் அங்கே போய்ப்பார்க்கவே விரும்புவார்கள்.அது ஒரு சரித்திர நினைவுச் சின்னமாக இருப்பதால்....

அதே போல சிங்களவர்களும் விரும்புவார்கள். அது ஒரு -நடக்காது என்பது நடந்து விட்ட-மலைப்புக்குரிய ஞாபகச் சின்னமாக இருப்பதால்...

அதே போல உலகத்தவரும் போய்ப்பார்க்க விரும்புவார்கள் ஏனெனில் குறைந்த வலுவோடு பெறுதற்கரிய இராணுவ வெற்றிகளைக் குவித்த வியப்புச்சின்னமாக இருப்பதால்...

இனி வரும் காலங்களில் அது உண்மையிலேயே ஒரு சுற்றுலாத் தலமாக மாறி விடுவதை யாராலும் தடுக்க முடியாது.

நன்றி அக்கா பதிவிற்கு. நீண்ட காலத்தின் பின் களத்தில் காண்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

இனி வரும் காலங்களில் அது உண்மையிலேயே ஒரு சுற்றுலாத் தலமாக மாறி விடுவதை யாராலும் தடுக்க முடியாது.

இவர்கள்தான் தமிழர்கள் முன்பொருகாலம் இவர்களைத்தான் ஆதிக்குடிகள் என்றார்கள் என்று ஒரு பெர்பலகையும் இருக்கும்.

//அதே நேரம் வெளிநாடுகளில் இருந்து முல்லைத்தீவு பகுதிகளிற்கு பயணிப்பவர்களது எண்ணிக்கை பதியப்படுகின்து காரணம் தங்காளால் வெற்றி கொள்ளப்பட்ட பயங்கர வாதத்தின் சுவடுகள் தங்கள் வெற்றி சின்னமாக்கப்பட்டுள்ளது அதனை மகிழ்ச்சியோடு புலம் பெயர் தமிழர்கள் வந்து பார்வையிட்டு படமெடுத்து செல்கின்றனர் என்கிற கணக்கு உலகத்திற்கு இலங்கையரசு காட்டி தனது படுகொலைகளை நியாயப்படுத்தும். நாங்கள் யாராவது தென்னிந்திய பாடகர் விசயம் தெரியாமல் போய் பாட்டு படிச்சால் அவனை திட்டி தீர்க்கலாம் :)//

சர்வதேசமே ஏகோபித்து கண்டித்த தமிழினப் படுகொலைகளை ..ஒரு சில புலம்பெயர்ந்தவர்கள் போய்ப்பார்ப்பதால் ..சிரிப்பதால்..இல்லையென்று ஆக்கிவிட முடியாது..

தமிழர்கள் யாராயிருந்தாலும் அங்கே போய்ப்பார்க்கவே விரும்புவார்கள்.அது ஒரு சரித்திர நினைவுச் சின்னமாக இருப்பதால்....

அதே போல சிங்களவர்களும் விரும்புவார்கள். அது ஒரு -நடக்காது என்பது நடந்து விட்ட-மலைப்புக்குரிய ஞாபகச் சின்னமாக இருப்பதால்...

அதே போல உலகத்தவரும் போய்ப்பார்க்க விரும்புவார்கள் ஏனெனில் குறைந்த வலுவோடு பெறுதற்கரிய இராணுவ வெற்றிகளைக் குவித்த வியப்புச்சின்னமாக இருப்பதால்...

இனி வரும் காலங்களில் அது உண்மையிலேயே ஒரு சுற்றுலாத் தலமாக மாறி விடுவதை யாராலும் தடுக்க முடியாது.

மகாராசா கேக்கிறன் எண்டு கோப்பட்டு உறையில கிடக்கிற வாளைத் தூக்கப்படாது :unsure: . அதுசரி உலகமே ஏகோபிச்சு கண்டித்த தமிழின படுகொலையள் எண்டு சொல்லுறியள் . அப்ப இந்த மூண்டு வரியத்தில ஏதாவது தீர்வு அங்கை வந்திருக்கவேணுமே :lol: ?? அதோடை காதை குடுங்கோ சொல்லிறன் இந்த தமிழின படுகொலையளை செய்ததே இதே உலகம்தான் :lol::icon_idea: . எப்பிடி கூட்டி கழிச்சு பாத்தாலும் கணக்கு பிழைக்குதே மகாராசா :D :D ??

அதோடை கதையோடை கதையா , இங்கை றோட்டு முழுக்க வெட்டிறான் கொத்துறான் எண்டு சன்னதமாடிப் போட்டு , தோத்த போர்களத்தில போய்நிண்டு படங்களை எடுத்து தூக்கி கொண்டுவந்து போடிறது சிங்களத்துக்கு ஐஞ்சு சதம் சிலவில்லாத பிரச்சார உத்தி கண்டியளோ :icon_idea: கிட்டமுட்ட அறப்படிச்ச பல்லி களுநீர்பானைக்குள்ளை விழுந்த கதைதான் :( .

:unsure: . அதுசரி உலகமே ஏகோபிச்சு கண்டித்த தமிழின படுகொலையள் எண்டு சொல்லுறியள் . அப்ப இந்த மூண்டு வரியத்தில ஏதாவது தீர்வு அங்கை வந்திருக்கவேணுமே :lol: ??

இது தான் உலகம்... மொள்ள மொள்ளமாய்த் தான் செய்வினம்... எங்கட அவசரத்திற்கு கவனமெடுக்க எங்களிட்ட என்ன பெற்றோல் கிணறா கிடக்கு..

இதுக்கு மேல சிங்களவன் அடக்கி வாசிக்கிறான் எண்டா ..அதுக்குக் காரணமும் அவை தான் ..அவையும் அக்கறைப் பட இல்லையெண்டால் எப்பவோ பிரிச்சு மேய்ஞ்சு போட்டுப் போயிருப்பான்..

அதோடை காதை குடுங்கோ சொல்லிறன் இந்த தமிழின படுகொலையளை செய்ததே இதே உலகம்தான் :lol::icon_idea: .

இதுவும் வாஸ்தவம் தான்.. அவை தான் செய்தவை இதில சில கூட்டல் கழித்தல்கள் கிடந்தது... {அவர்கள் கணக்குப்படி} அதைச் செய்து விட்டினம் ..தட்டிக்கேட்கத்தான் ஆசை ..என்ன செய்யிறது?

எப்பிடி கூட்டி கழிச்சு பாத்தாலும் கணக்கு பிழைக்குதே மகாராசா :D :D ??

இது தான் ஒரு கயிறு தொங்குது... உதையும் விட்டா தண்ணியிக்க கிடந்து சாகத்தான் வேணும்.. எப்படி வசதி? அப்ப தப்பிவர ஏதாவது மார்க்கம் வைச்சிருக்கிறியளோ?

தோத்த போர்களத்தில போய்நிண்டு படங்களை எடுத்து தூக்கி கொண்டுவந்து போடிறது சிங்களத்துக்கு ஐஞ்சு சதம் சிலவில்லாத பிரச்சார உத்தி கண்டியளோ :icon_idea:

நான் அப்படியெண்டு நினைக்கயில்ல ..உலக மகாயுத்தங்களில தோத்த வெண்ட இடங்களை அங்க செத்தவையின்ர நினைவுச் சின்னமாக வைச்சிருக்கினமே தவிர வெற்றி தோல்வியின் நினைவுச் சின்னமாயில்லை

எப்படியிருந்தாலும் தாய் பிள்ளையளா இருந்தவையின்ர ஆத்மாக்களோடு பேச அங்கை போகத்தானே வேண்டியிருக்கு..

ஏன் அதை நெக்கடிவ் கோணத்தில பாக்க வேணும்?

கிட்டமுட்ட அறப்படிச்ச பல்லி களுநீர்பானைக்குள்ளை விழுந்த கதைதான் :( .

களுநீர்ப்பானைக்கை காரியமாய் விழுகிற பல்லியள் தான் இப்ப கூட சம்பந்தர் மகிந்த வோட கதைச்சால் சம்பந்தம் பேசுறார் எண்டு நினைக்கிறது சரியில்ல தான.. சுண்டலும் சொல்லிக் கொண்டிருக்கு மகிந்தவோட கதைக்கவேணுமெண்டு.. எனக்குப் பாத்தால் சுண்டலும் மகிந்தாவோட ஏஜண்டு மாதிரித்தான் படுகுது.. ஆனாலும் நீங்கள் சொல்ல மாட்டியளோ அது வீண் சந்தேகம் எண்டு

இது தான் ஒரு கயிறு தொங்குது... உதையும் விட்டா தண்ணியிக்க கிடந்து சாகத்தான் வேணும்.. எப்படி வசதி? அப்ப தப்பிவர ஏதாவது மார்க்கம் வைச்சிருக்கிறியளோ?

மார்க்கங்கள் இருக்குத்தான் சொன்னால் துரோகியெண்டு சொல்லப்படாது :lol: . இப்பவே சொல்லிப்போட்டன் :) . றோட்டலை போறவன் வந்து வடக்கையும் கிழக்கையும் இணைச்சு மாநிலசுயாட்சியோடை ஒரு இணக்க அரசியலை செய்யுங்கோடாப்பா எண்டு ஒரு மார்க்கத்தையெல்லாம் சொல்லேக்கை எங்கடை கெப்பர் தனங்கள் விடேல :( . இப்ப வடக்கும் இல்லை கிழக்கும் இல்லை ,ஒரு சென்ரிமீற்றர் நிலமும் இலை . இதைதான் மகாராசா நான் சொன்ன சொலவடையுஞ் சொல்லுது :( :( .

எல்லாருக்குந்தான் விளங்கின விஷயம். முன்னால துவக்கோட நிக்கயிக்க மூச்சும் விடேலாமல் முழுசிக் கொண்டு நிண்டம்..

அதைக் கதைச்சு என்ன? நடந்து முடிஞ்ச கதை. அவையும் போய்ச் சேந்திட்டினம்..

இப்ப என்ன செய்யிறது?அதுதான் கேட்கிறன்... சர்வதேசம் எண்ட துரும்புக்கயிறும் இல்லையெண்டால் நாங்கள் வாழ்ந்ததுக்கே சாட்சியம் அழிஞ்சு போடும்... இது நான் நினைப்பது..குந்து மணியளவு எண்டாலும் நம்புவது.. வேறு ஏதாவது மார்க்கம்?

புலி, புலி,புலி என்று தானே

* அகதியடிச்சது

* காசு சேர்த்தது

அங்கை போய் புலம் பெயர் மக்கள் பார்த்தால் என்ன??????

நன்றி சொல்லத் தானே வேணும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.