Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார்": எரிக் சோல்ஹெய்ம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாரதர்...

எனக்கு விளங்கவில்லை எது ஆடு அது மாடு என்று..

அனால் நீங்கள் இணைத்த இணைப்பு சுத்தம். அதனுடைய முதலாவது வசனமே/ கேள்வியே பிழையானது. பிரான்சிஸ் கரிசனுடைய புத்தகத்தின் அரசில் நிலை என்று தொடங்குகிறார், நான் அந்த பேட்டியின் அரைவாசிக்கு கிட்ட பார்த்தேன், அவர் திரும்ப திரும்ப சொன்னது இது ஒரு அரசியல் சார்ந்த புத்தகம் அல்ல என்று. ஏன் தான் அப்படி தொடங்குகிறார்களோ தெரியவில்லை. அதை தவிர கார்த்திக் சொல்லுகிறார்..இந்த புத்தகம் "ஒரு விதமான அவலத்தை சொல்லுகிற புத்தகம், தமிழர் மீது பச்சாபதம் வரவேண்டும் என்பது போன்ற தோற்றப்பாட்டை வரச்செய்கிற புத்தகம்............, அந்த புத்தகம் அதுதான்..தமிழரின் அவலநிலை மற்றவர்களுக்கு சொல்லுகிற புத்தகம். அவர்களின் இன்றைய, பழைய அரசியலை விட, அவர்களது அவலத்தை எடுத்து சொல்லுவது காலத்தின் தேவை என்று அவர் சொல்லுகிறார். அதில் அவாவிற்கு என்ன தேவை என்று எனக்கு தெரியாது.

அப்படி அதிகம் குளறுபடி உள்ள பேட்டி; இவர்களை அல்லது இவர்கள் போன்றவர்கள்தான் தமிழரின் சர்வதேச அரசியலை வழி நடத்துபவர்களின் குரல் என்றால்..அவர்களுக்கு நாற்பது ஆயிரம் என்ன நாலு லட்சம் பேர் அழிந்தாலும், தமிழரின் "தாயகம் தன்னாச்சி, தனி அரசுக்கான போர் தொடரும்" ஒரு இடத்தில் சொல்லுகிறார், 2009 முன்பு இப்படி ஒன்றும் இல்லை, இப்பத்தான் எல்லாம் முதலில் பேர் குற்றம், பிறகு LLRC , பிறகு இருபகுதியும் குற்றம், இப்ப பிரகாரன்தான் இதுக்கு காரணம் என்று சொல்லுகிறார்கள் என்று. அவர்களுக்கு 2009 நடத்ததே என்னவென்று ஞாபகப்படுத்த வேண்டிய நிலையில் நாங்கள் இருக்கிறோம். இதே சொல்கேம் சில காலத்துக்கு முன்பு பிரபாகரன் போரியல் மேதை , அரசியலில் கத்துக்குட்டி, என்ற போது சிறிய சல சலப்பு இருந்த போதும் "போரியல் மேதையை" தலையங்கம் ஆக போட்டு மனம் மகிந்தோம். ஆனால் இன்று இப்படி ஒரு சரணரைவுக்கு ஒரு பேச்சு வார்த்தை நடந்தது என்று சொன்னால் அவர் துரோகி...எங்கேயோ இருந்த உருத்திரகுமாரன், விழுந்தடித்துக்கொண்டு..."அப்படி கதைத்தனான்கள் ஆனால் எழுத்தில் எதுவும் தரவில்லை" ...அதையேன் இவ்வளவு காலமும் பொத்தி வைத்து கொண்டு இருந்தனிர்கள், நாங்களும் கேட்கமாட்டோம் அவரும் சொல்லமாட்டோம். அவர் BBC 5 நிமிடத்தில் சொன்னத்தை, விளக்கமாக எல்லோரும் அறியும் படி தனக்கு தெரிந்ததை சொல்லுவதால் யாருக்கு லாபம் அல்லது நட்டம்?

உந்த போட்டியில் ஒருவர் சொல்லுவர் " விடுதலை புலிகள் ஒரு போதும் சரணடைய மாட்டார்கள்" ...அங்கே இலங்கை சிறைகளில் இருப்பவர்கள் விடுதலை புலி இல்லாமல் கருணாவின், டக்கிலஸ்...... இன் ஆக்கள் என்றுதான் நினைத்து கொண்டு இருக்கிறாரோ தெரியாது.

பேரின் முடிவை மறைத்து வைப்பதால் யாருக்கு என்ன லாபம் என்று தெரியாது. ஆனால் நடத்த போர் புதிய பாதைக்கு வழி காட்ட வேண்டும் என்றால் அதன் பயணம் தெரிந்திருக்க வேண்டும்.

இலங்கையில் தமிழருக்குரிய எதிகால இருப்பு யாரையோ சார்ந்துதான் இருக்க போகிறது, அது பேயோ, பிசாசோ என்று தெரியவில்லை, ஆனால் வெளிநாடவர்கள் வார சந்தர்பத்தை நாங்கள் தான் ஏற்படுத்த வேண்டும். அப்படி இல்லாமல் உலகம் முழுக்க விரோதத்தை சேர்த்து வைத்துக்கொண்டு சர்வதேசம் உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளை வேளாண்மை.

நீங்கள் இனி எந்த பழமொழியோடையும் பேட்டியோடையும் வருகிறீர்களோ தெரியாது..நான் வரவில்லை.

  • Replies 163
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விடுங்கப்பா அந்தாள் பாவம் உங்களுக்காக போராடினத தவிர வேற எந்த பாவமும் செய்யவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனைப் பற்றி சொல்கைம் என்ன.. றோட்டில போற ஒரு லூசு திட்டினாக் கூட மனம் மகிழ எங்களில கொஞ்சக் கூட்டம் இருக்குது. அந்தக் கூட்டத்தவர்களுக்கு எது நீதி நியாயம் நேர்மை.. ஏன் எதுக்கு மகிழறம்.. துக்கப்படுறம்...என்ற மனிதக் குணங்கள் அறவே வருவதில்லை..!.. எவனாவது பிரபாகரனை... புலிகளை திட்டிட்டா காணும். அதுவே அவர்களுக்கு கோடி சந்தோசம்.

அப்படியானவர்களிடம் போய்.. ஜியோபாலிரிக்ஸ்.. செனாரியோ அனலைசிஸ்.. ஸ்ராரிஜி.. டிப்பிளேமட்ஸ் பற்றி பேசுறது எல்லாம்.. அர்த்தமற்ற சொற்பதங்களாகவே இருக்கும்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்த அப்பாவி அண்ணன். அவன்

துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளிவிட்ட தமிழினம்.

  • கருத்துக்கள உறவுகள்

:(

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்த அப்பாவி அண்ணன். அவன்

துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளிவிட்ட தமிழினம்.

துப்பாக்கியை மட்டும் தூக்கத்தெரிந்தவர்தான் முப்பது வருடங்களிற்கு மேலாக மக்களின் பெரும் ஆதரவு பெற்ற தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தை வழிநடத்தினார்.

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கியை மட்டும் தூக்கத்தெரிந்தவர்தான் முப்பது வருடங்களிற்கு மேலாக மக்களின் பெரும் ஆதரவு பெற்ற தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தை வழிநடத்தினார்.

:wub: :wub:

ஆயுத பலம் தான் இன்று உலகை ஆள்கின்றது.வல்லரசென்பதே அதுதானே.புலிகள் ஆயுதம் வைத்திருந்ததும் பிழை இல்லை ஆள நினைத்தும் பிழை இல்லை .ஆனால் அதை கையாண்ட விதம் தான் பிழையாகிவிட்டது.

வல்லரசுகளின் தொழிலே அதுதானே.பொறுத்திருந்து பார்த்துவிட்டு புடுங்கிவிடுவார்கள் .

முதன் நாள் பேட்டி,பேட்டி எடுத்த நோக்கத்தையே கெடுத்துவிட்டதால் அடுத்து சப்புக்கு இந்த பேட்டி.உண்மைகளை உங்களால் ஒரு காலமும் ஜீரணிக்கமுடிவதில்லை.உங்களுக்கு தமிழ் மக்களின் விடிவை விட உங்கள் அரசியல் தான் முக்கியம்.உந்த பெடிகளுக்கு ஒன்று விளங்கவில்லை நீங்கள் திரும்பவும் சர்வதேசத்திடம் தான் எதற்கும் போக வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்த அப்பாவி அண்ணன். அவன்

துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளிவிட்ட தமிழினம்.

எதுகை, மோனை அலங்காரம் கருப்பொருளை விற்றா?

துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்த அப்பாவி அண்ணன். அவன்

துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளிவிட்ட தமிழினம்.

கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்?

ஆயுத பலம் தான் இன்று உலகை ஆள்கின்றது.வல்லரசென்பதே அதுதானே.புலிகள் ஆயுதம் வைத்திருந்ததும் பிழை இல்லை ஆள நினைத்தும் பிழை இல்லை .ஆனால் அதை கையாண்ட விதம் தான் பிழையாகிவிட்டது.

நீங்கள் புலிகள் விட்ட பிழையபற்றி விரிவாக கூறத்தயாரானால் கேட்கலாம். ஆனால் அது இன்றைய இராஜதந்திர போராட்டம் முடிந்த பின்னர்தான்.

ஆனால் நீங்கள் அத்துடன் இன்னுமொன்றையும் எழுதிவையுங்கள். அந்த இரண்டையும் நான் ஒன்றாக படிக்க விரும்புகிறேன்.

PLOTம் புலிகள் மாதிரியே ஆயுதபோராட்டத்தை தான் ஆரம்பித்தவர்கள். அவர்களுக்கு விடுதலையை பெறமுடியவில்லை அல்ல புலிகளை கூட வெல்ல முடியவில்லை.

PLOT என்ன சரியாக செய்திருந்தால் புலிகளிடம் விட்டுக்கொடுக்க வேண்டி வந்திருக்காது என்பதையும் பற்றி எழுதி வையுங்கள். மெளும் அதை ஏன் தேவையான நேரம் PLOTக்கு சொல்லவில்லை என்பதையும் எழுதிவிடுங்கள்.

Edited by மல்லையூரான்

நீங்கள் புலிகள் விட்ட பிழையபற்றி விரிவாக கூறத்தயாரானால் கேட்கலாம். ஆனால் அது இன்றைய இராஜதந்திர போராட்டம் முடிந்த பின்னர்தான்.

ஆனால் நீங்கள் அத்துடன் இன்னுமொன்றையும் எழுதிவையுங்கள். அந்த இரண்டையும் நான் ஒன்றாக படிக்க விரும்புகிறேன்.

PLOTம் புலிகள் மாதிரியே ஆயுதபோராட்டத்தை தான் ஆரம்பித்தவர்கள். அவர்களுக்கு விடுதலையை பெறமுடியவில்லை அல்ல புலிகளை கூட வெல்ல முடியவில்லை.

PLOT என்ன சரியாக செய்திருந்தால் புலிகளிடம் விட்டுக்கொடுக்க வேண்டி வந்திருக்காது என்பதையும் பற்றி எழுதி வையுங்கள். மெளும் அதை ஏன் தேவையான நேரம் PLOTக்கு சொல்லவில்லை என்பதையும் எழுதிவிடுங்கள்.

தமிழ் மக்களின் விடுதலை வேண்டிதான் போராட்டம் தொடங்கியது.நீங்கள் உங்கள் வசதிக்கு அதை புலிகள் புகழ் பாடுவதுதான் போராட்டமாக்கிவிட்டீர்கள்.

இன்று தீபத்தில் சஞ்சயனின் பேட்டி பார்த்தேன் ,உங்கள் முகங்கள் தெளிவாக அதில் கிழிக்கபடுகின்றன.உயிருடன் இருக்கும் புலிகளை விட மாவீரரான புலிகளை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தான் புலத்து புலிகள்.

தமிழ் மக்களின் விடுதலை வேண்டிதான் போராட்டம் தொடங்கியது.நீங்கள் உங்கள் வசதிக்கு அதை புலிகள் புகழ் பாடுவதுதான் போராட்டமாக்கிவிட்டீர்கள்.

இன்று தீபத்தில் சஞ்சயனின் பேட்டி பார்த்தேன் ,உங்கள் முகங்கள் தெளிவாக அதில் கிழிக்கபடுகின்றன.உயிருடன் இருக்கும் புலிகளை விட மாவீரரான புலிகளை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தான் புலத்து புலிகள்.

நாங்கள் புலி புகழ் பாடினாலும் நீங்கள் POLT புகழ் பாட தயாராக இருக்கிறீர்களா அல்லது ஒதுக்கிவிட தயாராக இருக்கிறீர்களா. புகழ் பாட தயாராக இருக்கிறீர்களாயின் அவர்கள் விட்ட பிழைகளை ஏன் அவர்களுக்குச் சுட்டிகாட்டி முன்னால் வர வைக்க முயவில்லை.

இல்லை, நீங்கள் சொல்லவருவது, "புலிகளை பிழையை சாட்ட மட்டும்தான் எனக்கு முடியும். ஆனல் நீங்கள் சஞ்சயன் வரும்வரை விளக்கத்துக்கு காத்திருக்க வேண்டும் என்கிறீர்களா?"

நான் கேட்பது சஞ்சயன் சொல்வதை அல்ல. PLOT க்கு என்ன நடந்தது? ஏன் அது நடந்தது? அதை திருத்த நீங்கள் என்ன செய்த்தீர்கள். இதை மனச் சாட்சியாக நீங்கள் கதைக்கவில்லை யாயின் புலிகள் பிழை விட்டார்கள் என்பதிலும் மனச்சாட்சியாக இல்லை.

எரிக் சோல்ஹெய்ம் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்தார் பிரபாகரன். :icon_idea:

Edited by கிளியவன்

துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்த அப்பாவி அண்ணன். அவன்

துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளிவிட்ட தமிழினம்.

சாத்திரி எழுது முன் யோசித்து எழுதவேண்டும் அண்ணனை பற்றி எழுத உமக்கு தகுதி காணாது

நேற்று நான் ஒரு கருத்து எழுதினேன் காணவில்லை ...........ஆனால் எனக்கு சந்தேகம் இந்த திரியில்தானோ மாறி வேறு திரியில் எழுதிவிட்டேனோ என்ற குழப்பம்.......... :(<_<

  • கருத்துக்கள உறவுகள்

பலர்

இங்கு தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

காரணம் குழம்பிய குட்டையில் ஏதாவது...........??? :( :( :(

பொறுப்புடன் எழுதுங்கள்.

அடுத்த சந்ததி

எம்மிடமிருந்தே வரலாற்றை எடுக்கும் நிலை.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் மிகப்பெரும் வரலாற்றுத் தவறு செய்துவிட்டாராம் சிங்கள நரி எரிக் சொல்கைம் பிபிசியில் ஊளை

erik-solheim-sinhala+white+fox.jpg

புலம்பெயர் மக்களின் போராட்டத்தை சிதைக்க சிங்கள நரி எரிக் சொல்கைம் களமிறக்கப்பட்டுள்ளார்

**********

உயிர் போனாலும்

இனத்தின் உரிமைக்கு விலை பேசமாட்டோம்

என்பது வரலாற்றுத் தவாறா ????

பாதி உண்மை பேசும் உளவியல் போர் தீவிரமடைகின்றது இது காரணமில்லாமல் நடவாது

மீண்டும் மீண்டும் கேளுங்கள் -கீழே பட்டியலிடப்பட்ட சொல்லாதவை பற்றி சிந்தியுங்கள் .

அரசியல் தீர்வு பற்றி எதுவும் முன்வைக்காமல் சரணடைவைக் கோரி இருந்தார்கள் .

இந்த விடயத்தில் இவர்களுடன் இயங்கிய "தமிழ் நபர்கள் " விபரம் .

இந்த சரணடைதலின் ஒரு அங்கமாகத்தான் கே.பி இப்பொழுது கொழும்பு சென்றாரா ?

இப்பொழுது சரணடைந்தவர்களுக்கு என்ன நடக்கின்றது ?

அந்த குழுவைச் சார்ந்த இன்னும் எத்தனைபேர் தொடர்ந்தும் இயங்குகின்றார்கள் .

அவர்கள் இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பை சரணடைய வைக்க முயற்சிகள் நடைபெறுகின்றதா ???

அரசியல் தீர்வு திட்டம் எதுவும் வைக்காது ,

அரசியல் தீர்வு நடைமுறை பற்றி பேசாது ,

இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து எமது மக்களையும் ,

பிரதேசத்தையும் காப்பாற்றுவது பற்றி எதுவும் இன்றி ,

சரணடைய மறுத்தது வரலாற்று தவறாகுமா ???

எந்த தீர்வு இன்றி

சரணடைந்தார்கள் என்ற

வரலாற்றுத் தவறை இழைக்க

வைக்க இவர்கள் தூண்டினார்கள்

என்பது தான் உண்மை

இந்த விடயத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட

"தமிழர்கள் " மட்டும் தான்

மௌனமாய் இருந்து

உண்மையை சாகடிக்கின்றார்கள்

தமது உயிர் போனாலும்

இனத்தின் உரிமைக்கு விலை பேசமாட்டோம்

வரலாற்றுத் தவாறா ????

சரணடைய மறுத்த நோர்வேஜியர்கள் வரலாற்றை சொல்க்கிமுக்கு யாராவது சொல்லுங்கள்

713px-Ole_Friele_Backer_norske_flygere.jpg

also proclaimed its neutrality during World War II, but Norway was invaded by German forces on 9 April 1940. Norway was unprepared for the German surprise attack (see: Battle of Drøbak Sound, Norwegian Campaign, and Invasion of Norway), but military and naval resistance lasted for two months. The armed forces in the north launched an offensive against the German forces in the Battles of Narvik, until they were forced to surrender on June 10 after losing British help diverted to France during the German Invasion of France.

Norwegian air force men in the United Kingdom during World War II.

King Haakon and the Norwegian government escaped toRotherhithe, London, England, and they supported the fight through inspirational radio speeches from London and by supporting clandestine military actions in Norway against the Nazis. On the day of the invasion, the collaborative leader of the small National-Socialist partyNasjonal Samling, Vidkun Quisling, tried to seize power but was forced by the German occupiers to step aside. Real power was wielded by the leader of the German occupation authority,Reichskommissar Josef Terboven. Quisling, as minister president, later formed a collaborationist government under German control. Up to 15,000 Norwegians volunteered to fight in German units, including the Waffen-SS.[44]

There were also many Norwegians, and those of Norwegian descent, who joined the Allied forces as well as the Free Norwegian Forces. From the small group that had left Norway in June 1940 consisting of 13 ships, five aircraft and 500 men from the Royal Norwegian Navy who followed the King to the United Kingdom the force had grown by the end of the war to 58 ships and 7,500 men in service in the Norwegian Navy; 5 squadrons of aircraft (including Spitfires, Sunderland flying boats and Mosquitos) in the newly formed Norwegian Air Force; and land forces including the Norwegian Independent Company 1 and 5 Troop as well as No. 10 Commandos.

During the five years of Nazi occupation, Norwegians built a resistance movement which fought the German occupation forces with both civil disobedience and armed resistance including the destruction of Norsk Hydro's heavy water plant and stockpile of heavy water at Vemork, which crippled the German nuclear program (see: Norwegian heavy water sabotage). More important to the Allied war effort, however, was the role of the Norwegian Merchant Marine. At the time of the invasion, Norway had the fourth largest merchant marine fleet in the world. It was led by the Norwegian shipping company Nortraship under the Allies throughout the war and took part in every war operation from the evacuation of Dunkirk to the Normandy landings. Each December Norway gives a Christmas tree to the United Kingdom as thanks for the British assistance during World War II. A ceremony takes place to erect the tree in London's famous Trafalgar Square.[45]

ஆதாரம் http://en.wikipedia.org/wiki/Norway#World_War_I_and_II

tamilwhiteelephant.blogspot

முழுமையான பி.பி.சி செய்தி இங்கு அழுத்திப் பார்க்கலாம் .

அதன் பிரதி இணைக்கப்பட்டுள்ளது

*************

ஒலி வடிவில் எரிக் சொல்ஹேய்ம் செவ்வி

மாற்று மீடியா வடிவில் இயக்க

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கெனவே செய்திகள் கசிந்திருந்தன.

அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கையில் அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம், அந்த திட்டம் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.

கடந்த வாரம் லண்டனில் பிபிசி அலுவலகம் வந்திருந்த எரிக் சொல்ஹேய்ம் அவர்களிடம் இந்த திட்டம் உருவான பின்னணி குறித்தும் அது ஏன் செயற்படாமல் கைவிடப்பட்டது என்றும் பிபிசி தமிழோசை மற்றும் சிங்கள சேவைகள் சார்பில் செவ்வி காணப்பட்டது.

அந்த செவ்வியின் முக்கிய பகுதிகளை இங்கு எழுத்துவடிவில் காணலாம்.

எரிக் சொல்ஹேய்ம் பதில்:

இலங்கையின் சமாதானத்துக்காக முன்முயற்சி எடுத்த கொடை நாடுகளான ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் இணைந்து 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு யோசனையை முன்வைத்தன. ஐநா மன்றமும் இதன் பின்னணியில் இருந்தது. அன்றைய நிலைமையில் போரின் முடிவு இலங்கை அரசுக்கு ராணுவ ரீதியிலான வெற்றியாக அமையும் என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில், போரின் முடிவில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படும் பேரழிவை தடுக்கும் வகையில் போரை முறையாக முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்கிற யோசனையை நாங்கள் முன்வைத்தோம்.

அந்த திட்டத்தின் முழுமையான இறுதி வடிவமும் விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் ஒப்புக்கொண்டபிறகு தான் முடிவுசெய்யப்பட்டிருக்கும். ஆனால் அதற்கு அடிப்படையாக நாங்கள் தெரிவித்த நடைமுறை யோசனை என்னவென்றால், சர்வதேச அமைப்பு, உதாரணமாக அமெரிக்கா, இந்தியா அல்லது வேறு ஒரு நாடு இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிக்கு ஒரு பெரிய கப்பலை அனுப்பிவைப்பது என்றும், அதில் ஐநா மன்ற அதிகாரிகளோ அல்லது மற்ற சர்வதேச அமைப்பை சேர்ந்தவர்களோ இருந்து, போரின் இறுதியில் எஞ்சியிருந்த அனைத்து விடுதலைப்புலிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் ஒருவர் விடாமல் கணக்கெடுத்து புகைப்படத்துடன் பதிவு செய்வது என்றும் தெரிவித்திருந்தோம். அவர்கள் அனைவரும் கொழும்பு கொண்டு செல்லப்பட்டு அவர்களிடமிருந்த ஆயுதங்களை ஒப்படைத்த பிறகு, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகிய இருவர் தவிர்த்த மற்ற அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்படி நடந்திருந்தால், சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் சர்வதேச அமைப்புக்களால் பதிவு செய்யப்பட்டவர்களை இலங்கை அரசால் நினைத்த மாத்திரத்தில் கொல்லமுடிந்திருக்காது. எங்களின் இந்த யோசனை மட்டும் ஏற்கப்பட்டிருந்தால், இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பேர் இன்று நம்மிடையே உயிருடன் இருந்திருப்பார்கள். ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தின் இறுதிவடிவத்தை முடிவு செய்வதற்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச பேச்சாளர் குமரன் பத்மநாதன் ஒஸ்லோவுக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நிமிடத்தில் பிரபாகரன் அவரை தடுத்துவிட்டார். எங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பத்திரமாக அழைத்து வருவதற்காக கோலாலம்பூருக்கே சென்றிருந்தனர். ஆனால் இந்தத் திட்டம் தங்களுக்கு ஏற்படையதல்ல என்று எங்களுக்கு செய்தி சொல்லப்பட்டது. எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை.

தமிழோசை கேள்வி:இந்த திட்டத்திற்கு இலங்கை அரசின் ஒப்புதல் இருந்ததா?

சொல்ஹேய்ம் பதில்:

அந்த நாட்களில் நான் இலங்கைக்கு செல்லவில்லை. ஆனால் ஒஸ்லோவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் மூலமாகவும், மற்ற தூதரகங்கள் மூலமாகவும் இலங்கை அரச தரப்புடன் எங்களுக்கு இருந்த தொடர்புகள் மூலமாகவும் இலங்கை அரசுடன் நாங்கள் நிறைய பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். அவர்களுடன் பேசியதிலிருந்து முழுமையான ராணுவ ரீதியிலான வெற்றியை பெறுவதே இலங்கை அரசின் பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள் என்கிற உணர்வையே நாங்கள் பெற்றோம். அதேசமயம், விடுதலைப்புலிகள் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருந்தால் இலங்கை அரசுக்கு அதற்கு சம்மதிப்பதைத் தவிர வேறு வழி இருந்திருக்காது என்றே எங்களுக்கு தோன்றியது.

தமிழோசை கேள்வி:இந்த திட்டத்திற்கு இலங்கை அரசு ஒப்புக்கொண்டிருக்கும் என்று எதை வைத்து நீங்கள் நம்புகிறீர்கள்?

சொல்ஹேய்ம் பதில்:

அவர்களுக்கு இதில் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் இதை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையே இருந்தது. காரணம் இந்தியாவும் அமெரிக்காவும் மற்றவர்களும் இதில் உறுதி காட்டியிருப்பார்கள், ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தினரும் இதில் ஒன்றாகவும் உறுதியாகவும் குரல் கொடுத்திருப்பார்கள். இலங்கை அரசில் தயக்கம் இருந்திருந்தாலும் அவர்களுக்கு வேறு வழி இருந்திருக்காது.

தமிழோசை கேள்வி:அப்படியானால், இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதன்மையான பொறுப்பு விடுதலைப் புலிகளின் தலைமையை சாரும் என்கிறீர்களா?

சொல்ஹேய்ம் பதில்:

போரின் இறுதி முடிவு என்னவாக இருக்கப்போகிறது என்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராடவேண்டும் என்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு என்றே நான் நினைக்கிறேன். அதேசமயம், இதை காரணமாகக் காட்டி இலங்கை அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்தமுடியாது. மக்கள் செறிவாக வாழும் பகுதிகள் என்று தெரிந்தே, இலங்கை அரசு தாக்குதல்களை நடத்தியது என்பதற்கான பல சான்றுகள், அறிக்கைகள் வெளிவந்துள்ளன. அதிலும் குறிப்பாக துப்பாக்கிச் சூடுகள் நடத்தமுடியா 'பாதுகாப்பு வலயம்' என்று அரசே ஒரு பகுதியை அறிவிப்பதும் அந்த பகுதிக்கு மக்கள் வந்த பிறகு அங்கே குறிவைத்து தாக்குதல் நடத்துவதுமாக அரசு செயற்பட்டிருக்கிறது என்பதற்கான வலுவான சான்றுகள் கிடைத்திருக்கின்றன.

தமிழோசை கேள்வி:இந்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா?

சொல்ஹேய்ம் பதில்:

விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக இந்திய அரசில் கொஞ்சம் கூட அனுதாபம் இல்லை. ராஜீவ் காந்தி கொலை உட்பட பல்வேறு காரணங்கள் இதற்கு பின்னணியில் இருக்கின்றன. ஆனால் அதேசமயம், இறுதிகட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படக்கூடாது என்பது குறித்து அங்கே கரிசனை காணப்பட்டது.

தமிழோசை கேள்வி:நீங்கள் இறுதியாக முன்வைத்த திட்டத்திற்கு இந்திய அரசின் ஒப்புதல் இருந்ததா இல்லையா?

சொல்ஹேய்ம் பதில்:

இலங்கை பிரச்சினையில் நான் ஈடுபட்டிருந்த 10 ஆண்டுகாலங்களில் இந்தியாவுக்கு தெரிவிக்காமல் நான் எந்த திட்டத்தையும் முன்னெடுத்ததில்லை. இந்த திட்டத்தை இந்தியா ஏற்றிருக்கும் என்பதிலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசும் இருந்திருக்கும் என்பதிலும் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

தமிழோசை கேள்வி:இப்படி ஒரு திட்டம் இருந்ததாக நீங்கள் இப்போது கூறும் கருத்துக்கள் உண்மையா என்பதற்கு என்ன ஆதாரம்?

சொல்ஹேய்ம் பதில்:

2009 ஆம் ஆண்டில் நடந்த இந்த விடயங்கள், கொழும்பில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் தகவல் பரிமாற்றங்கள் மற்றும் அது தொடர்பான மற்ற ராஜீய தகவல் பரிமாற்றங்கள் அனைத்தும் விகிலீக்ஸில் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் இருக்கும் தகவல்களை நுணுகிப் பார்த்தால் இந்தக் கூற்றுக்கான ஆதாரங்கள் அதில் இருக்கின்றன.

http://suthumaathukal.blogspot.ca/2012/10/blog-post.html

பிரபாகரனைப் பற்றி சொல்கைம் என்ன.. றோட்டில போற ஒரு லூசு திட்டினாக் கூட மனம் மகிழ எங்களில கொஞ்சக் கூட்டம் இருக்குது. அந்தக் கூட்டத்தவர்களுக்கு எது நீதி நியாயம் நேர்மை.. ஏன் எதுக்கு மகிழறம்.. துக்கப்படுறம்...என்ற மனிதக் குணங்கள் அறவே வருவதில்லை..!.. எவனாவது பிரபாகரனை... புலிகளை திட்டிட்டா காணும். அதுவே அவர்களுக்கு கோடி சந்தோசம்.

அப்படியானவர்களிடம் போய்.. ஜியோபாலிரிக்ஸ்.. செனாரியோ அனலைசிஸ்.. ஸ்ராரிஜி.. டிப்பிளேமட்ஸ் பற்றி பேசுறது எல்லாம்.. அர்த்தமற்ற சொற்பதங்களாகவே இருக்கும்..! :lol::icon_idea:

இந்த திரிக்கு இந்த வசனங்களே பொருத்தமானது ............நன்றி நெடுக்ஸ்

பொயட்டும் நிர்மலனும் எழுதும் கருத்துக்கு பதில் எழுதினால் அத மட்டுறுத்தப்படுவதாக எழுதினால், , இல்லை பொயட்டும் நிர்மலனும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று எழுதுவது, நான் மாட்டைப் பற்றிக் கதைத்தால் நீங்கள் ஆட்டைப் பற்றிக் கதைப்பதை எழுதினேன்.

பிரானிசிஸ் எழுதிய புத்தகத்தின் பின் புல அரசியல் உங்களுக்கு இன்னும் விளங்கவில்லையா இல்லை நடிக்கிறீர்களா எனத் தெரியவில்லை.

மேற்குலகில் ஊடகங்கள் யாரால் எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை கூர்மகியாக அவதானித்தால் இலகுவில் புரிந்து கொள்ளலாம்.இன்று சிரியாவுக்கு எதிராக ஏன் மேற்குலக ஊடகங்கள் இவ்வளவு கவனம் செலுத்துகின்றன? உலகில் சிரியாவை விட எவ்வளவு மோசமான ஆட்ச்சியாளர்கள் இருக்கிறார்கள்? மேற்குலக அரசுகள் தமது புவிசார் நலனை அடிப்படையாக வைத்து ஒரு நாட்டையோ ஆட்ச்சியாளரையோ குறிவைக்கும் முன்னர் அந்த நாடு பற்றிய செய்திகளை தமக்குச் சாதகமான முறையில் புத்தகங்கள்,பேட்டிகள், செய்திகள் எனக் கசிய விடுவார்கள்.இதனை அவர்கள் தமது உளவு அமைப்புக்களில் வேலை செய்பவர்களைக் கொண்டு நிறைவேற்றுவார்கள். தமக்கு அவசியமான மக்கள் கருத்தாக்கத்தை ஏற்படுத்தி விட்டு தமது நலன் சார் செயற்பாட்டை அரங்கேற்றுவார்கள்.

பிரன்சிச்ஸ் கரிசனின் புத்தகமும் இவ்வாறான புத்தகமே.அந்தப் புத்தக வெளியீட்டின் பின்னால் இருக்கும் மேற்குலகின் அரசியல் பற்றிய விழிப்புணர்வை தமிழ் நெட்டின் பேட்டி வெளிக்காட்டி இருக்கிறது.

புலிகள் சரணடைவது என்பது, ஒரு ஒப்பந்தத்தின் மூலம் புலிகள் தங்கள் அரசியற் கோரிக்கையைக் கைவிடுவதைத் தான் குறிக்கும்.அதனையே மேற்குலகும் இந்தியாவும் கடைசித் தருணம் வரை வேண்டி நின்றனர். ஒரு போராட்டத்தை முற்றாக அழிக்கும் முயற்சியே இது.உலகின் பல பாகங்களில் இது நடந்தது.முறையாக போரை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது இதைத் தான்.அதனைப் புலிகள் அவர்களுக்கு வழங்கவில்லை.

உங்களைப் போன்றோருக்கு விளங்காத விடயம், நாங்கள் இவர்கள் செய்த செயல்களை தொடர்ந்தும் அம்பலப்படுத்திக் கொண்டு இருந்தும் இவர்கள் ஏன் எம் பின்னால் வருகிறார்கள் என்பதே. சிறிலங்கா அரசின் சீனச் சார்பை உடைக்க இவர்களுக்கு நாம் இப்போது தேவைப் படுகிறோம். புலிகளை அழித்ததன் மூலம் இந்திய அரசு ஒரு பிழையான வெளியுறவுக் கொள்கையைப் பின் பற்றி இப்போது விழித்துக் கொண்டு இருக்கிறது.இந்திய அரசின் வழி காட்டலில் சென்ற அமெரிக்க அரசும் அதன் கையாள் நோர்வேயும் இன்று போர்க் குற்றம் என்னும் வெருட்டலைக் கையில் எடுத்துள்ளது. இதனை நாம் எமக்கான விடுதலைக்குப் ப்யன் படுத்த வேண்டும் எனில் நாம் இதனை சர்வதேச அமைப்புக்களுக்குள் நுழைக்க வேண்டும். மேற்குலகில் எமக்குக் கிடைக்கும் தளங்களைப் பயன் படுத்தி இந்த எல் எல் ஆர்சி என்னும் பேக் காட்டலுக்கு அப்பால் நகர்த்த வேண்டும்.

தற்போதைய அமெரிக்கக் கொள்கையின் படி போர்க் குற்றம் என்பது சிறிலங்கா அரசை வெருட்டிப் பணிய வைப்பதற்கான ஆயுதமே தவிர தமிழர்களுக்கான நீதியையோ விடுதலையையோ தரும் ஒரு விடயம் அல்ல. எம்மைப் பொறுத்தவரை நாம் இதனை போர்க்குற்றம் என்பதற்க்கு அப்பால் இனப் படுகொலை என்னும் தளத்துக்கு நகர்த்த வேண்டும்.இதனைத் தான் தமிழ் நெட் செய்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி எழுது முன் யோசித்து எழுதவேண்டும் அண்ணனை பற்றி எழுத உமக்கு தகுதி காணாது

எந்த சாத்திரியை கேட்டு நவரத்தின கல்லு பதிச்சனீங்கள் :lol:

துப்பாக்கியை மட்டும் தூக்கத்தெரிந்தவர்தான் முப்பது வருடங்களிற்கு மேலாக மக்களின் பெரும் ஆதரவு பெற்ற தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தை வழிநடத்தினார்.

ம்...தமிழே விளங்கேல்லை இதுக்குள்ளை ஈழம் விடுதலை தமிழ்.

எதுகை, மோனை அலங்காரம் கருப்பொருளை விற்றா?

எங்கை மேனை (மகனே)இதுக்கை எதுகை மோனை?

கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்?

உதாரணத்திற்கும் வடமொழியா?? கதிரவனை நான் கண்ணெடுத்து வணங்குவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கதிரவன் மாஸ்டர சொல்லுரிங்க

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த சாத்திரியை கேட்டு நவரத்தின கல்லு பதிச்சனீங்கள் :lol:

ம்...தமிழே விளங்கேல்லை இதுக்குள்ளை ஈழம் விடுதலை தமிழ்.

எங்கை மேனை (மகனே)இதுக்கை எதுகை மோனை?

உதாரணத்திற்கும் வடமொழியா?? கதிரவனை நான் கண்ணெடுத்து வணங்குவதில்லை

எழுத்து சாத்திரமே! இங்கு நாம் எம் மொழி அறிவோ, இல்லை கல்வி அறிவோ காட்ட நாம் இங்கு வரவில்லை. எனவே அந்த இடத்தில் உங்கள் முயற்சியை செலவு செய்யாதீர்கள் அது வீண்.

உங்கள் மொழி அறிவிற்கு கவிபாட ஆசை, ஆனால் உங்கள் மொழியாழுமையின் கரத்திற்குள் சொற்களைத் தேடும் போது அந்த முட்டுப்பட்ட அறிவின் பிராணவேதனையில் பொருள் துலைந்து விடுகின்றது. பொருளைத் துலைத்த கவி, சாத்திரியார் பெயரைச் சொல்லி விற்க முடியாது அதை மறந்துவிடாதீர்கள்!

"பிரபாகரனை மதிக்கின்றேன்" என்று உங்களைப்போல் கெட்டித்தனமாக சொல்ல சிங்களத்திற்கும், ஒட்டுப் படைக்கும் தெரியாமல் போய்விட்டதே!

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையால் உண்டான அழிவு தவிர வேறு பாரிய அழிவு வரலாற்றில் இடம் பெறும் போது, அதற்கு வரலாற்று தவறு காரணமாகிறது. இந்த தவறும் அழிவும் இடம்பெறும் நாட்டின் தலைவர் அவற்றிற்கு பொறுப்பானவராகிறார்.

மற்றவர்கள் இந்த தவறுக்கு பங்களித்திருந்தாலும் அவர்கள் பங்காளிகளே தவிர பொறுப்பாளிகளல்ல.

Edited by Jude

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.