Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் விருதுகள் விழா 2012 - நேரடி ஒளிபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nandri.jpg

ஒரு இணையத்தளத்தில்... பல்வேறு நாடுகளில் இருந்து வரும் கருத்தாளர்களையும், வாசகர்களையும்... ஒரே நேரத்தில் பங்கு பெற்ற வைப்பது... நேர வித்தியாச காரணத்தால்... ஒன்றிணைப்பது கடினமானது. அப்படியிருக்க... ஐரோப்பிய நேரம் 13:00 மணியை, தேர்வு செய்தது அமெரிக்க,கனடா, அவுஸ்திரேலிய உறவுகளுக்கு ஓரளவு வசதியான நேரமாக இருக்கும்... என்று நினைத்தோம்.நேரம் 13:00, 14:00 ஆக அறிவிப்பாளர்களைக் காணவில்லை என்னும் போது ரென்சன் கூடிவிட்டது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரமான... 13:00 மணிக்கு களத்தில் 22 கருத்தாளர்களும், 9 அநாமதேய கருத்தாளர்களும் நிகழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்து... மெல்ல, மெல்ல... அவர்களும் செல்லத் தொடங்கிவிட... களத்தில் நின்ற‌ புங்கையூரானை நிகழ்ச்சியை... தொடங்க தனிமடலிட அவரும்... படுக்கப்போய்விட்டார். பின் நெருப்பு நீலமேகத்தை ஆரம்பிக்கச் சொல்லி... சுண்டலும், நானும்.. தனிமடலிட, அவரும் ஆரம்பிக்க... தமிழ் முறைப்படி, நேரம் பிந்தி நிகழ்ச்சி ஆரம்பிக்க... இசையும் நித்திரையால் எழும்பி விட்டார்.

இந்த நிகழ்ச்சி மூலம் புதிய வரவுகளான... நெருப்பு, யாழன்பு, றமணன் போன்றோரின் திறமையை... யாழ்களமே பார்த்து அதிசயித்தது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும்... இதற்கு நகைச்சுவைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட... பழைய உறவுகளுகளான... சுண்டல், குட்டி, விசுகு, சாதிரியார், தப்பிலி, கோமகன், நந்தன் 26, போக்குவரத்து ஆகியோருக்கு மிக்க நன்றி. யாராவது பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.

இந்த நிகழ்வில் எல்லோரும்... ஒற்றுமையாக நின்று, விழாவை சிறப்பித்த யாழ்கள உறவுகளை நினைத்து பெருமைப் படுகின்றேன்.

பரிசளிப்புக்கு தலைப்புக்களை தேர்ந்தெடுத்த சுபேஸூக்கும், அதற்கு பரிசு கொடுக்க முன் வந்த அகூதாவுக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

இப்படி ஒரு விழாவை நடத்த வேண்டும் என்று... அல்லும், பகலும் பாடுபட்ட சுண்டல் அவர்களுக்கு விசேட நன்றி.

இந்த விழாவை நடத்த மனப்பூர்வமான... ஆசிர்வாதம் வழங்கிய யாழ்கள நிர்வாகத்திற்கு நன்றிகள் பல. :)

Edited by தமிழ் சிறி

  • Replies 269
  • Views 15.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதில் பங்கு பற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்

பரிசுபெற்ற கரும்பு, ரதி, தமிழ்சூரியன் ஆகியோருக்கும் நிகழ்ச்சியை நடத்திய சுபேஸ், சுண்டல், நீலமேகம், தமிழ்சிறி, இசைக்கலைஞன், யாழன்பு, ... மற்றும் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இதில் பங்கு பற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

தனிமடலில் எங்களை எல்லாம் ஒருக்கிணைத்து ஒரு வழிகாட்டியா இருந்த தமிழ் சிறி அண்ணாக்கு எனது விசேடமான நன்றிகள்

Sundal: what next

Thamil Sri anna: rest

:D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள விருதுகள் விழாவின் விருதுகள்......

சிறந்த நகைச்சுவை எழுத்து......புதிய முகம் மற்றும் நிகழ்வின் கதாநாயகனுக்கான விருதை தட்டிச்செல்கின்றார் ......

நெருப்பு நெருப்பு நீல மேகம்.......

சிறந்த நகைச்சுவை நாடகம் எழுத்து மற்றும் காட்சி அமைப்பிற்கான விருது.........

யாழ் அன்பு......

:D

அறிவிப்பாளருக்கான விருது

இசை செல்வன்

சிறப்பு யாழ் கள விருது

ரமணன் :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் விட....ஒரு நிழலையும் நிஜமாக்க முடியும்....யாரையும் வசப்படுத்த முடியும்....என நிரூபித்து காட்டிய அருமைஉறவு சுண்டலுக்கு! கோடிவாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.உங்கள் மனம் போல் வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். :)

அத்துடன் எங்கள் நெடுக்கரை இங்கு காணாதது மனம் வருடுகின்றது. :(

எங்க "சி(t)ற்"றுரை வழமை போல்.. சர்ச்சையில் முடிந்ததாலும்.. "கிளிப்" எறிகளில் எனக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாலும்.. விழா ஒழுங்கமைப்பாளர்களால் எனது "அதி உச்ச" (பயப்பிடாதீங்க.. தலை தப்பனுன்னு சொல்ல வந்தன்) பாதுகாப்புக் கருதி.... என்னை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி விட்டதாலும்.. வீட்டிற்குப் போன நான்.. இரண்டு போத்தல் தண்ணியை (பச்சத்தண்ணியை சொல்ல வந்தன்..) மண்டிவிட்டு நிம்மதியாகத் தூங்கிவிட்டதாலும்.. தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கு பெற்ற முடியல்ல..! இருந்தாலும் நம்ம சித்து விளையாட்டுகளையும் தாங்கிக் கொண்டு உறவாடும் உள்ளங்களுக்கு மிக்க நன்றி..!

மேலும் நிகழ்வில் பரிசில் பெற்ற மதிப்புக்குரிய தமிழ்சூரியன் அண்ணா.. அன்புக்குரிய அக்கா ரதி.. நட்புக்குரிய நண்பன் கலைஞன் ஆகியோருக்கு உளமார்ந்த வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன்..! மேடையில் தெரிவிக்க முடியாத சூழலுக்கு வருந்துகிறேன்..!

அத்துடன் பரிசளிப்புக் குழு பிரதம கர்த்தா.. நம்ம அன்புக்குரிய அகூதா அண்ணாக்கும்.. தோழர் சுபேஸிற்கும்.. மற்றும் இந்த நிகழ்ச்சி என்றாலும் எந்த நிகழ்ச்சி என்றாலும் எல்லோரையும் அரவணைச்சு அதை உருப்படியா நடத்தி வைக்கிற நம்ம தோஸ்து சுண்டல் அவர்களுக்கும்... மற்றும் ஒரு குடும்பத்தலைவன் போல இருந்தாலும் நட்போடு.. அன்போடு எங்களை எல்லாம் வழிநடத்தும்... தமிழ்சிறி அண்ணாக்கும்.. எனது "சி(t)ற்"றுரையை.. அப்படியே ஒளிப்புமறைப்பு இன்றி இங்கு தந்த நம்ம "விரோதி" நீலமேகத்திற்கும்.. (எனக்கு பஞ்சு போன்ற முகில் கூட்டமுள்ள வெண் மேகம் தான் பிடிக்கும்.. அதுதான் விரோதி எண்டனான்..!) இன்னும் இன்னும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த என் அன்புறவுகள் யாழ் கள உறவுகள் அனைவருக்கும் பாராட்டுதலும் நன்றியும் கூறிக் கொண்டு.. கொண்டை "கிளிப்" எறிகளால் என்னை யாரும் அசைக்க முடியாது அவற்றை எல்லாம் நான் எனக்கான பெண்களின் அன்பின் கெளரவிப்பாகவே நோக்குகிறேன்.. என்று உறுதிபடச் சொல்லி விடை பெறுகிறேன் நன்றி வணக்கம். :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

:D

கொண்ட கொள்கை தளராத பெண்களின் ஷெல் அடி வந்தால் என்னால் இல்லை கிளிப் ஏறி வந்தால் என்ன இவை எல்லாவற்றையும் நான் தூங்கும் பஞ்சு மெத்தையாக்கி பாவிப்பேன் என்று கூறிய அந்த கொள்கை தவறாத ஆண்களின் சிங்கம் அசைக்க முடியாத வைரம் நெடுக்ஸ் அண்ணா வாழ்க

கற்பனையென்றாலும் மிகவும் ரசித்துச் சிரித்த அருமையானதோர் நிகழ்வு. அடிக்கடி வெளியில் போய் வர வேண்டியிருந்ததால் தொடர்ச்சியாகப் பார்க்க முடியவில்லை. இன் நிகழ்வுக்கு காரணமான அனைவர்களுக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகம் கடிபட்டாலும் பகிடியை பகிடியாக எடுத்துக் கொண்ட நெடுக்கருக்கு நன்றி.

அல்லலுறும் எம் தாயக உறவுகளிக்கு எமக்கு கிடைத்த பரிசு பயன்படவேண்டும் என்பதே எனது பூரண விருப்பம்

எமது கள நேசக்கர உறவுகள் மூலம் செல்லவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு .........இதற்குரிய சந்தர்ப்பங்களை

போட்டி நிர்வாகம் அமைக்க முடியுமா ............நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

Nandri.jpg

ஒரு இணையத்தளத்தில்... பல்வேறு நாடுகளில் இருந்து வரும் கருத்தாளர்களையும், வாசகர்களையும்... ஒரே நேரத்தில் பங்கு பெற்ற வைப்பது... நேர வித்தியாச காரணத்தால்... ஒன்றிணைப்பது கடினமானது. அப்படியிருக்க... ஐரோப்பிய நேரம் 13:00 மணியை, தேர்வு செய்தது அமெரிக்க,கனடா, அவுஸ்திரேலிய உறவுகளுக்கு ஓரளவு வசதியான நேரமாக இருக்கும்... என்று நினைத்தோம்.நேரம் 13:00, 14:00 ஆக அறிவிப்பாளர்களைக் காணவில்லை என்னும் போது ரென்சன் கூடிவிட்டது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரமான... 13:00 மணிக்கு களத்தில் 22 கருத்தாளர்களும், 9 அநாமதேய கருத்தாளர்களும் நிகழ்ச்சியை எதிர்பார்த்துக் கொண்டிருந்து... மெல்ல, மெல்ல... அவர்களும் செல்லத் தொடங்கிவிட... களத்தில் நின்ற‌ புங்கையூரானை நிகழ்ச்சியை... தொடங்க தனிமடலிட அவரும்... படுக்கப்போய்விட்டார். பின் நெருப்பு நீலமேகத்தை ஆரம்பிக்கச் சொல்லி... சுண்டலும், நானும்.. தனிமடலிட, அவரும் ஆரம்பிக்க... தமிழ் முறைப்படி, நேரம் பிந்தி நிகழ்ச்சி ஆரம்பிக்க... இசையும் நித்திரையால் எழும்பி விட்டார்.

இந்த நிகழ்ச்சி மூலம் புதிய வரவுகளான... நெருப்பு, யாழன்பு, றமணன் போன்றோரின் திறமையை... யாழ்களமே பார்த்து அதிசயித்தது மகிழ்ச்சியாக உள்ளது. மேலும்... இதற்கு நகைச்சுவைக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட... பழைய உறவுகளுகளான... சுண்டல், குட்டி, விசுகு, சாதிரியார், தப்பிலி, கோமகன், நந்தன் 26, போக்குவரத்து ஆகியோருக்கு மிக்க நன்றி. யாராவது பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.

இந்த நிகழ்வில் எல்லோரும்... ஒற்றுமையாக நின்று, விழாவை சிறப்பித்த யாழ்கள உறவுகளை நினைத்து பெருமைப் படுகின்றேன்.

பரிசளிப்புக்கு தலைப்புக்களை தேர்ந்தெடுத்த சுபேஸூக்கும், அதற்கு பரிசு கொடுக்க முன் வந்த அகூதாவுக்கும் நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

இப்படி ஒரு விழாவை நடத்த வேண்டும் என்று... அல்லும், பகலும் பாடுபட்ட சுண்டல் அவர்களுக்கு விசேட நன்றி.

இந்த விழாவை நடத்த மனப்பூர்வமான... ஆசிர்வாதம் வழங்கிய யாழ்கள நிர்வாகத்திற்கு நன்றிகள் பல. :)

அருமையான நன்றியுரை சிறி

ஒருத்தரையும் விடாமல்

எல்லோரையும் திருப்திப்படுத்தி

நன்றியுரை அளித்த சிறிக்கும்

எல்லாமாக இருந்து நடாத்திமுடித்த சுண்டலுக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

[size=3]இனிய வருடாந்த யாழ்கள விழாவை கொண்டு நடத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள் . சுண்டல் நெருப்பு நீல மேகம் ஆகியோரின் திறமையான நகைச்சுவை ..மிகவும் பராட்டபடதக்கது மற்றும் நிகழ்வுகள் தொய்வின்றி ..கொண்டு சென்ற தமிழ் ஸ்ரீ ..யாழ் அன்பு சிறப்புபாடகன் தமிழ்சூரியன், நந்து. அலை ...சுபேஸ் போக்கு வரத்து ...ஆகியோருக்கு நன்றி . யாராவது விடுபட்டிருந்தால் மன்னிக்கவும். கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. எல்லோரும் நேரம் ஒதுக்கி, ஒரு விழாவை கொண்டு நடத்துவது (கற்பனை என்றாலும்)லேசான காரியம் அல்ல . படங்களும் உடனுக்குடன் தேடி எடுத்து போட்டமை ஒரு பிளஸ் பாயிண்ட். எனக்கு தொடர்ந்து உட்காந்து வாசிக்க முடியவில்லை. வெளி அலுவல்கள் அதிலும் ஞாயிறு சற்று கடினம். இருந்தாலும் நம்ம சிஸ்டர் துளசியை சற்று அதிகமாக கலாய்த்து விட்டீர்கள் போல எனக்கு தோன்றியது ....எல்லோரையும் உள்வாங்கி யுள்ளீர்கள். தூர தேசத்திலிருந்து சிரமம் பாராது கனடாவுக்கு (கற்பனையில் )வருகை தந்த அனைவருக்கும் நன்றி . என்ன சற்று குளிரான காலம் ஆரம்பமாகி விட்டது . இடியப்பத்தை விட வேறு உணவுகளும் இங்கு தாராளமாக் கிடக்கும். அப்பம் கொத்து ரொட்டி போன்றவற்றுக்கு முக்கியம் கொடுக்கவேண்டும். நெருப்பு நீல மேகம் தினமும தென்படாவிடாலும் முக்கியமான் வேளைக ளில் வருவார் ...அவர் ஒரு கருக்கொண்ட கார் மேகம் பொழியவேண்டும் உன் வேகம் ..இதுவே யாழ்களத்தின் தாகம். சுண்டலுக்கும் ஒரு சபாஷ் . தமிழ் சிறீ க்கு என்பாராட்டுக்கள். எல்ல்வற்றியும் பொறுமையாக் கவனித்த யாழ் களத்து நிர்வாகம கத்திரி கொண்டுவெட்டாமல்.. என்றும் நண்பர்களால் (வம் பர்களால் ) ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்ற வாழ்த்துக்கள். [/size]

பரிசளிப்பு விழா சூப்பரோ சூப்பர் :)

இவ் விழாவை சிறப்பாக நடாத்தி முடித்த அனைவருக்கும் விசேடமாக அகோதா அண்ணா, நீலமேகம், சுண்டல், சுபேஸ், சிறி அண்ணா,இசை அண்ணா, யாழ் அன்பு அண்ணா மற்றும் அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளும் பாராட்டுக்களும்.

அருமையாக நகைச்சுவை விருந்து படைத்து எம்மை சிரித்து மகிழவைத்தமைக்கும் நன்றிகள்.

சிறந்த ஆக்கங்களை தந்து போட்டியில் வெற்றியீட்டிய தமிழ் சூரியன் அண்ணா மற்றும் அந்த பாடலுக்காக உழைத்தவர்களுக்கும், ரதிக்கும் மற்றும் கரும்பு அண்ணாவிற்கும் பாராட்டுக்கள்...!

யாழ்களம் என்பது வெறும் பொழுது போக்குகளம் அல்ல அதையும் தாண்டி அன்பால் இணைந்த உறவுகளின் இல்லம் என நிரூபித்த ஒவ்வொருவருக்கும் மிக்க நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வில் நடந்த காமடிய சொல்ல மறந்திட்டம்......

எங்கட தமிழ் அரசு அண்ணாவும் மினகெட்டு எல்லாருக்கும் சோறு சமைச்சார்...... பட் யாழ் கள பெண்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமா நாங்கள் சோறு சாபிடமாட்டம் எங்களுக்கு நூட்லஸ் தான் வேணும் எண்டு குசினிக்குள்ள ஒரே ஆர்ப்பாட்டம்..... அங்க வந்த தமிழ் சிறி அண்ணா ஏன் இப்பிடி அடம்பிடிக்கிரின்கள் எண்டு கேக்க........நெடுக்க்ஸ் அண்ணா இருக்கிற இடத்தில நாங்கள் சோறு சாப்பிட மாட்டம் எண்டு.... ஏற்கனவே அவர் சோறு எண்டு எங்கள எல்லாம் கிண்டல் பண்ணுறார் எண்டு...... சரி இதென்னடா வம்பா போச்சு எண்டிட்டு போக்கு வரத்தன்னா போய் 2 mins noodles வாங்கிட்டு வந்து குடுக்க.......

இவை எண்ண செஞ்சிசினம் எண்டா டக்கு டக்கு எண்டு சோர கீழ போட்டு noodlesa மேல பரவி கொண்டு போச்சினம்......

நெடுக்ஸ் அண்ணாவும் ஆகா எங்கட பொண்ணுங்கல்லாம் திருந்திட்டாங்கடோய் எண்டு jeevaa வ பாத்து சொல்ல இசை அண்ணா கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் எண்டு பாடிக்கொண்டு போனார்.....

இப்பவும் இசை அண்ணாண்ட பேருக்கு கீழ பாருங்க அத போட்டிருக்கிறார் :D

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

imagesjpg8.jpg

கு.சா வந்த இடத்திலை நயாகாராவையும் பாத்திட்டு போகலாமெண்டு காரை கொண்டு போய் அர்ஜுன் வீட்டிலை விட்டிட்டு போனவராம். வந்து பாத்தால் அவரின்ரை கார் Air bag யாரோ களவெடுத்திட்டாங்களாம். இவன் சாத்து தான் தண்ணியடிச்சிட்டு தலை மாட்டிலை வைச்சு படுக்கிறதுக்காக கழட்டிக்கொண்டு போயிருப்பான் எண்டு தேடித் திரியிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்
:D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த விழாவை முன்னுக்கு நிண்டு செய்து முடிச்சவைக்கு......சோறுகறியோடை ஒரு தண்ணிப்பார்ட்டி குடுப்பமெண்டு யோசிக்கிறன்......நாசமறுப்பு ....நேரமில்லாமல் கிடக்கு :( ....இரண்டுநாள் லீவு போடத்தான் இருக்கு :icon_idea:

யாழ் கருத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக அனுசரணை செய்வதற்கு முன்வந்த அகூதா அவர்களுக்கும், நெறிப்படுத்திய சுபேஸ் அவர்களுக்கும், இவர்களுக்கு உறுதுணையாக நின்றவர்களுக்கும் மீண்டும் ஒரு தடவை நன்றிகள்.

சுபேஸ் அவர்கள் விருதுக்கான அன்பளிப்பு தொகையை பெறுவதற்கான வழிவகையை கேட்டு எனக்கு தனிமடல் அனுப்பினார். இதை வைத்து என்ன செய்வது என்று முதலில் யோசித்தேன். அதேசமயம் முன்பு ஊர்ப்புதினத்தில் அண்மையில் ஈசன் அவர்களினால் எழுதப்பட்ட ஒரு கருத்தும் எனது கவனத்தைப்பெற்றது.

அமரர் ஈழநாதன் (ஈழவன்) நினைவாக ஒவ்வொரு வருடமும் தாயகத்தில் உள்ள இளையவர்கள் கலந்துகொள்ளும் பொறியியல்துறை சம்மந்தமான நினைவுப்போட்டி ஒன்றை வைக்கலாம் என்று நினைத்துள்ளேன். இதற்கு பயன்படுத்துவதற்கு அகூதாவின் அன்பளிப்பை முதலாவது பேணியாக ஏற்றுக்கொள்கின்றேன்.

இதுபற்றிய விபரங்களை பின்னர் அறியத்தருகின்றேன்.

நன்றி!

imagesjpg8.jpg

கு.சா வந்த இடத்திலை நயாகாராவையும் பாத்திட்டு போகலாமெண்டு காரை கொண்டு போய் அர்ஜுன் வீட்டிலை விட்டிட்டு போனவராம். வந்து பாத்தால் அவரின்ரை கார் Air bag யாரோ களவெடுத்திட்டாங்களாம். இவன் சாத்து தான் தண்ணியடிச்சிட்டு தலை மாட்டிலை வைச்சு படுக்கிறதுக்காக கழட்டிக்கொண்டு போயிருப்பான் எண்டு தேடித் திரியிறாராம்.

:lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.