Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் வாரத்தில் கழியாட்ட நிகழ்வுகள் தேவையா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

v-sydneynews%20%282%29.jpg

[size=3][size=4]அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எம் தமிழ் மக்களே. நாம் எம் தாயக விடுதலைப்போராட்டத்தில்இன்னுயிரை அர்ப்பணித்த எம் மாவீரர்களுக்கு மதிப்பளிக்கும் வாரம் மாவீரர் வாரம். இந்த வாரத்தில் எவ்வகையான கழியாட்ட நிகழ்வுகளையும்அனுமதிக்க முடியாது அது மக்கள் ஆகிய எம் கடமை. இந்த வாரத்தில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்துபவர்களுக்கு நீங்கள் என்னசெய்யப்போகின்றீர்கள்? எம் மாவீரர்களை நினைவுகூரும் வாரத்தை அமைதியான முறையில் எந்தவொரு கழியாட்ட நிகழ்வுகளையும் அனுமதிக்காமல் பார்த்துக்கொள்வது எம் கடமை.

உறவுகளே தயவுசெய்து இந்த விடையத்தை கவனத்தில் எடுங்கள்.

இவ்வாறான கழியாட்ட நிகழ்வு ஓன்று சிட்னியில் நடைபெற உள்ளது அதன் விபரம் கீழ் இணைத்துழோம்.

மாவீரர் வாரத்தில் வைத்தியர்களின் கழியாட்டம் மாவீரர் வாரத்தை உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்க வேண்டிய காலப்பகுதியான 25.11.2012 அன்று சிட்னி வாழ் ஒரு சில தமிழ் மருத்துவர்களால் கலை நிகழ்ச்சி ஒன்று நடாத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதால் சிட்னிவாழ் தமிழ் மக்கள் அனைவரும் அதிருப்தியில் உள்ளார்கள் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

மேலும் மாவீரர் வாரத்தில் இவ்வாறான ஒரு கலை நிகழ்வு நடாத்துவது மாவீரர்களையும் அவர்களின் தியாகத்தையும் அவமதிக்கும் ஒரு நிகழ்வாகும். ஆகவே இந்த நிகழ்வை வேறு ஒரு திகதிக்கு மாற்றம் செய்யுமாறு ஏற்பாட்டாளர்களிடம் பணிவுடன் கேட்கப்பட்டதாகவும் அதற்கு ஏற்பாட்டாளர்கள் மறுத்துவிட்டார்கள்.மறுத்தது மட்டுமல்லாது சிட்னியில் இயங்கி வரும் தமிழ் வானொலி ஒன்றில் நவம்பர் 25ம் திகதி நடைபெற உள்ள நிகழ்வு தொடர்பாக எவரும் விமர்சிக்க கூடாது என்றும் பலதும் அறிந்த புத்திஜீவிகள் என சொல்லப்படும் அல்லது மதிக்கப்படும் இவர்கள் தாயக விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவுகூறும் தேசிய மாவீரர் வாரத்தில் தமது கலை நிகழ்வை நடாத்துவது எமக்கு மிகவும் கவலையை தருகின்றது.

இதற்கு மக்களாகிய நீங்கள் சொல்லும் பதில் என்ன.[/size][/size]

[size=4]

v-sydneynews%20%281%29.jpg[/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

எங்கே கருத்துப் புயலுகளை காணம்?

தலைவர் நாட்டில தானே மாவீரர் வாரம் அறிவித்தவர் அவுசில் இல்லையே என்று கூச்சல் போட கருத்துச் செம்மல்களை வரவேற்கிறேன்

எல்லா நிகழ்ச்சிகளுக்குமா அல்லது சிலவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதா ?

http://www.yarl.com/...876#entry822045

Edited by தப்பிலி

இதையெல்லாம் கேட்கும் அதிகாரத்தை உங்களுக்கு எல்லாம் யார் தந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே கருத்துப் புயலுகளை காணம்?

தலைவர் நாட்டில தானே மாவீரர் வாரம் அறிவித்தவர் அவுசில் இல்லையே என்று கூச்சல் போட கருத்துச் செம்மல்களை வரவேற்கிறேன்

மாவீரர் மாதம் வேண்டும் எண்டு சொல்லுற ஆக்களே பூவரசம் பூ போன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவளிக்கும் போது இவர்க இன்னும் ஒருபடி மேலே போய் மாவீரர் வாரத்திலேயே கை வைத்துவிட்டனர் .இதற்கு நீங்கதான் உங்கள் கருத்தைச் சொல்லணும்

இதையெல்லாம் கேட்கும் அதிகாரத்தை உங்களுக்கு எல்லாம் யார் தந்தது .

லெபனான் பயிற்ச்சியின் போது பி எல் ஓவும் மாலைதீவு எதிர்க்கட்சி தலைவரும் ரோ அமைப்பும் தந்தது.

படித்த 'மு' னாக்கள் :D

இதையெல்லாம் கேட்கும் அதிகாரத்தை உங்களுக்கு எல்லாம் யார் தந்தது .

இதைக் கேட்கும் அதிகாரம் யார் உங்களுக்குத் தந்தார்களோ அவர்கள் :D

பி.கு;உங்களுக்கெல்லாம் தரும்போது எங்களுக்குத் தரமாட்டார்களா ? என்ன? :lol:

http://www.ausmedaid.org.au/

இந்த விளம்பரத்தில் இந்த அமைப்பின் பெயர் உள்ளது. அவர்கள் பல நல்ல காரியங்கள் செய்கின்றார்கள்.

எல்லா நிகழ்வுகளுக்கும் உங்களுக்குத் தெரிந்த ஒரு சொல் கழியாட்டம். முதலில் கழியாட்டம் என்றால் என்ன?

மாவீரர் நாள் நிகழ்வில் பரதநாட்டியம் ஆடுகின்றார்களே அதுவும் கழியாட்டமில்லையா?

மாவீரர் வாரத்தில் உலகம் முழுக்க ஊரடங்கு சட்டம் போடடும் திட்டம் ஏதாவது இருக்கின்றதா? வில்லங்கத்துக்கு எதுக்கு ஒவ்வொன்றையும் தடுத்து மாவீரர் வரத்தை பிரகடனப்படுத்த முற்படுகின்றீர்கள் ? நீங்கள் மாவீரர் வாரம் என்றதை வைத்து உங்கள் அதிகாரக் கழியாட்டம் போடுகின்றீர்கள். இதனால் சனங்கள் தன்பாட்டில் உங்களில் இருந்து ஒதுங்கிக்கொள்வார்கள். உங்கள் பிரதான நோக்கம் மாவீரர் பெயரை வைத்து மற்றவர்களை அதிகாரம் செய்ய முற்படுவது. அடாவடித்தனம் செய்ய முற்படுவது. உங்களுக்கு உணர்விருந்தால் உங்கள் பாட்டில் சிறப்பாகச் செய்யுங்கள். உங்களுக்கு அடுத்தவன் முதுகைச் சொறியாமல் ஒருநாளும் இருக்கமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைப்பு, பல விதமான உதவிகளை, ஈழத் தமிழர்களுக்காக, வருடா வருடம் செய்து வருகின்றது!

அது தவிர, எமது நிகழ்சிகளில், அகவணக்கம் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதில், மிகவும் உறுதியாக இருந்தது!

எதற்காக இவர்கள் இதைச் செய்கின்றார்கள், என்பது எனக்குப் புரியவில்லை!

இரண்டு காரணங்களுக்காக, நான் விலகி நிற்கப் போகின்றேன்!

முதலாவது காரணம் இது மாவீரர் வாரத்தில் வருகின்றது! ( இது எனது தனிப்பட்ட முடிவு மட்டுமே)

இராமாயணத்தில், குப்பைகளைத் தவிர வேறெதுவும் இல்லை!

அநேகமான, சிட்னித் தமிழர்களின் முடிவும் இதுவாகத் தான் இருக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்!

மாவீரர் வாரத்தில் களியாட்ட நிகழ்வுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

இது, புனிதர்களுக்கு நம்மால் செய்யக்கூடிய ஆகக் குறைந்த மரியாதை.

தமிழரசு, ளகரம், ழகரம் கவனிக்கவும்.

இந்த அமைப்பு, பல விதமான உதவிகளை, ஈழத் தமிழர்களுக்காக, வருடா வருடம் செய்து வருகின்றது!

அது தவிர, எமது நிகழ்சிகளில், அகவணக்கம் கட்டாயம் இருக்கவேண்டும் என்பதில், மிகவும் உறுதியாக இருந்தது!

எதற்காக இவர்கள் இதைச் செய்கின்றார்கள், என்பது எனக்குப் புரியவில்லை!

இரண்டு காரணங்களுக்காக, நான் விலகி நிற்கப் போகின்றேன்!

முதலாவது காரணம் இது மாவீரர் வாரத்தில் வருகின்றது! ( இது எனது தனிப்பட்ட முடிவு மட்டுமே)

இராமாயணத்தில், குப்பைகளைத் தவிர வேறெதுவும் இல்லை!

அநேகமான, சிட்னித் தமிழர்களின் முடிவும் இதுவாகத் தான் இருக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்!

[size=4]நன்றி. [/size]

[size=4]பெரும்பான்மை மக்கள் பலதையும் பத்தையும் கேட்டு தாமாக சுயமாக முடிவை எடுக்கும் திறமை உள்ளவர்கள். அதை ஏற்கும் பக்குவம் எனக்கும், எல்லோருக்கும் வேண்டும். [/size]

இதுவரை வந்த முடிவுகள்

கனடா இளையராஜா நிகழ்ச்சி - No

பூவரசம்பூ நிகழ்ச்சி - Yes

லண்டன் ஹார்ட்லி கல்லூரி நிகழ்ச்சி - Yes

ஜெர்மனி நிகழ்ச்சி - முடிவு தெரியவில்லை

அவுஸ் முத்தமிழ் மாலை - No

[size=5]முதல் மாவீரர் கனவை நனவாக்குங்கோ ஒற்றுமையாய் இருந்து. அது தான் அவர்களுக்கு நாம் செய்யவேண்டியது!!![/size]

இதுவரை வந்த முடிவுகள்

கனடா இளையராஜா நிகழ்ச்சி - No

பூவரசம்பூ நிகழ்ச்சி - Yes

லண்டன் ஹார்ட்லி கல்லூரி நிகழ்ச்சி - Yes

ஜெர்மனி நிகழ்ச்சி - முடிவு தெரியவில்லை

அவுஸ் முத்தமிழ் மாலை - No

[size=4]கனடா இளையராஜா நிகழ்ச்சி - No : [/size]

[size=4]கனடாவில் புதிதாக புதியவர்களால் முளைத்த பிரமாண்டமான நிகழ்ச்சி. [/size]முழு சமூகத்தையும் இலக்கு வைத்த நிகழ்ச்சி.

[size=4]பூவரசம்பூ நிகழ்ச்சி - Yes[/size]

[size=4]கனடாவில் நீண்டகாலமாக வருடாந்தம் நடக்கும் நிகழ்வு. ஒரு குறிப்பிட்ட ஊர் சார்ந்த சமூக நிகழ்வு.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

latesta5flyerscopy.jpg

இன்னும் எதிர்பாக்கின்றோம்

கனடாவில் உள்ள முழுச் சமூகத்தில், பெரும்பான்மையானவர்கள் சுய சிந்தனையில்லாமல் இருக்கிறார்களா?

அப்படியானால் புதிதாக உருவாக்கப்பட்ட மாவீரர் மாதத்தில் நடக்கும் மற்றைய நிகழ்வுகளில் நாட்டியம் ஆடலாம், நாடகம் பண்ணலாம் விருந்துண்டு மகிழலாம், குத்தாட்டம் போடலாம். ஏன் அதற்குக் கொடுக்கும் பணத்தையும் நேரத்தையும் போராளிகளுக்குச் செலவழிக்க ஊர்ச் சங்கங்களுக்குத் தெரியாதா?

இப்படியான ஓரவஞ்சனையான நடவடிக்கைகள் கேலிக் கூத்தாகத்தான் முடியும். பிரிவினைகளை இவைகள்தான் உருவாக்குகின்றன.

latesta5flyerscopy.jpg

ஜோலி ஏபிரகாம் பாடுவதென்றால் அது கிறிஸ்தவ நிகழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். சமய நல்லிணக்க அடிப்படையில் அதற்கு விதிவிலக்குக் கொடுப்போம்.

(நான் கிறிஸ்தவ மதமுங்கோ. அதற்காகவாவது பார்த்துப் போட்டுத் தாங்கோ)

தப்பிலி சாட்டோட சாட்டா என்னையெல்லாம் சுயசிந்தனை இல்லாதவர்களில் சேர்க்கிறது நல்லாயில்லை... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியா மருத்துவ நிதியம் முன்பு தமிழர் மருத்துவ நிதியம் என்ற பெயரில் 2009ற்கு முன்பு வன்னியில் பல மருத்துவ உதவிகளை செய்து வந்தது. குறிப்பாக பொன்னம்பலம் வைத்தியசாலை .பல விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்களை வன்னியில் பெரும்பாலான மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பி பல உதவிகள் செய்து வந்தது. வன்னியினைத்தவிர கிழக்கு மாவட்டம் ,யாழ்ப்பாணம் (யாழ்ப்பாணவைத்தியசாலை, மூளாய்...)என உதவி செய்து வந்தது. 2009க்குப் பிறகு சில சட்டசிக்கல்கள் அவுஸ்திரெலியாவில் ஏற்பட்டதினால் அவுஸ்திரெலியா மருத்துவ நிதியம் என்ற பெயரில் தாயகத்தில் குறிப்பாக வைத்தியசாலைகளுக்கு உதவி செய்து வருகிறது. டிசம்பர் மாதம் முதல் அல்லது 2வது வாரங்களில் இவர்கள் நிகழ்ச்சிகளை நடாத்தி அதில் கிடைக்கும் பணத்தினை தாயாக மருத்துவ நிதிக்காக செயற்பட்டு வருகிறார்கள்.

இம்முறை டிசம்பர் முதல் வாரத்தில் நிகழ்ச்சி நடாத்துவதற்கு ஏற்ற இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் மாவீரர் வாரத்தில் நிகழ்ச்சியினை நடாத்துக்கிறார்கள். எனது கேள்வி டிசம்பர் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் நிகழ்ச்சி நடாத்துவதற்கு ஏற்ற இடம் கிடைக்காதுவிட்டால் சனவரி அல்லது பெப்ரவரி மாதத்தில் நிகழ்ச்சிகளை நடாத்தலாம் தானே.

பூங்கையூரன் 'இராமாயணத்தில், குப்பைகளைத் தவிர வேறெதுவும் இல்லை!' என்று சொல்லியிருக்கிறார். ஆனால் வைத்தியர் ஜெயமோகனின் படைப்புக்களைப் பார்த்தீர்கள் என்றால் அவை சமுகத்தில் நடப்பவற்றை நகைச்சுவையாக சொல்லுவார்கள். கம்பனும் கவிராயனும் என்ற தலைப்பில் நகைச்சுவையாக இராமயணத்தினை கிண்டல் அடிப்பார்கள் என்று தான் நினைக்கிறேன்.

தாயகத்துக்கு உதவி செய்யும் இந்த அமைப்பே, மாவீரர் வாரத்தில் நிகழ்ச்சியினை நடாத்தினால் மற்றைய அமைப்புக்கள் இவற்றினைப் பார்த்து மாவீரர் வாரங்களில் நிகழ்ச்சிகளை நடாத்த மாட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் ஒரு உன்னத தலைமைத்துவத்தின் கீழ் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மாவீரர் வாரத்தில் யாராக இருந்தாலும் மாவீரர் தவிர்ந்த ஏனைய நிகழ்வுகள் வைப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது எனது தனிப்பட்ட கருத்தே....

கனடாவில் உள்ள முழுச் சமூகத்தில், பெரும்பான்மையானவர்கள் சுய சிந்தனையில்லாமல் இருக்கிறார்களா?

[size=4]இல்லை. மாவீரர் தினம் அன்று முழுத்தமிழர்களும் வருவதில்லை.அதேவேளை இளையராஜா நிகழ்ச்சிக்கு பெரும்பான்மையோர் போக இருந்ததும் இல்லை. [/size]

அப்படியானால் புதிதாக உருவாக்கப்பட்ட மாவீரர் மாதத்தில் நடக்கும் மற்றைய நிகழ்வுகளில் நாட்டியம் ஆடலாம், நாடகம் பண்ணலாம் விருந்துண்டு மகிழலாம், குத்தாட்டம் போடலாம். ஏன் அதற்குக் கொடுக்கும் பணத்தையும் நேரத்தையும் போராளிகளுக்குச் செலவழிக்க ஊர்ச் சங்கங்களுக்குத் தெரியாதா?

[size=4]மாவீரர் தினத்தில் நடக்கும் நிகழ்வுகள், நாட்டியங்கள் விடுதலை பற்றிய சிந்தனைகளை கொண்டவை. அதை குத்தலாட்டம் என்பது பித்தலாட்டம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் மன்மோகன் அங்கிள் நமக்கு வேண்டப்பட்டவர் என்ற படியால் விமர்சனத்தில் இருந்து தள்ளியே நிற்கின்றேன் அனால் நாடகம் சிந்திக்க கூடியதாக இருக்கும் என்று சொல்லி இருக்கின்றார்கள் சோ இது ஒரு களியாட்ட நிகழ்வாக கருத முடியாது மற்றது சேர்க்கப்படும் நிதி அனைத்தும் வடக்கு கிழக்கு வைத்தியசாலைக்கு தான் உண்மையில் மாவீரர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்

மாவீரர் மாதம் என்றாலும் சரி .மாவீரர் வாரம் என்றாலும் சரி .......................புலம்பெயர் நாடுகளில் எந்த விதமான நிகழ்சிகளும் நடக்கட்டும் .... நிகழ்ச்சிக்கு போவதா போகக்கூடாதா என்பது . மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய பிரச்னை ...............எதிர்காலத்தில் மாவீரர் தினம் அன்றே இப்படியான நிகழ்வுகள் நடக்கலாம் ..................அப்போதும் மக்களே தீர்மானிக்கவேண்டும் ..................மக்கள் அனைவரும் செயற்படும் விதத்திலேயே ...........நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ...........அடுத்த முறை நிகழ்ச்சி வைப்பதை பற்றி சிந்திப்பார்கள் ..........மக்கள் பகிஸ்கரித்தால் ..............எதுவுமே எவரும் செய்யமுடியாது ...............

நீங்கள் கேட்கலாம் இதே மக்கள் தான் இந்த நிகழ்சிகளையும் ஒழுங்கு படுத்துகிறார்களே என்று .................ஆனால் மாவீரர்களையும் .அவர் தியாகங்களையும் அனைத்து மக்களும் மதிப்பார்கள் ...............அதனால் .நிச்சயமாய் இப்படியான செயற்பாடுகளை மக்கள் ஏற்படுத்த மாட்டார்கள் ..............அப்படிஎன்றால் யார் ???????????[----------------] நிச்சயம் நாம் இங்கிருந்து இது பற்றி எழுதி வாதாடுவது 5 சதத்திற்கும் பிரயோசனம் இல்லாத ஓர் விடயமாகவே இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

டாக்டர் மன்மோகன் அங்கிள் நமக்கு வேண்டப்பட்டவர் என்ற படியால் விமர்சனத்தில் இருந்து தள்ளியே நிற்கின்றேன் அனால் நாடகம் சிந்திக்க கூடியதாக இருக்கும் என்று சொல்லி இருக்கின்றார்கள் சோ இது ஒரு களியாட்ட நிகழ்வாக கருத முடியாது மற்றது சேர்க்கப்படும் நிதி அனைத்தும் வடக்கு கிழக்கு வைத்தியசாலைக்கு தான் உண்மையில் மாவீரர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்

தமிழர் நிதியம் என்று இருந்த இந்த அமைப்பினர் ஏன் அவுஸ்ரெலியன் மருத்துவ நிதியம் என்று பெயர் மாற்றியவர்கள்?...மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற இவர்களின் நிகழ்ச்சிக்கு சென்றிந்தேன் அங்கு வந்த ஒரு வெள்ளைஇன டாக்குத்தர் மேடையில் பேசும் பொழுது சில உண்மைகள் சொன்னார்.சிங்கள பகுதியிலும் இந்த அமைப்பினரின் உதவிகள் செல்கின்றது என்று...நான் இந்த நிகழ்ச்சிக்கு போகப்போவதில்லை...ஆனால் டிக்கட் வாங்குவேன் பணம் எம்மவருக்கு பயன்படுத்தபடுவதால்...டிக்கட் வாங்கும் பொழுது அவர்களிடம் சொல்ல வேண்டும் நான் வரமாட்டேன் ஆனால் எம்மக்களின் நலனுக்காக வாங்குகிறோம் என்று.....

  • கருத்துக்கள உறவுகள்

latesta5flyerscopy.jpg

இதுதான் முதல் முறையாக அவுஸ்ரேலியாவில் மேடையில் தமிழிலும் சிங்களத்திலும் பாடும் ஒரு நிகழ்ச்சி என நினைக்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.