Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைசி அடி. சாத்திரி

Featured Replies

கதையின் முடிவோடு எனக்கு உடன் பாடில்லை. இது மேலும் வன் முறையையும் குரோதங்களையும் வளர்க்கும்.

ஏன் எமது சமூக ஊடகங்களால் இவ்வாறானவர்களை இனம் காட்ட முடியாமல் உள்ளது? ஏன் பல் வேறு குழுக்களால் இவ்வாரானவர்களை இனம் காட்ட முடியாது உள்ளது? இணையம் வழியாகவாவது இவ்வாறானவர்களை இனம் காட்ட முடியும் தானே?

  • Replies 60
  • Views 10.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி எல்லா நாடுகளிலும் நடந்த பின்னரும் கூட இப்பவும் வாறாங்கள் தானே மறுபடியும் காசு சேர்க்க?

மாவீரர்நாளுக்கு காசு வேண்டும் என்று, முன்னர் போல ஒவ்வொரு நாட்டுக்கு ஒவ்வொரு பற்றுச்சீட்டு இல்லை எல்லா நாடுகளிலும் ஒரே மாதிரித்தான் பற்றுச்சீட்டு எல்லாரிடமும் போகவில்லை அப்ப இருந்து இப்ப வரை உண்மையா பங்கிபற்றியவர்களிடம் தான் வாறோம் என்று..!

யார் என்ன சொன்னாலும் பத்து சனமாவது தங்களுக்கு ஆதாரமாய் இருந்தால் போதும் என்று.

"உறவுகளை நோக்கி" என்ற வாசகம் வலது பக்க மூலையில் அமைந்த பற்றுச்சீட்டுகளுடன். :(

நேற்று ஒரு வாக்கியம் படித்தேன். அதன் தமிழாக்கம் ஏறத்தாள இவ்வாறு வரும்: 'சுயம் என்பது, இந்தப் பிரபஞ்சத்தில், உரிமைகள் எல்லைகள் என்ற முள்ளுக்கம்பிவேலி வட்டத்திற்குள் தனக்கானதாக ஒரு மனிதனால் உணரப்படும் ஒரு குட்டி இடம்'.

நாம் இருபது ஆண்டுகளாக தேசியத்திற்குப் பங்களித்த தொகையில் கடைசியில் அப்பாத்துரை போன்ற நாதாரிகளால் சுத்தப்பட்டது மட்டுமல்ல அனைத்துச் சதங்களும் அர்த்தமற்றுப் போன நிலையில் தான் இன்று நிற்கிறோம். உண்மையில் எமது அனைத்து இழப்பையும் நாம் அப்பாத்துரைகளில் மட்டும் குவியப்படுத்துவதால் (ஏனெனில் குவியப்படுத்த வேறேதும் எம்மிடம் இல்லை) தான் எமது கோபம் எம்மை வியப்பூட்டடும் வகையில் வெளிப்படுகிறது.

செயற்பாட்டாளர்களைப் பார்த்தால், செயற்படத்தொடங்கிய முதல் நிமிடத்தில் இருந்து, தாம் சட்டத்திற்கு முரணாக நடக்கிறோம் (புலம்பெயர் தேசங்களின் சட்டங்கள்) என்பதை உள்ளுர உணர்ந்தார்கள், தெரிந்திருந்தார்கள். சட்டத்திற்கெதிராக, ஆனால் புனிதமான காரணங்களிற்காக இயங்குகிறோம் என்ற புரிதல் பல செயற்பாட்டாளர்களின் உளவியலில் இருந்தது. மேலும் என்னதான் போராடத்தை ஆதரித்தாலும் காசு கொடுத்தாலும் காசு சேர்க்கும் செயற்பாட்டிற்கு வருவதற்கு வெகு சிலரே சம்மத்தித்தார்கள் என்பதால் வந்தவர்கள் கொஞ்சம் தியாகிகளாகவும் ஆக்கப்பட்டார்கள். ஆனால், எமக்கிருந்த புனிதம் தொலைந்து போன நிலையில் இன்று மேற்படி உளவியல் சிலரில் ஒரு பாதகமான விளைவினை ஏற்படுத்தியுள்ளது. இந்த உளவியல் ஒரு நுண்ணுயிர் கிருமி போன்று மருவி அருவருப்பாகவும் ஆபத்தானதாகவும் வளர்வதைப் பார்க்கமுடிகிறது. 2009ன் சுத்தல்கள் தொடங்கி இன்று வரை நடந்தேறும் பல்வேறுபட்ட ஏற்றுக்கொள்ளமுடியாத நடவடிக்கைகளின் அடிப்படைக்கு இந்த உளவியலே அத்திவாரம். அதாவது சட்டத்தைப் புறக்கணிக்கப் பழக்கப்பட்டவனிற்குப் புனிதம் என்ற ஒன்று கட்டுப்பாடாக இருந்தது. அவனைச் சட்டத்தைப் புறக்கணிக்கப்பழக்கி, அதே நேரம் புனிதத்தை மாற்றீடாக அவனுள் புகுத்தி அவன் ஏதோ ஒன்றிற்குக் கட்டுப்பட்டவனாக சமூகம் வைத்திருந்தது. இன்று அந்தப் புனிதமும் தொலைந்துபோனநிலையில் சிலர் மறுபடி சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கப்பழகிக்கொண்டிருக்கையில் சிலர் கட்டற்று ஆடத்தொடங்கியிருக்கிறார்கள்.

இன்று சமூகமாக நாம் ஒரு விடயத்தைத் தீர்மானித்தே ஆகவேண்டும். தமது வீட்டைக்கூட அடமானம் வைத்து மக்கள் கொடுத்த பணத்தை அதே மக்கள் முன்னால் அனுபவிக்கத் தலைப்படும் அப்பாத்துரைகள் சார்ந்து எமது எதிர்வினை என்ன என்று நாம் முடிவெடுத்தாகவேண்டும். நிச்சயமாக அப்பாத்துரைகளைக் கொல்வது தீர்வாகாது. அப்படி அப்பாத்துரைகள் கொல்லப்படின் அவர்கள் தற்போது வைத்திருக்கும் மக்கள் பணம் அவர்கள் பினாமிகளுடாக வெள்ளைப் பணமாக மாறிப் பயணிக்கும். எனவே அப்பாத்துரைகளை வைத்துக்கொண்டு தான் இதற்கான முடிவு தேடப்படவேண்டும். ஆனால் இது நேரநெருக்கடியுடைய ஒரு ஒரு விடயம் என்பதால் உடனடியாக முடிவெடுக்கப்படவேண்டும். நிச்சயம் அப்பாத்துரைகள் ஒரு மாபியாக் குடும்பமாக உருவாவி வருவது தெரிகிறது. இவர்களைக் கட்டிப்போட எந்தப் புனிதமோ கோட்பாதரோ எம்மிடம் மிச்சமில்லை. நடக்கத் தொடங்கியிருக்கின்ற மாபியாக் குழந்தையினை இப்போதே கொல்லாது விடின், அது எம்முன் தண்டல்காரனாக நடந்தே தீரும்.

எமது சமூகம் பலமானது. ஆனால் ஒரு கெட்டபழக்கம், யாராவது நீங்கள் பலமானவர்கள் என்று சொல்லி லொஜிக்கில்லாத கோசக் கவிதைகளை றேடியோவில் பாடினால் மட்டும் தான் எமது பலம் எமக்கு ஞாபகம் வரும். போராட்ட காலத்தில் போராட்டத்திற்கு முரணான கருத்துடையவர்களும் வியாபாரம் செய்யவேண்டுமாயின் தம்மைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்களாகக் காட்டவேண்டிய நிலை இருந்தது. மக்கள், முரணான வியாபாரங்களைப் புறக்கணித்தார்கள். ஆனால் இன்று எம்மைச் சுத்தி எம்மிடமே கடைவிரிக்கும் நபர்களின் மண்டையினைப் பிழப்பதைப் பற்றி மட்டுமே எம்மால் யோசிக்கமுடிகிறது.

முதலில் ஒரு சமூகமாக, எமக்கு நாம் ஒரு குறைந்தபட்ச தரத்தைக் கட்டமைக்கவேண்டும். சமூகத்தின் எந்த அங்கமும் இந்த தரத்திற்குக் கீளே செயற்படாத வண்ணம் நாம் விழிப்பாக இருக்கவேண்டும். ஆறுபேர் வழக்குப் போட்டும் அப்பாத்துரை வென்றான் என்பதால் வழக்குகள் சரிவராது என்றாகத்தேவையில்லை. அதே நேரம் வழக்குத் தான் வழி என்றும் இல்லை.

"படித்தவர்களிற்கும்" "பாமரர்களிற்கும்" இடையில் பொதுவில் காணப்படும் மிகமுக்கிய வித்தியாசம், தத்தமது பிரச்சினைகளை அவர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதிலேயே பெரிதும் வெளிப்படுகிறது. துரதிஸ்ரவசமாக, உரிமைகள் எல்லைகள் என்ற முள்ளுக்கம்பி வட்டத்திற்குள் தனக்கான குட்டியிடமாகப் பலரிற்குப் படும் இடம் அளவில் சுருங்கிக்கொண்டே போகிறது.

எமது சமூகத்தில் இருக்கும் அப்பாத்துரைகள் பணத்தை மீள ஒப்படைக்கச் செய்வதற்கு சமூகம் ஒன்று திரளவேண்டும். அதற்கு முதலில் அப்பாத்துரைகள் மற்றும் அனைத்துச் செயற்பாட்டாளர்கள் சார்ந்தும் இருக்கின்ற பயம் முற்றாகப் போகவேண்டும். ஒரு கட்டத்தில் நான் பிறந்த மண்ணை விடுவிக்கும் போராட்டத்தில் தோள் கொடுத்தாhர்கள் என்பதற்காக நான் ஓடி வந்து புகுந்திருக்கும் புது மண்ணில் எனது வாழ்வின் அமைதியினைப் பறிப்பதற்குகான உரிமையினை இவர்களிற்குக் கொடுப்பதற்கு நான் தயாராக இல்லை. என்னைப் பற்றி மட்டும் தான் நான் கூற முடியும். இது தொடர்பில் ஒவ்வவொருவரும் தம்மைச் சார்ந்து சிந்திக்கவேண்டும். இந்தச் சிந்தனையின் முடிவில் சமூகத்தின் ஒட்டுமொத்த தெரிவு புலத்து மண்ணில் அப்பாத்துரைகளினதும் அப்பாத்துரைகளை ஒத்தவர்களதும் ஆதிக்கத்திற்கு இடமில்லை என்பதாக இருக்குமாயின், சமூகமாக இவர்களை செல்லாக்காசாக்குவதற்கு வழிகள் ஏராளம். சமூகத்தின் பணத்தை இவர்கள் பதுக்கி வைத்திருக்கும் ஒவ்வொருநாளும் வெட்கமான நாட்களாகச் சமூகம் ஒட்டுமொத்தமாக உணரும் நிலை வருகையில், இவர்களின் பணம் மறைவிடங்களை விட்டும் பினாமிகளை விட்டும் வெளிவந்தே தீரும்

சீட்டுப் பிடித்த ஆரம்ப காலங்களில் இருந்து இந்தப் பிரச்சினை ஏதோ ஒரு வடிவில் எமக்குள் தொடர்ந்தும இன்றுவரை தீர்வின்றி இருப்பதற்கான அடிப்படை, பல்வேறு காரணங்களின் நிமித்தம் நாம் இவ்வாறான சுத்தல்கள் சார்ந்து ரகசியம் காக்கவேண்டியவர்களாக இருந்தோம்:

1) அரச உதவிப்பணத்தில் இருந்து கொண்டு சீட்டுப் பிடிப்பது

2) இயக்க ஆதரவு சார்ந்து புலம்பெயர் சட்டங்கள். இப்படிப் பல

ஆனால், இது சமூகத்திற்குத் தெரிந்த அதன் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது என்கையில் நாம் அதற்கான தீர்வை நாமாகத் தான் அடையாளப்படுத்த முடியும். அது பற்றிக கதைப்பதற்கு முன்னர் சமூகம் குறைந்தபட்சம் தான் அதற்குத் தயாரா என்ற கேள்விதொடர்பில் ஒரு திட்டவட்டவமான பதிலை வெளிப்படையாக்கவேண்டும்.

பல வருடங்களின் முன்னர் ஒரு பாட்டி ஒன்றில் என்னை உலுக்கிய ஒரு விடயம் இப்போது ஞாபகம் வருகிறது. ஆரோ சொன்னார்கள் எமது கமூகத்தில் எவரும் எவரையும் பாலியல் வல்லுறவு செய்யலாம் ஏனெனினல் பாதிக்கப்பட்டபெண் தனது கணவனிற்குக் கூட நடந்ததைச் சொல்லமாட்டார், பிறகெப்படி பொலிசுக்குப் போவார் என்று. இது ஒரு நாதாரித்தனமான வசனமாக வெளிப்படினும், எமது சமூகத்தின் தன்மை சார்ந்து இந்த வசனத்தில் பொதிந்திருக்கும் சில விடயங்கள் சார்ந்து நாம் சிந்தித்தே தீரவேண்டும். குறிப்பாக எமது ரகசியங்கள் சார்ந்து நாம் பேசத் தயங்கும் நிலை தொடரும் வரை, அப்பாத்துரைகள் நாம் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒரு பாகம் மட்டுமேட.

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தண்ணாவின் ஆக்கத்தை இன்று தான் படித்தேன் மிகவும் கவலையாக போய்ட்டு...பெரியர்கள்,பெற்றோர் முன்,பின் யோசிக்காமல் விடும் பிழைகள் ஒன்றும் அறியாத குழந்தைகளை கூட பாதிக்கிறது...இப்படி அடித்த பணத்தில் தாய்,தந்தையர்களை ஊர் சுற்ற விட்ட பிள்ளைகளும் இருக்கிறார்கள்..கனடாவில் தொடங்கி உலகத்தில் பார்க்க வேண்டிய நாடுகள் என்று angkor wat வரை பார்த்து விட்டு வந்த உறவுகளும் இருக்கிறார்கள்....சிலவற்றை எழுதலாம்,சிலவற்றை எழுத ஏலாது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதை சம்பவங்களின் தொகுப்பாக இருக்கின்றது. பணத்தை மனிசிக்கே தெரியாமல் கொடுக்கும் தேசிய செயற்பாட்டின் பின்னாலுள்ள உளவியலின் விபரிப்புப் போதாது. எனக்குத் தெரிந்தவரும் அப்படிக் கொடுத்திருந்தார் ஆனால் இப்படியெல்லாம் குடும்பத்திற்குள் பிரச்சினை வரவில்லை.

அத்தோடு குளிரிலும், பனியிலும் கஷ்டப்பட்டு போராட்டத்திற்கு நேர்மையாகப் காசைச் சேர்த்து, பின்னர் நடந்தவற்றை நினைத்து துயரப்படும் பாத்திரம் ஒன்றையும் படைத்திருக்கலாம் (கல்லெறிகளைத் தடுக்கத்தான் :icon_mrgreen: ) மொத்தத்தில் சாத்திரியின் முத்திரைக் கதை :)

கிருபன் இந்த கதையில் பல விடயங்களை வாகர்களிற்கு தெரிந்த அல்லது புரிந்து கொண்ட விடயங்கள் என பல விடயங்களை ஆழமாக தொடவில்லை. அதில் ஒன்றுதான் நீங்கள் சுட்டிக்காட்டியிருந்த.பணத்தை மனிசிக்கே தெரியாமல் கொடுக்கும் தேசிய செயற்பாட்டின் பின்னாலுள்ள உளவியலின் விபரிப்புப் போதாது. என்பதும். ஏற்கனவே வீடு மற்றும் வாகனம் வங்கி கடனில் இருப்பதால். சாதாரணமான குடும்பப் பொறுப்பில் இருக்கும் எமது பெண்கள் மேலதிகமாகவும் நாட்டிற்கான உதவி என்று கடன் பெற்றுக் கொடுக்க அனுமதிக்கமாட்டார்கள் இது சாதாரண உளவியல் சார்ந்தது. அதனாலேயே அமுதன் மனைவிக்கு அதை மறைத்திருந்தான் என்பது பலரிற்கும் பரிந்து கொள்ளும் விடயம் என் நினைத்தே அதைனை விபரிப்பாக நீட்டவில்லை. அத்தோடு கதை நடந்த பல சம்பவங்களையும் முடிந்தளவு உள்ளடக்கி விடலாம் என்கிற என்னுடைய நோக்கத்தால் அது கதைக்குரிய ஆலாபனைகளை குறைத்து எழுதியது கடந்தகால சம்பவங்களை அறிந்தவர்களிற்கு படிக்கும் போது சம்பவ தொகுப்பாக தெரியவும் வாய்ப்பு உண்டு உங்கள் கருத்திற்கு நன்றிகள். அடுத்து கல்லெறிகளை இன்னொரு கதை மூலம் தடுத்துடுவனே. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிசுக்கு வந்த காலம் முதல் வேலையே செய்யாமல் சொந்த வீடு அதுவும் நிலம் வாங்கி கட்டியவர்கள் நீங்கள் சொன்ன அப்புத்துரை போன்றவர்கள்.வாடகை வீட்டிற்கு மாத வாடகைக்கே திண்டாடும் மனிதர்கள் என்னைப்போன்ற அமுதன்கள்.நாங்கள் நெல்லுக்கு இறைத்த நீர் வாய்கால் வழிந்தோடி புல்லுக்கும் பொசிந்திருந்தால் கூட பரவாயில்லை.அனால் புல்லுக்கு நீர் இறைத்துவிட்டோம்.நெல்வயல்களே கருகிப்போய் விட்டது.அனால் களைகள் விருட்சமாக வளர்ந்து நிற்கின்றன.யாரேனும் களையெடுத்தால் நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாத்துரைகள் களை எடுக்கப்பட வேண்டியவர்கள்.மக்களின் பணத்தை சுருட்டி திடீர் பணக்காரர்கள் ஆனவர்கள் நடைப் பிணமாக்கப்பட வேண்டும். யாரும் இவ் ஈனச்செயலை எதிர்காலத்தில் செய்யா வண்ணம் தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும் . பதிவுக்கு நன்றி, சாத்திரியார்.

கருத்திற்கு நன்றிகள் நுணாவிலான்

  • கருத்துக்கள உறவுகள்

அப்புத்துறை மாதிரியும் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒருவர் புலம் பெயர்ந்த நாடு ஒன்றில் தாயாக நிதி சேர்த்தவர். தன்னுடைய வீட்டினை விற்று விட்டு, வருமானங்களை விற்று ஊருக்கு அனுப்பி விட்டு, மக்களிடம் காசு கேட்கப் போனவர். இப்பொழுது சொந்த வீடு இல்லாமலும், வேலை இல்லாமலும் கஸ்டப்பட்டு வாழ்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை சாத்திரி அண்ணா. சொந்த அனுபவம் இல்லை ஆனால் சுவிசில் இருக்கும் எனது உயிர் நண்பனின் தமயனின் கதையின் சாயல் இருக்கிறது. அவர் அப்போது கலியாணம் கட்டவில்லை. 50,000 பிராங் கடைசி அடியில் பிளேன்/கெலி வாங்க கொடுத்திருந்தார்.

லண்டனில் இருக்கும் எனது மிக நெருங்கிய உறவினர் ஒருவரும் காசு சேர்க்கப் போனவர். தண்ட கையாலையும் கனக்க வாரி வாரி இறைத்தார். இப்போது வீடும் இல்லை, மனைவி முந்தியே விவாகரத்து, வேலையும் இல்லை, மனிசனுக்கு ஊருபட்ட வருத்தங்கள் வேற. ஆனால் அவர் 2002/2003 காலத்திலேயே சில முரண்பாடுகளால் விலத்தி விட்டார். இதற்கு முக்கிய காரணம் அவரது சொந்த வீட்டிலே ஒரு மாவீரர் குடும்பத்தை இருத்தியிருந்ததால் (இலவசமாக) வீட்டைப் பராமரிப்பதில் அவர்களுடன் ஏற்றப்பட்ட மனக் கசப்பு. ஓர் கட்டத்தில் அவருக்கு கொலை அச்சுறுத்தலும் விடப்பட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவையும் வாசித்து முடிக்க எத்தனை நாட்கள் எடுக்கும்??

திண்ணையிலை கடைலை போடுற நேரம் இதை படிக்கலாமல்லோ :lol:

திண்ணையிலை கடைலை போடுற நேரம் இதை படிக்கலாமல்லோ :lol:

ம்ம்... உண்மை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எரிகிற வீட்டில் திருடுகிற கூட்டம் பற்றி என்ன சொல்வது.

ஆனால் தொடர்ந்து புடுங்க விடப் போகின்றோமா??? இது கேள்வி பதில் அனைவரிடமும் உள்ளது நன்றி தப்பிலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் ஒரு பெரிய அப்பாத்துரையை தேடுறன்...........கவளத்துக்கு நான் 50 யூரோ தல்லாம் எண்டு சொல்லி ரிக்கற் வாங்கிப்போட்டு காசு இன்னும் குடுக்கேல்லை......அதுக்கு இப்பவும் ஒரு சின்ன அப்பாத்துரை கண்ட இடத்திலையெல்லாம் "என்னமாதிரி அந்த 50 யூரோ அண்ணை நான் உங்கடை கணக்கையும் சேர்த்து என்ரை கையாலை அங்கை குடுத்துட்டன் அந்த கணக்கை முடிச்சியளெண்டால் நல்லாயிருக்கும்" எண்டு சொல்லுறார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இப்படியான துயர் நிறைந்த அனுபவங்கள் உண்டு சாத்திரியார்.

ஆனால், இந்தச் சைபர்கள் போடுற மாதிரி, ஒண்டும் இதுவரையில் நடக்கவில்லை!

எமது இனத்தில், சுயநல வாதிகளின், விகிதாசாரம் மிகவும் அதிகம்!

அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள்!

இப்படியான அனுபவங்கள் பொதுவாகவே பலரும் சந்தித்ததுதான் ஆனால் பொது நோக்கம் ஒன்றிற்காக சகித்தபடி இருந்தார்கள் கருத்திற்கு நன்றிகள்.

இங்கே ஜேர்மனயில் ஒரு முதியவரிடம் போர் முடிந்து இரண்டு மாதங்கள் கழிந்த பிற்பாடு கூட போய் 1000 யூரோ வாங்கியிருக்கிறார்கள்.

2009 ஜுலை அளவில் நான்கு அப்பாத்துரைகள் அவரிடம் போய் ஏற்கனவே தருவதாக சொன்ன 1000 யூரோக்களை தர வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் தலைவரும் ஐந்தாம் கட்ட ஈழப் போருக்கு தயார்படுத்தல்கைள மேற்கொண்டிருந்த காரணத்தினால் அவரும் கொடுத்து விட்டார்.

சில மாதங்கள் கழித்து பணத்தை போய் கேட்க அப்பாத்துரைகள் மறுத்து விட்டார்கள். அது எல்லாம் கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுத்தாகி விட்டது, இனி திரும்பி வராது என்று சொல்லி விட்டார்கள்.

அவர் இப்பொழுதும் பணம் கொடுத்ததை பற்றி பெரிதும் கவலைப்பட்டு பேசுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கதையின் முடிவோடு எனக்கு உடன் பாடில்லை. இது மேலும் வன் முறையையும் குரோதங்களையும் வளர்க்கும்.

ஏன் எமது சமூக ஊடகங்களால் இவ்வாறானவர்களை இனம் காட்ட முடியாமல் உள்ளது? ஏன் பல் வேறு குழுக்களால் இவ்வாரானவர்களை இனம் காட்ட முடியாது உள்ளது? இணையம் வழியாகவாவது இவ்வாறானவர்களை இனம் காட்ட முடியும் தானே?

நாரதர் இவர்களை எனக்கும் உங்களிற்கும் ஏன் மற்றையவர்களிற்கும் தெரியும். எமது சமூக உடகம் என்பதிலேயே யார் ??என்பது பிரச்சனை நீங்கள் உங்கள் சமூக ஊடகம் எது என்பதை தெளிவாக சொல்லுங்கள் அந்த ஊடகத்திலேயே நான் பிரசுரிக்கிறேன். நன்றி வணக்கம்.

இந்த கதை பற்றிய சோபா சக்தியின் கருத்து.

[size=2]

Shoba Sakthi சாத்திரியாரின் இந்தக் கதை சொல்லும் நீதியும் இறுதிப் 'பஞ்'சும் //எமது கைகளின் ஆயுதங்களை எதிரி மட்டுமல்ல துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள்// என்பதாகயிருக்கிறது. எமது கைகளின் ஆயுதங்களை துரோகிகளும் தீர்மானிக்கிறார்கள் என்ற கருத்தாக்கம் துரையப்பா, அமிர்தலிங்கம் முதல் சபாலிங்கம், பரிதி வரையான அத்தனை கொலைகளையும் நியாயப்படுத்தக் கூடியது. இந்த வரிகளில் உறைந்திருக்கும் அபாயத்தை 30 வருட அனர்த்தங்களிற்குப் பின்பும் நாம் விளங்கிக்கொள்ளப் போவதில்லையா[/size]

[size=2]

முன்னர் எழுதிய என்கருத்தும் அதே[/size]

[size=2]

Posted 10 November 2012 - 09:51 PM[/size][size=4]

நல்ல கதை.ஆஅனால் முடிவு வன்முறையாய் இருக்குகொலை எதற்கும் தீர்வல்ல*இந்தக்கதை புலம்பெயர் தேசமெங்கும் இருக்கும் இந்தப் பிரசினைக்கு தீர்வு கொலை என்று மறைமுகமாக சொல்வதுபோல் இருக்கு. :([/size]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோ பா விற்கு நான் கொடுத்த பதில் இதுதான் ... துரையப்பா . அமிர். சபாலிங்கம் விடுபட்ட நாதன் கஜன். இறுதி பரிதி . துரேகிகள் வரிசையில் நீங்கள் அடக்கினால். எமக்கு தெரிந்ததெல்லாம் கண்ணிற்கு கண்..பல்லிற்கு பல். அவ்வளவுதான். blank.gif

இப்படி பட்டியல் இட்டால் பலர் இருக்கினம் எனது லிஸ்டில் .வயதும் மனதும் எல்லாவற்றையும் மன்னிக்கும் பக்குவத்தை தந்துவிட்டது .

அரசியல் அற்று போட வேண்டிய பட்டியலே அதிக நீளம்.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் போட்ட பட்டியல் வேறல்லோ!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பட்டியல் இட்டால் பலர் இருக்கினம் எனது லிஸ்டில் .வயதும் மனதும் எல்லாவற்றையும் மன்னிக்கும் பக்குவத்தை தந்துவிட்டது .

அரசியல் அற்று போட வேண்டிய பட்டியலே அதிக நீளம்.

அதுதான் உங்கட எழுத்துக்களை பார்க்க தெரியுது :D .

ஏதோ நீங்க உயரிய இடத்தில் இருந்து, மற்றவர்களை மன்னிக்கின்றீர்களா? இந்த தகுதி உங்களுக்கு இருக்கா என்று விடிய எழும்பி கண்ணாடியை பார்க்கவும்

சாத்தண்ணா நல்ல கதை

நல்ல பதிவு சாத்திரி. யாவும் கற்பனை அல்ல என்று வேறு போட்டிருக்கிறீர்கள். சிந்திக்க வைக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று ஒரு வாக்கியம் படித்தேன். அதன் தமிழாக்கம் ஏறத்தாள இவ்வாறு வரும்: 'சுயம் என்பது, இந்தப் பிரபஞ்சத்தில், உரிமைகள் எல்லைகள் என்ற முள்ளுக்கம்பிவேலி வட்டத்திற்குள் தனக்கானதாக ஒரு மனிதனால் உணரப்படும் ஒரு குட்டி இடம்'.

நாம் இருபது ஆண்டுகளாக தேசியத்திற்குப் பங்களித்த தொகையில் கடைசியில் அப்பாத்துரை போன்ற நாதாரிகளால் சுத்தப்பட்டது மட்டுமல்ல அனைத்துச் சதங்களும் அர்த்தமற்றுப் போன நிலையில் தான் இன்று நிற்கிறோம். உண்மையில் எமது அனைத்து இழப்பையும் நாம் அப்பாத்துரைகளில் மட்டும் குவியப்படுத்துவதால் (ஏனெனில் குவியப்படுத்த வேறேதும் எம்மிடம் இல்லை) தான் எமது கோபம் எம்மை வியப்பூட்டடும் வகையில் வெளிப்படுகிறது.

செயற்பாட்டாளர்களைப் பார்த்தால், செயற்படத்தொடங்கிய முதல் நிமிடத்தில் இருந்து, தாம் சட்டத்திற்கு முரணாக நடக்கிறோம் (புலம்பெயர் தேசங்களின் சட்டங்கள்) என்பதை உள்ளுர உணர்ந்தார்கள், தெரிந்திருந்தார்கள். சட்டத்திற்கெதிராக, ஆனால் புனிதமான காரணங்களிற்காக இயங்குகிறோம் என்ற புரிதல் பல செயற்பாட்டாளர்களின் உளவியலில் இருந்தது. மேலும் என்னதான் போராடத்தை ஆதரித்தாலும் காசு கொடுத்தாலும் காசு சேர்க்கும் செயற்பாட்டிற்கு வருவதற்கு வெகு சிலரே சம்மத்தித்தார்கள் என்பதால் வந்தவர்கள் கொஞ்சம் தியாகிகளாகவும் ஆக்கப்பட்டார்கள். ஆனால், எமக்கிருந்த புனிதம் தொலைந்து போன நிலையில் இன்று மேற்படி உளவியல் சிலரில் ஒரு பாதகமான விளைவினை ஏற்படுத்தியுள்ளது. இந்த உளவியல் ஒரு நுண்ணுயிர் கிருமி போன்று மருவி அருவருப்பாகவும் ஆபத்தானதாகவும் வளர்வதைப் பார்க்கமுடிகிறது. 2009ன் சுத்தல்கள் தொடங்கி இன்று வரை நடந்தேறும் பல்வேறுபட்ட ஏற்றுக்கொள்ளமுடியாத நடவடிக்கைகளின் அடிப்படைக்கு இந்த உளவியலே அத்திவாரம். அதாவது சட்டத்தைப் புறக்கணிக்கப் பழக்கப்பட்டவனிற்குப் புனிதம் என்ற ஒன்று கட்டுப்பாடாக இருந்தது. அவனைச் சட்டத்தைப் புறக்கணிக்கப்பழக்கி, அதே நேரம் புனிதத்தை மாற்றீடாக அவனுள் புகுத்தி அவன் ஏதோ ஒன்றிற்குக் கட்டுப்பட்டவனாக சமூகம் வைத்திருந்தது. இன்று அந்தப் புனிதமும் தொலைந்துபோனநிலையில் சிலர் மறுபடி சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கப்பழகிக்கொண்டிருக்கையில் சிலர் கட்டற்று ஆடத்தொடங்கியிருக்கிறார்கள்.

இன்று சமூகமாக நாம் ஒரு விடயத்தைத் தீர்மானித்தே ஆகவேண்டும். தமது வீட்டைக்கூட அடமானம் வைத்து மக்கள் கொடுத்த பணத்தை அதே மக்கள் முன்னால் அனுபவிக்கத் தலைப்படும் அப்பாத்துரைகள் சார்ந்து எமது எதிர்வினை என்ன என்று நாம் முடிவெடுத்தாகவேண்டும். நிச்சயமாக அப்பாத்துரைகளைக் கொல்வது தீர்வாகாது. அப்படி அப்பாத்துரைகள் கொல்லப்படின் அவர்கள் தற்போது வைத்திருக்கும் மக்கள் பணம் அவர்கள் பினாமிகளுடாக வெள்ளைப் பணமாக மாறிப் பயணிக்கும். எனவே அப்பாத்துரைகளை வைத்துக்கொண்டு தான் இதற்கான முடிவு தேடப்படவேண்டும். ஆனால் இது நேரநெருக்கடியுடைய ஒரு ஒரு விடயம் என்பதால் உடனடியாக முடிவெடுக்கப்படவேண்டும். நிச்சயம் அப்பாத்துரைகள் ஒரு மாபியாக் குடும்பமாக உருவாவி வருவது தெரிகிறது. இவர்களைக் கட்டிப்போட எந்தப் புனிதமோ கோட்பாதரோ எம்மிடம் மிச்சமில்லை. நடக்கத் தொடங்கியிருக்கின்ற மாபியாக் குழந்தையினை இப்போதே கொல்லாது விடின், அது எம்முன் தண்டல்காரனாக நடந்தே தீரும்.

எமது சமூகம் பலமானது. ஆனால் ஒரு கெட்டபழக்கம், யாராவது நீங்கள் பலமானவர்கள் என்று சொல்லி லொஜிக்கில்லாத கோசக் கவிதைகளை றேடியோவில் பாடினால் மட்டும் தான் எமது பலம் எமக்கு ஞாபகம் வரும். போராட்ட காலத்தில் போராட்டத்திற்கு முரணான கருத்துடையவர்களும் வியாபாரம் செய்யவேண்டுமாயின் தம்மைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்களாகக் காட்டவேண்டிய நிலை இருந்தது. மக்கள், முரணான வியாபாரங்களைப் புறக்கணித்தார்கள். ஆனால் இன்று எம்மைச் சுத்தி எம்மிடமே கடைவிரிக்கும் நபர்களின் மண்டையினைப் பிழப்பதைப் பற்றி மட்டுமே எம்மால் யோசிக்கமுடிகிறது.

முதலில் ஒரு சமூகமாக, எமக்கு நாம் ஒரு குறைந்தபட்ச தரத்தைக் கட்டமைக்கவேண்டும். சமூகத்தின் எந்த அங்கமும் இந்த தரத்திற்குக் கீளே செயற்படாத வண்ணம் நாம் விழிப்பாக இருக்கவேண்டும். ஆறுபேர் வழக்குப் போட்டும் அப்பாத்துரை வென்றான் என்பதால் வழக்குகள் சரிவராது என்றாகத்தேவையில்லை. அதே நேரம் வழக்குத் தான் வழி என்றும் இல்லை.

"படித்தவர்களிற்கும்" "பாமரர்களிற்கும்" இடையில் பொதுவில் காணப்படும் மிகமுக்கிய வித்தியாசம், தத்தமது பிரச்சினைகளை அவர்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதிலேயே பெரிதும் வெளிப்படுகிறது. துரதிஸ்ரவசமாக, உரிமைகள் எல்லைகள் என்ற முள்ளுக்கம்பி வட்டத்திற்குள் தனக்கான குட்டியிடமாகப் பலரிற்குப் படும் இடம் அளவில் சுருங்கிக்கொண்டே போகிறது.

எமது சமூகத்தில் இருக்கும் அப்பாத்துரைகள் பணத்தை மீள ஒப்படைக்கச் செய்வதற்கு சமூகம் ஒன்று திரளவேண்டும். அதற்கு முதலில் அப்பாத்துரைகள் மற்றும் அனைத்துச் செயற்பாட்டாளர்கள் சார்ந்தும் இருக்கின்ற பயம் முற்றாகப் போகவேண்டும். ஒரு கட்டத்தில் நான் பிறந்த மண்ணை விடுவிக்கும் போராட்டத்தில் தோள் கொடுத்தாhர்கள் என்பதற்காக நான் ஓடி வந்து புகுந்திருக்கும் புது மண்ணில் எனது வாழ்வின் அமைதியினைப் பறிப்பதற்குகான உரிமையினை இவர்களிற்குக் கொடுப்பதற்கு நான் தயாராக இல்லை. என்னைப் பற்றி மட்டும் தான் நான் கூற முடியும். இது தொடர்பில் ஒவ்வவொருவரும் தம்மைச் சார்ந்து சிந்திக்கவேண்டும். இந்தச் சிந்தனையின் முடிவில் சமூகத்தின் ஒட்டுமொத்த தெரிவு புலத்து மண்ணில் அப்பாத்துரைகளினதும் அப்பாத்துரைகளை ஒத்தவர்களதும் ஆதிக்கத்திற்கு இடமில்லை என்பதாக இருக்குமாயின், சமூகமாக இவர்களை செல்லாக்காசாக்குவதற்கு வழிகள் ஏராளம். சமூகத்தின் பணத்தை இவர்கள் பதுக்கி வைத்திருக்கும் ஒவ்வொருநாளும் வெட்கமான நாட்களாகச் சமூகம் ஒட்டுமொத்தமாக உணரும் நிலை வருகையில், இவர்களின் பணம் மறைவிடங்களை விட்டும் பினாமிகளை விட்டும் வெளிவந்தே தீரும்

சீட்டுப் பிடித்த ஆரம்ப காலங்களில் இருந்து இந்தப் பிரச்சினை ஏதோ ஒரு வடிவில் எமக்குள் தொடர்ந்தும இன்றுவரை தீர்வின்றி இருப்பதற்கான அடிப்படை, பல்வேறு காரணங்களின் நிமித்தம் நாம் இவ்வாறான சுத்தல்கள் சார்ந்து ரகசியம் காக்கவேண்டியவர்களாக இருந்தோம்:

1) அரச உதவிப்பணத்தில் இருந்து கொண்டு சீட்டுப் பிடிப்பது

2) இயக்க ஆதரவு சார்ந்து புலம்பெயர் சட்டங்கள். இப்படிப் பல

ஆனால், இது சமூகத்திற்குத் தெரிந்த அதன் பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது என்கையில் நாம் அதற்கான தீர்வை நாமாகத் தான் அடையாளப்படுத்த முடியும். அது பற்றிக கதைப்பதற்கு முன்னர் சமூகம் குறைந்தபட்சம் தான் அதற்குத் தயாரா என்ற கேள்விதொடர்பில் ஒரு திட்டவட்டவமான பதிலை வெளிப்படையாக்கவேண்டும்.

பல வருடங்களின் முன்னர் ஒரு பாட்டி ஒன்றில் என்னை உலுக்கிய ஒரு விடயம் இப்போது ஞாபகம் வருகிறது. ஆரோ சொன்னார்கள் எமது கமூகத்தில் எவரும் எவரையும் பாலியல் வல்லுறவு செய்யலாம் ஏனெனினல் பாதிக்கப்பட்டபெண் தனது கணவனிற்குக் கூட நடந்ததைச் சொல்லமாட்டார், பிறகெப்படி பொலிசுக்குப் போவார் என்று. இது ஒரு நாதாரித்தனமான வசனமாக வெளிப்படினும், எமது சமூகத்தின் தன்மை சார்ந்து இந்த வசனத்தில் பொதிந்திருக்கும் சில விடயங்கள் சார்ந்து நாம் சிந்தித்தே தீரவேண்டும். குறிப்பாக எமது ரகசியங்கள் சார்ந்து நாம் பேசத் தயங்கும் நிலை தொடரும் வரை, அப்பாத்துரைகள் நாம் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒரு பாகம் மட்டுமேட.

இந்த அளவிற்கு கதையை பிரித்து மேய உங்களால்தான் முடியும் மேலதிகமாக எதையும் எழுத தேவையில்லை

நாரதர் இவர்களை எனக்கும் உங்களிற்கும் ஏன் மற்றையவர்களிற்கும் தெரியும். எமது சமூக உடகம் என்பதிலேயே யார் ??என்பது பிரச்சனை நீங்கள் உங்கள் சமூக ஊடகம் எது என்பதை தெளிவாக சொல்லுங்கள் அந்த ஊடகத்திலேயே நான் பிரசுரிக்கிறேன். நன்றி வணக்கம்.

உங்கள் வலைப் பக்கம் மற்றும் முகனூல் எனப் பல சுதந்திரமான சமூக ஊடகங்கள் இருக்கின்றன தானே.இவற்றை பயன் படுத்தி நீங்களே முன்னர் பலரைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள் தானே? உங்களிடம் நியாயமான ஆதாரங்கள் இருக்கும் இடத்து எழுதமுடியும் தானே?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திட்ட அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள் மீண்டும் இன்னொரு கதையோடு சந்திப்போம் அதுவரை நன்றி வணக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.