Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா கசாப்பினைத் துாக்கிலிட்டுள்ளது

Featured Replies

[size=4]2001 ஆம் ஆண்டு டெல்லி பார்லிமெண்டை தாக்கியவரை [/size] [size=4] தூக்கில் போட கேட்கிறார்கள் <_<[/size]

  • Replies 68
  • Views 4.1k
  • Created
  • Last Reply

[size=4] தூக்கு மேடை ஏறும் முன்பு கசாப் கூறியது என்ன?

புனே: அல்லாஹ் மீது ஆணையாக, இது போன்ற தவறை நான் மறுபடியும் செய்ய மாட்டேன் என்பது தான் கசாப் சாகும் முன்பு கூறிய வார்த்தைகள்.

பாகிஸ்தான் தீவிரவாதியான அஜ்மல் கசாப் புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிடும் முன்பு அவனின் கடைசி ஆசையைக் கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை என்றான். ஆனால் தூக்கு மேடை ஏறும் முன்பு அவன் கூறுகையில், அல்லாஹ் மீது ஆணையாக மறுபடியும் இது போன்ற தவறை செய்ய மாட்டேன் என்று தெரிவி்த்துள்ளான்.

முன்னதாக கடந்த 12ம் தேதியே கசாபிடம் அவனது தூக்கு தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவன் இந்த தகவலை தனது தாயிடம் தெரிவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளான்.

இந்நிலையில் கசாபின் தூக்கு குறித்து எழுத்தாளர் சோ கூறுகையில்,

தீவிரவாதி கசாபை தூக்கிலிட்டது சரி தான். இது அவசியம் என்று நினைக்கிறேன். சில கொடூர குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். குற்றங்களுக்கு சரியான தண்டனை அளிக்காத சமூகம் கட்டுப்பாட்டை இழக்கும். என்னைப் பொறுத்தவரை கசாபை தூக்கிலிட்டது சரியே. இந்த தூக்கு தண்டனை ரகியமாக வைக்கப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. இதில் ரகசியம் இருப்பதாகவும் தெரியவில்லை என்றார்.

தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன் கூறுகையில்,

தனது உறுப்பு நாடுகளுக்கு மரண தண்டனையே கூடாது என்று ஐ.நா. தீர்மானம் கொண்டு வரவிருக்கையில் கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர அவசரமாக கசாபை தூக்கிலிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மனித நேயத்திற்கு எதிரானது.

காந்தி பிறந்த நாட்டில் இன்னும் மரண தண்டனையை வைத்திருப்பது அவமானச் செயலாகும். மும்பை தாக்குதல்கள் மிகக் கொடூரமானது. அந்த செயலைக் கண்டிக்கிறேன். ஆனால் அதில் தொடர்புடைய குற்றவாளியை சிறையில் வைத்து சீர்திருத்த வேண்டுமே தவிர தூக்கிலிடக் கூடாது.

மரண தண்டனை உலகம் முழுவதும் ஒழிக்கப்படவிருக்கிறது. பிற நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா நடந்துகொள்ள வேண்டும். மரண தண்டனையை மனித நேயம் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலி: தூக்கு கண் துடைப்பா?

புனே: தீவிரவாதி கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அவனை தூக்கிலிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு என்றும் தகவல் கள் வெளியாகி வருகின்றன.

26/11 தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடும் செய்தி பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை கசாப் தூக்கு செய்தி கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இந்நிலையில் கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அதை மறைத்து அவனை தூக்கிலிட்டுவிட்டதாக தெரிவிப்பது வெறும் கண்துடைப்பே என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் உண்மை என்பது போல கசாபை தூக்கிலிட்ட கையோடு சிறைக்குள்ளேயே அவனது உடலை புதைத்துவிட்டனர்.

இது குறித்து மக்கள் டுவிட்டரில் கூறியிருப்பதைப் பார்ப்போம்,

1. கசாபுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகியது. உடல் நலம் பாதிக்கப்பட்டவரை தூக்கிலிட இந்திய சட்டம் அனுமதிக்கிறதா?

2. கசாப் டெங்குவால் இறந்தானா? அரசின் அதிவேக நடவடிக்கை அதை மறைக்கத் தானா?

3. கசாப் டெங்குவால் இறந்திருக்கக்கூடும். ஆனால் அரசோ அவனைத் தூக்கிலிட்டதாகக் கூறுகிறது.

4. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கசாபுக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. கசாப் டெங்குவால் இறந்தானா அல்லது அரசு தூக்கிலிட்டதா?

கசாப் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவதாக அண்மையில் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் அவனுக்கு சாதாரண காய்ச்சல் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே கசாப்தூக்கிலிடப்பட்டிருந்தால் அவனது உடலை புகைப்படம் எடுத்து ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

கஸாப் தூக்கால், சரப்ஜித் சிங் கருணை மனுவை பாக் அதிபர் நிராகரிக்க வாய்ப்பு!

டெல்லி: அஜ்மல் கஸாப் தூக்கிடப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய மரண தண்டனைக் கைதி சரப்ஜித் சிங்கின் கருணை மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக இஸ்லாபாத் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1990-ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்குள் ஊடுருவி உளவு பார்த்ததாகவும், குண்டு வெடிப்புக்கு சதி வேலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்.

ஆனால் குடிபோதையில் வழி தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்துவிட்டேன் என்பதுதான் சரப்ஜித் சிங்கின் வாதம். பொய்க்குற்றச்சாட்டின் கீழ் சரப்ஜித்சிங் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது என்கின்றனர் அவரது உறவினர்கள்.

கடந்த 21 ஆண்டுகளாக சரப்ஜித் சிங் பாகிஸ்தான் சிறையில் இருந்து வருகிறார். தன்னை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு சரப்ஜித் சிங், பாக் அதிபர் சர்தாரிக்கு சமீபத்தில் கருணை மனு சமர்ப்பித்துள்ளார்.

இந்த மனு அதிபரின் பரிசீலனையில் இருப்பதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறியிருந்தன. இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியான அஜ்மல் கஸாபை இன்று காலை தூக்கில் போட்டுவிட்டது இந்தியா.

இது சரப்ஜித் சிங்கின் கருணை மனுவுக்கு எதிராக அமைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கஸாபை தூக்கிலிட்டதால், இப்போது சரப்ஜித் சிங்கின் கருணை மனுவை அதிபர் சர்தாரி நிராகரித்துவிட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.[/size]

http://tamil.oneindia.in

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகள் நிழல் அரசை நிகழ்த்தி பல சமூக விரோதிகளை திருத்துவதற்கான இடம் (பள்ளி) அவர்களால் நடாத்தப்பட்டுள்ளது. தேசதுரோகிகள் (அரசுக்கு காட்டிக்கொடுத்தோர்) மரண தண்டனைக்கு உள்ளானார்கள்.திருந்துவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டும் திருந்தாதவர்கள் சமூகத்துக்குள் திருப்பி அனுப்பப்பட முடியாது.

உலகின் சனநாயக நாடாக மதிக்கப்படும் அமெரிக்காவின் ரெக்சஸில் வருடத்துக்கு கொல்லப்படும் கைதிகளின் எண்ணிக்கை கீழே

http://www.deathpena...and-region-1976

ஏன் இவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால் சமூகத்துக்குள் திருப்பி விடப்பட்டால் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவர்கள் என்பதால் ஆகும்.

போன வாரம் பிரான்சில் நடந்தது

மனைவியை பலமாக தாக்கியவருக்கு 4 மாதம் சிறைத்தண்டனை கிடைத்தது.

அவர் வெளியில் வந்து

தனது இரு பிள்ளைகளைக்கொன்று (ஐந்து வயது மற்றும் சில மாதங்கள்)

ஒன்றை சாதாரண குளிர்பெட்டிக்குள்ளும்

மற்றையதை அதி கூடிய குளிர்ப்பெட்டிக்குள்ளும் வைத்துவிட்டு மனைவியையும் கொன்று குளிக்கும் தெதாட்டிடிக்குள் போட்டுவிட்டு போய் விட்டார். ஆளைத்தேடுகிறார்கள். (துனிசியாவைச்சேர்ந்தவர்)

எனதுது கேள்வி என்னவென்றால்

இனி பிடித்து இவருக்கு 40 மாத தண்டனையா?

அல்லது வெடியா தீர்வு...........???

Edited by விசுகு

பக்கிஸ்த்தானிய பஞ்சாப் மாநிலத்தில் ஃபரிட்கொட் என்னும் கிராமத்தில் பிறந்த அஜ்மல் கசாப் 2006 நவம்பர் 26-ம் திகதி மும்பையில் லஷ்கர் இ தொய்பா என்னும் பக்கிஸ்தானிய தீவிரவாத அமைப்பினர் நடாத்திய துணீகரத் தாக்குதலில் பங்க்கேற்ற பத்துப் பேரில் தப்பிய ஒரேஒருவராகும். அஜ்மல் கசாம் 21/11/2012 காலை இந்திய நேரப்படி 7.30இற்கு புனேயில் உள்ள யெர்வாடாச் சிறைச்சாலையில் இரகசியமாகத் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டான்.

கசாப்புக்கு தூக்கு . இந்திராகாந்தி தன் பாதுகாவலர் களால் சுட்டுக் கொள்ளப் பட்ட போது , இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் , படுகொலை செய்யப் பட்டனரே , என்ன தண்டனை அந்தக் கொலை காரர்களுக்கு ? "

[size=4]கசாப் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். [/size]

இந்த இந்திய மொடேன் காந்திகளின் மனநிலை இப்படியிருக்க, இலங்கையில் தமிழர்களை இந்திய இராணுவம் கொலை செய்தது என்று கத்தி எந்த வடக்கு அரசியல் வாதியின் காதுகளில் அது கேட்கும்?

Edited by மல்லையூரான்

[size=5]கசாப் தூக்கும், பாகிஸ்தான் ஊடகங்களும்[/size]

[size=4]பாகிஸ்தான் ஊடகங்களோ இது குறித்து அவ்வளவாக செய்தி வெளியிடவில்லை. பாகிஸ்தானின் முன்னணி செய்தி சேனலான ஜியோ டிவியின் இணையதளத்தில் கசாபை தீவிரவாதி என்று குறிப்பிடாமல் மும்பை தாக்குதல் கன்மேனை இந்தியா தூக்கிலிட்டது என்று செய்தி வெளியாகியுள்ளது.[/size]

[size=4]“அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்: இந்திய ஊடகங்கள்” என்று பாகிஸ்தான் நாளிதழான டான் செய்தி வெளியிட்டுள்ளது. [/size]

[size=4]மும்பை தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அஜ்மல் அமிர் கசாபின் கருணை மனுவை அந்நாட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததையடுத்து அவன் இன்று காலை இந்திய சிறையில் தூக்கிலிடப்பட்டான் என்று டான் செய்திகள் தெரிவிக்கின்றன.[/size]

[size=4]தி நியூஸ் இன்டர்நேஷனலில், இந்தியாவில் அஜ்மல் கசாப் சாகும்வரை தூக்கிலிடப்பட்டான் என்று கூறப்பட்டுள்ளது.[/size]

[size=4]தி நேஷன் இணையதளத்தில் முக்கியத்துவம் இல்லாத இடத்தில் மும்பை தாக்குதல் கன்மேன் கசாப் தூக்கிலிடப்பட்டான் என்ற செய்தி உள்ளது. [/size]

[size=4]தி டெய்லி டைம்ஸ் தனது இணையதளத்தில் இது குறித்து எந்த முக்கியத்துவம் வாயந்த செய்தியையும் வெளியிடவில்லை. [/size]

[size=4]பாகிஸ்தானின் அதிகாரப்பூரவ ஊடகமான பிடிவியின் இணையதளத்தில் கசாப் தூக்கு குறித்து ஒரு செய்தி கூட இல்லை.[/size]

[size=4]பிபிசியில் மும்பை தாக்குதல் கன்மேன் தூக்கிலிடப்பட்டான் என்பது தான் அதிகம் ஷேர் செய்யப்பட்ட செய்தி ஆகும். இன்று நண்பகல் வரை வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஹஃப்பிங்டன் போஸ்ட்டில் கசாப் பற்றி ஒரு செய்தி கூட இல்லை. மேலும் நியூயார்க் டைம்ஸ் காலை 11.30 மணிக்கு தான் கசாப் தூக்கு பற்றி ஒரேயொரு செய்தி வெளியிட்டுள்ளது.[/size]

[size=4]பாகிஸ்தான் தீவிரவாதியான கசாப் ஒரு ஹீரோ என்றும், அவரது மரணம் மேலும் பல தாக்குதல்களை நடத்த ஊக்குவிக்கும் என்றும் லஷக்ர் இ தொய்பா அமைப்பு தெரிவித்துள்ளது.[/size]

[size=4]அல்லாஹ் மீது ஆணையாக, இது போன்ற தவறை நான் மறுபடியும் செய்ய மாட்டேன் என்பது தான் கசாப் சாகும் முன்பு கூறிய வார்த்தைகள்.[/size]

http://www.alaikal.com/news/?p=117530

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கசாப் தூக்கும், பாகிஸ்தான் ஊடகங்களும்

அடக்கி வாசிக்கின்றார்கள்..........பின்விளைவு பயங்கரம்....இந்தியன் சட்டரீதியாக ஒரு பாகிஸ்தானியை தூக்கில் போட்டது அவர்களுக்கு வரலாற்றுரீதியான கறை.

  • கருத்துக்கள உறவுகள்

யாரையோ போட்டு போட்டார்கள் சரி ஓக்கே.. பதில் நடவடிக்கை இன்னும் காணோமப்பா.. சரி விரைவில் எடுப்பார்கள் என்று நம்புவம் உலகத்தின் மக்கள் தொகை குறைஞ்சா சந்தோசம் தான் :icon_idea:

யாரையோ போட்டு போட்டார்கள் சரி ஓக்கே.. பதில் நடவடிக்கை இன்னும் காணோமப்பா.. சரி விரைவில் எடுப்பார்கள் என்று நம்புவம் உலகத்தின் மக்கள் தொகை குறைஞ்சா சந்தோசம் தான் :icon_idea:

[size=4]அடுத்த முறை பெரியளவில் தாக்குதல் நடக்கலாம் என்கிறீர்களா?? :rolleyes:[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஆசியாவின் வல்லரசு இந்தியா என்பது 10 பேர் ஆயுதங்களுடனும் GPS உடனும் இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பையில் தாக்குதல் நடத்துதல் என்பதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அஜ்மல் கசாப், 21, என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.பாதுகாப்பு மிக்க, மும்பை, ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த, கசாப்புக்கு, 2010 மே, 6ல், செஷன்ஸ் கோர்ட், தூக்கு தண்டனை விதித்தது. அந்த தண்டனையை, மும்பை உயர் நீதிமன்றம், 2011 பிப்ரவரி, 21ல் உறுதி செய்தது. உச்ச நீதிமன்றம், கசாப்பை தூக்கிலிட, இந்த ஆண்டு, ஆகஸ்ட், 29ல் பச்சைக்கொடி காட்டியது."உலகின் சிறந்த ஜனநாயக நாடு' என்பதை பறைசாற்றும் விதமாக, கொலையாளியாக இருந்த போதிலும், பிடித்த உடனே கொல்லாமல், சிறையில் அடைத்து, கசாப்புக்கு அனைத்து வாய்ப்புகள், வசதிகள் வழங்கப்பட்டன.

இது தினமலரில் வந்த ஒரு செய்தியின் ஒரு பகுதி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. இவனுக்கு எல்லாம் சீர்திருத்தம் சரிவராது. மரணதண்டனையை நிச்சயமாக ஆதரிக்கிறேன். மக்களின் வரிப்பணத்தில் சிறையில் இருந்து திண்டு கொழுப்பதை விட சாவது மேல். தீவிரவாதிகளை மன்னித்து வெளியிலே விட்டால் இன்னும் பெரியலேவலிலே அடுத்த தாக்குதலை திட்டமிடுவார்கள். ஆயுள் கைதியாக உள்ளே வைத்திருந்தால், வேறு பிரபலங்களை, விமானங்களைப் பணயமாகக் கடத்தி பேரம் பேசுவார்கள். இவர்கள் உயிரோட இருந்தும் என்ன பலன்.

  • கருத்துக்கள உறவுகள்

மும்பை: புதன்கிழமை அஜ்மல் கசாபுக்கு முக்கிய நாளாக அமைந்து விட்டது. பயங்கரவாத தாக்குதலை நடத்த கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி புதன் கிழமையன்று மும்பை வந்த கசாப்புக்கு , அதே புதன் அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு 26ம் தேதி பயங்கரவாத தாக்குதலில் கசாப் உள்ளிட்ட பயங்கரவாத குழுவினர் ஈடுபட்டனர். அன்று இரவே கசாப் கைது செய்யப்பட்டான்.

Dinamalar

புதுடில்லி: கசாப் தூக்கு நிறைவேற்றப்பட்டது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில், கசாப் தூக்கில் போடுவதை மத்திய உள்துறை அமைச்சகம் ரகசியமாக வைத்திருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கூட தகவல் தெரிவிக்கவிப்படவில்லை. நானும் கசாப் தூக்கு குறித்து சோனியாவிடம் கூறவில்லை. தூக்கு தண்டனை குறித்து சிறிய குழுவுக்கு தான் தெரியும் என கூறினார்.

புதுடில்லி: கசாப் தூக்கு தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், கசாபுக்கு அதிகபட்ச தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு சோக சகாப்தம் (மும்பை தாக்குதல்) முடிவுக்கு வந்துள்ளது. மும்பை தாக்குதலில் பலியான 166 பேரின் உயிர்களை திரும்ப கொண்டு வர முடியாது. ஆனால் கசாப் தண்டனை மூலம் அவர்களுக்கு திருப்தி கிடைக்கலாம் என கூறினா

அட நம்ம ஜனநாஜக வாதிகள் நல்லா பேசுறாங்க.

அதே போன்று தான் நாங்க செய்வதும் எங்க போராட்டமும் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் பயங்கர வாதமா தெரிஞ்சிருக்கும். அவங்க பத்திரிகைகள் அப்பிடி பிரச்சாரம் செய்திருக்கும். எங்கட அழிவும் சரியா பட்டிருக்கும் அவங்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அஜ்மல் கசாப், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரித்கோட் என்ற கிராமத்தில் 1987, செப்.,13ம் தேதி பிறந்தான். முழுப்பெயர் முகமது அஜ்மல் அமீர் கசாப். பெயர் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பல பெயர்களில் இவன் அழைக்கப்பட்டான். பெற்றோர் ஷாபன் கசாப், நூர் இலாஹி. தந்தை பானி பூரி வியாபாரி. கசாபுக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.2005ம் ஆண்டு, தந்தையுடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறினான். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தான். இவனுடன், 24 பேருக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு, பின், படிப்படியாக நவீன ஆயுதங்களை கையாளுதல், இலக்கை தாக்குதல், கடலில் பயணம் செய்தல், நீச்சல், பாய்மர படகை இயக்குதல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன.பயிற்சி பெற்ற குழுவிலிருந்து, சிறந்த 10 பேரை தேர்வு செய்து, மும்பை தாக்குதலை நடத்தினர். இதற்காக கசாப்புக்கு, 1.5 லட்சம் ரூபாய்

கொடுக்கப்பட்டது.

புனே: பயங்கரவாதி, அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டவருக்கு, 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தூக்கிலிட்டவர் யார் என்பது பற்றிய தகவல், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதி அஜ்மல் கசாப், தூக்கிலிடப்பட்டது குறித்து, மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள, எரவாடா சிறை வட்டாரங்கள் கூறியதாவது:கசாப், தூக்கு நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கைக்கு, "ஆபரேஷன்-எக்ஸ்' என, பெயரிடப்பட்டிருந்தது. தூக்கிலிடுவதற்காக, கசாப்பை, மும்பையிலிருந்து, புனேக்கு அழைத்து வரப்பட்டது தொடர்பான, தகவல் பரிமாற்றங்களை, மகாராஷ்டிரா போலீசார், ரகசியமாக கையாண்டனர்.எந்த சூழ்நிலையிலும், தங்களின் தகவல் பரிமாற்றத்தின் போது, கசாப்பின் பெயரை, அவர்கள் குறிப்பிடவில்லை. "சி-7096' என்ற எண்ணை, ரகசிய குறியீடாக பயன்படுத்தினர். கசாப்பை, தூக்கிலிட்டவரை பற்றிய விவரங்களும், ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. தூக்கிலிட்டவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.தூக்கிலிடப்படுவதற்கு, சில நிமிடங்களுக்கு முன் தான், "நாம், கசாப்பை தூக்கிலிடப் போகிறோம்' என்பது, சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியும். கசாப்பை தூக்கிலிடுவதற்காக, அவருக்கு, 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.மீரட் மத்திய சிறையில், கைதிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொண்டிருந்த மானு சிங் என்பவர், "கசாப்பை தூக்கிலிட, ஆர்வமாக இருக்கிறேன்.

இதற்காக, சம்பளம் எதுவும் வாங்கப் போவது இல்லை' என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது ஆசை நிறைவேறவில்லை. கடந்தாண்டு, மே மாதம், மானு சிங் இறந்து விட்டார்.அதேபோல், மேலும் பலர், தாங்களாகவே முன் வந்து, கசாப்பை தூக்கிலிட விருப்பம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, எரவாடா சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamalar

Edited by SUNDHAL

தனிப்பட்ட ரீதியில் மரண தண்டனையை ஆதரிக்கின்றேன். பொதுவான குற்றம் செய்கின்றவர்களுக்கு சிறைத் தண்டனை என்பது சீர்திருந்த உதவலாம் (சிறை அமைப்பும், அரசுகளின் பொறுப்பணர்வையும் பொறுத்தது. இலங்கைச் சிறையில் இருந்து வெளிவரும் குற்றவாளி முன்னை விட மோசமான குற்றவாளியாகவே வெளிவருவது பொதுவான அம்சம்). ஆனால் திட்டமிட்டு பயங்கர குற்றம் செய்பவர்களுக்கு முதலில் சில வருட கடூழியச் சிறையும் பின் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டனையும் தான் மிகச் சிறந்த தண்டனை.

குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்கின்ற மிருகங்களுக்கு, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்ற மற்றும் உற்பத்தி செய்கின்றவர்களுக்கு, மக்களின் பணத்தை / வரிப்பணத்தை சுருட்டி வைத்து இருப்பவர்களுக்கு கடூழியச் சிறையும், கொடுமையான மரண தண்டனையும் தான் குறைந்த பட்ச தண்டனைகளாக அறிவிக்க வேண்டும். Period.

கசாப் என்ன தவறு செய்தான்?

மரணதண்டனையுடன் எனக்கு உடன்பாடில்லை ,சிலவேளை யோசிக்க ஆயுள்தண்டனை மரண தண்டனையை விட மோசம் போலவும் இருக்கும் .

மாநிலத்திற்கு மாநிலம் , நாட்டுக்கு நாடு சட்டங்களை அவனவன் இஸ்டத்திற்கு இயற்றி வைத்திருக்கின்றான் .இதில் இந்தியாவை வந்து நோண்டுவதில் பயனேதுமில்லை .எத்தனை அமெரிக்க மரணதண்டனைகள் பார்த்துவிட்டோம் .சதாமையை live ஒளிபரப்பி தூக்கிய படுபாவிகள் அவர்கள் .

-------

[size=4]சிங்களவர்களை தான் இதற்குள் இழுக்கவேண்டும். 1956 ஆம் ஆண்டிலிருந்து அண்மையில் கனடாவில் இருந்து போனவரின் ஆணுறுப்பையே வெட்டி மரண தண்டனை தருகிறார்கள். [/size]

.எத்தனை அமெரிக்க மரணதண்டனைகள் பார்த்துவிட்டோம் .சதாமையை live ஒளிபரப்பி தூக்கிய படுபாவிகள் அவர்கள் .

அமெரிக்கா அல்ல தூக்கியது. ஒளிப்படம் கை தொலைபேசியில் திருட்டுதனமாக எடுக்கப்பட்டது. அரச சம்பந்தம் இல்லாதது.

தூக்கு போன்ற சிலவற்றில் அமெரிக்கா மற்றைய முன்னேறிய நாடுகளுடன் ஒத்துழைப்பதில்லை.

கசாப் என்ன தவறு செய்தான்?

கசாப் தொடர்பாக எனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை.கசாப்பின் நாடும் , அவருக்கு தண்டனை கொடுத்த நாடும், எம்மக்களின் அழிவில் முன்னின்று நடத்தியவர்கள். ஒரு பார்வையாளனாகவே இதில் இருக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கசாப் என்ன தவறு செய்தான்?

கசாப்பும் அவனது 9 பாகிஸ்தானிய சகாக்களும் இந்தியா, மும்பாய்க்குள் ஆயுதங்களுடன் ஊடுருவி 160க்கும் மேற்பட்ட இந்திய பொதுமக்களை சுட்டுக்கொன்றார்கள். பின்னர் இந்திய பொலிஸ்/இராணுவத்துடனான மோதலில் ஏனைய 9 சகாக்களும் கொல்லப்பட கசாப் உயிருடன் பிடிபட்டார். இந்தியா தன்னுடைய நாட்டு மக்களை கொன்ற கசாப்புக்கு தூக்கு தண்டனை வழங்கியது.

கசாப் தொடர்பாக எனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை.கசாப்பின் நாடும் , அவருக்கு தண்டனை கொடுத்த நாடும், எம்மக்களின் அழிவில் முன்னின்று நடத்தியவர்கள். ஒரு பார்வையாளனாகவே இதில் இருக்கின்றேன்.

இதுதான் எனது உணர்வும் ...........

  • கருத்துக்கள உறவுகள்

புதுடில்லி: சிறிது நாள் அமைதிக்குப்பின் மத்திய அரசுக்கு எதிரான தனது புகார்களை மீண்டும் கூறத்துவங்கியுள்ளார் சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவால்.

மும்பை தாக்குதல் சம்பவம் நடந்து 4வது ஆண்டு நினைவு தினம் இன்னும் சில நாட்களில் அனுசரிக்கப்படவுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் நேற்று தூக்கிலிடப்பட்டான். இந்நிலையில், சமூக சேவகரான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு மீது புதுப்புகார்களை கூறியுள்ளார். டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது, தங்களது உயிரையும் துச்சமாக மதித்து பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய கமாண்டோ படையினரை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்பது அவரது புகாராகும்.

இந்த சந்திப்பின் போது, அவருடன் மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது, பயங்கரவாதிகளுடன் போராடிய தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த கமாண்டோ லான்ஸ் நாயக் சுரேந்திர சிங் என்பவரும் உடனிருந்தார். சம்பவத்தின் போது, சுரேந்தர் தனது கேட்கும் திறனை இழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை மத்திய அரசு தனக்கான உதவிகள் எதையும் வழங்கவில்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் போது காயமடைந்த 11 கமாண்டோக்களுக்கு வழங்கப்பட்ட தொகையில் ஒரு பகுதி மட்டுமே தனக்கு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கெஜ்ரிவால் மற்றும் சுரேந்தரின் புகாரை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனிஷ் திவாரி, சுரேந்தருக்கு ரூ. 31 லட்சம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், பணியின் போது காயமடைந்ததால் அவருக்கு மாதம் ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்து கேட்கும் திறனை இழந்த சுரேந்தர் பின்னர் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் பணியில் சேர்ந்து 15 ஆண்டுகள் ஆகாததால் அவருக்கு ஓய்வுக்குப்பின்னான பணிக்கொடைகள் வழங்க முடியாது என இந்திய ராணுவம் தெரிவித்து விட்டது. ஆனால் மத்திய அரசோ சுரேந்தருக்கு ரூ. 31 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. சுரேந்தர் தனக்கு அரசு ரூ. 2 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளதாக கூறுகிறார். எது எப்படியாகிலும்மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது மக்களுக்காக போராடியவர்கள் மதிக்கப்படவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

கெஜ்ரிவால் கூறுகையில், சுரேந்திர சிங்கிற்கு மத்திய அரசு ரூ.31 லட்சம் கொடுத்திருப்பதாக சொல்கிறது. ரூ.31 லட்சம் கொடுத்தது காயமடைந்த 11 பேருக்கும் தான், சுரேந்திர சிங்கிற்கு மட்டும் அல்ல. அவர் பெற்றது வெறும் ரூ.2.5 லட்சம் தான். உண்மையில் சுரேந்தர் மாதம் ரூ.25 ஆயிரம் பெறுகிறார் என்பதை இந்த அரசு நிரூபிக்க தயாரா...? மீறி நிரூபிக்க தவறினால் பதவியில் இருந்து விலக தயாரா என்று கேள்வியுள்ளார். மேலும் தேசத்தை காப்பாற்ற போராடிய வீரர்களுக்கே இந்த நிலைமை என்றும், இதன்மூலம் இந்த அரசு தேசத்தை‌ தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Dinamalar

கசாப் தொடர்பாக எனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை.கசாப்பின் நாடும் , அவருக்கு தண்டனை கொடுத்த நாடும், எம்மக்களின் அழிவில் முன்னின்று நடத்தியவர்கள். ஒரு பார்வையாளனாகவே இதில் இருக்கின்றேன்.

எனது அபிப்பிராயம் முப்பாயில் கசாப் என்ன செய்தானோ அதே தான் கொழும்பிலும் செய்தார்கள் ஆனால் செய்கின்ற விதமும் செய்விக்கின்றவர்களின் சிந்தனையும் வேற வேற தோற்றம் .

கொழும்பில் ஒரு இராணுவ அதிகாரியை இலக்கு வைத்து தாக்குதல் செய்யப்படும் போது 100 பேர் இறந்தாலும் கொலையாளியின் நோக்கம் இராணுவ அதிகாரியே என்று செஒவதன் மூலம் கொளையாளிக்கு ஒரு மறைமுக அங்கிகாரம் கிடைக்கிறது ஆனால் கசாப்பை இஅயக்கியவர்களுக்கு அப்படியான ஒரு அங்கிகாரமும் தேவையில்லை 100 கோடி மக்களில் 166 பேரை கொல்வதால் இந்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம் எனபதாகவும் இருக்கலாம். மக்கள் என்பது எங்கையும் மக்கள் தான் அதே போல் போராளி என்பவன் எங்கையும் போராளி தான் அதற்க்கு மதமும் மொழியும் தான் வேறுபாடு ஆனால் சொல்லிக் கொள்கின்ற காரணங்கள் ஒன்று.

நோர்வே வரலாற்றிலேயே மோசமான கொலையாளியான ப்ரெய்விக் பிடிபட்ட பின்பு 'இன்னும் அதிகமானோரைக் கொல்ல முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்' என்றார். நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அறிவித்தபோது மரண தண்டனைக்கு எதிராக நோர்வேக்காரர்கள் சொன்ன நியாயம் இதுதான்: ப்ரெய்விக் பைத்தியக்காரனாக இருக்கலாம்; ஒட்டுமொத்த நோர்வேயும் அப்படி இருக்க முடியாது!

-Ilamaran Mathivanan via FB

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.