Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்"

Featured Replies

எத்தினை தரம் கேட்டபாடல் என்றபோதும், சில பாடல்களிற்குள் இருக்கும் சில அரிய விடயங்கள் எப்போதாவது தான் மனதில் அறையும். பல விடயங்கள் புரியப்படாதே இருந்துவிடும்.

அலைகள் ஓய்வதில்லைப் படப்பாடலான 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாடலை, நேற்றுக் கேட்டபோது, பின்வரும் வரி எவ்வாறோ என்கவனத்தைப் பிடித்தது.

உங்கள் பார்வையில் இந்த வரியின் அர்த்தம் என்ன என்று அறியத் தாருங்கள்.

'கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்'

இந்தவரியினைப் பற்றி இந்தளவு யோசிக்க வைத்தது பாடலின் இசை என்றே தோன்றுகின்றது.

இவ்வாறான வேறு ஏதாவது அழகிய வரிகள் தெரிந்தால் பாடலின் பெயருடன் பதியுங்கள். நன்றி.

"பிறந்த இடத்தை மறந்து வேறு இடத்திற்கு போகின்றது " என்பதுதான் ஒரு வரி அர்த்தம் என நினைக்கின்றேன் அலைகள் ஓய்வதில்லை பாட்டுக்கள் அனைத்துமே அற்புதத்திலும் அற்புதம் .கேட்டுக்கொண்டே இருக்கலாம் .

எனக்கு மிக பிடித்தது "காதல் ஓவியம் பாடும் காவியம் ".

அழகிய பதிவு இன்னுமொருவன் தொடருங்கள்.

இன்று அதிகாலை highway இல் காரை இறக்குகையில் வானொலியில் ஒலித்தது இது "வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும் முகில் எடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பயிலும் ".

இந்த பாட்டு இன்றைய எனது நாளையையே இனிமையாக்கி சென்றுவிட்டிருக்கு போலிருக்கு .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

'கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்'

ஒருவரைக் கவர்வதற்காக அவர்களுக்குப் எது எது பிடிக்கும் என்று நாங்களே கற்பனை செய்து அவற்றை மட்டும் வெளியில் காட்டி பிடிக்காதவற்றை மறைப்பதில்லையா! அது போல தேனீக்களை கவர்வதற்கு அழகான இதழ்களை மட்டுமே பூக்கள் காட்டும். அழகற்ற, பூக்களைத் தாங்கி நிற்கும் காம்பை மறைக்கும் என்று நேரடியான அர்த்தத்தைதான் நான் புரிந்துகொண்டேன்.

எனக்கு உடனடியாக நினைவில் வரும் பாடல்வரிகள்:

முகிலினங்கள் அழுகிறதே முகவரிகள் தொலைந்தனவோ

முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ

(இளைய நிலா பொழிகிறதே பாடலில் வரும் வரிகள், படம் உதயகீதம் என்று நினைக்கின்றேன்)

தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்

(இன்னிசை பாடிவரும் இளங்காற்றுக்கு உருவமில்லை பாடலில் வரும் வரிகள், விஜய், சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இருந்து)

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

'கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்'

காம்பை விட்டுப் பிரிந்த மலர்கள்

மாலையாகிய பின்

காம்பை பற்றி யாரும் நினைப்பதும் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]முகிலினங்கள் அழுகிறதே முகவரிகள் தொலைந்தனவோ[/size]

[size=4]முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ[/size]

அழகான வரிகள்.

முகவரிகள் தொலைந்ததால்

முகம் தொலைத்து அழுகிறோம்

  • தொடங்கியவர்

நன்றி அர்யுன், கிருபன் மற்றும் கறுப்பி உங்கள் கருத்துக்களிற்கு.

முகிலினங்கள் அலைகிறதே...வரி உண்மையில் அழகானது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

"ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா" என்கிற பாடலில் வரும் வரி இது.. :rolleyes:

 

பூரண கும்பம் ஏந்தி நடந்தால்..

நூலிடை பாவம் வருந்தாதோ.. :lol:

நல்லதொரு வரி இன்னுமொருவன்.. பல வருடங்களுக்கு முன்னரே கவனித்து இருந்தேன் இந்த வரிகளை...

 

"பூவை எடுத்து ஒரு மாலத் தொடுத்து வச்சேனே சின்ன ராசா" என்ற பாடலைக் கேட்டு இருப்பீர்கள் என நினைக்கின்றேன். அதில் ஒரு வரி வரும்

 

'மஞ்சள் குளிக்கையில நெஞ்சு விரியுது என்று கொஞ்சம் அணைத்துக் கொள் ஐயா..."

 

http://youtu.be/tYzLPhMUTgE

 

 

 

 

எவ்வளவு வரிகளுக்கும் அப்பாலும் இன்றும் என் மனசை பிழியும் ஒரு வரி உண்டு. இதே அலைகள் ஓய்வதில்லை படத்தில் வந்த "விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே" எனும் பாடலின் பின்வரும் வரிகள்.

 

 

 

"
எனக்கு மட்டும் சொந்தம்
உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும்
எனது உயிர் கொதிக்கும் சத்தம்"

 

கொஞ்சம் chauvinism இருந்தாலும் அழகான வரிகள்...இதன் ஒவ்வொரு சொல்லாகவும் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு இருக்கின்றது

 

http://youtu.be/LHbY3WlUqU4

  • கருத்துக்கள உறவுகள்

"ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா" என்கிற பாடலில் வரும் வரி இது.. :rolleyes:

 

பூரண கும்பம் ஏந்தி நடந்தால்..

நூலிடை பாவம் வருந்தாதோ.. :lol:

 

அடுத்து வரும் பெண்குரல்.. :D

 

காதலன் கைகள் தாங்கி நடந்தால்.. :rolleyes:

பாரமும் கொஞ்சம் குறையாதோ.. :icon_idea:

'ஆயிரம் தாமரை' மிகவும் பிடித்த பாடல்
வார்த்தைகள் மறந்து போனாலும் விரும்பிய வரிகளில் சில.
 
'வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெரும் திருநாள் நிகழும் சேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்'
 
மனிதா மனிதா இனிஉன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்
விழியில் வழியும் உதிரம் முழுதும் உதிரம் முழுதும் உனதின் சரிதம் எழுதும்
சில ஆறுகள் மீறுதடா வரலாறுகள் மாறுதடா
பசியால் பல ஏழைகள் சாவது தேசியமானதடா இனித்
தேன் வரும் என்பதும் பால் வரும் என்பதும் கோசியம் ஆனதடா - இனி
சாட்டைகளே இங்கு தீர்ப்புகள் என்பது சூசகமானதடா

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இள மயிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இளமையிலே
 
பூவிலே மெத்தைகள் தைத்து
கண்ணுக்குள் மங்கையை வைப்பேன்
நீ கட்டும் சேலைக்குள் நூலாவேன் நான்
 
நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை
அய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்த்தை வருமா
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் புரிந்த அர்த்தம் இது தான், இன்னுமொருவன்!

 

'கள் வடியும் பூக்கள், தங்கள் காம்பை மறக்கும்"

 

காதல் உணர்வால் ஆட்கொள்ளப் பட்ட காதலர்கள், தங்களை வளர்த்து உருவாக்கியவர்களைக் கூட, தூக்கியெறியத் தயங்க மாட்டார்கள்! பொதுவாகத் தாய் தந்தையர் ( ஆனால், அலைகள் ஓய்வதில்லையில், அண்ணன்)!

இதைத் தான், கவிஞர் வைரமுத்து அவர்கள், தன்னை உருவாக்கிய காம்பையே, காதலுக்காக, அந்தப் பூ, மறந்து போகின்றது!

அந்தளவுக்குக் காதல் வலிமையானது, என்பதை அழகாகக் கூறுகின்றார்!

 

கள்                   - காதல் போதை 

பூக்கள்             -  காதலர்கள்

காம்பு              - பெற்றோர், அண்ணன்        

  • தொடங்கியவர்
இசைக்கலைஞன், நிழலி, தப்பிலி, புங்கையூரான் மிக்க நன்றி உங்கள் ரசனைகளைப் பகிர்ந்து கொணடமைக்கு.
 
பள்ளியில் சிறுவயதில் படித்த 'அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் ஆற்றும் சிறுகாற்றுக்காற்றாது தேய்ந்து' என்ற பாடலிற்குச் (நாலடியார்??) சவாலாக இன்னும் இனிமையாக இருக்கிறது இசைக்கலைஞன் இணைத்துள்ள வரிகள். 
 
நிழலியின் அருமையான முதலாவது வரிக்கும் அருமையான இரண்டாவது இணைப்பிற்கும் இடையே இரண்டையும் சேர்த்துப் பார்க்கையில் இன்னும் இனிமை அதிகரிப்பதாய் உணர்கிறேன். முதலாவது வரி தன்னைச் சார்ந்து மிகவும் நம்பிக்கையுடைய, தனது சிறப்புக்களை நன்கு உணர்ந்த, தன்னைத் தானே நேசிக்கும் ஒரு பெண்ணின் திடமான சிருங்கார வெளிப்பாடாக வருகிறது. அதே நேரம் தன்னை அணைக்கிறதுக்குக் கைக்கூலியா என்ன என்ற ரீதியில் தான் கரும்பு என்பது அவளிற்குள் மாறாமல் தொக்குநிற்கிறது. இரண்டாவது வரிகள், சிருங்காரரீதியில் முதலாவதற்கும் சற்றும் சழைக்காதவை என்னும் போதும் வெளிப்படுத்துபவரின் மனதுள் தன்னைச் சார்ந்த பாதுகாப்பின்மையினையும் சேர்த்து வெளிப்படுத்துவதால் என்னைப் பொறுத்தவரை chauvinism என்பதைக் காட்டிலும் ஒரு குழந்தை நிலையாக வெளிப்படுகிறது. அதாவது ஒரு புலியைக் கண்ட குரங்கின் வாழவிரும்பும் கத்தலாக, insecurity தோய்ந்த அடிப்படைநிலையில் வெளிப்படுகிறது. முதலாவதைக்காட்டிலும் இரண்டாவதன் பரிமாணங்கள் அதிகம் என்று படுகிறது. 
 
தப்பிலி இணைத்த அனைத்தும் அருமை. முன்னர் ஒரு பதிவில் விம்பம் பற்றிப் பேசியிருந்தோம், தப்பிலி சார்ந்து எனது மனதுக்குள் எப்பிடியோ இருக்கின்ற விம்பம் எண்பதுகளின் ஆரம்பத்தில் இருந்த தாடிவைத்த இயக்கப் பெடியளின் விம்பம். 
எல்லா வரிகளும் அந்த விம்பத்திற்கு அப்படியே ஒத்துப்போகின்றன.
 
புங்கையூரான் உங்கள் புரிதலும் ஏற்புடையதாய் இருக்கிறது. அர்யுனும் ஏறத்தாள இந்த கோணத்தில் தான் பேசியிருந்தார். கிருபன் 'மறக்கும்' என்பது உண்மையில் 'மறைக்கும்' என்பதை ஒத்துக்கொள்ளத் தைரியமற்றுக் கவிஞர் "மறக்கும்" என்று சமரசம் செய்துகொண்டார் என்ற கோணத்தில் பேசியிருந்தார். அதுவும் அழகாகவே இருக்கிறது.
 
'கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்' என்ற வரிசார்ந்து எனக்கு முதலில் ஏற்பட்ட புரிதல் இருவரும் sexually excited ஆன உச்ச நிலையில் அவர்கள் இருவரிற்கும் தாங்கள் தங்கள் இச்சையாக மட்டுமே தங்களிற்குள் ஆகிப்போயிருந்தார்கள் என்பது. அதாவது, தமது குடும்பம் பின்னணி என்பவை மட்டுமன்றி தமது உடலின் இதர தொழிற்பாடுகள் அங்கங்கள் என்பன எல்லாம் கூட மறைந்து ஒரே ஒரு இச்சையாக மட்டும் மொத்தமும் அவர்கள் அவர்களிற்குத் தெரிந்தார்கள் என்றே பட்டது. 'கள் வடியும்' என்ற அடைமொழி இந்த உச்ச நிலையினைக் குறிப்பதற்காக உபயோகப்பட்டு, "காம்பை மறத்தல்" என்பதன் வாயிலாக அந்தரத்தில் நிற்கும் 'கள்வடியும் பூக்கள்' என்று அவர்கள் இருவரும் தங்கள் இச்சையாக மட்டும் ஆகிப்போயிருந்தார்கள் என்று குறிப்பிடப்படுவதாகப் புரிந்து கொண்டேன். இதில் பூக்கள் என்ற பன்மை தான் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதால் இருவரையும் குறிக்கிறது. எனினும் இந்த வரிக்கு ஏகப்பட்ட புரிதல்கள் சாத்தியம் என்று தோன்றியதால் தான் இங்கு பதிந்தேன். பதிந்தது வீண்போகவில்லை.
 
என்ன ஒரு பிரச்சினை, sexually excited state என்பதைக் கண்ணியமாக ஆங்கிலத்தில் பேசிவிடலாம், தமிழ் படுத்தும்போது பொதுக்களத்தில் போடலாமா என்று சில சமயம் தோன்றுகிறது. எனது தனிப்பட்ட அபிப்பிராயம் ஒரு சமூகம் எதையும் பேசச்கூடிய வளர்ச்சி அடையவேண்டும். பேசாப்பொருள் என்பது பித்தலாட்டம் அல்லது நயவஞ்சகம் என்பது.இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்.. என்றால்..

காதல் போதையூட்டும் பெண் இங்கு பூவாக.. காதலனின் தீண்டலில் அவள் இதழோரம் வழியும் அமுதம் கள்ளாக அதனைப் பருக.. வரும் ஆண் வண்டாக.. அவன் தீண்டலில்.. பெண் மயங்கி அந்த ஆண் மடியில் வீழ்வாள்... அதற்கு மேலும்.. அவளால் சுயமாய் இயங்க முடியாது. அதாவது.. வண்டின் காமத்துத் தூண்டலில்.. தேன் ஆகிய கள்ளூற அதனை வண்டுக்கு ஊட்டி மகிழும் பூ.. அதன் காம்பின் இருப்பை காதல் போதையில் மறந்து நிற்கும்.. அதுபோல.. இவளும் ஆனால்... அதாவது பெண் ஆணின் தீண்டலில் மயங்கி இதழ் வழி கள்ளூற.. அவன் அதனைப் பருகும் வகைக்கு..அவன் மீது மயங்கிச் சாய்வாள் என்கிறது.. வைரமுத்துவின் காதல் காமத்துப் பால்..! அந்த வரிகள் வரும் காட்சியிலும் அது படமாக்கப்பட்டுள்ளதே..!

நான்.. கவிஞரின் கவி நயத்தை வியக்கிறேன். வைரமுத்துவும் என்னைப் போல..வேலை மிணக்கட்டு... பூவும் வண்டும் என்ன செய்யினம் என்று உட்கார்ந்திருந்து அவதானித்திருப்பாரோ..???! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் கருத்தைப் பார்க்கும்போது... :unsure:

 

Spoiler
நீண்டநாட்கள் தாக்குப்பிடிக்கமாட்டார் போலை இருக்கு.. :wub: 
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் கருத்தைப் பார்க்கும்போது... :unsure:

 

Spoiler
நீண்டநாட்கள் தாக்குப்பிடிக்கமாட்டார் போலை இருக்கு.. :wub: 

இதுக்கெல்லாம் மயங்கினா.. எல்லாம் கற்பனைக்கு மட்டுமே.

பெண்ணின் இதழில் ஊறுவது தேனும் அல்ல.. அமிர்தமும் அல்ல.. கள்ளும் அல்ல.. வெறும் எச்சில். பூவில என்றாலும் இனிக்கிற தேன் ஊறுவது உண்மை. அது கூட அங்க இல்ல. உவமைகள் எல்லாம் உண்மையானால்.. பால் நிலவை பிடிச்சு.. பாற்சாலை வைச்சிடலாம் இல்லையா..??!

கற்பனையில் மனிதன் வாழவில்லை என்றால்.. மனித இனம் பெருக முடியாது..! :)

[என்னை உயிரியலுக்கு அப்பால் சென்று கற்பனையில் கொஞ்சமும் சிந்திக்க விடமாட்டீங்க போல இருக்ககே.]

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கின் கருத்தைப் பார்க்கும்போது... :unsure:

 

Spoiler
நீண்டநாட்கள் தாக்குப்பிடிக்கமாட்டார் போலை இருக்கு.. :wub: 

 

நெடுக்கர், வெகு விரைவில், அதிவேக நெடுஞ்சாலையில், ஏறப்போகின்றார், என்பதையே அவரது அண்மைய பதிவுகளும், அடிக்கடி கோவிலுக்குப் போவதும் காட்டுகின்றன!

 

இதை, ஒரு தந்தை என்ற ஸ்தானத்தில் இருந்து, அவதானித்த, இசைக்கும் நன்றிகள்! :D

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணைமூடி நிமிடங்களை மறந்து நான் ரசிக்கும் பாடல் இது..கேட்கும் ஒவ்வொரு கணமும் அன்பின் எல்லைகளை உண்மைக்காதலினாலும் தொடமுடியும் என்பதை உணரவைக்கும்பாடல்...இதில் நான் ரசித்த வரிகள்..

"உயிர்மொழி நீயடி..உனக்கென நானெடி..

உயிர் போனாலும் போகாது நம் அன்பு சாட்சிகள்..."

பாடல்:-http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Nz6p5a_sQ-g

மழைப்பொழுதில் ஒரு மாலையில் நினைவுகளுடன் நனைந்தபடி பாசிபடிந்த யன்னலோரம் அதன் உக்கிப்போன மரச்சட்டங்களைபிடித்தபடி நின்றுகொண்டு கடந்தகாலங்களை எட்டிபார்ப்பதுபோலிருக்கும் இந்தபாடலை கேட்கும் ஒவ்வொரு தடவையும்..பிடித்தவரிகள்

"ஓடும் காலங்கள்...உடன் ஓடும் நினைவுகள்..

வழி மாறும் பயணங்கள்..தொடர்கிறதே..."

"காதலில் விழுந்த இதயம் மீட்கமுடியாதது..

கனவில் தொலைந்த நியங்கள் மீண்டும் கிடைக்காதது.."

பாடல்:-

கண்டிப்பாக இந்தப்பாடலை கேட்கும் ஒவ்வொருதடவையும் கிறங்கிப்போக காரணம் இதன் இசையும் வரிகளும்தான் என்று நினைக்கிறேன்..பிடித்த வரி..

"பறவைகள் பறந்து செல்ல...பள்ளம் மேடு வானில் இல்லை..

நீயும் நானும் பறவை ஜாதியே..நிம்மதிக்கு தடைகள் இல்லையே..

சொல்லுக்குள்ளே இருக்கும் பொருள்..சொல்லை விட்டு பிரிவதில்லை..

சோகமினி வருவதில்லையே..சூரியனில் இரவு இல்லையே.."

பாடல்:-

உசிர்கொடுத்த ஊரைவிட்டு அகதி வேசம் போட்ட வலியில் அடிக்கடி கேட்கும் பாடல்..பிடித்தவரிகள்..

"தழுவ சுற்றம் உண்டு...தாய்போல ஊரும் உண்டு...

கடல்தாண்டி பூமி உண்டு..மதம்தாண்டி சொந்தம் உண்டு..

உசிர்கொடுத்த மண்ணைவிட்டு போகாதிங்க..

இந்த ஊரைவிட்டு எங்கையும் போயி சாகாதிங்க.."

பாடல்:-

அப்படியே என்னைபற்றி உங்கள் மனதுள் இருக்கும் விம்பத்தையும் சொல்லி செல்லுங்கள் இன்னுமொருவன் அண்ணா :) ..இன்னும் இருக்கின்றன..நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்..

Edited by சுபேஸ்

 

 

'கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்' என்ற வரிசார்ந்து எனக்கு முதலில் ஏற்பட்ட புரிதல் இருவரும் sexually excited ஆன உச்ச நிலையில் அவர்கள் இருவரிற்கும் தாங்கள் தங்கள் இச்சையாக மட்டுமே தங்களிற்குள் ஆகிப்போயிருந்தார்கள் என்பது. அதாவது, தமது குடும்பம் பின்னணி என்பவை மட்டுமன்றி தமது உடலின் இதர தொழிற்பாடுகள் அங்கங்கள் என்பன எல்லாம் கூட மறைந்து ஒரே ஒரு இச்சையாக மட்டும் மொத்தமும் அவர்கள் அவர்களிற்குத் தெரிந்தார்கள் என்றே பட்டது. 'கள் வடியும்' என்ற அடைமொழி இந்த உச்ச நிலையினைக் குறிப்பதற்காக உபயோகப்பட்டு, "காம்பை மறத்தல்" என்பதன் வாயிலாக அந்தரத்தில் நிற்கும் 'கள்வடியும் பூக்கள்' என்று அவர்கள் இருவரும் தங்கள் இச்சையாக மட்டும் ஆகிப்போயிருந்தார்கள் என்று குறிப்பிடப்படுவதாகப் புரிந்து கொண்டேன். இதில் பூக்கள் என்ற பன்மை தான் பாவிக்கப்பட்டிருக்கிறது என்பதால் இருவரையும் குறிக்கிறது.

எனக்கும் இது மாதிரியான புரிதல்தான். பண்பாட்டிற்கு இணங்க கவிஞர் வார்த்தைகளை அளந்து கோர்த்துள்ளார் என நினைக்கிறேன்.

 

 

  • தொடங்கியவர்
நெடுக்காலபோவன், சுபேஸ் உங்கள் வருகைக்கும் இணைப்பிற்கும் நன்றி.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்" பால் வடியும் பருவம் வர பாலூட்டி வளர்த்தவர்களையே காலால் உதைக்கும் பருவம் இது.... எங்கடை ஊர்பாசையிலை சொல்லப்போனால் காமத்தாலைதான் காதல் வருது.......அந்த காமத்துக்கு கண்ணில்லை.அது எந்தவடிவிலும் வரும்...இடம் மதம் இனம் நிறம் பேதமில்லை...காமம் கொலை செய்யக்கூட தயங்காது....

தண்ணி போட்டவனின்ரை கால் எந்தபக்கம் நடக்கும் என்டது அவனுக்கு தெரியாது எண்டதைதான் பட்டு சொல்லுது. பாட்டு தத்துவங்கள் நிறைந்து என்றதிலும் பார்க்க உணர்வுகளை வெளியே கொட்ட முயல்கிறது என்பதுதான் கூடப் பொருத்தம் போல இருக்கு.

எனவே காம்பை மறக்கும் என்பதை நினைவை இழக்கும் என்று கொள்வது, வந்த இடத்தை, அடிதொடியை, சாதி மத உணர்வுகளை என்தை விட கவிதை தன்மையை கூட்டும்.

மேலும் பால்வடியும் வாய் என்னும் போது பால் உண்டு அதனால் கடவாயில் வழியும் பால் என்பது போல கள்வடியும் என்பதை கள்ளுண்டதால் வடியும் என்று கொள்ளலாம். இதனால் வழமையான கருத்தை புதுமையான முறையில் சொல்வதாகிறது.

இதை காதல் என்ற கள்ளுண்ட இளமையின் மயக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.

வீட்டுக்கிளியே கூண்டைவிட்டு தாண்டிவந்தியே..
ஒருகாதல் பாரம் ரெண்டு தோளில் ஏறும்..
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை..
ஒன்றை ஒன்று சூடும் இது பொன்வேளை
..
கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்..


ஆண் பெண் கலவி கொள்ளபோது (ஒன்றை ஒன்று சூடும் இது பொன்வேளை) போது இருவரும் தாய், தந்தை & சூழ்நிலையை மறந்திருப்பார்கள்.

 

கெட்ட எண்ணம்தான் வருகின்றது இதற்குமேல் :lol:

  • 3 months later...

 
பள்ளியில் சிறுவயதில் படித்த 'அறுகால் சிறுபறவை அஞ்சிறகால் ஆற்றும் சிறுகாற்றுக்காற்றாது தேய்ந்து' என்ற பாடலிற்குச் (நாலடியார்??) சவாலாக இன்னும் இனிமையாக இருக்கிறது இசைக்கலைஞன் இணைத்துள்ள வரிகள். 

இது நளவெண்பாவில தம்யந்திய பற்றி வாற பாட்டு .

Edited by யோக்கர்

பாட்டை முழுவதாய் ஆரய்ந்து, என்ன நிலையில இந்த வரிகள் வருகுதெண்டு பொருள் கொள்ளலாம்.

 

 

 

ஓ.. தந்தனன தந்தனதந்தன
தந்தனதந்தன தந்தனதந்தன
ஹோஹோஹோஹோ ஹோஹோஹோஹோ 
ஹோஹோஹோஹோ
தந்தனன ஹோஹோஹோஹோ தந்தனன 
ஹோஹோஹோஹோ தந்தனன 
ஹோஹோஹோஹோ தந்தனன
 
 
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
 
 
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
 
 
ஓ... கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு
தேனை ஊற்று இது தீயின் ஊற்று
ஓ... கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே இங்கு
தேனை ஊற்று இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூப்பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்
 
 
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
 
 
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் 
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
 
 
ஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
 
 
ஏ வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்
புல்வெளியின் மீது ஒரு பூமாலை
ஒன்றை ஒன்று சூடும் இது பொன்மேடை
கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
 
 
ஆயிரம் தாமரை நனனன
ஆயிரம் தாமரை நனனன நனன நனன
 
 
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ள காமன் பண்டிகை
கோயிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே

Edited by யோக்கர்

காம்பிருக்கும் மட்டும் ஒரு பூவின் மேல் மற்றது படர முடியாது. காம்பு விடாது.
 
ஆகவே..
 
 
கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும் !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.