Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டாயமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் யுவதிகளுக்கு பேய் பிடித்துள்ளதாம் கூறுகிறார்கள படையினர்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

தமிழ் யுவதிகளுக்கு பேய் பிடித்துள்ளதாக கூறி படைத்தரப்பு சுமார் 21 வரையிலான யுவதிகளை நேற்றிரவு கிளிநொச்சி அரச வைத்தியசாலையினில்  ஒப்படைத்துள்ளது. அண்மையில் படைத்தரப்பில் இணைத்துக் கொள்ளப்பட்ட அவர்கள் அனைவரும் கிளிநொச்சியின் பாரதிபுரம் முகாமில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. 

 

பேய் பிடித்த இவர்கள் இரவு வேளைகளில் எழுந்து நின்று சன்னதமாடுவதாக கூறியே தம்மிடம் அனுமதிக்கப்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கருத்து வெளியிட்ட வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும் அனுமதிக்கப்பட்டவர்களது எண்ணிக்கை 13 பேரென வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்த போதும் குளோபல் தமிழ்ச் செய்திகளின் சுயாதீன தகவல்கள் அவ்வெண்ணிக்கை 21 என தொவிக்கின்றன.

 

தற்போது வைத்தியசாலையின் தனியான பிரிவில்  படையினரது கண்காணிப்பின் கீழ் இவர்கள் வைக்கப்பட்டு உள்ளதுடன் ஊடகவியலாளர்களோ தமிழ் அரசியல் தரப்பாரோ உட்சென்று பார்வையிடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

ஒரு சில பெற்றோர் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆவர்களது தகவல்களின் பிரகாரம் குறித்த யுவதிகள் வெறித்துப்பார்த்த வண்ணம் மூச்சு பேச்சின்றி இருப்பதாக தெரிவித்தனர். 

 

அவர்கள் பாலியல் ரீதியாக தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டமையால் இந்நிலை ஏற்பட்டிருக்கலாமென நம்பப்படுகின்றது.குறித்த படை முகாமில் இரவு வேளைகளில் ஆவிகளை கண்டதாக ஒரு சிலர் சொன்ன போதும் தவறான நோக்கத்துடன் வந்த படையினராக இருக்கலாமென மற்றொரு அனுபவ தரப்பு கூறுகின்றது.

 

பெரும் பிரச்சாரங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட படையில் தமிழ் யுவதிகளை இணைக்கும் நடவடிக்கை பின்னர் தோல்வியை நோக்கியே பயணித்திருந்தது. முன்னதாக ஒரு பகுதி யுவதிகள் தப்பி ஒடி வீடுகளை வந்து சேர்ந்திருந்தனர். மற்றொரு தொகுதியினர் வீடு திரும்ப முற்பட்ட போதும் படைத்தரப்பு அவர்களது பெற்றோரை பார்க்க கூட கடந்த சில நாட்களாக அனுமதித்திருக்கவில்லை.

இதனிடையே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதிகளை பார்வையிட சென்ற கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உட்செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. சுமார்  ஒன்றரை மணி நேரம் போராடி அவரை உள்ளே அனுமதிக்க கூடாதென வன்னி படைத்தலைமை வைத்தியசாலை பணிப்பாளரை பணித்திருந்ததாக மேலும் அவர் தெரிவித்தார்.

 
இராணுவத்திற்கு வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட தமிழ்ப்பெண்களில் சிலர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி

இராணுவத்திற்கென வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்ட தமிழ்ப் பெண்களில் 10 முதல் 15 வரையிலான பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களை ஏமாற்றி படையில் இணைத்துக் கொண்டதாக கூறி சுய விருப்பத்தின் பேரில் சில பெண்கள் அண்மையில் இராணுவத்தை விட்டு வெளியேறி இருந்தனர். ஏனையவர்களை பெற்றோர்  பார்வையிட படையினர் அனுமதிக்கவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனால் பெற்றோருக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று ஒரு தொகுதி பெண்களை கிளிநொச்சி வைத்தியசாலையில் படையினர் அனுமதித்து உள்ளதாக அங்கிருந்து குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/86491/language/ta-IN/article.aspx

படையினருக்கு பொது மக்களின் வேலைகளான விவசாயம், கட்டுமானப்பணிகள் போன்ற வேலைகளை பொது மக்களிடமிருந்து பறித்டெடுத்து கொடுக்கிறார்கள். அதன் பின் படையில் வேலை என்று இப்படி இளம் பெண்களை கடத்துகிறார்கள். பின்னர் அதை மறைக்க சட்டமாக்குகிறார்கள். 

 

சொலெயும் மாதிரி சர்வதேச தரகர்கள், பொதுமக்களை இந்த வதை வதைக்கும் அரசங்கத்திடம் புலிகள் சரண் அடையவில்லை என்று தான் வாங்கிய கமிசன் பணத்துக்காக வாதடுகிறாகள். 

சர்வதேசம்  நல்லிணக்க காரணமாக தமிழர்களை இராணுவத்தில் சேர்க்க சொன்னது.

சிங்களம் தமிழ் பெண்களை சேர்த்து உலகத்தை மீண்டும் "பேய்"க்காட்டுகின்றது. 

இந்த சர்வதேச - சிங்கள விளையாட்டிலும் தமிழர்களே பலிக்கடாக்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வேப்பிலைய அடிக்க வேண்டியது தான்

காசில்லாமல் இராணுவத்திற்கு அனுப்பிய பெற்றோர்...... மேலும் அவர்கள் உண்மையான பெற்றோர்களா அல்லது இந்த பிள்ளைகள் அந்த வீடுகளில் போக இடமில்லாமல் காலம் கடத்தினார்களா கூடத்தெரியாது. இப்படியாக வந்து முடிந்திருக்கிறது. குத்திக்கு தன்னும் பணம் கொடுத்து அவர்களை விடுவிக்க யாரும் இல்லை.

அப்ப வேப்பிலைய அடிக்க வேண்டியது தான்

வேப்பிலை அடிக்கலாம், சில சாமி சாட்டை கேட்க்கும் கேட்டால் அதை வாங்குவதற்கு ஆட்கள் தேவை :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இராணுவத்தில் சேர்க்கப்பட்ட 13 பெண்கள் மருத்துவமனையில்'

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/12/121212_kiliarmywomen.shtml

அண்மையில் இலங்கை இராணுவத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து சேர்த்துக்கொள்ளப்பட்ட பெண்களில் ஒரு தொகுதியினர் உளவியல் ரீதியான சுகயீனம் காரணமாக கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை உறவினர்கள் மூலம் தான் அறிந்துகொண்டதாகக் கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், அவர்களை பார்ப்பதற்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்ற போது தான் அங்கு அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

இருப்பினும் தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், தனக்கு தன்னுடைய பிரதேச மக்களை சென்று பார்ப்பதற்கு சிறப்புரிமை தனக்கு உள்ளது, ஆகவே அதற்கான அனுமதி வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் கேட்டதாகவும், அதற்கு இராணுவத்தின் அனுமதி தேவை என்று அவர்கள் கூறியதாகவும் சிறிதரன் கூறியுள்ளார்.

இதேவேளை, சுகயீனம் காரணமாக மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்களின் உறவினர்கள், அவர்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.

தனியான வார்ட் ஒன்றில் 13 பேர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு பெண்ணின் தந்தை தெரிவித்தார்.

தன்னுடைய பிள்ளையும் ஏனைய சில பிள்ளைகளும் பேய் பிடித்தது போல ஆடி, பல்லைக் கடித்தபடி மயங்கிவிழுந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவம் கருத்து

அதேவேளை ஒரு சில நிமிடங்களில் அவர்கள் மீண்டும் சுயநினைவுபெற்று இயல்பாக கதைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இராணுவத்தில் சேர்ந்துள்ள 7 பெண்கள் தமக்கு உடல் சுகமில்லை என்று கூறியுள்ளதாகவும், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை இராணுவப் பேச்சாளர் தமிழோசையிடம் தெரிவித்தார். அதே நேரம் அவர்களுக்கு எத்தகைய சுகவீனம் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

பயிற்சி காலத்தில் இதுபோல நடப்பது சகஜம் என்றும் தினந்தோறும் இராணுவத்தில் சுமார் 2000 பேர் சுகவீன விடுப்பு எடுக்கின்றனர் என்றும் தெரிவித்தார் பிரிகேடியர் ருவான் வணிகசூர்ய.????

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன படையில் சேரும் தமிழ் பெண்களுக்கு மட்டும் தான் பேய் பிடிக்கிறது??

 

புலிகள் தமது படையில் சிறுவர்களை சேர்த்ததை குய்யோ முறையோ என கத்திய சர்வதேச மன்னிப்பு சபை போன்றவர்கள் இப்போ மௌனம் சாதித்து தமது சுய ரூபத்தை காட்டி உள்ளார்கள்.

 

சர்வதேசம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் இதனால் தான் புலிகளை பயங்கரவாதிகளாக்கியதாகவும் கூறும் யாழ்கள அரசியல் மேதாவிகள் சர்வதேசம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என அறிய ஆவலாக உள்ளது.

 

ஈழத்து எம்.ஜி.ஆர் தமிழ் மக்களுக்கு வெட்டி விழுத்துவதாக கூறும் வள்ளல்கள் இவரின் மௌனத்துக்கு என்ன காரணம் எனவும் இல்லையேல் இவரும் சேர்ந்து அரச படை கொலைஞர்களுடன் ஒத்துழைக்கிறாரா என அவரது விசிறிகள் கூற முடியுமா?

 

அதெப்படி புலிகளை விமர்சிக்கும் பேசும் போது கும்பலாக வந்து விசத்தை கக்குபவர்கள் இங்கு பெட்டி பாம்பாக அடங்கி விடுகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கேய ஒல்லாந்து ஆக்கிரமிப்பில், இவ்வாறு பல தமிழர்கள் கட்டாயக் கருவூட்டலுக்கு உள்ளாக்கப்பட்டு இறுதியில் பறங்கியர் எனும் சமூகம் உருவாக்கப்பட்டது. இவ்வாறான சமூகம் ஒன்று உருவாக்கப்படுவதன் மூலம் தமக்குச் சார்பான மக்கள் கூட்டமொன்றை தாம் நிலைகொள்ளும் இடங்களில் உருவாக்கிக் கொள்ளலாம் என்கிற நோக்கம் அன்றிருந்தது. இவ்வாறானதொரு கட்டாயக் கருவூட்டாலைத்தான் சேர்பிய ராணுவமும் பொஸ்னியப் பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது. சேர்பியத் தடுப்பு முகாம்களுக்குக் கொண்டுவரப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொஸ்னியப் பெண்கள், சேர்பிய ராணுவத்தால் கூட்டுப் பாலியல் வல்லுறவுள்ளாக்கப்பட்டு கருத்தரிக்கும்வரையில் தடுத்துவைக்கப்பட்டு, சிசு வளர்ந்து பிறக்கும் தறுவாயில் வெளியே விடப்பட்டனர். இதன்மூலம் தனது கருவைக் கலைக்க அந்தத் தாய் விரும்ப மாட்டாள், இதன் மூலம் பொஸ்னிய இனத்திற்குள் சேர்பிய இனமொன்று உருவாக்கப்பட முடியும், இதன்மூலம் பொஸ்னிய தனித்தன்மை கலைக்கப்படும், அதன்பின்னர் பொஸ்னியாவை இலகுவாக உள்வாங்கிக்கொள்ள முடியும் என்று அன்றைய சேர்பியத் தலமை நம்பியது. இதையேதான் சிங்களப் பயங்கரவாதமும் இன்று செய்கிறது. வேலைவாய்ப்பு என்கிற போர்வையில் இராணுவத்திற்குக் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட தமிழ்ப்பெண்கள், சிங்கள இராணுவ மிருகங்களின் காமப்பசிக்கு தொடர்ச்சியாக உள்ளக்கப்படுகின்றனர். இதுவரை தேடிச்சென்று கற்பழித்துவந்த சிங்கள ராணுவ மிருகத்தின் முகாமுக்குள்ளேயே தமிழ்ப்பெண்கள் இலவசமாக தங்கு தடையின்றிக் கிடைக்க, மிருகமும் தனது இச்சையை இந்த சிறுமிகள் மீது கட்டவிழ்த்து விடுகிறது. இதன்மூலம் ஏற்படும் கருவூட்டல்கள் மூலம் நாளைக்குத் தனக்குச் சாதகமான ஒரு சமூகத்தை தான் ஆக்கிரமித்து நிற்கும் தேசத்தினுள் உருவாக்க அது நினைக்கிறது. இதை நிறுத்துவதென்றால், இந்த அக்கிரமங்கள் வெளிக்கொணரப்படவேண்டும். எங்களுக்குத் தெரிந்த எல்லா வழிகளிலும் இந்த அக்கிரமங்கள் முடிந்தளவிற்கு அனைவரையும் சென்றடைய வேண்டும்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான், புலிகள் சிறுவர்களை சேர்க்கிறார்களகென்று கொக்கரித்தவர்கள், 10 ஆம் வகுப்பு பர்ரிட்சைக்குத் தோற்றக்கூட இந்த சிறுமிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதை எப்படிச் சரியென்று வாதிடப்போகிறார்கள்? புலிகள் சேர்த்தால் குற்றம், ஆனால் இராணுவம் சேர்த்து, பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவர்களை மனநோயாளிகள் ஆக்கினல்க் கூட அது தவறில்லை. அப்படித்தானே??? அக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் உற்பட்ட எந்த இனமும், தன்னை விடுவித்துக்கொள்ள முடிந்த வகைகளில் போராடும். ஆனால் அப்படியான இனமாகிய எங்களுக்குள் மட்டும் எதிரி செய்வதை சரியென்றும், அவன் செய்வதை நியாயப்படுத்தவும் எத்தனை மிருகங்கள் இன்னும் அலைகின்றன?? சாபக்கேடான எம்போன்ற இனத்திற்கு, விடுதலையும், சுதந்திரமும் ஒரு கேடா என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

to: sg@un.org

 

12 Dec. 2012

Hon. Ban Ki Moon.
UN Secretary General
United Nations
New York, USA

 

Subject : Tamil Women Coerced into Joining the Military

 

Dear UN Secreatry General, 

 

 

About 100 Tamil women were recruited into Sri Lanka's military as part of the reconciliation process. Military personnel of Mullaitheevu and Killinochchi area were involved in the recruitment process and have targeted economically vulnerable families. Young women from women-headed families or families with five or more family members have been targeted in general.

 

The greatest concern is the lack of information and informed consent. They have also been promised a pay of Rs.30,000 per month. Around 109 women applied and appeared for interviews. The information provided never mentioned that they will be working for the military and will have to join the military to perform these duties. The families were informed that the women have been provided with uniforms. It is obvious that the women or the families were not provided with accurate information, and therefore not allowed to make an informed choice. Moreover these activities have violated the gazette notification procedures which is required by law.

 

 

The UN Security Council Resolution 1325 clearly states that the full participation of women is essential for the rehabilitation process in the post war situation, and women’s specific needs should be taken into account in developing a prerequisite to disarmament and demilitarization. I am deeply concerned about the lack of choice and decision-making power for women in the formerly war-torn areas request that the civil administration be completely handed over to civil structures as a genuine measure of the Government’s reconciliation program.

 

I kindly urge UN to look into this urgent  matter.

.

Sincerely,

கிளிநொச்சியில் பெண்களுக்கு இராணுவம் செய்த அதிரவைக்கும் அட்டூழியம் என்ன?
December 12, 2012, 11:00 pm|views: 794
 
இராணுவத்தில் புதிதாக இணைக்கப்பட்ட யுவதிகள் நள்ளிரவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
 
இலங்கை இராணுவத்தின் தொழிற்படையில் இராணுவ மகளிர் பிரிவின் 6வது படையணியின் கீழ் வடக்கிலிருந்து 17.11.2012ந் திகதியன்று இணைத்துக் கொள்ளப்பட்டு, பயிற்சியளிக்கப்பட்டு வந்த  தமிழ் யுவதிகளில் 21 பேர் 11.12.2012 அன்று நள்ளிரவு 11.00 மணி தொடக்கம் 12.30 மணிக்குள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களில் விழிப்புலனிழந்தவர்களும் படுகாயங்களிற்குள்ளாகி அங்க இழப்புடன் இருந்த மாற்றுத் திறணாளிகளும் தங்க வைக்கப்பட்டு, தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்த இடமாகிய 'நவம் அறிவுக் கூடம்' அமைந்திருந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த யுவதிகளே, நேற்று நள்ளிரவு அங்கு கேட்ட அமானுஸ்ய சத்தம் காரணமாக பயந்து உளநிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறீலங்கா படைத்தரப்பு கூறியுள்ளது. ஆயினும், தொடர்ச்சியான முறையில் குறித்த யுவதிகள் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டதாலேயே இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என பிறிதொரு தகவல் தெரிவிக்கிறது. 
 
நவம் அறிவுக் கூடம் கிளிநொச்சி நகரிலிருந்து 4 கிலோமீற்றர்கள் தூரத்தில் நகரின்  மேற்கே கிருஸ்ணபுரம் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. தற்போது இராணுவ பெண்கள் படைப்பிரிவின் 6வது படையணியின் முகாமாக இது பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
 
21 யுவதிகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிலர் மயக்கமாகிய நிலையில் இருந்துள்ளனர்.
 
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்கள் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கட்டடத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஆய்வுகூடத்தின் முன்னால் இலத்திரனியில் சாதனங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இது, பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
 
வைத்தியசாலை கட்டடத்தின் வடக்கு பகுதிக்கு பிரத்தியேக பாதை இருப்பதனால் பொது மக்களின் நடமாட்டம் இப்பகுதியில் தடுக்கப்பட்டு இராணுவத்தினர் மட்டுமே  நடமாடுகின்றனர்.
 
இராணுவ வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் மட்டுமே இவர்களை பராமரித்து வருகின்றனர்.
 
இவர்கள் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்திற்குள் அங்கு இராணுவத்தினர் (இரு பாலாரும்) பெருமளவில் கூடி விட்டனர்.
 
வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் இன்னும் மயங்கிய நிலையிலேயே இருக்கின்றனர். இதனால், குறித்த யுவதிகள் அறியாவண்ணம் ஏதாவது மருந்து ஏற்றப்பட்டதா என்ற கேள்வியும் எழுவதாக கிளிநொச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மாவட்ட வைத்தியசாலையின் பணியார்களில் ஒரு தமிழ் பெண் பரிசாரகர் (Attendant)  தவிர யாரும் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அறைக்குள் செல்வதற்கு வைத்திய அத்தியட்சகரால் (Medical Superintend : Dr. கார்த்திகேயன்) அனுமதிக்கப்படவில்லை.
 
அவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள பரிசாரகர் மாவட்ட வைத்திய அத்தியட்சகரின் பூரண ஆதரவாளர் என்றும், தேவைகளின் நிமித்தம் அவ்வறையிலிருந்து வெளியில் வருகின்ற அவர் தனது சக ஊழியர்களிடம் எவ்வித தகவல்களையும் பரிமாறிக் கொள்ள மறுக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
மாவட்ட வைத்திய அத்தியட்சகரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான Dr. கார்த்திகேயன் அரசாங்கத்தின் பூரண ஆதரவாளர் என்பதனால் வைத்தியசாலை வட்டாரத்தினர் பயம் காரணமாக இவ்விடயம் தொடர்பில் தகவல் தெரிவிப்பதற்கு மறுக்கின்றனர்.
 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் யார் யார் என்று தகவல் ஏதும் தெரியாத நிலையில் இராணுவத்தில் இணைந்து கொண்ட பெண்களின் குடும்பத்தவர்களிற் பலர் வைத்தியசாலை சூழலில் கூடி வருகின்றனர். 
 
இதுவரை குடும்பத்தவர்கள் யாரும் அவர்களை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்வில்லை.
 
நன்பகல் 11.15 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடுவதற்காக சுமார் ஒன்றரை மணி நேரமாக காத்திருந்தும், அவர் அவர்களைப் பார்வையிடுவதற்கு வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியரால் அனுமதிக்கப்படவில்லை.
 
இராணுவத்தினரின் கட்டளைக்கமைய பாராளுமன்ற உறுப்பினரை பாதிக்கப்பட்டுள்ள பெண்களை பார்வையிடுவதற்கு அனுமதிக்க முடியாது என மாவட்ட வைத்திய அத்தியட்சகரும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான னுச. கார்த்திகேயன் பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரிவித்துள்ளார்.
 
வைத்தியசாலை சூழலில் இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதனால், இங்கு பதட்டம் நிலவுகின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள 57வது படைப்பிரிவின் படையாதிகாரி இன்று தனது பெருமளவு நேரத்தினை வைத்தியசாலை வளாகத்திலேயே கழித்துள்ளார். 30 வரையான இராணுவத்தினர் இங்கு தொடர்ந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரது தாயார் தனது மகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதனை அறிந்து அவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலைக்குச் சென்று நெடுநேரம் காத்திருந்தும் அவர் தனது மகளை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவரை 57வது படைப்பிரிவின் படையாதிகாரி தன்னுடன் அழைத்துச் சென்று வைத்தியர்களது ஓய்வு அறையில் தங்க வைத்துள்ளார்.
 
மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளால் யாழ்ப்பாணத்தில் பதற்றம் நீடிக்கும் நிலையில், கிளிநொச்சியில் நடைபெற்றுள்ள இந்தச் சம்பவம் வடதமிழீழத்தில் மக்களிடத்தில் கொந்தளிப்புத் தன்மையையும் ஆத்திரத்தையம் ஏற்படுத்தியுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்மின் வடதமிழீழ செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 

வைத்தியசாலையிலிருந்து 12 தமிழ்ப் பெண்கள் பயிற்சி முகாம் திரும்பினர்: இராணுவம்

 

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்களில் 12பேர் சிகிச்சைகளை அடுத்து இன்று மீண்டும் இராணுவ பயிற்சி முகாமுக்கு திரும்பியுள்ளனர். மேலும் இருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

 

இலங்கை இராணுவத்தின் தொழிற்படையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகளில் சிலர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் சுகவீனமுற்ற நிலையில் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்று கூறிய இராணுவ பேச்சாளர், இவர்கள் எவ்வகையான நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரிவிக்க மறுத்துவிட்டார்.

 

இருப்பினும், குறித்த பெண்கள் தங்கியுள்ள முகாமில், சம்பவ தினம் இரவு கேட்ட பயங்கரமான சத்தம் காரணமாக பயந்து உளநிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர்களில் 16பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

 

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர், தன்னிலை மறந்து பேசிக்கொண்டிருப்பதாகவும் மேலும் சிலர் பேச முடியாத வகையில் அதிர்ச்சி காரணமாக வாய்கள் இறுக மூடப்பட்டிருப்பதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டனர்.

 

இருப்பினும், இப்பெண்கள் சிறு உபாதைகளுக்கே உள்ளாகியுள்ளனர் என்று தெரிவித்த இராணுவ பேச்சாளர், சிகிச்சை முடிந்து முகாம் திரும்பிய 12பேர், இன்று மாலை இடம்பெற்ற பயிற்சிகளிலும் கலந்துகொண்டனர் என்று கூறினார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/54717--12------.html

to: beckerj@hrw.org

 

Dear Ms.Becker,

 

As someone who was the voice against forceful recruitment in Sri Lanka, I would like to bring to your attention of the plight of 100 plus Tamil women. 

 

There are reports indicating that more than 100 Tamil women recruited into Sri Lankan forces for clerical duties as they reportedly told and now have been forced to undergo military training against their will. Also, there are suspicions that these women are used as sex slaves. About 13 of those women were admitted to the hospital where access by parents and friends were denied. Some were mouth folded in the hospital. Today, they all have been taken back to the military camps.

 

These are disturbing news and only international organizations like HRW can help to save these women to retain their freedom and dignity. 

 

Sincerely,

இன்றும் எம் சகோதரிகளின் வாழ்வு

என்ன என்று தெரியாது

பத்து மாதம் சுமந்த உள்ளமும்

உற்றார் உறவினரின்

 

கண்ணிலும் எங்கள் தமிழீழம்

வாசலிலும் சோகம் விரித்தாடுகிறது

 

எழுட்சி உணர்வின் வடிவாய்

நாளும் புலத்தில் செயலாய் இருந்தும்

 

வேதனையின் விருட்சமாய் நீயும் இருந்தாய்

போதும் உலகே போதும் உலகே

 

பூட்டை உடைத்து

தமிழன் வேரை அறுக்கும் அந்த

 

நாட்டை கட்டியணைத்து எதிரியைக் கையால்

எட்டி அடித்திட துணியமாட்டாயா ?...

 

 

196550_358979540864282_990015356_n.jpg

(முகநூல்)

அனுப்பப்பட்டது

நானும் இரு கடிதங்களையும் அனுப்பி விட்டேன்.

மலர்ந்துவரும் ஆயிரம் இளம் கனவுகளுக்கு ஒன்றாகத்தீ வைத்து

ஒருநாள் இரவு இன்பத்துக்கு  ஒரு துளி தேன் தேடும் கேடு கேட்ட இலங்கை ஆமி.

Edited by மல்லையூரான்

 

 

 

அதெப்படி புலிகளை விமர்சிக்கும் பேசும் போது கும்பலாக வந்து விசத்தை கக்குபவர்கள் இங்கு பெட்டி பாம்பாக அடங்கி விடுகிறார்கள்?

 

மாற்று கருத்து மாணிக்கங்களை மேடைக்கு அழைக்கிறோம்.

இலங்கை அரசாங்கம் தமிழ் யுவதிகளை கட்டாயமாக இராணுவத்தில் சேர்ப்பதை உடன் நிறுத்தவேண்டும்
- கனடிய தமிழர் பேரவை கோரிக்கை

 

கிளிநொச்சியின் பல பாகங்களிலிருந்து கடந்த சில மாதங்களாக தமிழ் இளம் பெண்கள் கட்டாயமாக சிறிலங்கா இராணுவத்தில் சேர்க்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக சமீபகால தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்தக் கட்டாய இராணுவ ஆள் சேர்ப்பின்போது பலவந்தமாக இணைக்கப்படும் தமிழ் யுவதிகளின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் இந்த நடவடிக்கை குறித்து மேற்கொண்ட முறையீடுகள் எதனையுமே இராணுவ உயர்பீடம் கவனத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

நிலமை இவ்வாறிருக்க, இந்தக் கட்டாய இராணுவ சேவைக்கு உள்ளாக்கப்பட்ட பல யுவதிகள் மனநிலை பாதிக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிந்தி வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.


கனடிய தமிழர் பேரவை, இந்த யுவதிகளின் கட்டாய இராணுவ சேர்ப்பை வன்மையாக கண்டிக்கிறது. சர்வதேச சட்ட விதிகளுக்கு முறணான வகையில் தமிழ் மக்களை, குறிப்பாக தமிழ் இளைஞர், யுவதிகளை குறிவைத்து நடத்தப்படும் இந்த நடவடிக்கை ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகவே கனடிய தமிழர் பேரவை கருதுகிறது.  எனவே சிறிலங்கா அரசாங்கத்தின் அடாவடித்தனங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென்றும் இந்த இராணுவ கட்டாய சேர்ப்பிற்கு உட்படுத்தப்பட்ட இளம் தமிழ் யுவதிகள் உடனடியாக விடுவிக்கப்பட்டு அவர்களது பெற்றோர் மற்றும் உறவினரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்றும் கனடிய தமிழர் பேரவை சிறிலங்கா அரசை கேட்டுக்கொள்கின்றது.

 

இது சம்பந்தமாக கனடிய தமிழர் பேரவை பல சர்வதேச மனித உரிமை நிறுவனங்களை அணுகி, அவர்களது ஆதரவுடன் சிறிலங்கா அரசு மீதான அழுத்தத்தையும் மேற்கொண்டுவருகின்றது.


மேலதிக தொடர்புகளுக்கு:
கனடிய தமிழர் பேரவை
info@canadiantamilcongress.ca
__._,_.___

அதென்ன படையில் சேரும் தமிழ் பெண்களுக்கு மட்டும் தான் பேய் பிடிக்கிறது??

 

புலிகள் தமது படையில் சிறுவர்களை சேர்த்ததை குய்யோ முறையோ என கத்திய சர்வதேச மன்னிப்பு சபை போன்றவர்கள் இப்போ மௌனம் சாதித்து தமது சுய ரூபத்தை காட்டி உள்ளார்கள்.

 

சர்வதேசம் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருப்பதாகவும் இதனால் தான் புலிகளை பயங்கரவாதிகளாக்கியதாகவும் கூறும் யாழ்கள அரசியல் மேதாவிகள் சர்வதேசம் பற்றி என்ன நினைக்கிறார்கள் என அறிய ஆவலாக உள்ளது.

 

ஈழத்து எம்.ஜி.ஆர் தமிழ் மக்களுக்கு வெட்டி விழுத்துவதாக கூறும் வள்ளல்கள் இவரின் மௌனத்துக்கு என்ன காரணம் எனவும் இல்லையேல் இவரும் சேர்ந்து அரச படை கொலைஞர்களுடன் ஒத்துழைக்கிறாரா என அவரது விசிறிகள் கூற முடியுமா?

 

அதெப்படி புலிகளை விமர்சிக்கும் பேசும் போது கும்பலாக வந்து விசத்தை கக்குபவர்கள் இங்கு பெட்டி பாம்பாக அடங்கி விடுகிறார்கள்?

 

 அவர்கள் பச்சோந்திகள், அவர்களின் இரத்தத்தை சோதனை செய்து பார்க்கனும்

இராணுவத்தில் சேர்க்கப்பட்ட தமிழ் யுவதிகள் பாலியலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் : சட்ட வைத்திய அதிகாரி.
சிறீலங்கா | ADMIN | DECEMBER 14, 2012 AT 18:38
 
அண்மையில் இராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்களுள் பதின்மூன்று தமிழ் யுவதிகள் மன உளைச்சலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவர்கள் அனைவரும் பாலியலுக்குள்ளாக்கப்பட்டுள்ளனர் என சட்ட வைத்திய அதிகாரி ஒருவரிடமிருந்து தகவல்கள் கசிந்துள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனுமதிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் யுவதிகள் அனைவரும் பாலியலுக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் எனவும், அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் கிளிநொச்சி வைத்தியசாலையில் இல்லாமையினால், யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து குறித்த மருந்து வைகைகளை வரவழைத்து அவ் யுவதிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இவ் யுவதிகளை குறித்த சில சிங்கள வைத்தியர்களை வைத்து சிகிச்சை அளிக்க அனுமதித்ததுடன், இத் தமிழ் யுவதிகளை பார்வையிட பெற்றோர்களையோ, வைத்தியர்களையோ, தாதியர்களையோ, அரச அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ அனுமதிக்க மறுத்து கிளிநொச்சி வைத்தியாசலையை சுற்றி இராணுவத்தினர் காவலில் ஈடுபட்டிருந்தனர் என குறித்த சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஆனால் இராணுவம், குறித்த யுவதிகள் மன உளைச்சலுக்குள்ளாகியதாகவும், அவர்களுக்கு பேய் பிடித்துவிட்டதாகவும் கூறி அனைவரையும் நம்ப வைக்க முயற்சிக்கின்றது. ஆனால் அப்பாவியான அவர்கள் பாலியலுக்குள்ளாக்கப்பட்டுனர் என மேலும் சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
 
  • கருத்துக்கள உறவுகள்

சமந்தர் வந்து எந்த அறிக்கையும் விட தெரியல... ரைட்டு கை விளங்காம போயிடுத்து... லெப்டு கை..  தமிழர் பெருமை உலகலெலாம்  விளங்க ஏந்தட்டும் விளக்கை...

light-up-old-lantern-zoom.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.