Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2000 பதிவு கண்ட சுபேசுக்கு வாழ்த்துக்கள்

Featured Replies

வாழ்த்துக்கள் சுபேஸ்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் ஊடாக கிடைத்த நட்புக்களில் சுபேஸும் ஒருவர். சிந்தனைகள், கனவுகள், உணர்வுகள், ஏக்கங்கள் எல்லாம் நிரம்பியும் இன்னமும் தாகமுள்ள இளைஞர். இன்னும் நிறையப் பதிவுகளை இட்டு யாழோடு இணைந்திருக்க வாழ்த்துக்கள்.

 

 

வாழ்த்துகள் சுபேஷ் இன்னும் நிறைய எழுதலாமே..:)

வாழ்த்துக்கள் சுபேஸ்!  

  • கருத்துக்கள உறவுகள்

ஓ நானும் இதற்குள் அடங்கீட்டேனா...உங்களைப் போல ஒரு சிலருக்காவது நான் நல்லவளா,மென்மையானவளாக தெரிவதை இட்டு மிகவும் சந்தோசப்படுகிறன்..சரி விடுங்கள்...படிப்பு ரொம்ப முக்கியம்.அதையும் கவனத்தில் எடுத்து கொள்வது நன்று.

  • கருத்துக்கள உறவுகள்
நன்றிகள் இசை அண்ணா..அகூதா அண்ணா...தப்பிலி அண்ணா...யாயினி அக்கா...
 
குமாரசாமி அண்ணா..என் அன்புதாத்தா...தாத்தாவுடன் தனிமடல்களில் நிறைய பேசி இருக்கிறன்..எனக்கு தெரிந்த ஒருவரின் திருமணம் மூலம் தாத்தவுடன் தனிமடல்களில் பேசக்கிடைத்தது...நல்ல ஒரு இனிமையான இதயமுள்ள மனிதன்..இவ்வளவு வருத்தங்களையும் உடலில் வைத்துக்கொண்டும் இன்னமும் ஓய்ந்துவிடாமல் யாருக்கும் பாராமாய் இருக்காமால் உழைத்துக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதன்..இன்னும் பல்லாண்டுகள் நீங்கள் எங்களுடன் கூட இருந்து இதே கலகலப்பையும் இனிமையையும் தந்துகொண்டிருக்கவேண்டும் தாத்தா...
 
நவரத்தினம் அண்ணா...2011 இல் இருந்துதான் எழுதத்தொடங்கி இருந்தாலும் என்னவோ நீண்டகாலம் எங்களுடன் இணைந்திருப்பதுபோல் ஒரு உணர்வு..தமிழினவிடுதலையில் தளராத நம்பிக்கையுடன் பயணிக்கும் ஒரு உறவு...என்றும் இந்த உணர்வில் இருந்து விலகாமல் பயணியுங்கள் அண்ணா...நன்றிகளும் அன்பும்...
 
அலை அரசி...நீங்களும் 2011 இலிருந்துதான் இணைந்திருந்தாலும் எனக்கென்னமோ நான் இணைந்ததில் இருந்து இருக்கும் உறவுபோலவே நினைவு...எப்பொழுதும் அமைதியாக வந்து அமைதியாக எழுதிவிட்டு செல்பவர்..உங்கள் தம்பி ஒரு கடற்புலி என்றும் அவர்களின் படகொன்றிற்கு அலை அரசி என்று பெயர் என்றும் அதன் நினைவாகவே இந்தபெயரை நீங்கள் யாழில் உங்கள் புனைபெயராக வைத்ததாக ஒரு இடத்தில் சொல்லி இருந்தீர்கள்...ஈழவிடுதலையின்பால் தீராத ஈடுபாடுகொண்டவர்..தொடர்ந்தும் இந்த உணர்வில் இருந்து விலகாமல் பயணிங்கள்..நன்றிகளும் அன்பும் அலை அரசி..
 
கிருபன் அண்ணா..என்னை சிந்திக்கவைக்கும் கருத்துக்களால் கவர்ந்த அற்புதமான அண்ணண்...எப்படி ஒரு சினிமா நடிகன்மேல் அவரின் ரசிகர்களுக்கு ஒரு தீராத அன்பிருக்குமோ அப்படியே கிருபன் அண்ணாவின் சிந்தனைகள் எழுத்துக்களின்மேல் எனக்கும் தீராக்காதல்...என் சிந்தனைகளை தூண்டும் பல கருத்துக்களை எழுதுபவர்..அநேகமான எண்ணங்களால் ஒன்றானவர்கள் நாங்கள்..அதனால் இயல்பிலேயே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு நண்பர்களாகியவர்கள்..எம் நட்பு எப்பொழுதும் தொடரும்...அழகான அளவான ஒருகுடும்பமும் இனிமையான வாழ்க்கையும் உங்களுக்கு அமைந்திருக்கிறது..வாழ்த்துக்கள் அண்ணா..
 
அபராஜிதன்...இனிய ஒரு உறவு...எனக்கு தெரியவில்லை என்னென்று சொல்ல..ஆனால் அதிகம் பேசாவிட்டாலும் ஏதோ ஒரு ஈர்ப்பு எம்மிடையே...பேசாமல் நிறைய பேசிக்கொள்கிறோம் என்று நினைக்கிறேன்...யாழில் அவர் இணைந்த காலத்தில் இருந்து என் நல்ல ஒரு நண்பண்..என்றும் இந்த அன்பு எம்மிடையே இருக்கும்..நன்றிகள் நண்பா..
 
அலைஅக்கா....நல்ல கல்விப்பின்புலம் கொண்டவர்கள் அவரும் அவர் குடும்பத்தினரும்..அதைவிட முக்கியமானது அவரின் இரக்ககுணம்..அண்மையில் கூட என்னிடம் 40 மற்றும் 38 வயதான சகோதரிகளான முன்னால் பெண்போராளிகள் இருவருக்கு அங்கு உயிரச்சுறுத்தல் இருந்ததால் இங்கு யாராவது அவர்களை திருமணம் செய்யக்கூடிய நல்மனம் படைத்தவர்கள் இருந்தால் பார்த்து சொல்லும் படி கேட்டிருந்தார்...என்றும் இந்த இரக்ககுணம் உங்களுக்கு எந்த குறையும் வராமல் காப்பாற்றும்..நன்றிகள் அக்கா...
 
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேஸ் அவர்களுக்கு எனது வாழ்த்துகள்

 

உங்கள் கருத்துகளை விடாமல் வாசிப்பவர்களில் நானும் ஒருவன் .

 

யாழில் தொடர்ந்து உங்கள் கருத்துகளையும் பதிவுகளையும்  எதிர்பார்க்கும் வாத்தியார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் நண்பா..

வயதில் மூத்தவராய் இருந்தும் "டா" போட்டு கூப்பிடும் உறவுகளில் ஒருவர்.

சமூகம் குறித்த பார்வையும்,தெளிவும்,துடிப்பும் உள்ள ஒருவர். யாழ்களம் கடந்தும் பேசும் விரல் விட்டு எண்ணும் ஒருவர்.

நானறிவேன் அவனை.

வாழ்த்துக்கள் நண்பா அடுத்த தலைமுறையின் தேடல்களும்,செயற்பாடுகளுமே அதிகம் தேவைப்படும் நேரத்தில் நீயும்

அதிகம் எழுது 2000 விரைவில் 20000 ஆக வாழ்த்துக்கள் நண்பா..

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுபேஸ். முந்தி போல இப்போது கல கலப்பு இல்லை என்பது சிறிது கவலை நண்பா.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தம்பி

தொடர்ந்தும் நிறைய எழுத்துகளோடு சங்கமித்து யாழையும் பெருமைப்படுத்த வாழ்த்துகள்.

 

பயங்கர ஆளப்பா வாழ்த்து எழுதினவர்களையும் விட்டு விலகிப்போகாதபடி ஒவ்வொருவரைப்பற்றிய கணிப்பையும் பதிவு செய்து இருக்கிறீங்கள். வெறும் வாழ்த்து திரியாகப் பார்க்காமல் ஒரு சுவாரிசியம் மிக்க பதிவுகள் அடங்கும் திரியாகப் பார்க்கத்தோன்றுகிறது. இப்படியும் ஒருபக்கம் நன்றிசொல்லும் பக்கத்துக்கு இருக்கிறது என்ற அகராதியை இங்கு பார்க்கிறேன்.

 

பரவாயில்லையே சாதுரியனப்பா. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சகோதரா.. இன்னும் பல ஆயிரம் எழுத வாழ்த்துகிறேன்...

தொடர்ந்தும் பல கருத்துக்களையும் படைப்புக்களையும் வழங்க வாழ்த்துகிறேன் சுபேஸ்.

வாழ்த்துக்கள் சுபேஸ் :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

flower-bouquet-4.jpg.jpg

  • கருத்துக்கள உறவுகள்
வாத்தியார் அண்ணா... உங்கள் "அரோஹரா சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை" என்றபதிவை இன்னமும் மறக்கலை..அத்திபூத்தாற்போல் எழுதினாலும் அழகாக எழுதும் அண்ணா...எனக்கு யாழுக்குள் மிகப் பிடித்தவர்..நானும் நீங்கள் ஏதாவது எழுதி இருந்தால் தேடிவாசித்துவிட்டுதான் அடுத்த திரிக்குபோவேன்...என்றும் உங்கள் ரசிகந்தான்..சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்க ஆசை..அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணா..
 
ஜீவா..அன்பு நண்பண்..நம் சுகதுக்கம்களையும் பகிர்ந்துகொள்ளும் நண்பர்கள்..நன்றாக எழுதக்கூடியவர்...ஆனால் அதிகம் எழுதுவதில் மினக்கெடுவதில்லை கடையால்...குடும்ப வாழ்க்கைக்கு புகுந்திருக்கிறார்..நீங்கள் எடுத்த காரியம்கள் எல்லாம் வெற்றியாகவும் நல்ல ஒரு அமைதியான இனிமையான குடும்ப வாழ்க்கை அமையவும் மனதார வாழ்த்துகிறேன்...விரைவில் ஒரு குவாகுவா சத்தம் கேட்க வாழ்த்துகிறேன்....அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் நண்பணே..
 
தும்பளையான்..இன்னொரு என் அன்பு நண்பண்...சிந்தனைகளாலும் கிட்டத்தட்ட ஒன்றானவர்கள்...துடினமான பழக இனிமையான இளைஞன்...நன்றாக எழுதக்கூடிய திறமை இருந்தும் அதிகம் எழுத்தில் மினக்கெடுவதில்லை என்பது வருத்தமானது..அன்பான,அழகான ஒரு மனைவி..இனிமையான குடும்பவாழ்க்கை...எடுத்தகாரியம் எல்லாவற்றிலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன் நண்பா..அண்மையில் கூட சொல்லி இருந்தீர்கள் விரைவாக உழைத்துக்கொண்டு ஊருக்கு போய் செற்றில் அக்கவேண்டும் என்று.உங்கள் ஆசை நிறைவேற மனதார வாழ்த்துகிறேன்..விரைவில் ஒரு குவாகுவா சத்தம் தங்கள் வீட்டிலும் கேட்கட்டும்...
 
 
சகாறா அக்கா..என் அன்பு அக்கா..ஆரம்பகாலங்களில் யாழை நோக்கி என் கவனத்தை ஈர்க்கவைத்தது அக்காவின் எழுத்துக்கள்..அவற்றால் கவரப்பட்டுதான் யாழுக்குள் ஒரு உறுப்பினராக என்னை பதிவு செய்துகொண்டேன்..காந்தம்போல் மனதை கவர்ந்திழுக்கும் வலிமையானவை உங்கள் வரிகள்..என்ன மாயமோ மந்திரமோ அவற்றுக்கு தெரியவில்லை..இந்த நூற்றான்டின் ஈழத்து அற்புதமான கவிஞர்களில் ஒருவர் நீங்கள்..இப்பொழுது எழுதுவதை குறைத்துவிட்டது யாழுக்கும் எம்போன்ற உங்கள் ரசிகர்களுக்கும் பேரிழப்பு....தொடர்ந்து முன்னைய வீச்சோடு உங்கள் கவிதைகள் வரவேண்டும்..எனை மறந்த அதில் நிறைந்து வழியும் தமிழின் அழகை ரசிக்கவேண்டும் என்பதே உங்கள் அன்புத்தம்பியின் பேரவா...நன்றியும் அன்பும் வாழ்த்துக்கு அக்கா...
 
பையா...இனிய சகோதாரா...குட்டிக்குட்டியாய் எழுதினாலும் சுட்டியாய் எழுதும் அன்புச்சகோதரன்..உங்களால் யாழின் விளையாட்டுபக்கம் அழகுபெறுகிறது..ஆரம்பத்தில் தமிழில் எழுதக் கஸ்ரப்பட்டபையன் இப்பொழுது அழகாக தமிழில் எழுதுவதை பார்க்க பெருமையாக இருக்கு..ஆனால் ஆரம்பத்தில் நன்றாக தமிழில் எழுதிய எனக்கு இப்ப இடைக்கிடை எழுத்துக்களில் குழப்பம்வருது..பிழைபிழையாய் எழுதுறன்..திருத்திக்கொள்லவேன்டும்..பையான் இன்னும் கொஞ்சம் முயற்சி எடுத்து அதிக திரிகளில் எழுதி யாழை கலகலப்பாங்குங்கள்..இது இந்த அன்புசகோதரனின் வேன்டுகோள்..வாழ்த்துக்கு அன்பும் நன்றியும்...
 
சபேசன் அண்ணா...யாழில் சளைக்காமல் கருத்தாடும் ஒரு உறவு...பலபேருக்கு நடுவில் தனியாக நின்று அசராமல் கருத்தாடும் உங்களைப்பார்த்து வியந்திருக்கன்..எவ்வளவுதான் யார் கோபமூட்டினாலும் கேலிபண்ணிணாலும் தனிமனித தாக்குதல் செய்யாத அற்புதமான பண்பாளன்..அந்தக்குணம் உங்களிடம் எனக்கு மிகப்பிடித்தது..தொடர்ந்து யாழோடு இணைந்திருந்து கருத்துக்களால் யாழை சிறப்பியுங்கள் அண்ணா..வாழ்த்துக்கு அன்பும் நன்றியும்...
 
மல்லிகைவாசம் அண்ணா...நீங்கள் முன்னர் யாழில் அதிகம் எழுதி இருந்தீர்கள்..ஆனால் பின்னர் குறைத்துவிட்டீர்கள் எழுதுவதை..நன்றாக கவிதை எழுதக்கூடியவர்..தொடர்ந்து நீங்கள் முன்னரைப்போல் இன்னமும் ஈடுபாடாக எழுதவேண்டும் யாழை அலங்கரிக்கவேண்டும் என்பதே என் அவா..வாழ்த்துக்கு என் அன்பும் நன்றியும் அண்ணா...
 
ஈழப்பிரியன் அண்ணா...எனதுமுகப்புத்தகத்திலும் ஈழப்பிரியன் என்று ஒருவர் இருக்கிரார்..அந்த ஈழப்பிரியனா நீங்கள் என்று நான் குழம்புவதுண்டு...அருமையான் வீட்டுதோட்டம் ஒன்று வைத்திருக்கிறீர்கள்...இன்னமும் வைத்திருக்கிறீர்களா கைவிட்டுவிட்டீர்களா..?நல்ல பிரயோசமான் இணைப்புக்களையும்,கடிதங்களையும் இணைக்கும் உறவு...யாழின் மிக மூத்த உறுப்பினர்களில் ஒருவர்...இளையவன் என்னை வாழ்த்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது..யாழில் உள்ள உங்களைப்போன்ற பழையவர்கள் புதியவர்களுடன் கலந்து கொள்வதோ அல்லது புதியவர்களை ஊக்கப்படுத்துவதோ குறைவு..அவர்கள் தங்களுக்குள் ஒரு குழுப்போல் இயங்குகிறார்களோ(எல்லோரும் அல்ல) என்று நான் கவலைப்படுவதுண்டு..அனால் என்னைப்போல் மத்திய அல்லது யாழின் இடைக்காலப் பகுதியில் வந்தவர்கள் எந்தவேறுபாடுகளுமின்றி புதியவர்கள்,பழையவர்கள் என்று எல்லோருடனும் கலந்து பழகுவது உரையாடுவது யாழில் ஆரோக்கியமான விடயமாக இருக்கிறது..வாழ்த்துக்கு அன்பும் நன்றியும் அண்ணா... 
 
நீலப்பறவை அண்ணா..நலமா அண்ணா..? நல்ல சிந்தனையாளர்,நல்ல கருத்தாளர்...எனக்கு யாழில் பிடித்த அண்ணாக்களில் ஒருவர்...உங்களது உண்மையான பெயரை பார்க்கும்போது கனடாவில் அதே பெயரில் ஒரு பிரபலமானவ்ர் இருக்கிறார்..அவரோ நீங்கள் என்று தெரியலை..எனது "நெடுக மூஞ்சியை நீட்டி" என்ற திரியை கலகலப்பாக்கியவர்களில் ஒருவர்..தொடர்ந்து யாழில் இணைந்திருங்கள் அண்ணா...வாழ்த்துக்கு அன்பும் நன்றியும் அண்ணா..
 
 
மல்லையண்ணா..எமது தமிழ்க்கட்சிகளின் காலத்தில் இருந்து அரசியலை விரல் நுனியில் வைத்திருப்பவர்..சிந்திக்கவைக்கும் எழுத்துக்குரியவர்...அழகான கவிஞனும் கூட...நீங்கள் எழுதி தமிழ்சூரியன் அண்ண இசைஅமைத்த பாடலில் உங்கள் வரிகள் இன்னமும் மிளிர்கின்றன...அக்கபூர்வமான கருத்துக்களால் யாழை அழகுபடுத்திக்கொண்டிருப்பவர்...தொடர்ந்தும் யாழுடன் இணைந்திருந்து கலகலபூட்டுங்கள் அண்ணா..வாழ்த்துக்கு அன்பும் நன்றிகளும் அண்ணா...
 
 
 

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.