Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லை, கிளி மாவட்டங்களில் இராணுவத்தினருக்கு தமிழ் யுவதிகளை கட்டாய திருமணம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எனக்கொரு கேள்வி.. இதை உணர்ச்சிவசத்துடன் சிந்திக்காமல் தார்மீக நியாயத்தின்படி சிந்திக்கவும். :D

 

  • போர்க்காலத்தில் என்னிடம் ஒருவர் பணம் கேட்டு வருகிறார். நான் ஒரு $5000 தருகிறேன் என வைத்துக் கொள்வோம்.
  • போர் முடிந்தபின், நான் அவரிடம் செல்கிறேன். எனக்கு அந்தப் பணம் திருப்பித் தரப்பட வேண்டும் என்கிறேன்.
  • ஆனால் அந்தப் பணம் தாயகத்தில் செலவழிக்கப்படவேண்டும் என்கிறார்கள் வேறு சிலர்.
  • இந்தப் பணத்தை எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்பதில், எனக்கு உரிமை உள்ளதா?
  • அல்லது அந்த வேறு சிலருக்கு உரிமை உள்ளதா?
  • அல்லது காசை வைத்திருப்பவருக்கு உள்ளதா?

எனது பதில்..

 

காசை வாங்கியவர்கள் பதிவு செய்த அமைப்பாக இருக்கும் பட்சத்தில், அந்த அமைப்புக்கே பணம் சொந்தம். :blink:

 

பதிவு செய்யப்படாத அமைப்பென்றால் காசைக் கொடுத்தவருக்கே அதைக் கேட்கும் உரிமை இருக்கிறது. :rolleyes:

 

இதில் காசை தாயகத்தில் செலவழிக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு அவ்வாறு சொல்லுவதற்கு ஒரு உரிமையும் கிடையாது என்பது புலனாகிறது...! :icon_idea:

 

 

இசை, உங்களுடைய கேள்விகள் தனித்து தனித்து இருப்பதால் என்னால் இலகுவாக கருத்து சொல்ல முடியும் என்று நினைக்கிறன்-அது சரி பிழை என்பதர்ற்கு அப்பால்

நீங்கள் குறைந்தது 5 -10 வருடமாது கனடாவில் இருந்திருப்பீர்கள்- அப்படி இல்லாவிட்டால் விளங்காது என்று கருததல்ல :(.  இங்கே நான் இருக்கிற இடத்தில் புதிதாக ஒரு பல்கலைக்கழகம் கட்டுகிறார்கள். கொஞ்சம் அரச உதவி, கொஞ்சம் பணம் அன்பளிப்பாக சேகரித்தார்கள். மிகுதி மாணவர்கள் கட்ட இருக்கும் கட்டணங்களை  வைத்து நடத்த இருக்கிறார்கள்.

இதில் அன்பளிப்பாக செர்ததிர்ற்கு கணக்கு கட்டினார்கள், 27 மில்லியன், அதில் 19 மில்லியன் சேர்த்து விட்டார்கள், அதில் முதல் 20 கொடையாளர் யார் யார் என்ற விபரம், இன்னும் எப்பவளவு காலத்தில் மிச்சத்தை சேர்க்க முடியும் என்ற எதிர்பார்ப்பு, இந்தலவிர்ற்கும்   நான் தனிப்பட்ட ரீதியில் 5 சதம் கொடுக்கவில்லை. -நான் சார்ந்த நிறுவனம் கொடுத்திருக்கலாம்- ஆனால் எல்லாவர்றையும் கறுப்பு வெள்ளையில் அச்சடித்து அனைவருக்கும் கொடுக்கிறார்கள்.

இங்கே ஆயிரம் வேறுபாடுகள் இருக்கும், ஆனால் பொதுவில், பொதுப் பணம் என்னும் போது  அதில் இருக்கும் வெளிப்படை எங்கள் சமூகத்தில் இல்லை,    

மறுபக்கத்தில், என்றவது இந்த காசுகள் சேர்த்தவர்கள் கணக்கு கட்டுவார்கள் என்று எதிர்பாப்பது, அதற்காக ஆளையாள் சண்டைபிடிப்பது எப்பாவது முடியும் என்று நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் உலகில் வேறு ஏதும் இல்லை. போராட்திற்காக பணம்/பொருட்கள் சேகரித்தது இதுதான் முதல் தடவை அல்லவே. வங்கி கொள்ளைகளுன் தொடக்கி புலம் பெயர் நாடுகளில் வங்கி வைப்புகளில், முதலீடுகளில் வந்து நிர்ர்கிறது. ஆனால் இது மட்டும்தான் முடிவு என்று எண்ணாமல் வேறுவழிகள் உதவ முடிந்தால் உதவலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
நன்றிகள் விசுகு அண்ணா.. உங்களைப் போன்றவர்கள் எழுதும்போதுதான் நல்ல தெளிவு பிறக்கின்றது.

 

 

இசை

நீங்களும் பங்களிப்பு செய்தவர்

அதனால் அதை செய்யும்முன் யோசித்தே மிகவும் கடின உழைப்பால் பெற்ற பணத்தை கொடுத்திருப்பீர்கள்.

எனவே உங்களுக்கு நான் எழுதியவுடன் தெளிவு அதிகரிக்கிறது.

 

புலிகளுக்கு பணத்தையோ

ஏன் ஒரு சிறு உதவியோ   வாழ்நாளில்  செய்யாத   அர்யூன் போன்றோர்

இது பற்றி  கேள்வி  கேட்பது தான் மிகவும் கொடுமையிலும்  கொடுமை............... :(  :(  :(

603246_394113760663993_1896742196_n.jpg

 

எனக்கொரு கேள்வி.. இதை உணர்ச்சிவசத்துடன் சிந்திக்காமல் தார்மீக நியாயத்தின்படி சிந்திக்கவும். :D

  • போர்க்காலத்தில் என்னிடம் ஒருவர் பணம் கேட்டு வருகிறார். நான் ஒரு $5000 தருகிறேன் என வைத்துக் கொள்வோம்.
  • போர் முடிந்தபின், நான் அவரிடம் செல்கிறேன். எனக்கு அந்தப் பணம் திருப்பித் தரப்பட வேண்டும் என்கிறேன்.
  • ஆனால் அந்தப் பணம் தாயகத்தில் செலவழிக்கப்படவேண்டும் என்கிறார்கள் வேறு சிலர்.
  • இந்தப் பணத்தை எவ்வாறு செலவழிக்க வேண்டும் என்பதில், எனக்கு உரிமை உள்ளதா?
  • அல்லது அந்த வேறு சிலருக்கு உரிமை உள்ளதா?
  • அல்லது காசை வைத்திருப்பவருக்கு உள்ளதா?
எனது பதில்..

 

காசை வாங்கியவர்கள் பதிவு செய்த அமைப்பாக இருக்கும் பட்சத்தில், அந்த அமைப்புக்கே பணம் சொந்தம். :blink:

 

பதிவு செய்யப்படாத அமைப்பென்றால் காசைக் கொடுத்தவருக்கே அதைக் கேட்கும் உரிமை இருக்கிறது. :rolleyes:

 

இதில் காசை தாயகத்தில் செலவழிக்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு அவ்வாறு சொல்லுவதற்கு ஒரு உரிமையும் கிடையாது என்பது புலனாகிறது...! :icon_idea:

 பதுக்கத்தான் போகப்போகிறார்கள் என்றால், இலகுவாக இப்படிப் பல காரணங்கள் கூறலாம். ஏய்ப்பவர்களுக்கு பல வழிகள். தலைவர் வந்தால் தருவோம் என்றும் கூறி விட்டார்கள்.

துரோகிகளாலும் இந்தப் பதுக்கல் மன்னர்களாலும் அழிந்ததுதான் போராட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 பதுக்கத்தான் போகப்போகிறார்கள் என்றால், இலகுவாக இப்படிப் பல காரணங்கள் கூறலாம். ஏய்ப்பவர்களுக்கு பல வழிகள். தலைவர் வந்தால் தருவோம் என்றும் கூறி விட்டார்கள்.

துரோகிகளாலும் இந்தப் பதுக்கல் மன்னர்களாலும் அழிந்ததுதான் போராட்டம்.

 

தப்பிலி..

 

என்னுடைய அனுபவங்களை வைத்துத்தான் என்னுடைய கருத்துக்களைப் பதிகிறேன்..

 

நான் பங்களித்தபோது அது திரும்ப வருமா என நான் ஒருபோதும் யோசித்ததில்லை. வரவேண்டும் என்று யோசித்ததும் இல்லை. பங்களிக்கும்போது முழுமையாக எனது விருப்பத்தின் பேரிலேயே அது அமைந்தது.

 

அவ்வகையில் ஒவ்வொருவரும் பங்களித்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். மிரட்டல் மூலம் பணம் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்கள் அதற்கான பதில் நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவர்கள் எடுத்திருக்கலாம்.. அல்லது எடுக்கலாம்..

 

சரி.. இன்று காசு சேர்த்தவர்கள் பதுக்கி விட்டார்கள் என்று கூறுகிறோம்.. இதனால் வாழ்க்கையையே இழந்தவர்களுக்கு என்ன பதில்?

 

தப்பிலி..

 

என்னுடைய அனுபவங்களை வைத்துத்தான் என்னுடைய கருத்துக்களைப் பதிகிறேன்..

 

நான் பங்களித்தபோது அது திரும்ப வருமா என நான் ஒருபோதும் யோசித்ததில்லை. வரவேண்டும் என்று யோசித்ததும் இல்லை. பங்களிக்கும்போது முழுமையாக எனது விருப்பத்தின் பேரிலேயே அது அமைந்தது.

 

அவ்வகையில் ஒவ்வொருவரும் பங்களித்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன். மிரட்டல் மூலம் பணம் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்கள் அதற்கான பதில் நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவர்கள் எடுத்திருக்கலாம்.. அல்லது எடுக்கலாம்..

 

சரி.. இன்று காசு சேர்த்தவர்கள் பதுக்கி விட்டார்கள் என்று கூறுகிறோம்.. இதனால் வாழ்க்கையையே இழந்தவர்களுக்கு என்ன பதில்?

இசை,

பெரும்பான்மையான பணம் கொடுத்தவர்கள், அது திரும்பி வரும் என்று கொடுக்கவில்லை. நல்லதொரு காரணத்திற்காகவே கொடுத்தார்கள்.அதைத் திருப்பியும் கேட்கவில்லை.

ஆயுதப் போராட்டம் முடிவிற்கு வந்த நிலையில், வாழ்க்கையை இழந்தவர்கள் ஒரு பங்கை தங்களுக்கு வைத்துக் கொண்டு மிகுதியை நாட்டில் உள்ள போராளிகள் / பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கு பயன்படுத்தல்லாம்தானே?

  • கருத்துக்கள உறவுகள்
முதலில் கருத்தை வாசித்து கருத்தெழுதவும் உங்களைப் போல வேண்டும் என வீம்புக்கு கருத்தெழுதுபவர்களுக்கு பதில் எழுதி ஒரு பயனும் இல்லை...அகூதா வந்து எழுதட்டும் அதற்கு நான் பதில் எழுதுகிறேன்

 

நான் உங்களை மேற்கோள் காட்டி எழுதவில்லையே. அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் நீங்கள் இருக்கிறீர்கள் போலும்..! நான் பொதுப்படையாக இத்தலைப்பில் அகூதா அண்ணாவின் நிலைப்பாடு தெளிவாக உள்ளதை உணர்ந்ததால் மேற்படி குறிப்பை விசாலித்து எழுதினேன்.

 

மேலும்.. நீங்கள் மற்றும் அர்ஜீன் போன்ற சிலரிடம் ஒரு கேள்வி...???!  உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு கடந்த காலங்களில் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்... ஊரில் இருந்தப்போ இரண்டு பவுன் கொடுத்தீங்களா..??! அது திருப்பி தரப்பட்ட போது மீளப் பெற்றுக் கொண்டீர்களா..??!

 

சும்மா ஒரு சதமும் ஈயாதவர்கள் எல்லாம் கணக்குக் கேட்பது தான் வேடிக்கை. ஒரு இயக்கம் நெருக்கடிகளை சர்வதேச தடைகளை சந்தித்து நிற்கும் இந்த வேளையில் அதன் நிதி மற்றும் ரகசியங்களை வெளியிடுவது அதன் இலக்கிற்கும் அது சார்ந்த மக்களுக்கும் ஆபத்து.

 

இந்தக் கட்டத்தை அது கடக்கும் போது நிச்சயம்.. பணத்தைப் பதுக்கியவர்கள்.. ஒதுக்கியவர்கள் (உண்மையாக அப்படி நடந்திருந்தால்.. அவை விசாரிக்கப்படும்) அவற்றிற்குப் பதில் சொல்வார்கள்.

 

ஆனால் இன்றைய பொழுதுகளில் அதையே சாட்டு வைத்து புளொட்டில் இருந்தும் ஈபிடிபி இல் இருந்தும் கூட்டணியில் இருந்து கருணா குழு.. பிள்ளையான் குழுங்களில் இருந்தும்.. வரதராஜப் பெருமாள் ஈபி குழுவில் இருந்தும்.. இதர சுண்டக்காய் துரோகக் கும்பல்களில் இருந்தும்... தங்கள் சுகபோகச் சுயநலத்துக்கு மக்கள் பணத்தைக் காலம் காலமாக சுரட்டிக் கொண்டிருப்பவர்களை இட்டு மக்கள் மெளனமாகி விட முடியாது. ஜனநாயகத்தின் பெயரால் அவர்கள் அடிக்கும் பகற் கொள்ளைகளை மக்கள் வெளி உலகத்திற்கு கொண்டு வரனும்..!

 

இன்றைய நிலையில்... தமிழீழ மீட்பு நிதியாகட்டும் எந்த நிதிப்பளிப்பாக இருக்கட்டும் அது ரகசியமாக வைக்கப்படுதலே மக்களின் அந்தப் பணம் எதிரிகளாலும் உலக உளவு அமைப்புக்களாலும் திருடப்படாமல் இருக்க உதவும். அந்தப் பணத்தைக் காட்டிக்கொடுத்து அதில் தாங்களும் எதிரிகளிடம் பங்கு கேட்க ஒட்டுக்குழுக்களைச் சார்ந்தோர்.. முன்னாள் புலிகள் என்போரை வளைத்துப் போட்டு ரகசிங்களை கறக்கலாம் என்று கனவு காண்கின்றனர். ஆனால்.. புலிகள்.. இந்த முன்னாள்களையும் அறிவார்கள். அவர்களின் திருகுதாளங்களையும் அறிவார்கள். ஒட்டுக்குழுக்களைப் பற்றியும் நன்கே அறிவார்கள். எதிரிகள் பற்றியும் அறிவார்கள். உலக உளவுத்துறை வல்லூறுகள் பற்றியும் அறிவார்கள்.

 

எமது மக்களின் பணத்தை எதிரிகளும் ஒட்டுக்குழுக்களும் துரோகிகளும் சர்வதேச வல்லாதிக்க முதலைகளும் சுருட்டிக் கொள்வதிலும்.. எமது மக்களிடமே அது ரகசியமாக இருப்பது மேல்..! அதையாவது விளங்கிக் கொள்ளுறீங்களோன்னா.. அது கூடக் கிடையாது. எல்லாத்திற்கும் எரிச்சல்.. பொறாமை..!  இதனால் தான் இத்தனை ஆயிரம் மக்களின் இழப்பிலும் புலி அழிந்தது என்று சிலரால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. இந்த மனிதமற்ற ஜென்மங்கள்.. புலிகளுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே பிரயோசனம் அற்றவர்கள்... அதை நீங்க புரிஞ்சுக்கனும்.  :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்க இருப்பது போல தமிழ்நாடு ஸ்டேட் பேங்கு கூட திறக்க முடியாது அங்க.. கோ ஆப் ரேட்டு பேங்கு திறங்குறீங்களா அங்க.. ஒக்கே சிங்களன் அனுமதி குடுத்திட்டாலும் அந்த பேங்குக்கு நீங்க டப்பு டிரான்ஸ்பர் பண்னிங்கன்னா.. 10000 ரூபாய்க்கு 5000 ரூபாய் ரெக்ஸ் போடுவான்.. அநத 5000 என்ன காந்தி கணக்குல போறதா..?

டிஸ்கி:

வெளிநாட்டு தொண்டு அமைப்புகள் மூலமாக  அதுவும் வெள்ளையளை விட்டு கொடுக்க செய்ய வேண்டும் ..கூடுமானவரை பொருட்களாக குடுக்க வேண்டும்...  அவுங்கள இவன் தட்டினான் என்றால் வெளிநாட்டுக்கு நீயுஸ் போகும்... :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு

உங்களது கருத்தை வாசிக்கும்போது எனக்கு ஒன்று புரிந்தது

 

சிலர் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்

அது எல்லாம் முடிந்தது என்பது தான்.

 

ஆனால் என் போன்றோருக்கு எதுவுமே முடியவில்லை

முடியவும் சிங்களம் விடப்போவதில்லை.

எல்லாம் முன்னைவிட வீச்சாக வரும் என்று புரிகிறது.

அதனால் எதையும் கலைத்துவிட முடியாது.

 

எல்லாம் முடிந்தது என்போன்றோரின் பேச்சுக்கள் எழுத்துக்கள்தான் தற்பொழுது வருகின்றன.

இங்கு வந்த சிலவற்றை முக்கிய  சிலரின் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.

பதில்

பைத்தியகாறர்களுக்கு பதில் சொல்லக்கூடாது

அதையே  அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்று வந்தது.

 

எல்லாம்  முடிந்தது என்போர் அவர்களது கற்பனைகளை  தொடரட்டும்

அதற்கு ஒரு எல்லையுண்டு

அதன் பின்பு.............................????????????

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்கு

உங்களது கருத்தை வாசிக்கும்போது எனக்கு ஒன்று புரிந்தது

 

சிலர் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்

அது எல்லாம் முடிந்தது என்பது தான்.

 

ஆனால் என் போன்றோருக்கு எதுவுமே முடியவில்லை

முடியவும் சிங்களம் விடப்போவதில்லை.

எல்லாம் முன்னைவிட வீச்சாக வரும் என்று புரிகிறது.

அதனால் எதையும் கலைத்துவிட முடியாது.

 

எல்லாம் முடிந்தது என்போன்றோரின் பேச்சுக்கள் எழுத்துக்கள்தான் தற்பொழுது வருகின்றன.

இங்கு வந்த சிலவற்றை முக்கிய  சிலரின் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.

பதில்

பைத்தியகாறர்களுக்கு பதில் சொல்லக்கூடாது

அதையே  அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்று வந்தது.

 

எல்லாம்  முடிந்தது என்போர் அவர்களது கற்பனைகளை  தொடரட்டும்

அதற்கு ஒரு எல்லையுண்டு

அதன் பின்பு.............................????????????

 

 

அவர்கள் அப்படி நினைப்பதும் ஒரு வகைக்கு நல்லது. இவர்கள் முடியல்லைன்னு நினைச்சுத்தான் என்னத்தை சாதிக்கப் போகிறார்கள். எவனோ சாதிக்கப் போறான். இவர்கள் இப்படியே புறணி பாடிக்கிட்டு சிவனேன்னு சிவலோகம் போகப் போகிறார்கள். அவ்வளவு தானே.

 

இதுக்குப் போயி நாங்க ஏன் வீணா அலட்டிக்குவான். மக்கள் குழம்பாமல் இருந்தால் போதும். மக்களுக்குத்தான் இவர்களைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே அன்றி.. மற்றும்படி.. இவர்களால்.. போராடத்தில் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. அதை வென்று கொடுக்கவும் முடியாது. அதுதான் பார்க்கிறோமே சில தசாப்தங்களாக என்ன செய்து கிட்டு இருக்கினமுன்னு..! :):icon_idea:

இதில் உங்களுக்கு என்ன சந்தேகம்,உங்கட கருத்தை வாசிக்கும் போதே தெரியுதே, அதிவிட தமிழருக்கு கெட்ட பெயரோ? தனது சொந்த இனம் அழிந்தாலும் பரவாயில்லை, புலி அழிந்தால் காணும் என்று குதுகலிக்கும் உங்களை விட, புலிகளை நம்பி கண்ணை மூடிக் கொண்டு பணம் கொடுத்தவன் எவ்வளவோ மேல்.

Edited by Dash

நீங்கள் அப்படி விளங்கினால் எதுவும் செய்யமுடியாது,

கடந்த மூன்று ஆண்டுகளும் யுத்தம் நடந்திருந்தால் எவ்வளவு இழப்புக்கள் வந்திருக்கும் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?

தமிழனுக்கு தீர்வு கிடைக்கவில்லையே ஒழிய யுத்தம் முடிந்தது எவ்வளவு பெரியவிடயம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


 
அர்ஜுன் இன்னுமொரு காரணம் சொல்லுகிறார் ஏன் இந்த காசு தீண்டத்தகாது, அதை பற்றி ஆராய்ந்தால் என்ன என்ன விளைவுகள் வரும் என்று. எனவே எல்லாருக்கு வசதியாக, இதை உறை நிலையில் வைப்பதே சாலச் சிறந்தது. மற்றையவர்கள் அவரவர் பட்டில மஹிந்த சிந்தனையும், பிரபாகரன் சிந்தனையும், டகிலஸ் சிந்தனையும், கருணா சிந்தனையும், சம்பந்தர் சிந்தனையும், நாடு கடந்த அரசு சிந்தனையும், GTF சிந்தனையும், தமிழ்நெட் சிந்தனையும், யாழ் டாட் கொம் சிந்தனையும்,ம் பூபாளம் சிந்தனையும் ....இனி வரவிருக்கிற இன்னோரென்ன சிந்தனைகளையும் சிந்திப்போம்

 

நியானி: மேற்கோள் நீக்கம்

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அப்படி விளங்கினால் எதுவும் செய்யமுடியாது,

கடந்த மூன்று ஆண்டுகளும் யுத்தம் நடந்திருந்தால் எவ்வளவு இழப்புக்கள் வந்திருக்கும் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?

தமிழனுக்கு தீர்வு கிடைக்கவில்லையே ஒழிய யுத்தம் முடிந்தது எவ்வளவு பெரியவிடயம் .

 

நீங்கள் கடந்த 3 ஆண்டு கால யுத்த அழிவைப் பற்றி மட்டும் தான் கணக்குப் போடுறீங்கள். நாங்களோ.. உங்கட தலைவர் உமாமகேஸ்வரனின் காலம் அதற்கு முந்தின காலத்தில இருந்து நீங்கள் யுத்தம் செய்ய வெளிக்கிட்டு அழிந்து போன மக்களையும் நினைக்கிறம். உங்கட தலைவரின் வழிகாட்டி அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்.. இரத்தத்தில திலகமிட்டு உசுப்பேத்தி இருக்காட்டி.. யோகேஸ்வரன் 5000 தமிழ் இளையர்களை தாருங்கள்.. நான் இராணுவத்தை விரட்டி தமிழீழம் எடுத்துத்தாறன் என்று சிங்களவனை உசுப்பி இராட்டி.. பிரபாகரனும் வந்திருக்கமாட்டார்.. தமிழர்களுக்கு யுத்த அழிவுகளும் வந்திருக்காது. அன்று போல் இன்றும் தீர்வும் கிடைத்திருக்காது. நீங்களும் கனடா.. இலண்டன் என்று இல்லாமல் ஊரில வடலிக்க வீடோ.. கொட்டிலோ... போட்டுக் குடியிருந்திருப்பீர்கள்..!

 

அதையும் கொஞ்சம் யோசிச்சுப் பார்க்கலாமே..??!

 

நீங்க சனத்தை வெருட்டி காசு வாங்கினது என்ன அகிம்சைப் போராட்டம் நடத்தவா. புலிகள் போராடினா அது பயங்கரவாதம்.. நீங்கள் போராடினா.. அது புனிதவாதமோ..??! சும்மா கிடந்த மாலைதீவில கைவைக்கப் போய் கடைசியில ஈழப்போராட்டமே பிராந்திய அச்சுறுத்தல் என்று ஆக்கினதும்.. பயங்கரவாதம் ஆக்கினதும் நீங்கள். இப்போ.. ஏதோ புலிகள் தான் எல்லாம் என்ற கணக்கில கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் குறைச்சலில்ல. இதால தான் நீங்கள் மக்களை விட்டு வெகு தூரத்தில் நிற்கிறீர்கள். ஏன்னா.. உங்கள் சார்ந்த உண்மையை உங்களுக்குப் பேசத் தயக்கம். மற்றவர்கள் சார்ந்த கற்பனைகளை அவிழ்த்துவிட்டு உங்களின் பலவீனங்களை குற்றங்களை மறைக்க நினைக்கிறியள். இதால தான் உங்களை எல்லாம் ஊரைவிட்டே விரட்ட வேண்டிய நிலையும் மக்களுக்கு வந்தது. விரட்டப்பட்டும் நீங்க திருந்தல்ல..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கான காலங்கள் கனிந்து வரும்வரை உப்படியான சொதப்பல்கள் இருக்கத்தான் செய்யும்.... பண்டாரவன்னியன் காலத்திலிருந்தே எமக்கான துரோகிகளை வளர்த்து எடுத்ததே நிறைய தப்பு! முளையிலேயே களைந்து எடுத்து இருந்தால் இத்தனை கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு எமக்கில்லாது இருந்து இருக்கும்.!...!

  • கருத்துக்கள உறவுகள்
இங்குள்ளவர்கள் போராட்டத்திற்கு காசு கொடுத்தற்கு காரணம் எமது போராட்டம் கட்டாயம் வெல்ல வேண்டும் என்பதற்காக மாத்திரம் இல்லை...போராட்டத்திற்கு என்று அனுப்பட்ட பணம் ஒன்று போராட்டத்திற்கு பயன்பட்டிருக்க வேண்டும் அல்லது அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்பட வேண்டும் இரண்டுக்கும் இல்லாமல் இன்னொரு போராட்ட‌ம் வரும் அதற்கு அதைப் பயன் படுத்துவார்கள் என்பது சுத்த வேஸ்ட்.
 
சிங்களவன் இப்பவே கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் இனகலப்பு செய்து இன அழிப்பு செய்கிறான்...அங்கு இருக்கும் தமிழர் மொத்தமாய் சிங்களவனாய் மாறிய பின் யாருக்கு ஈழம்? ஏன் இன்னுமொரு போராட்ட‌ம்?...ஏற்கனவே அரைவாசிக்கு மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்தாயிட்டு மிச்சமிருக்கும் கொஞ்ச‌ சனமும் சிங்களவனாய் மாறி விட்டால் விச‌யம் முடிந்திது...ஏற்கனவே புத்தளம்,சிலாபம் போன்ற பகுதியில் இருக்கும் மக்கள் சிங்களவராய் மாறிட்டினம்.
 
அடிச்ச காசில் கொஞ்ச‌மேனும் சுய தொழில் வாய்ப்புக்கள் ஏற்பட்டுத்தி கொடுத்தால் ஏன் இந்த சனம் வறுமையைக் காட்டி இனம் மாறப் போகுது...அதை விட‌ வன்னியில் போரினால் பாதிக்கப்பட்ட சனத்தை யாழ்ப்பாண சனம் திரும்பியும் பார்ப்பதில்லை...தீண்ட‌தகாதவர்கள் மாதிரி ஒதுக்கி வைத்திருக்குது...முதலில் இப்படியான பிர‌ச்ச‌னைகளை தீருங்கோ பிறகு நாடு பிடிப்பதை பற்றி யோசிக்கலாம்.
 
அனுப்பிற காசில் அர‌சும்,சிங்களவனும் எடுக்கத் தான் போறான் ஆனால் கொஞ்ச‌மேனும் அந்த மக்களுக்கு இந்த காசால் பயன் கிடைக்கும் தானே!...நீங்கள் உண்டியல் மூலமாக தனித்தனியாக உங்கள் சொந்தகார‌ருக்கு அனுப்பும் காசில் அவன் எடுக்காமல் இருக்கிறானா?...எடுக்கிற விகிதம் தான் வித்தியாச‌ப்படும்...நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாட்டு என்ட‌ மாதிரித் தான் இருக்குது பல பேர‌து கருத்துக்கள்.
 
திரும்பவும் சொல்கிறேன் நாங்கள் குடுத்த காசுக்கு கணக்குக் காட்டத் தேவையில்லை ஆனால் குடுத்த காசை அங்குள்ள மக்களுக்கு பிர‌யோச‌னப்படுத்துகின்ற மாதிரி பயன்படுத்த தான் சொல்கிறேம்.
 

எங்களுக்கான காலங்கள் கனிந்து வரும்வரை உப்படியான சொதப்பல்கள் இருக்கத்தான் செய்யும்.... பண்டாரவன்னியன் காலத்திலிருந்தே எமக்கான துரோகிகளை வளர்த்து எடுத்ததே நிறைய தப்பு! முளையிலேயே களைந்து எடுத்து இருந்தால் இத்தனை கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு எமக்கில்லாது இருந்து இருக்கும்.!...!

 

 

பணத்தை அமுக்கியவர்களை களைந்து எடுக்கத் தேவையில்லை. அவர்களுக்கு அதற்கும் ஒரு காரணம் இருக்கும்.  

நீங்கள் அப்படி விளங்கினால் எதுவும் செய்யமுடியாது,

கடந்த மூன்று ஆண்டுகளும் யுத்தம் நடந்திருந்தால் எவ்வளவு இழப்புக்கள் வந்திருக்கும் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?

தமிழனுக்கு தீர்வு கிடைக்கவில்லையே ஒழிய யுத்தம் முடிந்தது எவ்வளவு பெரியவிடயம் .

நீங்கள் டாஸ் கேட்ட கேள்விக்கு தன் பதில் எழுத்துகிறீர்களா எனப்து தான் சந்தேகமாக இருக்கு.

 

அவர் சொல்ல வந்தது உங்களின் நிலைப்பாடு "தமிழருக்கு தீர்வு அவசியமில்லை. புலிகள் ஒழிய வேண்டும்" என்பதாகும். நீங்களும் அதுவேதான் உங்கள் நிலைப்பாடு என்கிறீர்களா? அல்லது அது வேறு என்கிறீர்களா?.  பூசி மெழுகும் வசனங்களை தேட வேண்டாம். "ஆம், இல்லை" என்பது போதும்.

 

டாஸ் சொல்வது, அவரின் வசனத்தில்:

 

"தனது சொந்த இனம் அழிந்தாலும் பரவாயில்லை, புலி அழிந்தால் காணும் என்று குதுகலிக்கும் உங்களை விட"

 

மேலும் புலிகள் அழிந்த பின்னரும் போர் நடந்து 130 நாட்களுக்கு ஒருதடவை 146,000 இந்த மூன்று வருடம் அழிந்திருப்பார்கள் என்கிறீர்களா.  "கடந்த மூன்று ஆண்டுகளும் யுத்தம் நடந்திருந்தால் எவ்வளவு இழப்புக்கள் வந்திருக்கும் என்று எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா?" என்று சொல்லும் நீங்கள் எற்கனவே ஒரு கணக்கு வைத்திருக்கிறீர்கள் எனபதைதான் இங்கே சொல்கீறீர்கள். எனது கணக்கு பிழைகாக இருந்தால் தயவு செய்து இங்கே உங்கள் கணக்கைப் போட்டு விளங்கப்படுத்த முடியுமா?

கனடாவில் நான் வரி செலுத்துகின்றேன். நீங்கள் பிரித்தானியாவில் இல்லை பிரான்சில் வரி செலுத்துபவர்களாக இருப்பீர்கள்.

 

எமது வரி பல நல்ல காரியங்களுக்கு பயன்படும் அதேவேளை  எமக்கு விருப்பம் இல்லாத விடயங்களிலும் வீணாக்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தான் யுத்தத்திலும் பயன்படுத்தப்படுகின்றது. மக்களால் மக்களுக்கு சேவை செய்ய என வந்தவர்கள் பலர் கோடிகளை   தமது சொந்த பணமும் ஆக்கியுள்ளனர்.

 

அரசியல்வாதி என்பது நல்ல தொழில். ஆனால்  பல நேர்மையானவர்களும் நல்லவர்களும் முன்வருவதில்லை. அதனால் அவர்களை குறை கூறுவதையே பெரும்பான்மையானவர்கள்  சமூகத்தில் கொண்டுள்ளனர்.

மாணவனே இப்படி என்றால்  ஆசிரியரை பற்றியும் அந்த பாடசாலை அதிபர் பற்றியும் நல்ல சிந்தனைகள் வருமா? :D:lol:

3502_10200167391936387_156129880_n.jpg

முல்லை, கிளி மாவட்டங்களில் இராணுவத்தினருக்கு தமிழ் யுவதிகளை கட்டாய திருமணம்
 

6353_231071737024968_77743547_n.jpg

இதில் குறிப்பாக போரில் கை கால்களை இழந்தவர்களுக்கே தமிழ்ப் பெண்களை இன அழிப்புத் திருமணங்களை சிங்கள பயங்கரவாத அரசு நடாத்தி வைக்கின்றது.

 

- முகநூல் செய்தி

  • கருத்துக்கள உறவுகள்
ஒருத்தரும் நான் கேட்டதிற்கு பதில் எழுதாமல் சுத்தி வந்து என்னமோ எழுதுறாங்கள் :(
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
'இராணுவத்தினரை திருமணம் செய்யுமாறு தமிழ்ப் பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்'
செவ்வாய்க்கிழமை, 18 டிசெம்பர் 2012 14:10 0 COMMENTS
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணுவத்தினரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என குற்றஞ்சாட்டியுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சரும் தி.மு.க.வின் தலைவருமான மு.கருணாநிதி, இது தொடர்பில் இந்திய அரசாங்கம் ஆராய்ந்து இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
அண்மையில், மாவீரர் தினத்தை அனுஷ்டித்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர் எனவும் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். 
 
யாழ்ப்பாணம் என்பதன் சுருக்கமான 'யாழ்' என்று கூறினாலே சிங்களவர்கள் கோபப்படுகின்றனர். யாழ்ப்பாணம் உலக தமிழ் மாநாட்டின் போது தமிழ் அறிஞர்கள் தாக்கப்பட்டனர். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது எனவும் அவர் நினைவூட்டினார். 
 
இவ்வாறான நிகழ்வுகளை நிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். (த ஹிந்து)  

நன்றி கறுப்பி.

 

திரும்ப காங்கிரஸ் - கருணாநிதி கூட்டு ஒரு பக்கம், ஜெயலலிதா கூட்டு பக்கம் இன்னொறு பக்கம் தான் வரும் போல இருக்கு. எனவே ஈழப்போரில் இலங்கை அரசுக்கு ரசாயன ஆயுதம் கொடுத்த கூட்டை அகிலத்தமிழர் தொடர்ந்து எதிர்க்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.