Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் காதல் கடிதம்

Featured Replies

எனக்கு அப்போ பதினைஞ்சு வயசு  தான் இருக்கும். பூனை மீசை இடைக்கிடை அரும்பி இருந்தாலும், தலைவர் பிரபாகரன் மாதிரி பொட்டு அம்மான் மாதிரி (அந்த காலத்தில் மீசை என்றால் அவர்களது மீசை தான் அழகு) மீசை வர வேண்டும் என்று, அப்பாவின் முகச்சவரஅலகை  (சேவிங் பிளேடு தானுங்க ..சும்மா தமிழ்ல சொல்லி பார்த்தேன் ) கள்ளமாக எடுத்து வழிச்சும் பார்த்தாச்சு மீசை வளர்ந்த பாடு இல்லை.
 
எங்கட ஊர் பிள்ளையார் கோவிலில் ஐயருக்கு எல்லாமே நாங்க தான், மணி அடிக்கிறது, மடப்பள்ளி கழுவிறது, சாமி தூக்கிறது, மாலை கட்டுறது ஏன் மேளகாறார் வராவிட்டால் மேளம் அடிக்கிறதும் நாங்கள் தான். அதுக்கு லஞ்சமாக பிள்ளையாருக்கு வைச்ச பொரிச்ச மோதகம் கருவறையின் பின் வாசல் வழியாக எங்களுக்கு எப்பவுமே வந்து சேரும்.
 
அண்டைக்கும் அப்படி தான், கோயில் கிணத்தின் கட்டில் ஏறி நந்தியாவட்டை பூவை பறிச்சு கொண்டு பாயும் போது, கிணத்தடியில் இருந்த தண்ணிக்குள் விழ, அது அந்த அழகு தேவதையின் முகத்தில் தெறித்தது. அவளின் கோப பார்வையில் கூட அந்த காலத்து கௌசல்யா மாதிரி அழகாக கோவிச்சாள். மனசுக்குள்ளே என்ன முனுமுனுத்தாளோ, எனக்கு அவள் தேவராம் பாடுவது போல தான் இருந்தது.
 
சொன்னால் நம்ப மாட்டீங்கள். நான் அதுவரை சினிமாவில் கண்ட கதாநாயகிகள் எல்லாரையும் விட அழகாக இருந்தாள். முகத்திலே பனித்துளி மாதிரி ஒரு சின்ன சிவந்த பரு கூட அவளுக்கு அழகாக தான் இருந்தது.
அண்டைக்கு மட்டும் நான் கோயிலை ஒரு பதின்மூன்று தடவையாவது சுத்தி இருப்பேன். நான் விழுந்து கும்பிடாத இடம் இல்லை. பலிப்பீடத்தை கூட ஐஞ்சு தரம் சுத்தினேன். அவ்வளவு அழகு அவள்.
 
யாரடா மச்சான் இது, சுப்பர் மூசடா என்று நண்பனிடம் வினாவ,
மச்சான் தெல்லிப்பளையில் இருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கினம், வேம்படியில் படிக்குது மச்சான் என்று சொல்லி கொண்டே போனார் ,  எங்க ஊர் புலனாய்வு பொறுப்பாளர் நிக்சன் கூட அவ்வளவு விலாவாரியா சொல்ல மாட்டார் அந்த அளவுக்கு அவளை பற்றி புட்டு புட்டு வைச்சான்.
 
அவளுக்கு என் நண்பனின் தங்கை வெண்ணிலா தோழியானாள். எட்னா கண்டோஸ் இற்குள் வரும் கரடி மான் ஸ்டிக்கர் கேட்ட போது தான் அவள் முதன் முதல் என்னுடன் பேசினாள். அவளுக்காக வீட்டில வாங்கும் எல்லா எட்னா கண்டோசுகக்கா தங்கச்சி காலில் கூட விழுந்திருக்கிறேன்.  டைனமோ சுத்தி நண்பனின் வீட்டில் வானொலி கேட்ட பொது ஒலித்த மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ என்று அவள் வாயினுள் முனுமுணுததுக்காக  பூபாலசிங்கம் புத்தக கடையிலே பாட்டு புத்தகம் வாங்கி அண்ணாவின் ராயர் தேய தேய சுத்தி மூச்சு விடாமல் பாடி பழகி அவளுக்கு பாடி காட்டும் போது தான் தெரியும் என் நண்பனும் அந்த பாட்டை பழகி கொண்டிருந்தான் என்று.
 
நாங்கள் விளையாடும் பனை வெட்டையின் ஓரத்திலே என்றைக்கோ மின்சாரம் வரும் என்று நட்டு வைச்ச பழைய போஸ்டிலே கையை ஊண்டியபடி, லேடிஸ் சைக்கிளில் இருந்து காற்றுக்கு பறக்கும் பாவாடையை கையினால் அமத்திய படி, ஓன் டுவுன் ஆக களமிறங்கும் என்னை பார்க்கும் காட்சி எனக்கு மர்லின் மன்றோவை தான் நினைவுக்கு கொண்டுவரும். (என்ன செம பீட்டர் விடுறேனா ..சரி எனக்கு நக்மாவை தான் நினைவுக்கு கொண்டுவரும்) என்ன இப்போ ஓகேயா..??
 
அவளை பார்த்து பார்த்து மட்டையை முத்தமிட்டு முத்தமிட்டு, சிவப்பு தொப்பியை சரி செய்து, எதோ ஹார்ட் பௌல் பிட்ச் மாதிரி முன்னாள் இருக்கும் புல்லு கல்லு எல்லாம் எடுத்து எறிஞ்சு, முதலாவது பந்தையே சிக்ஸர் அடிக்க வேணும் என்று கொஞ்சம் முன்னுக்கு வந்து விசுக்கினால், என்னுடைய விக்கட்டை கீப்பர் ஐந்து அடிக்கு அங்காலே இருந்து பொறுக்கி கொண்டு வருவான். அப்போது அவள் என்னை பார்த்து களுக் என்று ஒரு சிரிப்பு சிரிப்பால் பாருங்கோ இண்டைக்கு வரைக்கும் தமன்னா, ஜெனிலியா, காஜல் அகர்வால் அனுஷ்கா கூட அப்படி சிரிச்சு இருக்க மாட்டாளவை (ரசிகர்கள் மன்னிக்க வேண்டும்). உண்மையிலே அப்படி ஒரு சிரிப்பு.
 
ச்சே ..இவ்வளவு சொல்லிட்டேன் அவளது பேரை இன்னும் சொல்லலையே. 
 
அவள் பெயர் திவ்யா...
 
 
கடிதம் தொடரும் .....
  • Replies 111
  • Views 15.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பயணக் கட்டுரை மாதிரி ஆகாம தொடருங்கோ ........இளமைக்கால கிளுகிளுப்பு நல்லாத்தான் இருக்கு :D

  • தொடங்கியவர்
நந்து எப்படியும்  தொடர பார்க்கிறேன். முதல் காதலை தான் எழுதுவம் என்று பார்த்தேன். இப்போ முழு காதலையும் எழுதினால் என்ன என்று தோணுது.
 
நந்து சொன்னால் நம்ப மாட்டீங்கள். இந்த கதை கூட லெபனான் செல்லும் வழியில் அம்ஸ்டர்டாம் விமான நிலையம் பனிபுகாரினால் 4 மணித்தியாலம் தாமதம். அவங்கள் தந்த 50 Euro இற்கு ஒரு மீல்சும் ஆப்பிள் ஜூஸும் சாப்பிட்டு கொண்டு உங்களுக்கு பதில் போடுறேன்.
 
நேரம் கிடைச்சால் எழுதாமலா விட போறேன்.. :D
 
நந்து எப்படியும்  தொடர பார்க்கிறேன். முதல் காதலை தான் எழுதுவம் என்று பார்த்தேன். இப்போ முழு காதலையும் எழுதினால் என்ன என்று தோணுது.
 
நந்து சொன்னால் நம்ப மாட்டீங்கள். இந்த கதை கூட லெபனான் செல்லும் வழியில் அம்ஸ்டர்டாம் விமான நிலையம் பனிபுகாரினால் 4 மணித்தியாலம் தாமதம். அவங்கள் தந்த 50 Euro இற்கு ஒரு மீல்சும் ஆப்பிள் ஜூஸும் சாப்பிட்டு கொண்டு உங்களுக்கு பதில் போடுறேன்.
 
நேரம் கிடைச்சால் எழுதாமலா விட போறேன்.. :D
 

 

 

அப்ப வந்தமாதிரித்தான்  :lol: :lol:  கதை நன்று தொடர்ந்தால் வகுப்பேற்றப்படுவீர்கள் :D :D .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியே லெபனான் நாட்டு பொண்ணுங்க சூப்பர் அழகா இருப்பாங்க என்ஜாய் :D

தொடருங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் எழுதி அரைகுறையாப் போடாமல் முழுதும் எழுதி முடிச்சிட்டுப் போடுங்கோ பகலவன் :D

  • கருத்துக்கள உறவுகள்
வேற வேலை இல்லை பழைய காதற் கதை,மண்ணாங்கட்டி என்று போய் பயணக் கட்டுரையை முதலில் எழுதி முடிக்கவும். 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமே அசத்துது!

தொடருங்கோ,பகலவன்!

பச்சைக்குப் பிறகு வாறன்!

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு அப்போ பதினைஞ்சு வயசு  தான் இருக்கும். பூனை மீசை இடைக்கிடை அரும்பி இருந்தாலும், தலைவர் பிரபாகரன் மாதிரி பொட்டு அம்மான் மாதிரி (அந்த காலத்தில் மீசை என்றால் அவர்களது மீசை தான் அழகு) மீசை வர வேண்டும் என்று, அப்பாவின் முகச்சவரஅலகை  (சேவிங் பிளேடு தானுங்க ..சும்மா தமிழ்ல சொல்லி பார்த்தேன் ) கள்ளமாக எடுத்து வழிச்சும் பார்த்தாச்சு மீசை வளர்ந்த பாடு இல்லை.

 

பகலவன் உங்களை வெளிச்சத்தில கண்டமாதிரி இருக்கு ஊகம் சரிதானே ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்
பகலவன் உங்களை வெளிச்சத்தில கண்டமாதிரி இருக்கு ஊகம் சரிதானே ? :lol:

 

இருட்டுக்க எப்பிடிப் பாப்பியல்  :)

  • கருத்துக்கள உறவுகள்

 எங்க ஊர் புலனாய்வு பொறுப்பாளர் நிக்சன் கூட அவ்வளவு விலாவாரியா சொல்ல மாட்டார் அந்த அளவுக்கு அவளை பற்றி புட்டு புட்டு வைச்சான்.
 

 

நிக்சனையே மிஞ்சிய ஒரு புலனாய்வுத்தளபதியைத்தான் நீங்கள் நண்பனா பெற்றிருக்கிறீங்கள். பாவம் அந்த நிக்சன். :lol:

இருட்டுக்க எப்பிடிப் பாப்பியல்  :)

 

உங்களுக்கு அதெல்லாம் விளங்காது. :icon_idea:

நந்து எப்படியும்  தொடர பார்க்கிறேன். முதல் காதலை தான் எழுதுவம் என்று பார்த்தேன். இப்போ முழு காதலையும் எழுதினால் என்ன என்று தோணுது.
 
நந்து சொன்னால் நம்ப மாட்டீங்கள். இந்த கதை கூட லெபனான் செல்லும் வழியில் அம்ஸ்டர்டாம் விமான நிலையம் பனிபுகாரினால் 4 மணித்தியாலம் தாமதம். அவங்கள் தந்த 50 Euro இற்கு ஒரு மீல்சும் ஆப்பிள் ஜூஸும் சாப்பிட்டு கொண்டு உங்களுக்கு பதில் போடுறேன்.
 
நேரம் கிடைச்சால் எழுதாமலா விட போறேன்.. :D
 

 

 

எழுதி முடிக்காமல் ஒழிச்சா லெபனான் வரையும் போராட்டம் தொடரும். கெதியில எழுதி முடியுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாயிருக்கு பகலவன்.. :D தொடருங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் படிக்கும் ஆவலுடன்.............

  • தொடங்கியவர்

அப்ப வந்தமாதிரித்தான்  :lol: :lol:  கதை நன்று தொடர்ந்தால் வகுப்பேற்றப்படுவீர்கள் :D :D .

 

கோ என்னை வகுப்பேத்தாமல் விட மாடீங்கள் போல  :lol:

 

அப்பிடியே லெபனான் நாட்டு பொண்ணுங்க சூப்பர் அழகா இருப்பாங்க என்ஜாய் :D

 

சுண்டல் அதை ஏன் கேட்கிறீங்கள். நானே பயணம் தடைபட்டு போய் இப்போ சுவிஸ்ல ஒரு வாரம் ஓய்வு. வார கிழமை எப்படியும் லெபனான் தான். :lol:

தொடருங்கள்!!

 

அலை மற்றவங்க காதல் கதை மாதிரி சுவாரஸ்யம் வேற ஒண்டும் இல்லை. நான் சும்மா பகிடிக்கு ஓகே  :lol:

 

இனிமேல் எழுதி அரைகுறையாப் போடாமல் முழுதும் எழுதி முடிச்சிட்டுப் போடுங்கோ பகலவன் :D

 

சுமோ அதை நீங்கள் சொல்லுறீங்கள். எல்லாம் காலமப்பா  :lol:

 

வேற வேலை இல்லை பழைய காதற் கதை,மண்ணாங்கட்டி என்று போய் பயணக் கட்டுரையை முதலில் எழுதி முடிக்கவும். 
 

 

பயணகதையை விட எண்ட காதல் கதை தான் என்ர மனுசியை கடுப்பேத்தும். எல்லாம் ஒரு காரணத்தோட தான் ரதி. :icon_idea:

 

ஆரம்பமே அசத்துது!

தொடருங்கோ,பகலவன்!

பச்சைக்குப் பிறகு வாறன்!

 

என்ன புங்கை இப்படி சொல்லிப்புட்டீங்க. இனி தான் பாருங்கவன் எண்ட வண்டவாளத்தை  :lol:

 

பகலவன் உங்களை வெளிச்சத்தில கண்டமாதிரி இருக்கு ஊகம் சரிதானே ? :lol:

 

உங்கட ஊகம் நிச்சயமாக சரி. அக்கா இல்லாவிட்டால் உங்களை தெரிவு செய்திருக்க மாட்டினம் முதன் முதலாக. :lol:

 

நிக்சனையே மிஞ்சிய ஒரு புலனாய்வுத்தளபதியைத்தான் நீங்கள் நண்பனா பெற்றிருக்கிறீங்கள். பாவம் அந்த நிக்சன். :lol:

 

உங்களுக்கு அதெல்லாம் விளங்காது. :icon_idea:

 

 

எழுதி முடிக்காமல் ஒழிச்சா லெபனான் வரையும் போராட்டம் தொடரும். கெதியில எழுதி முடியுங்கோ.

 

எது எதுக்கெல்லாம்  இப்போ போராட்டம் என்று ஒன்றும்  புரியடலா சாமி. நிச்சயமாக எழுதி முடிப்பன்  என்ற நம்பிக்கை இருக்கு அக்கா. நிக்சனை பற்றி திரும்பவும் ஒருமுறை எழுத வேண்டி வரும் அக்கா. 

 

கதை நல்லாயிருக்கு பகலவன்.. :D தொடருங்கள்..!

 

இசை உங்களிடம் இதை விட பெரிய கடஹி இருக்கு என்று எனக்கு தெரியும். நான் யாருக்கும் சொல்ல மாட்டேன். :icon_idea:

 

தொடருங்கள் படிக்கும் ஆவலுடன்.............

 

நன்றி நிலாமதி அக்கா .

 

எங்கை மிச்சம்.

 

 வரும்.

தொடர்ந்து எழுதுங்கள் பகலவன். 

காதல் கதை வாசிக்க வாசிக்க திகட்டாது.  :wub:  காதல் 'வாசிக்கும் போது மட்டும்' எப்பொழுதும் இனிமையானதுதான். :wub:  :)

  • தொடங்கியவர்
திவ்யா.. சும்மா பேரை கேட்டாலே இனிக்குதில்ல ...
 
அந்த பெயர் தெரிஞ்ச விதமே ஒரு தனி விதம். ஐயருக்கு எடுபிடி, அது தான் விளக்கு எடுத்து கொடுக்கிறது, ஐயர் மந்திரம் சொல்லுமட்டும் மணி அடிக்கிறது, பஞ்சாரத்திக்கு கற்பூரம் வைக்கிறது என்று ஒரு குட்டி ஐயர். குட்டி ஐயருடைய சைக்கிளுக்கு காத்தடிச்சு கொடுத்து, தேங்காய் உரிச்சு கொடுத்து, டியுசன் காசு என்று அம்மாவிடம் நூறு ரூபாய் வாங்கி தண்டமா வேற குட்டி ஐயருக்கு  கொடுத்து, ஒரு வெள்ளிகிழமை அர்ச்சனை செய்யும்போது ஒட்டி நிண்டு கேட்டு சொன்னது தான். திவ்யா ரேவதி நட்சத்திரம்.
 
அவளின் பெயரை சும்மா ஆயிரம் தரமாவது உச்சரிச்சு இருப்பன்.  A E I O U வைச்சு ஒரு காதல் கணக்கு பாக்கிறதை பள்ளி கூடத்திலே ஒரு நண்பன் சொல்லி தந்தான். அதிலே லவ் வரோணும் என்று அவளின் spelling முழுக்க மாத்தி மாத்தி போட்டு பார்க்கிறது, அம்மா கேட்டால் இங்கிலீஷ் Quiz என்று பேய்கட்டுறது எப்படி ஒரு மாதம் ஓடிவிட்டது. 
 
அண்டைக்கு ஒரு வெள்ளிகிழமை, தேவார புராணம் ஒதாருக என்று ஐயர் தனக்கு தெரிஞ்ச ஒரே மந்திரத்தை எடுத்துவிட, வழக்கமா "சொற்றுணை வேதியன்" என்று (டைனமோ சுத்தி கை வலிச்சால் பாடும் ரேடியோ மாதிரி பாடும் ) எடுத்துவிடும் கிழவியையும் அண்டைக்கு காணோம். எட்டாத கயிற்றிலே தொங்கி தொங்கி மணி அடிச்சு களைச்சு போன என்னை பார்த்து ஐயர் நிறுத்த சொல்லி  கையை காட்ட, வழக்கம் போல ஆக்கள் பாடாட்டி ஐயர் தான் தன்னுடைய வினுச்சக்கரவர்த்தி குரல்ல ஒருக்கா செருமி போட்டு பாடுவார். அண்டைக்கும் அப்படி தான் உக்கும் முக்கும் என்று செரும , ஒரு தெய்வீக குரல்.
 
"குனித்த புருவமும் கொவ்வை செவ்வாயில் குமிண் சிரிப்பும் " என்று எல்லாரையும் அவளை நோக்கி திரும்ப வைத்தது. நான் மட்டும் என்ன கேனையா.. நானும் அவளை பார்த்தேன். செம்மஞ்சள் சுடிதாரில் ஒரு தேவதையாக. திருஞானசம்பந்தரே நேரிலே பாடுவது போல (நான் ஒரு நாளும் அவரை நேர்ல பார்த்ததில்லை ஒரு கதைக்கு தான் மச்சி ..) அவள் என்ன தேவாரம் பாடினாலோ எனக்கு தெரியாது ஆனால் அவளின் செவ் வாயை விட்டு என் கண்கள் திரும்பவில்லை. 
 
தம்பி கண்டாமணி என்று ஐயர் மூன்றாம் தரம் சொன்ன போது தான் சுய நினைவுக்கு வந்தேன். அண்டைக்கு தான் ஐயர் மேல முதன் முதலா எனக்கு கோபம் வந்தது.
 
சாமி வெளி வீதி சுத்தும் போது தீவட்டி பிடிக்கிறது நான். எங்களுக்கு ஒரு அடிமை சிக்காமலா போவான், தீவட்டிக்கு எண்ணெய் விட என்று ஒரு அடிமை சிக்கி இருந்தான். திடீர் என்று அவனுக்கு என்ன அவசரமோ, அக்கா இந்த எண்ணையை கொஞ்சம் ஊத்து கேதியிலே வந்துடிறேன் என்று சாமியை மனமுருகி கும்பிட்டு கொண்டிருந்த என் தேவதையிடம்  எண்ணையை கொடுத்துவிட்டு போய்விட்டான். ஒவ்வொருமுறை தீவட்டிக்கு எண்ணெய் விடும்போதும் அந்த ஒளியில் அவள் முகம். அப்பப்பா ..இப்போ எழுதும்போதே உள்ளன்காலிலே இருந்து உச்சி வரைக்கும் கரண்ட் அடிச்ச மாதிரி இருக்கு என்றால் அப்போ எப்படி இருந்திருக்கும் என்று பாருங்கவன்.
 
அவள் ஊத்திய எண்ணெய் வேணும் என்றால் தீவட்டிக்காக இருக்காலாம், ஆனால் பத்தி கொண்டதோ என் காதல் தீ..
 
மூன்றாம் வீதியில் மேளகாரர் வேற அவங்களுக்கு தெரிஞ்ச ஒரே பாட்டு "மாங்குயிலே பூங்குயிலே செய்தி ஒன்று கூறு" போட்டு பின்னி பிடல் எடுத்து கொண்டிருந்தாங்கள். எனக்கு அண்டைக்கு மட்டும் அந்த பாட்டு எனக்கு என்று தான் எழுதினது போல இருந்திச்சு.
 
கோயில் அவள் நான் காதல் ..நாட்கள் ஓடிற்று. அவளுக்கும் என் மேல கொஞ்சம் இது என்று வெண்ணிலா ஒரு பேச்சு வாக்கிலே சொன்னாள். எப்படி உறுதிப்படுத்திறது.
 
ஒரு நாள் அவள் கண்ணிலே படத்தக்கவாறு மிச்சம் இருந்த குகுமத்தையும் விபுதியையும், பலி பீடத்துக்கு பக்கத்திலே கொட்டி வைச்சேன். எங்கே இருந்து வந்தால் என்று தெரியாது. அந்த குகுமத்தை எடுத்து நான் பார்க்கதக்கதாகவே நெத்தியிலே வைச்சு கொண்டாள் . (அண்டைக்கு அவளுக்கு குங்குமம் ஐயர் கொடுத்திருக்க மாட்டார் என்று நீங்கள் மனசுக்குள்ளே சொல்லுறது எனக்கு தெரியுது)
 
நானும் அபப்டி தான் நெனைச்சேன். ஆனால் ஒவ்வொரு முறையும் அப்படி நடக்க மனசுக்குள்ளே உறுதி படுத்தி கொண்டடேன். அது மட்டுமில்லை. ஒரே ஒரு ரோசாப்பு புடுங்கி ஒவ்வொருக்காலும் குட்டி பிள்ளையாருக்கு வைப்பேன் ( வேற என்னத்துக்கு அந்தாளுக்கு தான் லவ் செட் ஆகல  எனக்காவது சேர்த்து வைக்கட்டும் என்று தான்) அவள் அதை எடுத்து தலையிலே செருகுவாள்.
 
யம்மா ..செட் ஆகிட்டு மச்சான் .. எப்படி  கேட்கிறது.
 
திருவெம்பா வேற தொடங்கிட்டு. அவள் தான் ஆஸ்தான பாடகி. அதிகாலையிலே எல்லாரும் பாட வெளிக்கிட முதல் கேட்டுவிடுவம் என்று முதல் நாளே வெட்டி சால்வை எல்லாம் ரெடி பண்ணி அதுக்குமேலே படுத்து தூங்கினேன்.
 
திவ்யா .... என்ற கனவோடு..
 
 
தொடரும் ...
  • கருத்துக்கள உறவுகள்

பகலவன்.. :D

 

உங்கள் எழுத்து நடையை மிகவும் விரும்பி இரசித்தேன்.. மெல்லிய.. இல்லை.. வல்லிய நகைச்சுவை இழையோடுகிறது.. :D வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..! :)

ஒளியிலே தெரிவது தேவதையா ? பின்னணியில் பாடியிருக்குமே .

தொடருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
பகலவன்.. :D

 

உங்கள் எழுத்து நடையை மிகவும் விரும்பி இரசித்தேன்.. மெல்லிய.. இல்லை.. வல்லிய நகைச்சுவை இழையோடுகிறது.. :D வாழ்த்துக்கள்.. தொடருங்கள்..! :)

 

அதை விட அதிகமான எழுத்துப் பிழைகள்

  • கருத்துக்கள உறவுகள்
அதை விட அதிகமான எழுத்துப் பிழைகள்

 

சரி.. சரி.. எல்லாரும் தெரிந்தா பிழை விடுகிறோம்.. தட்டச்சில் அறியாமல் வந்திடும்.. :unsure:

 

இவர் எங்கோ கைபேசியில் இருந்து தட்டச்சு செய்கிறார் போலை.. :rolleyes:

 

திருத்திய காரணம்: எழுத்துப்பிழை. :lol:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்
சரி.. சரி.. எல்லாரும் தெந்தா பிழை விடுகிறோம்.. தட்டச்சில் அறியாமல் வந்திடும்.. :unsure:

 

இவர் எங்கோ கைபேசியில் இருந்து தட்டச்சு செய்கிறார் போலை.. :rolleyes:

 

இருக்கலாம் :D

பகலவன் கதையை நல்லாய் தான் கொண்டு போறியள், கெதியாய் எழுதுங்கோ

திவ்யா .... என்ற கனவோடு..
 
உங்கடை தலைவியை திவ்வியமாய் சந்திச்சியளோ இல்லையோ ??  மனுசனுக்கு விசரைக் கிளப்பாதையுங்கோ  :lol:  :lol: . நல்லாய் கதையைக் கொண்டுபோறியள்  .வகுப்பேற்றப்பட்டுள்ளீர்கள் 100 / 99 :D :D .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.