Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

தொடருங்கள் சுமோ! கெதியாய் எழுதணும். :) இலங்கையில் ஒரு யாழ்ப்பாணத்துப் பெண்ணு தனது 5 பிள்ளைகளுடன் தனது கணவனின் கசினுடன் போன சம்பவமும் உண்டு.  இதுகளைத் தான் ஓடுகாலியள் எண்ணுறவை போலை.

 

 

 

  • Replies 100
  • Views 9.2k
  • Created
  • Last Reply
எனக்குத் தெரிஞ்சு இங்கே ஒரு பெண் ஒருவரை திருமணம் செய்து லண்டனுக்கு வந்தார்.வந்த ஒரு வருடத்தில் விசா கிடைத்தவுடன் அவரை விவாகரத்து செய்து விட்டு ஊரில் இருந்த தன்ட காதலரை கூப்பிட்டு கல்யாணம் கட்டி இப்ப பிள்ளையோடும்,கணவரோடும் சேர்ந்து கோயிலுக்கு வருகின்றார்...இதில் விசேசம் என்ன என்டால் அதே கோயிலில் தன்ட பழைய கணவரோடு சேர்ந்து வந்தவர்...அப்போது கோயிலுக்கு வந்து முட்டிக்காலில் இருந்து நேர்த்திக் கடன் வைத்து விழுந்து என்னோ எல்லாம் செய்து தான் தன்ட காதலரை கூப்பிட்டு கல்யாணம் கட்டினவர்...அவர்கள் நல்லாய் இருக்க மாட்டார்கள்,அழிந்து போய் விடுவார்கள் என்பதெல்லாம் இந்தக் காலத்தில் சரி வராது...எனக்குத் தெரிஞ்சு அப்படியான ஆட்களுக்குத் தான் நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்குது

 

என்ன அக்கை அவசரபட்டு கதையின்ரை முடிவை சொல்லிபோட்டியள் :unsure: :unsure: . சுமே இனி எழுதியும் வேலையில்லை . சுமே பாவமல்லோ :lol: :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கலியானம் அய்யருக்கும் வீடியோ மணவறை செய்வோருக்கு உணைப்பு.அவளவுதான் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்னதான் சொல்லவாறியள் அக்கை  :o  :o  ?? காப்பிறேட் உலகத்திலை இதெல்லாம் நோர்மல் எண்டால் பேந்தேன் கலியாணமும் புடலங்காயும் :unsure: :unsure: ??  ரோட்டலி பெடியளை கேணைபயலுகள் ஆக்கிறதுக்குத்தான் வழிபண்ணுறியள் :lol: :lol: .

 

 

என்னைப் பொறுத்த வரைக்கும் அந்தப் பெண் அவரோடு இருந்து கொண்டு அவனை ஏமாத்தாமல் நேர‌டியாக அவரிட‌ம் சொல்லிட்டு விலகிப் போறது இருவருக்கும் நல்லது...கோமகன் இப்படி கணவனையோ/மனைவியை விட்டுட்டு போன பல பேரைப் இங்கு பார்த்திருக்கிறேன்...ஒருத்தரும் நன்றாக வாழாமல் அழிந்து போனதை நான் காணவில்லை...அதற்காக இதை நான் ஊக்குவிக்கிறேன் என்று இல்லை இங்கு நட‌ப்பதை சொன்னேன்.
 
 
 

என்ன அக்கை அவசரபட்டு கதையின்ரை முடிவை சொல்லிபோட்டியள் :unsure: :unsure: . சுமே இனி எழுதியும் வேலையில்லை . சுமே பாவமல்லோ :lol: :lol: .

 

 

எனக்கு விளங்கவில்லை இதையா சுமோ எழுத வந்தவர்?
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துப் பகிர்ந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி 

பகுதி 3

 

மதுவுக்கு முன் ஒன்றையும் காட்டாமல் கபிலன் வந்துவிட்டானே தவிர அறைக்குள் வந்தவுடன் கத்தி அழவேண்டும் போல் இருந்தது. ஆனால் அடக்கிக் கொண்டான். மது கூறியவை மீண்டும் மீண்டும் மனதில் வந்து சூறாவளியாய்ச் சுழல எங்கே தவறு விட்டேன் என மீண்டும் மீண்டும் தன்னைத் தான் கேட்டும் விடை கிடைக்கவில்லை. அவளுக்கு என்ன குறை வைத்தேன். கேட்காமலே எல்லாம் வாங்கிக் குடுத்தேன். என்னைக் கலியாணம் கட்ட விருப்பமோ என்று கேட்டுத்தானே அவளைச் செய்தனான். அப்ப அவள் என்னைக் காதலிக்கவில்லையோ? சித்தப்பனுக்குப் பாரமாக இருக்கக் கூடாது என்று என்னைக் கட்டியிருக்கிறாள். அப்பிடிக் கட்டியிருந்தாலும் கலியாணக் கட்டி ஒன்றரை வருடத்தில் அதுக்கும் பிள்ளை இருந்தும் என்னில அன்பு ஏற்படேல்லை என்றால் .......எல்லாம் எண்ர பிழைதான். எல்லாம் அவளைக் கேட்டுச் செய்திருக்க வேணும். அவளை ராணிமாதிரி வச்சிருக்க வேனுமேண்டுதானே ஓவர் டைம் வேலை கூடச் செய்தனான். அவள் வேண்டாம் வேண்டாம் எண்ண கணணி பழக்கினது என்ர பிழை. மற்றத் தமிழ் ஆட்களோட பழகாமல் ஒதுங்கி இருந்ததும் பிழை. நான் என்ன செய்ய இப்ப. எதுக்கும் நேசனிடம் தான் கதைக்க வேணும். என்னைப் பற்றி எல்லாம் தெரிஞ்சவன் அவன்தான் என எண்ணிக் கொண்டே எழுந்தவன் மீண்டும் கட்டிலில் விழுந்தான். எதுக்கும் நாளை மது என்ன சொல்கிறாள் என்று பாப்போம் என எண்ணியபடி விடிய விடிய கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தும் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் சோர்ந்துபோய் படுத்திருந்தான். என்னதான் நினைத்தாலும் தனக்குள் அவமான உணர்வு வந்தாலும் மதுவின்மேல் கோபமோ அளவுகடந்த வெறுப்போ எழாதது அவனுக்குத் தன்மேலேயே கோபத்தை ஏற்படுத்தியது. இதுவரை மது அறைக்குள் வரவில்லை. சோபாவில் இருக்கிறாளோ அல்லது படுக்கிறாளோ என நினைத்தாலும் எழுந்து சென்று பார்க்க மனம் வரவில்லை. பக்கத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் மகனை எட்டிப் பார்த்தான். இவனை நான் தான் வைத்திருக்க வேணும். இவனை விட்டுவிட்டு மது எப்பிடிப் போறாள் எண்டு பார்ப்போம் என எண்ணியபடி மகனின் பிஞ்சு விரல்களைப் பற்றி தன் விரல்களால் வருடியபடி இருக்க மகன் தூக்கத்தில் சிரிப்பதைப் பார்த்துக்கொண்டு தற்காலிகமாக தன் கவலையை மறக்க மகனை தூக்கித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான். மகனை நெஞ்சில் போட்டபடி தூங்கிவிட்டவன்  மகனின் அழுகைச் சத்தத்தில் கண்விழித்தான்.

கட்டிலின் நேரே மணிக்கூடு நேரம் 6 மணி காட்டியது. மகனின் அழுகைச் சத்தம் கேட்டு அறைக்குள் வந்த மது ஒன்றும் பேசாது இவனையும் நிமிர்ந்து பார்க்காது மகனை இவனிடமிருந்து வாங்கிக் கொண்டு வெளியே செல்ல இவன் எழுந்து குளியலறைக்குச் சென்று  பல் விளக்கி முகம் கழுவி வந்து தானே குசினிக்குள் சென்று தனக்கும் மதுவுக்குமாகத் தேநீர் தயாரித்து வந்து அவளின் முன் வைத்துவிட்டு தானும் கதிரையில் அமர்ந்துகொண்டான். 

 

 

கொஞ்சநேரம் தேநீரை உறிஞ்சுவதும் மதுவைப் பார்ப்பதுமாக இருந்த கபிலன் மது வாய் திறக்காமல் இருப்பதைக் கண்டு தானே ஆரம்பித்தான். என்ன முடிவேடுத்திருக்கிறீர் என்றான். கொஞ்சநேரம் ஒன்றும் கூறாது சும்மா பார்த்துக் கொண்டிருந்துவிட்டு  நான் லண்டன் போகப் போறன் என்றாள் மது. இரவு யோசித்துவிட்டு மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றுதான் சொல்லுவாள் என்று எதிர்பார்த்திருந்த கபிலன் உள்ளுக்குள் நிலை குலைந்தாலும் வெளியே காட்டாது மகனை நான் தான் வைத்திருப்பேன் உம்மிடம் தரமுடியாது என்றான். நானும் கொண்டுபோக முடியாது என்று சாதாரணமாகக் கூறிவிட்டு தலையைக் குனிந்துகொண்டாள் மது. பிள்ளையை சாட்டியாவது அவளை நிப்பாட்டலாம் என்ற அற்ப ஆசையிலும் மண்விழ  எப்ப போகப் போறீர் என்றான் குரல் தொய்ந்துபோய். டிக்கெட் ஒன்று கீத்துரோவுக்குப் போட்டுத் தாங்கோ என்றால். உன்னைக் கட்டினதுக்கு இன்னும் என்னென்ன இருக்கோ என மனதுள் நினைத்தபடி சரி நான் இப்பவே பாக்கிறன் என்றுவிட்டு அறைக்குள் சென்று கணனியின் முன் அமர்ந்தான். சீ இவளுக்காக என்ன எல்லாம் செய்தன் என்று நினைக்கையிலேயே அழுகை எட்டிப் பார்த்தது. இவளுக்கு முன்னால்  அழவே மாட்டன் என தனக்குத் தானே சபதம் எடுத்துக் கொண்டான்.  அடுத்த நாளே  டிக்கெற்ரை  போட்டு போடிங் பாசையும் பிரிண்ட் செய்து அவளுக்கு முன்னால்  கொண்டுவந்து வைத்தான்.

சரி நீர் போறதுக்கான ஆயத்தங்களைச் செய்யும் நான் கொஞ்சம் வெளியில போட்டு வாறன் என்று கூறிவிட்டு  அவளின் பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே வந்தான். காரில் ஏறி நேசனின் வீட்டுக்கு முன் நிறுத்திவிட்டு வீட்டுக் கதவைத் தட்டினான். கதவைத் திறந்த நேசனுக்கு ஆச்சரியம். என்னடா சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாய் என்றவன் அவன் உள்ளே வர விட்டு கதவை மூடிவிட்டு வந்தான். கபிலனின் முகத்தைப் பார்த்தாலே எதோ பிரச்சனை என்று தெரிந்தது. கபிலன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒருத்தரும் இல்லைத்தானே எனக் கேட்டான். எல்லாரும் வேலைக்கு போட்டினம் ஏன் அவங்கள்  நிக்க மாட்டாங்கள் என்று உனக்கும் தெரியும் தானே என்றுவிட்டு வந்த அலுவலைச் சொல்லன் எண்டான். நாளைக்கு விடிய நீ நிப்பாய் தானே. மதுவை ஒருக்கா எயாப்போர்ட் கூட்டிக்கொண்டு போக ஏலுமோ நேசன் என்றான். ஒ அதுக்கென்ன எங்க போறா மது   என்றான்.  லண்டன் போறாள் என்னும்போதே கபிலனின் குரலில் அழுகை எட்டிப் பாத்தது. ஏன் ஏதும் கலியாணவீடே என்று கேட்டதுதான் தாமதம் கபிலன் அழத் தொடங்கினான். என்னடா மச்சான் ஏன் ஏன் அழுகிறாய் என கேட்டவாறே அவனுக்கு அருகில் வந்து இருந்து கொண்டு தோளைத் தட்டிக் கொடுத்தான் நேசன். கொஞ்ச நேரம் அழுதபின் நண்பனிடம் தன் துன்பமெல்லாம் சொல்லி முடிய நீ அப்ப மதுவைப் போகச் சொல்லிப் போட்டியோ என்ற நேசனிடம் நான் போகாதை எண்டாலும் அவள் போகத்தான் போறாள் அதிலும் நானே அனுப்பி வைக்கிறதுதான் நல்லது என்றுவிட்டு உனக்கு கொண்டு பொய் விட ஒரு பிரச்சனையும் இல்லைத்தானே என்றான். எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை ஆனால் நான் ஒருக்காக் கதைச்சுப் பாக்கட்டே என்ற நேசனை இடை மறித்து பிள்ளையையே விட்டுட்டுப் போகத் தயாரானவள் நீ சொல்லிக் கேட்கவே போறாள் என்றுவிட்டு நாளைக்கு  விடிய 8 மணிக்கு வீட்டை வா.12. 20 க்கு பிளைட்  என்றவன் போக வெளிக்கிட நீ என்னெண்டு பிள்ளையைத் தனிய வச்சிருக்கப் போறாய் எண்டவனிடம் எனக்கு ஒரு மாத லீவு இருக்கு. இனித்தான் அடிச்சுச் சொல்லப் போறன். பிறகு என்ன செய்யிறதெண்டு பாப்பம் என்று விட்டு கதவைத்  திறந்து கொண்டு செல்லும் நண்பனை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டான். எதுக்கும் நாளை மதுவோட கதைச்சுப் பாகத்தான் வேணும் என்று எண்ணியபடி கதவைச் சாத்திவிட்டு கதிரையில் வந்து அமர்ந்தான்.  

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு.. :D

 

ஒருதரம் எழுதினால் விளங்காது எண்டு இரண்டுதரம் எழுதினீங்களா? :D

ஆண்களின் தன்னிரக்கம் பெண்களிற்கு ஆண்களை ஏறிமிதிப்பதற்கு ஏதுவாகின்றது என்பது எனது கருத்து . சிலவேளைகளில் இடங்கள் மாறுவதால் ஏற்படுகின்ற கோளாறோ தெரியவில்லை . ஆர்வக்கோளாறில் இரண்டுதரம் தலையில் குட்டிக் கதை சொன்ன சுமேக்கு ஒரு ஓ...................... :lol: :lol: :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

கடசியாக இணைக்கப்பட்டுள்ள 2 paragraph யும் நீக்கி விட்டால் நன்று..உலகத்தில் இப்படி எத்தனையோ நடக்கு அதில் இதுவும் ஒன்று....

 

பெண்ணடிமைத்தனம், பெண்களுக்கு உரிய சுதந்திரம், உரிமைகள் மறுக்கபடுகின்றன, வேலைப்பளுவில் 50:50 இல்லை போன்ற வாதங்களுக்கு மத்தியில் இப்படியான கதைகளும் இருக்க தான் செய்கின்றன என்பதை எல்லாருக்கும் உணர்த்தும் கதை .

முடிவு தெரிந்தாலும், உங்களிடம் இருந்து தொடர்ந்து எதிர்பார்ர்கிறேன். உங்கள் பார்வையில் இந்த கதையை .



எனக்குத் தெரிஞ்சு இங்கே ஒரு பெண் ஒருவரை திருமணம் செய்து லண்டனுக்கு வந்தார்.வந்த ஒரு வருடத்தில் விசா கிடைத்தவுடன் அவரை விவாகரத்து செய்து விட்டு ஊரில் இருந்த தன்ட காதலரை கூப்பிட்டு கல்யாணம் கட்டி இப்ப பிள்ளையோடும்,கணவரோடும் சேர்ந்து கோயிலுக்கு வருகின்றார்...இதில் விசேசம் என்ன என்டால் அதே கோயிலில் தன்ட பழைய கணவரோடு சேர்ந்து வந்தவர்...அப்போது கோயிலுக்கு வந்து முட்டிக்காலில் இருந்து நேர்த்திக் கடன் வைத்து விழுந்து என்னோ எல்லாம் செய்து தான் தன்ட காதலரை கூப்பிட்டு கல்யாணம் கட்டினவர்...அவர்கள் நல்லாய் இருக்க மாட்டார்கள்,அழிந்து போய் விடுவார்கள் என்பதெல்லாம் இந்தக் காலத்தில் சரி வராது...எனக்குத் தெரிஞ்சு அப்படியான ஆட்களுக்குத் தான் நல்ல வாழ்க்கை கிடைச்சிருக்குது

 

இது ஆதங்கமா, பொறாமையா, தர்மம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையா, எந்த வகைக்குள் உங்கள் உணர்வை பிரதியிடுவது என்று எனக்கு தெரியவில்லை. எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தான் போராடவேண்டும் , யாரோ அநியாயம் செய்தவன் நல்லா வாழுகிறான் என்று புழுங்குவதை விட . இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

ம்.....  அடுத்தது அவா அங்கை போய் தற்கொலை செய்யிற கதை தானே சுமோ!



கடைசிப் பந்தியை நீக்கிவிடுங்கோ சுமோ

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தடவை  வந்து விட்டது  கவனித்து நீக்கவும். :)

  • கருத்துக்கள உறவுகள்

சுமேரியர் அக்கோய்  இந்த விடுமுறை நாளிலயெண்டாலும் கதையை எழுதி முடிக்கலாமெல்லோ ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய உறவுகள் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் மன்னித்துவிடுக. இன்றும் எனக்கு வேலை. அங்கிருந்தபடி அவசரமாக எழுதி அவசரமாகப் போட்டதில் நிறையத் தவறுகள் நேர்ந்துவிட்டன. :(

 

சாந்தியின் கரைச்சல் தாங்காமல்தான் வேலையிடத்தில எழுத வெளிக்கிட்டதே. பிறகும் அவசரப்படுத்தினா நான் என்ன செய்ய சாந்தி. :lol:

 

நண்பி அலை நீங்களே முடிவெடுக்காமல் கொஞ்சம் பொறுங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

 

இது ஆதங்கமா, பொறாமையா, தர்மம் வெல்ல வேண்டும் என்ற வேட்கையா, எந்த வகைக்குள் உங்கள் உணர்வை பிரதியிடுவது என்று எனக்கு தெரியவில்லை. எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று தான் போராடவேண்டும் , யாரோ அநியாயம் செய்தவன் நல்லா வாழுகிறான் என்று புழுங்குவதை விட . இது எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே.

 

 

எனக்கு இதில் ஒரு பொறாமையும் இல்லை...யார்,யாரை கல்யாணம் கட்டினால் என்ன? ஓடினால் எனக்கென்ன?...இந்த காலத்தில் ஆண்களுக்கோ,பெண்களுக்கோ தங்கட‌ வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருந்தால் மட்டுமே நன்றாக வாழலாம்...ஒழுக்கம்,நேர்மை,மண்ணாங்கட்டி எல்லாம் அதற்கு அப்பால் தான்.
 
எனக்குத் தெரிந்த் சம்பவத்தை நான் இதில் எழுதினேன்.அதில் என்ன பிழை கண்டீர்கள்?
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பகிர்வு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதி ,லியோ இருவருக்கும்.

இன்று தான் மூன்று பாகங்களையும் வாசிக்க முடிந்தது. குடும்பத்திற்கு அடிப்படையானது அன்பு. இருவரும் மனமொத்து கருத்துப் பரிமாற நேரம். ஆனால் இதை விடுத்து சொந்த வீடு, ஆட்மபரப் பார்ட்டிகள் இவையே வாழ்க்கை என நினைத்து அலைந்து உடைந்து போன குடும்பங்கள் ஏராளம்.. தொடருங்கள் சுமேரியர் அக்கா!

எனக்கு இதில் ஒரு பொறாமையும் இல்லை...யார்,யாரை கல்யாணம் கட்டினால் என்ன? ஓடினால் எனக்கென்ன?...இந்த காலத்தில் ஆண்களுக்கோ,பெண்களுக்கோ தங்கட‌ வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிந்திருந்தால் மட்டுமே நன்றாக வாழலாம்...ஒழுக்கம்,நேர்மை,மண்ணாங்கட்டி எல்லாம் அதற்கு அப்பால் தான்.
 
எனக்குத் தெரிந்த் சம்பவத்தை நான் இதில் எழுதினேன்.அதில் என்ன பிழை கண்டீர்கள்?
 

 

நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்று புரியவில்லை என்று தான் எழுதியிருக்கிறேன். பிழைகண்டு எழுதவில்லை. நீங்கள் உங்களுக்கு பொறாமை இல்லை என்று உங்கள் மனநிலையை புரியவைத்திருக்கிறீர்கள்  நன்றி.

 

ஒவ்வொருவருக்கும் ஒழுக்கம் நேர்மை எல்லாம் அவரவர் வாழ்கையில் கண்ட அனுபவங்கள் தான். நான் ஒரு தத்துவ வாதியும் இல்லை, ஒழுக்கமானவனும் இல்லை. ஆனாலும் நேர்மையிலும் ஒழுக்கத்திலும் நம்பிக்கை வைத்திருப்பவன்.

 

நல்லா வாழுகிறார்கள் என்று நாங்கள் நினைப்பவர்கள் எல்லாம் சந்தோசமாக நிம்மதியாக தான் வாழுகிறார்கள் என்று உங்களால் உறுதிபட கூடமுடியுமா...??? அவரவர் பார்வையில் ஒவ்வொருவர் ஒரு மாதிரி.

 

அதுக்காக அக்கா நேர்மை, ஒழுக்கம் மண்ணாங்கட்டி என்று எல்லாம் கோபபடகூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கம், நேர்மை எல்லாம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அளவுகோலில் இருக்கும். சமூகத்திற்காக என்று எழுதப்படாமலேயே வலியுறுத்தப்படும் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றுக்காக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துவிடுவதில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
ஒழுக்கம், நேர்மை எல்லாம் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அளவுகோலில் இருக்கும். சமூகத்திற்காக என்று எழுதப்படாமலேயே வலியுறுத்தப்படும் ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவற்றுக்காக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்துவிடுவதில்லை.

 

உண்மைதான்..

 

ஆனால் இன்னொருத்தரைக் காயப்படுத்தவில்லை என்கிற திருப்தி அளவிடமுடியாதது..!

  • கருத்துக்கள உறவுகள்
உண்மைதான்..

 

ஆனால் இன்னொருத்தரைக் காயப்படுத்தவில்லை என்கிற திருப்தி அளவிடமுடியாதது..!

 

இன்னுமொருவர் எதுவித விட்டுக்கொடுப்புக்கள், புரிந்துணர்வுகள் இல்லாமல் இருந்தால்தான் காயப்படுவார், அல்லது பிறரிடம் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ள காயப்படுத்தப்பட்டதான தோற்றப்பாட்டை உருவாக்குவார்!!

 

ஒருவரின் நடத்தைக்கான உண்மையான காரணத்தை அறிந்துகொள்ள முனைந்துகொள்பவர்கள் காயப்பட மாட்டார்கள்!

 

No sentiments, No attachments  என்ற கொள்கை வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
இன்னுமொருவர் எதுவித விட்டுக்கொடுப்புக்கள், புரிந்துணர்வுகள் இல்லாமல் இருந்தால்தான் காயப்படுவார், அல்லது பிறரிடம் அனுதாபத்தைப் பெற்றுக்கொள்ள காயப்படுத்தப்பட்டதான தோற்றப்பாட்டை உருவாக்குவார்!!

 

ஒருவரின் நடத்தைக்கான உண்மையான காரணத்தை அறிந்துகொள்ள முனைந்துகொள்பவர்கள் காயப்பட மாட்டார்கள்!

 

No sentiments, No attachments  என்ற கொள்கை வேண்டும்!

 

மன்னிக்க வேண்டும். :D நான் சொல்ல வந்தது சம்பந்தப்பட்டவரை அல்ல.. சம்பந்தப்பட்டவர்களுடன் நெருக்கமான சம்பந்தப்பட்டவர்களும் இருப்பார்கள்தானே.. :rolleyes: அவர்களையும் சற்று சிந்தித்தால் நல்லது என்பது என் சிந்தனை..! :D

  • கருத்துக்கள உறவுகள்
மன்னிக்க வேண்டும். :D நான் சொல்ல வந்தது சம்பந்தப்பட்டவரை அல்ல.. சம்பந்தப்பட்டவர்களுடன் நெருக்கமான சம்பந்தப்பட்டவர்களும் இருப்பார்கள்தானே.. :rolleyes: அவர்களையும் சற்று சிந்தித்தால் நல்லது என்பது என் சிந்தனை..! :D

 

சம்பந்தப்பட்டவர்களுக்கு நெருக்கமான சம்பந்தப்பட்டவர்களுக்காக வாழ்க்கையைத் தியாகம் செய்து திருப்தி கண்டுவிட்டேன் என்று ஒருவர் போலியாகவும் வாழமுடியாது அல்லவா!

 

Mrs. Doubtfire படத்தில் இருந்து..

 

"Dear Mrs. Doubtfire; Two months ago, my mom and dad decided to separate. Now they live in different houses. My brother Andrew says that we aren't a real family any more. Is this true? Did I lose my family? Is there anything I could do to get my parents back together? Sincerely, Katie McCormick.

 

" Oh, my dear Katie. You know, some parents get along much better when they don't live together. They don't fight all the time and they can become better people. Much better mommies and daddies for you. And sometimes they get back together. And sometimes they don't, dear. And if they don't... don't blame yourself. Just because they don't love each other doesn't mean that they don't love you.

 

There are all sorts of different families, Katie. Some families have one mommy, some families have one daddy, or two families. Some children live with their uncle or aunt. Some live with their grandparents, and some children live with foster parents. Some live in separate homes and neighborhoods, in different areas of the country. They may not see each other for days, weeks, months or even years at a time. But if there's love, dear, those are the ties that bind. And you'll have a family in your heart forever. All my love to you, poppet. You're going to be all right. Bye-bye.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துகளைப் பகிர்ந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி.
 

பகுதி 4

கபிலனுக்கு வீட்டுக்குப் போகவே விருப்பம் வரவில்லை. தன்னில் விருப்பம் இல்லாத மனைவி வீட்டில் இருக்க யாருக்குத்தான் வீட்டுக்குப் போக மனம் வரும். அதுகும் ஆசையாகக் காதலித்து மணந்தவள் இன்னொருவனிடம் மனத்தைக் கொடுத்துவிட்டு கணவனிடமே சொல்கிறாள் என்றால், என் நிலை யாருக்கும் வரக்கூடாது என்று எண்ணியபடி கடைக்குப் போய் ஒரு மாதத்துக்கு மகனுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொண்டு காரில் ஏறியவன் நாளையும் அதற்கு அடுத்துவரும் நாட்களும் எப்படிக் கழியப் போகிறது என எண்ணியபடியே போய்க்கொண்டிருந்தான். மகன் தான் இன்னும் பாவம். தாயுடனேயே இருந்து பழகியவன் எப்படி இருக்கப் போகிறான். சாமாளிக்க வேண்டியதுதான். அவன் தத்தி நடைபோடும் அழகே தனிதான். எட்டுப் பற்களுடன் வாய் திறந்து சிரிப்பது அதைவிட அழகு. புரியா மொழியில் கொன்னைப் பேச்சு நினைத்தாலே எவ்வளவு மகிழ்வா இருக்குது. இதையெல்லாம் கூட விட்டுப் போவாளா ஒருத்தி. கல்மனதுக்காரி. போகட்டும் எனக்கு மகன் இருக்கிறான் என்று எண்ணிக் கொண்டிருக்கையில் தொடர்ந்து கார்க்கோண் அடிக்கும் சத்தம். அப்போதான் நினைவு வரப்பெற்று பார்த்தால் கடவை விளக்கு பச்சை காட்டியபடி நிற்பது கண்ணில் விழ உடனே காரை நகர்த்தினான்.வீட்டுக்குப் போகத்தான் வேண்டும். வேறு வழியில்லை. காரை வீட்டின் முன் நிறுத்திவிட்டு வாங்கிய பொருட்களையும் எடுத்துக் கொண்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றான்.

 
மது குசினிக்குள் சமைத்துக்கொண்டு இருப்பது தெரிந்தது. மற்றும் வேலை என்றால் இவனும் போய் நின்று உதவுவான். இன்று தொலைக் காட்சியைப் பார்த்துக்கொண்டு இருக்க முற்பட்டாலும் மனம் அதில் பதியவில்லை. ஆனாலும் சும்மா இருப்பது சூனியம் வைத்ததுபோல் ஆகுமென்று மனதை எங்கோவிட்டு பார்வையை மட்டும் பதித்தான் தொலைக்காட்சிப் பெட்டியில். சொர்க்கமாக இருந்த வீடு சுடுகாடுபோல் ஆனது ஏன் என மனது தவிப்புடன் கேட்டாலும் விடைதான் கிடைக்கவில்லை. எவ்வளவு நேரமாக அங்கு இருந்தானோ சாப்பிடலாம் என்னும் மதுவின் குரலால் சிந்தை கலைந்திட அவளை நிமிர்ந்து பார்த்தான். அவள் தலையைக் குனிந்துகொண்டே இருப்பதைக் கண்டதும் நான் பிறகு சாப்பிடுறன் என்றுவிட்டு தொடர்ந்து தொலைக் காட்சி பார்ப்பதுபோல் பார்வையைப் பதித்தாலும் மது படுக்கை அறைக்குள் சென்று கதவைச் சாத்துவது கடைக்கண்ணில் தெரிந்தது. மகனும் நித்திரைபோல. சத்தத்தைக் காணவில்லை என்று கேட்பதற்கு வாயெடுத்தவன் ஒன்றும் கூறாமல் வார்த்தைகளை விழுங்கிவிட்டு சோபாவில் படுத்து கைகளை நெற்றியில் வைத்துக் கொண்டான். அப்படியே தூங்கியும் விட்டான்.
 
மகனின் கைகள் முகத்தில் அடிக்க திடுக்கிட்டு எழுந்தவன் முன்னால்  இருந்த மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தான். மாலை ஐந்தாகி  விட்டிருந்தது. இரவு தூங்காமல் இருந்தது இப்போது தன்னை அமுக்கிவிட்டது அதுக்கும் நல்லதுக்குத் தான் என எண்ணியவன் மகனை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு எப்ப எழும்பின்னியள். அப்பாவுக்கு இப்பவே அடி போடத் தொடங்கிவிட்டியளோ என தான் இயல்பாய் இருப்பதுபோல் மதுவுக்குக் காட்ட கொஞ்சம் பலமாகக் கூறினான். சாப்பாடு கொண்டு மது வருவது தெரிந்தது. வேண்டாம் என கூறுவோம் என மனதுள் எழுந்த நினைப்பை அடக்கிக் கொண்டு கை நீட்டி மதுவைப் பார்க்காமலே உணவுத் தட்டை வாங்கிக் கொண்டு உண்ணத் தொடங்கினான். நீ என்னை விட்டுப் போவதால் எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை என மதுவுக்குக் காட்டும் நினைப்பு. மதுவும் உணவுடன் வந்து உணவு மேசையில் இருப்பது தெரிந்தது. இவளும் இன்னும் உண்ணவில்லையோ என ஒரு சிறு பரிதாபம் எழுந்து, எழுந்த வேகத்திலேயே அடங்கியும் போனது. மற்றும் வேளை எனில் தொலைக்காட்சி பார்த்தபடி உண்ணவே மது விடமாட்டாள். உணவு மேசையில் இருந்துதான் உண்ணலாம். இன்று அவளும் ஒன்றும் கூறவில்லை. அவனும் அங்கு போகவில்லை. உண்மையில் அவனுக்கு உணவு உண்ணவே முடியவில்லை. ஆனாலும் உண்டுமுடித்து கை கழுவிக் கொண்டு வந்து மீண்டும் கொஞ்ச நேரம் தொலைக் காட்சி பார்த்துக்கொண்டு மகனுடன் விளையாடியவன் மகனை வெளிக்கிடுத்தி,  நான் மகனுடன் கொஞ்ச நேரம் வெளியில போட்டு வாறன் என்று அவளுக்குச் சொல்லிவிட்டு பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே சென்றுவிட்டான்.


மகனை மது வெளியே கொண்டு செல்லும்போது குழந்தைகளுக்கான வண்டிலில் வைத்துத் தான் கொண்டுபோவாள். கபிலன் மகனைக் கைகளில் தூக்கியபடி நடக்கத் தொடங்கினான். கீழே இறக்கி விடும்படி மகன் கைகால்களை அசைத்து இவனிடமிருந்து உன்னினான். கீழே மகனை இறக்கிவிட்டு சிறிய கைகளைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடக்கத் தொடங்கினான். திருமணமான புதிதில் வீதியால் நடந்து போகும்போது இவன் ஆசையுடன் மதுவின் கைகளைப் பற்றினால் மது மற்றவர்கள் பார்ப்பார்கள் என்று கைகளைக் கூச்சத்துடன் இழுத்துக் கொள்வது நினைவில் வந்தது. கட்டிய கணவன் கைபிடிக்க வீதியில் கூச்சப்பட்டவள் இன்று இன்னொருவனை நாடிப் போகிறாள் என்பதை இன்னும் தான் இவன் மனம் நம்ப மறுத்தது. இருளத் தொடங்க மகனுடன் திரும்ப இனி இதுதான் எமக்கான வாழ்க்கை என மனது கூற, எவ்வளவு தான் மறைக்க நினைத்தாலும் முகத்தில் அவனை அறியாமல் சோகம் வந்து சூழ்வதைத் தவிர்க்க முடியவில்லை. தாயைக் கண்டதும் கைகளைத் தூக்கியபடி ஓடும் மகனைப் பார்த்துவிட்டு இவன் குளியலறை சென்று குளித்துவிட்டு தலையணையும் போர்வையும் எடுத்துக்கொண்டு வந்து சோபாவில் நீட்டி நிமிர்ந்து படுத்தபடி தொலைக்காட்சியை இயக்கிவிட்டு அதைப் பார்த்தபடி தனது தொலைபேசியில் காலை எழும்பவேண்டிய நேரத்துக்கு அலாம் வைத்துவிட்டுப் படுத்துவிட்டான். இந்த இரவு அவனுக்கு அவனறியாமலே தூக்கம் வந்துவிட்டது.

காலை அலாம் அடிக்க முன்பே கபிலனுக்கு முழிப்பு வந்துவிட்டது. கண்ணைத் திறந்து பார்த்துவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே இருந்தான். மதுவை எழுப்பிவிடுவம் என்று நினைக்க குசினிக்குள் வெளிச்சம் தெரிந்தது. அப்ப மது எழும்பிவிட்டாள். தன் அலுவலில் அவள் கவனம் தானே என எண்ணியபடி தன் காலைக் கடன்களை முடித்தான். வீட்டு மணிச்சத்தம் கேட்டதும் இவன் எழ மதுவும் குசினிக்குள் இருந்து வெளியே வந்து யார் விடிய நேரம் என்று கேட்க, உம்மை எயாப்போர்ட்டுக்குக் கூட்டிக்கொண்டு போக நேசன் வந்திருக்கிறான் என்றான். அவர் எதுக்கு நீங்கள் எங்க போறியள் என்று கேட்டவளுக்குப் பதில் சொல்லாது கதவைத் திறந்தான். உள்ளே வந்த நேசன் ஒன்றையும் காட்டிக்கொள்ளாமல் வணக்கம் மது என்ன ரெடியோ என்றான் சிரித்துக் கொண்டே. ஓம் அண்ணா பொறுங்கோ தேத்தண்ணி இருக்கு குடிச்சிட்டு வெளிக்கிடுவம் என்றபடி குசினியுள் சென்று இரு கோப்பைகளில் தேநீரைக் கொண்டுவந்து மேசையில் வைத்துவிட்டு ஒன்றை எடுத்து நேசனிடம் நீட்டிவிட்டு படுக்கை அறைக்குள் சென்றாள். கபிலன் உடைமாற்றிக் கொண்டிருந்தான். இவள் உள்ளே வருவது தெரிந்தும் கவனிக்காமல் மாற்றி முடிய வெளியே போக எத்தனிக்க, என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ என்றாள். உம்மை மன்னிச்சா என்ன மன்னிக்காட்டி என்ன நிலைமை மாறப் போறதில்லை. அதனால என்ன கதைச்சும் பிரயோசனம் இல்லை என்றுவிட்டு வெளியே வந்துவிட்டான்.

இரண்டு பயணப் பெட்டிகளில் தன் பொருட்களை அடக்கிகொண்டவள் இரண்டையும் கொண்டுவந்து வரவேற்பறையுள் வைத்தாள். பெட்டிகளைத் தூக்கப் போன கபிலனை இடைமறித்த நேசன் விடடா நானே தூக்கிறன் என்றபடி பெட்டிகளை எடுத்துக் கொண்டு நடக்க இவனைத் திரும்பிப் பாத்துவிட்டு மதுவும் நேசனைப் பின்தொடர்ந்தாள். இவன் வழியனுப்பப் போகவில்லை. அவளது பெட்டிகளை நேசன் காருக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு மது குறை நினைக்காதைங்கோ. உங்களை என்ர சகோதரியா நினைச்சுச் சொல்லுறன். கபிலனைப் போல ஒருத்தன் கிடைக்கக் குடுத்துவைக்க வேணும். நீங்கள் அவசரப்பட்டு உந்த முடிவை எடுத்திருக்கிறியள். எதுக்கும் ஒருக்கா யோசியுங்கோ என்றுவிட்டு மதுவைப் பார்த்தான். அவளோ யோசிச்சுத் தான் நான் முடிவு எடுத்தனான் என்று சொல்ல கபிலன் மேற்கொண்டு ஒன்றும் கதைக்காமல் அவளது பெட்டிகளைத் தூக்கி காரின் பின்பக்கம் வைத்துவிட்டு காரில் ஏறினான். விமான நிலையம் செல்ல இரண்டு மணி நேரம். மதுவோ நேசனோ எதுவும் கதைக்கவே இல்லை.

கபிலனின் வாழ்வு திசைமாறி மாதம் ஒன்று ஓடிப் போனது. மகன் இப்ப அம்மாவைத் தேடுவதில்லை. கபிலன்தான் இரு வாரங்கள் சரியாகத் துன்பப்பட்டுப் போனான். சமைப்பது  மகனுக்கு நப்பி மாற்றுவது குளிக்க வார்ப்பது என்று, அதைவிட உணவு கொடுப்பதுதான் சரியான கடினம். வீம்பில் உடனே மதுவைப் போகச்சொல்லிவிட்டன். இதுவரை மகனின் வேலைகளை அவளே செய்ததால் ஒருமாதிரி தட்டித் தடுமாறி இப்ப வடிவாகச் செய்யப் பழகிவிட்டான். மூன்று வாரங்களில் மகனைப் பார்ப்பதற்கு ஒழுங்கு செய்துவிட்டான். புதிதாகத் திருமணமான இருவர் வீடு தேடி அலைந்தபோது நேசன் தான் அவர்களிடம் கதைத்து இப்படி குழந்தையுடன் ஒருவன் இருக்கிறான். அவன் வேலைக்குப் போகும் நேரம் குழந்தையை பார்த்தால் நீங்கள் வாடகை இன்றியே அங்கிருக்கலாம் என்று அவர்களும் சம்மதித்து போன கிழமைதான் இங்கு வந்திருந்தார்கள். இவனுக்கு முன்னே தெரியாதவர்களாயினும் நேசனுக்குத் தெரிந்தவர்களாகையால் எவ்வித பயமுமின்றி அவர்களை எற்றுக்கொண்டாயிற்று. அவர்களும் தானும் தன் பாடும். இவனுக்கு நேற்றுத்தான் வேலை தொடங்கியது.  மகனும் அந்தப் பெண்ணுடன் ஒன்றிவிட்டான். இனிப் பிரச்சனை இல்லை என்று எண்ணியபடி இருக்கையில் அமர்ந்தான்.

 மகன் எழும்பும்  நேரம் எதுக்கும் பாலைக் காச்சி வைப்போம் என எண்ணியபடி எழ இவனின் கைத்தொலை பேசி அடிக்கும் சத்தம் கேட்டது. எழுந்து சென்று எடுத்தால் நின்றுவிட்டது. லண்டன் இலக்கம். யார் லண்டனில் இருந்து அதுக்கும் என் கைத்தொலைபேசிக்கு என எண்ணியவன் எண்ணம் அதிர்வோடு நிக்க மதுவாக இருக்குமோ என எண்ண முதலே நெஞ்சு படபடத்தது. திருப்ப எடுப்பமோ என என்னும்போதே வேண்டாம், தேவை என்றால் அவர்களே எடுப்பார்கள் தானே என மனதைத் தேத்தினாலும், மதுதான் எடுத்தாளோ? மகனின் நினைவு வந்திருக்கும். என்னை பற்றி அவள் நினைக்கவும் மாட்டாள் என்று எண்ணிக்கொண்டிருக்க மீண்டும் தொலைபேசி அழைப்பு. உடனே எடுக்க எண்ணிவிட்டு மூன்று  நான்கு மணிச்சத்தம் கேட்கும் வரை பொறுத்து பின் எடுத்து  வணக்கம் என்றான். சிறிது நேரம் எதுவிதச் சத்தமும் இல்லை. கலோ யார் எனக் கேட்க நான் தான் மது என அவளின் குரல் கிணற்றுக்குள் இருந்து கேட்டது. இவனுக்கு நெஞ்சின் படபடப்புக் கூடிப் போனது. ம் என்றுவிட்டு இவனும் பேசாமல் இருந்தான். மகன் எப்படி இருக்கிறான் என மெதுவாகக் கேட்டாள். அவனும் நானும் எல்லாம் மறந்து நின்மதியா இருக்கிறம். சந்தோசமாகவும் இருக்கிறம் என்றான். என்னை மன்னிக்கவே மாட்டியளோ என்றாள் மது. நீர் தந்த பரிசு வாழ்க்கை பூரா மறக்க முடியாத பரிசு. எப்பிடி உம்மை மன்னிக்கிறது என்றான். அவளின் அழுகை ஒலி கேட்டது. இவன் ஒன்றும் கூறாமல் நின்றான். என்னை நீங்கள் மன்னிக்காட்டி நான் தற்கொலை தான் செய்யவேணும் என்று மது கூறியவுடன் இவனுக்கு வந்த கோபத்தில் வடிவாத் தற்கொலை செய்துகொள் என்றுவிட்டு தொலைபேசியைத் துண்டித்தான்.

கபிலனின் கால்கள் இரண்டும் கூட நடுங்கின. வந்து கதிரையில் அமர்ந்தவன் பின்னால் சாய்ந்து கண்களை மூடினான். என்ன ஒரு சுயநலம். தப்பு எல்லாம் தான் செய்துபோட்டு இப்ப மன்னிப்புக் கேட்டால் சரியோ? மன்னிக்காட்டி தற்கொலை செய்வதாய்  மிரட்டல் வேறு. டைவேஸ் கூடப் பண்ணாமல் இவளை அனுப்பிவச்ச என்னைச் சொல்ல வேணும். இந்த ஒரு மாதமா நான் பட்ட வேதனை. ஒரு தமிழர்களின் கண்ணிலையும் படக்குடாதெண்டு வீடும் வேலையுமா இவளைப் போல ஆட்களை வெட்டிப் போட வேணும் என எண்ணி முடியவில்லை மீண்டும் அவளிடமிருந்து போன். போனை நிப்பாட்ட நினைத்தவன் சரி இதுக்கு மிஞ்சி என்னத்தைச் சொல்லப் போறாள் என்று நினைத்தபடி குரலைக் கடினமாக்கிக் கொண்டு என்ன என்றான். தயவு செய்து போனை வச்சிடாதைங்கோ நான்  உங்களோட கதைக்க வேணும். எனக்கு உங்களை விட நம்பிக்கையா சொல்ல ஒருத்தரும் இல்லை என்று அவள் சொல்ல என்ன சொல்லவேணும் என்றான். நான் திரும்பி உங்க வரப்போறான் கபில். வேண்டாம் என்று மட்டும் சொல்லிப் போடாதைங்கோ என்றுவிட்டு விக்கிவிக்கி அழுபவளை ஒன்றும் சொல்லத் தோன்றாமல் நின்றான். அவள் உரிமையுடன் முன்பு கூப்பிடுவது போல் கபில் என்றது அவனுக்கு அவள்மேல் இருந்த கோபத்தைத் தணித்திருந்தது.
ஏன் அவன் விட்டுட்டுப் போட்டானோ என்றான். இல்லை என்னால இந்த நரகத்துக்குள்ள வாழ முடியேல்லை. இப்பதான் உங்கடை அருமை எனக்குத் தெரிஞ்சுது. பிள்ளையையும் உங்களையும் விட்டுட்டு என்னால இருக்க முடியேல்லை. நீங்கள் என்னை மனைவியா நினைக்க வேண்டாம். நான் உங்களைக் குழப்பாமல் பிள்ளையை மட்டும் வேலைக்காறிபோல பாத்துக்கொண்டு இருக்கிறன் என்று அழ அவனுக்கு என்னசெய்வது என்றே தெரியவில்லை. இப்பவும் அவள் சட்டப்படி என்ர மனிசிதான். நான் வேண்டாம் என்று சொல்லி அவள் ஏடாகூடமா ஏதும் செய்தால் அதுகும் எனக்குத்தான் பழி. ஆனால் இவள் போனதுக்கே இந்தச் சனங்கள் எப்பிடி நாக்கு வளைச்சுதுகளோ இப்ப திரும்பி வந்தால் என்ன சொல்லுங்களோ என ஏதேதோ எண்ணியவன் சரி எப்பிடிப் பாத்தாலும் கெட்டபேர் வந்தது வந்ததுதான். பாவம் மனம் நொந்து அழுகிறாள். ஒரு பெண்ணுக்கு வாழ்வு குடுக்கிறதாய் எண்ணி  சரி எப்ப வாறீர் என்றான். உண்மையாத்தான் சொல்லுறியளோ என நம்பமுடியாது கேட்டவள் நீங்கள் தான் எனக்கு டிக்கெற் எடுத்து அனுப்ப வேணும் என்றவுடன் சரி தயாராய் இரும், தனிய விமான நிலையம் வரத் தெரியுமோ என்றான். கீத்துறோவுக்கு எடுத்தால் நேர ரெயின் இருக்கு வருவன் என்றவுடன் சரி டிக்கெற்றை புக் பண்ணிப் போட்டு அடிக்கிறன் என்றபடி தொலைபேசியை அணைத்துவிட்டு கணனியின் முன் அமர்ந்தான்.

செரியான பேய்க் கபில்  <_<  <_< .  இவருக்கு செகிடாவடி பொத்தி மின்னவேணும் . எப்ப ரெண்டு பேருக்கையும் நம்பிக்கையீனம் வந்திதோ அப்பவே இவர் கையெழுத்தை போட்டு குடுத்து பார்ட்டியை அனுப்பியிருக்கவேணும் . அந்தமாதிரி கதை சொல்லுறியள் சுமே . உங்கடை உளைப்பு வீண்போகேலை . வாழ்த்துக்கள் :) :) .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.