Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது'

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இலங்கையில் வாய்கிழியக் கத்தும் முஸ்லிம் கட்சிகள் இந்த விவகாரத்தில் என்ன செய்தவை?

 

வார வெல்லிக்கிலமை செய்வாங்க அப்ப பாருங்க.......

  • Replies 71
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
றிசானா இந்த குற்றத்தை தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா தெரியவில்லை :unsure: ...குற்றம் செய்யும் போது என்ன மனநிலையில் இருந்தாரோ தெரியாது :( ...புலத்தில் எத்தனையோ பெண்கள் மன அழுத்தத்தினால் தங்களது பிள்ளைகளையே கொல்கிறார்கள்...எது எப்படி இருந்தாலும் மரண தண்டனை என்பது அதி கூடிய தண்டனை இப் பெண்ணிற்கு :o ...ஆயுள் தண்டனை கொடுத்திருக்கலாம்...ஆத்மா சாந்தியடையட்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ரிசானாவிற்காக மெளன அஞ்சலிகள்.

தவிர, இறந்த குழந்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்படாமை எஞமானர், காவல்துறை ஆகியபகுதிகளில் சந்தேகத்தை வலுவூட்டுகின்றது. அதாவது, தமது ஓர் குழந்தை இறந்தால் அதற்கு நிகராக இன்னோர் உயிர் விழவேண்டும் அல்லது பறிக்கப்படவேண்டும் எனும் நோக்கில் எஞமானர் குடும்பத்தினர் ஆரம்பத்திலிருந்தே பிடியாக உள்ளதுபோல் தெரிகின்றது. 

 

பாலூட்டும் பொது குழந்தைகள் இறப்பது அசாரணமல்ல.  புட்டி போத்தல் அதிகளவு இடைஞ்சலை ஆக்குவது. அது தாயை சரியாக நிகர்ப்பதல்ல. தாதி சான்றிதல் இல்லாதிருந்த அந்த பெண் கனடா போன்ற நாடுகளில் சிறைக்கு கூட போயிருக்கமாட்டர். ஒரு குழந்தை இறப்புக்கு ஒரு தாதி என்றால், ஒரு தாதி இறப்புக்கு ஒரு பொலிசு, ஒரு ஜட்ஜ் ....என்றுதான் பலி கேட்கவேண்டிவரும். நிழலி முகம் அறியாத அந்த பெண் மீது ஏன் இந்த கோபம் காட்டுகிரார்.

 

எந்த தாயுக்கும் தன் பிள்ளை ஏன் இறந்தது என்ற கேள்விக்கு பதில் வேண்டும். எஜமானார் குடும்பம் பிரேத பரிசோதனையை ஊக்குவிக்காத்தால் இறப்பு சந்தேகமானதாக கருதப்படவேண்டும். அவர்கள் சாட்சியத்தை அழித்தார்களா என்ற கேள்வி எழுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
வார வெல்லிக்கிலமை செய்வாங்க அப்ப பாருங்க.......

 

வார வெல்லிக்கிலமை தொலுகைக்குப் பின்னர் சவுதிக்கு எதிரா ஜிகாத் அறிவிப்பு விடுவார்கலா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாம் பிறந்த பூமியிலேயே இன்று மன்னிப்பு எனும் பெருங்கொடையை நாம் இழந்தோம்!

 

rizana-nafeek1.jpg?w=510slmdi-logo1.jpg?w=150&h=150இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

-சகோதரி ரிசானா நஃபீக்கின் மரணச் செய்தி கேட்டு பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ள அனுதாப மற்றும் உதவி கோரல் அறிக்கை-

 

சவூதி அரேபிய அரசாங்கத்தினால் இன்று காலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பென் ரிசானா நஃபீக்கின் குடும்பத்தாருடன் பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் சகோதர சகோதரிகள் தமது கவலைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

சகோதரி ரிசானா நஃபீக்கின் ஆத்ம சாந்திக்காகவும், அவரது மறுமை ஈடேற்றத்திற்காகவும் இவ்மைப்பின் அங்கத்தவர்கள் அனைவரையும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் வேண்டுகின்றோம்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்தவரான இச்சகோதரி, 1988ம் ஆண்டிலேயே பிறந்திருந்த போதிலும் இவரை சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக அனுப்பிய வெளிநாட்டு வேலை வாயப்பு முகவர் தனது ஒரு சில ஆயிரம் ரூபா பண வருவாய்க்காக 1982ல் பிறந்தார் என போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து இவருக்குரிய கடவுச் சீட்டைப் பெற்று அனுப்பியிருந்தார்.

 

சவூதி அரேபியாவில் இச்சகோதரி பணிபுரிந்த வீட்டில் 4 மாதக் குழந்தையொன்றைக் கொலை செய்ததாக இவர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு 2005ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இச்சம்பவம் நடைபெற்றபோது சகோதரி ரிசானா உண்மையில் 17 வயதுடைய சிறுபெண்ணாகவே இருந்துள்ளார். தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் இவர் முற்றாக மறுதலித்து சாட்சிய ரீதியாக தான் இக்கொலையைச் செய்யவில்லை என்றும் வாதாடியிருந்தார். எனினும் கடவுச் சீட்டில் காணப்பட்ட போலியான பிறந்த திகதியின் அடிப்படையில் இவருக்கு சவூதி அரசாங்கம் மரண தண்டனையை விதித்திருந்தது.

 

மரண தண்டனை விதிக்கப்பட்ட சகோதரி ரிசானா நஃபீக், சவூதி அரேபியாவிலுள்ள தவாத்மி பகுதியில் அமைந்துள்ள சிறையில் இதுவரை காலமும் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

சம்பவம் நிகழும்போது இவரது உண்மையான வயதின் அடிப்படையிலும், சிறுவர் நலன் பேணும் வகையிலும், இவரது வறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பத்தின் நிலவரத்தைக் கருத்திற் கொண்டும் இவருக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்யமாறு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மனிதாபிமான அமைப்புக்கள் சவூதி அரசாங்கத்தைக் கோரி வந்தன.

 

உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான மனிதநேய நலன் விரும்பிகள் இவரை விடுவிக்குமாறு பேஸ்புக் மூலமாகவும், தனிப்பட்ட மனுக்கள் மூலமாகவும் சவூதி அரேபிய அரசுக்கும், மன்னருக்கும் கருணை மனுக்களைச் சமர்ப்பித்திருந்தனர்.

அதேபோன்று உலக நாடுகளின் தலைவர்களும் இவ்வாறான கருணை விண்ணப்பங்களை விடுத்திருந்தினர். இலட்சோப இலட்சம் முஸ்லிம்கள் அவரது விடுதலைக்காக உலகெங்கும் இருந்து அல்லாஹ்விடம் இத்தனை வருடங்களாகக் கையேந்தி வந்தனர்.

குறிப்பாக, எமது ஸ்ரீலங்காவின் மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களும் ஒரு முறைக்கு இரு முறை தனது பிரஜையின் மீது கருணை காட்டுமாறு சவூதி அரசாங்கத்தையும், மன்னரையும் உருக்கமாகக் கேட்டிருந்தார்.

 

இவ்வாறான கருணை மனுக் கோரிக்கைகளால் சகோதரி ரிசானா நஃபீக் மன்னித்து விடுதலை செய்யப்படுவார் என்றே முழு உலகமும் நம்பிக்கையோடு எதிர்பார்த்திருந்தது. ஆனால் அந்த நம்பிக்கைகள் அனைத்தும் இன்று தகர்ந்து போயிற்று. அவரது மரணச் செய்தி கேட்டு உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான விழிகள் இன்று கண்ணீரைச் சிந்தி கவலையுடன் காணப்படுகின்றன.

இஸ்லாம் வலியுறுத்தும் மன்னிப்பு என்கிற மாபெரும் கொடையை ஒரு ஏழைச் சிறுமிக்கு வழங்கி அதன் மகத்துவத்தை நிரூபிக்க இன்றைய சவூதி அரேபிய அரசாங்கம் மறுதலித்துள்ளதானது இஸ்லாத்தைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்கள் என்ற வகையில் எமக்கெல்லாம் கவலையாகவுள்ளது.

mother-with-sisters.jpg?w=510இரக்கமற்ற இந்த உயிர் பறிப்பினால் இன்று இவரை நம்பி வாழும் இரண்டு உடன்பிறந்த சகோதரிகளின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

தமது குடும்பத்தின் வறுமைக்கு விடிவு காணும் நம்பிக்கையுடனும் பெரும் எதிர்பார்ப்புடனும் இச்சிறுமியை உலகின் தனிப்பெரும் இஸ்லாமிய நாடொன்றுக்கு பணிப்பெண்ணாக அனுப்பி வைத்த இவரது பெற்றோர் நிலைகுலைந்து போயுள்ளனர்.

நாம் பல வழிகளில் முயன்றும் இவரது குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டு எமது அமைப்பின் அனுதாபங்களை இன்று மாலை வரை தெரிவித்துக் கொள்ள முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து முற்சித்து வருகின்றோம்.

 

rizana-father-mother.jpg?w=510

 

சகோதரி ரிசானாவின் மரணச் செய்தி கேட்ட நிமிடத்திலிருந்து இவரது குடிசை வீடு மாத்திரமன்றி மூதூர் முஸ்லிம் நகரமே மக்கள் வெள்ளத்தில் அமிழ்ந்துள்ளதாக இலங்கையிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இச்சகோதரியின் இழப்பிற்கு எவராலும் முழுமையான பிரதியீட்டினை வழங்கி விட முடியாது. அல்லாஹ் ஒருவனே இவர்களின் கலையையும், சஞ்சலத்தையும் போக்கி நம்பிக்கையையும், எதிர்கால வாழ்க்கை மீதான பற்றுறுதியையும் அளிப்பதற்கு சக்தியுள்ளவனாகும். அந்த வகையில் நாம் அனைவரும் அந்த வல்லோனிடமே எமது பிரார்த்தனைகளைச் செய்வோம்.

இன்ஸா அல்லாஹ், எதிர்வரும் 11ம் திகதி வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின் இச்சகோதரியின் குடும்பத்தினருக்கு அனுப்பி வைப்பதற்கான உதவி திரட்டும் நடவடிக்கையொன்றை பிரித்தானியாவிலுள்ள முக்கிய நகரங்களில் எமது அமைப்பு மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

இந்த ‘உதவும் கரங்கள்’ பணியில் பிரித்தானியாவிலுள்ள ஒவ்வொரு முஸ்லிம் சகோதர சகோதரிகளையும், ஏனைய சமூகங்களைச் சேர்ந்த மனிதாபிமான ஆர்வலர்களையும் இணைந்து கொள்ளுமாறு நாம் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இந்த ‘உதவும் கரங்கள்’ பணியில் பங்கேற்று நிதியுதவிகள் மற்றும் பொருளுதவிகள் வழங்கும் அனைவருக்கும் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினால் உரிய பற்றுச் சீட்டுக்கள் வழங்கப்படுவதுடன், அவ்வுதவிச் சேகரிப்பை இலங்கையிலுள்ள எமது மத்திய கிளை நிர்வாகத்தினர் ஊடாக சகோதரி ரிசானா நஃபீக் அவர்களின் பெற்றோரிடம் நேரடியாகக் கொண்டு சென்று கையளிப்பதற்கான ஏற்பாடுகளையும் நாம் செய்துள்ளோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது தூய எண்ணங்களையும், செயற்பாடுகளையும் அங்கீகரித்து இதில் பங்கேற்கும் அனைவருக்கும் நற்கூலியையும் வழங்குவானாக!

பெற்ற மகளினதும், உற்ற சகோதரியினதும் பிரிவுத்துயரால் துவண்டு போயுள்ள அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஊர் ஜமாஅத்தார்களுக்கும், ஏனைய சகோதர உறவுகளுக்கும் எமது அமைப்பின் சோகப் பகிர்வுகளை மீண்டும் நாம் சமர்ப்பித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனபதியில் சகோதரி ரிசானா நஃபீக்கையும் நுழையச் செய்வானாக எனவும் பிரார்த்திக்கின்றோம்.

- இவ்வாறு இன்று வெளியிடப்பட்ட அவ்வமைப்பின் உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

நன்றி

வார உரைகல் .com



உயிர்ப்பலிக்கு உயிர்ப்பலி எனும் வகையில்

 

உயிர் பறிக்கப்பட்ட ரிஸானாவின் ஆத்மா சாந்தியடையட்டும்

உண்மையில் சவூதி நாட்டில் இருக்கும் சட்டங்களை தெரிந்தால் யாருமே எதற்குமே அங்கு போக மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
வார வெல்லிக்கிலமை செய்வாங்க அப்ப பாருங்க.......

 

இருந்தாலும், உங்களுக்குக் குசும்பு கூடித்தான் போச்சு, அண்ணை !  :D

  • கருத்துக்கள உறவுகள்
மரணதண்டனை நிறைவேற்ற காரணமாய் இருந்த தாய்க்கு நடவடிக்கை எடுக்கவும்:அமைச்சர் பௌசி
By J.Stephan 
2013-01-10 09:54:37
 
ரிசானா நபீக்கிற்கு நிறைவேற்றப்பட்டுள்ள மரணதண்டனையானது முழுநாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் ரிசானாவின் மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு காரணமான சவூதி அரேபிய நாட்டுத்தாயாருக்கு சவூதி அரசாங்கம் உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
 
திருகோணமலை மூதூரைச் சேர்ந்த ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் தனது அனுதாபத்தை வெளியிடுகையிலேயே அமைச்சர் பௌசி மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
 
அவர் மேலும் கூறுகையில்,
 
ரிசானா நபீக் குற்றமிழைத்திருப்பதாக கருதப்பட்டு மரணதண்டனை விதிப்புக்குள்ளானார்.இது முழுநாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ரிசானா ஒரு சிறுமியாவார்.
 
சிறுமியான அவரிடம் குழந்தையை பராமரிக்கவென அவரிடம் ஒப்படைத்தமை அந்தத் தாயின் தவறாகும். தனது குழந்தையை அவர் எவ்வாறு ஒரு சிறுமியிடம் ஒப்படைக்க முடியும்? இங்கு இந்தம் தாயும் குற்றமிழைத்துள்ளார்.
 
எனவே குறித்த தாய் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
  • கருத்துக்கள உறவுகள்
கதறினார் ரிஸானாவின் தாயார் அதிர்ச்சியில் உறைந்தது மூதூர்; விடுதலை என்று கூறி அரசியல் நடத்திய அரசியல்வாதிகளை திட்டித் தீர்த்தனர் மக்கள்
 
மகளின் வருகையை எதிர்பார்த்துக்கொண்டிருந்த தாய் நேற்று அதிர்ச்சியில் உறைந்து போனாள். அந்தத் தாயுடன் இணைந்து மூதூரும் சோகத்தில் உறைந்துபோனது.
 
மூதூர் ரிஸானா நபீக்கிற்கு நேற்று நண்பகல் நேரம் சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட தகவலை கேள்வியுற்ற ரிஸானாவின் தாய் செய்வதறியாது திகைத்து நின்றாள்; நம்ப மறுத்தாள். ரிஸானாவின் தந்தை மௌனித்தார். இரு தங்கைகளும் கதறி அழுதனர்.
 
ரிஸானாவின் தாய், தந்தை மட்டுமல்ல, இலங்கை வாழ் மக்கள் எவருமே நினைத்துப் பார்த்திருக்காத இந்தத் துயரச் சம்பவம் நேற்று இலங்கைக்கு அறியக் கிடைத்தபோது நாடே சோகத்தில் மூழ்கியது.
 
ரிஸானாவின் சொந்த ஊரான மூதூர் பிரதேசம் கதறியழுதது. உறைந்து போய்நின்ற ரிஸானாவின் தாய் துடியாய் துடித்தாள். தன் கையால் மார்பில் அடித்துக் கதறினாள். 
15 வருடங்கள் பாலூட்டி, சீராட்டி வளர்த்த தனது அன்பு மகளின் மரணம் இவ்வாறு அமைந்துவிட்டதே என எண்ணி விம்மினாள். 
 
ரிஸானாவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுவிட்டதை அறிந்த மூதூர் தொகுதி மக்களும், ஏனைய பிரதேச மக்களும் ரிஸானாவின் வீட்டை நோக்கி அலையாகத் திரண்டனர்.
 
பள்ளிவாசல்களில் விசேட துஆப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஜனாஸாத் தொழுகைகளும் நடத்தப்பட்டன. ரிஸானா விரைவில் விடுதலையாவாள் என்று போலி வாக்குறுதிகளை வழங்கி அரசியல் நடத்திய அரசியல்வாதிகளை ரிஸானாவின் இல்லத்தில் திரண்ட மக்கள் சாபம் உண்டாகட்டும் எனக் கூறி திட்டித் தீர்த்தனர்.
 
10 ஜனவரி 2013, வியாழன் 9:45 மு.ப
றிசானா இந்த குற்றத்தை தெரிந்து செய்தாரா அல்லது தெரியாமல் செய்தாரா தெரியவில்லை :unsure: ...குற்றம் செய்யும் போது என்ன மனநிலையில் இருந்தாரோ தெரியாது :( ...புலத்தில் எத்தனையோ பெண்கள் மன அழுத்தத்தினால் தங்களது பிள்ளைகளையே கொல்கிறார்கள்...எது எப்படி இருந்தாலும் மரண தண்டனை என்பது அதி கூடிய தண்டனை இப் பெண்ணிற்கு :o ...ஆயுள் தண்டனை கொடுத்திருக்கலாம்...ஆத்மா சாந்தியடையட்டும்.
 

 

நீங்கள் ரிசானா பற்றிய தரவுகள் எதுவும் தெரியாமல் இவ்வாறு எழுதியுள்ளீர்கள் என நினைக்கின்றேன். ரிசானா உண்மையில் குற்றம் செய்தாரா என்பதுதான் முதலாவது வினா. மரணம் அடைந்த குழந்தைக்கு பிரேத பரிசோதனையே செய்யப்படவில்லை, காவல்நிலையத்தில் ரிசானாவிடம் பலாத்காரமாக வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது, தவிர ரிசானாவின் மொழிப்பிரச்சனை, தனிமைப்படுத்தல் என பல விடயங்கள் உள்ளன. அவருக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞர் கூட ஒழுங்குசெய்யப்படவில்லை. கண்காணாத இடத்திற்கு என்ன தைரியத்தில் பதினேழு வயது ரிசானாவை அவரது பெற்றோர் பணிப்பெண்ணாக அனுப்பி வைத்தார்கள் என்பது அவர்களிற்கே வெளிச்சம். ரிசானாவின் பெற்றோரே தலை கொய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ரிசானாவின் மரணத்தில் முதற்குற்றவாளிகளாகத் தெரிகின்றார்கள். தமது இளம்பிள்ளைகளை கண்காணாத இடத்திற்கு தொழிலிற்காய் அனுப்பிவைக்க முயற்சிக்கும் பெற்றோருக்கு ரிசானாவின் படுகொலை ஓர் படிப்பினை.

பாலூட்டும் பொது குழந்தைகள் இறப்பது அசாரணமல்ல.  புட்டி போத்தல் அதிகளவு இடைஞ்சலை ஆக்குவது. அது தாயை சரியாக நிகர்ப்பதல்ல. தாதி சான்றிதல் இல்லாதிருந்த அந்த பெண் கனடா போன்ற நாடுகளில் சிறைக்கு கூட போயிருக்கமாட்டர். ஒரு குழந்தை இறப்புக்கு ஒரு தாதி என்றால், ஒரு தாதி இறப்புக்கு ஒரு பொலிசு, ஒரு ஜட்ஜ் ....என்றுதான் பலி கேட்கவேண்டிவரும். நிழலி முகம் அறியாத அந்த பெண் மீது ஏன் இந்த கோபம் காட்டுகிரார்.

 

எந்த தாயுக்கும் தன் பிள்ளை ஏன் இறந்தது என்ற கேள்விக்கு பதில் வேண்டும். எஜமானார் குடும்பம் பிரேத பரிசோதனையை ஊக்குவிக்காத்தால் இறப்பு சந்தேகமானதாக கருதப்படவேண்டும். அவர்கள் சாட்சியத்தை அழித்தார்களா என்ற கேள்வி எழுகிறது.

 

குற்றம் செய்தவர் தண்டிக்கப்படவேண்டும் எனும் கருத்துப்பட நிழலி அவ்வாறு கூறினார் என்று நினைக்கின்றேன். ஆனால், ரிசானா குற்றம் செய்தாரா என்பதை நிழலி எப்படி உறுதிப்படுத்தினார் என்று நிழலியிடம்தான் கேட்டறியவேண்டும்.

 

சவூதி அரேபியாவில் எஜமானார்கள் வீட்டுப்பணிப்பெண்களை தமது அடிமைகள் போல் நடாத்தும் பாங்கின் வெளிப்பாடே ரிசானாவின் படுகொலையிலும் தெரிகின்றது. சவூதி அரேபியாவின் சட்டத்தில் பணிப்பெண்களாகச்செல்லும் தொழிலாளர்களிற்கு எதுவித பாதுகாப்பும் இல்லை. New York Times இல்:

 

The news of the execution came on the same day that the United Nations’ International Labor Organization issued a report saying that of the 52 million domestic workers worldwide, only 10 percent are covered by labor laws to the same extent as other workers, and more than one-quarter are completely excluded from national labor legislation. It called on countries to extend protections to such workers.

 

Saudi Arabia in particular was not keeping up with the international trend to improve protections for domestic workers, Ms. Varia said.

 

King Abdullah and the ruling Faisa family are among the world's wealthiest people. The King's inhumane failure to afford clemency to this young girl--a domestic worker--offers continuing and sufficient evidence to continue the Arabic Spring cleansing of these brutal dictators from ruling positions in the Middle East.

 

It is surprising to near now from the Saudi Interior Ministry, only after the execution of Rizana Nafeek, that the maid "strangled the infant because of differences between her and the baby’s mother." To my knowledge, this statement is utterly bogus and was never publicized before the maid was beheaded, given she was arrested in 2005. This is a cynical attempt by the executioners to besmirch a dead person.

Again, if only for the historical record, Rizana claimed the baby inadvertently choked during feeding. No witnesses were present (the mother having left the infant alone with Rizana for feeding) and no autopsy was ever conducted to ascertain the cause of death. The sentence was based purely on a forced confession extracted by the Saudi authorities. They murdered an innocent person.

 

And these are the people we support. These primitive tribesmen, living with a 15th century mindset, in a 21st century world, with untold riches and comforts, while importing 3rd world people to be their servants. Shame on us. Another reason for the US to develop alternative fuels. Let them drown in their oil!
  • கருத்துக்கள உறவுகள்

. கண்காணாத இடத்திற்கு என்ன தைரியத்தில் பதினேழு வயது ரிசானாவை அவரது பெற்றோர் பணிப்பெண்ணாக அனுப்பி வைத்தார்கள் என்பது அவர்களிற்கே வெளிச்சம். ரிசானாவின் பெற்றோரே தலை கொய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ரிசானாவின் மரணத்தில் முதற்குற்றவாளிகளாகத் தெரிகின்றார்கள். தமது இளம்பிள்ளைகளை கண்காணாத இடத்திற்கு தொழிலிற்காய் அனுப்பிவைக்க முயற்சிக்கும் பெற்றோருக்கு ரிசானாவின் படுகொலை ஓர் படிப்பினை.

 

 

அவரது வீட்டின் படத்தை பார்த்தாலே  புரிகிறது

அவரது பெற்றோர் எதற்காக அனுப்பி  வைத்தார்கள் என்று.

இதுவும் ஒரு தியாகம்தான்.

ஒரு பலி தான்

படத்தை பாருங்கள் கலைஞன்.

ரிசானாவின் வீட்டில்...

rizana1.jpg

இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து மூதூரிலுள்ள ரிசானாவின் வீட்டின் நிலமைகளை படங்களில் காணலாம். (படங்கள்: முறாசில்)

rizana2.jpg

rizana4.jpg

rizana5.jpg

rizana7.jpg

rizana3.jpg

rizana6.jpg

http://tamil.dailymirror.lk/--main/56553-2013-01-09-12-13-27.html

  • கருத்துக்கள உறவுகள்

3773978849356934208926200722043974819536



தூ ....... இதுவும் ஒரு பிழைப்பா ?

  • கருத்துக்கள உறவுகள்
சிறுமியான அவரிடம் குழந்தையை பராமரிக்கவென அவரிடம் ஒப்படைத்தமை அந்தத் தாயின் தவறாகும். தனது குழந்தையை அவர் எவ்வாறு ஒரு சிறுமியிடம் ஒப்படைக்க முடியும்? இங்கு இந்தம் தாயும் குற்றமிழைத்துள்ளார்.

 

சிறுமியை வேலைக்கு அனுப்ப அனுமதியளித்த அரசாங்கத்துக்கு என்ன தண்டனை?

  • கருத்துக்கள உறவுகள்
சிறுமியை வேலைக்கு அனுப்ப அனுமதியளித்த அரசாங்கத்துக்கு என்ன தண்டனை?

 

 

 

 

அதுக்குத்தான் கடவுச்சீட்டில் சுத்துமாத்து என்றிருக்கே இசை...........

  • கருத்துக்கள உறவுகள்
அதுக்குத்தான் கடவுச்சீட்டில் சுத்துமாத்து என்றிருக்கே இசை...........

 

கடவுச் சீட்டில் சுத்துமாத்தை அனுமதித்தது அரசாங்க ஊழியர்கள்.. இவர்களை நெறிப்படுத்தத் தவறியது அரசாங்கம். அதாவது ஆட்சி பரிபாலனம் சரியில்லை என்று அர்த்தப்படுகிறது.

 

அதுமட்டுமல்லாமல், மத்தியகிழக்கில் வேலைகளைப் பெற்றுக் கொடுக்கவென்று ஒரு அரச நிறுவனம் கூட இருக்கிறது. மத்திய கிழக்கு பணியாட்களின் வருமானத்தால் அடைந்த மகிழ்ச்சியில் அதை இவர்கள் இவ்வாறு ஊக்கப்படுத்தினார்கள்.

 

போக, வேலைக்கு அனுப்பிய முகவருக்கு என்ன தண்டனை? பெற்றோருக்கு? பிறந்த ஆண்டுதெரியாது என்று சொல்லிவிடுவார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
ரிசானாவின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்த சவூதி தனவந்தர்
  சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு சவூதி தனவந்தர் ஒருவர் முன் வந்துள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகாரப் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

பிரதி அமைச்சரின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்தி ஒன்றிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சவூதியில் பணிப் பெண்ணாக கடமையாற்றிய நிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள ரிசானா நபீக்கின் குடும்பத்தினரின் வறுமை நிலையை கருத்திற்கொண்டு அவர் எந்த நோக்கத்திற்காக சவூதிக்குச் சென்றாரோ அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தொடர்பில் சவூதி அரேபியாவைச் சேர்ந்த தனவந்தர் ஒருவர் இதற்கு முன்வந்துள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் அவருடன் கலந்துரையாடிய போது 04 மாத காலத்திற்குள் ரிசானா நபீக்கின் குடும்பத்தினர் வசிப்பதற்கு சகல வசதிகளும் கொண்ட வீடொன்றை அமைத்துக்கொடுப்பதற்கு அவர் முன் வந்துள்ளதாகவும் பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/local.php?vid=2488

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டை வாங்கினார்கள் என்றால் பணம் மட்டுமே குறி என்று எடுத்துக்கொள்ள முடியும்.

வீட்டை வாங்கினார்கள் என்றால் பணம் மட்டுமே குறி என்று எடுத்துக்கொள்ள முடியும்.

 

ஏழைகளின் வாழில் நாம் ஏன் அவசரமாக இலட்சியதை விதைப்பான். அர்சுன் அடிகடி எழுதுவது "நம்மில் யாரும் உண்மையாக இல்லையே" என்பதுதான். குடும்பதை பார்க்க அழுகை வருகிறது. அப்பனை பார்க்க கோபம் வருகிறது. இதெல்லாம் நாம் வளர்ந்த விதமே அல்லாமல், பின்னனியில் உண்மை எதுவும் இல்லை.

 

சவுதியில் மட்டும்  600,000 சிங்கள்வரும், முஸ்லீம்களும் வேலை செய்கிறார்கள். இவ்வளவு முன்னேற்றத்தையும் குடிவரவு- குடியகல்வு, தூதுவராலயங்கள், முஸ்லீம் மந்திரிகள், தொழில் தேடிக்கொடுக்கும் முடிச்சு மாறி ஏஜென்சீஸ் சேர்ந்து தமக்கு தாம் ஆக்கியிருக்கிறார்கள். (உலகம் முழுக்க இருக்கும் தமிழ் புலம் பெய்ர மக்கள் 800,000 மட்டும்தான்). இதையே மற்றய தொழில் தேடும் எல்லா நாடுகளிலும் செய்கிறார்கள். சவுதி இதனால்தான் அமெரிக்காவை எதிர்த்து மகிந்தாவுக்கு UNHRCல் வாக்களித்தது.

 

நிறைய பெற்றால் நாலைந்து வீடுகள் வாங்கலாம் என்றும் வரலாம். ஆனாலும் தமிழர் ஆண்களை விற்பதும், முஸ்லீம்கள் பெண்களை போற்றாமால் எடுத்தெறிந்து விற்பதும் இலங்கையில் வழமை. 

 

இலங்கை அரசும் விலைபோன முஸ்லீம் மந்திருகளும் நியாயம் கிடைக்க பண்ணியதாக நடிக்க சுவுதியுடன் சேர்ந்து ஆடும் நாடகங்களுடன் இதுவும் வரலாம். அதை வைத்து அவர்கள் அரசியல் செய்ய முயலும் போது பெற்றார்களால் தடுக்க முடியுமா? நமது பெண்கள் ஏன் இராணுவத்தில் சேர்ந்தார்கள் என் நம்மிடம் விடை இல்லை.

கடவுச் சீட்டில் சுத்துமாத்தை அனுமதித்தது அரசாங்க ஊழியர்கள்.. இவர்களை நெறிப்படுத்தத் தவறியது அரசாங்கம். அதாவது ஆட்சி பரிபாலனம் சரியில்லை என்று அர்த்தப்படுகிறது.

 

அதுமட்டுமல்லாமல், மத்தியகிழக்கில் வேலைகளைப் பெற்றுக் கொடுக்கவென்று ஒரு அரச நிறுவனம் கூட இருக்கிறது. மத்திய கிழக்கு பணியாட்களின் வருமானத்தால் அடைந்த மகிழ்ச்சியில் அதை இவர்கள் இவ்வாறு ஊக்கப்படுத்தினார்கள்.

 

போக, வேலைக்கு அனுப்பிய முகவருக்கு என்ன தண்டனை? பெற்றோருக்கு? பிறந்த ஆண்டுதெரியாது என்று சொல்லிவிடுவார்களோ?

 

இப்ப தான் அரச ஊழியர்களின் தவறு கண்ணுக்கு தெரிகிறதோ?

 

எத்தனை  தமிழ்ச் சிறுவர்களை கப்பல் வேலைக்கு என்று ஏஜண்ட் வயதை கூட்டிக் காட்டி கொண்டுவந்து வெளிநாடுகளுகு அனுப்பினார்கள்? அதில் எத்தனை சீறுவர்கள் பெண்கள்  பயனத்தின் போது பலியானர்கள் என்ற ஒரு கனக்காவது இருக்கா? :D

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

பணமும் மதமும் இரன்டு உயிர்களை பறித்துள்ளது.

எனக்கென்னமோ அந்த பிள்ளை தெரியாமல் விட்ட பிழை போல் தான் இருக்கிறது.

களவெடுத்தாலே கையை வெட்டும் முரட்டு கூட்டம். வேலை செய்ய வருவோரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதும், உடம்பில் ஆணி அறைவதும் என பலவித கொடுமைகள் புரிபவர்கள்.

 

இவ்வளவு காலமும் அந்த பெண் என்னென்ன கொடுமைகளை அனுபவித்தாரோ தெரியவில்லை.

சவூதியில் வேலைக்கு செல்வோருக்கு நடக்கும் கொடுமைகளை இலங்கையிலுள்ள மக்களுக்கு எவ்வாறு புரிய வைப்பது. தெரிந்தால் சிலவேளை வேலைக்கு அனுப்ப மாட்டார்கள்.

 

அந்த பெண்ணின் குடும்பத்துக்கு வீட்டை கொடுத்து என்ன செய்வது? அந்த பெண்ணின் உயிர் திரும்பி வரப்போகிறதா?

  • கருத்துக்கள உறவுகள்
இப்ப தான் அரச ஊழியர்களின் தவறு கண்ணுக்கு தெரிகிறதோ?

 

எத்தனை  தமிழ்ச் சிறுவர்களை கப்பல் வேலைக்கு என்று ஏஜண்ட் வயதை கூட்டிக் காட்டி கொண்டுவந்து வெளிநாடுகளுகு அனுப்பினார்கள்? அதில் எத்தனை சீறுவர்கள் பெண்கள்  பயனத்தின் போது பலியானர்கள் என்ற ஒரு கனக்காவது இருக்கா? :D

 

ஓம்.. அதுக்கென்ன இப்ப? :D யார் பொறுப்புக் கூறவேணும் அதுக்கு? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

74905_430059113733485_422200028_n.jpgஅல்லா மீது ஆணையாக நான் இந்தக் குழந்தையின் கழுத்தை நசிக்கவில்லை"

சவூதி அரசு சகோதரி ரிசானா நபீகிற்கு சவூதி அரசு நிறைவேற்றியுள்ள மரண தண்டனையை மனித உரிமைப் போராளிகள் மட்டுமின்றி முஸ்லிம் அறிஞர்கள், மார்க்க நெறியை மீறாத முஸ்லிம்களெனப் பலரும் கண்டிக்கின்றனர். ஏ,பி,எம்.இத்ரீஸ் அவர்களின் கட்டுரை அடுத்த பதிவில் உள்ளது.

சவூதி அரசால் இரக்கமில்லாமல் நிராகரிக்கப்பட்ட ரிசானா நபீக்கின் கடிதத்தையும் அவர்களே இன்று வெளியிட்டுள்ளனர்.

30.01.2007,

அல் தவாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி,

இலங்கையில் எனது முகவரி எம்எஸ்.நபீக், சாலி நகர் மூதூர்

எனது உண்யைமான வயது 19, நான் பிறந்த திகதி 02.02.1988 எனது வயதை எனது சப் ஏஜன்ட் அஜிர்தீன் என்பவர் 2.2.1982 எனக்குறிப்பிட்டு கடவச்சீட்டை வழங்கினார்.


நான் 01.04.2005ல் சஊதி அரேபியாவுக்கு வந்தேன். நான் சஊதி அரபியாவில் ஒன்றரை மாதங்கள் வீட்டில் வேலை செய்தேன்.

இந்த வீட்டில் சமைத்தல், களுவுதல், 4 மாதக் குழந்தையை பார்த்தல் போன்ற ஆகியவற்றை செய்து கொண்டு இருந்தேன்.க்

குறித்த சம்பவ தினம் ஞாபகமில்லை. அது ஒரு ஞாயிற்றக்கிழமை பகள் 12.30 மணியிருக்கும் அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. அங்குள்ள 4மாதக்குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன் வழமை போல அன்றும் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் மூக்கின் மூலம் பால் வெளியேவர ஆரம்பித்தது.

அப்போது நான் குழந்தையின் தொண்டயை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன்.

குழந்தையின் தாய் எனது எஜமானி 1.30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு பிள்ளை பார்த்தார். அதன் பின்னர் அந்த எஜமானி எனக்கு செருப்பால் அத்துவிட்டு குழந்தையை எடுத்தக்கொண்டு போனார்.

அப்போது எஜமானி குழந்தையின் தாய் எனக்கு செருப்பால் மூக்கிலும் கன்னத்திலும் அடித்த அடியினால் எனக்கு இரத்தம் வந்து கொண்டிருந்தது.

பின்னர் என்னை பொலிசிக்கு கொண்டு போய் அங்கு ஒரு பட்டியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நசித்ததாக கூறுமாறு அடித்து வற்புறுத்தினார்கள். அவ்வாறு கூறும் வரை கரண்ட் பிடிக்கப்போவதாக கூறினார்கள்.

இந்த நிலையில்தான் அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பம் வைத்தேன். அப்போது எனக்கு பயங்கரமாக இருந்தது.

ஞாபக சக்தி அப்போது எனக்கிருக்கவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொள்ள நான் கழுத்தை நசிக்கவில்லை மேற்படி எனது வாக்கு மூலம் வாசித்து விளங்கிய பின்னர் உறுதியென உனர்ந்து கையொப்பமிடுகின்றேன். என அதில் றிசானா தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் மேற்படி வாக்குமூலத்தின் பிரதி எனக்குறிப்பிடப்பட்டுள்ள படம் ஒன்று வாசகர்களுக்காக இணைக்கப்பட்டுள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.