Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடி திருத்தும் நண்பரும், நம் உடலின் துர்நாற்றமும்

Featured Replies

சென்ற வாரத்தில் புதன்கிழமை அன்று காலை எழுந்தவுடன் முடிதிருத்தி்க் கொள்ளும் பொருட்டு சலூனுக்கு சென்றேன்.

பல வருடங்களாக வழக்கமாக முடி திருத்தும் நண்பர் அவர்., காலை 7.00 மணி ஆதலால் கூட்டம் ஏதும் இல்லை.

முடிதிருத்தும் பணி தொடங்கியது. சுமார் இருபது நிமிடத்தில் பணி முடியும் பொழுது, வழக்கமான செயலாக, கையை உயர்த்தச் சொல்லி அக்குள் பகுதியை சுத்தப்படுத்த தொடங்கினார்.

அப்போது அவர் கேட்ட கேள்வி. ”உங்ககிட்ட கேட்கவேண்டும் என நினைத்தேன், குளித்து விட்டு வந்தீர்களா?” என்றார்.

”இல்லை, எழுந்தவுடன் வந்துவிட்டேன்., ஏன்?” என்றேன்

”பலபேருக்கு கையை உயர்த்தினாலே துர்நாற்றம் வீசும், ’கப்’அடிக்கும், வீச்சத்துடன், முடியில் முடிச்சு,முடிச்சாக அழுக்கு பிரிக்க முடியாதபடி ஒட்டி கிடக்கும், உங்களிடத்தில் அப்படி எதுவுமே அடிக்கவில்லை, குளிக்கவுமில்லை, என்கிறீர்களே? எப்படி?“ என்றார் ஆச்சரியத்துடன் அவர்.

சரி,அவருக்கு புரிகிற மாதிரி, எனக்குத் தெரிந்த காரணத்தைச் சொல்லவேண்டும்.

மெள்ள ஆரம்பித்தேன்.,

“அது வேறொன்றுமில்லை. அக்குள் பகுதியில் அழுக்கு சேர வியர்வைதான் காரணம், வாசம் அடிக்க காரணமும் வியர்வையே.

வியர்வை என்பது உடலில் உள்ள கழிவுப்பொருளை வெளியேற்ற உதவுவது. வியர்வை சுத்தமாக இருந்தால் இது போன்று உடலும் சுத்தமாக இருக்கும்“ என்றேன்

அவர் உற்சாகமானார், அதோடு என்னை விடுவதாக இல்லை.

”வியர்வைன்னாலே அழுக்கை வெளிக் கொண்டு வருவதுதானே, அதுல அழுக்கு இல்லாம எப்படி?” என்றார்.

”வியர்வை சுத்தமாக இருக்க வேண்டுமானால் நம்மஉடலில் கழிவுகள் எந்த ரூபத்திலும் தேங்கக்கூடாது.,முக்கியமாக சளி, துளி கூட இருக்கக்கூடாது சளிதான்அனைத்து கிருமிகளுக்கும் வைட்டமின் மாத்திரை மாதிரி.கிருமிகள் உடலில் வளர ஆதாரமாக இருக்கும். உடல்இயங்குவதில் ஏற்படும் சாதரண கழிவுகளைக் கூடமுழுமையாக வெளியேற்ற சளி இடைஞ்சலாகவேஇருக்கும்”. என்றேன்.

”அது மட்டுமல்ல, மது,புகைப் பழக்கங்களும், முறையற்றஉணவுப் பழக்கங்களும் உடலில் கழிவுகளைச் சேர்த்துக்கொண்டேதான் இருக்கும். இதனால் உடல் உள்உறுப்புகள்வெளியே தெரியாமல் உள்ளே இயக்கக் குறைபாடு அடையும்.அது நமக்கு தெரியவரும்போது திரும்ப சரிசெய்ய இயலாதஅல்லது சரி செய்யெ கடுமையாக வைத்தியம் பார்க்கவேண்டிய நிலையில் நாம் இருப்போம். 

சளியினால் ஏற்படும் இது நமக்கு தேவைதானா?“ என்றேன்.

”சரிங்க அப்படி நாம் உள்ளே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்படி தெரிஞ்சிக்கிறது?” என்றார் அவர்.

”எப்பொழுது சிறுநீர் கழித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

எப்பொழுது மலம் கழித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

எப்போழுது சளி பிடித்தாலும் அது எந்த அளவிற்கு வாசமோ/நாற்றமோ அடிக்கிறது என கவனிக்க வேண்டும்

அவ்வளவுதான்” என்றேன்

”வாசமடிக்கிற பாத்ரூமை சுத்தம் செய்யாமல் இருப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.

நீங்கள் சொல்வதை பார்த்தால் பாத்ரூமைப் பார்க்காதே, நம்மைப் பார் என்று சொல்கிறீர்களே!” என்றார்.

”ஆமாம். நம் உடல் உள்ளே சுத்தமாக இருந்தால் அதிலிருந்து வெளியாகும் எந்த கழிவுமே துர்நாற்றம் அடிக்காது. அதற்குண்டான இயல்பான வாசமே இருக்கும். இதை உணர்ந்து, தொடர்ந்து கழிவுகளின் வாசனையை கவனித்து வர வேண்டும், இதுகுறித்து குடும்ப உறவுகளோ, நண்பர்களோ சுட்டிக்காட்டினால் கூட அக்கறையோடு கேட்டு செயல்படவேண்டும்”. என்றேன்.

”உடல் நாற்றம் அடிக்காமல் இருக்க உணவுப்பாதையான வாய் முதல் மலம் வெளியேறும் பகுதி வரை சுத்தமாக இருக்கவேண்டும். இதுவே சுத்தமான உடல் அமைய அடிப்படை“ என்றேன்.

”சரி இதற்கு என்ன செய்ய வேண்டும்,, நீங்க என்ன செய்றீங்க?” என்றார்.,

மிக எளிமையான சில விசயங்கள்தாம் காலை எழுந்தவுடன் பல் துலக்கிவிட்டு சிறிது எண்ணெய் கொப்பளித்தல், இது தொண்டையில் தேங்கியுள்ள உள்ள சளிக் கிருமிகள் அனைத்தையும் நீக்க...

பல்பொடி கொண்டு விரலால் பல்துலக்குதல், பின்னர் பிரஸ் கொண்டும் தேவையானால் பல் துலக்குதல்.

முடித்தபின் தண்ணீர் ஐந்து அல்லது ஆறு மிளகை கடிக்காமல் தண்ணீருடன் சேர்த்து விழுங்குதல், கூடவே போதுமான வரை தண்ணீர் அருந்துதல் இது குடலில் உள்ள சளிப்படலத்தை வெளியேற்ற உதவும்..

பின்னர் மலம் கழித்தபின்பு, குடல் தூய்மை”என்றேன்.

“அப்படின்னா?” என்றார்.

பல்விளக்கியபின் வாய்கொப்பளிக்கிறோம் அல்லவா? அதுபோல் மலம் கழித்தபின் மலக்குடலை இயற்கைஎனிமா மூலம் சாதரண தண்ணீரை உள்செலுத்தி சுத்தப்படுத்துதல் அவ்வளவுதான்”

”இவற்றை தொடர்ச்சியாக நான் செய்து வருகிறேன். இவையெல்லாம் உடல் உள்ளும், புறமும் சுத்தமாக மாற சில எளிய வழிமுறைகள் ஆகும்.

இதை பின்பற்றினால் அன்றாட வாழ்க்கையில் மருத்துவரை அடிக்கடி அணுக வேண்டியதில்லை” என்றேன்

”நல்ல விசயமாக இருக்கே!” என்றார்

”நம்மால் பிறருக்கு எந்த தொந்தரவும் இருக்க கூடாது. சமுதாயத்திற்கும் நாம் பாரமாக இருக்கக் கூடாது இதை நினைவில் வைத்துக் கொண்டால் போதும். நல்ல விசயங்களில் நாட்டம் வரும்.” என்று சொல்லி விடைபெற்றேன்.,

என்ன நண்பர்களே, இனி நீங்களும் உங்கள் கழிவுகளின்வாசனையை கவனிப்பீர்கள்தானே, உங்கள் நன்மைக்காகமுயற்சித்துப் பாருங்களேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி தமிழீழன்.

உடலில் இயற்கையாக ஏற்படும் கழிவுகளை அகற்ற நீர் அருந்தப்போகின்றேன், எட்டு லீட்டர்கள், நாளுக்கு :D

நன்றி இணைப்பிற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊர் சலூனிலை, கமக்கட்டில்... சேவ் எடுத்து விடுகிறார்கள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஊர் சலூனிலை, கமக்கட்டில்... சேவ் எடுத்து விடுகிறார்கள்?

ஒருசில துருக்கி சலூன்வளியை இருக்கு............கையை மேலை தூக்கினால் போதும் ஒரே இழுவை....சகலதும் கிளீன்....  

உடலில் இயற்கையாக ஏற்படும் கழிவுகளை அகற்ற நீர் அருந்தப்போகின்றேன், எட்டு லீட்டர்கள், நாளுக்கு :D

நன்றி இணைப்பிற்கு.

 வண்டி வைக்கப்போது கவனம் ராசா....பிறகு குனிஞ்சு தும்பெடுக்க மாட்டியள்....... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசில துருக்கி சலூன்வளியை இருக்கு............கையை மேலை தூக்கினால் போதும் ஒரே இழுவை....சகலதும் கிளீன்....  

அடுத்த முறை தலைமயிர் வெட்டப் போகும் போது, எனது துருக்கி சலூனிலை... கமக்கட்டையும் காட்டப் போகின்றேன்.

பின் விளைவுகள் ஏற்பட்டால்.... குமாரசாமி அண்ணை தான் பொறுப்பு ஏற்க வேணும். (சிரிப்பு)

நான் முடி திருத்தபோகும்  ஒவ்வொரு முறையும் குளித்து முழுகி விட்டே போவேன் ...........ஏனனில் 

Spoiler

ஏனனில்  அழகான வெள்ளை பெண் நண்பர் ....

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

சில பேரின்ட கமக்கட்டைப் பார்த்தால் ஒரு ஊத்தையும் இல்லாமல் வலு கிளீனாய் இருக்கும்...என்னென்டு தான் அப்படி வைச்சிருக்கினமோ தெரியல்ல :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

தண்ணிதான் எல்லாத்துக்கும் மருந்து

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் காலையும் மாலையும்.. இரண்டு நேரம் குளியுங்க (காலையில் முழுக்கு.. மாலையில் குளியல்.. வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா).. ஒன்றும் இராது. :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த முறை தலைமயிர் வெட்டப் போகும் போது, எனது துருக்கி சலூனிலை... கமக்கட்டையும் காட்டப் போகின்றேன்.

பின் விளைவுகள் ஏற்பட்டால்.... குமாரசாமி அண்ணை தான் பொறுப்பு ஏற்க வேணும். (சிரிப்பு)

பகிடியில்லை சிறித்தம்பி! பெரிசாய் முதல்போடாத தொழில் எண்டால் உந்த சலூன் தான் எண்டு நான் நினைக்கிறன்.......ஒரு குட்டி அறை.....இரண்டு கதிரை
.....ஒரு பெரிய கண்ணாடி....சீப்பு,கத்திரிக்கோல்....சேவிங்செற்....வாசிக்கிறதுக்கு நாலஞ்சு பேப்பர்,புத்தகம்.....ஊர்க்கதையள் கொஞ்சம் கதைக்க தெரியோணும்.....மயிர்வெட்டவும் கொஞ்சம் திரியோணும்........விசயம் முடிஞ்சுது....... :lol:
நானும் இஞ்சை மாதத்துக்கொருக்கால் வெட்டப்போறனான்.....ஐஞ்சுநிமிசமுமில்லை....டிக்டிக்...சிர்ர்ர்.....13 ஈறோ...?????? வெட்டும் ஒழுங்கில்லை....அங்கினேக்கை கறையான் அரிச்சமாதிரி வெட்டியிருக்கும்.....உப்புடியெண்டால் நானும்........ :icon_idea:  :D
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணின் அக்குள் பகுதியில் இருந்து வியர்வையுடன் கலந்து வரும் fragrance வாசம் கிறங்கடிக்க வைக்கும். :rolleyes: 

  • தொடங்கியவர்
பெண்ணின் அக்குள் பகுதியில் இருந்து வியர்வையுடன் கலந்து வரும் fragrance வாசம் கிறங்கடிக்க வைக்கும். :rolleyes: 

காவாலி   :D

சில பேரின்ட கமக்கட்டைப் பார்த்தால் ஒரு ஊத்தையும் இல்லாமல் வலு கிளீனாய் இருக்கும்...என்னென்டு தான் அப்படி வைச்சிருக்கினமோ தெரியல்ல :unsure:

ஒவ்வொரு நாளும் சேவ் எடுங்கோ வலு கிளீனாய் இருக்கும். பெண்களுக்கு எண்டு இருக்கும் றேசறை விட  ஆண்கள் பாவிக்கும் றேசர் தான் நல்லது!! 

  • கருத்துக்கள உறவுகள்

நான் முடி திருத்தபோகும்  ஒவ்வொரு முறையும் குளித்து முழுகி விட்டே போவேன் ...........ஏனனில் 

Spoiler
ஏனனில்  அழகான வெள்ளை பெண் நண்பர் ....

அப்ப... தலைமயிர் வெட்டினாப், பிறகு.... முழுகுவதில்லையா தமிழ்ச்சூரியன். நான் தலைமயிர் வெட்டப் போகும் போது, நல்லாய் ஃபர்பியூம் அடிச்சுக் கொண்டு போவேன். சலூன்காரர் அந்த வாசத்திலை... கிறங்கிப் போவார்.

சில பேரின்ட கமக்கட்டைப் பார்த்தால் ஒரு ஊத்தையும் இல்லாமல் வலு கிளீனாய் இருக்கும்...என்னென்டு தான் அப்படி வைச்சிருக்கினமோ தெரியல்ல :unsure:

அட.... கடவுளே...., நீங்கள் ஏன், ஆட்களின்ரை கமக்கட்டை பார்க்கிறனீங்கள் ரதி.

பகிடியில்லை சிறித்தம்பி! பெரிசாய் முதல்போடாத தொழில் எண்டால் உந்த சலூன் தான் எண்டு நான் நினைக்கிறன்.......ஒரு குட்டி அறை.....இரண்டு கதிரை

.....ஒரு பெரிய கண்ணாடி....சீப்பு,கத்திரிக்கோல்....சேவிங்செற்....வாசிக்கிறதுக்கு நாலஞ்சு பேப்பர்,புத்தகம்.....ஊர்க்கதையள் கொஞ்சம் கதைக்க தெரியோணும்.....மயிர்வெட்டவும் கொஞ்சம் திரியோணும்........விசயம் முடிஞ்சுது....... :lol:

நானும் இஞ்சை மாதத்துக்கொருக்கால் வெட்டப்போறனான்.....ஐஞ்சுநிமிசமுமில்லை....டிக்டிக்...சிர்ர்ர்.....13 ஈறோ...?????? வெட்டும் ஒழுங்கில்லை....அங்கினேக்கை கறையான் அரிச்சமாதிரி வெட்டியிருக்கும்.....உப்புடியெண்டால் நானும்........ :icon_idea:  :D

உண்மை தான்... குமாரசாமி அண்ணா. அத்துடன் தலைமயிர் வெட்டினதுக்கு, பில்லும் கிடையாது. அதனால்... வருமான வரித்துறைக்கும், சரியான... கணக்கு காட்டத் தேவையில்லை.

பெண்ணின் அக்குள் பகுதியில் இருந்து வியர்வையுடன் கலந்து வரும் fragrance வாசம் கிறங்கடிக்க வைக்கும். :rolleyes: 

நான் இதனை, ஒரு நாளும்... மணந்து பார்க்கவில்லை. இனி... சந்தர்ப்பம் கிடைத்தால், ஒருக்கா மணந்து பார்க்க... ஆசையா இருக்கு. தகவலுக்கு நன்றி, காவாலி.

சில பேரின்ட கமக்கட்டைப் பார்த்தால் ஒரு ஊத்தையும் இல்லாமல் வலு கிளீனாய் இருக்கும்...என்னென்டு தான் அப்படி வைச்சிருக்கினமோ தெரியல்ல :unsure:

 எல்லா இடமும் கிளீனா வைத்திருப்பினம், ஆனா குனிந்து கால் விரல்களை பார்த்தால் தெரியும் அவர்களின் சுத்தம்.

காலில் உள்ள நிகங்களை யார் கிளீனா வைத்திருக்கிறார்களோ, அவர்கள்தான் எல்லாவற்றிலும் தூய்மையாக இருப்பார்கள்.

அடுத்த முறை கவனித்துப்பாருங்கள்

உங்கள் கால் நகத்தையும் ஒருக்கா பாருங்கள் :D

Edited by வந்தியதேவன்

  • கருத்துக்கள உறவுகள்
பகிடியில்லை சிறித்தம்பி! பெரிசாய் முதல்போடாத தொழில் எண்டால் உந்த சலூன் தான் எண்டு நான் நினைக்கிறன்.......ஒரு குட்டி அறை.....இரண்டு கதிரை
.....ஒரு பெரிய கண்ணாடி....சீப்பு,கத்திரிக்கோல்....சேவிங்செற்....வாசிக்கிறதுக்கு நாலஞ்சு பேப்பர்,புத்தகம்.....ஊர்க்கதையள் கொஞ்சம் கதைக்க தெரியோணும்.....மயிர்வெட்டவும் கொஞ்சம் திரியோணும்........விசயம் முடிஞ்சுது....... :lol:
நானும் இஞ்சை மாதத்துக்கொருக்கால் வெட்டப்போறனான்.....ஐஞ்சுநிமிசமுமில்லை....டிக்டிக்...சிர்ர்ர்.....13 ஈறோ...?????? வெட்டும் ஒழுங்கில்லை....அங்கினேக்கை கறையான் அரிச்சமாதிரி வெட்டியிருக்கும்.....உப்புடியெண்டால் நானும்........ :icon_idea:  :D

அண்ணோய், வெளியால சொல்லிப்ப்போடாதையுங்கோ! :o

நான் முந்தி இருந்த ஒரு இடத்தில, கறுப்பர்கள் மட்டும் தான்.

அந்த ஊர் முடி திருத்துபவருக்கு , எங்கட தலைமயிர் பழக்கமில்லை!

நாங்கள் கொஞ்சப் பெடியள் சேர்ந்து, ஒராளுக்கு, இன்னொரு ஆள், மாறி மாறி வெட்டிறது!

பிறகு தான் விளங்கிச்சுது, நீங்கள் சொன்னமாதிரி, இது பெரிய வித்தையில்ல எண்டு!

அதுக்குப் பிறகு, எனக்கு நானே வெட்டிப் பழகியாச்சு! 

பின் பக்கத்தில மட்டும் மனுசி, லெவல் எடுத்து விடும்! :D

நியானி: சில சொற்கள் மாற்றப்பட்டுள்ளன

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

சில பேரின்ட கமக்கட்டைப் பார்த்தால் ஒரு ஊத்தையும் இல்லாமல் வலு கிளீனாய் இருக்கும்...என்னென்டு தான் அப்படி வைச்சிருக்கினமோ தெரியல்ல :unsure:

இப்படி..

cutcaster-photo-100798328-Body-care-seri

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊர் சலூனிலை, கமக்கட்டில்... சேவ் எடுத்து விடுகிறார்கள்?

கேனடா

அப்ப... தலைமயிர் வெட்டினாப், பிறகு.... முழுகுவதில்லையா தமிழ்ச்சூரியன். நான் தலைமயிர் வெட்டப் போகும் போது, நல்லாய் ஃபர்பியூம் அடிச்சுக் கொண்டு போவேன். சலூன்காரர் அந்த வாசத்திலை... கிறங்கிப் போவார்.

அட.... கடவுளே...., நீங்கள் ஏன், ஆட்களின்ரை கமக்கட்டை பார்க்கிறனீங்கள் ரதி.

உண்மை தான்... குமாரசாமி அண்ணா. அத்துடன் தலைமயிர் வெட்டினதுக்கு, பில்லும் கிடையாது. அதனால்... வருமான வரித்துறைக்கும், சரியான... கணக்கு காட்டத் தேவையில்லை.

நான் இதனை, ஒரு நாளும்... மணந்து பார்க்கவில்லை. இனி... சந்தர்ப்பம் கிடைத்தால், ஒருக்கா மணந்து பார்க்க... ஆசையா இருக்கு. தகவலுக்கு நன்றி, காவாலி.

 நான் பதின் மூன்று வயதாய் இருக்கும் போது ஒரு சலூன் காரனால் எனது மச்சாளிடம் நல்லாய் வேண்டிகட்டினேன்.அன்றிலிருந்து அவனின் சலூனுக்கே போகிறதில்லை.எனக்கு அப்போதுதான் முகப்பருக்கள் ஆரம்பித்த நேரம்.அவன் முடிவெட்டும் போது சொன்னான் மிகவும் ரகசியமாக"மச்சாளின் பாவித்த மார்பு கச்சையால் முகத்தை துடைத்து விட்டால் வாழ்க்கையிலே முகப்பரு வரவே வராது" நானும் முயற்சி செய்து அவளோ என்னில் விட ஐந்து வயது கூடியவள்.அவளிடம் மாட்டி கன்னம் கன்னம் என்று போட்டு தாக்கிவிட்டாள்.அந்த வயது கோளாறு உடனேயே அவளிடம் உண்மையை சொல்லியிருக்கலாம்.இரண்டு கிழமை கழித்துதான் உண்மையைச்சொன்னேன்.அதற்கிடையில் அவள் தனது தோழிகளிடமும் சொல்லி எனது மாமிக்கும் இவனின் பழக்க வழக்கம் சரியில்லை என்று போட்டு கொடுத்துவிட்டாள்.இப்போதும் கண்டால் இவனுக்கு முகப்பரு இல்லவே இல்லை என்பாள்.இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் தமிழ் சிறி முகர்ந்துபார்க்கப்போய் மூக்குடைபடாமலிருக்கத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாளும் சேவ் எடுங்கோ வலு கிளீனாய் இருக்கும். பெண்களுக்கு எண்டு இருக்கும் றேசறை விட  ஆண்கள் பாவிக்கும் றேசர் தான் நல்லது!! 

அலை, கவனம்!

ஆம்பிளயளின்ர றேசர் பாவிச்சாக் கொஞ்ச நாளையில, கமக்கட்டு புதுசா வெட்டின காடு மாதிரி வந்திரும்.

பிறகு அடிக்கட்டை கிளப்ப, நெருப்புத்தான் வைக்க வேணும்! :D

104236_1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

 நான் பதின் மூன்று வயதாய் இருக்கும் போது ஒரு சலூன் காரனால் எனது மச்சாளிடம் நல்லாய் வேண்டிகட்டினேன்.அன்றிலிருந்து அவனின் சலூனுக்கே போகிறதில்லை.எனக்கு அப்போதுதான் முகப்பருக்கள் ஆரம்பித்த நேரம்.அவன் முடிவெட்டும் போது சொன்னான் மிகவும் ரகசியமாக"மச்சாளின் பாவித்த மார்பு கச்சையால் முகத்தை துடைத்து விட்டால் வாழ்க்கையிலே முகப்பரு வரவே வராது" நானும் முயற்சி செய்து அவளோ என்னில் விட ஐந்து வயது கூடியவள்.அவளிடம் மாட்டி கன்னம் கன்னம் என்று போட்டு தாக்கிவிட்டாள்.அந்த வயது கோளாறு உடனேயே அவளிடம் உண்மையை சொல்லியிருக்கலாம்.இரண்டு கிழமை கழித்துதான் உண்மையைச்சொன்னேன்.அதற்கிடையில் அவள் தனது தோழிகளிடமும் சொல்லி எனது மாமிக்கும் இவனின் பழக்க வழக்கம் சரியில்லை என்று போட்டு கொடுத்துவிட்டாள்.இப்போதும் கண்டால் இவனுக்கு முகப்பரு இல்லவே இல்லை என்பாள்.இதை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் தமிழ் சிறி முகர்ந்துபார்க்கப்போய் மூக்குடைபடாமலிருக்கத்தான்.

இப்போதும், உங்களுக்கு முகப்பரு இல்லாததால்... சலூன்காரரின் கை வைத்தியம் உண்மை போலுள்ளது.

என்னுடைய முகப்பருவை போக்க, பக்கத்து வீட்டுக்காரியின்... ப்ரேசியரை எடுத்து துடைக்கலாமா? :lol:

இப்போதும், உங்களுக்கு முகப்பரு இல்லாததால்... சலூன்காரரின் கை வைத்தியம் உண்மை போலுள்ளது.

என்னுடைய முகப்பருவை போக்க, பக்கத்து வீட்டுக்காரியின்... ப்ரேசியரை எடுத்து துடைக்கலாமா? :lol:

 அப்படிச்செய்தால் முகப்பரு அழிந்து விடுமா?? :D:lol:  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.