Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மருத்துவ உதவி தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு நெஞ்சிக்குள் சரியான சளியாக இருக்குது...வெளியால தடிமனாய் வருதுமில்லை.நெஞ்சை அரிச்சுக் கொண்டு இருக்குது...இர‌வு நித்திரை கொள்ளும் போது மூசிறன்...இதற்கு எதாவது தமிழ் வைத்தியம் இருக்கா?...தெரிந்தால் சொல்லவும்...நன்றி
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் வைத்தியத்தை நம்புவதில்லை.

தேனையும் எலுமிச்சைப் பழச் சாற்றையும் தேநீரோடு கலந்து குடிக்கலாம்.

அல்லது

வேர்க்கொம்பு, மிளகு, மல்லி, போன்றவற்றைக் கொண்டு கசாயம் காச்சிக் குடித்தால் கடுஞ்சளி போகும் என்பார்கள்

ரதி,

ஊரில் கற்பூரவள்ளியும் கற்கண்டும் வேற ஏதோவும் சேர்த்துக் கொடுப்பார்கள். இங்குள்ள காலநிலைக்கு அவையெல்லாம் ஒத்துவருமோ தெரியாது.
 
Chest infection ஆகவும்  இருக்கலாம். இதைவிட வேறு என்ன நோய்க்  காரணங்களால் இந்த அறிகுறி காட்டுகிறதோ தெரியாது? உங்கள் குடும்ப வைத்தியரை அணுகி சரியான சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுங்கள். 

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

நான் குடிக்கிறேல்ல..வெளிநாட்டுக்கு வந்தபுதிசில எனக்கு ஒருக்கா தடிமன் வந்தபோது..ரூம் நண்பர்கள்..பாணி மருந்து என்டு பொய் சொல்லி ஒருசின்னப்போத்திலுக்க வாங்கி வந்து தந்தாங்கள்..குடிக்க சாராயம் போல மணத்துது..குடிச்சுமுடிய தலைசுத்துறது மாதி இருந்துது...விடியக்காலமை எழும்பி பாக்க தடிமனும் போட்டுது..பிறகுதான் விசாரிச்சபோது..அது பாணி மருந்தில்ல மாட்டில் என்கிற ஒரு குடிவகை எண்டு தெரிய வந்தது..எனவே ரதி அக்காவும்..ஒரு காப்போத்தில் மாட்டிலை பக்கத்துகடையிலை வாங்கி பச்சையாய் அடிச்சிட்டு படுங்கோ..விடிய சளி எல்லாம் கரைஞ்சுபோம்...

  • கருத்துக்கள உறவுகள்

பெரியவர்களுக்கு ஏற்படும் நெஞ்சு சளிக்கு: இதுக்கு பூண்டுப் பால் நல்ல மருந்து, பெரிய சைஸ் முழு வெள்ளைப் பூண்டை தோல் உரிச்சுக்கணும். 100 மில்லி பசும்பால்ல தண்ணி கலந்து, இதுல பூண்டை நல்லா வேக வைக்கணும். அடுப்புலருந்து இறக்கறதுக்கு முன்னால ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், கால் ஸ்பூன் மிளகுப்பொடி போட்டு இறக்கிடணும். இதை நல்லாக் கடைஞ்சு, தேவையான அளவு, பனங்கற்கண்டு சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி சாப்பிட்டா, நல்ல பலன் கிடைக்கும்.

நுணாவிலான் அண்ணா..பூண்டை பாலில் வேகவைக்கவேணுமா..அல்லது தனியாக நெருப்பில் வேக்கவைக்க வேணுமா..?

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட அம்மா.. காய்ச்சின பசுப் பாலுக்க.. (மைக்குரோவேவ் பண்ணினதல்ல) மஞ்சள் தூள்... கற்கண்டு போட்டு நல்லா கலக்கி.. தாறவா. இளஞ்சூட்டில் குடிக்கச் சொல்லி. வைத்தியரிட்ட போகாத சந்தர்ப்பங்களில்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான் அண்ணா..பூண்டை பாலில் வேகவைக்கவேணுமா..அல்லது தனியாக நெருப்பில் வேக்கவைக்க வேணுமா..?

பாலில் வேக வைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மல்லித்தண்ணி குடித்தாலும் சுகம் கிடைக்கும்.. :unsure:  எதுக்கும் உடம்பை பத்திரமா பார்த்துக்கொள்ளுங்கோ.. :(  இல்லாட்டில் வேறை சத்தம் வரும்.. :blink:

Spoiler
3763sea_conch.jpg:lol: :lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

3098152.jpg

ரதி,
கால நிலை மாறும் போது... வருடத்துக்கு, இரண்டு தரம் அனேகமான ஆட்களை பீடிக்கும் இந்த வியாதி.
ஒருமுறை குளிர் காலத்திலும், மறுமுறை பூக்கள் பூத்து, மகரந்தம் பறக்கும் வேளையிலும்... வரலாம். ஒவ்வாமை என்று சொல்வார்கள்.
நீங்கள் பயப்பிட வேண்டாம். வீட்டில்.... சீனா எண்ணை, ரைகர் பாம் இருந்தால், சுடு தண்ணீரில் விட்டு ஆவி பிடியுங்கள். நெடுகவும்... சூடான பானங்களையே... அருந்துங்கள். (கோப்பி, ரீ... அல்ல). ஒரு கிழமைக்கு, இப்படி பிரச்சினை இருக்கும். அதுக்கும் அடங்கவில்லை என்றால்... வைத்தியரிடம் போய்... ஆலோசனை கேளுங்கள். முத்த விட்டால்... ஆஸ்மா காரணமாக இருக்கலாம். எப்பவும்... உங்கள், காலுக்கு சொக்ஸ் போட்டு, கழுத்துக்கு.. மஃப்ளர் கட்டி உடலை சூடாக வைத்திருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு நெஞ்சிக்குள் சரியான சளியாக இருக்குது...வெளியால தடிமனாய் வருதுமில்லை.நெஞ்சை அரிச்சுக் கொண்டு இருக்குது...இர‌வு நித்திரை கொள்ளும் போது மூசிறன்...இதற்கு எதாவது தமிழ் வைத்தியம் இருக்கா?...தெரிந்தால் சொல்லவும்...நன்றி

அஞ்சாறு தேசிக்காயை புழிஞ்சு.... (கிடத்தட்ட ஒரு விஷ்கி கிளாஸ்)  ஒண்டும் கலக்காமல் ஒரே இளுவை.......டக்கெண்டு  சளி சரண்டர்...

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சாறு தேசிக்காயை புழிஞ்சு.... (கிடத்தட்ட ஒரு விஷ்கி கிளாஸ்)  ஒண்டும் கலக்காமல் ஒரே இளுவை.......டக்கெண்டு  சளி சரண்டர்...

புளிஞ்ச தேசிக்காயுள்ளை, சீனி போடலாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புளிஞ்ச தேசிக்காயுள்ளை, சீனி போடலாமா?

அஞ்சாறு தேசிக்காயை புழிஞ்சு.... (கிடத்தட்ட ஒரு விஷ்கி கிளாஸ்)  ஒண்டும் கலக்காமல் ஒரே இளுவை.......டக்கெண்டு  சளி சரண்டர்...

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் முந்தி உப்படி ஒரு நிலமை வந்து நான் இந்த மருந்தை பாவிச்சு போய் விட்டது... http://www.med24.dk/handkobslagemidler/hoste/slimlosende/mucolysin-skovbar-600-mg-50-stk-/product_info.php/cPath/131_140_141/products_id/6340

இந்த மருந்து லண்டனிலும் வாங்கலாம் அந்த மருந்தின் பெயர் Mucolysin 600 ஒரு கிலாஸ் தண்ணீருக்கை போட்டு குடியுங்கோ மற்ற நாள் எல்லா சளியும் போய் விடும்...

  • கருத்துக்கள உறவுகள்

ரதி பாத்தீங்களா.. :rolleyes:.
உங்களுக்கு, தடிமன் என்றவுடன்....
குமாரசாமி தாத்தாவும், குட்டிப் பையனும் தருகின்ற ஐடியாக்களை.
ரதி, உங்கள் நல்த்தில் நாம்... அக்கறையாக உள்ளோம் :wub:.
-மச்சான் தமிழ்சிறி- :)

  • கருத்துக்கள உறவுகள்

ரதி மேல ஐடியாத்தந்தவர்களை விட இலகுவான முறை ஆவி பிடித்தல் அதற்காக ஆவியைத் தேடி அலையவேண்டாம். தேசிமரத்தின் இலைகள் பத்தை ஒரு சிறு பானையில் போட்டு நன்றாக கொதி ஏறியதும் அதற்குள் சிறிது தேயிலையும் போட்டு பானையை நன்றாக மூடி வைத்தபடி மெலிதான உள்ளாடையை அணிந்து கொண்டு பெரிய மொத்தமான போர்வையால் மூடிக்கொண்டு அந்தப்பானையைத் திறந்து அதற்குள் மிகச் சிறிதளவு விக்ச் ஐ சிறு கரண்டியால் துழாவி அந்த வெக்கையில் முகத்தைப் பிடித்து சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட்டு 5-7 நிமிடங்கள் வரை காலையும் மாலையும் இரண்டு நாளைக்குச் செய்யுங்கள் உங்கள் நெஞ்சுச்சளி எப்படி வெளியேறி உங்களுக்கு நிவாரணம் கொடுக்கிறது என்று பாருங்கள். முக்கிய குறிப்பு எனக்கு மருந்துகள் ஒத்துவருவதில்லை அவை சைட் அபெக்ட்டை உருவாக்கும். இந்த முறைதான் சிறுவயதிலிருந்தே பழக்கப்பட்டது. இன்றுவரை நிவாரணம் இலகுவாகக் கிடைக்கிறது. சிலர் இதற்குள் மஞ்சள் தேறையும் சுட்டுப் போடுவார்கள். அது மிகக் காரமாக இருக்கும். அத்தோடு இந்த முறை முகத்திற்கு அழகையும் பிரகாசத்தையும் உருவாக்கும். பேசியல் போகிற ஆளாக இருந்தால் தெரிந்திருக்கும். :rolleyes:

இந்த முறை பிடிச்சிருக்கு.

அடுத்தமுறை தடுமல் வரும்போது கைகொடுக்கும்.

நன்றிங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

சளித் தொந்தரவின் மூலம் என்ன?

கிருமிகளின் தாக்கம் மூக்கின் கீழ் அறையினுள் ஏற்பட்டவுடன் மூளை கண்டுபிடித்துவிடுகிறது. அந்தக் கிருமிகளை அழிப்பதற்கு முயற்சிக்கும் அதேநேரம் வெளியேற்றவும் எத்தனிக்கிறது.

இதன்காரணமாக உருவாக்கப்படுவதே சளி. சிலநாட்கள் கடந்தவுடன் சுகம் வரவில்லையானால் கிருமி தொண்டைக்குள்ளும் இறங்கிவிடுகிறது. அப்போது நிறுத்தப்படவில்லையானால் நெஞ்சுக்குள் இறங்கிவிடுகிறது.

முதலில் மூக்குவழியாக வெளிப்படும் சளி பின்பு நெஞ்சுச் சளியாக உருமாறக் காரணம் இதுவே..

சளி உருவாகிறது என்றாலே உடம்பின் எதிர்ப்பு சக்தியை மிஞ்சி கிருமிகள் செயல்படுகின்றன என அர்த்தம். ஆகவே சளியை வரவிட்டு பின்னர் மருந்தை எடுப்பது புத்திசாலித்தனம் அன்று. இந்தக் கிருமிக்கு எதிரான போராட்டம் அன்றாட நிகழ்வாக இருக்க வேண்டும். :huh:

குளிர் அதிகமுள்ள நாடுகளில் சூரிய ஒளி உடலில் படும் வாய்ப்பு குறைவு. இதனால் உடலில் வைற்றமின் D இன் அளவு குறையும். இப்போதெல்லாம் பாலில் வைற்றமின் A மற்றும் D கலந்தே விற்கிறார்கள். தினமும் சிறிய அளவு பால் அருந்துவது நல்லது. ஆனால் இதைக் குடிக்கும் அளவில் கவனமாக இல்லாவிட்டால் உடம்பு வைக்க ஆரம்பிக்கலாம்.

இரண்டாவதாக தோடம்பழம், எலுமிச்சை போன்ற வைற்றமின் C நிறைந்த பழச்சாற்றையும் தினமும் எடுத்துக்கொள்வது அவசியம். குளிர்காலங்களிலாவது இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

ஆகவே, வருமுன் காப்போம்! :rolleyes:

பி.கு.: வசந்தகாலத்தில் மகரந்தத் துணிக்கைகள் காற்றில் கலந்து மூக்கினுள் நுழைந்தாலும் சளி உருவாகும். இந்தத் துணிக்கைகளை வெளியேற்றும் உடலின் வழிமுறையே இந்தச் சளி உருவாக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை பிடிச்சிருக்கு.

அடுத்தமுறை தடுமல் வரும்போது கைகொடுக்கும்.

நன்றிங்கோ

கறுப்பி முகத்தில் தேங்கிக் கிடக்கும் அழுக்குகள், கொழுப்புகள், இறந்த தோள் துணிக்கைகளை இந்த முறை சுத்தம் செய்கிறது. சீரான சுவாசத்திற்கும் உதவியாக இருப்பதோடு உணவுக்குழாய்களையும் சுத்தம் செய்கிறது. அத்துடன் முகத்தில் அதிகமாக மேக்கப் போட்டு அடைபட்டிருக்கும் சுரப்பிகளையும் சுத்தம் செய்கிறது. சிறிது காலம் பேசியலை தொழிலாகச் செய்திருக்கிறேன் இன்று அவ்வகையான விடயங்களுக்குக் கையாளும் முறைகளை நம் முன்னோர் பற்பல வழிகளில் இயல்பாக கையாண்டிருக்கிறார்கள். பேசியலில் steem பண்ணிச் செய்வதை சிறப்பான முறையாக அதற்கு அதிக பணம் அறவிடப்படுகிறது....

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கோப்பை பாலும் ஒரு கோப்பை தண்ணீரும் கலந்து அதற்குள் ஒரு முழு உள்ளிப் பூடும் உடைத்து வெட்டாமல் போட்டு, பாலும் தண்ணீரும் வற்றி ஒருகோப்பை ஆகும்வரை காய்ச்சி உள்ளியையும் உண்டு பாலையும் இரண்டுநாட்கள் ஒருதடவை மட்டும் இரவில் குடிக்க மூன்றாம் நாள் முற்றாக நின்றுவிடும். சீனிதேவை என்றால் மட்டும் ஒரு கரண்டி போடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இந்த சகோதரிக்கு ஒரு வருத்தம் என்டவுடன் ஒடி வந்து ஆலோசனைகளை வழங்கிய அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றி
 
தேசிக்காய் இலை இங்கு கடையில் விற்கப்படுகின்றதா?
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சகோதரிக்கு ஒரு வருத்தம் என்டவுடன் ஒடி வந்து ஆலோசனைகளை வழங்கிய அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றி
 
தேசிக்காய் இலை இங்கு கடையில் விற்கப்படுகின்றதா?

அக்கா..ஈஸ்ற்காமில் தேடிப்பாருங்கள்..சிலவேளை கிடைக்கும்..இல்லாடி சொல்லுங்கோ லாசப்பலிலை வாங்கி அனுப்பிவிடுறன்..லாசப்பலா கொக்கா... :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சகோதரிக்கு ஒரு வருத்தம் என்டவுடன் ஒடி வந்து ஆலோசனைகளை வழங்கிய அனைத்து சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றி
 
தேசிக்காய் இலை இங்கு கடையில் விற்கப்படுகின்றதா?

இதில வந்து கருத்தெழுதின என்னைச் சொல்லவேணும்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இதில வந்து கருத்தெழுதின என்னைச் சொல்லவேணும்.. :D

உங்களுக்கு எத்தினைவேணும்...இல்லை கேக்கிறன்...எல்லாம் ஆத்துக்காறி யாழைப்பாக்கமாட்ட எண்ட துணிவுதான்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா..ஈஸ்ற்காமில் தேடிப்பாருங்கள்..சிலவேளை கிடைக்கும்..இல்லாடி சொல்லுங்கோ லாசப்பலிலை வாங்கி அனுப்பிவிடுறன்..லாசப்பலா கொக்கா... :D

நன்றி சுபேஸ் நான் இங்கு கடைகளில் காணவில்லை...விசாரித்து பார்க்கிறேன்...கிடைக்கா விட்டால் சொல்கிறேன்.
 
யாராவது லண்டன் உறுப்பினர்கள் தேசி இலையை இங்கு கடைகளில் கண்டனீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.