Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

அர்ஜுன் அண்ணா,

நடந்தவை,தெரிந்தவற்றை எந்த விருப்பு,வெறுப்புக்களும் இன்றி உண்மையாய் எழுதுங்கள், தனிப்பட்ட சொந்த அனுபவங்களை எழுதுவது வேறு இப்படி ஒரு இனத்தின் விடுதலையை உண்மையாய் எழுதும் போது அது சரி,பிழைகளுக்கு அப்பால் சரியான தகவல்களை அடுத்த சந்ததிகளுக்கு கொண்டு செல்லும்.

 

உண்மையான,சரியான தகவல்கள் தெரியாமல் யாரும்,யாரையும் விமர்சனம் செய்வது என்பது ஏளனத்திற்குரியது.

போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் எல்லாம் நாங்கள் பிறந்திருக்கவே இல்லை அப்படி இருக்க,வாசித்ததும் செவிவழி செய்திகளையும் வைத்து முடிவெடுப்பதென்பது எவ்வளவு தூரம் நம்பிக்கையானது என்பது கேள்விக்குறியே, அந்த வகையில் அடுத்த சந்ததிக்காக உங்களுக்கு தெரிந்த ஆரம்பகாலப் போராட்ட வரலாற்றை நேர்மையாக எழுதுங்கள்.

 

புலிகள்,புளொட்,ரெலோ என்று எல்லா அமைப்பிலும் சில தலைசிறந்த வீரர்கள் இருந்ததும், தலைமைகளின் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தமிழீழம் என்ற ஒரே இலட்சியத்துக்காக போரடப்போய் வீரத்தின் விளைநிலங்களாய் ஆனதும்,

வழிமாறிப்போனதும் கண்முனே நடந்த ஒன்று, அந்தப்பொறுப்புணர்ந்து எழுதுங்கள்.

 

(இது ஆலோசனை அல்ல, உங்களுக்கு சொல்லுமளவுக்கு வயதும்,அனுபவமும் இல்லை ஆனால் வரலாறுகள் திரிக்கப்படக்கூடது என்ற ஒரே நோக்கத்தில் தான்)

 

தொடர்ந்து எழுதுங்கள். :)

 

ஒரு நாணயத்திற்கு இரண்டுபக்கம் இருக்கின்றது என்று தங்கள் வசதிக்கு ஏற்ப ஏற்றுக்கொள்கின்ற தமிழ் சமூகம் , தமிழீழதேசியத்தில் மட்டும் நாணயத்திற்கு ஒரேயொரு பக்கம் என்று சொல்வது அதியுச்ச முரண்நகையின் வெளிப்பாடுகள் என்றுதான் சொல்லுவேன் .  தமிழீழவிடுதலை என்ற கோட்பாட்டில் ஈர்கப்பட்டு தமது வாழ்வைத் துலைத்தவர்கள் அனைவருமே " போராளிகள் " என்றவகையிலேயே அடங்குகின்றார்கள் . அதில் நான் " கறுப்பு " நீ " வெள்ளை " என்று நிறபேதம் காட்டியது ஒவ்வன்றையும் வழிநடத்திய தலமைகளே ஒழிய போராளிகள் இல்லை . ஆனால் உண்மைகளை சொல்பவனையும்  , அதன்படி நடப்பவனையும் " துரோகி " என்ற முத்திரைக்குள் அடக்கி தங்களை தாங்கள் முதுகு சொறிந்து சுய இன்பம் கண்டது வரலாறு . போராட்டத்தின் போக்குகளை பக்கசார்பில்லாது செவிவழி கேள்வி உள்ளவர்களுக்கு அர்ஜுன் போன்ற நேரடிப்பங்களிகள் சொல்லவேண்டும் . இதற்கு அதிகபட்சப் பரிசு " மாலைதீவு " அல்லது " சோத்துப்பாசல் " அதற்கு மேல் செல்லாது . எனவே அர்ஜுன் இந்த பரிசில்களுக்கு மயங்காது தொடருவீர்கள் என நம்புகின்றேன் .

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒழுக்கமும் கட்டுப்பாடும் எல்லாம் பேச்சளவில்தான் என்பது எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும். விதிகள் இருப்பது மீறப்படுவதற்காகவே என்பது எல்லா இயக்கத்திலும் பார்த்ததுதானே. புலிகளின் இறுக்கமான ஒழுக்கவிதிகளை மீறியவர்களைப் பற்றியும் யாழில் கதைகள் வந்திருந்தது. இப்போது அர்ஜுன் புளட்டின் கதைகளைச் சொல்லுகின்றார். கேட்போம்.

  • தொடங்கியவர்

பின்னோட்டமும் எழுதிய அனைவருக்கும் நன்றிகள் ,என்னால் நான் சம்பந்த பட்டவிடயங்களைத்தான் தான் எழுத முடியும் .இக்கதையை எழுத தொடங்கிய பின்னர்தான் ஏதாவது படங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று முன்னாள் புளொட் முக புத்தக நண்பர்களின் பக்கங்களை துழாவியதில் இவை கிடைத்தன ,அதைவிட நான் எப்போதும் பார்த்திராத படங்கள் பல கிடைத்தது .நல்லதோ கெட்டதோ நினைவுகளை அசை போடுவதில் கிடைக்கும் சந்தோசமே தனி .

எனக்கு தெரிந்ததை மட்டுமே எழுதிகின்றேன் .என்னை நானே முன்னிலை படுத்தி எழுதுகின்றேனோ என்று சிலவேளை குழப்பம் வரும் ஆனால் உண்மையை எழுதவெளிக்கிடும் போது அது தவிர்க்க முடியாது ஆகிவிடுகின்றது .எழுதாதது இன்னும் எத்தனையோ இருக்கு .

தொடருகின்றேன் நன்றி .

  • தொடங்கியவர்


 

காலை எழும்பி முந்தநாள் இரவு டியூட்டியில் இருந்தது யார் என கொப்பியில்
பார்க்கின்றேன் .10: p.m -2.00 am சிறிபதி 2.00 am – 6 a.m  இளங்கோ என்று இருந்தது
.சென்னையில் இருந்தாலும் நாம் இருந்த எல்லா வீடுகளிலும் இரவு டுயுட்டி என்பது
கட்டாயம், முறை எடுத்து எல்லோரும் மாறி மாறி இருக்கவேண்டும்.வாசலில் ஒரு கதிரையை
போட்டு இடுப்பில் ஒரு கிரேனேட்டை கொழுவிக்கொண்டு காவல் இருந்தால் சரி .



இளங்கோவையும் சிறிபதியையும் இரவு ஏதாவது வழக்கத்திற்கு மாறாக இருந்ததா என
கேட்டேன் இல்லை என தலையாட்டிவிட்டார்கள் .காலை உணவாக இட்டலி சாப்பிடும் போது எல்லோர்
முகத்தையும் வடிவாக உற்றுபார்த்தேன் எவரிலும் எதையும் உணர முடியவில்லை .



பத்துமணி போல அந்த பெண்ணின் வீட்டை நோக்கி போகின்றேன். அப்போதுதான் ஒருவிடயம்
மனதில் தோன்றியது ,இங்கு இருக்கும் பலர்  ஏறக்குறைய உருவத்தில் ஒரே மாதிரித்தான் இருப்போம்
,ஒரு சின்ன தாடி ,குழம்பிய தலைமயிர், மேலுக்கு பெனியன்.அதே உருவத்தில்  நான் போய் கதவை தட்ட அந்த பெண் இரவு வந்தவன்
தான் திரும்ப வந்திருக்கின்றான் என்று சத்தம் போட்டுவிட்டால் என்ன செய்வது? அல்லது
எதையாவது தூக்கி அடித்தால் ? பிறகு பெரிய பிரச்சனையாக போய்விடும்,



 அந்த பெண்ணை தனிய சந்திக்கும் எண்ணத்தை
மாற்றி அதற்கு பதில் அந்த பெண்ணின் கீழ் வீட்டில் இருக்கும் உமாவின் தங்கையின்
புருஷன் துரையண்ணையை சந்தித்து விஷயத்தை சொல்லி அவருடன் சேர்ந்து போய் அந்த பெண்ணை
சந்திப்பம் என்று முடிவு செய்தேன். துரையண்ணை எனக்கு நல்ல நெருக்கம்,
விஷயத்தை சொன்னால் விளங்கி கேட்ககூடியவர். நான் இந்தியா  வந்ததை அறிந்து எனது அப்பா இலங்கையில் இருந்து இந்தியா
வந்தார் (எனது குடும்பத்தவர் அனைவரும் அந்த நேரம் வெளிநாடுகளில் இருந்தார்கள்). அப்பா
என்னை சந்தித்துவிட்டு உமாவின் தகப்பனிடம் தான் சிறுவயதில் படித்ததாக சொன்னார். அப்பாவை
ஒருநாள் அங்கு கூட்டிக்கொண்டு போனேன்.பின்னர் நான் சென்னையில் இல்லாத நேரம் கூட
அப்பா வந்தால் அவர்கள் வீட்டிற்கு போய் சாப்பிடும் அளவிற்கு அவர்களுடன் பழக்கமாக போய்விட்டார்
.எனது அப்பா உமாவை சில தடவைகள் சந்தித்து கதைத்திருக்கின்றார் ,அதை விட ஒரு முறை
எமது T3S  ஆய்வுகள்
சமர்பிக்கும் கூட்டத்திற்கும் வந்திருந்தார்.



துரையண்ணை வீட்டு
கதவை தட்டினேன் ,சிரித்துக்கொண்டு வெளியே வந்த துரையண்ணை



“என்ன தம்பி விஷயம்
,ஏதும் கதைக்கவேணுமோ “ என்று கேட்டார்.



“ஒரு பிரச்சனை நடந்துவிட்டது
போல கிடக்கு,அதுதான் உங்களிட்ட சொல்லுவம் என்று வந்தனான் “



“சொல்லும்,என்ன
பிரச்சனை”



“நேற்றிரவு
இந்தியாக்காரன் வந்து கத்திவிட்டு போனதை சொல்லி, அவன் இன்றிரவு திரும்ப வருவான்.
அதுதான் என்ன செய்வது என்று தெரியவில்லை “என்றேன் .



ஒரு சிரிப்பு
சிரித்துவிட்டு “ஒரு பிரச்சனையும் வராது ,அவனும் இனி வர மாட்டான் ,நீர் அதை மறந்துவிட்டு
வழக்கம் போல அலுவல்களை பாரும் “ என்றார் .  



எனக்கு என்னடா இது
என்றிருந்தது, திருப்பி கேள்வி எதையும் கேட்கவும் மனம் துணியவில்லை “சரி அப்ப
வாறன்” என்று வெளிக்கிட ,



உம்மை எனக்கு நன்கு
தெரியும் என்றபடியால் இதை சொல்லுகின்றேன். யாரிடமும் சொல்லிவிடவேண்டாம்,அந்த
பிள்ளையை கொண்டுபோய் தண்டனை என்று மூன்று நாலு மாதம் முகாமில் வாட்டி
எடுத்துவிடுவார்கள், காலை ஆறுமணி இருக்கும் யாரோ கதைவை தட்டுகின்றார்கள் என்று கதவை
திறந்தால் ஒரு பெடியன்  தடால் என்று காலில்
விழுந்துவிட்டான் நான் திடுக்கிட்டு என்னடா என்று பார்த்தால் “அண்ணை நீங்கள் தான்
என்னை காப்பற்றவேண்டும்” என்று கெஞ்சுகின்றான். முதலில் எழும்பும் அப்படி என்ன
பிரச்சனை என்று தோளைபிடித்து கேட்டேன்.



“ அண்ணை நேற்று இராத்திரி
என்னையாறியாமல் உங்கட வீட்டு மொட்டைமாடிக்கு பாஞ்ச்சுவிட்டு பயத்தில திரும்பி
ஓடிவிட்டன்,இப்ப நினைக்க என்னவோ செய்யுது ,என்னவும் நடந்துடுமோ என்று பயமாகவும் கிடக்கு,அண்ணை
நீங்கள்தான் ஒண்டும் வராமல் என்னை காப்பாற்றவேண்டும் “என்றான் .நடுங்கிக்கொண்டு நிக்கின்ற
பெடியனை பார்க்க பாவமாக கிடந்தது. நான் பார்த்துக்கொள்கிறேன் பயப்பிடாமல்
போட்டுவாரும் என்று அனுப்பிவிட்டேன்.பிறகு மொட்டை மாடிக்கு அந்த பெண்ணிடம் மன்னிப்பு
கேட்டு விசயத்தை பெரிதுபடுத்தாமல் விடச்சொல்லி கேட்கப்போனேன்.



நான் மொட்டைமாடிக்கு
போக அந்த பெண்ணாகவே வந்து, இனி ஒன்றும் இப்படி நடக்ககூடாது.போலீசிடம் தான் போவேன்,மாமாவிடம்
விஷயத்தை சொல்ல அவர்தான் வந்து நேற்று வந்து சத்தம் போட்டார் , அவர் இனி
வரமாட்டார்  என்று சொல்லிவிட்டாள்.நீர்
யோசிக்காமல் போட்டுவாரும் என்றார் . நான் பயந்தபடி ஏதும் நடக்காமல் விசயம்
நல்லபடியாக முடிந்த சந்தோசத்தில் எனது வீட்டை நோக்கி நடக்கதொடங்கினேன் .



சரி அப்ப என்னதான்
நடந்தது,



இரவு
இரண்டுமணியிருக்கும், சென்னை அனல்வெக்கையை தணிக்க புறப்பட்டதுபோல்  போல்  மெரீனா கடற்கரையில் இருந்து குளிர்காற்று வீசிக்கொண்டிருந்தது.
முழு நிலவு தென்னை மரத்திற்குள்ளால் மொட்டைமாடி எங்கும் பரவியிருந்தது.ஏதோ கனவு கண்டவனாக
திடுக்கிட்டு நித்திரையால் எழும்பிய தேவன் அடுத்த வீட்டு மொட்டைமாடியில்
கயிற்றுகட்டிலில் வழக்கம் போல அங்ககமெங்கும் காற்று தவழ சேலை விலக்கி படுத்திருக்கும்
பெண்ணை கண்டதும் சகலகலாவல்லவன் நிலாகாயுது நேரம் நல்ல நேரம் பின்னணியில் ஒலிக்க  கமல் அம்பிகா கயிற்றுகட்டில் சீன் நினைவு வர  தேவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு கறுப்பு
பெட்சீட்டால் தன்னை மூடி ஆறு அடி இடைவெளி மொட்டைமாடி தாண்டி  அவளையும் சேர்த்து தன்னுடன் போர்த்திவிட்டான்.அவனை
தள்ளி கத்த முனைந்தவளின் வாயை ஒரு கையால் பொத்தி மறுகையால் அவளில் படரவிட்டவன்
காதிற்குள் 19 mm  ஜெர்மன்வால்தர் வேட்டொலி
கேட்டது போலிருக்க அடுத்த நிமிடமே ஒரே தாண்டலில் தனது படுக்கையில்
சுருண்டுவிட்டான் .



அதுசரி, எனக்கும் தேவனுக்கும் துரையண்ணைக்கும் மட்டும் தெரிந்த இந்த ரகசியம் ,டெக்ஸ்சாசில்
இருந்து போன் பண்ணிய பீட்டருக்கு என்னென்று  தெரியும்.



(இனியும் தொடர்ந்தால் அதுவும் தெரியும்)

Quote:" நல்லதோ கெட்டதோ நினைவுகளை அசை போடுவதில் கிடைக்கும் சந்தோசமே தனி".

 

இப்பவும் மனதிற்கு இளமை தருபவை அவைதான்.

 

அது ஒரு தனி சுகம், மீட்டிப்பார்ப்பது.

 

அது ஒரு பொற்காலம்....கடைசிக்காலம் ஊரில்தான் பார்ப்போம்

எங்கட ஊரும் ப்ளோட்டின்ர கோட்டையாத்தான் இருந்தது. நானும் அவையோட சேர்ந்து சோத்துபார்சல் சேர்க்க போயிருக்கிறேன்.ஆனால் 
நான் உறுப்பினன் இல்லை.அப்ப நாங்கள் சின்ன ஆட்கள் பிறகு மினிபஸ்சில வேலை செய்யக்கில அதை ஒருக்கா வாங்கி உடைச்சிட்டு தந்திட்டினம்.முதலாளி எங்கில திண்ணுட்டார். நாங்கள் என்ன செய்யிறது. அவையிலையும் நல்ல ஆட்கள் இருந்தவை.எனக்கு மீரான் 
மாஸ்டர், கண்ணதாசன் , சங்கிலி , மென்டீஸ்,சின்ன மென்டீஸ் என்று ஆட்களை அப்ப தெரிந்திருந்தது.     கதை நல்லாய்ப் போய் சுவாரஸ்யம் குறைஞ்சமாதிரி கிடக்குது.     
  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகப் போகிறது அர்ஜுன். தொடருங்கள் வாசிக்கக் காத்திருக்க வைக்காமல்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, எனக்கும் தேவனுக்கும் துரையண்ணைக்கும் மட்டும் தெரிந்த இந்த ரகசியம் ,டெக்ஸ்சாசில்

இருந்து போன் பண்ணிய பீட்டருக்கு என்னென்று  தெரியும்.

 

 

 
ஒரு வேளை, உங்களுக்கும் தெரியாமப் பீட்டரும், பாஞ்சிருப்பாரோ? :D
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 
ஒரு வேளை, உங்களுக்கும் தெரியாமப் பீட்டரும், பாஞ்சிருப்பாரோ? :D

நான் கேட்க நினைத்த அதே கேள்வி.. :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேட்க நினைத்த அதே கேள்வி.. :rolleyes::lol:

 

இந்தச் சின்ன விசயங்களை, நான் பாத்துக்கொள்ளுறன்!

 

நீங்க, உங்கட கதையைக் கவனியுங்கோ, ஜீவா! :D  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

........ சிரிலங்காவுக்குள் செல்வாக்கு செலுத்த ஒரு இனத்தையே அழித்துள்ளது இந்தியா......ஆயுதங்களை கொடுத்து ஒரு இயக்கத்தையும்,கம்னிசசித்தாந்தத்தை புகட்டி இன்னோரு இயக்கத்தையும் வளர்த்திருக்கு..... இந்தியாவின் அடுத்த நகர்வு என்ன ? அழித்தலா அபிவிருத்தியா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அபிவிருத்தி செய்ததாக வரலாறே இல்லை. குழி பறித்தது தான் வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அர்ஜுன் அண்ணா


 

படத்தைப் பார்த்தால் 84 அல்லது 85 பட்ஜ் போலை இருக்கின்றது


 

நான் தப்பிவிட்டன்

 

150071_125971870796218_6384493_n.jpg

எல்லோரும் படத்தோட கதை எழுதுகின்றார்கள் என்று தேடியதில் அகப்பட்ட சில படங்கள் .

பிள்ளைகள் எவ்வளவு சீரியசாக கை கட்டிக்கொண்டு நிக்கினம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னண்ணை 2 பக்கத்தோடை முடிச்சுப் போட்டிங்களோ??? :(

  • கருத்துக்கள உறவுகள்

அர்யுனுக்கு எழுதப் பஞ்சி வந்திட்டுதாக்கும் அதனால எங்களுக்குப் படம் போடுறார். :D

  • தொடங்கியவர்

மனமும் நேரமும் தான் புலம் பெயர்நாடுகளில் பல விடயங்களை தீர்மானிக்கின்றது,வேலையால் வீடு வர மாலை ஐந்து மணியாகிவிடும் ,பனி பொழிவால் அது ஆறு ,ஏழும் ஆனது .திங்கள் ,செவ்வாய் ,புதன் மகனுக்கு பின்னேரவகுப்பு. சனி ,ஞாயிறு வேறு  அலுவலகளில் ஓடிவிடும் .

வேலை நேரத்தில் தான் அனேகமாக பின்னூட்டங்கள் எழுதுவது .

இதற்குள் பூபாளத்திற்கு ஒஸ்கார் படவிழாவை பற்றி கட்டுரை ஒன்று எழுதினேன் .இப்படியே நேரம் பறந்துவிடுகின்றது .

இனி வியாழன் மாலை  தான்   சற்று நேரம் கிடைக்கும்.

பூபாளம் கட்டுரை இணைத்துவிடுகின்றேன் .நன்றி .

  • தொடங்கியவர்


 

வாற சனி கடைசி புரஜெக்ட் சமர்ப்பித்த பின் ஞாயிறு பின்னேரம் முகாம்களுக்கு போக
பஸ் வரும் என்று அறிவிப்புவந்துவிட்டது . ஒருத்தருக்கும் சென்னையை விட்டு போகவிருப்பமில்லை.கன்னிமாரா
நூலகம்,சினிமா ,உறவினர்கள் நண்பர்களிடம்விசிட் இவற்றைவிட்டு போக யாருக்குத்தான்
மனசுவரும் ஆனால் வேறு தெரிவும் இல்லாதபடியால் எதையும் ஏற்கும் மனநிலையில் தான்
அனைவரும் இருந்தார்கள் .



இன்னமும் மூன்று நாட்கள் இருக்கின்றது ,காலை சாப்பிடும் போது தேவனின் முகத்தை
பார்த்தேன் எதுவித சலனமும் இருப்பதாய் தெரியவில்லை.எவருக்கும் தெரியாமல் விஷயம்
அமந்துபோனதாக நினைத்துவிட்டார் .அன்று காலை பதினோருமணிக்கு “தமிழிழ ஆயுத  போராட்டமும் இலங்கையின் புவியியல் அமைப்பும்  “ என்ற தலையங்கத்தில் வகுப்பு . நீண்ட மயிருடன்
முறுக்கிவிட்ட மீசையுடன்  வெள்ளை குர்தா,இடுப்பில்
சொல்னா பை சகிதம் மிக விரைவாக ஒருவர் உள்ளே நுழைகின்றார் ,வந்த வீச்சில் மேசையில்
ஏறி காலிரண்டையும் ஆட்டியபடி பிளந்துதள்ளுகின்றார் .ஆயுத போரட்டத்தின் இறுதி
நிலையில் பாவிக்க வேண்டிய முக்கிய கேந்திர நிலையத்தை பணத்திற்காக  கொள்ளை அடிக்க போய் காட்டி கொடுத்துவிட்டார்கள்
என்று கத்துகின்றார்.நிக்கரவெட்டிய கொள்ளைக்கு புத்தளத்தில் உடப்பு என்ற இடத்தில்
போய் இறங்கியதை தான் சொன்னார்.(எங்கடபொயட் ஜெயபாலன்)    



சனி மாலை T3S இன் இறுதி நிகழ்வு வெகு சிறப்பாக நடந்தேறியது.நிறைய மக்கள்
வந்திருந்தார்கள் பல பெண்கள் உட்பட .எனது குறுப்பில் இருந்து என்னோருவர்தான்
புரெஜெக்ட் சமர்பித்தார் எனக்கு கொஞ்சம் ரிலீவ் .எனது மனைவியின் தம்பி கணிதம்
படித்ததோ என்னவோ பல சமன்பாடுகள் எல்லாம் போட்டு தனது புரேஜெக்ட்டை சமர்ப்பித்து
பேசும்போது  எல்லோரையும் சிரிக்க வைத்து
கைதட்டும் வாங்கினான் .தனது அக்காவையும் அந்த நிகழ்விற்கு ஒரு வாடகை சைக்கிளை
எடுத்து போய் கூட்டிகொண்டு வந்திருந்தான். எனக்கு வேறு அறிமுகம் செய்தான் ,நான்
ஒரு காலோவுடன் போய்விட்டேன். அக்கா ஒரு மண்ணிறசேலையுடன் வந்த ஞாபகம் .



உமாவிற்கும் நல்ல
திருப்தி.சிரித்துக்கொண்டு சொன்னார் ரஷ்யா ,கிழக்கு ஐரோப்பிய நாடுகள் போன்றவற்றில்
தான் பெண்கள் ஆண்களுக்கு இணயாக வேலை செய்கின்றார்கள் என்று யு.என் புள்ளிவிபரம்
காட்டி ஒருவர் பேசினார் அது உண்மைதான் ஆனால் அந்த நிலைக்கு காரணம் இரண்டாம்
உலகப்போரில் நிறைய ஆண்கள் இறந்துவிட்டார்கள் அவர்களுக்கு வேறு வழியும் இல்லை
என்றும் எடுத்துக்கொள்ளாலாம்.



இரவு மொட்டைமாடியில்
விருந்துபசாரம்.வாங்கி வைத்திருந்த தின்பண்டங்கள் எதிர்பாராதை விட சனம் அதிகம்
வந்ததால் பெருமளவு தீர்ந்துவிட்டன,என்னிடம் கையில் காசும் இல்லை அருகில் இருக்கும்
புலனாய்வு கந்தசாமியிடம் தான் ஓடினேன்.இருநூறு ரூபாயை தந்து நாளை மாதவனிடம்
சொன்னால் சரி என்றார் .



மொட்டை மாடி. அதிபர்
ஆங்கிலம், தமிழில்  இனி அடுத்த கட்டம்
என்னவென்று ஒரு பிரசங்கம் வைக்கின்றார் .அதிபரை பற்றியும் சிலது சொல்லியே
ஆகவேண்டும். தன்னை பற்றி சற்று புழுகினாலும் ஆள் ஒரு கலைஞன்.ஆள் ஒரு லண்டனில்
படித்த சிவில் எஞ்சினியர்.பாட்டு நன்றாக பாடுவார் .வகுப்பிற்கு வரும் போது முதல்
மரியாதை பட வசனங்களை பாரதிராஜா குரலில் பேசிக்கொண்டுவருவார் .மாக்ஸிசம் கரைத்து
குடித்தவர் . அடிக்கடி அவர் சொல்லும் ஒரு விடயம்,புலிகள் உடைந்த பின் ஒற்றுமைக்காக
உமாவையும் பிராபவையும் சந்திக்க பண்ணிய ஒரே ஆள் நான்தாண்டா.அதுவும் இரண்டுதரம். இரண்டாம்
தரம் எந்த நேரமும் கைத்துப்பாகியுடன் அலையும் இருவரிடமும் துவக்கை
வாங்கிவைத்துவிட்டு  ஒரு றுமிற்க சந்திக்க
வைத்தனான் என்று பெருமைப்படுவார்.(ஐயரின் பதிவுகள் அதை உறுதி செய்தது)



எல்லோரும் ஏதாவது
செய்யவேண்டும் என்று பாட்டு டான்ஸ் என்று மொட்டைமாடியே அமர்களப்பட்டது .நான் “உள்ளம்
என்பது ஆமை “ என்ற பாடலை பாடினேன் .பிரசாத்தின் நடனம்(அஜீவன்)  எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.  வசந்த்  இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் செய்திகள்
என்று வாசித்தான்.எங்கள் அனைவரினதும் பெயர்கள் வர கூடியதாக நாங்கள் எடுக்கும்
நடவடிக்கைகள்  இலங்கை அரசின் வயிற்றில் புளியை
கரைத்துக்கொண்டுருப்பது போல இருந்தது .



 T3S இல் மாக்க்சிசம் படித்திருந்ததால் இனி முகாம்களில் இவர்கள்
பொறுப்புகளில் தான் அரசியல் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிப்பு வந்ததில்
எல்லோருக்கும் நல்ல சந்தோசம் .ஆயுத,அரசியல் புரட்சி ஒன்று மிக விரைவில் இலங்கையில்
நடைபெறபோவதாக எல்லோரும் நம்பினார்கள் .ஆளை ஆள் கட்டிப்பிடித்துகொண்டு விடை பெற
தயாரானார்கள் .ஞாயிறு மாலை பஸ் வந்துவிட்டது என்னைத்தவிர எல்லோரும் பஸ்ஸில்
ஏறுகின்றார்கள்.



மனைவியின் தம்பி ஓடிவந்து
என்னை மொட்டைமாடிக்கு அழைத்து சென்று அக்காவை கலியாணம் கட்ட முடியுமா ? என்றான் . (இதற்குள்
இப்படி ஒன்று இருக்கா ).முகாமிற்கு போய் வாரும் தோழரே என்று அனுப்பிவிட்டேன்.



எனக்கு அடுத்த நாள் உமா
அழைத்து போனால் ஆறுமாதமாக நடாத்த தீர்மானித்து இழுபட்டுக்கொண்டு போகும்
அகதிகளுக்காக பணம் சேர்க்கும் நட்சத்திர இரவு எப்படியும் இருமாதங்களில்
நடத்திமுடிக்க சொல்லி விட்டு  தேவை என்றால்
காரை பயன்படுத்தலாம் என்றார். நாங்கள் இருந்த வீட்டையும் காலி பண்ணி இப்போ புது
யாகை. சரவணபவனுக்கருகில் தனிய மேல்வீடு.ஒரு மோட்டார்சயிக்கிள்,தொலைபேசி வசதி
.அங்கு ஆறு பேர்கள் இருந்தார்கள் எல்லாம் புதுமுகங்கள் .



இந்த இரு மாதங்களும் இயக்கம்
என்பதையும் மீறி கொஞ்சம் அனுபவித்தேன் என்றுதான் சொல்லவேண்டும்.நட்சத்திர இரவு
நடத்தியது பெரும் கதை.அதை விடுவம் .முகாம்களில் இருந்து  T3S இல் படித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறு காலையும் தாங்கள் சந்திப்பதற்கான
ஏற்பாட்டை செய்துவைத்திருந்தார்கள் ,முடிந்தவரை நானும் தஞ்சாவூர் சென்று நானும்
அதில் பங்கு பற்றினேன் .



இப்படியான ஒரு ஞாயிறு
காலை, கூட்டம் முடிந்து ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சாவூரருக்கு T3S இல் படித்த ஏழு  பேர்கள் ஒன்றாக பயணம் செய்கின்றோம். இந்த பஸ்
பயணத்தை போல ஒரு சுகமான அனுபவம் வேறில்லை.பச்சை பசேலேன்ற வயல் வெளியால் பஸ்
பயணிக்கும் .அப்போ முகத்தில் அடிக்கும் அந்த குளிர்காற்றின் குளிர்மை சொல்லி
மாளாது



அப்போது தான் நான்
இனி நாங்கள் எங்கே சந்திக்க போகின்றோமோ தெரியாது  என்று கறுப்பு பெட்சீட் கதையை சொல்லி அது யாராக
இருக்கும் என்று அந்த ஏழு பேரையும் அனுமானிக்க கேட்கின்றேன். எவருமே தேவனின் பெயரை
சொல்லவில்லை .சிவாவும் சைமனும் இளங்கோவும் தான் பலர் நினைத்தது .நான் தேவனின்
பெயரை சொன்னதும் எல்லோருமே வாயடைத்துப்போனார்கள் .உருவம் ,படிப்பு ,செய்கைகள்,கதைக்கும்
விதம்  எதுவுமே இப்படியான நிகழ்வை தீர்மானிப்பதில்லை
என்று நினைக்கிறேன்.பீட்டரும் அப்போது இருந்தான். அதுதான் பீட்டரை  தொலைபேசியில் நினைவு படுத்த வைத்தது .



தேவன் கனடாவில்
பல்கலைகழகத்தில் படித்து நல்ல வேலையில் இருக்கின்றார் .இன்றுவரை அவர் கறுப்பு
பெட்சீட் விடயம் துரையண்ணைக்கு மட்டும் தான் தெரியும் என்றுதான் இருக்கின்றார் என
நம்புகின்றேன் .



லண்டனில் இருந்து
தந்தையின் மறைவிற்கு போன வாரம் கனடா வந்தவர் இது பற்றி கேட்டார்.யாரும் தேவனுக்கு
சொல்லாவிட்டால் சரி .தங்களையும் பற்றி எழுதும்படி கேட்டார் .எனது புளொட்
வழிகாட்டிகள் அவர்கள்தான் .



T3S இறுதிநிலைக்கு ஆங்கிலத்தில் படிப்பிப்பதால் ஓரளவு
படித்தவர்களை தெரிவுசெய்து இருந்தார்கள் .எனது அறிவிற்கு உட்பட வசந்த மாத்திரம்
புலிகளால் கொல்லபட்டார் ,சிலர்  திரும்ப
இலங்கை பல்கலைக்கழகத்தில் மீளபோய் சேர்ந்ததும்(மனைவியின் தம்பி ,இன்னொருவர் யாழ்
போதனாவைத்தியசாலையில் இப்போ பெரிய டாக்டர் ) சிலர் புலம் பெயர்ந்து பல்கலைகழகங்களில்
படித்து நல்ல நிலையிலும் உள்ளார்கள்.  



குறிப்பு -புளொட்டில்
இவ்வளவு உட்கொலைகள் ,பிரச்சனைகள் இருக்க இவன் என்ன இப்படி எழுதுகின்றான் என
நினைக்கவேண்டாம்.நான் சந்தித்ததை மட்டும் தான் என்னால் எழுதமுடியும்.அதையும் அடுத்து
நடந்த சில நிகழ்வுகள் மூலம் எழுதலாம் என நினைக்கின்றேன் .



நன்றி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 நன்றாக பதிந்துள்ளீர்கள். தேவனின் பெயரை அந்த ஏழு பெயரிடமும் 
சொல்லியிருக்கக் கூடாது.
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பு பெட்சீற் ஒருகாலத்தின் இளைஞர்களின் அரசியல் வாழ்வும் அவர்களது போராட்ட எழுச்சியும் பற்றி பதிவாக உள்ளது. அனுபவ ஓட்டம் மிகவும் ஆளமாக பதிவு செய்யப்பட்டிருக்கு. தொடர்ந்து உங்கள் போராட்ட கால அனுபவங்களை எழுதுங்கள் Arjun.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.