Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ தொடருங்கள்!! 

சுமோ தொடருங்கள்!! 

அலை,இப்ப  நீதிமன்றத்திலேயா வேலை செய்யுறீங்கள்? :D

கொஞ்ச நாளா, எல்லாத்தையும் இரண்டு தரம் அல்லது மூன்று தரம் பதியிறியள்?

  • Replies 83
  • Views 5.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்திக்களைப் பதிந்த கோமகன்,சகாறா, ரதி, நீதிமதி, அலை, புங்கை ஆகியவர்களுக்கு நன்றி.

பொறாமை, போட்டி, இருக்கும் மனத்தில் உண்மை நட்பு இருக்காது. இப்படியானவர்களின் குணம் தெரியத்தொடந்கியவுடனேயே விலத்திவிட வேண்டும் . பாவம் நீங்கள்  :(

நீங்கள் கூறுவது சரிதான். எப்போது உண்மை இல்லை என்று தெரிகிறதோ அப்போதே விட்டிருக்க வேண்டும்.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில்  கள்ளவேலையும் செய்து அகதிக் காசும் எடுத்துக் கொண்டிருந்தால்

கடன் என்றுதான் மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும்.

விசாக்கிடைத்ததும் சேர்த்த காசைச் செலவழிக்க எங்கேயாவது செல்லத்தானே வேண்டும்.

மற்றவர்கள் செய்வதை அறியத் துடிப்பதும் 

நாங்கள் செய்வதை மற்றவர்களுக்கு அறியத்தரத் துடிப்பதும் 

நட்பாக இருந்தாலும் நன்று அன்று  .  :) 

அதோட அங்கை போய் அம்மாவுக்கும் உசுப்பேத்துறது :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதன்பின் ஒரு வாரத்தில் யாழினி போன் எடுத்தாள்.எனக்கோ சரியான கோபம். ம்...என்று மட்டும் கூறிவிட்டுப் பேசாமல் இருந்தேன். அவள் ஒன்றுமே நடக்காதது போல் இப்ப எல்லாம் செட்டில் ஆயிட்டியோ,வீடு மாறி விட்டியோ என்றாள். செட்டில் ஆவதற்கு இன்னும் ஒரு மாதமாவது வேண்டும் என்றுவிட்டு உனக்காகச் சமைத்துவிட்டு பார்த்துக் கொண்டு இருந்தோம் என்றேன். நான் உன்னைச் சமைக்கச் சொல்லவில்லையே என்றாள். வீட்டுக்கு வருபவர்களுக்கு எப்பவாவது உணவு கொடுக்காது நான் அனுப்பியிருக்கிறேனா என்று கோபத்துடனேயே கேட்டேன். நீதானே எல்லாப் பொருட்களும் வரவேற்பறையில் இருப்பதாகக் கூறினாய். ஏன் உனக்குக் கரைச்சல் கொடுப்பான் என்று தான் வரவில்லை என்று சாதாரணமாகக் கூறிவிட்டு, மன்னிப்புக் கூடக் கேட்கவில்லை. நானும் கதையை வளர்க்கவில்லை. தொலைபேசியை வைத்துவிட்டாள்.

இனிமேல் இவளுக்கு நான் தொலைபேசி எடுப்பதில்லை என மனதுள் சூளுரைத்தபடி நான் என் வாழ்க்கையோடு ஓடிக்கொண்டிருந்தேன். அதன்பின் IBC வானொலியில் சேர்ந்து வேலை செய்து கொண்டிருந்தபோது  சந்திரா ரவீந்திரன் என்னும் அறிவிப்பாளர் நாடகங்களைத் தயாரித்து வழங்குவார். அப்போது குரல் கொடுப்பதற்காக  என்னையும் பயன் படுத்தியிருந்தார். நாடகத்தின் முடிவில் பார்த்தால் அது யாழினி எழுதிய நாடகம். நாடகம் நன்றாகவே இருந்தது. ஆனாலும் நான் அவளுக்கு தொலைபேசி எடுக்கவே இல்லை. மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு இருந்தேன். ஒரு வாரத்தில் நாடகம் ஒலிபரப்பானது.

அன்று இரவு யாழினியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. எப்ப நீ வானொலியில் சேர்ந்தாய். என்ன செய்கிறாய், யார் உன்னைச் சேர்த்தது என்று தூண்டித் துருவிப் பல கேள்விகள். ஒரு கவிதா நிகழ்வில் என் குரலைக் கேட்டு என்னை கூப்பிட்டார்கள் என்று கூறினேன். நீ கவிதை எழுதுவாயோ என்று கேட்டாள். உன்னைப் போல் எழுதாவிடிலும் இப்பத்தான் எழுதிப் பழகுகிறேன் என்றேன். பின்னர் உடனேயே கதையை மாற்றிவிட்டாள். பிள்ளைகள் என்ன செய்யினம் இப்படிப் பொதுவாகக் கதைத்துவிட்டு வைத்துவிட்டாள்.

அதன்பின் நானே பல நாடகங்களை எழுதி நானும் ரூபி குமாரும் சேர்ந்து தயாரித்தோம். முதல் நாடகம் ஒலிபரப்பானதும் நானே அவளுக்கு தொலைபேசி எடுத்தேன். எனது நாடகம் கேட்டாயா என ஆவலாக விசாரித்தேன். இல்லையே நான் கேட்கவில்லை என்றாள். அவள் கூறுவது பொய் என எனக்குத் தெரிந்தது. ஏனெனில் வானொலியில் ஒலிபரப்பப் படும் நாடகம் கேட்பதற்கு அவள் தவறுவதே இல்லை என எனக்குத் தெரியும். சரி சில வேளை கேட்கவில்லைத் தானோ என எனக்கே சந்தேகம் வந்தபடியால் அதன்பின் புதுவாகக் கதைத்துவிட்டு வைத்துவிட்டேன்.

தொடர்ந்த வாரங்களில் எனது நாடகங்களே ஒலிபரப்பப்பட்டன. அதனால் யாழினி எனது நாடகங்களைக் கட்டாயம் கேட்டே இருப்பாள். அனாலும் எனக்கு போன் செய்யவில்லை. அப்போதுதான் அவளுக்கு என்மேல் பொறாமையா?? என்ற எண்ணம் என் மனதில் உதித்தது. நான் அவளின் வளர்ச்சியில் என்றும் பொறாமை கொண்டதில்லையே என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். அவளை எப்போதும் நான் ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தியே வந்திருக்கிறேன். அப்படியிருக்க என்மேல் ஏன் பொறாமை கொள்ளவெண்ண்டும் என எண்ணினேன். அப்படியே அவள் தொடர்பை விட்டுவிட வேண்டும் என எண்ணினாலும் என்னால் முடியவில்லை. சிலநேரம் தந்தை இல்லாது வளர்ந்ததனால் இக்குணம் வந்ததோ என்று கூட எண்ணி மனதைத் தேற்றினேன்.

அவள் ஒருதடவை தொலைபேசியில் அழைத்தபோது நான் வீட்டில் இல்லை. அம்மா வேலைக்குப் போய்விட்டார். இத்தனை மணிக்குப் பின் தான் வீட்டில் நிற்பார் பிறகு எடுங்கள் என்று என் மகள் கூறியுள்ளாள். உடனே அவளுக்கு போன் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தைக் கட்டுப் படுத்திக் கொண்டு பேசாமல் இருந்தேன். அடுத்தநாள் மீண்டும் நான் இல்லாத நேரமாக அழைத்திருக்கிறாள். மீண்டும் எனது மகள் தாம் தொலைபேசியை எடுத்தது. இந்த நேரம் அம்மா நிக்க மாட்டார் என்று நேற்றே கூறினேனே என மகள் கேட்டிருக்கிறாள். ஓ .. நான் மறந்துவிட்டேன் என்று கூறி போனை வைத்துவிட்டாள் யாழினி.

நான் வந்தவுடன் உங்கள் ஆருயிர் நண்பி இன்றும் அழைத்திருந்தார் அம்மா என மகள் சிரித்துக் கொண்டே கூறினாள். சரி ஏதும் அலுவலோ என நான் எண்ணிக்கொண்டு மீண்டும் அவளுக்கு போன்  எடுத்துக் கேட்டால் சும்மாதான் என்ன செய்கிறாய் என்று பார்க்க எடுத்தேன் என்றாள். சும்மா எடுப்பதெனில் நான் நிற்கும் நேரம் எடுக்காது, நான் இல்லாத நேரம் ஏன் எடுக்கிறாய் என்றேன் நானும் சிரித்துக்கொண்டே. ஏன் எனக்கு அவளில் வெறுப்பு ஏற்படவில்லை என்று எண்ணியபடியே உரையாடலை முடித்தேன்.

இப்படி நான் இல்லாத நேரம் அவள் அடிக்கடி போன் எடுப்பதும் மீண்டும் நான் எடுத்துக் கதைப்பதுமாக நாட்கள் ஓடின. ஆனாலும் முன்புபோல் என்னால் அவளுடன் ஓட்ட முடியவில்லை என்பதும் எனக்குள் உறுத்தியது. இரு வாரங்களுக்கு ஒருமுறை கதைத்தது மாதங்களுக்குப் பின் என நீண்டதில் நானும் நின்மதியாய் உணர்ந்தேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக இருவரும் கதைக்கவில்லை. சரி ஒருமுறை எடுத்துப் பார்ப்போம் என எண்ணியபடி எண்களை அழுத்தினால் யாழினி தான் போனை எடுத்தது. எப்படி இருக்கிறாய் என நான் கேட்கும் போதே சின்னக் குழந்தையின் அழுகுரலும் கேட்கிறது.

என்னடி உனக்கு குழந்தை பிறந்திருக்கா பிள்ளை அழும் சத்தம் கேட்கிறது என நான் பகிடியாகக் கேட்கிறேன். யாரோ அவள் வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கின்றனர் அவர்கள் குழந்தை தான் அழுகின்றதாக்கும் என்னும் என் நினைப்பில் மண் அள்ளிப் போட்டபடி ஓமடி என் பெடியன்தான் பிறந்து மூன்று மாதம் என்று சாதாரணமாகக் கூறியபடி அவள் நிக்க, பூமி பிளந்து என்னை உள்ளே இழுக்கும் நிலையை நான் உணர்ந்தேன். மீண்டும் நம்பிக்கை இன்றி உண்மையாகவோ?  என்று கேட்கிறேன் வார்த்தைகளில்  வலிமையின்றி. பிள்ளை விடயத்தில் யாராவது பொய் சொல்லுவார்களா என்று அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே நான் தொலைபேசியை வைத்தவள் தான். அதன்பின் எட்டு வருடமாகிறது ஆவளுடன் கதைத்து. ஆனாலும் இன்றுவரை அந்த வலி நெஞ்சிலிருந்து நீங்க மறுக்கிறது.

முடிந்தது

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

பல புதிய கதைகள் இங்கு பதிவாகியுள்ளது. யாவற்றையம் படிக்க முடியாத நிலமையில் அண்மைய சில நிகழ்வுகள் மனசை ஒரு நிலைப்படுத்தி வாசிக்க முடியாது போய்விட்டது. இன்றுதான் சுமேரியரக்கா உங்கள் கதையை முழுவதும் வாசித்து முடித்தேன். இம்முறை கதையின் ஓட்டம் மிகவும் நன்றாக அமைந்துள்ளது.

நட்பு என்பது ஒவ்வொருவருக்கும் கிடைக்கிற வரம். அந்த வரத்தை நீங்கள் உங்கள் நண்பி மூலம் பெறவில்லையென்பதனை இதுவரையான கதை சொல்கிறது.

எனக்கும் பல தோழிகள் இருந்தார்கள். அவர்களில் சிலர் மட்டுமே என்னோடு இன்றுவரை பயணிக்கிறார்கள். இன்னும் 2பேரை தேடுகிறேன். அவர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.  
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் கிடைக்கும் மகத்தானவை எல்லாமே வரம் தான். நன்றி சாந்தி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழுவதும் படித்து விட்டேன்.

எல்லாவற்றையும் அளவோடு வைத்திருப்பதாலும், எது போனாலும் தைரியமாய் இருக்கும் உறுதி இருப்பதாலும்

இப்படியான சம்பங்கள் அரிதே..

நல்லதொரு படிப்பினை தரக்கூடிய கதையை உணர்வுபூர்வமாய் எழுதியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள் சுமோ அக்கா. :)

நல்ல கதை. பிரச்சனையான நட்புகளைத் தவிர்ப்பது நல்லது.
 
இதில் யாரு பாவமெண்டா,  மனைவி மற்றவர்களுடன் போட்டி போடுவதற்காக கஷ்டப்பட்டு உழைக்கும் கணவன். :D

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துப்பிழைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டால் நன்று..முக்கியமாக 3வது paragraph கவனிக்கப்படவேண்டும்.இப்படி எல்லாமா நண்பிகள் இருப்பார்கள்..சொன்னாலும் பிடிக்கிறதோ தெரிய இல்லை..எல்லாரும் முன்னேறத்தான் வேண்டும் ஆனால் அது ஒரு போட்டி மனப்பாண்மையான செயல்பாடாக இருக்க கூடாது.
 
  • கருத்துக்கள உறவுகள்

மெசொபொத்தேமியா சுமேரியர்    Posted Today, 10:10 AM                                   
 
ஒரு கவிதா நிகழ்வில் என் உரலைக் கேட்டு என்னை கூப்பிட்டார்கள் என்று கூறினேன்.

பொதுவாகவே நான் தமிழ் வானொலிகள் கேட்பது குறைவு. அதுவும்  ஜ.பி.சி வானொலி கேட்பதே இல்லை . நல்ல வேளை  கடவுள் என்னை  காப்பாத்திட்டார்.  நன்றி ஆண்டவரே நன்றி :lol: :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முழுவதும் படித்து விட்டேன்.

எல்லாவற்றையும் அளவோடு வைத்திருப்பதாலும், எது போனாலும் தைரியமாய் இருக்கும் உறுதி இருப்பதாலும்

இப்படியான சம்பங்கள் அரிதே..

நல்லதொரு படிப்பினை தரக்கூடிய கதையை உணர்வுபூர்வமாய் எழுதியுள்ளீர்கள்.

வாழ்த்துக்கள் சுமோ அக்கா. :)

என்னில் ஒரு கெட்ட குணம் ஒருவரில் அன்பு வைத்து விட்டால் என்னால் லேசில் விட்டுவிட முடியாது. நீங்கள் கூறியதுபோல் அளவோடு வைத்துக் கொள்வதுதான் நல்லது என்று பட்டால் தானே தெரிகிறது.

உங்கள் கதை இறுதி வாசித்தேன் முடிவில் கொஞ்சம் குழம்பியிருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது . எந்தத் தொடர்பும் தவறான மொழிபெயர்ப்புகள் இருந்தால் அவை நீடிப்பதில்லை . அந்தமொழிபெயர்பை சரியான கதைகளாலேயே நிவர்த்தி செய்ய முடியும் . உங்கள் பக்கம் மொழிபெயர்ப்பை சரியாக நகர்த்திய நீங்கள் , இறுதியில் 4 - 5 தடவைகள் உங்கள் நண்பி போன் பண்ணி நீங்கள் தொடர்பாடாது விட்டு , பின்பு நீங்களே போன் பண்ணியபொழுது அவளுக்கு பிள்ளை பிறந்த கதையை சொல்லி , இருவருக்கான இடைவெளியை சொல்லி முடித்தது சொதப்பலின் உச்சக்கட்டம் . வருங்காலங்களில் அவசரப்படாது முடிவில் வடிவாக யோசித்து எழுதினால் பிரகாசமான எதிர்காலம் உண்டு . இது எனது விமர்சனமே ஒழிய உங்கள் எழுத்தை குறைத்து மதிப்பீடு செய்வது இல்லை :) :) :) .

மெசொ! உண்மைக் கதைகளுக்கு எப்பொழுதுமே ஒரு ஈர்ப்பு இருக்கும். அனைத்தை பகுதியையும் வாசித்தேன். உங்களின் கதைகளை படிக்கின்ற பொழுது புனைபெயரில் எழுதுவதன் நன்மை புரிகிறது.

இந்தக் கதையை பற்றி சொல்வது என்றால்.. உங்கள் பார்வையில் மட்டுமே கதை அமைந்திருக்கிறது. நண்பியின் பக்கத்தை அவர்தான் சொல்ல வேண்டும். யார் கண்டார்? எல்லா இடமும் உங்களை தொடர்ந்து வந்தவர், யாழிற்கும் வந்து ஒரு நாள் எழுதக் கூடும்.

Edited by சபேசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை. பிரச்சனையான நட்புகளைத் தவிர்ப்பது நல்லது.

இதில் யாரு பாவமெண்டா,  மனைவி மற்றவர்களுடன் போட்டி போடுவதற்காக கஷ்டப்பட்டு உழைக்கும் கணவன். :D

உண்மைதான் தப்பிலி. ஆனால் அந்தக் கணவரும் தன மனைவிக்கு நல்லதைச் சொல்லவேண்டும் எல்லோ

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலை பெரியவர்கள் இருக்கமாட்டார்கள் என்று தெரிந்தும்

தொலைபேசியில் சிறியோரிடம் வலைவீசி விடுப்புகள் அறிவதில்

பெண்கள் வல்லவர்கள். :D

தளராமல் கதையைக் கொண்டுசென்று முடித்ததற்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி எழுத்துப் பிழை திருத்தப்பட்டுள்ளது.

பொதுவாகவே நான் தமிழ் வானொலிகள் கேட்பது குறைவு. அதுவும்  ஜ.பி.சி வானொலி கேட்பதே இல்லை . நல்ல வேளை  கடவுள் என்னை  காப்பாத்திட்டார்.  நன்றி ஆண்டவரே நன்றி :lol: :lol:

சாத்திரி, உங்களை நான் IBC வானொலியைக் கேளுங்கோ என்று கரைச்சல் கொடுத்த மாதிரி எல்லோ கிடக்கு உங்கள் கதையைப் பாத்தால். :D :D

உங்கள் கதை இறுதி வாசித்தேன் முடிவில் கொஞ்சம் குழம்பியிருக்கின்றீர்கள் போல் தெரிகின்றது . எந்தத் தொடர்பும் தவறான மொழிபெயர்ப்புகள் இருந்தால் அவை நீடிப்பதில்லை . அந்தமொழிபெயர்பை சரியான கதைகளாலேயே நிவர்த்தி செய்ய முடியும் . உங்கள் பக்கம் மொழிபெயர்ப்பை சரியாக நகர்த்திய நீங்கள் , இறுதியில் 4 - 5 தடவைகள் உங்கள் நண்பி போன் பண்ணி நீங்கள் தொடர்பாடாது விட்டு , பின்பு நீங்களே போன் பண்ணியபொழுது அவளுக்கு பிள்ளை பிறந்த கதையை சொல்லி , இருவருக்கான இடைவெளியை சொல்லி முடித்தது சொதப்பலின் உச்சக்கட்டம் . வருங்காலங்களில் அவசரப்படாது முடிவில் வடிவாக யோசித்து எழுதினால் பிரகாசமான எதிர்காலம் உண்டு . இது எனது விமர்சனமே ஒழிய உங்கள் எழுத்தை குறைத்து மதிப்பீடு செய்வது இல்லை :) :) :) .

கோமகன் நீங்கள் வடிவாகக் கதையை உள்வாங்கவில்லை என்று தெரிகிறது. நான்
மூன்று மாதங்கள்தான் தொடர்ந்து அவளுடன் கதைக்கவில்லை. அதற்குமுன் நான்
கதைத்த போது அவள் கற்பமாக இருந்துள்ளாள். அது பற்றி அவள் எனக்கு முன்பு
கதைத்தபோதும் கூறவில்லை. குழந்தை பிறந்த  பின்னும் கூறவில்லை. மற்றைய
விடயங்களை விடுங்கள். ஒரு உயிர் இவ்வுலகத்திற்கு வந்துள்ளது. அதைக் கூறாது
விடுபவள் எப்படி ஒரு நண்பியாக இருக்க முடியும்????

மெசொ! உண்மைக் கதைகளுக்கு எப்பொழுதுமே ஒரு ஈர்ப்பு இருக்கும். அனைத்தை பகுதியையும் வாசித்தேன். உங்களின் கதைகளை படிக்கின்ற பொழுது புனைபெயரில் எழுதுவதன் நன்மை புரிகிறது.

இந்தக் கதையை பற்றி சொல்வது என்றால்.. உங்கள் பார்வையில் மட்டுமே கதை அமைந்திருக்கிறது. நண்பியின் பக்கத்தை அவர்தான் சொல்ல வேண்டும். யார் கண்டார்? எல்லா இடமும் உங்களை தொடர்ந்து வந்தவர், யாழிற்கும் வந்து ஒரு நாள் எழுதக் கூடும்.

நான் இக்கதையை உங்களுக்கு மட்டுமாகவோ அல்லது ஒரு கதையாகவோ நினைத்து
எழுதவில்லை. சில வேளை அவள் கூட யாழில் இருக்கலாம், வாசிக்கலாம் என்ற ஒரு
நப்பாசையிலும் தான் எழுதினேன். மடியில் கனம் இருந்தால் தானே பயம்
வரும் சபேசன். நான் என்பார்வையில் தானே உண்மைச் சம்பவத்தை எழுத முடியும்.
 கற்பனை கலந்து எழுதியிருந்தால் நல்ல கதையா இருந்திருக்குமோ என்னவோ.

வீட்டிலை பெரியவர்கள் இருக்கமாட்டார்கள் என்று தெரிந்தும்

தொலைபேசியில் சிறியோரிடம் வலைவீசி விடுப்புகள் அறிவதில்

பெண்கள் வல்லவர்கள். :D

தளராமல் கதையைக் கொண்டுசென்று முடித்ததற்கு நன்றிகள்

நான் அப்படிச் செய்வதில்லை வாத்தியார். :lol: 

சுமோ அக்கா, 

உங்கள் நண்பிக்கு, நீங்கள் யாழில் பிரபல எழுத்தாளர்களில் ஒருவர் என்று அறிவித்து விடுங்கோ. அவ விழுந்தடித்து  ஓடி வந்து எழுத,  நாங்கள்  நிறைய கதை வாசிக்கலாம். :D

கற்பனை கலந்து எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் உண்மைச் சம்பவங்கள் பற்றியும் இரண்டு பார்வைகள் இருக்கும். இதே கதையை உங்கள் நண்பி எழுதுகின்ற பொழுது, அது வேறொரு வகையில் அமையும்.

உதாரணமாக:

நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் நண்பிக்கு அதை சொல்வதாக எழுதியிருக்கிறீர்கள். அதை நட்பின் தன்மையாக சொல்கிறீர்கள்.

இதை செயலை உங்கள் நண்பி இப்படி எழுதக் கூடும். "அவளுக்கு என்னைப் பற்றி எப்பொழுதுமே ஒரு இளக்காரம் இருக்கும். தான் அதை செய்தேன், இதை செய்தேன் என்று சொல்லி என்னுடைய இயலாமையை குத்திக் காட்டிக் கொண்டே இருப்பாள்."

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்கா, 

உங்கள் நண்பிக்கு, நீங்கள் யாழில் பிரபல எழுத்தாளர்களில் ஒருவர் என்று அறிவித்து விடுங்கோ. அவ விழுந்தடித்து  ஓடி வந்து எழுத,  நாங்கள்  நிறைய கதை வாசிக்கலாம். :D

கதை கேக்கிற ஆசையில நல்லாத்தான் சொல்லுறியள் நீதிமதி. நன்றி. ஆனால் யாழின்

பிரபல எழுத்தாளர் என்றது கொஞ்சம் ஓவர். யாழின் பிரபலஎழுத்தாளர்கள் கோவிக்கப் போயினம். :D :D

கதை கேக்கிற ஆசையில நல்லாத்தான் சொல்லுறியள் நீதிமதி. நன்றி. ஆனால் யாழின்

பிரபல எழுத்தாளர் என்றது கொஞ்சம் ஓவர். யாழின் பிரபலஎழுத்தாளர்கள் கோவிக்கப் போயினம். :D :D

நான் அப்படித்தான்  சொல்வேன். ஏனென்றால்,1. உண்மைதானே :lol: , 2. எனக்கு உங்கள் எழுத்துகள் பிடிக்கும் :) , . 3. வேம்படி அக்கா என்றால் சபோர்ட் பண்ணதானே வேணும்   :rolleyes:  

நன்றி யாயினி எழுத்துப் பிழை திருத்தப்பட்டுள்ளது.

சாத்திரி, உங்களை நான் IBC வானொலியைக் கேளுங்கோ என்று கரைச்சல் கொடுத்த மாதிரி எல்லோ கிடக்கு உங்கள் கதையைப் பாத்தால். :D :D

கோமகன் நீங்கள் வடிவாகக் கதையை உள்வாங்கவில்லை என்று தெரிகிறது. நான்

மூன்று மாதங்கள்தான் தொடர்ந்து அவளுடன் கதைக்கவில்லை. அதற்குமுன் நான்

கதைத்த போது அவள் கற்பமாக இருந்துள்ளாள். அது பற்றி அவள் எனக்கு முன்பு

கதைத்தபோதும் கூறவில்லை. குழந்தை பிறந்த  பின்னும் கூறவில்லை. மற்றைய

விடயங்களை விடுங்கள். ஒரு உயிர் இவ்வுலகத்திற்கு வந்துள்ளது. அதைக் கூறாது

விடுபவள் எப்படி ஒரு நண்பியாக இருக்க முடியும்????

நான் இக்கதையை உங்களுக்கு மட்டுமாகவோ அல்லது ஒரு கதையாகவோ நினைத்து

எழுதவில்லை. சில வேளை அவள் கூட யாழில் இருக்கலாம், வாசிக்கலாம் என்ற ஒரு

நப்பாசையிலும் தான் எழுதினேன். மடியில் கனம் இருந்தால் தானே பயம்

வரும் சபேசன். நான் என்பார்வையில் தானே உண்மைச் சம்பவத்தை எழுத முடியும்.

 கற்பனை கலந்து எழுதியிருந்தால் நல்ல கதையா இருந்திருக்குமோ என்னவோ.

நான் அப்படிச் செய்வதில்லை வாத்தியார். :lol: 

உங்கள் கதையை சரியாக உள்வாங்கி இருந்ததால்தான் நான் அப்பிடி ஒரு விமர்சனத்தை வைக்கவேண்டி வைத்தது . உங்கள் நண்பி கற்பமாக இருந்த விடையம் . உங்கள் தொடரில் ஏற்கனவே சொல்லாமல் விட்டதும் ஒரு பிழை :D :D .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 வேம்படி அக்கா என்றால் சபோர்ட் பண்ணதானே வேணும்   :rolleyes:  

நீதிமதி நீங்களும் வேம்படிக் குருவி என்றதை நான் மறந்து போனன். :D
 
Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

கோமகன்!

கற்பமாக இருந்தது பற்றி உங்கள் புரிதல் தவறானது என்று நினைக்கிறேன். கதையாசிரியருக்கு தன்னுடைய நண்பி கற்பமாக இருந்த விடயம் குழந்தை பிறந்த பின்பே தெரிய வருகிறது. ஆகவே அதை அவர் முதலிலேயே குறிப்பிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களின் நட்பு வித்தியாசமானது.....ஒரு போத்தலுடன் சரி....கதைக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா , யதார்த்தத்தை  நன்றாக எழுதியுள்ளீர்கள் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.