Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் களத்தில் ஓர் தசாப்தம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இந்த சமயத்தில் இந்தப் பாட்டை நெடுக்ஸ் அண்ணாவுக்கு டெடிகேட் பண்ணுறன்... :D

 

 

  • Replies 60
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்ஸ்


பத்து வருடங்கள் என்பது அதுவும் ஒரு களத்தில் மற்றவர்களுடன்

கருத்தாடி நிலைத்திருப்பது என்பது மிகக் கடினமான விடயம்.

 

அதைவிட அதிகமாகப்  பெண்களைப் பற்றிக் கடுமையாக விவாதிக்கும்

நீங்கள் அந்தப் பெண்களிடையே அதிக மதிப்பையும் பெற்றிருக்கின்றீர்கள் :D


 

வாழ்த்துகள்

 

வாழ்த்துகள் நெடுக்கு.

 

யாழில் பத்தாண்டுகளாக தொடர்கின்றீர்கள் என்பதை குறிக்கும் ஒரு திரியாக இதனை முதலில் கவனிக்கவில்ல. ஒரு கவிதைத் திரி என்றே நினைத்து,கவிதைகளை வாசிக்கும் மனநிலை எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை என்பதால் கடந்து சென்று இருந்தேன்.

 

பத்தாண்டுகளில் நீங்கள் எழுதிக் குவித்த எழுத்துக்கள் மலைகளையும் விஞ்சி இருக்கும் என்று நினைக்கின்றேன். உங்களின் அரசியல் மற்றும் பல விடயங்களில் எனக்கு பல முரண்பாடுகள் இருந்தாலும் யாழின் வளர்ச்சியிலும் வாழ்விலும் நீங்களும் ஒரு முக்கிய அங்கம் என்பதை மறுக்கமுடியாது. யாழில் மேல் அன்பும் நன்றியும் வைத்துள்ள ஒரு அருமையான உறவு நீங்கள்.

 

உங்கள் ஆசைப்படி உங்கள் வாழ்க்கை அமைய என் வாழ்த்துகள் நெடுக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்: நன்றி உங்கள் பாடல் பகிர்விற்கு. ஒரு காலத்தில் எல்லோரையும் கவர்ந்திருந்த பாடல்.

 

வாத்தியார்: பெண்களோ.. ஆண்களோ.. எந்த விடயம் ஆனாலும்.. என்னால் தரக்கூடிய ஆதாரங்களோடு.. கருத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். பெண்கள் ஆண்கள் என்ற பிரிவினைக்காக அல்ல. தப்புக்கள் இரு தரப்பிலும் உள்ளது. பிரச்சனைகள்.. தீர்வுகள் இருதரப்புக்கும் உள்ளன.. தேவைப்படுகின்றன..! இரு தரப்பும் மனித சமூகத்தின் கூறுகள். ஒருவரின் வீழ்ச்சிக்கு மற்றவர் தான்.. காரணம்.. ஆதிக்கம் என்ற பார்வையில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் இரு தரப்பும் ஆதிக்கம் செய்யக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. அடங்கிப் போகும் நிலையும் உள்ளது. எனவே மனித சமூகத்தின் அடிப்படை அமைப்பியலில் இருந்து நவீன தேவைப்பாடுகளோடு.. ஆண் பெண் பாலினத்துவத்தின் தேவைகளுக்கான பூரணப்படுத்தல்..சமத்துவம் அடையப்பெற வேண்டுமே தவிர.. ஆணை அடக்கி அல்லது கட்டுப்படுத்தி.. பெண்ணை உயர்த்துவதோ.. ஆணை உயர்த்தி பெண்ணை அடக்குவதோ அல்லது கட்டுப்படுத்துவதோ.. உருப்படியான சமூகவியல் ( உயிரியற் சமனிலை அல்ல. அதை ஈட்டுவது சாத்தியப்படாது.) சமத்துவத்தை தராது.. ஆண் - பெண் பிரச்சனைகளுக்கு தீர்வாகாது..!

 

பெண்கள் என்னை மதிக்கினமோ இல்லையோன்னு எனக்குத் தெரியாது. ஆனால் பொதுத்தளத்தில் எதிர்பார்க்கின்ற ஒழுக்கத்தை மதிப்பை.. காட்டுக்கிறார்கள்.. தருகிறார்கள்..! அதற்காக யாழ் களத்தில்.. ஆண்கள் அப்படி இல்லை என்றில்லை. அவர்களும் பெண்களுக்கு நிகராக ஏன் கொஞ்சம் அதிகமாவே மதிப்பும் மரியாதையும் அளிக்கின்றனர். ஒரு சில சந்தர்ப்பங்களைத் தவிர..!

 

நன்றி வாத்தியார் தங்கள் கருத்திற்கு.

 

நிழலி: இயக்கவியலும்.. முரண்பாட்டியலும் இல்லையேல்.. மாற்றம் இருக்காது..! ஆக்கபூர்வமான ஆதாரபூர்வமான முரண்பாட்டை நான் மதிக்கிறேன். வரவேற்கிறேன்..! நன்றி உங்கள் கருத்துக்கு..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வணக்கம் நெடுக்கர்!யாழ்களத்தின் மூலம் உங்களின் பல மேடைகளை கண்டவன் நானும் என்ற வகையில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நல்லதோ கெட்டதோ உங்களின் வாதாடும் திறமை என்னை பிரமிக்க வைத்தது. சிறந்த எழுத்தாற்றல் இருந்தும் தான்பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என இன்றுவரை ஒரு விட்டுக்கொடுப்பின்மை பல இடங்களில் வேதனையை தந்தது. அதற்கும் ஒரு திறமை வேண்டும். அதுவும் உங்களிடம் இருக்கின்றது. அதிவேகமாக எழுதுகின்றீர்கள். ஒரு விடயத்தை சிந்தித்து வேகமாக எழுதுவதென்பதும் சிரமமான விடயம்.அந்த வகையிலும் உங்களுக்கு மீண்டுமொருமுறை என் வாழ்த்துக்கள்.
 
உங்கள் சிந்தனையும்,அறிவும் ,விவேகமும் தமிழர்களுக்கு பயன்பட வேண்டும். :)
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நெடுக்கர்! யாழ்களத்தின் மூலம் உங்களின் பல மேடைகளை கண்டவன் நானும் என்ற வகையில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். நல்லதோ கெட்டதோ உங்களின் வாதாடும் திறமை என்னை பிரமிக்க வைத்தது. சிறந்த எழுத்தாற்றல் இருந்தும் தான்பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான் என இன்றுவரை ஒரு விட்டுக்கொடுப்பின்மை பல இடங்களில் வேதனையை தந்தது. அதற்கும் ஒரு திறமை வேண்டும். அதுவும் உங்களிடம் இருக்கின்றது. அதிவேகமாக எழுதுகின்றீர்கள். ஒரு விடயத்தை சிந்தித்து வேகமாக எழுதுவதென்பதும் சிரமமான விடயம்.அந்த வகையிலும் உங்களுக்கு மீண்டுமொருமுறை என் வாழ்த்துக்கள்.
 
உங்கள் சிந்தனையும்,அறிவும் ,விவேகமும் தமிழர்களுக்கு பயன்பட வேண்டும். :)

 

நான் யாழில் அதிகம் கனம் பண்ணும் உறவுகளில் நீங்களும் ஒருவர்.

 

தேவையற்ற இடத்தில் விட்டுக்கொடுப்பு என்பது ஆபத்தானது. அங்கு முயலுக்கு முக்கால் கால் என்று நிற்பதே நன்மை என்றால் அப்படியே நிற்பதே மேல். எமது போராட்டமும் இதற்கு ஒரு பாடம்...!

 

அதேவேளை விட்டுக்கொடுப்பால் ஒரு நன்மை என்றால் அதனைச் செய்ய பின்நிற்கவும் கூடாது. இதுவே என் நிலைப்பாடு..!

 

நன்றி உங்கள் வாழ்த்துக்கும் கருத்திற்கும் கு.சாண்ணா. :)

வாழ்த்துக்கள் நெடுக்கு.. கலியாணம் கட்டிப்போடாதையுங்கோ, கட்டினா வாற மனைவி யாழில மினக்கிட விட மாட்டா. இப்படியே பிரமச்சாரியா இருந்து கொள்ளுங்கோ...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்கு.. கலியாணம் கட்டிப்போடாதையுங்கோ, கட்டினா வாற மனைவி யாழில மினக்கிட விட மாட்டா. இப்படியே பிரமச்சாரியா இருந்து கொள்ளுங்கோ...

 

எங்கட பிரைவேசிக்க தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களில்.. பெற்றோரே தலைப்போடுறதில்ல.. எவவோ வந்து தலைப்போட.. மூக்கை நுழைக்க விடுவமாக்கும்...! :lol:

 

வாழ்த்துக்கு நன்றி யாழ்கவி அக்கா. :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ் அண்ணா.இன்றுதான் பார்த்தேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல பத்துக்கள் தாண்டிப்போக வாழ்த்துக்கள் 

வாழ்த்துக்கள் நெடுக்கர்.

உங்கள் விவாதத் திறமையும் எழுதும் வேகமும் வியக்க வைக்கிறது. பல துறைகளிலும் நிறைய அறிவாற்றல் உடையவர். முன்பு இங்கு பலதரப்பட்ட விவாதங்கள் நடக்கும். தனியே ஒரே நேரத்தில் பலருடன் விவாதிப்பீர்கள். ஆயுதப் போராட்டத் தோல்விக்குப் பின் பலர் வருவதில்லை. விவாதக் கருத்தாடல்களும் குறைந்து விட்டது.

 

தற்செயலாக விவாதத்தில் உங்கள் கருத்தில் பின்னடைவு வந்தால்,  மிகச் சாதூர்யமாக எதிராளியை திசை திருப்புவீர்கள். :D 
 

வழக்கறிஞராக வந்திருந்ததால் உச்ச நிலையை அறிந்திருப்பீர்கள் என்பது எனது தனிப்பட்ட கணிப்பு.

பத்து வருடங்களாக பல புதிய பதிவுகள் வாயிலாகவும் பின்னூட்டங்கள் ஊடாகவும் யாழ் களத்திற்குப் பங்களிப்புச் செய்து வரும் நெடுக்கிற்கு வாழ்த்துக்கள்.

 

குறிப்பாக அறிவியல் விடயங்களை தமிழ் மொழி மூலமான ஆக்கங்களாக தருபவர்கள் ஒரு சிலரே. அந்த வகையில் உங்கள் பங்களிப்பு யாழிற்கு அவசியம்....

 

  • கருத்துக்கள உறவுகள்
நெடுக்கரின்ட‌ பெரும்பாலான கருத்துக்களோடு எனக்கு உட‌ன்பாடு இல்லை...ஆனாலும் எனக்கு பிடித்த கருத்த‌ளாரில் டொப் டென்னில் நெடுக்கருக்கு இட‌ம் உண்டு...விரைவாக சிந்திந்து,விரைவாக எழுதினாலும் பெரும்பாலாலன அவர‌து கருத்துக்கள் எடிட் பண்ணி பார்க்க  அரியண்ட‌மாக இருக்கும்...தான் சொல்ல வாற கருத்து பிழை என்று தெரிந்தும் அதை சரியென்ட‌ மாதிரி எழுதக் கூடிய தைரியம் இவருக்கு உண்டு...அதை விட‌ தப்பிலி சொன்ன மாதிரி தலைப்பை திசை திருப்புதல்,திரியை திசை திருப்பி போட்டு பழியை மற்றவர் மேல் போடுதல் போன்ற பல நல்ல குணங்கள் இவரிட‌முண்டு...எது எப்படி இருந்தாலும் சீக்கிர‌மாக கல்யாணத்தை கட்டி ஒரு அன்பான கணவனாய்,பொறுப்புள்ள அப்பாவாய் யாழில் எப்படி எழுதுவார் என்று பார்க்க ஆசை :D

பத்து வருடமா? வாழ்த்துகள் நெடுக்ஸ் அண்ணா. :)  உண்மையில் வேலைக்கு செல்பவர்களை விட படிப்பவர்கள் தான் நேரம் செலவழித்து எழுதுவது கடினம். அப்படி இருந்தும் நீங்கள் அதிகளவு கருத்துகள் பகிர்ந்து கொள்வது ஆச்சர்யமாக இருக்கும். :rolleyes:

பெண்கள் விடயமாக நான் கூட பல தடவைகள் உங்களுடன் விவாதித்திருக்கிறேன். முரண்பட்டிருக்கிறேன். ஆனாலும் வாத்தியார் அண்ணா சொன்னது போல் யாழ்கள பெண்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். :) அதே போல் புலம்பெயர் அகதிகளை பற்றி நீங்கள் எழுதுபவை பலவற்றுக்கு எதிராக கருத்து எழுதியிருக்கிறேன். (இப்பொழுது பார்க்கும் போது நீங்கள் சொன்னவற்றில் பல சரி என்பது போலும் இருக்கிறது :icon_idea:) ஆனால் அந்த முரண்பாடுகளை அந்த அந்த திரியுடன் விட்டிட்டு போய்விடும் குணமுள்ளவர். ஒரு திரியில் முரண்பட்டவுடன் எதிரி என்ற கணக்கில் நோக்குபவர் அல்ல. அது கூட உங்களில் எனக்கு பிடித்த விடயம். :)
 

உங்களுக்கேற்ற பெண்ணை எங்காவது தேடி பிடித்து விரைவில் கல்யாணம் செய்யுங்கள். :) உங்கள் தமிழீழம் தொடர்பான பதிவுகள், சேவைகள் தொடரட்டும். :)

  • கருத்துக்கள உறவுகள்

 

 

உங்களுக்கேற்ற பெண்ணை எங்காவது தேடி பிடித்து விரைவில் கல்யாணம் செய்யுங்கள். :)

 

இதன் உட்கருத்து: நீங்கள் நல்லாயிருக்கிறது பிடிக்கேல்லை.. :lol:

 

இதன் உட்கருத்து: நீங்கள் நல்லாயிருக்கிறது பிடிக்கேல்லை.. :lol:

 

இப்பிடி அவர் சொல்லி விடுவார் என்று நினைத்து தான் முன்னேற்பாடாக அவருக்கேற்ற பெண்ணை தேடி பிடித்து கல்யாணம் செய்ய சொன்னேன். :icon_idea:  அவருக்கு எப்படிப்பட்ட பெண்ணை பிடிக்கும் என்று கூட ஒருதடவை எழுதியிருந்தார். அவர் எழுதியதில் 100% உம் பொருந்தக்கூடிய பெண் என்றால் உலகத்தில் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். :lol:

ஆனால் அவர் முக்கியமாக எதிர்பார்ப்பது புரிந்துணர்வுடன் கூடிய விட்டுக்கொடுப்புள்ள தனது படிப்பை, அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது புரிந்து கொள்ளத்தக்க அறிவுடைய நல்லது கூடாததை சொல்லக்கூடிய பெண்.... :D இப்படி ஒரு பெண் வேண்டுமென்றால் அவரது படிப்புடன் தொடர்புடைய படிப்பு படிக்கும் பெண்களுக்குள் தான் தேடுதல் வேட்டை நடத்த வேண்டும். :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரன்: நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும். :)

 

லியோ: முன்னர் போல இப்போ உங்களை அதிகம் காணக் கிடைப்பதில்லை. ஏனோ ?! நன்றி உங்கள் கருத்திற்கு. :)

 

தப்பிலி: பாசிட்டிவ்.. நேகரிவ் இரண்டையும் சாதுரியமா.. மனம்.. குணம் நோகா படிக்கு.. கலந்தடிச்சிருக்கீங்க. நன்றி தப்பிலி..! :lol:

 

மணிவாசகன்: தமிழ் அறிவியல் உலகம் வளரனும் விரியனுன்னு விரும்பிறவங்க தான் இருக்காங்க.. செயற்படுறவங்க இன்னும் போதிய அளவில் இல்லை. எங்கள் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று இப்பவும் சொல்லுறவங்க இருக்காங்க.. அதனை அறிவியல் பேசும் மொழியாகவும் ஆக்கனும். இலக்கியமும்.. வரலாறும் மட்டும் போதிக்கும் மொழி என்ற ஒரு எண்ணப்பாடு தமிழ் மொழிக் கல்வி பெறுவோர் மத்தியில் விதைக்கப்படுவதை மாற்றனுன்னா.. அறிவியல் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளுக்கு ஈடா தமிழில் சுடச் சுட வரணும்..! சீனர்கள் சீன மொழியிலும் ஜப்பானியர்கள் ஜப்பானிய மொழியிலும் ஜேர்மனியர்கள் ஜேர்மன் மொழியிலும் அறிவியலை தரும் போது ஏன் நாம் கொடுக்கக் கூடாது. முடியும்.  தமிழ் ஆர்வலர்கள் அறிவியலாளர்கள்..  அதனை திட்டமிட்டு செயற்படுத்தினால் நன்று. முயற்சிப்பாங்களான்னு பார்ப்போம். :icon_idea:

 

நன்றி மணிவாசகன் தங்கள் கருத்திற்கும் வருகைக்கும். :)

 

ரதி அக்கா: நான் தனி மதிப்பும் மரியாதையும் வைச்சிருக்கிற அக்காக்களில் நீங்களும் ஒருவர். உங்களோடு.. சண்டை பிடிச்சாலும்.. மரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன்.

 

நீங்கள் சொல்வது போல.. எடிட் பண்ணுவது பெரிசாத் தெரிவது.. எனக்கும் மனசுக்கு தங்கடமானதாகவே உள்ளது. எழுத்துப் பிழைகள்.. கருத்துப் பிழைகள் அதிகம் தவிர்க்கப்பட வேண்டும்.. தெரிந்து கொண்டே அவற்றை விடக் கூடாது என்ற ஒரு எண்ணப்பாடு தான் திருத்தங்களுக்கு அதிக காரணம். எடிட் பண்ணுவதை சிறிசா.. அழகான மங்கல் நிற எழுத்தில் போட்டால் நன்றாக இருக்கும். அதற்கு முன்னால் வரும்.. ஆச்சரியக் குறையை நீக்கினாலும் நல்லது. நிர்வாகம் கவனிச்சு ஏதேனும் செய்யுங்களேன். :)

 

துளசி: முரண்பாடுகள் இருந்தால் தான் விளக்கங்களை தேட முடியும். அதற்காக சதா முரண்பட்டுக் கொண்டிருக்கவும் கூடாது. முரண்பட வேண்டிய காரணங்கள் தேவைகள் இருந்தால் முரண்படுவதில் தப்பில்லைத் தானே.

 

எனக்கு யாழில் உள்ளவர்கள் எல்லோரும் சக கள உறவுகளே. கருத்தாளர்கள் எவர் மீதும் தனிப்பட்ட கோப தாபம் இல்லை. சில கருத்துப் பகிர்வுகளில் அது.. வந்தாலும் அது நீண்டு நிலைப்பதில்லை. ஆனால் கருத்துக்களத்தில்.. அநாகரிகமாக நடந்து கொள்பவர்களை அவ்வளவு சுலபமாக மறந்து விடுவதில்லை. அது தான் எனக்குள்ள ஒரு சின்னப் பிரச்சனை..! :)

 

இசைக்கலைஞன்: ம்ம்.. நீங்க அனுபவசாலி சொல்லேக்க நம்பித்தானே ஆகனும்..! :lol:

 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 ஆனால் அவர் முக்கியமாக எதிர்பார்ப்பது புரிந்துணர்வுடன் கூடிய விட்டுக்கொடுப்புள்ள தனது படிப்பை, அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் போது புரிந்து கொள்ளத்தக்க அறிவுடைய நல்லது கூடாததை சொல்லக்கூடிய பெண்.... :D இப்படி ஒரு பெண் வேண்டுமென்றால் அவரது படிப்புடன் தொடர்புடைய படிப்பு படிக்கும் பெண்களுக்குள் தான் தேடுதல் வேட்டை நடத்த வேண்டும். :icon_idea:

 

என்னில் உள்ள பிரச்சனை.. எழுதிற அளவிற்கு ஆட்களோடு நெருங்கிக் கதைக்கப் போறதில்லை. காரணம்.. கதைக்கிற கதை.. நமக்குப் பிடிக்கல்லைன்னா.. பிடிக்கல்லைன்னு சொல்லிட்டு விலகி வந்திடுவம். இல்ல.. மெளனமாகி.. இடத்தை விட்டு கழன்றிடுவம். நான் மிகவும் சென்சிற்றிவ். மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சி இல்லைன்னா அது.. எளிதில் மனம் நோகடிக்கச் செய்து விடும். என் முன் தோன்றுபவர் எனக்கு இயல்போடு.. அழகா.. மலர்ச்சியோடு.. மகிழ்வோடு.. தெரிந்தால் தான் கதைக்கப் பிடிக்கும். அழகா இருந்தாலும்.. இயல்பின்றி.. கடுகதியில.. பேசுறவையை எல்லாம்.. பிடிக்காது. மேலும்.. நேரில் ஆக்களோடு.. விசயத்துக்கு அப்பால்.. அதிகம் கதைக்கவும் பிடிப்பதில்லை. அது ஆக்களுக்கு பொதுவாகப் பிடிக்காது..! இதில தேடுதல் வேட்டை போட்டு.. என்னாகப் போகுது..!

 

எனக்கு இந்த விடயத்தில் நம்பிக்கை இல்லை. ஏதாவது அதிசயமாக..  எதேட்சையா நடந்தால் ஒழிய..! :lol::icon_idea:

 

Edited by nedukkalapoovan

என்னில் உள்ள பிரச்சனை.. எழுதிற அளவிற்கு ஆட்களோடு நெருங்கிக் கதைக்கப் போறதில்லை. காரணம்.. கதைக்கிற கதை.. நமக்குப் பிடிக்கல்லைன்னா.. பிடிக்கல்லைன்னு சொல்லிட்டு விலகி வந்திடுவம். இல்ல.. மெளனமாகி.. இடத்தை விட்டு கழன்றிடுவம். நான் மிகவும் சென்சிற்றிவ். மற்றவர்களின் முகத்தில் மகிழ்ச்சி இல்லைன்னா அது.. எளிதில் மனம் நோகடிக்கச் செய்து விடும். என் முன் தோன்றுபவர் எனக்கு இயல்போடு.. அழகா.. மலர்ச்சியோடு.. மகிழ்வோடு.. தெரிந்தால் தான் கதைக்கப் பிடிக்கும். அழகா இருந்தாலும்.. இயல்பின்றி.. கடுகதியில.. பேசுறவையை எல்லாம்.. பிடிக்காது. மேலும்.. நேரில் ஆக்களோடு.. விசயத்துக்கு அப்பால்.. அதிகம் கதைக்கவும் பிடிப்பதில்லை. அது ஆக்களுக்கு பொதுவாகப் பிடிக்காது..! இதில தேடுதல் வேட்டை போட்டு.. என்னாகப் போகுது..!

எனக்கு இந்த விடயத்தில் நம்பிக்கை இல்லை. ஏதாவது அதிசயமாக..  எதேட்சையா நடந்தால் ஒழிய..! :lol::icon_idea:

 

தேடுங்கோ... தற்செயலா அதிசயமா யாராவது கிடைத்தால் உலகத்தில் எட்டாவது அதிசயம் அதுதான். :lol:  யாழ்களத்தில் தமிழ்சிறி அண்ணா தலைமையில் நாங்களும் கொண்டாடுவம். :icon_idea:

 

அது பகிடிக்காக இருந்தாலும் இது உண்மை. :)  உங்கள் பல்கலைக்கழகத்தில் அல்லது உங்கள் படிப்புடன் சம்பந்தப்பட்டவர்களில் தேடுதல் வேட்டை நடத்துங்கோ... பிடித்திருந்தால் பழகுங்கோ..  உங்களுக்கு பிடித்த பெண் கிடைக்க வாழ்த்துகள். :rolleyes:  :)

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸை தள்ளி விடுவதில் பலர் குறியாக இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் கடந்த பத்தாண்டு காலமாக யாழுடன் இணைந்துகொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். :)

 

இன்னுமொரு விடயம் தனியப் படிப்பு மட்டும் வாழ்க்கையாகி விடக்கூடாது. நீங்கள் திருமணம் செய்து அந்த அனுபவங்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். சட்டுப்புட்டு என்டு ஒரு பெட்டையை பார்த்துக் கட்டுங்கோ. :)

 

Spoiler
ஒரே துறையில் இருக்கும் அல்லது அதிகம் படிச்ச பெட்டைகளைப் பார்க்க வேணாம். பிறகு வாழ்க்கையில் ஒரு சுவை இருக்காது. :)

 
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நெடுக்ஸ் உங்களை ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே பார்க்கிறேன்.

 

தொடர்ந்தும் பல படிகள் முன்னேறி ஆல மரமாகி தாய் மண்ணுக்கும் பிரயோசனமாக இருக்க வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துளசி: ஒரே துறையில் உள்ளவர்களை தெரிவு செய்வது ஆபத்து. எங்களிடம் இல்லாட்டிலும் அவர்களிடம் ஈகோவை  வரவைழக்க.. அது அதிகம் சாத்தியப்பாட்டை அளிக்கும். அதுமட்டுமன்றி அரைச்ச மாவையே அரைக்கும் நிலை. வாழ்க்கையில் பன்முகச் சுவை இருக்காது. சுவாரசியம் இருக்காது. ஒரே மாறுபடாத சூழலுக்குள் வாழ்க்கை சுழல நேரிடும். நமக்கு உதுகள் சரிப்பட்டு வராது.

 

வாழ்க்கைன்னா நாலு திரில் இருக்கனும். காலத்திற்கு ஏற்ப மாறுபடும் சூழலுக்கு ஏற்ப.. நினைச்சதை செய்யுற சுதந்திரம் இருக்கனும்..! என் தவறுகளை நானே திருத்திக்கிற நிலை இருக்கனும்..! என்னை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது. என் ரசனைக்கு நான் வாழனும்..! அடுத்தவர் ரசனையை ரசிக்கனும்..! என்னை மதிக்கனும்.. அப்ப தான் நான் அவர்களை மதிக்கிற மனநிலையில் இருப்பன். மற்றவர்களை முன்னிலைப்படுத்தி என்னை பின்னிலைப்படுத்தும்.. வாழ்க்கையில் எனக்கு பிடிப்பில்லை. சதா நிறைய அன்பு பொழியப்படனும். எங்கும் ஒரு சமனிலை.. இயங்கு நிலை இருக்கனும்.

 

சோம்பேறி வாழ்க்கை முறை சதா ஒரே வட்ட வாழ்கை முறை எனக்குப் பிடிப்பதில்லை. இப்படி நிறைய இருக்குது. குறிப்பாக தமிழ் பொண்ணுங்க..வாழ்க்கை முறை நமக்குச் சரி வராது..! அதேபோல் அதிக சுய கட்டுப்பாடற்ற.. சுய மனித ஒழுக்கமற்ற.. மற்றவங்க வாழ்க்கை முறையும் நமக்குச் சரிவராது.  இதெல்லாம் நாங்க எதிர்பார்க்கிறது போல.. ஒன்றா அமையுறது கஸ்டம். எங்களுக்கு அமையக் கூடியது ஒன்றே ஒன்று தான்.. self-design life..! :)

 

நுணா: தேவதையே வந்து முன்னுக்கு நின்று வா வா என்றாலும்.. ஒன்றுக்கு நாலு வாட்டி யோசிச்சுத்தான் முடிவு செய்வன்..! அந்தளவுக்கு இந்த விடயத்தில் நான் சுய எச்சரிக்கை அடைந்துள்ளேன். :):lol:

 

காவாலி: கார் விபத்து அனுபவம் வேண்டும் என்பதற்காக காரை மோதிப் பார்த்துக் கொள்ளலாமா காவாலி. இல்லை அல்லவா.. தேசாதரம் நமக்குத் தானே. அந்த வகையில் சில விசப் பரீட்சைகளுக்குள் நம்மை வலிந்து திணிக்கக் கூடாது. சிமூத்தா போக்கிட்டிருக்கிற வாழ்க்கையில எதுக்கு சூறாவளிகளை வரவழைச்சு பார்க்கனும்..! ஒரு தென்றல் வந்தால் போச்சுது. அதற்காக தென்றல் என்று சூறாவளியை வரவழைச்சிட்டா... அப்புறம் உள்ளதும் நாசமாகிடுமில்ல..! :D

 

ஈழப்பிரியன் அண்ணா: யாழில் எப்போதுமே எங்கள் மீது கருசணை காட்டும் அண்ணாக்களில் நீங்களும் ஒருவர். நிச்சயம் உங்கள் ஆலோசனைகள் எமக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும். நன்றி அண்ணா. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை கவிதைக்கு வாழ்த்துக்கள் நெடுக்காலை போவான் . நீங்கள் சொல்லிற விசையத்தை இழுக்காமல் சுருக்கமாய் சொன்னால் நல்லாய் இருக்கும் எண்டு நினைக்கிறன் . இப்ப பத்து எள்ளுபா சாப்பிடிற இடத்திலை ஒரு எள்ளுபா சாப்பிட்டால் இனிக்கும் . கூடசாப்பிட்டால் திகட்டுமெல்லோ ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கடை கவிதைக்கு வாழ்த்துக்கள் நெடுக்காலை போவான் . நீங்கள் சொல்லிற விசையத்தை இழுக்காமல் சுருக்கமாய் சொன்னால் நல்லாய் இருக்கும் எண்டு நினைக்கிறன் . இப்ப பத்து எள்ளுபா சாப்பிடிற இடத்திலை ஒரு எள்ளுபா சாப்பிட்டால் இனிக்கும் . கூடசாப்பிட்டால் திகட்டுமெல்லோ ??

 

கருத்துக்கு நன்றி மைத்திரேயி அக்கா.

 

பள்ளிக் காலத்தில்.. சுருக்கம்.. அறிக்கை இதுகளுக்கு தான் எனக்கு தமிழில் அதிகம் புள்ளி கிடைக்கிறது. யாழில் பொதுவாக சுருக்கமாக எழுத நினைத்தாலும் விலாவாரியா விளக்கி எழுதிறது மிஸ் அட்டன்ஸ்ராண்டிங்.. குறைக்க.. நல்லது என்பதால்.. அப்படி எழுதிறது. :)

 

மற்றும்படி உங்கள் அறிவுரையை கவனத்தில் கொள்கிறேன். :)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.