Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலச்சந்திரன்

Featured Replies

பிரபாகரன் மகன் கொடூர கொலை: புகைப்படங்களை வெளியிட்டது சேனல் 4

 

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களை, சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

 

 

ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், மணல் மூடைகளுக்கு நடுவே, சட்டை கூட அணியாமல் லுங்கியை போர்த்திக் கொண்டு காயங்களுடன் பரிதாபமாக, 12 வயதான பாலச்சந்திரன் அமர்ந்திருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது.

 

prabhakaran-son.png


2 வது படத்தில், பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற எதையோ சாப்பிடுகிறார். அதே கேமராவில் தான், பாலச்சந்திரன் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

முன்னதாக, பாலச்சந்திரனுக்கு பாதுகாப்பாக நின்றிருந்த விடுதலைப் புலிகள் ஐந்து பேர், கைகள் கட்டப்பட்டு, தலையில் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கின்றனர்.


நிர்கதியாக நின்ற பாலச்சந்திரனின் நெஞ்சில் ஐந்து துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன.

 

http://puthiyathalaimurai.tv/prabhakarans-son-killed-brutally-channel-4-reveals-photo-evidence

  • Replies 225
  • Views 30.6k
  • Created
  • Last Reply

ஒளிப்பதிவு இணைப்பிற்கு நன்றிகள் நுணா.

 

இது கடந்த வருட இணைப்பு  என்பதும் கவனிக்கத்தக்கது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனத்துப்போன மனது! .....எதையும் எழுத மனம் ஒப்பவில்லை! :(

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பச்சைப் பாலகன், என்ன பாவம் செய்தான். காட்டுமிராண்டிச் சிங்களவன்.

எப்படிதான் மனம் வந்ததோ, மனம் கனக்கின்றது. அனுப்பிவிட்டேன், நண்பர்களையும் கேட்டுள்ளேன்

அநேகமாக இது எல்லா இடமும் பரவியிருக்கும். இப்படியான ஆதாரங்களை வெளியிட்டாலும் சிறிலங்கா இன்னமும் அசைந்து கொடுக்காததிற்கு உலக நாடுகள்தான் பொறுப்பாளர்கள்.

பாலச்சந்திரன் சிறிலங்காப் படைகளால் படுகொலை; உறுதி செய்யும் ஒளிப்படங்கள்

 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படையினரால்  உயிருடன் பிடிக்கப்பட்டு பதுங்குகுழி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்ட பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தும் புதிய ஒளிப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


இந்த ஒளிப்படங்களை பிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு மற்றும் இந்தியாவின் ‘தி இந்து‘ நாளேடு என்பன வெளியிட்டுள்ளன. ‘சனல் 4‘ தொலைக்காட்சிக்கு கிடைத்த இந்த ஒளிப்படங்களை, ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ காணொலி ஆவணப்படங்களை இயக்கிய கல்லும் மக்ரே, இந்த ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார்.

ஒரே ஒளிப்படக்கருவியால், சில மணிநேரங்களுக்குள் எடுக்கப்பட்ட பல படங்களில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதான கடைசி மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா படைகளின் காவலில் பதுங்குகுழி ஒன்றில் உயிருடன் அமர்ந்திருக்கும் காட்சியும், சில மணி நேரங்களின் பின்னர், அவர் நெஞ்சில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

இந்த ஒளிப்படங்கள் 2009 மே மாதம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் எடுக்கப்பட்டவை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின மகன் பாலச்சந்திரன், மோதலில் அகப்பட்டே கொல்லப்பட்டதாக, சிறிலங்கா அதிகாரிகள் கூறிவந்துள்ளனர். ஆனால், ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் தரையிடப்படவுள்ள, ‘போர் தவிர்ப்பு வலயம்‘ ஆவணப்படத்துக்கு கிடைத்துள்ள புதிய ஒளிப்படங்கள், பாலச்சந்திரன், உயிருடன் பிடித்து வைக்கப்பட்டு, பின்னர் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்துகின்றன.

இறுதியாக எடுக்கப்பட்ட ஒளிப்படத்தை ஆராய்ந்த தடயவியல் நிபுணர்கள், பாலச்சந்திரன் நெஞ்சில் ஐந்து தடவைகள் சுடப்பட்டுள்ளதாகவும், அந்தக் காயங்களைச் சுற்றி எரிகாயம் உள்ளதால் அவர் மிக நெருக்கமாக வைத்தே சுடப்பட்டுள்ளார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

“சுடப்பட்ட துப்பாக்கியின் குழல் வாய், பாலச்சந்திரன் நெஞ்சுக்கு மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே இருந்துள்ளது. முதலாவது ரவை சுடப்பட்ட பின்னர், பின்புறமாக சாய்ந்து விழுந்த சிறுவன் மீது நான்கு தடவைகள் நெஞ்சில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் கண்களோ, கைகளோ கட்டப்பட்டிருந்த நிலையில் சுடப்பட்டதற்கான தடயங்கள் இல்லை.

ஆனால், அவரது மெய்க்காவலர்கள் கண் முன்பாகவே இந்தப் படுகொலை நிறைவேற்றப்பட்டிருக்கலாம்” என்று தடயவியல் ஆய்வு நிபுணர் பேராசிரியர் டெரிக் பவுண்டர் தெரிவித்துள்ளார்.

 


“புதிய ஒளிப்படங்கள் மிகமுக்கியமான ஆதாரங்கள்.

ஏனென்றால், பாலச்சந்திரன் மோதலில் அகப்பட்டே மரணமானதாக சிறிலங்கா அரசாங்கம் கூறுவதை நிராகரிப்பதற்கான ஆதாரம் அது. அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையும், அவருக்கு சாப்பிட நொறுக்குத்தீனி கொடுக்கப்பட்டுள்ளதையும், இரத்தத்தை உறைய வைக்கும் வகையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதையும் காட்டும் ஒளிப்படங்கள் இவை.” என்று கூறியுள்ளார் கல்லும் மக்ரே.

சிறிலங்கா அரச தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சடலத்தில், தலையின் முன்பக்கத்தில் ஒருபகுதியைக் காணவில்லை. அவரும் மிகநெருக்கமாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டிலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.

எனினும், சரணடைய முயற்சிக்கும்போது எவருமே கொல்லப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறிவந்தது.

இது குறித்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளரிடம் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு கேள்வி எழுப்பியதற்கு, “இவை பொய்கள், பாதி உண்மைகள்,வதந்திகள், ஊகங்கள்” என்று பதிலளித்துள்ளார்.

அதேவேளை, இந்த ஒளிப்படங்கள், சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரோனுக்கு மேலதிக அழுத்தங்களைக் கொடுத்துள்ளதாக ‘தி இன்டிபென்டிடென்ட்‘ குறிப்பிட்டுள்ளது.

 

http://onlineuthayan.com/News_More.php?id=210891846819510274

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கனக்கின்றது.காட்டுமிராண்டிச் சிங்களவன்.

ஐயோ! இது என்ன கொடுமை.

Very shocking.

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் கனக்கும் செய்தி.

 

சிறுவர் போராளிகள் என்று பதை பதைத்து மனித உரிமை பேசியோர் இன்று எங்கே போனார்கள்..??! யுனிசெப் இப்படியான சம்பவங்களைக் கண்டிக்காதது ஏன்..???! உண்மையில் யுனிசெப் ஐநாவின் உளவு ஏஜெண்டா.. மனிதாபிமான அமைப்பா..???!

 

இந்தப் பாதகங்களுக்கு சிங்களம் மட்டும் காரணமல்ல.. அதனை திட்டமிட்டு தப்பிக்க வைக்கும் சர்வதேசமும் முழுப் பொறுப்பாகும்..??! இந்த உலகில் ஆட்சியாளர்கள் எல்லோருமே மிகக் கொடுமையானவர்களாகவே உள்ளனர்..! மக்கள் தான் பாவம். வாக்குப் போட்டும் போடாமலும் சாகடிக்கப்படுகின்றனர். :(:rolleyes:

Edited by nedukkalapoovan

போர் வேண்டாம் சிங்களவனுடன் சமாதானம் செய்து கொள்ளலாம், என தமிழீழ விடுதலைபோருக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்த தமிழர்கள் இதற்கு பொறுப்பேற்கவேண்டும்..

விடுதலை போராட்டமும் விடுதலை உணர்வும் பிசுபிசுத்துப்போனதுக்கு முதல் காரணம் இந்த மாற்றுக்கருத்துகாறர்கள்தான்..

இவர்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இவ்வளவு அநியாயம் நடந்திருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நின்றொரு சபதம் எடுப்போம்

எல்லோரும் ஒற்றுமையாக நின்று இலட்சியம் நோக்கி  பயணிப்போம் என.

(சிங்களவனை இன்றுதான்  நாம் அறிந்து கொண்டோம் என்பது எம்மை நாமே மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல்)

 

 

 

போர் வேண்டாம் சிங்களவனுடன் சமாதானம் செய்து கொள்ளலாம், என தமிழீழ விடுதலைபோருக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்த தமிழர்கள் இதற்கு பொறுப்பேற்கவேண்டும்..

விடுதலை போராட்டமும் விடுதலை உணர்வும் பிசுபிசுத்துப்போனதுக்கு முதல் காரணம் இந்த மாற்றுக்கருத்துகாறர்கள்தான்..

இவர்கள் மட்டும் இல்லாமல் போயிருந்தால் இவ்வளவு அநியாயம் நடந்திருக்குமா?

 

 

எல்லோரையும் அரவணைப்போம்


 

எல்லோரது ஆலோசனையையும் ஏற்போம்


 

ஆயுதப்போரை மக்கள் போராட்டமாக மாற்றுவோம்


 

என்பதன் நிலையே இன்று நாம் நிற்கும் நிலை.


 

ஆனாலும் போகவேண்டும்.


 

இனியாவது உணர்ந்து திருந்தி மன்னித்து கை கோர்த்து இலட்சியம் நோக்கி  நகருவோம்.



 

Edited by விசுகு

பாலகனின் முகத்தில் பயம் கூட இல்லை. நம்ப வைத்துள்ளார்கள்.

ஒரு கையில் துப்பாக்கியையும் மறு கையில் ஐ நா வின் போர் கோட்பாட்டுப் புத்தகத்தையும் வைத்துக் கொண்டு மகிந்தவின் இராணுவம் செய்த போர் இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மனம் பதறுகிறது சொல்ல வார்த்தை இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 அது சமாதானக்காலம். நாங்கள் அண்ணையுடன்( தலைவர் ) ஒரு உரையாடலில் இருந்தோம். அண்ணையின் பாதுகாப்புப் போராளியூடாக ஒரு அவசரக்கடிதம் ஒன்று அண்ணையிடம் கொடுக்கப்பட்டது. அண்ணை 
அதை பிரித்துப்பார்த்தார் அது சிங்களத்தில் எழுதப்பட்டிருந்தது.அண்ணை 
இது என்ன என வினவி சிங்களம் வாசிக்கக்கூடிய ஒரு போராளி அழைக்கப்பட்டார்.
விடுதலைப்புலிகளால் போரில் கைது செய்யப்பட்ட பாதுகாப்புப்  படையினரை அவர்களின் உறவினர்கள் வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அந்தக்கடிதத்தை ஒரு எட்டு வயது பிள்ளை எமது தலைவருக்கு எழுதியிருந்தது.தனது தகப்பனை விடுதலை செய்யுமாறும் தான் தனது தகப்பனை மீண்டும் படையில் சேர விடமாட்டேன் என்று தனது குழந்தை மொழியில் எழுதியிருந்தது.வழமை போல அண்ணையின் கண்கள் உருண்டன.இப்ப எத்தின மணி இப்ப நீ போனி எண்டால் அந்த பஸ் வெளிக்கிடமுதல் போயிடுவியா? அந்த போராளி ஆம் என்றான். போய்
அந்த ஆமியை அந்த பிள்ளையின்ர கையில பிடிச்சு கொடுத்து அனுப்புற ஒழுங்கை செய் என்று அனுப்பி  வைத்தார். 
 எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அண்ணை ஒரு சொல்லுக்கூட அந்த ஆமி எப்படிப்பட்டவன்.அவனின் ராங் ( நிலை) என்ன என்று கேட்கவில்லை.      
  • கருத்துக்கள உறவுகள்
புகைப்படங்கள் உண்மையானவை அல்ல: அடியோடு மறுக்கிறார் இராணுவப் பேச்சாளர்

 

army.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோது கொலை செய்யப்பட்டதாக செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிரான சக்திகளின் திட்டமிட்ட செயற்பாடுகளின் ஓர் அங்கமே இதுவாகும்.அண்மைக்காலத்தில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை திகழ்கிறது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இலங்கையை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகிறார்கள்.

 

குறிப்பாக போலியான தகவல்களையும், வதந்திகளையும் திட்டமிட்ட வகையில் பரப்பி வருகிறார்கள். இலங்கை இராணுவத்துக்கு எதிராக இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது இது முதன்முறையல்ல.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித உண்மையான ஆதாரங்களும் இல்லை. நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஒழுங்குமுறையான நடைமுறைகள் உள்ளன.

அவ்வாறான சில குற்றச்செயல்களை குற்றவியல் விசாரணைத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. நம்பகமான ஆதாரங்களுடன் ஒத்துழைப்பு வழங்கினால் இதற்கு தீர்வு காணலாம்.

 

எனினும் போலியாக வெளியிடப்படும் இவ்வாறான புகைப்படங்கள் இணையத்தின் வாயிலாக இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் இராணுவ பாதுகாப்பில் இருப்பதாகவும் பின்னர் மரணமடைந்துள்ள நிலையில் இருப்பதாகவும் செனல்4 நிறுவனம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவை சர்வதேச ஊடகங்கள் பலவற்றில் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

முற்றும் துறந்தவன் முனிவன்

முழு உண்மைகளையும் மறுப்பவன் முட்டாள்

 

 அந்தவகையில் சிங்களம் தனக்காக ஆதரவு தருவோர்களை தன்னை விட்டு மெல்ல மெல்ல விலக வைக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


Thanks

 



clear.gifclear.gif
clear.gif
09:20


Antworten

 
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
An a.buncombe@independent.co.uk
 


Dear Andrew,





Sri Lankan state continued to commit crime against humanity since we,
the international community has failed to punish. Hopefully with stories
like these justice will be served!






Sincerely,



***

 

clear.gifclear.gif
clear.gif
09:19


Antworten

 
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
invis.gif krish jeeva jeeva au
  • invis.gif
     
     
     
  •  
  •  
  •  
An a.buncombe@independent.co.uk, sg@un.org
 





Dear Andrew,

 

I simply wanted thank you for exposing war crimes of Sri Lankan state!

 

Sincerely,
*****

அகூதா அண்ணா எழுதிய கடிதம் எல்லாம் குறித்த மின்னஞ்சல்களுக்கு அனுப்பி இருந்தேன்.

"நன்றி" என்ற பதில் வந்தது. இதை இதில் பதியக்காரணம் உறவுகளுக்கு உற்சாகம் தரவும்.

அகூதா அண்ணாக்கு நன்றி சொல்லவுமே.

  • கருத்துக்கள உறவுகள்

புகைப்படங்கள் உண்மையானவை அல்ல: அடியோடு மறுக்கிறார் இராணுவப் பேச்சாளர்

 

army.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோது கொலை செய்யப்பட்டதாக செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு எதிரான சக்திகளின் திட்டமிட்ட செயற்பாடுகளின் ஓர் அங்கமே இதுவாகும்.அண்மைக்காலத்தில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை திகழ்கிறது. இந்நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இலங்கையை பிளவுபடுத்தும் நோக்கில் செயற்பட்டு வருகிறார்கள்.

 

குறிப்பாக போலியான தகவல்களையும், வதந்திகளையும் திட்டமிட்ட வகையில் பரப்பி வருகிறார்கள். இலங்கை இராணுவத்துக்கு எதிராக இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது இது முதன்முறையல்ல.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு எவ்வித உண்மையான ஆதாரங்களும் இல்லை. நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான தகவல்கள் வெளியிடப்படுகின்றன. குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஒழுங்குமுறையான நடைமுறைகள் உள்ளன.

அவ்வாறான சில குற்றச்செயல்களை குற்றவியல் விசாரணைத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது. நம்பகமான ஆதாரங்களுடன் ஒத்துழைப்பு வழங்கினால் இதற்கு தீர்வு காணலாம்.

 

எனினும் போலியாக வெளியிடப்படும் இவ்வாறான புகைப்படங்கள் இணையத்தின் வாயிலாக இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் வெளியிடப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் இராணுவ பாதுகாப்பில் இருப்பதாகவும் பின்னர் மரணமடைந்துள்ள நிலையில் இருப்பதாகவும் செனல்4 நிறுவனம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இவை சர்வதேச ஊடகங்கள் பலவற்றில் வெளியாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

அன்றில் இருந்து இன்று வரை நீங்கள் சொல்வது பொய் என்று இப்ப இப்ப வெளி உலகத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாய் தெரிய வருது..ஒரு இனத்தையே அழிச்சுப் போட்டு உலகத்தில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த நாடாக இலங்கை திகழ்கிறதாம் இந்த விசுக்கோத்து சொல்லுது ...... காலம் காலமாய் சிங்களக் கூட்டம் பொய்யை தானே சொல்லி வருது...ஆனால் அப்ப எங்களிடம் சனல் 4 இல்லை சிங்களத்தின் போலி முகத்தை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டுறதுக்கு....பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சொல்லுவார்கள்...எங்களின் பொறுமைக்கு கிடைச்ச ஆறுதல் சனல்4... அந்த சிறுவனை விஸ்கேட் சாபிடக் குடுத்துட்டு இப்படி கொடூரமாகச் சுட்டுக் கொன்றுள்ளார்கள்..மனம் கனக்குது.....

கேலம் மக்ரெ செய்தியை / படத்தை இங்கிலாந்தில் வெளியிட்டதற்கு அடுத்து இந்தியாவில், த ஹிந்துவிற்கு, கட்டுரை மூலம் சமர்ப்பித்து அதுவும் வெளியாகியுள்ளது.

 

இது நிச்சயம் இந்தியாவில் உணர்வலைகளை தூண்டி இந்திய அரசை அதன் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவர உதவும்.


கேலம் மக்ரெ  அவர்களின் இராஜதந்திர நகர்விற்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.