Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய் சொல்லுவது சுகமோ ??சுமையோ ??

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய் சொல்லுவது சுகமோ ??சுமையோ ??

girl-lie415.jpg

வேலை இடத்திலோ , பொது இடத்திலோ , வீட்டிலோ ஒரு சிலர் கூசமல் பொய் சொல்கிறார்கள் . அதை அவர்கள் ஒரு சாதனையாகவும் எண்ணிக் கொள்கின்றார்கள் . நேற்று இரவு எனது கணவர் ஒரு பட்டிமன்றத்தில் லயித்தபடி இருந்தார் . நானும் அவருடன் சேர்ந்து பார்த்தேன் . அதன் தலைப்பு நடைமுறை வாழ்வில் பொய் சொல்வது சுகமா ??சுமையா ?? எனது கணவர் எப்பொழுதும் நீதி நேர்மைக்கு உயிரை விடுபவர் . இறுதியில் பொய் சொல்லலாம் என்று அந்த பட்டிமன்றம் முடிந்தது . எனது கணவருக்கு ஒரே கடுப்பு . நானும் யோசித்துப் பார்த்தேன் . பொய் சொல்பவர்களுக்குத் தான் இந்த உலகமா ?? நீதி நியாயம் எல்லாம் சும்மா பம்மாத்துக்குத் தானா ?? என்று பலவாறு யோசித்தேன் . எனக்கு ஒன்றுமே புரியவில்லை . எனது கணவரோ , நீங்கள் ஒரு பொய் சொல்ல வெளிக்கிட்டால் பின்பு நீங்கள் சொல்லவாற உண்மையையும் நம்பேலாது என்று சொல்லி விட்டுப் போய்விட்டார் . கள உறவுகளே உங்கள் கருத்துக்களை இதில் பதியுங்கள் . இந்தப்பதிவும் கருத்துக்களும் சிலவேளை படிப்பவர்களுக்கு உதவி செய்யலாம் .

மைத்திரேயி

19/02/2013

  • கருத்துக்கள உறவுகள்

பொய்களிலும் பலவகை உண்டு. பகிடிக்காகப் பொய் சொல்வது. மற்றவர் மனதைப் புண்படுத்தாது இருக்கப் பொய் சொல்வது. இப்பிடி...........ஆனாலும் பொய் சொன்னால் அந்தப் பொய்யை ஞாபகம் வைத்திருக்க வேண்டும். ஒரு பொய்யை மறைக்க மேலும் மேலும் பல பொய் சொல்ல வேண்டும். அதிலும் பார்க்க பொய் சொல்லாது இருப்பது தான் நல்லது. சிலர் தம்மை மறந்து பொய் சொல்லுவர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் காட்டிக் கொடுத்துவிடும். அப்போது அவர்கள் முகத்தில் வழியும் அசடைப் பார்க்க பாவமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான மனச்சாட்சி உள்ளவர்கள் பொய் சொனால் அந்த குடைச்சல் இருகிறதே அது    பொல்லாதது   நடை முறை வாழ்வை வாழ விடாது. மனதைக் குடைந்து கொண்டே இருக்கும்.  வேடிக்கைகாக பொய் சொனால் என்  சிரிப்பே என்னைக் கட்டிக் கொடுத்துவிடும். பொய் சொல்ல  பல முறை தயார் படுத்தத் வேண்டி  இருக்கும்.  சிலர் தாங்கள் தப்ப  பொய் சொல்வார்கள். பொய்யில் கட்டும் கோ புரம் மணல் வீடு போல  தகர்ந்து  விடும். பொய் சொல்லி பிடிபட்டால் பின்பு உண்மை சொன்னாலும் நம்ப மாடார்கள். பொய்க்கு ஆயிரம் சாட்சி  தேவை உண்மைக்கு ஒன்றே ஒன்றுதான். தேவை.

என்னைப் பொறுத்தவரை அடுத்தவரைப் பாதிக்காத பொய் பேசுவதில் தப்பில்லை என்று படுகிறது. குறிப்பாக ஒரு வீட்டுக்கு இரவு நேரத்தில் செல்ல வேண்டிய அவசியம். அங்கே அவதானித்ததில் உணவு இருப்பில் இல்லை. ஆனால் சாப்பிடுங்கள் என்று கேட்கிறார்கள். ஓம் என்று சொன்னால் இனித் தான் உணவு தயாரிக்க வேண்டும். அல்லது கடையில் சென்று வாங்க வேண்டும். இந்த இடத்தில் நான் சாப்பிட்டு விட்டுது தான் வந்தேன் என்று சொல்வது பொய்யென்றாலும் அதுவே சரியான வழியாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மனம் என்பது, உடலை இயக்கும் விசை!

ஒருவர் பொய் சொல்லும்போது, அவர்களது உடலின் மாற்றங்கள், கண், போன்றவை ஒத்துழைக்க மறுக்கும்!

எனவே பொய் கூறுவதென்பது, இயற்கைக்கு ஒவ்வாதது!

பொய்யில் நல்லது, கூடாதது என்று ஒன்று இல்லை! :o

முதல் முறை பொய் சொல்லும்போது, உனது மனச்சாட்சி உன்னைக் கடுமையாக எச்சரிக்கும்!

இரண்டாம் முறை, மெதுவாக எச்சரிக்கும்!

மூன்றாவது தடவை, மனச்சாட்சி மௌனமாகி விடும்!

     - மகாத்மா காந்தி 

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை வடிவா யோசித்துச் சொல்லுங்கள். நீங்கள் பொய்யே சொன்னதில்லையா????? இல்லை  உங்கள் பதில் எனில் நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று அர்த்தம். :lol: :lol:

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை வடிவா யோசித்துச் சொல்லுங்கள். நீங்கள் பொய்யே சொன்னதில்லையா????? இல்லை  உங்கள் பதில் எனில் நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று அர்த்தம். :lol: :lol:

நான் அரிச்சந்திரனில்லை, சுமோ! :o

கூடியவரைக்கும் அரிச்சந்திரனாக வாழ முயல்பவன் மட்டுமே!

$500K  வரைக்கும் பணத்தைக் கணக்கில் விட்டுவிட்டு, வங்கியின் 'கடவுச்சொல்லையும்; தந்து விட்டு முதலாளி, இரண்டுவாரம் விடுமுறையில் போவான் என்றால் பாருங்களேன்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு ஒரு பிர‌ண்ட் இருக்கிறான் அவன் பொய் சொல்லேக்குள்ள இடையில கொஞ்ச‌ம் உண்மையையும் கலந்து தான் சொல்வான்...எது உண்மை? எது பொய் என கண்டு பிடிக்கிறது கஸ்ட‌ம் :lol:

எனக்கு ஒரு பிர‌ண்ட் இருக்கிறான் அவன் பொய் சொல்லேக்குள்ள இடையில கொஞ்ச‌ம் உண்மையையும் கலந்து தான் சொல்வான்...எது உண்மை? எது பொய் என கண்டு பிடிக்கிறது கஸ்ட‌ம் :lol:

இப்படிஒரு பொய் சொல்லுற ப்ரெண்டை வசிருக்கிறியல்.அப்ப நீங்களும் நல்லா பொய் சொல்லுவியல் போல அக்கா. :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொய்களிலும் பலவகை உண்டு. பகிடிக்காகப் பொய் சொல்வது. மற்றவர் மனதைப் புண்படுத்தாது இருக்கப் பொய் சொல்வது. இப்பிடி...........ஆனாலும் பொய் சொன்னால் அந்தப் பொய்யை ஞாபகம் வைத்திருக்க வேண்டும். ஒரு பொய்யை மறைக்க மேலும் மேலும் பல பொய் சொல்ல வேண்டும். அதிலும் பார்க்க பொய் சொல்லாது இருப்பது தான் நல்லது. சிலர் தம்மை மறந்து பொய் சொல்லுவர். அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் காட்டிக் கொடுத்துவிடும். அப்போது அவர்கள் முகத்தில் வழியும் அசடைப் பார்க்க பாவமாக இருக்கும்.

ஆனால் பொய் சொல்லாமல் எப்பிடி இருக்கேலும் ??? ஒருத்தரிட்ரை ஏதாவது அலுவல் பாக்கவேணும் எண்டால் அவரைப்பத்தி இல்லாததை எல்லாம் அவரை சந்தோசப்படுத்த சொல்லுகினம் . அலுவலும் ஈசியா முடியுது . நீதி நேர்மை எண்டு போறவைக்கு ஆயிரம் கேள்வியள் கேப்பினம் . உங்கடை கருத்துக்கு நன்றி மொசப்பத்தேமியா சுமேரியர் .

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரேயி நான் பொதுவாத்தான் பொய் சொல்லாதிருப்பது நல்லது என்று சொன்னேன்.
நானும் அப்பப்ப பொய் சொல்வதுதான். பொய் சொல்லாது உலகில் ஒருவரும் இருக்க
முடியாது. ஆனால் தேவையற்ற, மற்றவரைப் பாதிக்காத பொய்களைச் சொல்வதில்
தவறில்லை. அப்படிப் பொய்யே சொல்லாமல் வாழவேண்டும் என்றால் எம்மை ஓட்டாண்டி
ஆக்கி கந்தல் ஆடையுடன் பிச்சை எடுக்க வைத்துவிடுவர். :D

ஒரு பொய் சொன்னதாலை நடந்த விளைவுகளை பாரதம் சொன்னது . ஒருவர் பொய் சொல்லலாம் என்றால் எதுவரை பொய்சொல்லாம் என்ற கேள்வி எழுகின்றது ???  பொய்யும் புழுகும் நான்கு நாளைக்கு என்பார்கள் . பொய்களை பேசுபவர்கள் என்றுமே பதட்டத்துடன் இருப்பார்கள் .  இதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது . எனவே பொய் பேசாது உண்மையாக வாழ்வது சிறப்பானது . உண்மை ஒருவேளை தோற்றது போலக்காட்சி தந்நு உண்மை பேசுபவர்களை மனச்சோர்வடையச் செய்யலாம் ஆனால் அது நிரந்தரமானது இல்லை . இதையே ஐயன் இவ்வாறு கூறுகின்றார் :

புறந்தூய்மை நீரால் அமையும்;
அகம்தூய்மை  வாய்மையால் காணப் படும். 298

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குக் குறள் நினைவில்லை கோ, அதே வள்ளுவர் தான் தேவை ஏற்படின் பொய் சொல்லலாம் என்றும் கூறியுள்ளாரே??
.

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

எனக்குக் குரல் நினைவில்லை கோ, அதே வள்ளுவர் தான் தேவை ஏற்படின் பொய் சொல்லலாம் என்றும் கூறியுள்ளாரே??

.

இதைத்தானே சொல்லுறியள் :lol: . இதாலைதான் எனக்கும் ஐயனுக்கும்  நெடுக கொழுவல்  :D .  ஐயனுக்கு பொய்யாமொழிப் புலவர் எண்ட பேரும் இருக்கு சுமே :lol: :lol: :icon_idea: .

பொய்ம்மையும் வாய்மை யிடத்த;

புரைதீர்ந்த  நன்மை பயக்கும் எனின். 292

சிலவேளை பொய் சொல்லியிருக்கிறேன். அவைகள் பின்னுக்கு சங்கடத்தையும் கவலையையும் தந்தது. கூடியளவு பொய் சொல்வதைத் தவிர்த்து வருகிறேன். எப்பவும் நேர்மையாக இருப்பது உத்தமம்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.அப்ப இங்கை ஒருத்தரும் காதலிக்கவில்லைப் போலும்... :rolleyes::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பே  தப்பு

பொய் சொல்வது எப்படி சுகமாக  இருக்கமுடியும்????

நான்  அறிந்து   பொய் சொன்னதில்லை.

ஒரு பொய்க்காக பல பொய்களைச்சொல்பவர்களைக்கண்டுள்ளேன்.  பாவமாக  இருக்கும்.  ஒன்றுமில்லாத விடயத்துக்கு பொய் சொல்லிவிட்டு அதைச்சமாளிக்க படும் பாட்டைப்பார்க்க கோபம் வரும்.

வீட்டில் பொய் சொல்வது முற்றுமுழுவதுமாக தடை.

பொய்  என்பது பல பக்கவிழைவுகளைக்கொண்டது

1-  நம்பிக்கை தகரும்

2-  உங்கள் சொல்லுக்கான வலு பாதிக்கப்படும்

3-  உங்களது எல்லா செயல்களுமே சந்தேகத்துக்கு உள்ளாகும்

4-  அவமானப்படவேண்டிவரும்

5-   உங்கள் எதிர்கால சந்ததிக்கும் பிழையான மாதிரியைக்காட்டும்

போன கிழமை கூட எனது சிறிய  மகள் என்னிடம் இது பற்றி  சில கேள்விகளை  எழுப்பினாள்.

ஒரு நண்பியைக்காப்பாத்த பொய் சொல்லலாமா அப்பா என்று கேட்டாள்.

இல்லை

அவருக்கு நீ  நன்மை செய்யவில்லை

பொய்  சொல்வதன்மூலம் அவரை மேலும் இக்கட்டில் மாட்டுகிறாய்.

அப்படி உன்னால் அவருக்கு உதவத்தான் வேண்டுமென்றால் மௌனமாக இருந்துவிடு என்றேன்.

அதன் பின் இப்படியும் கேட்டாள்

ஒரு இடத்தில் பொய் சொல்லியே  ஆக வேண்டும்

உண்மை சொன்னால் என் படிப்பு வாழ்வு அடிபட்டுப்போய்விடும் என்ற நிலை வந்தால் என்று.

அப்படி ஒரு நிலை வந்தால் உன் தாய் தகப்பன் சகோதரர்களுடன்  முதலில் இது பற்றி பேசு என்றேன்.

தனியே   முடிவெடுக்காதே.

அது மெலும் உன்னை சிக்கலில் மாட்டிவிடும் என்றேன்.

(இது பற்றி  காலம்வரும்பொது இங்கு பதியலாம் என்றிருந்தேன்.  இந்த திரி அது பற்றியது என்பதால் இங்கு பதிகின்றேன்.)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை சொல்வதால் மற்றவருக்குப் பாதிப்பு வரும்போது

பொய் ஒன்றைக் கூறுவதில் என்ன தப்பு  :)

  • கருத்துக்கள உறவுகள்
தேவை ஏற்பட்டால் பொய் சொல்லலாம் ஆனால் அந்தப் பொய் சொல்லும் பழக்கத்தை குழந்தைகளுக்கோ அல்லது அவர்களுக்கு முன்னாலோ அல்லது அவர்களுக்கு தெரியக் கூடியவாறாக சொல்லக் கூடாது 
  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தானே சொல்லுறியள் :lol: . இதாலைதான் எனக்கும் ஐயனுக்கும்  நெடுக கொழுவல்  :D .  ஐயனுக்கு பொய்யாமொழிப் புலவர் எண்ட பேரும் இருக்கு சுமே :lol: :lol: :icon_idea: .

பொய்ம்மையும் வாய்மை யிடத்த;

புரைதீர்ந்த  நன்மை பயக்கும் எனின். 292

கோமகன்,

'களவுமகத்து மற'  என்ற ஒரு தமிழ்ச் சொல்லாடல், மருவிப்போய்க் 'களவும் கற்று மற' என்று வந்தது, அதன் கருத்தையே மாற்றிவிட்டது.

நீங்கள் கூறும் வள்ளுவனின் குறளில், வள்ளுவன் எங்களைக் குழப்பவில்லை. நாங்கள் தான் குழம்புகின்றோம்!

பரிமேலழகரின் உரையில், பின்வருமாறு விளக்குகின்றார்!

புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் 

தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின் , பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் 

சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பால ஆம். (குற்றம் தீர்ந்த நன்மை : அறம். 

அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், 

அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், 

நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே என்பது கருத்து. 

இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் 

நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு

பயக்கும் நிகழந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் 

கூறப்பட்டது.).

இங்கு வள்ளுவன் வேறொரு கருத்தைக் கூறுகின்றாரே ஒழிய, வாய்மையைக் குறைக்கவில்லை.!

நன்மை பயக்காதாயின், வாய்மையினாலும், பொய்மையினாலும் பயனில்லை என்று தான் கூறுகின்றார்!

இதுசம்பந்தமான விவாதத்தை வாழ்வியல் கருவூலத்தில் வைத்தால் சிறப்பாக இருக்கும் புங்ஸ் :lol: :lol: :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யா  அப்படியென்றால் என்ன?? :rolleyes:பொய்யா மொழி என்பவரா? :icon_idea:

Edited by sathiri

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளவயசிலை உள்ள பொய்யெல்லாம் சொல்லி பந்தா,பரிகாசம் காட்டினவையெல்லாம்.....இப்ப வயதுபோகப்போக கனவிசயத்திலை தள்ளாடினம்....அதுதான் நாங்கள் ஊரிலை அந்தமாதிரி....என்ரை படிப்பென்ன,குலமென்ன கோத்திரமென்ன....மனுசி கொழும்பிலை பெரிய வேலையென்ன.....நாங்கள் குனிஞ்சு தும்பெடுக்காத பரம்பரையெல்லே......   எண்டு பைம்பல் அடிச்ச  கூட்டம் அப்ப சொன்ன பொய்களை இப்ப காப்பாத்தேலாமல் திரியினம். பொய் சொன்னால் வாழ்க்கை முழுக்க ரெஞ்சன்......உண்மை சொல்லி வாழ்ந்தால் நிம்மதியான வாழ்க்கை.......இதை நாங்கள் எல்லாஇடத்திலையும் காணலாம். :)

நல்லதொரு திரி இது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான மனச்சாட்சி உள்ளவர்கள் பொய் சொனால் அந்த குடைச்சல் இருகிறதே அது    பொல்லாதது   நடை முறை வாழ்வை வாழ விடாது. மனதைக் குடைந்து கொண்டே இருக்கும்.  வேடிக்கைகாக பொய் சொனால் என்  சிரிப்பே என்னைக் கட்டிக் கொடுத்துவிடும். பொய் சொல்ல  பல முறை தயார் படுத்தத் வேண்டி  இருக்கும்.  சிலர் தாங்கள் தப்ப  பொய் சொல்வார்கள். பொய்யில் கட்டும் கோ புரம் மணல் வீடு போல  தகர்ந்து  விடும். பொய் சொல்லி பிடிபட்டால் பின்பு உண்மை சொன்னாலும் நம்ப மாடார்கள். பொய்க்கு ஆயிரம் சாட்சி  தேவை உண்மைக்கு ஒன்றே ஒன்றுதான். தேவை.

சரி இப்பிடி வைப்பம் . உங்களுக்கு ஒரு 55 வயசு என வைப்பம் ( கற்பனைக்கு ) . உங்கடை வீட்டுக்கு நான் வாறன் . நீங்கள் எனக்கு ரீ தாறிங்கள் . உங்கடை ரீ வாயிலை வைக்க முடியாது .  அப்ப நான் உள்ளதை உங்களுக்கு சொன்னால் சந்தோசப்படுவங்களா ?? இல்லை நான் அக்கா உங்கடை ரீ அந்தமதிரி எண்டு சொன்னால் சந்தோசப்படுவிங்களா ??

  • கருத்துக்கள உறவுகள்

இது  பொய் இல்லை முகமன் கூறுதல் . சுவை ஒவ்வொர்வ்ருக்கு ஒவ வோரு மாதிரி  என்ன  tea அக்கா  போடுற நீங்கள்  அவ்வளவு  நல்லாய் இல்லை ..இந்த   brandவாங்கி போடுங்கலேன்று .  சொல்வேன்.

கனடவில் இஞ்சினியார் என்று பொய் சொல்லி கலியாணம்  செய்து  பின் பிள்ளை  இங்கு வந்து பார்த் பின் அவர் சாதாரன வே லை என்றால் அது பொய் .

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.