Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முருங்கை - Moringa oleifera:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
முருங்கை - Moringa oleifera:-

தனது சத்துக்களின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சம் ஆக இழந்து வரும் பூமியில்
முருங்கை மாதிரி கீரை வகைகள் ஏழைகளின் அமிர்தம் எனலாம். அணைத்து ஜீவ சத்துக்களும் அடங்கிய இந்த கீரை ஒரு இயற்கையின் அற்ப்புதம் தான். இது கடவுளின் கொடை .

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.

இதன் அனைத்து பாகங்களும் உபயோகம்ஆனது . இதன் விதை காய் , இல்லை ,இலையின் ஈர்க்கு , மரம் ,வேர் ,பூ அனைத்துமே பயனுள்ளவை ..

இதன் விதையில் இருந்து பயோ டீசல் எடுக்கலாம் ,சமையல் எண்ணெய்எடுக்கலாம்
மேலும் மேனி எழிலுக்கு , சுகதாரத்திற்கு ,இயந்திரத்திற்கு மசக்கு எண்ணெய் ,இன்னும் என்னவோ உபயோகம் .

ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .

பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது

காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது

வாழை பழததை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது

தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது

இரும்பு சத்து அமரிமிதமாக உள்ளது .எந்த கீரையையும் விட 75 மடங்கு இரும்பு சத்து அதிகம்.

இறைவனின் கொடை என கூறுவதில் ஒரு அர்த்தம் இருக்கிறது இது 200 நாடுகளுக்கு மேல் உலகில் விளைகிறது.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கை முக்கியமானது .

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம்
பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என
பலவகையுண்டு.
முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.

கண்களைப் பாதுகாக்க முருங்கையின் பூவை மொழி முருங்கைப் பூவுடன் பசும்பால்
சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால்
கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன்
பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல்
அதிகரிக்கும்.
முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து
வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில்
உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை
அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள்
நீங்கும்.
இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து
பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால்
தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.
இதை இயற்கையின் வயகரா எனக்கூறலாம் .

இதன் பிசின் கூட மோகத்தை கூட்டவல்லது .பாலில் இட்டு இரவில் சாப்பிடலாம்.

இதன் காயை பற்றித்தான் பாக்கியராஜ் சினிமா மூலம் முன்பே பிரபலம் ஆக்கிவிட்டார் .
காய் கறிகளில் முருங்கை சுவையானது அனைவரும் விரும்புவது . அதிக சத்துள்ளதும் கூட
வீட்டுக்கொரு முருங்கை இருந்தால் வைத்தியருக்கும் வேலையில்லை .

Moringa oleifera, commonly referred to simply as "Moringa"
(Hindi: सहजन sahjan;
Tamil murungai', முருங்கை;
Kannada Nuggekai ನುಗ್ಗೆ ಕಾಯಿ; మునగకాయ
Telugu; Marathi Shevaga;
Muringakkaya in Malayalam
549446_295575520569917_681261034_n.jpg
 
நன்றிகள்.

மூலம் :- https://www.facebook.com/anandna.mp

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் கிழ‌மைக்கு ஒரு முறையாவது, முருங்கக்காய் கறி சமைப்போம்.
முருங்கை இலைச் சொதியும், நன்றாக இருக்கும். ஆனால் கடைகளில் நெடுக முருங்கை இலை கிடைப்பதில்லை.
தகவலுக்கு நன்றி வல்வை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறீ இதில் முருங்கை இலை சமைப்பதைப்பற்றி எழுதியிருக்கிறார்கள் எங்களுடைய வீட்டு வைத்தியத்தில் காயங்களுக்கு முருங்கை இலையை நன்றாகக் கசக்கி பத்துக் கட்டிவிடுவார்கள் அந்த இலையில் இருந்து வடியும் சாறு காயத்தை துரிதமாக ஆற்றிவிடும். இயற்கை தந்த ஸ்பிரிட் :rolleyes:

எழுத்தாளர் முத்துலிங்கம் முருங்கை பற்றி ஒரு கதை எழுதியிருந்தார்.ஆபிரிக்காவில் முருங்கை இலைதான் சாப்பிடுவார்களாம் முருங்கை காயை சாப்பிட மாட்டார்களாம் அதில் பேய் இருக்கு என்று நம்புகின்றார்களாம்.

எழுத்தாளர் முத்துலிங்கம் முருங்கை பற்றி ஒரு கதை எழுதியிருந்தார்.ஆபிரிக்காவில் முருங்கை இலைதான் சாப்பிடுவார்களாம் முருங்கை காயை சாப்பிட மாட்டார்களாம் அதில் பேய் இருக்கு என்று நம்புகின்றார்களாம்.

எங்கள் தமிழ் பெண்களை கலியாணம் முடிச்சதால எங்களுக்கு பேய்ப்பயம் எல்லாம் இல்லை. அதுதான் இலையையும் சாப்பிட்டு காயையும் சாப்பிடுகின்றோம்.

எனது Ghana நண்பன் ஒருவனும், தமிழ்க்கடையில் என்னைக் கண்டு விட்டு... முருங்கக்காய் அடுக்கி வைத்திருந்த பெட்டியைக் காட்டி,

இந்தக் காயை சாப்பிட உங்களுக்கு பயமில்லையா? என்று கேட்டான். ஏனென்று கேட்ட போது... இதில் பேய் இருக்குது என்றான். :D

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டில் கிழ‌மைக்கு ஒரு முறையாவது, முருங்கக்காய் கறி சமைப்போம்.

முருங்கை இலைச் சொதியும், நன்றாக இருக்கும். ஆனால் கடைகளில் நெடுக முருங்கை இலை கிடைப்பதில்லை.

தகவலுக்கு நன்றி வல்வை.

அண்ணை..சும்மாவே ஒரு ரெரா நிப்பியல் திண்ணையில...இதில முருக்கங்காயை சாப்பிட்டால்..உங்க கண்ணில ஒரு பயர் இருக்குமே.. :D

முருக்கங்காயை சாப்பிட்டுவிட்டு...நமது குருஜி தமிழ்சிறி காதல் களிப்பில்..!

65958_3836525971479_20890054_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ரொம்ப  பிடித்த கறிகளில் முருங்கைக்காயும் ஒன்று.

சாப்பிட்டதும் அதன் தண்டை  நன்றாக கடித்து அதிலுள்ள  சாறை  உறுஞ்சி  சாப்படுவது வழக்கம்

ஆனால் அதைக்கண்ட எனது மாமியார் ஒரு நாள் சொன்னார்

அதில் கல் அடைசல் வருவதற்கான வழி  உண்டென்று.

ஆனாலும் என்னால் நிறுத்தமுடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
நாங்களும் இடைக்கிடை முருங்கை இலையில் ஒரு சுண்டல் செய்து சாப்பிடுவோம் நல்ல சுவையாக இருக்கும் அதிலும் கொஞ்ச றால் கருவாடு போட்டு செய்தால் சொல்லி வேலை இல்லை ...

எங்கள் தமிழ் பெண்களை கலியாணம் முடிச்சதால எங்களுக்கு பேய்ப்பயம் எல்லாம் இல்லை. அதுதான் இலையையும் சாப்பிட்டு காயையும் சாப்பிடுகின்றோம்.

தமிழ் பெண்கள் என்றால் பேய்க்கு அவ்வளவு பயமா ?  :D

Edited by தமிழரசு

ஒரு முறை என் பெரிய மாமியின் வீட்டில் முருங்கைக்காய் தோலில் வறை செய்து தந்தார்கள். இன்று நினைவுகளில் அந்த சுவை ஒட்டிக் கிடக்கு.

எப்படி முருங்கைக் காய் தோலில் வறை செய்வது?

ஒரு முறை என் பெரிய மாமியின் வீட்டில் முருங்கைக்காய் தோலில் வறை செய்து தந்தார்கள். இன்று நினைவுகளில் அந்த சுவை ஒட்டிக் கிடக்கு.

எப்படி முருங்கைக் காய் தோலில் வறை செய்வது?

முருங்கக்காய் தோலில்  வறை செய்வது தெரியாது. ஆனால் கொஞ்சம் முற்றிய முருக்கங்காய் என்றால், அதை சதை தன்மை இழந்து விடும். அப்படி பட்ட முருக்கங்காய் இன் முற்றிய சதை பகுதியை பிரித்து எடுத்து மிக பொடியாக வெட்டி வறுக்கலாம்.

ஆயுள் வேத மருத்துவத்தில் முருங்கைப் பூவின் சாறை கண் வைத்தியத்திற்குப் பாவிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை என் பெரிய மாமியின் வீட்டில் முருங்கைக்காய் தோலில் வறை செய்து தந்தார்கள். இன்று நினைவுகளில் அந்த சுவை ஒட்டிக் கிடக்கு.

எப்படி முருங்கைக் காய் தோலில் வறை செய்வது?

முருங்கை பட்டையை கணவாயுடன் போட்டு சமைக்கின்றவர் அம்மம்மா

ஏன் என்று தெரிய, இப்ப வீட்டில் முருங்கை காய்த்திருக்கு, இன்று முருங்கைகாய் கறிதான்.

பிள்ளைகளுக்கு இலைகளை முட்டையுடன் சேர்த்து பொரித்து கொடுக்கிறனான்

 மேலதிக காய்களை நண்பர்களுக்கு கொடுத்துவிடுவேன். 

சும்மா கடுப்பக் கிளப்பாதீங்க உடையார். :D

தெரிந்திருந்தால் பேசாம அவுஸ்திரேலியாவிற்கு கள்ளப் பிளேனில ஏறியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் முருங்கை மரத்தைக் கண்டால் பட்டையைப் பல்லால் வறுகுவினம் போலை இருக்கே.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு முறை என் பெரிய மாமியின் வீட்டில் முருங்கைக்காய் தோலில் வறை செய்து தந்தார்கள். இன்று நினைவுகளில் அந்த சுவை ஒட்டிக் கிடக்கு.

எப்படி முருங்கைக் காய் தோலில் வறை செய்வது?

முருங்கைத்தோப்பே வைச்சிருந்த எங்களுக்கு உந்தவறை விசயம் கேள்விப்படவேயில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

முருங்கைத்தோப்பே வைச்சிருந்த எங்களுக்கு உந்தவறை விசயம் கேள்விப்படவேயில்லை. :D

நிழலியை ஆடெண்டு நினைச்சிட்டினமோ...?? :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியை ஆடெண்டு நினைச்சிட்டினமோ...?? :unsure::D

மாமியார் வீடென்றபடியால்

எதையோ  கொடுத்து பரீட்சித்து பார்த்திருக்கின்றா  என்று தெரியுது

ஆனால் எத்தனை  மச்சாள்மார் இருந்தவை  என்று சொன்னால்தான்  முருங்கக்காயைக்கடித்தாரா  அல்லது முருங்கை மரத்தையே  கடித்தாரா என்று சொல்லமுடியும்? :lol:  :D

முருங்கங்காய் வேலை செய்யாதென்று பட்டையைக் கொடுத்தார்களோ தெரியாது.  :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.