Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்து மாதத்தில் உயர்சாதி குழந்தை பெறுவது எப்படி?

Featured Replies

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் நாங்கள் வெள்ளாளர்.  நீங்கள் கரையார். எங்கள் மகன் உங்களது மகளை காதலிக்கிறேன் என்று அடம் பிடிப்பதனால்,  தான் நாங்கள் வேறு வழியில்லாமல் உங்களது மகளை மணம் செய்ய எங்களது தராதரத்தை விட்டு இறங்கி வந்து சம்மதித்திருக்கிறோம். திருமணத்திற்கு நீங்களும் உங்கள் பிள்ளைகளும் மட்டும் தான் வரலாம். உங்களது உறவினர்கள் ஒருவரும் வரக் கூடாது. உங்கள் சாதிக்காரர்கள் திருமணத்திற்கு வந்தால் எமது சொந்த பந்தங்கள் எம்மைக் கேவலமாக பார்ப்பார்கள். இது நடந்தது இலங்கையிலோ அன்றி தமிழ் நாட்டின் தொலை தூரக் கிராமம் ஒன்றிலோ அல்ல. என்ன எங்கே என தலையை போட்டு குழப்புகின்றீர்களா?.  இப்படியான கேவலம் நடந்தது லண்டனில் தான். லண்டனில் பிறந்து கல்வி கற்று தொழில் புரியும் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய முற்பட்ட போது குறுக்கே வந்து குரைத்த ஒரு சாதி வெறிக் கும்பலின் கூச்சல்கள் தான் இவை.

sathimaruppu.jpg

இரண்டாவது நிகழ்வும் லண்டனிலேயே நிகழ்ந்துள்ளது.  ஒரே இடத்தில் வேலை செய்த ஒரு உயர்சாதி வெள்ளாள ஆணும்,  தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்ணும் காதலித்தனர். அப்பெண் தனது சாதி பற்றி ஆரம்பத்திலேயே தன் காதலனுக்கு சொல்லியுமிருந்தார். பெண் வீட்டில் திருமணம் முடிக்கும் படி வற்புறுத்தியதால் காதலன் அவரின் வீட்டில் தனது காதல் கதையினைக் கூறி,  தான் அப் பெண்ணை மணம் முடிக்க வேண்டும் என்று சம்மதம் வேண்டி நின்றான்.  சாதி குறைந்தவர்களின் வீட்டில் நாங்கள் தண்ணீர் கூட குடிக்க மாட்டோம்.  நீ பெண் எடுக்க போறியோ? நீ அந்த பெண்ணை மணம் செய்தால் நான் நஞ்சு குடித்து சாவேன் என்று அந்த மணாளனைப் பெற்ற மகராசி வீரசபதம் செய்தாள். ஆப்பிள் யூஸ் குடிப்பேன் என்பது போல சர்வசாதரணமாக நஞ்சு குடிப்பேன் என்கிறாளே,  மணந்தால் மரணதேவி என்று வசனத்தினை மாற்றி பொம்பிளை வீரப்பா மாதிரி பேசுகின்றாளே அம்மா என்று பொடியன் பயந்து போனான். தாயில்லாமல் நானில்லை என்று குழந்தை அழுதது. சிறிது காலம் பொறுத்துப் பார்த்த பெண் இன்னொருவரை வீட்டாரின் நெருக்குதலினால் மணம் செய்ய போனபோது,  உன்னை விட்டால் யாருமில்லை என்று காதலன் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறியது. அம்மா சாகும் வரை எனக்காக பொறுத்திரு என்றது. உன்னை போன்ற கோழைக்கு என் வாழ்வில் இடமில்லை என்று உறுதியாக மறுத்து விட்ட அப்பெண் தனது வீட்டாரின் விருப்பத்திற்கு இணங்கி புது வாழ்வு தொடங்கினாள்.

தமிழ் இளைஞர்கள் போல்,  குறிப்பாக யாழ்ப்பாண தமிழ் இளைஞர்கள் போல் நல்லவர்கள் யாருமில்லை. ஏனென்றால் வாலிப வயதில் புகை பிடித்தல், மது அருந்துதல்,  பாடசாலைக்கு போகாது வெளியே சுற்றித் திரிதல்,  கள்ளக் கோழி பிடித்தல்,   சந்தர்ப்பம் கிடைத்தால் காதலிக்கும் பெண்ணுடன் உடல் உறவு கொள்ளுதல் போன்றன எல்லாவற்றினையும் செய்தாலும்,  திருமணம் என்று வரும் போது தாய் தந்தையின் சொற்கேட்டு நடக்கும் புத்திரசிகாமணிகளாக மாறிவிடுவார்கள். அப்போது தான் பெற்றோர் பார்க்கும் சொந்த சாதிப் பெண்ணை கொழுத்த சீதனத்துடன் கட்டிட முடியும். யாராவது வீணாய் போனவர்கள் காதல்,  கத்திரிக்காய்  என்று கதைத்தால்,  நாங்கள் அப்பா அம்மாவிற்கு அடங்கின பிள்ளைகளாக்கும் என்று கை கட்டி வாய் பொத்தி சொல்லிவிடுவார்கள்.

மேலை நாடுகளில் சிறுவகுப்புகளில் இருந்தே ஆசிரியர்களினால் ஒருவரை மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்துவது சட்டப்படி குற்றம் என்பது சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் குழந்தைகள் சிறு வயதிலிருந்து தமது பெற்றோரின் பிற்போக்கான நிலப்பிரவுத்துவ சிந்தனை முறைகளிற் கூடாக வளர்க்கப்படுவதினால்  தாராளவாத பொருளாதார முதலாளித்துவ வாழ்க்கையினை வாழ்ந்தாலும்,  சிந்தனை முறைகளில் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிய இருண்ட காலத்தினுள் வாழ்கின்றார்கள் என்பதற்கு மேலே கூறிய நிகழ்வுகள் எடுத்துக் காட்டாக இருக்கின்றன.

பெரும்பாலான தமிழ் பெற்றோர்கள் மேலைநாடுகளில் இரண்டு இடங்களிற்குத் தான் தமது குழந்தைகளை கூட்டிச் செல்வார்கள்.  சைவ பெற்றோர் என்றால் கோயில்களிற்கும்,  கிறீஸ்தவ பெற்றோர்கள் தேவாலயங்களிற்கும்  இரண்டாவதாக இந்த இடங்களை விட மிகவும் பயங்கரமான இடமான தமிழ்ப் படங்கள் ஓடும் திரையரங்குகளிற்கு கூட்டிச் செல்வார்கள். கோவில்களிற்கு போகும் ஒரு குழந்தை சமஸ்கிரிதத்தில் வழிபாட்டினை செவிமடுக்கின்றது. சமஸ்கிரிதம் தான் கடவுளுக்கு பூசை செய்யும் பாசை என்பதைக் கேட்டு வளர்கின்றது. மொழிகளிற்கிடையே உயர்வு,  தாழ்வு கற்ப்பிக்கப்படுகின்றது.  தாழ்வு என்று சொல்வது போதாது என்று தமிழ் ஒரு “நீச பாசை” என்று ழூத்த சங்கராச்சாரி வாக்குழூலமே கொடுத்து விட்டு பரலோகம் போயிருக்கின்றது.

தனது தாய் மொழியான தமிழை விட ஒருவராலும் பேசப்படாத செத்த மொழியான சமஸ்கிரிதம் தான் உயர்ந்த மொழி என்று கற்பிக்கப்படும் ஒரு குழந்தை,  எப்படி தன் தாய் மொழியினை பேசவோ அன்றி கற்றுக் கொள்ளவோ முன்வரும். தமிழை ஒரு விருப்பப் பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழிப் பாடமாகவோ இங்கிலாந்தில் கற்க முடியும். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் தாமே சொல்லிக் கொடுக்க கூடிய தமிழ் மொழியை விட்டு விட்டு பிரெஞ்சு அல்லது ஜேர்மன் மொழிகளை பெரும் பணம் செலவழித்து கற்பிக்கும் அவலநிலை தான் இங்கிருக்கின்றது.

அய்யர் மட்டும் தான் பூசை செய்ய முடியும். ஏனென்றால் அவர் உயர்ந்த சாதியில் பிறந்தவர் என்றும்,  நாங்கள் வெள்ளாளர் அவர்களிற்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் என்றும் பிஞ்சு வயதிலேயே நஞ்சூட்டப்படுகின்றது.  இதுவே கரையாரை விட பள்ளர்கள் குறைந்தவர்கள் என்றும் பள்ளரை விட பறையர் குறைந்த சாதியினர் என்னும் சங்கிலித் தொடராக நீள்கின்றது. மனிதத்தினை மண்ணில் போட்டு மிதித்துக் கொண்டு மனங்களில் சாதிவெறியை ழூட்டி மனிதர்களை ஒன்றுபட விடாமல் செய்து அதிகார வர்க்கத்தின் சுரண்டல்களை சுலபமாக செய்வதற்கு வழி செய்து கொடுக்கின்றது.

உயர்சாதிக் கொழுப்பை அதிகார வர்க்கத்தின் போலி வாழ்க்கையை எளிய உழைக்கும் மக்கள் தமக்கே உரித்தான கிண்டல் மொழியில் வெளிப்படுத்துவார்கள். அதன் ஒரு வெளிப்பாடு தான் “உடையார் உடலுறவு கொள்ளும் போது இடுப்பிலே சலங்கை கட்டிக் கொண்டு செய்தார்” என்பது. அவரது இடுப்பு அசைய அசைய மணிச் சத்தம் வெளியே வந்து அவர் ஒரு பிரதான வேலையாக இருக்கின்றார் என்பதனைச் சொல்லுமாம்.

ஒரு ஆணும் பெண்ணும் கூடும் போது குழந்தை பிறக்கும் என்று தான் உலகம் முழுக்க அறிந்து வைத்திருக்கின்றார்கள். உயர் சாதிக் குழந்தை பெற என்ன செய்ய வேண்டும். உடையார் இடுப்பினிலே சலங்கை கட்டிக் கொண்டு செய்தது போல இவர்கள் “அதிலே” எதையாவது கட்டிக் கொண்டு செய்வார்களாக்கும்.

பறைச்சியாவது ஏதடா?.  பணத்தியாவது ஏதடா?.  இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ?.  பறைச்சி போகம் வேறதோ?.  பணத்தி போகம் வேறதோ?

பணத்தி – பிராமணப் பெண். இது 18ம் நூற்றாண்டின் போது வாழ்ந்ததாக சொல்லப்படும் சிவவாக்கியர் எனும் சித்தரின் பாடல்.  18ம் நூற்றாண்டில் நாடோடியாக சுற்றித் திரிந்த ஒரு மனிதனிற்கு இருந்த அறிவு இன்றைய நூற்றாண்டு மனிதர்களிற்கு இல்லாமல் போனது வெட்கித் தலை குனிய வைக்கின்றது.

வானம் தேன் சிந்தும் பொன்மாலைப் பொழுதுகளில் வண்ணம் மிகு நறுமலர்கள் பூத்துச் சொரிய காதல் கீதங்கள் தாலாட்டு பாடும் போது,  ஊனாய்- உயிராய்-உள்ளொளியாய் ஒளிர்ந்த காதல் திருமணம் என்று வரும் போது சாதி, மதம் , அந்தஸ்த்து,  பணம் என்ற சகதிகளில் சிக்கிக் கொள்வதேன். இருவர் மனம் ஒப்புதலே சேர்ந்து வாழ தேவையான அடிப்படை என்பது எம்மவருக்கு தெரியாமல் போவதேன்.?

http://ndpfront.com/tamil/index.php/articles/articles/vijayakumaran/638-2012-02-04-091051

பிகு: சமூக சீர் திருத்திற்கு சாதிக்கதைகள் இணைப்பதில் தவறில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இதில சமூக அக்கறையைக் காட்டிலும் சாதியத்தை மறைமுகமாக முன்னிறுத்திறது தான் தூக்கலா இருக்கிறது போலத் தெரியுது.

யாழிலும் அண்மைக்காலமா சாதியம் பற்றிய ஆக்கங்கள் தீவிரமா இடம்பிடிக்கிறது.. ஒன்றும் பெரிய ஆரோக்கியமானதா தெரியல்ல. ஏன்னா அந்தளவுக்கு சாதியம் புலம்பெயர் நாடுகளில் முக்கிய விடயமாக இல்ல. அதுக்காக மக்கள் மனங்களில் அது இல்லை என்று சொல்ல வரவில்லை.

அதுசரி.. லண்டனில.. கம்ரூனும்.. மில்லிபாண்டும்.. எப்ப சாதிக் கட்சியில சேர்ந்தவை. அதிகார வர்க்கம் அதுஇதென்னு எழுதி இருக்காங்க..! :lol:

லண்டனைப் பொறுத்த வரையும்.. யாரும் யாரையும் அதிகாரம் செய்ய முடியாது. ராணியும்.. அரசும்.. அரச கட்டமைப்புக்களும்.. நீதித்துறையும் தவிர. அந்த வகையில்.. ஊரில இருந்த.. அல்லது இருக்கிற அதே சாதி அடையாளங்களை இங்க காண்பிக்க முடியாது. ஆனால்.. மக்கள் மனதளவில்..தம்மளவில் காவிக் கொண்டு திரிவதையும் ஒன்றும் செய்ய ஏலாது. அதை முற்றாகக் கட்டுப்படுத்துவது கடினம்..!

மேலும் புலம்பெயர் நாடுகளில் சாதிய அடையாளங்கள் இல்லவே இல்லை என்று முழுப்பூசனிக்காயை சோத்தில மறைக்க நின்றவைக்குத் தான் இது சரியான கட்டுரை..! அவர்களோடு புலிகள் ஆயுதத்தால் பேசித் தான் உதுகளை கட்டுப்படுத்தினவை.. அதுதான் அவைக்குத் தெரிஞ்ச பாசை என்றவை.. இப்ப என்னத்தால பேசி உதுகளை கட்டுப்படுத்தப் போகினம் என்றதையும் ஒருக்கால் பார்க்க வசதி செய்திருக்குது.. இந்த ஆக்கம்..! :rolleyes::):icon_idea:

அதே ...................... :icon_mrgreen:  சிலவேளைகளில் ஐயர் வாயு பறிந்தால் குற்றமில்லையோ ?????????

  • கருத்துக்கள உறவுகள்

எனது தகப்பனாரில் இருந்து நான் பலவற்றை  மாற்றினேன்

அவர் போகாதவீடுகள்

சேராத ஆட்கள்  எல்லாவற்றையும் எதிர்ப்பையும் மீறி நான் சேர்த்துக்கொண்டேன்

எனது சந்ததியில் ஒரு குறிக்கப்பட்ட பல எல்லைகளை  நான் கடந்தேன்

எனது பிள்ளைகளுக்கு இங்கு கூறப்படும் சாதிகளின் பெயர்கள் தெரியாது

யாழில் சில நாட்களாக எழுதப்படும் சாதிப்பெயர்களை அவர்கள் அறிவதை நான் விரும்பவில்லை.

30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிலவற்றை மீண்டும் கிளறி அதில் எம்மை வளர்த்துக்கொள்வது எமது புதிய  தலைமுறைக்கு விசத்தை விதைப்பதை நாமும் ஏற்பதாகும்.

எனது பிள்ளைகளும் மனிதர்கள்தான்

அவர்களுக்குள்ளும்  தான் பெரியவன் என்ற விசத்தை விதைத்தால் பற்றிக்கொள்ளும் மனநிலை  இருக்கலாம். விதைத்துவிட்டு பற்றியபின் அதையும் இங்கு பகுப்பாடு செய்வது சரியா?

எதிர்காலத்தில்  இதனால் ஏற்படக்கூடிய  பின்னகர்வுகளுக்கு  யார் பொறுப்பு???

வேறு எங்கோ பார்த்தேன்

படைப்பாளிகள் என்னவும் எழுதலாம்

அதை விமர்சனம் செய்பவர்கள் தான்  நிதானமாக எழுதணும் என்று.

இது எந்தளவு பாம்புக்கு பாலூட்டும் வேலை?????

புலிகளின் புண்ணியத்தால் சாதி ஒரு பேசா பொருளாகிவிட்டது.

30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிலவற்றை மீண்டும் கிளறி அதில் எம்மை வளர்த்துக்கொள்வது எமது புதிய  தலைமுறைக்கு

இந்த இரண்டு கூற்றுமே தாயகத்தின் இன்றைய நிலவரத்தில் இருந்தும் புலம்பெயர் மக்களில் இருந்தும் உங்களை முற்றாக விலத்தி வைத்துக் கொண்டு எந்தளவுக்கு கற்பனைக்குள் ஊறிக் கிடக்கின்றீர்கள் என்பது தெரிவிக்கின்றது.

இன்று தாயகத்தில் சாதி வேறுபாடுகள் மிக மோசமான கட்டத்தினை அடைந்து கொண்டு செல்கின்றது. சாதி ரீதியான சங்கங்கள், குழுக்கள், குழு மோதல்கள் எல்லாம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. போராட்ட காலங்களில் நீறு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்த இந்த சாதிய வெறி இன்று ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னான சூழலில் மீண்டும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. எம் மக்கள் மத்தியில் இருக்கும் சாதிய வெறியைத் தணிக்க ஒன்றல்ல நூறு பிரபாரகரன்கள் தோன்றினாலும் காணாது.

நாங்கள் எங்கள் தலைகளை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டு கற்பனைக்குள் இருப்பதால் மட்டும் இது தணிந்து விடப்போவதில்லை. பேசாப் பொருளாக வைத்துக் கொண்டு இருப்பதால் மட்டும் சமூகத்தில் இருந்து விலகிப் போகப்போவதில்லை. புலம்பெயர் தேசங்களில் அதே சாதியத்தினை மனதுக்குள் வைத்துக் கொண்டு தான் பெரும்பாலான தமிழர்கள் வாழ்கின்றனர்.  தன் பிள்ளை ஒரு வெள்ளையை அல்லது கறுப்பினத்தவரைக் கலியாணம் கட்டினால் பொறுத்துக் கொண்டு இருக்கும் எம் புலம்பெயர் மக்கள், தம்மால் குறைவான சாதி என்று வரையறுக்கப்பட்டவர்களை மணம் முடிப்பதை எதிர்க்கும் சூழல் தான் இன்னும் அதிகரித்துக் கொண்டு போகின்றது. ஒரு வைபவத்துக்கு விருந்தினர்களை கூப்பிடுவதில் கூட சாதிய வேறுபாடுகளை கடைப்பிடிக்கும் சமூகமாகத் தான் நாம் இங்கும் இருக்கின்றோம்.

திருமண சடங்கில் இருந்து குழந்தையின் 31 துடக்கு வரைக்கும் நாங்கள் ஐயரை அழைத்து பூசைகள் செய்வதே சாதியத்தினை ஏற்றுக் கொண்டு தான். வருகின்ற ஐயர் தானே கேட்கின்றாரோ இல்லையோ தனிய ஒரு  பாத்திரத்தில் அல்லது பேணியில் அவருக்கு என்று பாலை எடுத்துக் கொடுக்க அவர் அண்ணாந்து குடிப்பதை பொறுமையாக ஏற்றுக் கொண்டு இருப்பதும் சாதியத்தினை ஏற்றுக் கொண்டுதான்.

மேலை நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்களால் அடக்கி ஒடுக்க முடியவில்லை என்பதைத் தவிர வேறு பெரிய மாற்றங்கள் இன்னும் அரும்பத் தொடங்கவில்லை. பெற்றோரின் மூலம் சாதியம் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு ஊடு கடத்தப்படுவதும் நிறுத்தப்படவில்லை.

பூனை கண்ணை மூடி உலகம் இருண்டு விட்டதென்ற கதைதான் நடக்குது இங்க .

எனது தகப்பனாரில் இருந்து நான் பலவற்றை  மாற்றினேன்

அவர் போகாதவீடுகள்

சேராத ஆட்கள்  எல்லாவற்றையும் எதிர்ப்பையும் மீறி நான் சேர்த்துக்கொண்டேன்

எனது சந்ததியில் ஒரு குறிக்கப்பட்ட பல எல்லைகளை  நான் கடந்தேன்

எனது பிள்ளைகளுக்கு இங்கு கூறப்படும் சாதிகளின் பெயர்கள் தெரியாது

யாழில் சில நாட்களாக எழுதப்படும் சாதிப்பெயர்களை அவர்கள் அறிவதை நான் விரும்பவில்லை.

30 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சிலவற்றை மீண்டும் கிளறி அதில் எம்மை வளர்த்துக்கொள்வது எமது புதிய  தலைமுறைக்கு விசத்தை விதைப்பதை நாமும் ஏற்பதாகும்.

எனது பிள்ளைகளும் மனிதர்கள்தான்

அவர்களுக்குள்ளும்  தான் பெரியவன் என்ற விசத்தை விதைத்தால் பற்றிக்கொள்ளும் மனநிலை  இருக்கலாம். விதைத்துவிட்டு பற்றியபின் அதையும் இங்கு பகுப்பாடு செய்வது சரியா?

எதிர்காலத்தில்  இதனால் ஏற்படக்கூடிய  பின்னகர்வுகளுக்கு  யார் பொறுப்பு???

வேறு எங்கோ பார்த்தேன்

படைப்பாளிகள் என்னவும் எழுதலாம்

அதை விமர்சனம் செய்பவர்கள் தான்  நிதானமாக எழுதணும் என்று.

இது எந்தளவு பாம்புக்கு பாலூட்டும் வேலை?????

இந்த விமர்சனத்தை விசுகு ஐயா தான் பார்த்த இடத்தில் வைத்திருப்பாரானால் ,அதுவே ஓர் நல்ல பண்புக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கும் .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இரண்டு கூற்றுமே தாயகத்தின் இன்றைய நிலவரத்தில் இருந்தும் புலம்பெயர் மக்களில் இருந்தும் உங்களை முற்றாக விலத்தி வைத்துக் கொண்டு எந்தளவுக்கு கற்பனைக்குள் ஊறிக் கிடக்கின்றீர்கள் என்பது தெரிவிக்கின்றது.

இன்று தாயகத்தில் சாதி வேறுபாடுகள் மிக மோசமான கட்டத்தினை அடைந்து கொண்டு செல்கின்றது. சாதி ரீதியான சங்கங்கள், குழுக்கள், குழு மோதல்கள் எல்லாம் மீண்டும் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளன. போராட்ட காலங்களில் நீறு பூத்த நெருப்பாக உள்ளுக்குள் கனன்று கொண்டு இருந்த இந்த சாதிய வெறி இன்று ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னான சூழலில் மீண்டும் பற்றி எரியத் தொடங்கியுள்ளது. எம் மக்கள் மத்தியில் இருக்கும் சாதிய வெறியைத் தணிக்க ஒன்றல்ல நூறு பிரபாரகரன்கள் தோன்றினாலும் காணாது.

நாங்கள் எங்கள் தலைகளை மண்ணுக்குள் புதைத்துக் கொண்டு கற்பனைக்குள் இருப்பதால் மட்டும் இது தணிந்து விடப்போவதில்லை. பேசாப் பொருளாக வைத்துக் கொண்டு இருப்பதால் மட்டும் சமூகத்தில் இருந்து விலகிப் போகப்போவதில்லை. புலம்பெயர் தேசங்களில் அதே சாதியத்தினை மனதுக்குள் வைத்துக் கொண்டு தான் பெரும்பாலான தமிழர்கள் வாழ்கின்றனர்.  தன் பிள்ளை ஒரு வெள்ளையை அல்லது கறுப்பினத்தவரைக் கலியாணம் கட்டினால் பொறுத்துக் கொண்டு இருக்கும் எம் புலம்பெயர் மக்கள், தம்மால் குறைவான சாதி என்று வரையறுக்கப்பட்டவர்களை மணம் முடிப்பதை எதிர்க்கும் சூழல் தான் இன்னும் அதிகரித்துக் கொண்டு போகின்றது. ஒரு வைபவத்துக்கு விருந்தினர்களை கூப்பிடுவதில் கூட சாதிய வேறுபாடுகளை கடைப்பிடிக்கும் சமூகமாகத் தான் நாம் இங்கும் இருக்கின்றோம்.

திருமண சடங்கில் இருந்து குழந்தையின் 31 துடக்கு வரைக்கும் நாங்கள் ஐயரை அழைத்து பூசைகள் செய்வதே சாதியத்தினை ஏற்றுக் கொண்டு தான். வருகின்ற ஐயர் தானே கேட்கின்றாரோ இல்லையோ தனிய ஒரு  பாத்திரத்தில் அல்லது பேணியில் அவருக்கு என்று பாலை எடுத்துக் கொடுக்க அவர் அண்ணாந்து குடிப்பதை பொறுமையாக ஏற்றுக் கொண்டு இருப்பதும் சாதியத்தினை ஏற்றுக் கொண்டுதான்.

மேலை நாடுகளில் இருக்கும் கடுமையான சட்டங்களால் அடக்கி ஒடுக்க முடியவில்லை என்பதைத் தவிர வேறு பெரிய மாற்றங்கள் இன்னும் அரும்பத் தொடங்கவில்லை. பெற்றோரின் மூலம் சாதியம் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்கு ஊடு கடத்தப்படுவதும் நிறுத்தப்படவில்லை.

வணக்கம் நிழலி

உங்களுடைய  கருத்துடன் எனக்கு முரண்பாடு கிடையாது.

சாதிகள் இல்லை  என்றோ

அவை  முற்காக தாயகத்தில் அல்லது புலத்தில் அழிக்கப்பட்டுவிட்டது என்றோ  எங்கும் நான் எழுதவில்லை. நினைக்கவுமில்லை

ஆனால் அடுடுத்த தலைமுறைக்கு அதை நாமே  காவிவிடுவோமா என்ற அச்சத்தில்தான் எனது கருத்து இருந்தது. எல்லா இடத்திலும் இருக்கும்போது நீங்கள் என்ன  என்பதற்கு எனது வீட்டில்தான் நான் முதலில் துப்பரவு செய்யமுடியும். அதைத்தான் எழுதமுடியும். நூறுவீதம் என்று பொய் சொல்லமாட்டேன்.

எனது கேள்வி  ஏன் வந்தது என்றால்

இன்று எவரிடமாவது சென்று நீ  இந்த சாதிக்காறன்  என்று சாதிப்பெயரைச்சொல்லி  தாயகத்திலோ புலத்திலோ எவராலாவது சொல்லமுடியுமா?

அந்தளவுக்காவது அது அழிக்கப்பட்டுள்ளது.   தொடர்ந்து வரும் காலங்களில்  இன்னும் மாறி அது இல்லாது போய்விடும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதற்கு மாறாக மீண்டும் மீண்டும் சாதிப்பெயர்களை  இங்கு எழுதி ஞாபகப்படுத்துவது சரியல்ல.

மேலோன் கீழோன்  என்ற பாகுபாடு அழிந்துவரும் நிலையில் நாம் ஏன் அதற்கு தண்ணீர் ஊத்துவான்????

அதை நான் செய்யமாட்டேன் என்பதே எனது நிலை.

  • கருத்துக்கள உறவுகள்

பிகு: சமூக சீர் திருத்திற்கு சாதிக்கதைகள் இணைப்பதில் தவறில்லை

அந்த திரியின் தொடர்ச்சியே  இதுவும்  என்பதை சிறு குழந்தையுமறியும்.

இது போன்ற  போட்டிகள் மூலம் விசத்தை விதைக்கவேண்டாம் என்பதற்காகவே  இங்கு எழுதப்பட்டது.

எனது பண்புக்கு வரவிலக்கணம் தரும் தாங்கள் இந்த விசத்தை விதைப்பதை புரிந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

இந்த விமர்சனத்தை விசுகு ஐயா தான் பார்த்த இடத்தில் வைத்திருப்பாரானால் ,அதுவே ஓர் நல்ல பண்புக்கு எடுத்துக்காட்டாக இருந்திருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

பத்து மாதத்தில் உயர்சாதி குழந்தை பெறுவது எப்படி?

தெரியல.........

விடுதலைப் புலிகளின் காலத்திலும் சாதி இருந்தது தான் ஆனால் மக்கள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. சாதி என்பது இலகுவாக அழிக்கக் கூடிய விடயம் இல்லை என்பதை நாம் விரும்பியோ,  விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.  சாதி இல்லை நான் பார்க்கிறேலை என்று சொல்லுவினம் ,  நாங்கள் நம்புறம் அப்படியாயின் நீங்கள் சாதி குறைந்த பெண்ணையா திருமணம் செய்தீர்கள்? கடைசி வரையும் அப்படி இருக்காது. எனது பிள்ளைகளுக்குச் சாதியைப் பற்றித் தெரியாது, ஓக்கே நம்பூறம் பிள்ளைகளுக்குக் கல்யாணம் பேசும் போது????

விடுதலைப் புலிகள் சாதியை ஒழிக்க அயராதுபாடுபட்டவர்கள் , பொறுங்கோ தலைவர், சூசை அண்ணா, தமிழ்செல்லவன்... அப்படியான பெரும் புள்ளிகள் திருமணம் செய்தது ........?

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளின் காலத்திலும் சாதி இருந்தது தான் ஆனால் மக்கள் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவில்லை. சாதி என்பது இலகுவாக அழிக்கக் கூடிய விடயம் இல்லை என்பதை நாம் விரும்பியோ,  விரும்பாமலோ ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.  சாதி இல்லை நான் பார்க்கிறேலை என்று சொல்லுவினம் ,  நாங்கள் நம்புறம் அப்படியாயின் நீங்கள் சாதி குறைந்த பெண்ணையா திருமணம் செய்தீர்கள்? கடைசி வரையும் அப்படி இருக்காது. எனது பிள்ளைகளுக்குச் சாதியைப் பற்றித் தெரியாது, ஓக்கே நம்பூறம் பிள்ளைகளுக்குக் கல்யாணம் பேசும் போது????

இதுதான் உண்மையான நிலை.

எமது இனத்தை ஒற்றுமைப்படுத்த முடியாமல் போனதே இதனால்தான். எமது சமூகத்தில் கலப்புத் திருமணங்கள் எந்தவெரு சந்தர்ப்பத்திலும் ஊக்குவிக்கப்படவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு நிறைய சாதிகளின் பெயர் மறந்து போச்சு.கதையில் சொன்ன சாதிகளின் பெயர்களைத்தவிர வேறு பெயர்கள் இருந்தாலும் வரிசைகட்டி எழுதுங்கள்.அறிந்து கொள்ளக்குடியதாக இருக்கும். ஏனெனில் பின்னுட்டம் இடுபவர்கள் சாதிப்பெயரை பாவித்தால் களவிதி மீறலாகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்
அலைமகளின்ட கருத்து தான் என்னோடதும் சாதி இல்லை,சாதி பார்க்க மாட்டோம் என சொல்கின்றவர்கள் நிட்சயமாய் காதல் கல்யாணத்திற்கு அதுவும் சாதி விட்டு செய்யும் திருமணத்திற்கு அதுவும் தங்களை விட உயர்ந்த சாதியில் காதலித்தால் ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் தங்களை விட குறைந்தது என்டால் கடைசி வரைக்கும் ஏற்க மாட்டார்கள்.
 
இந்த உயர்ந்தது,தாழ்ந்தது கூட‌ தாங்களே வகுத்துக் கொள்கிறார்கள்...சாதி பார்க்க மாட்டோம் என சொல்கிறவர்கள் தங்கட‌ பிள்ளைகளை தங்கட‌ சாதியிலோ அல்லது தங்களை விட‌ உயர்ந்த சாதியிலையோ தான் கட்டிக் கொடுக்க நினைப்பார்கள்...கேட்டால் சொல்வார்கள் பிள்ளை விரும்பிட்டு அதோ,இதோ என கார‌ணம் சொல்வார்கள்...அதே பிள்ளை அவர்களை விட‌ குறைந்த சாதியில் காதலித்தால் முழு மனத்தோடு ஏற்றுக் கொள்வினமா?
 
எங்கட‌ தமிழ்ச் சனத்தில நூற்றுக்கு 5% சனம் சாதியே பார்க்காமல் இருக்கிறார்கள் மீதி 95% மக்களும் சாதி வெறியவர்கள் தான்...ஏதோ ஒரு வகையில் தங்கட‌ சாதி வெறியினை வெளிக் காட்டுவார்கள்.இந்த 95%மான மக்களும் சாதி பேதம் பார்க்காமல் மற்றவர்களோட‌ மிக நன்றாக பழகினாலும் திருமணம் என்று வரேக்குள்ள கட்டாயம் சாதி பார்ப்பினம்.
 
புலிகளில் இருந்து கடைசி வரைப் போராடின போராளிகள் கூட சாதி பார்க்கிறார்கள்...காரணம் கேட்டால் இயக்கத்தில் இருக்கும் போது சாதி பார்க்காமல் கட்டி இருந்தால் வீட்டில் அப்பா,அம்மா ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார்கள் ஆனால் இப்ப அவர்களை திருப்திப் படுத்த சாதி பார்க்க வேண்டியது அவசியம் என சொல்கிறார்கள்...தலைவரால் கூட மற்றவர்களைப் பார்த்து கல்யாணத்தில் சாதி பார்க்க வேண்டாம் என சொல்ல முடியாது...அவர் கூட அவரை விட சாதியில் கூடின பெண்ணைத் தான் கட்டியிருக்கிறார்...யாராவது ஒருவர் தன்னை விட குறைந்த சாதியில் திருமணம் செய்து போட்டு சாதி இல்லை என சொன்னால் அதை வரவேற்கலாம்.
 
சாதி பார்ப்பதற்கு இன்னுமொரு கார‌ணம் சொல்லுவார்கள் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு குணம் இருக்குமாம்...உயர்ந்த சாதி என சொல்லப்படுபவர்களுக்கு மிக நல்ல குணங்கள்,பண்பாடுகள் இருக்குமாம்...இதே ஒவ்வொரு சாதியாய் குறைந்து தாழ்ந்த சாதி என சொல்லப்படும் சாதியில் பிறந்தோருக்கு நல்ல குணங்களே இருக்காதாம்...ஒரு ஆளை பார்த்தவுட‌ன் அவர் பழகும் விதத்தை வைத்து பெரும்பாலும் அவர் என்ன சாதி என்று கண்டு பிடித்து விட‌லாமாம்!
 
எனக்கு இதில் புரியாத விச‌யம் ஒரு மனிதன் நல்ல மனிதனாய்,பண்பானவனாய் வளர்வதற்கு அவனது பெற்றோர்கள் தானே கார‌ணமாய் இருக்க முடியும் எப்படி சாதியை வைத்துக் கொண்டு ஒழுக்கத்தை மதிப்பிடுவார்கள் :unsure:
 
என்னை பொறுத்த வரை இந்த தலைமுறையை மாத்த முடியாது...அடுத்த தலைமுறை எப்படி நடக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...ஆனால் அடுத்த தலைமுறை வளர்ப்பில் இந்த தலைமுறை தானே ஆதிக்கம் செலுத்துகின்றது.
 
எனக்கு தெரிந்த இங்கே பிறந்து வளர்ந்த ஒரு பெடியன் கணக்கில் கெட்டிக்கார‌ன்...ரியூசன் குடுக்கிறவன்...அவன்ட‌ வீட்டை போய் படிக்கிறவையள்...ஒரு பெட்டை அவனிட்டை முதல் நாள் படிக்க வந்திட்டு அடுத்த நாள் வந்து அவனிட்டை கேட்டுதாம் நீங்கள் உங்கட‌ அம்மா,அப்பா ஊரில எந்த இட‌ம் என்று அப்பா கேட்க சொன்னவர் என்று இட‌த்தை சொன்னதும் அடுத்த வகுப்புக்கு பெட்டையைக் காணேல்லையாம் :lol:
 
தனிப்பட்ட என்ட‌ கருத்தை கேட்டால் சாதி இல்லாமல் ஒழிய வேண்டும் என்பது தான் என் விருப்பம் ஆனால் சாதி ஒழியாது என்பது தான் யதார்த்தம் :(

சாதிவெறி பிடித்த பாட்டாளிக்கும் அவனால் ஒடுக்கப்படும் அதே பாட்டாளிக்கும் நடுவில் சுவராகச் சாதியம் இருக்கும் வரை எப்படி உண்மையான ஐக்கியம் அவர்களிடையே எற்படும்???

  • கருத்துக்கள உறவுகள்

சாதி பார்ப்பதற்கு இன்னுமொரு கார‌ணம் சொல்லுவார்கள் ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு குணம் இருக்குமாம்...உயர்ந்த சாதி என சொல்லப்படுபவர்களுக்கு மிக நல்ல குணங்கள்,பண்பாடுகள் இருக்குமாம்...இதே ஒவ்வொரு சாதியாய் குறைந்து தாழ்ந்த சாதி என சொல்லப்படும் சாதியில் பிறந்தோருக்கு நல்ல குணங்களே இருக்காதாம்...ஒரு ஆளை பார்த்தவுட‌ன் அவர் பழகும் விதத்தை வைத்து பெரும்பாலும் அவர் என்ன சாதி என்று கண்டு பிடித்து விட‌லாமாம்!

சாதிக்கு சாதி குணம் பண்பில மாற்றம் இருக்கோ இல்லையோ என்பதற்கு ஆதாரம் இல்லை. அது மக்களின் நம்பிக்கையாக மட்டுமே இருக்க அதிக வாய்ப்புள்ளது. அந்த நம்பிக்கைகளுக்கு அறிவியல் பூர்வ விடைகளும் இல்லை.

ஆனால் மக்களிடையே அல்லது மக்கள் குழுமங்களிடையே பிறப்புரிமையியல் வேறுபாடுகள் சில அவதானிக்கப்பட்டுள்ளன. அதற்காக ஒருவர் மற்றவரில் இருந்து உயிரியல் ரீதியாக தாழ்ந்தவர் என்பது பொருள் அல்ல.

இந்த மரபணு வேறுபாடு என்பது சாதிகளை தீர்மானிப்பனவல்ல.ஒரு பிரதேசத்தில் வாழும்.. மனிதருக்குள்ளேயே மரபணுக்களில் குறிப்பிடத்தக்க..வேறுபாடுகள் உள்ளன என்பது தான் அந்த உயிரியல் உண்மை..! அதாவது அந்த மக்கள் வெவ்வேறு கிளைகளில் இருந்து தோற்றம் பெற்றிருக்கின்றனர் என்பது தான் எடுகோளாக முடியும்.

இந்த படிப்புகளின் படி நோக்கினால்.. சாதியில் கீழாக காட்டப்படும் மக்களே அந்த நிலத்திற்கு அதிகம் பூர்வீகமாக இருப்பது தெரிகிறது. உயர் சாதி என்பவர்களிடம்.. தூர இடத்தில் வாழும் மக்களின் (ஐரோப்பிய மக்களிடம் உள்ள) மரபணுக்களோடு ஒற்றுமை அதிகம் இருக்கிறது.

Analysis of these data demonstrated that the upper castes have a higher affinity to Europeans

than to Asians, and the upper castes are significantly more similar to Europeans than are the lower castes. Collectively, all five datasets show a trend toward upper castes being more similar to Europeans, whereas lower castes are more similar to Asians. We conclude that Indian castes are most likely to be of proto-Asian origin with West Eurasian admixture resulting in rank-related and sex-specific differences in the genetic affinities of castes to Asians and Europeans.

Genetic variation in South Indian castes: evidence from Y-chromosome, mitochondrial, and autosomal polymorphisms.

http://www.biomedcentral.com/1471-2156/9/86

Genetic Evidence on the Origins of Indian Caste Populations.

http://genome.cshlp.org/content/11/6/994.long

Edited by nedukkalapoovan

எனக்கு நிறைய சாதிகளின் பெயர் மறந்து போச்சு.கதையில் சொன்ன சாதிகளின் பெயர்களைத்தவிர வேறு பெயர்கள் இருந்தாலும் வரிசைகட்டி எழுதுங்கள்.அறிந்து கொள்ளக்குடியதாக இருக்கும். ஏனெனில் பின்னுட்டம் இடுபவர்கள் சாதிப்பெயரை பாவித்தால் களவிதி மீறலாகிவிடும்.

சாதிகளைப் பற்றிய கருத்தாடல்கள் சாதிப்பெயர்களைச் சுட்டி சாதீயத்தை ஊக்குவிக்காமல் செய்யப்படவேண்டும். சாதி ஒழிந்து போகவேண்டும் என்று கூறிக்கொண்டு சாதிப்பெயர்களைக் சுட்டி பேதங்களை எண்ணெய் ஊற்றி தீ மூட்டுவது தவிர்க்கப்படவேண்டும்.

களவிதி:

பிரதேச வாதம். சாதீயம் என்பனவற்றை ஊக்குவிக்கும் எந்தக்கருத்தும் தவிர்க்கப்படல் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் இப்படியான சம்பவங்கள் நடந்ததாகக் கேள்விப்படவில்லை. பொருளாதார வசதி, படிப்பு என்று தகுதி பார்ப்பவர்கள் சாதிகளை இப்போதும் இறுக்கிப் பிடித்துக்கொண்டு இருக்கவில்லை.

வரட்டுக் கெளரவம் பார்ப்பவர்கள்தான் இல்லாத பெருமைகளைப் பற்றி பினாத்திக்கொண்டு இருப்பார்கள்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தனிப்பட்ட என்ட‌ கருத்தை கேட்டால் சாதி இல்லாமல் ஒழிய வேண்டும் என்பது தான் என் விருப்பம் ஆனால் சாதி ஒழியாது என்பது தான் யதார்த்தம் :(

இதிலை ரதியின்ரை நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடும் .

  • கருத்துக்கள உறவுகள்

சாதீயம் என்பது, இந்துமதக் கொள்கையான 'வருணாச்சிரம தர்மத்தின்' விளைவாகும்!

சைவ மதத்தினுள் (சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடுபவர்கள்) இந்த சாதீயம் ஆரம்பத்தில் இருந்ததில்லை!

வட இந்தியப் பிராமணர்கள், தென்னிந்தியாவுக்கு  வந்தபோது அவர்களுடன் சாதீயமும் வந்து சேர்ந்தது!

இதைக் கருவிலேயே கிள்ளி எறியப் பல முனைப்புகள், அந்தக் காலத்திலேயே தோன்றின!

குறிப்பாகத் 'திருநாவுக்கரசர்' மட்டுமே 'பிராமணர்' இல்லாத ஒரு நாயனார்! சாதீயத்தின் வலியை உணர்ந்திருந்தார்!

அவரே ஒரு இடத்தில் (திருத்தாண்டகப் பதிகம்) பாடுகையில்,

சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தத்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவுளாரே.

அவ்வையாரும், சாதி இரண்டொழிய வேறில்லை' என்று சாதியை ஒழிக்க முயன்றார்!

வள்ளுவன் சாதியைப் பற்றிக் கதைக்கவேயில்லை!

இவற்றிலிருந்த பார்க்கையில், சாதீயம் இடையில் வந்ததே என்பது தெளிவாகத் தெரிகின்றது!

எனவே 'சாதியத்தைத்' தூக்கிப் பிடிப்பவர்கள், அதை உங்களுடனேயே வைத்திருங்கள்! பொதுத் தளங்களில், நீங்கள் கொண்டுவந்து அவற்றைப் பகிர்வதால், நீங்கள் தான் மற்றவர்கள் மீது, உங்கள் மனத்தில் உள்ள அழுக்குகளை வீசுகின்றீர்கள்!

வேட்டையாடுபவன், தனது கருத்தை நியாயப் படுத்தச் சிங்கம் கூட வேட்டையாடுகின்றது என்று சொல்வது போலவே, உங்கள் கருத்துக்கள் அமைகின்றன!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.