Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெக்ரர் எண்டா திசையும் பருமனும் இருக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெக்ரர் எண்டா திசையும் பருமனும் இருக்கும்.

நாங்கள் திரும்பிப் பார்க்கிறனாங்கள் தான். பின்னையென்ன? இஞ்சை கவனிங்கோடா தம்பியவை என்று ஒரு குரல் சொல்லேக்கை கழுத்தை திருப்பி பார்க்காட்டா அவன் மனிசன் இல்லை கண்டியளோ! அனேகமாய் அது எங்கடை பக்கத்து வகுப்புத்தான். நாங்கள் உயிரியல். அந்த வகுப்பு மற்ஸ் காரரின்ரை. ஏல் ரியுசனெண்டா அப்பிடித்தான். ஒரு சின்னத்தட்டியாலைதான் வகுப்பு பிரிபட்டிருக்கும். அதாலைதான் எங்கடை காலத்திலை ரியுசனுக்கு கொட்டில்கள் என்ற பெயரும் இருந்தது. பழையாக்கள் சிலவேளை குழம்பிப் போவினம். அவையளுக்கு கொட்டில் என்றா கள்ளுக் கொட்டில்தான் விளங்கும்.
 
vectorGeom1.png
வேலாயுதம் எண்ட பெயர் கொமனோ தெரியாது. மணி ரியுசன் வேலாயுதம் மாஸ்டர் ( கனபேருக்கு அவரை கிளி மூக்கு எண்டாத் தான் தெரியும்) நிரு வேலாயுதம் மாஸ்டர் எண்டிருந்ததாலை இவரை வெக்ரர் வேலாயுதம் எண்டாத்தான் தெரியும்.
 
சயன்ஸ் ஹோல்தான் அப்ப யாழ்ப்பாண டவுணிலை சயன்சுக்கு இருந்த ஒரே ரியுசன். அதுக்கு பிறகு சின்னன் சின்னனா சிலது வந்தாலும் அதுதான் அப்ப ஏகபோகம். வெக்ரர் பக்கத்திலை வகுப்பெடுததா கணீரெண்டு இஞ்சாலையும் கேட்கும். எங்கடை வகுப்புக்கு வாத்தியார் இல்லாத நேரங்களிலை அல்லது அவையள் படிப்பிக்கிறது புரியாமல் அல்லது பிடியாமல் இருக்கிற நேர்த்திலை நாங்கள் வெக்ரரின்ரை வகுப்பைத்தான் வாய் பார்க்கிறது.
 
planeBiVector.png
சிரியாதையுங்கோ! மற்ஸ் வகுப்பிலை அப்பிடியொண்டும் கிளியோபெற்றாக்கள் இருக்கேல்லை நாங்கள் திரும்பிப் பார்க்க. எங்கடை பயோ வகுப்புத்தான் தேவதைகளின்ரை இருப்பிடம். மற்ஸ்காரர்தான் எங்கடை வகுப்பை வாய் பார்க்கிறவை.
 
நானும் முதலிலை மற்ஸ் செய்யுறதெண்டுதான் இருந்தனான். உவங்கள் சொன்னாங்கள் மற்ஸ் வகுப்பெண்டா அது காய்ஞ்சு போய் இருக்கும். தவிர யுனிவேசிட்டிக்கு எடுபட்டு போனாலும் காய்ஞ்சு போய் இருக்கும் எண்டு! பேந்தேன் கரைச்சலை? உப்புடியொரு நிலைமையெண்டா பேந்தேன் மற்ஸ் படிப்பாண் எண்டுதான் பயோ படிச்சது.
 
நல்ல காலம். என்ரர் பண்ணியிட்டம். எங்கடை படிப்பின்ரை வள்ளலுக்குஏ எல் பாஸ் பண்ணுறதே பெரிய விசயம். இதிலை யுனி கிடைக்கிறதெண்டா.....
குண்டியிலை தட்டின புளுகம் பாருங்கோ. உதுக்கு ஒண்டும் செய்ய வேண்டாமே?
எங்கடை பட்ஜ் பாருங்கோ எல்லாத்தையும் வித்தியாசமா தான் யோசிக்கிறது. வழமையா என்ர பண்ணின பெடியள் தனித்தனிய தங்கடை சேர்மாருக்கு ஏதாவது வாங்கிக் குடுக்குறவைதானே. நாங்கள் எல்லாரும் சேர்ந்து எல்லா சேர்மாருக்கும் ஒன்றுகூடல் மாதிரி வைச்சு ஏதாவது செய்வம் எண்டு திட்டம் போட்டாச்சு.
 
stock-vector-mathematics-formula-on-squa

திட்டம் போட்டா காணுமே? செய்யவேண்டாமே? அந்தமுறை இன்ஜினியரிங்கும் மெடிசினும் என்ரர் பண்ணுற ( அல்லது பண்ணக்கூடிய ரிசல்ட் இருக்கிற) எல்லாரும் சேந்து கூடிக் கதைச்சாச்சு. காசும் சேர்த்தாச்சு.
 
ஒன்று கூடல் ஒன்று இப்படி ஒரு தனியார் கல்வி நிலையத்தில் நடந்தது அதுதான் முதல்முறை என்று நினை்க்கிறன்.
 
எல்லாருக்கும் ஆச்சரியம். கெமிஸ்ரி மகாதேவா சேர் என்னடி ராக்கம்மா பல்லாக்கு நெளிப்பு என்று பாடியபோது! சும்மா வகுப்பிலை வேடிக்கை பார்த்தாலே ஜேஸ் இங்கு கவனிப்பது என்று சொல்லுற ஆள் எல்லே!
 
வெக்கர் அண்டைக்கு தம்பியவை கவனியுங்கோடா எண்டு சொல்லேல்லலை. ஆனா எல்லாரும் கவனிச்சவை. “நான் உங்களுக்கு இரண்டு விசயம்தான் சொல்லப்போறன் - வாழ்க்கையிலை மறக்காதையுங்கோ” என்றார். ஒன்று சிகரெட் பிடிக்க பழகாதையுங்கோ. மற்றது தண்ணியடிக்க பழகாதையுங்கோ- கனபேர் தொடங்கு தொடங்கு எண்ணுவாங்கள். தண்ணியடிக்கிற நான் சொல்லுறன் தண்ணி சிகரெட் பழகாதையுங்கோ!
 
வெக்ரர் நாங்கள் கொழும்பு வரமுன்னமே வீட்டிலை சறுக்கி விழுந்து அகாலமாய் போய்விட்டார். நாங்களும் செத்த வீட்டிற்கு போனனாங்கள். கனபேருக்கு கண்ணுக்கை தண்ணி!
 
கொழும்பிலை எல்லாக் கூத்தும் ஆடினனாங்கள். கனபேர் சோசலா தொடங்குறம் எண்டிட்டு கவிண்டும் விழுந்தவங்கள். ஆனா நாங்கள் தண்ணியோ சிகரெட்டோ மறந்தும் தொடேல்லை. கனபேர் இப்ப சொன்னாலும் நம்ப மாட்டாங்கள்.
 
வெக்ரர் என்றா பருமன் மட்டுமில்லை. திசையும் இருக்கும்.

http://vajuputhiran.blogspot.ca/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரியூசன் காலங்கள் எப்பவும் மறக்கேலாது . பெட்டையளை பாக்கிறதுக்கெண்டே கொஞ்சப் பெடியள் வருவங்கள் . உங்கடை பகிர்வுக்கு நன்றி சொல்லிறன் நுணா .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மைத்திரேயி உங்கள் கருத்துக்கு. வெக்டரிடம் படித்தது என்றும் மறக்க முடியாது.கணக்கை அணுகும் விதமே தனி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி மைத்திரேயி உங்கள் கருத்துக்கு. வெக்டரிடம் படித்தது என்றும் மறக்க முடியாது.கணக்கை அணுகும் விதமே தனி.

நாங்கள் பருத்திதுறை சயன்ஸ் சென்ரறிலை படிச்சனாங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பருத்திதுறை சயன்ஸ் சென்ரறிலை படிச்சனாங்கள் .

நான் யாழ்ப்பானத்திலே சயன்ஸ் சென்றர் அல்லது கணாஸிடம் படித்த ஆட்கள்.

பதிவுக்கு நன்றி நுணாவிலான். நான் சயன்ஸ் அக்கடமியிலும் பின்னர் உடுப்பிட்டியில் அவரது வீடுக்கு சென்றும் படித்தேன். மிகவும் அருமையான ஒரு உயர் கணித வாத்தியார். குறுக்கு வழியில் கணக்குகளை இலகுவாக செய்வதற்கான திறனை வளர்த்தவர். அவரது சாவுக்கு வரமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கு எண்டைக்கும் இருந்ததுண்டு.

அவரது வகுப்பில் முன் வாங்கில் இருப்பவர்கள் தான் பாவபட்டவர்கள். கேள்வி கணைகளை தாங்குபவர்கள். நாங்கள் எல்லாம் பின்வாங்குகாரர். இன்றைக்கும் கணிதம் மீது பற்றுவர காரணமான அந்த வாத்தியாரை மறக்க முடியவில்லை.

சோதிலிங்கம், மணியம், மகாதேவா, குணசிங்கம், கமலசிங்கம், மணி வேலாயுதம், நாகரட்ணம், வர்ணம், ஹாட்லி சூரியநாதன், முருகையா மாஸ்ரர், திருகோணமலையில்  விக்கி, மரியதாஸ், குமரன், சுதா மாஸ்டர் , கிருஸ்ணா இவர்கள் எல்லாம் மறக்க முடியாத என் ரியுசன் வாத்திகள்.

நிறையப் பேரிடம் படித்திருக்கின்றீர்கள்.

ஹாட்லி சூரியநாதன் கத்திப் படிப்பிப்பது காதில் விழுந்திருக்கின்றது!

வெக்ரர் வேலாயுதம் மாஸ்ரரைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் உயர்தரம் படிக்க ஊரில் இருக்கவில்லை என்பதால் தெரியாது. குறுக்கு வழியில் கணக்குகளைச் செய்தால் அதிகம் புள்ளிகள் கிடைக்காது என்று சொல்வார்களே!

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி நுணாவிலான். நான் சயன்ஸ் அக்கடமியிலும் பின்னர் உடுப்பிட்டியில் அவரது வீடுக்கு சென்றும் படித்தேன். மிகவும் அருமையான ஒரு உயர் கணித வாத்தியார். குறுக்கு வழியில் கணக்குகளை இலகுவாக செய்வதற்கான திறனை வளர்த்தவர். அவரது சாவுக்கு வரமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கு எண்டைக்கும் இருந்ததுண்டு.

அவரது வகுப்பில் முன் வாங்கில் இருப்பவர்கள் தான் பாவபட்டவர்கள். கேள்வி கணைகளை தாங்குபவர்கள். நாங்கள் எல்லாம் பின்வாங்குகாரர். இன்றைக்கும் கணிதம் மீது பற்றுவர காரணமான அந்த வாத்தியாரை மறக்க முடியவில்லை.

சோதிலிங்கம், மணியம், மகாதேவா, குணசிங்கம், கமலசிங்கம், மணி வேலாயுதம், நாகரட்ணம், வர்ணம், ஹாட்லி சூரியநாதன், முருகையா மாஸ்ரர், திருகோணமலையில்  விக்கி, மரியதாஸ், குமரன், சுதா மாஸ்டர் , கிருஸ்ணா இவர்கள் எல்லாம் மறக்க முடியாத என் ரியுசன் வாத்திகள்.

இவ்வளவு வாத்தியிட்டையும் நான் ரீயூசனுக்கு மட்டும் போய் படித்திருந்தால் எங்கேயோ போயிருப்பேன் :lol:  :D  :rolleyes:

நிறையப் பேரிடம் படித்திருக்கின்றீர்கள்.

இவ்வளவு வாத்தியிட்டையும் நான் ரீயூசனுக்கு மட்டும் போய் படித்திருந்தால் எங்கேயோ போயிருப்பேன் :lol:  :D  :rolleyes:

கிருபன், ரதி என்ன செய்வது வாழ்கையில் சின்ன வயசிலேயே ஓட வேண்டி வந்துவிட்டது. அன்றில் இருந்து இன்று வரை ஓட்டம் தான். குறுகிய காலத்துக்குள் நிறைய படிக்க வேண்டி இருந்தது, அதனால் என் வயசு, எனக்கு முதல், அடுத்த வயசுக்காரர் கூட படிக்க வேண்டி இருந்தது. ஒரே வாத்தியிடம் போனால் கேள்விகள் கேட்பார்கள், அதனால் நிறைய பேரிடம் மாறி மாறி ஓட வேண்டி இருந்தது.

ரதி, வாழ்கையில் அப்படி இருந்தால் இப்படி இருந்தால் என்று பிரிச்சு பார்க்காதீர்கள். எல்லாருடைய வாழ்க்கையிலும் கஷ்டங்களும், முயற்சிகளும், வெற்றிகளும், தோல்விகளும் இருந்திருக்கும். எல்லாமே ஒரு 12B மாதிரி தான்.

என் வாழ்க்கையில் சில முடிவுகளை மாத்தி எடுத்திருந்தால் இப்போ எங்கள் வாழ்க்கை எங்கேயோ மாறி இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு வாத்தியிட்டையும் நான் ரீயூசனுக்கு மட்டும் போய் படித்திருந்தால் எங்கேயோ போயிருப்பேன் :lol:  :D  :rolleyes:

என் வாழ்க்கையில் சில முடிவுகளை மாத்தி எடுத்திருந்தால் இப்போ எங்கள் வாழ்க்கை எங்கேயோ மாறி இருந்திருக்கும்.

கூல் டவுன் மேடம்...

எங்கே போயிருந்திருப்பீர்கள் என்று இருவரும் 10 வசனம் எழுத முடியுமோ?

நாங்களும் என்கேயன் போயிருக்கலாமோ அல்லது போக இடமிருக்கோ என்று அறியத்தான்

CHEMISTRY-  SAM,V.T.K

PHYSICS     -GNAM,THAVA

ZOO           -THANAPALASINGAM,FRANCIS

BOTANY    -SIVAVEERASINGAM.ACADAMY TEACHER,

இவர்கள் தான் எங்கட டியுசன் வாத்திகள் .சிவவீரசிங்கத்தின் வகுப்பிற்கு நான் எக்ஸ்ரா பென்சில்கள் கொண்டுப்போறது.பொல்லாத பகிடிகள் விடுவார் அந்த நேரம் வாய் விட்டு சிரிக்க பயத்தில பென்சிலை வாயில் வைத்து கடித்து அடக்கிவிடுவேன் .சாந்தி தியேட்டருக்கு அருகில்தான் வகுப்பு ,சிலவேளை படத்தின் வசனங்கள் ,பாட்டுகள் கேட்கும் அப்போது வாத்தி சொல்லும் "வடக்கத்தையான் சொத்தையும் தயிரையும் திண்டுவிட்டு செமிக்காமல் செய்யுற வேலை உது "

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பிராஜா என்று ஒரு விலங்கியல் ஆசிரியரிடம் படித்தனான்கள்; சரியான வேகம், அடிக்கடி கேட்டபார்/சொல்லுவார்

""அப்பயென்ன ம்ம்ம் சொல்லு"

சோதிலிங்கம்;

"மண்டைக்காய் என்ன செய்வான் என்றால். கேள்வியை அப்படி இப்படி பார்ப்பன்..இது வராது, இதும் வராது..இது பொசிடிவ், எண்டபடியால் இதுவும் வராது..அப்ப விடை 3வதுதான், இனி மற்றாக்களுக்கும் பயோகாரருக்காகவும், எழுதுங்கோ .. சமன்பாட்டை எழுதி ............."

மணியம்

இவங்கள் ஒண்டும் படிக்கிறதும் இல்லை சும்மா வாறது, போன கிழமை போட்ட கொப்பியை தேடி எடுத்து கொண்டு வந்திருகிறார்கள் அவ்வளவும்தான்

குணசீலன்

ஹீடிங் போடுங்கோ தாழ்வகை தாவரங்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்

வெக்டரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். சோதிலிங்கம் சேர் இப்பவும் யாழ் இந்துவில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்.

எங்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய ஆசிரியர்கள் சிலரின் பெயரும் இங்கு அடிப்பட்டு இருக்குது. பகிர்விற்கு நன்றி நுணா. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வயது போனதில ஆசிரியர்களின் பெயர்கள் கூட மறந்து போச்சு. :D :D

டபிள் மத்ஸ் பத்தரை யாருக்கும் தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கூறிய வாத்திமாரில் கெமிஸ்ட்ரி மணியம் சேரிடம் படித்திருக்கிறேன். கட்டுமஸ்தான உடல், கராத்தே கறுப்பு பட்டி என்று பெடியள் கதைப்பாங்கள். சொந்த இடம் மிருசுவில். ஒருமுறை
அவர் மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் போய் விபத்து ஏற்றப்பட்ட போது நானும் எனது நண்பனும் அவரின் வீடுவரை போய்ப் பார்த்தோம். "தம்பியவை, இண்டைக்கு வீட்டை சாப்பிட்டிட்டு போங்கோ" எண்டு சொல்லி எங்கள் இருவரையும் இருத்தி சாப்பாடு போட்டார். சாப்பிட்டு முடிய, "நல்ல பிலாப்பழம் கிடக்கு கொண்டு போறியளே" எண்டு கேட்டிட்டு அவரே சாரத்தையும் மடிச்சு கட்டிக்கொண்டு பிலா மரத்தில ஏறிட்டார். நாங்களும் சேட்டை கழட்டி வச்சுப்போட்டு ஏறி, கயிறு போட்டு பிலாப்பழத்தை இறக்கி மோட்ட சைக்கிளில் வச்சு கட்டி வீட்ட கொண்டு வந்து சேர்த்தம். கண்டிப்பான, அதேநேரம் மாணவர்களில் மிகவும் பாசமான ஒரு வாத்தி.

எனது வாத்திமார்

இணைந்த கணிதம் - அருளர், கெங்காதரன் சேர், இடைக்கிடை ராஜஸ்கந்தன்
பௌதீகம் - சிவகுமார் சேர், சந்திரப் பிரகாசம், பிரபா அண்ணா
இரசாயனம் - செல்வமலர் ரீச்சர், தங்கராஜா சேர், மணியம் சேர், இடைக்கிடை அரசியல் கலந்து புலிக்குட்டி குணசீலன்.

இவர்களில் எனக்குப் பிடிச்சது மணியம் சேர், கெங்காதரன் சேர், ஒருதடவை என்னுடன் தேவையில்லாமல் கொழுவிய அருளர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் கூறிய வாத்திமாரில் கெமிஸ்ட்ரி மணியம் சேரிடம் படித்திருக்கிறேன். கட்டுமஸ்தான உடல், கராத்தே கறுப்பு பட்டி என்று பெடியள் கதைப்பாங்கள். சொந்த இடம் மிருசுவில். ஒருமுறை

அவர் மோட்டார் சைக்கிளின் குறுக்கே நாய் போய் விபத்து ஏற்றப்பட்ட போது நானும் எனது நண்பனும் அவரின் வீடுவரை போய்ப் பார்த்தோம். "தம்பியவை, இண்டைக்கு வீட்டை சாப்பிட்டிட்டு போங்கோ" எண்டு சொல்லி எங்கள் இருவரையும் இருத்தி சாப்பாடு போட்டார். சாப்பிட்டு முடிய, "நல்ல பிலாப்பழம் கிடக்கு கொண்டு போறியளே" எண்டு கேட்டிட்டு அவரே சாரத்தையும் மடிச்சு கட்டிக்கொண்டு பிலா மரத்தில ஏறிட்டார். நாங்களும் சேட்டை கழட்டி வச்சுப்போட்டு ஏறி, கயிறு போட்டு பிலாப்பழத்தை இறக்கி மோட்ட சைக்கிளில் வச்சு கட்டி வீட்ட கொண்டு வந்து சேர்த்தம். கண்டிப்பான, அதேநேரம் மாணவர்களில் மிகவும் பாசமான ஒரு வாத்தி.

மணியம் மாஸ்ரரிடம்  கெமிஸ்றி படித்துள்ளேன். டபிள் மாத்தும் படிப்பிப்பார்.சென் ஜோன்சில் படிப்பித்தவர்.இப்போ எங்கென்று தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மணியம் மாஸ்ரரிடம்  கெமிஸ்றி படித்துள்ளேன். டபிள் மாத்தும் படிப்பிப்பார்.சென் ஜோன்சில் படிப்பித்தவர்.இப்போ எங்கென்று தெரியாது.

2006 வரை சென்ஜோன்சில் தான் படிப்பித்தவர். இப்பவும் அங்குதான்

படிப்பிக்கிறார் என நினைக்கிறேன். அவர் கணிதமும் படிப்பிப்பார் என்று

இன்றுவரை தெரியாது. ஒருமுறை இலங்கை போயிருந்தபோது நண்பன் ஒருவன் அவரின்

இரசாயன செய்முறைகள் அடங்கிய இறுவட்டு ஒன்றை போட்டு காட்டினான். முதன்

முறையாக தமிழில், உயர்தர இரசாயனவியல் பரிசோதனைகள் அனைத்தையும் செய்து, அதனை

தனது சொந்தக் காசில் ஒளிப்பதிவு செய்து வெளியிட்டிருந்தார். அவரின்

குரலைக் கேக்க சந்தோசமாக இருந்தது. பெட்டை பெடியன் பேதமின்றி அனைவரையும்

போட்டுக்கு (கரும்பலகை) விடுவார். என்ன குழப்படி செய்தாலும் படிப்பை கைவிடவேண்டாம் எண்டு சொல்லுவார். உதாரணத்துக்கு தனது ஒரு மாணவன் பயங்கர கள்ளடி என்றும் உயர்தர சோதினையில் அனைத்து பாடங்களிலும் அதியுயர் சித்தி எடுத்து பொறியியல் போனதாகவும் அடிக்கடி

சொல்லுவார். எனது உற்ற நண்பன் ஒருத்தனை வகுப்பிலிருந்தும்

கலைத்திருக்கிறார். புன்னகை தவழும் முகத்துடனேயே எப்பவும் இருப்பார்.

சரியான சிம்பிளான மனிசன். படிப்பிக்கும் போது செருப்பு கூட போடமாட்டார்.

மணியம் சேர் பற்றி முன்பொருமுறை நான் எழுதியது

A /L காலம்.....

இந்தக் காலப் பகுதியில நடந்த கனக்க விஷயங்கள் எனக்கு இப்பவும் அப்பிடியே ஞாபகம்

இருக்கு. துடக்கத்தில நடந்த ஒரு குறிப்பிடக் கூடிய விஷயம் மணியம் சேர் A /L

துடங்கி மூண்டு நாளில இவனை வகுப்பால கலைச்சது. என்ன நடந்தது எண்டா, ஒரு

மணியம் வாத்தியிண்ட வகுப்பில அந்தாள் வளித் துணிக்கைகள் அது இது எண்டு எதோ

அலம்பிகொண்டிருக்க நான் வலு சீரியசா போட்ட பாத்துக் கொண்டிருந்த, பக்கத்தில

இருந்த இவனைக் கேட்டன் "மச்சான் லைலா வந்தவளோ எண்டு". இவன் அதுக்கு முதலே

அந்தாள் படிப்பிசுக் கொண்டிருகேக்க என்னட்ட சின்சியரா அது சம்பந்தமா எதோ

கேட்டவன். நான் வகுப்பில ஒராளை தேடிகொண்டிருந்த இதில என்னைக் குழப்பாதை

எண்டு உடனே சொல்ல அப்பவே அந்த மனிசன் என்னைக் கண்டிட்டுது ஆனா ஒண்டும்

சொல்லேல்ல. நான் திரும்பவும் கதைக்கவும் அந்த மனிசன் பாத்திட்டு என்ன

நினைச்சுதோ தெரியாது "எழும்படா கழுதை" எண்டு சொல்லி இவனை எழுப்பி வெளியால

கலைச்சு இனி வகுப்புக்கும் வராதை எண்டு சொல்லிப் போட்டுது. எனகேண்டா "லைலா"

வராத கவலையுடன் என்னால அநியாயமா ஒருத்தன் வெளியால போறானே எண்ட கவலையும்

தொற்றிக்கொண்டது.

http://www.yarl.com/forum3/index.php?app=forums&module=post&section=post&do=reply_post&f=49&t=107830&qpid=801064

பதிவுக்கு நன்றி நுணாவிலான். நான் சயன்ஸ் அக்கடமியிலும் பின்னர் உடுப்பிட்டியில் அவரது வீடுக்கு சென்றும் படித்தேன். மிகவும் அருமையான ஒரு உயர் கணித வாத்தியார். குறுக்கு வழியில் கணக்குகளை இலகுவாக செய்வதற்கான திறனை வளர்த்தவர். அவரது சாவுக்கு வரமுடியவில்லை என்ற வருத்தம் எனக்கு எண்டைக்கும் இருந்ததுண்டு.

அவரது வகுப்பில் முன் வாங்கில் இருப்பவர்கள் தான் பாவபட்டவர்கள். கேள்வி கணைகளை தாங்குபவர்கள். நாங்கள் எல்லாம் பின்வாங்குகாரர். இன்றைக்கும் கணிதம் மீது பற்றுவர காரணமான அந்த வாத்தியாரை மறக்க முடியவில்லை.

சோதிலிங்கம், மணியம், மகாதேவா, குணசிங்கம், கமலசிங்கம், மணி வேலாயுதம், நாகரட்ணம், வர்ணம், ஹாட்லி சூரியநாதன், முருகையா மாஸ்ரர், திருகோணமலையில்  விக்கி, மரியதாஸ், குமரன், சுதா மாஸ்டர் , கிருஸ்ணா இவர்கள் எல்லாம் மறக்க முடியாத என் ரியுசன் வாத்திகள்.

Lt.T நாகரட்ணம் ?  :)

Lt.T நாகரட்ணம் ?  :)

அதே Lt - நாகரட்ணம் தான். சென்றல் college வாத்தி. அந்தாளிட்ட படிக்கிறமாதிரி Inorganic chemistry  யாரிடமும் படிக்க முடியாது.

Chemistry

நாகரட்ணம் - Inorganic (பச்சை கலர் ஜீன்ஸ் தான் அடிக்கடி போடுவார், இவர் உண்மையிலேயே ஒரு லெப் தானோ என்று அடிக்கடி சந்தேகம் வரும்)

மகாதேவா - Organic , Basic ( சயின்ஸ் அக்கடமியில் இருந்து சென்டருக்கு அடிக்கடி சையிக்கிளில் ஏத்தி கொண்டு வருவேன், நல்ல மனுஷன், கொழும்பிலே இருந்தும் சாவீட்டுக்கு போகமுடியவில்லை)

மணியம் - Thermo (பள்ளிக்கூடத்தில் என் வகுப்பு வாத்தி, மூக்காலே கதைக்கிற மாதிரி இருக்கும், கையை பொத்தி கொண்டு முதுகிலே ஒரு போடு போடுவார்) 

சத்தீஸ் - Organic (பிரவுன் ரோட்ல அவரது வீட்டுக்கு சென்று படிச்சேன்)

Physics

சோதிலிங்கம் - MCQ , Shortcuts ( உனக்கு A எண்டு எழுதிபோட்டு தான் கேள்வி கேட்பார், அண்ணாவின் பேரை சொல்லித்தான் என்னை கூப்பிடுவார்)

வர்ணம் - Structure & Essay (அழகான எழுத்துகள், ஒவ்வொருவரியும் செய்முறையில் காட்டுவார்)

Double Maths

வெக்டர் - Vector (கண்டிப்பானவர், உடுபிட்டி வல்வை வெளிக்கு போகமுதல் இவரது வீடு, வீட்டிலும் சென்று படித்தேன்)

குணசிங்கம் - Algebra இவரிடம் தான் விடையில் இருந்தும் கேள்விக்கு போகலாம் என்று பழகினேன் (ஸ்டான்லி college இற்கு கிட்டே அவரது வீடுக்கும் சென்று படித்தேன், நல்லா தண்ணி அடிப்பார்) 

கமலசிங்கம் - ஆறுதலாக சொல்லித்தருவார், என் வயதுக்கு மீறின பாடங்களை இவரிடம் கற்றேன் (கோண்டாவில் நிரு )

திருமலையில் நான் படித்த வாத்திகளை பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

சத்தீஸ் - Organic (பிரவுன் ரோட்ல அவரது வீட்டுக்கு சென்று படிச்சேன்

உங்களை பார்க்க ஒரு இரசாயன ஆய்வு கூடம் மாதிரி இருக்கு... :)

இதில் 3 பேரிடம் படித்தனான், நாலாவது ஆளிடம் -மகாதேவா-,, எதோ ஒரு போட்டியில் பங்கு பற்றி வென்றதால் அவரின் கையொப்பத்துடன் அவரது inorgnic chemistry புத்தகம் பரிசாக பெற்றனான்.-மண்டை காய்தானே :( -படிக்கிற காலத்தில் ஏகலைவன் மாதிரி அதை படித்தேன்,ஆனால் அதைவிட அது பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிகொடுக்க பெரிதும் உதவியது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

CHEMISTRY-  SAM,V.T.K

PHYSICS     -GNAM,THAVA

ZOO           -THANAPALASINGAM,FRANCIS

BOTANY    -SIVAVEERASINGAM.ACADAMY TEACHER,

இவர்கள் தான் எங்கட டியுசன் வாத்திகள் .சிவவீரசிங்கத்தின் வகுப்பிற்கு நான் எக்ஸ்ரா பென்சில்கள் கொண்டுப்போறது.பொல்லாத பகிடிகள் விடுவார் அந்த நேரம் வாய் விட்டு சிரிக்க பயத்தில பென்சிலை வாயில் வைத்து கடித்து அடக்கிவிடுவேன் .சாந்தி தியேட்டருக்கு அருகில்தான் வகுப்பு ,சிலவேளை படத்தின் வசனங்கள் ,பாட்டுகள் கேட்கும் அப்போது வாத்தி சொல்லும் "வடக்கத்தையான் சொத்தையும் தயிரையும் திண்டுவிட்டு செமிக்காமல் செய்யுற வேலை உது "

சிவவீரசிங்கம் , தம்பிராஜா,வர்ணம் ஆகியோர் சயன்ஸ் சென்றரில் படிப்பித்த ஆட்கள். பற்றிக்ஸில் படிப்பித்த தில்லைநாதன் (கெமிஸ்றி) மாஸ்டரை தெரியுமோ? கொழும்பில் இப்பொழுதும் படிப்பிக்கிறார் என கேள்வி.

தில்லைநாதன் "மாஸ்டர் இன்ஸிடியூட்டிலும்" கற்பித்தவர்.
 
"சக்திச் சொட்டெண்கள் " ( electron orbits) என்ற பதத்தை அடிக்கடி பாவிப்பார்.
 
நாகரட்ணம் மாஸ்டர் பளையில் இருந்து வருபவர். அந்தக் காலத்தில் யாழில் லேடீஸ் ஓடும் "சளி" ( chally)  என்ற பைக்கில் தன் தம்பியுடன் யாழ் வருவார். இது ஒரு சிறிய பைக். இவரும் தம்பியும் உருப்படியான ஆட்கள்.
 
இந்த இரண்டு பேரையும் சுமந்து கொண்டு சொல்லொன்னா சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு சளி பைக் ஓடிவரும். தம்பியார் பின்னால் இருப்பார். அவரின் பின் பக்கத்தில் மூன்றில் ஒன்று தான் பைக் சீட்டில் இருக்கும். மிச்சம் வெளியால் தொங்கும்.

அதே Lt - நாகரட்ணம் தான். சென்றல் college வாத்தி. அந்தாளிட்ட படிக்கிறமாதிரி Inorganic chemistry  யாரிடமும் படிக்க முடியாது.

Chemistry

நாகரட்ணம் - Inorganic (பச்சை கலர் ஜீன்ஸ் தான் அடிக்கடி போடுவார், இவர் உண்மையிலேயே ஒரு லெப் தானோ என்று அடிக்கடி சந்தேகம் வரும்)

மகாதேவா - Organic , Basic ( சயின்ஸ் அக்கடமியில் இருந்து சென்டருக்கு அடிக்கடி சையிக்கிளில் ஏத்தி கொண்டு வருவேன், நல்ல மனுஷன், கொழும்பிலே இருந்தும் சாவீட்டுக்கு போகமுடியவில்லை)

மணியம் - Thermo (பள்ளிக்கூடத்தில் என் வகுப்பு வாத்தி, மூக்காலே கதைக்கிற மாதிரி இருக்கும், கையை பொத்தி கொண்டு முதுகிலே ஒரு போடு போடுவார்) 

சத்தீஸ் - Organic (பிரவுன் ரோட்ல அவரது வீட்டுக்கு சென்று படிச்சேன்)

Physics

சோதிலிங்கம் - MCQ , Shortcuts ( உனக்கு A எண்டு எழுதிபோட்டு தான் கேள்வி கேட்பார், அண்ணாவின் பேரை சொல்லித்தான் என்னை கூப்பிடுவார்)

வர்ணம் - Structure & Essay (அழகான எழுத்துகள், ஒவ்வொருவரியும் செய்முறையில் காட்டுவார்)

Double Maths

வெக்டர் - Vector (கண்டிப்பானவர், உடுபிட்டி வல்வை வெளிக்கு போகமுதல் இவரது வீடு, வீட்டிலும் சென்று படித்தேன்)

குணசிங்கம் - Algebra இவரிடம் தான் விடையில் இருந்தும் கேள்விக்கு போகலாம் என்று பழகினேன் (ஸ்டான்லி college இற்கு கிட்டே அவரது வீடுக்கும் சென்று படித்தேன், நல்லா தண்ணி அடிப்பார்) 

கமலசிங்கம் - ஆறுதலாக சொல்லித்தருவார், என் வயதுக்கு மீறின பாடங்களை இவரிடம் கற்றேன் (கோண்டாவில் நிரு )

திருமலையில் நான் படித்த வாத்திகளை பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.

குணசிங்கம் - எப்பவும் சிரித்த சாந்த முகம், நல்ல வாத்தியார்.

நல்லையா மாஸ்டரிடம்தான் நான் கூட படித்தது. நால்லையா மாஸ்டரின் கணக்கில் என்னை மறந்து முன்னுக்கிருந்த ஒரு பெண்ணின் பின்னலை பிடித்து கூந்தலில் இருந்த கிளிப்பை கழுட்டிவிட்டேன். பெடியள்தான் தட்டி என்ன மச்சான் நடக்குது என்று கேட்கதான் சுய நினைவுக்கு வந்தேன்.

மற்றவர்களைப்பற்றி பிறகு எழுதுகின்றேன்

Edited by வந்தியதேவன்

  • கருத்துக்கள உறவுகள்

நாகநாதன் மாஸ்டரை மறக்கமுடியாது, (நியூ மாஸ்டர் இன்ஸ்டிடுட்) மனுஷன் கத்தித்தான் படிப்பிக்கும், வகுப்பறையும் கிட்டதட்ட 50,55 மீட்டர் வரும், பாக்க கஷ்டமாக இருக்கும். விலங்கியலில ஒரு mcq க்கு கூட விடை இல்லாமல் இராது அவரின் நோட்சில். தாவரவியல், சதீஸ் என நினைக்கிறன், கொஞ்சம் உயரம் குறைவு. வர்ணமும் உங்குதான் படிப்பித்தவர். இரசாயனம், சத்தீஸ் (Brown road ), இவரின் நோட்சை படிப்பதற்கே, இன்னொருவரிடம் டயுசனுக்கு போகவேண்டும், அவ்வளவு செறிவாக இருக்கும். ஞானத்திடமும் சிறிதுகாலம் போனது. எங்க படிச்சாலும் ஒட்டிரதுதானே ஒட்டும் ...... ஊர்விட்டு ஊர்வந்து, ஊர்பாத்ததும், அரசியல் கதைத்ததும் தான் மிச்சம். ஆனாலும் அந்த ஒரு வருடம் ஆழமான வடுவை பதிந்து சென்றது, நல்லதும் கெட்டதுமாக.

Edited by மலையான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.