Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் : கிளிங்டன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (முதலாம் பாகம்) : கிளிங்டன்


 

 

80 களில் ரெலோ இயக்கத்தில் இணைந்துகொண்டு ரெலோ இயக்கம் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு  கைது செய்யப்படும் வரை அவ்வியக்கத்தோடு  இணைந்திருந்த ரெலோ இயக்கத்தின் முன்னை நாள் போராளி கிளிங்டன் எழுதும் தொடர்.

 

 

எல்லாச் சிறுவர்களைப் போலவே நாங்களும் எமது வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிருந்தோம். எனது எதிர்காலம் தொடர்பான கனவுகளையும் புத்தகங்களையும் சுமந்துகொண்டே எனது ஒன்பதாம் வகுப்புப் படிப்பு ஆரம்பிக்கிறது. அன்பான அம்மா, அக்கறையுள்ள அப்பா சகோதரிகள், சகோதரன் என்ற எனது சிறிய குடும்பம் மகிழ்ச்சிகரமான மெல்லிசையாகவே எம்மை நகர்த்திச்சென்றது. யாழ்ப்பாணது வெம்மைக்கு நிழல் தரமுடியாத பனைமரங்கள் கூட எதிர்காத்தின் கோரமுகத்தை அறிந்திருக்க நியாயமில்லை.


 

1977_jaffna-300x219.jpg

 

1977 ஆம் ஆண்டிலேயே எனது ஒன்பதாம் வகுப்பு அமைதியாக ஆரம்பமகிறது. அந்த ஆண்டின் வரலாற்று நிகழ்வுகள் என்னை அன்னிய தேசத்திற்கு அழைத்து வரும் என்று ஒரு நாள் கூட நான் கனவுகண்டதில்லை.
1977 இல் நடைபெற்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தனி நாட்டுக் கோரிக்கையை முன்வைத்துப் பிரச்சாரம் மேற்கொண்டது. மேடைகளில் இடிபோல பேச்சாளர்கள் முழங்கினார்கள். தமிழர்களுக்கு என்று ஒரு நாடு தேவை என்றார்கள். எங்கும் உதய சூரியன் கொடி பறந்தது.


 

அச்சுவேலியில் எனது சிறிய கிராமத்திலிருந்து பள்ளிக்கு சைக்கிளில் போகும் ஒவ்வோரு மூலையிலும் கூட்டணி வேட்பாளர்களின் சுவரொட்டிகள் உதய சூரியன் கொடியோடு காணப்பட்டன.
வீட்டில் அப்பாவிலிருந்து பள்ளியில் ஆசிரியர்கள் வரை கூட்டணிக்கே வாக்குப் போட வேண்டும் என்றே கதைத்துக்கொண்டார்கள்.


 

தமிழர் விடுதலைக் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அதே போல தமிழர்கள் இல்லாத பகுதிகளில் எல்லாம் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் கட்சியான யூ.என்.பி வெற்றிபெற்றது.


 

ஜேயவர்தன ஆட்சிக்கு வந்த முதல் நாளே நாட்டைப் பிரிய விடமாட்டேன் என்றார்.


 

அப்போது யாழ்ப்பாணம் உயிர்த்துடிப்போடு இருந்த காலம். வார இறுதி களியாட்ட நிகழ்ச்சிகள், விவாத மேடைகள், நாடகங்கள், பாட்டுக் கச்சேரிகள் என்று துயரங்களைத் தொலைத்துவிட்டு வாழ்ந்திருந்தோம். 1977 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் நடைபெற்ற களியட்ட விழா (Carnival) ஒன்று முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றது. அதனைப் பார்க்கச் சென்ற நான்கு சிங்களப் போலீசார் பற்றுச் சீட்டு பெற்றுக்கொள்ளாமல் உள்ளே செல்ல முற்பட்டார்கள். பற்றுச்சீடு கேட்டவர்களைத் தாக்கிக் காயப்படுத்தினார்கள். இந்த மோதலின் பின்பு நாடு முழுவதிலும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பமாகின.


 

நாடு முழுவதும் முன்னூறு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். கொழும்பில் வன்முறை வெடித்தபோது பாதுகப்புப் படைகள் பார்த்துக்கொண்டிருந்ததாகச் செய்திகள் வருகின்றன.


 

எனது அக்கா திருமணமாகி கொழும்பிலேயே வாழ்க்கை நடத்தினார்.


 

செய்திகள் வர நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அம்மாவும் அப்பாவும் கண்ணீரோடு வானொலிக்கு அருகில் உட்கார்ந்து கொள்வார்கள்.


 

கொழும்பில் தமிழர்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வசதியுள்ளவர்களும் வசதியற்றவர்களும் ஏதோ ஒரு வழியில் யாழ்ப்பாணத்திற்கு வந்து சேர்ந்தனர். கொல்லப்பட்டவர்கள் போக ஆயிரக்கணக்கான காயப்பட்ட தமிழர்கள் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வேளையில் எனது அக்காவும் அங்கிருந்து தப்பி புகையிரதத்தில் யாழ்ப்பாணம் நோக்கி அவரது கணவரோடும் ஐந்து வயது மகளோடும் வருகிறார்.


 

அவர்கள் பயணம் செய்யும் போது வன்முறை ஓரளவு தணிந்திருந்தது. இருந்த போதும் யாழ்ப்பாணம் வந்த புகையிரதங்களின் மீது தாக்குதல்கள் நடைபெற்றன. அக்காவும் கணவரும் வந்த புகையிரதத்தின் மீது வியாங்கொடை என்னுமிடத்தில் சிங்களக் காடையர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தினார்கள். அவ்வேளையில் ஐந்து வயது அக்காவின் மகளின் நெற்றியில் காயம் ஏற்படுகிறது.


 

அவர்கள் யாழ்ப்பாணம் வருவதற்கு முன்பதாக அனுராதபுரம் போன்ற பல இடங்களில் புகையிரதம் நிறுத்தப்பட்டாலும் அங்கெல்லாம் அவர்கள் இறங்கி மருத்துவமனைக்குச் செல்லப் பயந்தார்கள். அந்த இடங்களிலெல்லாம் சிங்களக் காடையர்கள் வன்முறையில் ஈடுபட்டிருந்தார்கள். தமிழர்கள் தாக்கப்பட்டிருந்தார்கள்.
இதனால் யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கியவுடன் யாழ்ப்பாண மருத்துவமனைக்குச் சென்று மகளின் காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்டுதான் வீடுவந்து சேர்ந்தனர்.


 

நாமெல்லாம் அதிர்ர்சியில் உறைந்துபோனோம்.


 

1977.jpg

 

பேரினவாத வன்முறை ஆரம்பித்த நாட்களிலிருந்து அக்கா யாழ்ப்பாணம் வந்து சேரும் வரையான இடைக்காலப்பகுதியில் நாம் அனுபவித்த வேதனை, குழைந்தையின் மீதான தாக்குதல்கள் என்பன எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. தமிழ் மொழி பேசுகின்ற ஒரே காரணத்திற்காக இந்த நாட்டில் வாழ்வதே சாத்தியமில்லை என்ற உணர்வு என்னை விரக்திக்கும் வெறுப்பிற்கும் உள்ளாக்கியது.


 

மனித வாழ்வியலின் துன்ப துயரங்களைக் கூட அறிந்திராத சிறுவனான எனது மனத்தில் அப்பாவிகளான எம்மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைக்கு எதிராக எதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வு ஏற்படுகிறது.


 

அப்போது நானும் எனது பள்ளி நண்பர்களும் இயக்கங்களைத் தேடியலைகிறோம். இயக்கங்களின் நடவடிக்கைகள் மிகவும் இரகசியமானதாகவே இருந்ததால் எங்களால் அவர்களைக் தேடிக் கண்டுகொள்ள முடியவில்லை. கல்வியில் நாட்டம் ஏற்படவில்லை. அம்மாவும் அப்பாவும் நான் டாக்ராகவோ எஞ்சினியராகவோ வருவேன் எனக் கனவுகண்டுகொண்டிருக்க நான் இயக்கங்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.


 

அப்போது வசாவிளானில் நான் படித்த பள்ளியில் தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி என்ற அமைப்பு கூட்டங்களை நடத்தியது. அந்தக் கூட்டத்திற்கு சென்ற நானும் எனது நண்பர்க சிலரும், அவர்களது பேச்சைக் கேட்டு இது இயக்கத்தின் முன்னணி அமைப்பாகத் தான் இருக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம்.


 

அவர்களிடம் பேசிப்பார்த்த போது அவர்கள் தெளிவாக ஆயுதப் போராட்டம் பற்றி எதையும் சொல்லவில்லை என்றாலும், நாங்கள் அது இயக்கமாகத் தான் இருக்க வேண்டும் என்ற அனுமானத்தில் இணைந்து கொள்கிறோம்.


 

1982 ல் அதன் தலைவர் என அறிமுகப்படுத்திக்கொண்ட விசுவானந்த தேவரைச் சந்திக்கிறோம். தான் கேகேஎஸ் சீமந்து தொழிற்சாலையில் வேலை பார்பதாகவும் தமது இயக்கமான என்.எல்.எப்.ரி பற்றியும் சொல்கிறார்.


 

இடைக்கிடை அவர்களின் சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம். அடிக்கடி விசுவாந்ததேவரை சந்தித்து அவர் கூறுவதைக் கேட்போம். எமக்குப் பெரும்பாலானவை விளங்குவதில்லை. புத்தங்கள் வெளியீடுகள் என்று வாசிப்பதற்குத் தருவார். நாங்கள் படித்தாலும் எதுவும் எமக்கு விளங்கிக்கொள்ளக் கூடியதாக இல்லை.


 

ஒரு கூட்டத்தில் மக்களை தமது இயக்கத்திற்கு ஆதரவாகத் திரட்டுவதற்கு என்ன வழி என்று ஆலோசனை சொல்லுமாறு விசு கேட்கிறார். என்னுடைய நண்பர் ஒருவர் மட்டும் ஆலோசனை சொல்கிறார். நாளை இராணுவம் போல உடுப்புப் போட்டுக்கொண்டு சிங்களத்தில் கதைத்து பஸ்நிலையத்தில் வைத்து மக்களைத் தாக்கினால் மக்கள் எம்மோடு இணைந்து கொள்வார்கள் என்று சொல்கிறார். அவரது பதிலால் விசனமடைந்த விசுவானந்ததேவர் இனிமேல் அவரை கூட்டங்களுக்கு வரவேண்டாம் எனத் திருப்பியனுப்புகிறார்.


 

நாங்கள் தொடர்ந்து விசுவின் அரசியல் வகுப்புக்களுக்குச் செல்கிறோம். ஒவ்வொரு கூட்ட முடிவிலும் எப்போது இராணுவப் பயிற்சி தருவீர்கள் என்பதே எமது கேள்வியாக இருந்தது.


 

இராணுவப் பயிற்சி தொடர்பான கேள்விக்கு அவர் மறுப்புத் தெரிவிப்பதில்லை. அவர் வேறு போராட்ட வழிமுறைகளையும் கூறுவதில்லை. கிளிநொச்சியில் இராணுவப் பயிற்சி முகாம் தொடங்கமுயற்சிக்கிறோம். விரைவில் இராணுவப்பயிற்சி தரப்படும் என்கிறார். நான் கல்விப் பொதுத்தராத சாதாரண தர பரீட்சையை முடித்துக்கொண்டு உயர்தர வகுப்பில் கல்விகற்க ஆரம்பிக்கிறேன். இன்னும் விசுவுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுகிறோம்.


 

அப்போது அவரது வகுப்புக்களில் நாங்கள் கிரகிக்கக் கூடியதாக இருந்தது பிரபாகரன், உமாமகேஸ்வரன் போன்றவர்களிடையான மோதல்கள், ஏனைய இயக்கங்களிடையேயான பிரச்சனைகள் குறித்து மட்டுமே.


 

1983 கொழும்பிற்குச் சென்று அக்கவுடன் தங்கியிருந்து படிக்குமாறு எனது பெற்றார் அனுப்புகிறார்கள்.


 

நான் போய் வருவதற்கு இடைக்காலத்தில் விசு கிளிநொச்சியில் பயிற்சி முகாமை ஆரம்பித்துவிடுவர் என்ற நம்பிக்கையில் நானும் கொழும்பு செல்ல சம்மதிக்கிறேன்.


 

1983 இனப்படுகொலை*


 

 

Black_July_1983.jpg

 

1983 ஆம் ஆண்டில் ஜே.ஆர்.ஜெயவர்தன மீண்டும் ஆட்சிக்கு வந்து சில நாட்களின் பின்னதாக யாழ்ப்பாணத்தில் திருனெல்வேலி என்ற இடத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திற்கு சற்றுத் தொலைவில் இராணுவத் தொடரைணி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் ஒன்றை நடத்துகின்றனர். அத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை இனப்படுகொலை போன்று கட்டவிழ்த்துவிடப்படுகிறது.


 

கொழும்பில் அக்கா வீட்டில் தங்கியிருந்து படித்துகொண்டிருந்த நானும் அக்காவும் வன்முறைகள் ஆரம்பமாவதை கேள்விப்பட்டு அச்சமடைகிறோம்.


 

ஒரு வார இறுதி சனிக்கிளமை அன்றே புலிகளின் தாக்குதல் நடைபெறுகிறது. ஞாயிறன்று செய்திகளில் தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளியாகின்றன. மறு நாள் திங்கள் வழமையான வேலை நாள். அனைவரும் வேலைக்குச் சென்று விடுகின்றனர். நான் மட்டும் வீட்டிலிருந்து பரீட்சைக்காகப் படித்துக்கொண்டிருக்கிறேன். 77 ஆம் ஆண்டில் காயப்பட்ட எனது அக்காவின் மகளுக்கு அப்போது பாடசாலைக்குச் செல்லும் வயதாகிவிட்டது, அவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டார்.


 

திடீரென நாம் தங்கியிருந்த வீட்டிற்கு அருகாமையில் வாகன நெரிசல் அதிகமாகக் காணப்பட்டது. வெளியில் சென்று நான் பார்த்த போது தமிழர்களுக்கு எதிரான வன்முறை கொழும்பில் ஆரம்பமாகிவிட்டதாகத் பேசிக்கொள்கிறார்கள்.


 

பதைபதைத்துப் போன நான் எனது அக்காவின் மகள் சென்ற பாடசாலைக்குச் செல்கிறேன். அங்கிருந்து அவரை வீட்டிற்குக் கூட்டிவந்து விடுகிறேன்.


 

நான் வரும் வழியில் சில வீடுகளிலிருந்து புகை வருவதைக் காணக்கூடியதாக இருந்தது. தமிழர்களின் முகங்களில் அச்சமும் பீதியும் காணப்பட்டது. எதோ மிகப்பெரும் அவலம் நடக்கப்போவதற்கு முன்னறிவிப்பதாக அது காணப்பட்டது.
மதியம் கடந்த வேளையில் எனது பல்கனியில் வீட்டிலிருந்து பார்த்த போது அருகிலுள்ள வீடுகள் சில பற்றியெரிவதைக் காணக்கூடியதாக் இருந்தது. அப்போது அக்காவும் வீட்டிற்கு வந்திருந்தார். தெருவால் போகிற சில தமிழர்கள், வெளியே நிற்கவேண்டாம் என எச்சரித்துச் சென்றனர். இங்கு எல்லா இடங்களிலும் சிங்களக் காடையர்கள் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். எம்மைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு எச்சரித்தார்கள்.


 

தமிழர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. அங்கெல்லாம் இருந்த பொருட்களைச் கொள்ளையடித்த சிங்களக் காடையர்கள் வீடுகளுக்குத் தீவைத்துவிட்டுச் சென்றனர். தமிழர்கள் கையில் கிடைத்தால் அவர்களைக் கொன்று போட்டுவிட்டுச் சென்றனர்.


 

எமது வீட்டிலிருந்த தங்க நகைகளை மேல் மாடியின் கூரைக்குக் கீழிருந்த இடைவெளிக்குள் நாங்கள் மறைத்துவைத்துவிட்டு வருவதை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.


 

1983july_2.jpg

 

அந்த நேரத்தில் பாதுகாப்பிற்காக நான் கத்தி ஒன்றைப் பாதுகாப்பிற்காக எடுத்து வைத்துக்கொள்கிறேன். அப்போது எனக்கு விஸ்வானந்த தேவர் மீது மேலும் வெறுப்பு உருவாகியது. அவர் சொல்லிக்கொண்டிருந்ததைப் போன்று என்னை இராணுவப் பயிற்சிக்கு அனுப்பியிருந்தால் சிங்களக் காடையர்களை எதிர்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது.
அப்போது எங்களுக்கு உதவி செய்யும் சிங்களம் பேசிய பேர்கர் பரம்பரையச் சேர்ந்த வேலு என்பவர் வருகிறார். எல்லா இடங்களிலும் தமிழர்களைத் தேடித் தேடி அழிக்கிறார்கள் என்றும் நாங்கள் அங்கிருப்பது பாதுகாப்பற்றது எனவும் எனது அக்கவிடம் அவர் கூறுகிறர்.


 

அப்போது எமக்கு முன் வீட்டிலிருந்த சிங்கள குடும்பத்தினர் எம்மைத் தற்காலிகமாக பாதுகாப்பதற்கு முன்வருகிறார்கள். நாங்கள் வீட்டிலிருந்தால் அங்கே வருமாறு வேலுவிடம் கூறியனுப்பியிருந்தனர்.


 

நாங்கள் அங்கிருந்த வேளையில் கொழும்பில் தமிழர்கள் விடுகள் பற்றியெரிகின்றன. எங்கும் குண்டுச் சத்தங்களும் அவலக் குரல்களும் கேட்கின்றன. நாங்கள் சிங்கள நண்பர்கள் வீட்டிலிருக்கும் போதே எங்களது வீடும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டுவிட்டது, இந்தத் தகவல் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.


 

அக்காவின் கணவர் இன்னும் வீடுவந்து சேரவில்லை என்ற அச்சத்தில் நாங்கள் வீட்டுகுள்ளேயே முடங்கியிருந்தோம். அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் வாகனத்திலேயே வீட்டுக்கு வருவது வழமை.


 

அவர் வீட்டுக்கு வந்ததும் வீடு பற்றியெரிந்து கொண்டிருப்பதைக் கண்டு அவலக்குரல் எழுப்பினார். அதனைக் கேட்ட நாங்கள் தங்கியிருந்த சிங்கள வீட்டுக்காரர், வெளியே சென்று அவரைக் கூட்டிவந்தார்.


 

அப்போது நாங்கள் வெளியே சென்று பார்க்கிறோம். வீட்டின் அரவாசிப் பகுதி எரிந்து முடிந்திருந்தது.


 

நாம் தற்பாதுகாப்பிற்காகத் தங்கியிருந்த வீட்டுக்காரர் ஒரு விமானி. தனது இரண்டாவது மனைவியுடனேயே வாழ்ந்துவந்தார். நாம் அங்கிருந்த வேளையில் முதலாவது மனைவியின் மகன் அங்கு வருகிறார். அங்கு வந்த அவர், தமிழ் மக்களின் மீதான வன்முறைகளையும் இனப்படுகொலையையும் நியாயப்படுத்துகிறார். யாழ்ப்பாணத்தில் சிங்கள இராணுவத்தினரைத் தமிழர்கள் கொலை செய்ததற்கான பழிக்குப் பழியே இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்கிறார். அவர் தனது தந்தைக்குச் சிங்களத்தில் கூறி விவாதித்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். மரண பயத்திலிருந்த எமக்கு அது மேலும் வேதனையளித்தது. விமானியான தந்தை அவரை மேலும் பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் எங்களின் அச்சம் அதிகரிக்கிறது.


 

மகனின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நாம் தொடர்ந்தும் அங்கிருப்பதற்து பாதுகாப்பானதல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.


 

மறு நாள் காலையில் அகதி முகாம்களுக்கு தமிழர்களை அழைத்துச் செல்வதற்கு லொறி ஒன்றில் ஒலிபெருக்கியின் மூலம் அறிவித்துக்கொண்டு சென்றார்கள்.


 

நாங்கள் கிடைத்த உடைகளை எடுத்துக்கொண்டு லொறியில் ஏறி சிங்கள நண்பரிடமிருந்து விடைபெற்றுக்கொள்கிறோம்.
நாங்கள் முகாம் வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம். உணவு பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்கிறோம்.


 

சாப்பாட்டிற்காக வரிசையில் அணிவகுத்து நிற்பதை பின்னர் இயக்கத்தில் பல தடவைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் அதன் முதல் அத்தியாயம் அகதி முகாமில் தான் ஆரம்பமானது.


 

அவ்வேளையில் யாழ்ப்பாணத்தில் என்னுடன் படித்த நண்பர் ஒருவர் மஜிஸ்ரிக் சினிமாவின் பின்பகுதியில் தங்கியிருந்தார். அவரது அண்ணா கணக்கியலாளராக வேலை செய்தார். வேலை நிறுவனம் அவருக்கு தங்குமிட வசதிகளை அங்கு செய்து கொடுத்திருந்தது. அது முஸ்லீம்களின் குடியிருப்புப் பகுதி என்பதால் அப்பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகவில்லை.


 

முகாமில் தங்கியிருந்து, அங்கு பதிந்திருந்தால் தான் கப்பலில் யாழ்ப்பாணம் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்களும் முகாமிற்கு வந்திருந்தனர்.


 

அவர்களுடனேயே நான் பொழுதைக் கழிக்கிறேன். முகாமில் குளிப்பதற்கும் மலசலகூட வசதிகளும் அருகியே காணப்பட்டதால் தமது வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு வருவோம் என்று தீர்மானிக்கிறோம்.
நான் எனது அக்கவிற்கு அறிவித்துவிட்டு முகாமின் பின்பகுதி சுவரைக் கடந்த எனது நண்பர்களுடன் அவர்கள் தங்கியிருந்த பகுதிக்குச் செல்கிறோம்.


 

இந்தியாவில் படித்தவிட்டு விடுமுறைக்கு வந்த நண்பர்கள் சிலரும் அங்கு எம்மோடு வந்திருந்தனர். நான் யாழ்ப்பாணம் சென்று இயக்கத்தில் சேர்ந்து ஆயுதப்போராட்டம் செய்யவேண்டும் என்று அவர்களிடம் சொன்ன போது, தமிழ் நாட்டில் ஈழத் தமிழ் இயக்கங்கள் பற்றி அவர்கள் சொன்னார்கள். பாண்டி பஜாரில் நடைபெற்ற துப்பாக்கி மோதல் தொடர்பாக எல்லாம் அவர்கள் சொன்னார்கள்.


 

இரண்டு மணியளவில் நாங்கள் மறுபடி முகாமிற்குச் செல்லத் தீர்மானித்த போது மீண்டும் தெருவெங்கும் மக்கள் ஓலமும், குண்டுச் சத்தங்களும் கேட்க ஆரம்பித்திருந்தது. அந்த நாள் இனும் என் நினைவில் அகலாமல் உள்ளது ஜூலை மாதம் 29 ஆம் திகதி 1983 ஆம் ஆண்டில் இது நடைபெறுகிறது.


 

அப்போது அந்தப் பகுதியிலிருந்த முஸ்லிம் நண்பர் ஒருவர் எம்மிடம் வந்து மீண்டும் சிங்களக் காடையர்கள் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டதாகச் சொன்னார். கோட்டைப் பகுதியில் புலிகள் வந்துவிட்டதாகவே சிங்களக் காடையர்கள் தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர்.


 

புலிகள் வந்திருக்கிறார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டே சிங்களக் காடையர்கள் காலிப் பகுதியிலிருந்து புகையிரதத்தில் வந்திறங்கியிருந்தார்கள் என அறிந்துகொண்டோம்.


 

அதே வேளை ஓய்வுபெற்ற இராணுவ மேயர் ஒருவர் வீட்டில் தமிழ்க் குடும்பம் ஒன்று நாங்கள் தங்கியிருந்த பகுதிக்கு அருகமையில் வாடகைக்கு வசித்து வந்தனர். அதனால் சிங்கள மேயரைத் தேடி சிங்களக் காடையர்கள் சென்றிருக்கிறார்கள். அவர் அங்கு அப்படி யாரும் தங்கியிருக்கவில்லை என காடையர்களைத் திருப்பி அனுப்பியது மட்டுமல்ல, போலிசுக்கும் அறிவித்திருந்தார்.


 

அந்தக் காடையர் கூட்டம் நாம் தங்கியிருந்த பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்தது. அதைக் கேள்விப்பட்ட நாங்கள் ஐந்து பேரும் குளியலறைக்குள் போய் ஒளிந்துகொண்டோம். குளியலறைக்குள் எங்களை வைத்து எமது முஸ்லிம் நண்பர்கள் பாதுகாப்பிற்காகப் பூட்டி வைத்தனர். முழுமையாகப் பூட்டப்பட்டிருந்தால் சந்தேகம் வரும் என்பதால் நாம் கதவை திறந்தபடியே வைத்திருக்கக் கேட்கிறோம். காடையர் கூட்டம் அப்பகுதியை நோக்கி கொலை வெறியோடு வந்துகொண்டிருந்தது.


 

தொடரும்..


 

*கறுப்பு ஜூலை எனக் குறிபிடப்படும் 1983 ஆம் ஆண்டு அரச ஆதரவுடன் நடைபெற்ற இனப்படுகொலையில் 3000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகின. ஆயிரக்கணக்கான தமிழர்களின் குடியிருப்புக்கள் சூறைய.அடப்பட்டன. நிராயுதபாணிகளான 54 சிறைக்கைதிகள் கோரமாகக் கொல்லப்பட்டனர்

 

http://inioru.com/?p=33705

  • கருத்துக்கள உறவுகள்
நான் கிளிண்ட‌ன் என்ட‌வுன் பில் கிளிண்ட‌ன் எங்கட‌ போராட்டத்தைப் பற்றி எழுதுகிறார் என்று நினைத்தேன் :lol: ...எழுதட்டும் அவர்கள் பக்கத்தையும் நாம் தெரிந்து கொள்வோம்

அண்ணா எழுதுங்கள் . வாசிக்க ஆவலுடன் உள்ளேன் 

  • 2 weeks later...

இவர் தாஸ் குரூப்பா?

 

 

 

 

அச்சுவேலி என்கிறார்.
 
பொபி குறுப் போல.   :)  :)
 
தாஸ் வடமராட்சி.
 
 
தலமைகள் தான் இயக்கங்களைப் பிரித்தார்கள்.
போராடப் போனவர்கள் மக்களுக்காக தான் போனார்கள்.
 
 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 2) : கிளிங்டன்


 


BlackJuly1983anti-Tamil-SriLanka-300x206

 

பல மணி நேரங்களாக அப்பகுதியில் உலாவிய சிங்கள இனவெறிக் கூட்டம் இராணுவ மேயரின் தலையீட்டால் போலிசின் உதவியுடன் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்படுகின்றது. இனப்படுகொலை நிகழ்ந்து ஓய்ந்துவிட்டிருந்த சில நாட்களுக்கு உள்ளாகவே மீண்டும் காடையர் கூட்டம் ஒன்று கொழும்பில் உலாவியதன் பின்னணி குறித்து பின்னதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்டோம். கோட்டை புகையிரத நிலையத்தில் இராணுவத்தின் கைக்குண்டு ஒன்று வெடித்ததை புலிகள் கொழும்புவரை வந்துவிட்டார்கள் என்று வதந்தியாகப் பரப்பப்பட்டது. இதனை நம்பிய சிங்களக் காடையர்கள் புலிகளை எதிர்கொள்ள என கிராமங்களிலிருந்து கொழும்பிற்கு வந்து தமிழர் குடியிருப்புக்களைத் தேடி அலைந்திருக்கிறார்கள்.


 

ஒருவாறாக இந்த நாடகம் முடிந்ததும் நான் மீண்டும் முகாமிற்குச் செல்லப் புறப்பட்ட போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக வானொலி அறிவிக ஆரம்பித்தது. எது எவ்வாறாயினும் நான் முகாமிற்கு செல்வதில் உறுதியாகவிருந்தேன். அக்காவின் குடும்பத்தினர் என்னைக் காணாது அச்சத்திலிருப்பார்கள் என்பது எனக்கு எல்லாவற்றிலும் முதன்மையான பிரச்சனையாக இருந்தது.


 

நான் புறப்பட்டபோது நண்பர்கள் தடுக்கிறார்கள். நான் முகாமிற்குச் செல்வதில் உறுதியாகவிருந்தேன். இறுதியில் என்னைத் தனியே அனுப்புவதற்குத் தயங்கிய நண்பர்கள் அவர்களும் உடன் வருவதாக முடிவெடுத்தனர்.


 

நாம் ஐந்துபேர் ஒருவர் பின் ஒருவராக வீட்டிலிருந்து கால் நடையாக முகாமிற்குப் புறப்படுகிறோம். முன்னால் சென்றவர் சிங்களம் பேசத்தெரிந்தவர். யாராவது ஒருவருக்கு ஏதாவது நடந்தாலும் மற்றவர்கள் நிற்காமல் பயணத்தைத் தொடர்வது என்ற முடிவிற்கு வந்தே பயணத்தைத் தொடர்ந்தோம். பாதுகாப்புப் படைகள், சிங்களக் காடையர்கள் என்ற அனைத்து தடைகளையும் மீறி அபாயகரமான நடைபயணத்தின் பின்பு முகாமை ஒருவாறு அடைகிறோம்.


 

நாங்கள் முகாமிற்குச் சென்ற பின்னர் தான் காடையர் கும்பல் முகாமிற்கும் சென்றது என்றும் பாதுகாப்புப் படைகள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் கலைந்து சென்றுவிட்டனர் என்றும் அறிகிறோம்.


எங்களைப் போன்றே அதே அன்று முகாமிலிருந்து வீடுகளைப் பார்க்கச் சென்ற ஐந்து பேர்வரை தெருக்களில் கொல்லப்பட்டதாக அறிந்துகொண்டு அதிர்ச்சியடைந்தோம்.


 

Black_July_13.jpg

 

முகாம் வாழ்க்கை முடிந்து கப்பலில் காங்கேசந்துறை துறைமுகத்தில் நாங்கள் அனைவரும் வந்து இறங்கினோம்.


காங்கேந்துறையில் நடேஸ்வராக் கல்லூரியில் எமக்கு உணவு வழங்கப்பட்டது. அங்கு உதவி செய்ய வந்தவர்கள் நீங்கள் எப்போ மீண்டும் கொழும்பிற்கு செல்ல உத்தேசம் எனக் கேலியாகக் கேட்டார்க. அப்போதெல்லாம் கொழும்பு சென்று தங்கியிருந்து வேலை செய்பவர்களுக்கும் யாழ்ப்பாணத்தவருக்கும் இடையே தகுதி கலந்த இடைவெளி ஒன்று காணப்பட்டது.


 

யாழ்ப்பாணத்திற்கு வந்து வீட்டிற்கு சென்ற முதல் நாளிலிருந்தே இனிமேல் ஆயுதப்பயிற்சி எடுத்துக்கொண்டு இயக்கத்தில் இணைந்துகொள்வதே ஒரே வழி எனத் தீர்மானிக்கிறேன். என்.எல்.எப்.ரி இயக்கத்தைச் சேர்ந்த விசுவானத்த தேவரைச் சந்திக்கச் செல்கிறேன்.

 

அப்போது அவர் அங்கு இருக்கவில்லை. அவருக்குப் பதிலாக இன்று புலம்பெயர் நாடுகளில் வாழும் மற்றொருவர் நின்றிருந்ததார்.

 

நான் கிளிநொச்சியில் இராணுவப்பயிற்சிக்கு இடம் தயார் செய்துவிட்டீர்களா எனக் கேட்கிறேன். இராணுவப் பயிற்சி பெற்று தாக்குதல் நடத்திய புலிகளால் நீங்கள் யாழ்ப்பானம் திரும்பி வந்துள்ளீர்கள். இங்கு வந்த அனைவருக்கும் புலிகளிடம் தீர்வு உள்ளதா என அவர் என்னைத் திரும்பக் கேட்டார். நான் புலிகளை விடுங்கள் உங்களிடம் என்ன தீர்வு உள்ளது எனக் கேட்கிறேன்.


 

எனது கேள்விக்குப் பதில் சொல்லாத அவர் ‘உங்களைப் போன்றவர்களுக்குப் புலிகள் தான் சரியான அமைப்பு நீங்கள் அவர்களிடமே சென்று இணைந்துகொள்ளுங்கள்” என்றார்.


 

அத்துடன் எனக்கு என்.எல்.எப்.ரி உடனான உறவு முடிந்துவிடுகிறது.


 

இப்போது மீண்டும் விடுதலை இயக்கம் ஒன்றைத் தேடியலையும் படலம் ஆரம்பமாகிவிட்டது.


 

கொழும்பிலிருந்து வந்தது இரண்டாவது நாளே என்.எல்.எப்.ரி அமைப்பு பயிற்சியளிக்கவில்லை என்பதால் முரண்பட்டு விலகிக் கொள்கிறேன். அடுத்த சில நாட்களிலேயே வேறு இயக்கத்திற்கான தேடுதல் வேட்டையில் புலிகள் இயக்கத்தில் அல்பேர்ட் என்ற ஒருவரின் தொடர்பு கிடைக்கிறது. எமது ஊரில் எமது வீட்டிற்கு அருகாமையிலிருந்த அல்பேர்ட் சில வருடங்களின் முன்னமே இயக்கத்தில் சேர்ந்திருந்தாலும் எமக்கெல்லாம் அதுபற்றித் தெரிந்திருக்கவில்லை.


 

அவரோடு சில காலங்களை ஆங்காங்கு சந்திப்புக்களோடு கடத்துகிறோம். அவ்வேளையில் திருநெல்வேலியில் ரெலா (TELA) அமைப்பை உருவாக்கியிருந்த சேர்ந்த ஒபரோய் தேவன் என்ற போராளியை புலிகள் கொலை செய்ததாகத் தகவல்கள் வருகின்றன.


 

அக்கொலை குறித்து அல்பேர்ட்டிடம் ஆட்சேபம் தெரிவிக்கிறேன். அதற்கு ஒபரோய் தேவன் திருட்டு வேலைகளில் ஈடுபட்டதால் கொலைசெய்தோம் என்றார். அவர் இயக்கத்திற்காகத் தானே திருடினார் என்றும் அப்படியான வேலைகளை நீங்களும் செய்கிறீர்கள் தானே எனக் கேட்டபோது அல்பேர்ட் அதிகமாகக் கேள்விகள் கேட்கக்கூடாது என அதட்டும் பாணியில் சொல்கிறார்.


 

visu.jpg

 

விசுவானந்த தேவர் எமக்கு பல இயக்கங்கள் இருப்பதாக சொல்லித்தந்தில்ருந்து ஏனைய இயக்கங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அல்பேர்ட்டிடம் கேட்கிறேன், ஒபரோய் தேவனைக் கொலைசெய்தது போலவே உமாககேஸ்வரனையும் கொலைசெய்வோம் என்று சொல்கிறார். ஏன் கொலைசெய்வீர்கள் என்பதற்குக் கூட அவரிடம் பதில் இருக்கவில்லை.


 

இவை எல்லாம் சேர்ந்தே புலிகள் இயக்கத்திற்கு இனிமேல் செல்வதில்லை என்ற முடிவிற்கு வருகிறேன்.


 

இந்த சந்தர்ப்பத்தில் உடுப்பிட்டியில் மனோகரன் வழக்குரைஞர் ஒருவர் இராணுவப் பயிற்சிக்கு இளைஞர்களை அனுப்புவதற்காக கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ததாகத் தகவல்கள் வருகின்றன. நண்பர்களுடன் அக்கூட்டம் நடக்கும் இடத்தை அறிந்து அங்கு செல்கிறோம். அங்கே லெபனானிற்கு இராணுவப்பயிற்சிக்காக எம்மை அனுப்பிவைப்பதாக அவர் கூறுகின்றார். புளட் இயக்கத்தைச் சார்ந்தே அவர் கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக எமக்குதெரியவருகிறது.


 

புளட் இயக்கம் என்றதும் அல்பேர்ர்டின் நினைவு என்னை ஆக்கிரமித்துக்கொண்டது. உமாமகேஸ்வரனை எப்படியாவது புலிகள் கொலைசெய்யும் நோக்கத்தில் இருந்ததால், புளட்டிற்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் தோன்றுமே தவிர இலங்கை இனவெறி அரசிற்கு எதிராகப் போராடுவதற்கு எமக்கு வழி கிடைக்காது என்று எண்ணி புளட் இயக்கத்தை நிராகரிக்க வேண்டியதாயிற்று.


 

அல்பேர்ட்டின் உறவினர் உட்பட இன்னும் சிலர் அச்சுவேலிப் பகுதியிலிருந்தே புளட் இயக்கத்திற்குச் சென்றிருந்தனர்.


 

அவரின் உறவினரையும் இன்னும் இருவரையும் தமிழ் நாட்டில் புளட் முகாமில் வைத்து அல்பேர்ட் அனுப்பிய புலிகளின் உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் புளட் இயக்கத்தினர் கொலை செய்துவிட்டனர் என்ற செய்தியை அறிந்தேன். அல்பேர்ட் உடன் தொடர்புடைய நான் அவரது கிராமத்தவராகிய நான் புளட்டுக்குப் போயிருந்தாலும் இதே தான் நடந்திருக்கும் என என்னை அச்சம் கொள்ளவைத்தது அந்தச் செய்தி.


 

TELO_inioru-300x225.jpg

 

ஜனநாயக முன்னணியில் எம்மோடு வேலைசெய்த ஒரு நண்பர் என்னைத் தொடர்பு கொள்கிறார். அப்போது தான் அவர் சொல்கிறார் புதியதொரு இயக்கம் ஒன்றின் தொடர்பு கிடைத்ததாகவும், அவர்களது சின்னம் கூட பல அர்த்தங்களைக் கொண்டதாகக் கூறுகிறார். பனை மரம். கப்பல், கடல் போன்றவற்றைக் கொண்ட சின்னம் அவர்களது என்றும் ,மிருகங்கள் எதுவும் அச்சின்னத்தில் காணப்படவில்லை என்றும் சொல்கிறார். அத்தோடு தாமதிக்காமல் இராணுவப்பயிற்சிக்கு ஆட்களை அனுப்பிவிடுவதாகவும் கூறுகிறார்.


 

விசுவானந்த தேவருடன் வேலை செய்த நாட்களில் இயக்கங்கள் குறித்தும் அவர்களிடையேயான பிரச்சனைகள் குறித்தும் பல விடயங்களைப் பற்றி சொல்லித்தந்தார். அதனால் எனது நண்பர் கூறிய சின்னத்தைக் கொண்ட ரெலோ என்ற இயக்கத்தைப்பற்றியும் அறிந்து வைத்திருந்தேன்.


 

ரெலோ இயக்கத்தில் எமது தொடர்பாளர் எம்மை யாழ்ப்பாணத்திற்கு அருகாமையிலுள்ள நல்லூர் என்ற இடத்திற்கு ஒருவரை வந்து சந்திக்குமாறு கோருகின்றார். நல்லூருக்குப் போகும் போது வீரகேசரி பத்திரிகை ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு சட்டைப்பைக்குள் பேனா ஒன்றையும் செருக்கிக்கொண்டு வருமாறு கோருகின்றனர்.


 

நல்லூர் கோவிலின் தேர் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகாமையில் நாங்கள் நின்றிருக்க ஒருவர் சைக்கிளில் வந்து இயக்கத்தில் சேர்வதற்கு நின்றிருந்த எங்கள் நால்வரையும் சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்கின்றார். அவர் மீண்டும் வந்து தேருக்கு அருகாமையில் வருமாறு அழைக்கின்றார். அங்கே கண்களை பலதடைவை சிமிட்டியபடி ஒருவர் காத்திருக்கின்றார். அவர் பெயர் சிவபெருமான் என்று பின்னதாக அறிந்துகொண்டேன்.


 

சிவபெருமான் என்பவர் இப்போது தனது ,’நேர்கணலை’ ஆரம்பித்துவிட்டார். எங்களை நோக்கிய முதலாவது கேள்வி எமக்கு ஏன் தமிழீழம் வேண்டும் என்பதே. எம்மோடு வந்த ஒருவர் எங்களுக்கும் என்று ஒன்று வேண்டும் தானே என்றார். அதற்கு குறுக்குக் கேள்விகேட்ட சிவபெருமான் என்ன வேண்டும் என்றார். தமிழீழம் என்றதும் பதிலில் திருப்தியடைந்த சிவபெருமான் எமது இருப்பிடங்கள் குறித்து விசாரிக்கிறார்.


 

நான் அச்சுவேலி என்கிறேன். கொழும்பில் இன வன்முறைகளிலிருந்து தப்பி வந்ததால் நான் எனது அண்ணனின் ஜின்சையே அணிந்திருந்தேன்.


 

அதில் ஸ்றீகர் அடையாளமொன்று இருந்தது. அதை வைத்து நான் சிவகுமார் என்பவரோடு தொடர்புடையவரா எனக் கேட்கின்றார். நான் அவர் எனது அண்ணன் தான் என்கிறேன். பின்னதாக அவர் எனது அண்ணனின் நெருங்கிய நண்பர் என்பது தெரியவந்தது.


 

சிவபெருமான் வெகுவிரைவில் எம்மைத் தொடர்புகொண்டு இயக்கத்திற்கு அனுப்புவதாக உறுதியளிக்கிறார்.


நான் தமிழீழமே கிடைத்துவிட்ட உணர்வில் மகிழ்ச்சியடைகிறேன். நீண்ட கனவுகளோடு வீடு சென்ற உறங்கச் செல்கிறேன். நான் எங்கு சென்றேன் யாரைச் சந்திதேன் என்பதெல்லாம் வீட்டில் யாருக்கும் தெரியாது.


 

மறு நாள் நான் எங்கும் செல்லவில்லை. விரைவில் பயிற்சிக்கு அனுப்புவதற்கான அறிவித்தல் வரும் என்ற எதிர்பார்ப்பில் கனவுகளோடு அன்றைய நாளைக் கடத்துக்கிறேன். மதியம்கடந்த வெம்மையான பொழுதில் யாழ்ப்பாண நகரத்திற்குச் சென்ற அண்ணன் வீடு திரும்புகிறார். அவர் என்னை மறுபடி மறுபடி வந்து பார்த்துவிட்டுச் சென்றார். பின்னதாக அம்மாவிடம் சென்று ஏதோ கிசுகிசுவென்று பேசுவது கேட்டது. பின்னர் எனது அறைக்கு வந்த அம்மா, எனக்கு அடித்து கீழே தள்ளிவிழுத்தி திட்டுகின்றார். நான் சுதாகரித்துக்கொள்வதற்குள் அண்ணன் பேச ஆரம்பிக்கிறார். நீ இயக்கத்திற்குப் போக முடியாது, எங்கு சென்றாலும் நான் உன்னை விடமாட்டேன் என கோபத்தோடு திட்டுகிறார்,


 

நான் இயக்கத்திற்குப் போக முனைந்தது குறித்து சிவபெருமான் எனது அண்ணனிடம் சொல்லிவிட்டார் என்பது தெரிய வந்தது. வீட்டில் எல்லோரும் கூடிவிட்டார்கள். என்னை இனிமேல் இயக்கத்திற்குப் போகமாட்டேன் எனச் சத்தியம் செய்யக் கேட்டார்கள். நானும் அவ்வாறே செய்கின்றேன்.


 

சிவபெருமானை நினைக்க எனக்கு வெறுப்பும் கோபமுமாக இருந்தது. அதன் பின்னர் நண்பர்களுக்குக் கூட வீட்டிற்கு வர அனுமதியில்லை. நான் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்தேன்.


 

தொடரும்…

 

http://inioru.com/?p=34286

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 3) : கிளிங்டன்

1983-300x189.jpg

 

இப்போது வீட்டை விட்டு வெளியே சென்று இயக்கங்களோடு இணைந்துகொள்வதற்கான வழிமுறையைக் கண்டுபிடிப்பதே எனது நோக்கமாக இருந்தது. அந்தக் காலத்தில் இளைஞர்கள் பலர் வெளி நாடுகளுக்குச் சென்றனர். பிரித்தானியாவிற்கு அகதிகளாகவும் பல்கலைக் கழகங்களில் படிப்பதற்காகவும் முகவர்கள் ஊடக பல இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். எனக்கோ வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதே அடிப்படை நோக்கமாக்விருந்தது. ஆக, நான் அம்மாவிடம் சென்று லண்டனுக்குப் போக விரும்புவதாகச் சொன்னேன். அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். அதற்கான ஏற்பாடுகளை உடனேயே ஆரம்பித்துவிடுவதாகவும் சொன்னார்கள்.

 

இப்போ, நான் லண்டனுக்குப் போகவேண்டுமானால் எதாவது தொழில் நுட்பப் பயிற்சி வகுப்புக்களுக்குச் செல்லவேண்டும் என்று வீட்டாரிடம் கூறியதில் அவர்கள் என்னை வெளியில் செல்ல அனுமதித்தார்கள். இதே வேளை ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த சின்ன நந்தன் என்று அழைக்கப்பட்ட ஒருவருடன் தொடர்புடைய எனது பாடசாலை நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவர் சின்ன நந்தன் என்பவருடன் நான் இயக்கத்திற்கு பயிற்சிக்குச் செல்ல ஆர்வமாய் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இப்போது நான் வீட்டுக்காவலிலிருந்து தப்ப வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாகிறது.

 

அதேவேளை என்னைச் சந்தித்த பாடசாலை நண்பர் சின்ன நந்தனை இருபாலை பஸ் நிலையத்தில் வந்து சந்திக்குமாறு கூறுகிறார். தொழில் நுட்பக் கல்லூரி ஒன்றில் பதிவு செய்யப்போவதாக நான் வீட்டில் கூறிவிட்டுப் புறப்படுகிறேன்.

 

திட்டமிட்டப்படி சின்ன நந்தனைச் சந்திக்கிறேன். அவர் வரும்போதே புலிகள் வெளியிட்ட நூல் ஒன்றுடன் எடுத்து வந்திருந்தார். அந்த நூலின் பின்புறத்தில் பிரபாகரன் இயந்திரத் துப்பாக்கியோடு நிற்பதான படம் ஒன்று காணப்பட்டது. அந்தப் படத்தைக் காட்டி இப்படி தனி நபரை முக்கியத்துவப்படுத்தும் செயற்பாடுகள் எல்லாம் எப்படி விடுதலைப் போராட்டமாகும் என்று கேள்வியெழுப்பினார்.

 

நான் ரெலோ இயக்கத்தில் இணைய முற்பட்டு எனக்கு நடந்தவற்றைக் கூறுகிறேன். அவர் இனிமேல் அப்படி ஒன்றும் நடக்காது என்று சொல்கிறார்.

 

நான் பயிற்சி எடுத்துப் போராட வேண்டும் என்கிறேன். விரைவில் என்னைப் பயிற்சிக்குக் கூட்டிச் செல்வதாக உறுதியளித்தபின்னர் சின்ன நந்தன் விடைபெறுகிறார். அதன் பின்னர் அவரை நான் சந்திக்கவில்லை. அதன் பின்னர் இரண்டு நாட்களின் பின்னர் பிரித்தானியாவில் வசிக்கும் ஹெலன் என்பவர் எந்து வீட்டிற்கு வந்து மறு நாள் இயக்கத்தில் வந்து இணைந்துகொள்ளுமாறு சொல்கிறார். ஒக்டோபர் மாதம் 7ம் திகதி 1983ம் ஆண்டு இது நடைபெறுகிறது.

 

மறு நாள் 8ம் திகதி யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு வருமாறு அவர் தகவல் சொல்லிவிட்டுப் போகிறார். மறு நாள் யாழ்ப்பாண நகரத்திற்குச் சென்ற நான் அங்கு சின்ன தாஸ் என்பவரைச் சந்திக்கிறேன். அவர் என்னை யாழ் நகருக்கு அருகாமையில் அமைந்திருந்த தற்காலிக முகாம் ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறார். நான் அங்கு சென்ற வேளை அங்கு ஏற்கனவே பல இளைஞர்கள் பயிற்சிக்குச் செல்வதற்காகக் காத்திருந்தனர்.

 

அங்கி எவ்வைகையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. இரவு வேளைகளில் காவலுக்கு எம்மில் சிலரை நிறுத்தி வைப்பார்கள். இராணுவமோ போலிசோ அங்கு வந்தால் அங்கிருந்த நாம் ஓடிவிட வேண்டும் என்றும், தற்செயலாகக் கைதானால் யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் என்று கூற வேண்டும் என்று எமக்குச் சொல்லித்தரப்பட்டது.

 

அங்கு நான் சென்ற மறு நாள் சிவபெருமான் வருகிறார். எனது அண்ணனிடம் அவர் நான் இயக்கத்திற்குப் போவதாக தகவல் கொடுத்தது தவறு என நான் வாதிட்டேன். எனது அண்ணனே சிங்களவர்களுக்கு எதிராகப் பேசியதால் பெருமையாக என்னைப்பற்றிப் பேசியதாக அவர் கூறினார்.

 

pashaiyoor-300x199.jpg

 

எங்களில் ஐந்து பேரைத் தெரிவுசெய்து பாசையூர் என்ற இடத்திற்குச் செல்லுமாறு கூறினார்கள். அங்கிருந்து படகு மூலமாகவே தமிழ் நாட்டிற்கு செல்வது வழமை. எமது முகாமிலிருந்து சென்று யாழ்ப்பாணக் கச்சேரிக்கு முன்னால் காத்திருக்குமாறும் அங்கு ஒருவர் வந்து எங்களை அழைத்துச் செல்வார் என்றும் கூறினர். நாங்கள் இரண்டு மணி நேரம் வரை காத்திருந்தோம் யாரும் வருவதாகத் தெரியவில்லை. பய உணர்ச்சி ஒரு புறத்திலும் விரக்தி மறுபுறத்திலுமாக நாங்கள் தொடர்ந்து காத்திருக்கிறோம். இறுதியில் எமது தற்காலிக முகாமிற்கே திரும்புவதாகத் தீர்மானிக்கிறோம். கச்ச்சேரியிலிருந்து யாழ்ப்பாண நகரத்திற்கான பஸ் ஒன்றில் நகரில் வந்து இறங்கினோம். அங்கு நடந்து செல்கையில் எனது உறவினர் ஒருவர் என்னைக் கண்டுவிட்டார்.

 

நான் வீட்டை விட்டு வெளியேறிய முதல் நாள் என்னை பயிற்சிக்கு அனுப்புவார்களா இல்லை வீட்டுக்குத் திரும்பிப் போகச் சொல்வார்களா என்ற சந்தேகம் குடிகொண்டிருந்தது. மீண்டும் திரும்பிவர நேரிட்டால் வீட்டு வாசற்படிக்குக்கூட என்னைச் செல்ல அனுமதிக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அதனால் வீட்டில் இயக்கத்திற்குப் போவதாகக் கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை.

 

அதே நேரம் எனது நண்பர் ஒருவரிடம் இயக்கத்திற்குப் போவதாகக் கடிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துவிட்டு இரவு நேரமாகும் வரை நான் வீட்டிற்குத் திரும்பி வராவிட்டால் கடிதத்தை வீட்டு வாசலில் போட்டுவிடும்படி கூறினேன். நான் நள்ளிரவு அண்மித்த வேளைவரை திரும்பி வரவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட நண்பர் கல்லொன்றில் எனது கடிதத்தை இறுகக் கட்டி எனது வீட்டுக் கதவை நோக்கி வீசியெறிந்துவிட்டுச் சென்றுவிடார். நள்ளிரவில் சத்தம் கேட்டு வெளியே வந்த வீட்டார் கடிதத்தைக் கண்டிருக்கிறார்கள். அதுவரைக்கும் என்னை இராணுவமோ போலிசோ கைது செய்துவிட்டதாகப் பயந்துகொண்டே உறங்கமல் காத்திருந்திருக்கிறர்கள்.

 

அதே வேளை பாதுகாப்பு அச்சம் காரணமாக ஊராருக்கும் உறவினர்களுக்கும் நான் இயக்கத்திற்குப் பயிற்சிக்குச் சென்றுவிட்டதை மறைத்திருக்கிறார்கள். நான் வீட்டாருடன் கோபப்பட்டுக்கொண்டு மன்னாரில் எனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகவே சொல்லிவைத்திருந்தார்கள். அந்த நேரத்தில் தமிழீழப் போராட்டம் பல குடும்பங்களின் கனவுகளைச் சிதைத்து போலவே எனது குடும்பத்தினரும் எனது இல்லாமையின் வலியை உணர்ந்திருப்பார்கள் என்பதை இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.

 

யாழ்ப்பாணத்தில் என்னைச் சந்தித்த உறவினர் நான் மன். நாரில் எனது அக்காவீட்டிலிருப்பதாகவே எண்ணியிருந்தார். அங்கிருந்து யாழ்ப்பாணம் வந்துவிட்டதாக எண்ணி வீட்டுக்கு வரச்சொல்லி எனது கையைப்பிடித்து அழைத்துக்கொண்டிருந்தார். என்னோடு வந்தவர்களுக்கும் அது சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. அவர் என்னை விடுவதாக இல்லை. இறுதியில் என்னை விடுங்கள் நான் இயக்கத்தில் இணைந்துவிட்டேன் என்றதும் நான் கேட்காமலேயே என். அது கையை விடுவித்துவிட்டு தனது வழியில் சென்றுவிட்டார்.

 

நான் இயக்கத்தில் சேர்ந்துவிட்டதாகவும் யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் கண்டதாகவும் எனது உறவினர் எனது வீட்டிற்குச் சென்று அறிவித்திருக்கிறார். அண்ணன் உடனடியாகவே சிவபெருமானைத் தொடர்புகொண்டு வேறும் சில நண்பர்களுடன் பஸ் நிலையதிற்கு வந்திருக்கிறார். அங்கே பல மணி நேரமாக எனது அண்ணன் காத்திருந்திருக்கிறார். பின்னதாக சிவபெருமான் என்னைச் சந்தித்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்குப் போகவேண்டாம் என்றும் அங்கு என்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் சொன்னார்.

 

பாசையூருக்குச் சென்று அங்கிருந்து தமிழகத்திற்குச் செல்வதற்காக மீண்டும் தற்காலிக முகாமில் காத்திருக்கிறோம். இரவு வேளைகளில் தவணை முறையில் காவலுக்கு நிற்கவேண்டும். பல முகமறியாதவர்களை அப்போது முதல்தடவையாகச் சந்திக்கிறேன். ஒவ்வொருவரின் விடுதலை உணர்வுகளையும் துயரங்களையும் மகிழ்ச்சியையும் பரிமாறிக்கொள்வோம். என்னுடன் அங்கு காவலுக்குப் நின்றிருந்த பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவர் ஏன் நான் இயக்கத்திற்கு வந்தேன் என்று கேட்கிறார். நான் கொழும்பில் ஆரம்பித்து எனது தமிழீழக் கனவில் முடிக்கிறேன். அவரோ இரண்டுவரிக் காரணம் வைத்திருந்தார்.

 

அவரது அண்ணன் கடை வைத்திருந்தர். பாடசாலை முடித்ததும் தான் கடைக்குத் தான் நெரே செல்லவேண்டும் என்றும் அங்கு அவரது அண்ணனுக்கு உதவியாக இரவு நெடு நேரம் வரை வேலை செய்யவேண்டும் என்றும் சொன்னார். அவ்வேளைகளில் ஒவ்வொரு சிறிய தவறுகளுக்கும் அண்ணன் அடிப்பதாகவும். அந்த வதையிலிருந்து விடுதலையடைந்து அண்ணனுக்கு பாடம்படிப்பிதற்காகவே இயக்கத்தில் சேர்ந்ததாகச் சொன்னார். விடுதலை, தேசியம் என்ற எது தொடர்பாகவும் அவர் இயக்கத்தில் சேரவில்லை என்கிறார்.

 

எனக்கோ தூக்கிவாரிப் போட்டது. இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில் போராடி வெற்றிபெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இயக்கத்தில் சேர்ந்த எனக்கு இன்னும் எத்தனைபேர் தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக இயக்கத்தில் சேர்ந்திருப்பார்கள் என்ற அச்சம் மேலிடுகிறது.

 

எது எப்படியாயினும், இந்தியா சென்று பயிற்சி எடுத்துக்கொண்ட காலப்பகுதியிலும், பின்னதாகவும் என்னோடு காவலுக்கு நின்றிருந்தவர் உணர்வு பூர்வமான நேர்மைக விடுதலைக்காக உழைக்கும் போராளியாகவே திகழ்ந்தார். அப்போதெல்லாம் அவரைப்பற்றிய எனது அனுமானம் தவறானது என வருத்தப்பட்டதுண்டு.

 

பிறகு நாங்கள் அந்த முகாமில் தங்கியிருக்கும் போதே சாரி சாரியாக இந்தியாவில் பயிற்சிக்கு அனுப்பப்படுவதற்காகவே இளைஞர்கள் கூட்டிவரப்பட்டனர்.

 

அப்போது அங்கு ரெலோ இயக்கதின் தலைவர் சிறீ சபாரத்தினத்திற்கு நெருக்கமான முக்கிய உறுப்பினர் ஒருவர் வருகிறார். சுதன் என்ற பெயருடைய அவர் ஏனையவர்கள் மத்தியிலிருந்து என்னை அழைக்கிறார்.

 

உன்னை யார் இயக்கத்திற்கு தெரிவு செய்தார்கள் என்கிறார். நான் சொல்வதற்கு முன்னமே மற்றவர்கள் முந்திக்கொண்டார்கள். சிலர் என்னை சிவபெருமான் தான் தெரிவுசெய்தார் என்று சொல்கின்றனர். சுதன் நீயெல்லாம் இயக்கத்திற்குப் போக முடியாது என்கிறார். அதிர்ந்துபோன நான் மௌனமாகிறேன். சுதன் கேட்கிறார், கண்ணாடி இல்லாமல் பார்க்கமுடியுமா, துப்பாகியால் குறிபார்த்துச் சுட முடியுமா என்றெல்லாம் கேட்கிறார். இது வெளிநாட்டு இராணுவப் பயிற்சி அங்கு கண்ணாடியோடு எல்லாம் சென்று இராணுவப்பயிற்சி பெறமுடியாது என்கிறார்.

 

TELO_sabaratnam.jpg

 

இறுதியில் இலங்கையில் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை என்றும் இந்தியாவிற்குப் போக வேண்டாம் என்றும் சொன்னார். நானோ பயிற்சி எடுத்துப் போராடுவதே எனது நோக்கம் நான் பயிற்சிக்குச் சென்றே ஆகவேண்டும் என்கிறேன்.


நீண்ட நேர விவாதத்திற்குப் பின்னர் சுதன் கடிதம் ஒன்றை எழுதித்தருகிறார். கடிதத்தை ஒரு உறையில் போட்டு இந்தியா சென்றதும் தலைவர் சிறீ சபாரத்தினத்திடம் அதனைக் கொடுக்கச் சொல்கிறார்.

 

மறு நாள் எனது ஒன்றுவிட்ட சகோதரர் ஒருவரும் பயிற்சி எடுப்பதற்காக என்று அதே முகாமிற்கு வந்து சேர்கிறார். இதனை அறிந்த சுதன் மீண்டும் என்னிடம் வருகிறார். நான் கண்ணாடி அணிந்திருப்பதாலும், அண்ணனும் தம்பியும் ஒரே இயக்கத்தில் சேர்ந்திருப்பதாலும் என்னை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகிறார். நான் மீண்டும் மறுக்கிறேன். பின்னதாக அவர் என்னுடைய நேரடியான சகோதரர் அல்ல ஒன்றுவிட்ட சகோதரர் என்பதை அறிந்துகொண்டதும் இறுதி முடிவாக பயிற்சிக்கு அனுப்புவதாக ஒத்துக்கொள்கிறார்கள்.

 

இரண்டொரு நாட்களில் வான் ஒன்று எமது முகாமிற்கு முன்னால் நிறுத்தப்படுகிறது. பயிற்சிக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள் தயார் என்றும் எங்களில் சிலரை வானில் ஏறிக்கொள்ளச் சொன்னார்கள்.

வான் பாசையூரை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. எனக்கு எனது முதல்கனவின் ஆரம்பப்பகுதி நிறைவேறியது போன்ற நிறைவு.

 

பாசையூர் கடற்கரையில் இறக்கிவிடப்பட்ட எங்களை ஏற்றிச்செல்ல ட்ரோலர் படகு ஒன்று தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. நாங்கள் அனைவரும் அதில் ஏறிகொள்ளுமாறு பணிக்கப்பட்டோம். படகு இரவு முழுவதும் கடலின் அமைதியைக் கலைத்துக்கொண்டு பயணித்தது. எனது தேசத்தின் மண் கண்களிலிருந்து மறைந்தது. உறக்கம் வரவில்லை. இரவு முழுவதும் பலரும் பலதைப்பற்றிப் பேசிக்கொண்டார்கள்.

 

தொடரும்..

 

http://inioru.com/?p=34549

 

 

சிறு வயதில் நானும் டெலோ ஆதரவாளர் தான்.

டெலோ உறுப்பினரின் சகோதரிக்கு காதல் கடிதம் கொடுத்துவிட்டார் என்று  அப்பாவி மாணவனை சந்தியில் வைத்து வாளால் வெட்டியதுடன் பிடிப்பு போய்விட்டது.

பின் டெலோ குரூப் சண்டையின் போது ஊர் மரவள்ளி, புகையிலை தோட்டங்களை நாசம் செய்து இறந்தவர்களின் உடலை அப்படியே விட்டு சென்றார்கள்.

தாஸ் அண்ணா போனபின் டெலோவும் களை இழந்துவிட்டது.

 

அப்போ  பிரபா & கருணா சண்டையில என்ன மரவெள்ளி , புகையிலை  நட்டு தோட்டமோ செய்தவையோ?

 

 டெலொ குரூப் சண்டையாவது  ஊருக்க அடிபட்டு  அழிந்து போனார்கள் ஆனால்  30 வருட போராட்டத்தை சர்வதேச கண்காணிப்பு குழுவையும் கூட்டிக் கொண்டு வைத்து கொண்டு எல்லோ சுடுபட்டு அழிந்து போனார்கள்( இதில சில நேரம்  சில உடல்களை  சிங்களவன் அள்ளி போட வேண்டி வந்த வெக்க கேட மறக்கலமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ  பிரபா & கருணா சண்டையில என்ன மரவெள்ளி , புகையிலை  நட்டு தோட்டமோ செய்தவையோ?

 

 டெலொ குரூப் சண்டையாவது  ஊருக்க அடிபட்டு  அழிந்து போனார்கள் ஆனால்  30 வருட போராட்டத்தை சர்வதேச கண்காணிப்பு குழுவையும் கூட்டிக் கொண்டு வைத்து கொண்டு எல்லோ சுடுபட்டு அழிந்து போனார்கள்( இதில சில நேரம்  சில உடல்களை  சிங்களவன் அள்ளி போட வேண்டி வந்த வெக்க கேட மறக்கலமோ?

 

அதைவிடக் கொடுமை.. சுனாமியால் ஆயிரக்கணக்கில் ஆசிய நாடுகளில் அழிந்து போனார்களே.. பெரிய குழிகள் வெட்டி கேட்பாரற்றுப் புதைக்கப்பட்டனரே.. இயற்கை அன்னையின் அந்த வெட்கக்கேட்டை மறக்கலாமா? கடலம்மா என்று போற்றி வணங்கிய மீனவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

அதைவிடக் கொடுமை.. சுனாமியால் ஆயிரக்கணக்கில் ஆசிய நாடுகளில் அழிந்து போனார்களே.. பெரிய குழிகள் வெட்டி கேட்பாரற்றுப் புதைக்கப்பட்டனரே.. இயற்கை அன்னையின் அந்த வெட்கக்கேட்டை மறக்கலாமா? கடலம்மா என்று போற்றி வணங்கிய மீனவர்கள் என்ன பாவம் செய்தார்கள்?

 

டெலொ சண்டை + கருணா பிரபா சண்டை =  சுனாமி அழிவு! :lol::D

நாட்டை விட்டு எப்ப எப்படி ஓடுவது என சிந்தித்து கொண்டு மட்டும் இருந்தவர்களுக்கு நாட்டில் என்ன நடந்தது என்றே தெரிய இடமேயில்லை .

பொபி -தாஸ் சண்டையில் ஒரு தோட்டமும் அழியவில்லை அது சிறியை கிட்டு சுட்டது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு என நாடு வேண்டும் என்று உணர்வோடு போராட விரும்பிப் போனவர்கள் மிகுதியாக இருந்த காலம் பின்னர் யாராவது போராடட்டும் என்று நிலைக்கு வந்ததும் வரலாறுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு என நாடு வேண்டும் என்று உணர்வோடு போராட விரும்பிப் போனவர்கள் மிகுதியாக இருந்த காலம் பின்னர் யாராவது போராடட்டும் என்று நிலைக்கு வந்ததும் வரலாறுதான்.

 

ஆனால் இதற்குள் புலிகளால் தமிழருக்கு விடுதலை கிடைத்துவிடக்கூடாது என்று பாடுபட்டோரே அதிகம் கிருபன்

புலிகளால் தமிழருக்கு விடுதலையா :icon_mrgreen: .

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 4) : கிளிங்டன்

troller-300x201.jpg

 

இரவு முழுவதும் ட்ரோலர் படகு நட்சத்திரங்கள் தெறிக்கும் கடலின் அழகை கடந்து செல்கிறது. நாம் தமிழ் நாட்டுக்கரைகளை எதிர்பார்த்துக்கொண்டு பயணித்தோம். உறக்கமின்றி வானையும் கடலையும் பார்த்துக்கொண்டே மறு நாள் காலை மற்றோரு கரையை அடைந்தோம். நாமெல்லாம் தமிழ் நாடு என்று எண்ணினோம். ட்ரோலரிலிருந்து எம்மை இறங்கச் சொன்னார்கள். கரையை அடைந்ததும் தான் அது தமிழ் நாடு இல்லை என்று தெரிந்துகொண்டோம். இன்னொரு எல்லையை நாம் அடைந்திருந்தோம். நாம் அடைந்த இடம் இரணை தீவு.

அங்கிருந்துதான்  இந்தியாவை  நோக்கி  விசைப்படகு ஒன்று பயணிக்கும் எனவும் அதில் தான்  எம்மைக் கூட்டிச் செல்வார்கள் எனவும் அப்போது தான் அறிந்தோம்.  நாம் அங்கு தரயிறங்கிய  போது எம்மைப் போல பலர் அங்கு இந்தியா செல்வதற்காகக் காத்திருக்கின்றனர்.

 அங்கே அனைவரும் இந்தியா நோக்கிய படகுக்காகக் காத்திருக்கிறோம். அப்போது அங்கு ஏற்கனவே எமக்காகக் காத்திருந்த ஓட்டி ராஜன் மற்றும் மன்னார் ஞானி ஆகியோர் என்னிடம் வருகின்றனர். டெலோவின் முக்கிய உறுப்பினரான ஞானி என்னிடம் கேட்கின்றார் என்னால் கண்ணாடி இல்லாமல் சுட முடியுமா என்று. நான் உடனே சுதன் எனக்கு தந்த கடிதத்தை அவர்களிடம் காண்பிக்க முற்படுகிறேன். ஞானி கடித்ததைப் பார்க்கவில்லை. கடிதம் தரப்பட்டிருந்தால் போகலாம் ஆனால் இந்தியாவில் பயிற்சியெடுக்க அனுமதிப்பார்களோ தெரியாது என்றார். தீவிலிருந்து பதினைந்து பேர் வரையில் தான் இந்தியக் கரைகளுக்கு ஒவ்வொரு தடவையும் அழைத்துச் செல்லப்படுவதால் நாங்கள் அங்கு ஐந்துநாள் வரை வரையில் தங்கியிருக்க வேண்டியதாயிற்று.

ஐந்தாவது நாளில் எனது முறை வருகிறது. ஓட்டி ராஜன் தான் படகைச் செலுத்துகிறார். தமிழ் நாட்டுக் கரை நோக்கிய பயணம் ஆரம்பமாகிறது. படகில் என்னோடு பயணம் செய்த அனைவருமே முகமறியாதவர்கள். வழியில் இலங்கை நேவிப்படை எம்மைக் கண்டு துரத்துகிறது கடலில் வேகமாகச் செலுத்திச் செல்கிறோம். கடலின் இருள்  கவ்விய  நீர் வெளியில் இலங்கைக் கடற்படை  அழிப்பட்தற்காத் துரத்திவர  அதற்கு ஈடு கொடுக்காமல் ராஜன் படகைச் செலுத்துகிறார்.  நீண்ட இன்னல்களின் மத்தியில் நள்ளிரவு கடந்த வேளையில் தமிழ் நாட்டுக் கரையி அடைகிறோம். இலங்கைக் கடற்படை துரத்தியதில் குறிப்பிட்ட நேரத்திற்கு எம்மால் வந்தடைய முடியவில்லை. எமக்காக ராமேஸ்வரம் கடற்கரையில் யாரும் காத்திருக்கவில்லை.

கரையில் இறக்கபட்ட எம்மை,  கடற்கரையிலிருந்து உள் நோக்கி நடந்து செல்லுமாறு ஓட்டி ராஜன் பணிக்கிறார். அங்கே தொலைவில் தெரிந்த மின் விளக்கு வெளிச்சத்தை நோக்கிச் செல்லுமாறும் அங்கே சிறீராம் லாட்ஜ் என்ற விடுதியை அடையுமாறும் கூறுகிறார்.

விடுதியைச் சென்றடைந்ததும் குட்டிமணியின் ஆட்கள் வந்திருப்பதாகச் சொன்னால் அவர்கள் ஏனையவற்றைச் செய்து தருவார்கள் என்று எமக்குச் சொல்லிவிட்டு அவர் மறுபடி கடலுக்குள் திரும்பிவிட்டார்.

ஓட்டி ராஜன் என்னை அழைக்கிறார். கண்ணாடி, என்று விழித்த அவர், லாட்ஜ் வரை கூட்டிச் செல்வதற்கு நீதான் பொறுப்பு என்கிறார்.

sriRaM-300x207.jpg

 

எனக்கோ தூக்கிவாரிப்போட்டது. ஒரு தேசத்தின் விடுதலையை வென்றெடுப்பதற்காக நூற்றுக்கணக்கில் இளைஞர்களைப் பயிற்சிக்கு ஆட்சேர்க்கும் அமைப்பொன்றில் குறைந்தளவு ஒழுங்கமைப்புக்கூட இல்லை என்று தெரிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

அன்னிய நாட்டின் எல்லையில் யாரையும் தெரியாமல், நள்ளிரவு கடந்த வேளையில் நாங்கள் பதினைந்து பேர்வரை தனியே விடப்பட்டிருந்தோம். அச்சமும் வியப்பும் மேலிட நாங்கள் அனாதரவாக நின்றிருந்தோம். நாங்கள் அனைவரும் ஒன்றாக ஒரு இடத்தைத் தேடிப் போவது பாதுகாப்பானதா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. எம்மோடு வந்த அனைவரையும் கரையிலேயே இருக்குமாறு சொல்லிவிட்டு நான் காத்தான் என்ற ஒருவருடன் விளக்கை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறோம். அங்குதான் சிறீராம் லாட்ஜ் இருபதாகச் சொல்லப்பட்டது.

ராமேஸ்வரம் நகர்ப்பகுதியை அடைந்தவுடன் எமக்கு வியப்ப்பு மேலிடுகிறது. நாம் இருவரும் மிகுந்த சத்தத்துடன் இலங்கை வானொலியைக் கேட்கிறோம். எல்லாக் கடைகளிலுமே இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்தன.ஒரு கணம் இலங்கையின்  இன்னொரு பகுதிக்கு வந்தடைந்து விட்டோமா என்ற அச்சம் மேலிடுகிறது.  அங்கே நின்ற குதிரை வண்டில்களையும் இந்தியத் தமிழையும் கேட்டபோது தமிழ் நாட்டிற்குத் தான் வந்திருக்கிறோம் என உறுதிப்படுத்திக்கொண்டோம்.

ஒருவாறு சிறீராம் லாட்ஜைக் கண்டுவிட்டோம். அங்கே உள்ளேசென்று நாம் குட்டிமணியின் ஆட்கள் வந்திருப்பதாகச் சொல்லவேண்டும். நாம் இருவரும் அது பாதுகாப்பானதா என்று மீண்டும் மீண்டும் யோசனை செய்துகொண்டு லாட்ஜின்முன்னால் அங்குமிங்கும் நடந்து நோட்டம் விடுகிறோம்.

kuddimani.jpg

 

அப்போது அங்கு வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் நீங்கள் யார் எனக் கேட்கிறார். நாங்கள் நடந்தவற்றைக் கூற அவர் தான் எமக்குக் காத்திருப்பதாகக் கூறுகிறார். அவருடன் நாங்கள் கடற்கரைக்கு வந்து அனைவரையும் அழைத்துக்கொண்டு லாட்ஜை நோக்கிச் செல்கிறோம். நாங்கள் கடல் நீரில் நன்றாக நனைந்திருந்தோம். லட்ஜிற்குள் சென்றதுமே எங்கள் அனைவரையும் பின்புறத்தில் சென்று குளிக்கச் சொன்னார்கள்.

நாங்கள் பதினைந்துபேரும் தண்ணீர் அள்ளிக் குளித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு அருகிலிருருந்த எங்களோடு பயணித்தவர் என்னை கேட்டார் உமாமகேஸ்வரன் எப்போது வருவார் என்று.
எனக்கு இன்னொரு முறை தூக்கிவாரிப் போட்டது. நானோ அவர் இயக்கம் மாறி வந்துவிட்டார் என்று எண்ணி நீங்கள் எந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்கிறேன். அதற்குப் பதில் சொன்ன அவர் நாகப்படையில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்காவே தான் வந்திருப்பதாகக் கூறினார். அப்போது நான் அவருக்கு விபரங்களைக் கூறுகிறேன். உமா மகேஸ்வரன் புளட் இயக்கத்தின் தலைவர். நாங்கள் நாகப்படை இல்லை டெலோ என்று கூறப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் என்கிறேன்.

அதற்கு எந்த சலனமும் இன்றி, எந்த இயக்கமானால் என்ன பயிற்சிபெற்று இராணுவத்தை அடிப்பதுதானே நோக்கம் என்று பதில் சொல்கிறார்.

தொடரும்…
 

http://inioru.com/?p=35328

 

புலிகளால் தமிழருக்கு விடுதலையா :icon_mrgreen: .

 

அவர் சொல்ல வந்தது புலிகளிடம் இருந்து விடுதலை என நினைக்கிறேன் :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளால் தமிழருக்கு விடுதலையா :icon_mrgreen: .

 

 

இப்பதானே உங்களுக்கு இடைஞ்சல் ஒண்டுமில்லை....பிறகென்னத்துக்கு இதுக்கை நிண்டு முக்குறியள்?.....ஓ...பென்சன் மட்டும் இழுத்தடிக்கோணுமெல்லே.....அதுக்குப்பிறகு...காலநிலை சூழ்நிலையளைப்பாத்து புகுந்து விளையாடுவியளாக்கும். :icon_mrgreen:
  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 6) : கிளிங்டன்

நாங்கள் பதினைந்துபேரும் தண்ணீர் அள்ளிக் குளித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு அருகிலிருருந்த எங்களோடு பயணித்தவர் என்னை கேட்டார் உமாமகேஸ்வரன் எப்போது வருவார் என்று.

எனக்கு இன்னொரு முறை தூக்கிவாரிப் போட்டது. நானோ அவர் இயக்கம் மாறி வந்துவிட்டார் என்று எண்ணி நீங்கள் எந்த இயக்கத்திற்கு வந்திருக்கிறீர்கள் என்று கேட்கிறேன். அதற்குப் பதில் சொன்ன அவர் நாகப்படையில் சேர்ந்து பயிற்சி பெறுவதற்காவே தான் வந்திருப்பதாகக் கூறினார். அப்போது நான் அவருக்கு விபரங்களைக் கூறுகிறேன். உமா மகேஸ்வரன் புளட் இயக்கத்தின் தலைவர். நாங்கள் நாகப்படை இல்லை டெலோ என்று கூறப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் என்கிறேன்.

அதற்கு எந்த சலனமும் இன்றி, எந்த இயக்கமானால் என்ன பயிற்சிபெற்று இராணுவத்தை அடிப்பதுதானே நோக்கம் என்று பதில் சொல்கிறார்.

srisabratnam-with-uniform.jpg

பின்னாளில் அவரும் ரெலோ இயக்கத்தின் விசுவாசமான போராளியாக மாறியிருந்தார். அவர் மட்டக்களப்பில் தையல் தொழி செய்துவந்தவர். ரெலோ இயக்கத்தின் சீருடைகளைத் தைக்கும் பொறுப்பு அவரிடமே இருந்தது. உத்திர்ப் பிரதேசத்தில் இந்திய இராணுவம் வழங்கிய பயிற்சியின் போது மனோகரன் என்ற இயக்கப்பெயரை வைத்துக்கொண்டவர் பின்னதாக ரெயிலர் என்றே எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

கிழக்கு மாகணத்தில் இராணுவ ஒடுக்குமுறை நேரடியான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தததால் இயக்கங்களிடையேயான முரண்பாடு கூர்மையடைந்திருக்கவில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். பற்றி வாத்தி என்று சொல்லப்படுகின்ற மட்டக்களப்பின் ரெலோவிற்கான அரசியல் பொறுப்பாளர் வான் ஒன்றில் வந்து தமிழீழம் எடுக்கப் போகிறோம் வருகிறீர்கள் என்று கேட்டதால் நாங்கள் வானில் ஏறிக்கொண்டு இந்தியப் பயிற்சிக்கு வந்தோம் என்று ரஜனி என்ற போராளி என்னிடம் கூறியது நினைவிருக்கிறது.

மறு நாள் ராமேஸ்வரத்திலிருந்து சென்னைக்குப் பயணமாக வேண்டும். அதற்கான புகையிரத ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எங்களைச் சென்னைக்குக் கூட்டிச் செல்வதற்கு குலம் என்ற குட்டிமணியின் இளைய சகோதரர் வருகிறார். புகையிரதத்தில் பயணச்சீட்டுக்களை எங்களுக்கு வாங்கித் தந்த குலம் எங்களோடு பயணம் செய்யவில்லை. தனியாக வேறு பெட்டியில் சென்று பயணம் செய்தார். தமிழ் நாட்டில் நிரந்தரமாக வாழ்ந்த அவர் எதிர்காலத்தில் தனக்கு சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம் என முன்கூட்டியே உணர்ந்திருந்தாரா என்ற சந்தேகம் இப்போது எனக்கு ஏற்படுகிறது.

kuddimani.jpg

என்னுடன் பயணம் செய்த ஏனையவர்களை கவனித்துக்கொள்ளுமாறு குலம் என்னிடம் கூறிவிட்டு அவர் தனது பெட்டியில் சென்று அமர்ந்துகொள்கிறார். ராமேஸ்வரத்திலிருந்து நீண்ட தூரத்திற்கு புகையிரத்த்தில் வேறு பயணிகள் இருந்திருக்கவில்லை. அதனால் இயக்கத்திற்கு வந்தவர்கள் பாட்டுக்களைப் பாடி ஆடி மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது தேவன் என்ற ஒருவரும் என்னுடன் பயணித்தார். அவர் என்னிடம் வந்து இதெல்லாம் எமது கொள்கைகளுக்கு ஒப்பானதா, நாம் களியாட்டம் நடத்துவதற்கா வந்திருக்கிறோம் என்று தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்.

இயக்கத்தின் கொள்கைக்கு இது உவந்ததா என்று கேட்கிறார். எனக்கே இயக்கத்தின் கொள்கை தெரிந்திருக்கவில்லை அதில் வேறு அவர் வந்து என்னிடம் கேட்டபோது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நீண்ட பயணத்தின் பின்னர் சென்னையை அடைகிறோம். சென்னையில் எக்மோர் என்ற புகையிரத நிலையட்த்திலிருந்து, விடுதலை இல்லம் என்ற ரெலோ இயகத்தின் இருப்பிடம் ஒன்றை அடைகிறோம். அது தங்கத்துரையின் சகோதரியின் வீடு. அதற்குப் பின்புறம் உள்ள குடிசை ஒன்றில் தான் தங்கத்துரை குட்டிமணி ஆகியோர் வசித்துவந்ததாக அபோது எமக்குச் சொன்னார்கள்.

பின்புறத்திலிருந்த குடிசையையே நாம் பயன்படுத்தினோம். அந்த வீடு தங்கத்துரையின் அக்காவின் கணவரின் வீடு. தங்கத்துரை அந்த வீட்டைக் கட்டும் போது அங்கு தொழிலாளியாக வேலை செய்தார் என்பதையெல்லாம் பலர் பேசிக்கொண்டார்கள்.

விடுதலை இல்லத்தில் நாங்கள் சென்றடைந்த சற்று நேரத்தில் சிறி சபாரத்தினத்தின் மருமகன் சில புகைப்படங்களை எமக்குக் காட்டினார். தமிழ் நாட்டில் நடைபெற்ற சில வைபவங்களில் சிறி சபாரத்தினம் கலந்துகொண்ட படங்களைக் காட்டி இவர்தான் சிறி சபாரத்தினம் என அறிமுகப்படுத்தினார். சில மணி நேரங்களின் பின்னர் சிறி சபாரத்தினம் அங்கு வந்தடைந்தார். அங்கி வந்ததும் எமது நலன்கள் மற்றும் வசதிகள் குறித்து விசாரித்துக்கொண்டார்.

எம்முடன் வந்த ஒருவர் தனியாக சிறி சபாரத்தினத்துடன் பேச வேண்டும் என்றார். அதற்கு அனுமதித்த அவர் தனியாக அவரைக் கூட்டிச் சென்று பேசினார். அதன் பின்னர் கண்ணாடி அணிவது குறித்த எனது பிரச்சனையை அவருக்குச் சொல்வதற்காக அவருடன் பேச அனுமதி கோரினேன். நான் சுதன் எனக்கு எழுத்தந்த கடிதத்தைக் காட்டினேன். அது முழுமையாக நனைத்து எழுத்துக்கள் அழிந்திருந்தன. நான் கடிதத்தைக் காட்டியதும் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். வீட்டுக்கு திரும்பிச் செல்லப் போகிறீர்களா எனக் கேட்டார். எனக்கு முதலில் சென்றவர் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கேட்டதால் நானும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லப் போக விருபுகிறேன் என அவர் எண்ணியிருக்கலாம்.நான் எனது ‘மூக்குக் கண்ணாடி’ பிரச்சனையை தெரிவிக்கிறேன்.

திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்ற அச்சத்தில் கண்ணாடியை நான் அணிந்திருக்கவில்லை. நான் எனக்குக் கண் சரியாகத் தெரியாது என்று அவரிடம் சொன்னதும், நாங்கள் கண் பரிசோதனை செய்து கண்ணாடி வாங்கலாம் என்றார். நானோ என்னிடம் கண்ணாடி இருக்கிறது ஆனால் பயன்படுத்தவில்லை, இலங்கையிலிருந்து நான் சந்தித்த எல்லோருமே கண்ணாடியோடு இராணுவப் பயிற்சிக்குப் போக வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்றேன்.

அதனால் கண்ணாடி அணியவே எனக்குப் பயமாக இருக்கிறது என்றேன்.

அதற்கு அவர் கண்ணாடி அணிந்து கொள்வது ஒரு பிரச்சனையே அல்ல. நீங்கள் கண்ணாடியோடு பயிற்சிக்குப் போகலாம் என்றார். என்னைப் பொறுத்தவரை முதலாவது பெரும் தடை நீங்கியது போன்ற நிமமதி ஏற்பட்டது.

இந்த முகவுரையெல்லாம் முடிந்தபின்னர் நாம் அனைவரும் வளசரவாக்கம் என்ற இடத்திலிருந்த குடியிருப்புப் பகுதிக்கு மாற்றப்பட்டோம்.

இரண்டொரு நாட்களில் சிறி சபாரத்தினம் அங்கு வருகிறார். அவர் அங்கு வரும் வேளை நாங்கள் உறங்கிக்கொண்டிருந்தோம். சிலரை அவர் உறக்கத்திலிருந்து தெரிந்தெடுத்து எழுப்பினார். அவர்களின் நானும் ஒருவன்.

அப்போது அவருடன் அங்கு வந்த யூசி என்றழைக்கப்பட்ட ஒருவரும் வருகிறார். அவருடன் எங்கள் அனைவரையும் செல்லுமாறு கூறுகிறார்.

அவர் எங்களைப் பறங்கி மலைக்கு அருகாமையிலுள்ள வீடொன்றிற்குக் கூட்டிச் செல்கிறார். மிகவும் வசதியான பங்களா போன்ற வீடும் அதுனுடன் இணைந்த காணியுமாக அந்த வீடு சென்னையின் வறுமைக்கு மத்தியில் உயர்ந்து நின்றது. அங்கிருந்தே எமக்கு முன்னையவர்கள் பயிற்சிக்குச் சென்றிருக்கிறார்கள். நாம் அங்கு சென்றதுமே அங்கு பத்துப் பேர் வரை ஏற்கனவே தங்கியிருந்தார்கள். இன்னும் சில மணி நேரங்களில் போலிஸ்காரர்கள் அங்கு வருவார்கள் என்றும், புதிதாக வந்தவர்கள் பொலிசைக் கண்டதும் மொட்டை மாடியிலிருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் சென்று ஒளிந்து கொள்ள வேண்டும் என்றாகள்.

எமக்கு முன்பதாகச் சென்ற தாஸ் குழுவில் 140 பேர்வரை பயிற்சிக்கு அங்கிருந்தே அனுப்பியிருக்கிறார்கள். வீட்டில் தங்கியிருந்த 15 பேரும் பயிற்சிக்கு அவர்களுடன் செல்வதற்காக பஸ் நிலையம் ஒன்றில் காத்திருந்திருக்கிறார்கள்.

அவர்கள் பயிற்சிக்குப் போவதற்குக் காத்திருந்த வேளையில் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவ்வழியே வருவதற்கான தயாரிப்புகள் நடந்துகொண்டிருந்தது. எம்ஜிஆர் இன் வாகனம் வருவதற்கு முன்பதாக வேவுபார்க்கும் வாகனத்தில் வந்தவர்கள் அங்கு காத்திருந்த 15 பேரையும் கண்டு சந்தேகம் கொண்டுள்ளனர்.

அதனால் அவர்களை விசாரித்த வேவுபார்க்கும் பிரிவினர், 15 பேரிடமும் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு பதில்களைக் கூறியதும் தமிழ் நாட்டு உளவுத்துறைக்கு சந்தேகம் அதிகரித்திருக்கிறது.

விசாரணையின் பின்னர் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களைவிசாரணையின் பின்னர் விடுதலை செய்துவிட்டனர்.

அந்தக் காலத்தில் இலங்கையிலிருந்து இயக்கங்களுக்குப் போராளிகளாகச் செல்கின்றவர்களுக்கு சட்டத்தின் விதிமுறைகளிலிருந்து எழுதப்படாத விதிவிலக்கு காணப்பட்டது.

இந்திய மத்திய அரசு பயிற்சியளிக்க ஆரம்பித்த காலப்ப்குதியான அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் இற்கு இப் பயிற்சி குறித்து தெரிந்திருக்கவில்லை. 15 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததிலிருந்தே இந்திய மத்திய அரசு பயிற்சி வழங்குவது எம்.ஜி.ஆர் இற்கே தெரியவந்தாக எமக்கு அவர்கள் கூறினார்கள்.

ஆக, மத்திய அரசு வழங்கிய இராணுவப் பயிற்சியை மறைப்பதற்காக 15 பேரும் தொடர்ந்து ஒரே வீட்டில் தான் தங்கியிருக்கிறார்கள் என்று பொலிசாருக்குக் காட்டுவதற்காக அவர்களை அங்கேயே தொடர்ந்து தங்கவைத்திருந்தனர். புதிதாகச் சென்ற நாம் போலிஸ் அங்கு வரும் போது மேல் மாடியில் தண்ணீர்த் தொட்டிக்குள் ஒளிந்துகொள்ள வேண்டும்.

அங்கு தங்கியிருந்த வேளையில் சிறி சபாரத்தினம் பெரிய நந்தன் என்பவருடன் எங்களை வந்து பார்த்துவிட்டுச் சென்றார்.

ramesh.jpg

அங்கிருந்து ஒரிரு நாட்களில் எங்களை மீண்டும் கொட்டிலுக்கு இடம் மாற்றினார்கள். அங்கு எம்மை ரெலோவின் இராணுவப் பொறுப்பாளராகவிருந்த ரமேஷ் கான் என்பவர் வந்து சந்திதார்.

பயிற்சி பெற்று இலங்கை இனவெறி இராணுவத்திற்கு எதிராகப் போராடுவதற்காக எம்மோடு இருந்தவர்களில் பலர் உலகத்தை இன்னும் புரிந்து கொள்ளாத இளைஞர்கள். குடும்பம், நண்பர்கள், பாசம், நட்பு என்ற அனைத்தையும் இழந்து புதிய இனம்தெரியாத உலகத்திற்கு அவர்கள் அனுப்பப்பட்டிருந்தனர்.

முகாமில் சமையல் முறை வந்தபோது எம்முடனிருந்த ஒருவர் முட்டைக் கோதுகளை உடைத்து அங்கேயே போட்டுவிட்டு சமையலை ஆரம்பித்திருந்தார். அதனைகண்ட ரமேஷ் இதைச் சுத்தம் செய்வது உனது அம்மாவா என்றதும், அந்த இளைஞர் அழ ஆரம்பித்துவிட்டார்.

இவ்வாறன பல சம்பவங்கள் இன்றும் மனதை உறுத்தும் வரலாற்றுப் பதிவுகள்.

தேசிய இன ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையடைந்து அமைதியாக சொந்த மண்ணில் வாழ்வதற்காகவே நாங்கள் போராடுவதாகக் கருதினோம். அதற்காகவே இளம் வயதின் சுகபோகங்களை துறந்து ஆயுதப்பயிற்சிக்குப் புறப்பட்டுச் சென்றோம். எம்மைப் பொறுத்தவரை இவையெல்லாம் சிக்கலான அரசியல் பரிமாணங்களைக் கொண்டது என்று தெரிந்து கொள்வதற்கு நீண்டகாலம் எடுத்தது.

நாங்கள் அங்கு எமது தகவல்கள் அடங்கிய பத்திரம் ஒன்றை நிரப்பிக் கொடுக்க்கவேண்டும்.அது பெயர் முகவரி போன்ற அடிப்படை விபரங்கள் அடங்கிய கேள்விக் கொத்தாக அமைந்திருந்தது. அதன் அடிப்பகுதியில் நாம் இயக்கக் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடப்போம் என்று எழுதப்பட்டிருந்தது. நாம் அதனை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட வேண்டும்.

அந்த வேளையில் மட்டக்களப்பைச் சார்ந்த சுந்தரராஜன் சற்று விபரமறிந்தவராக இருந்தார். அவர் இயக்கக்கட்டுப்பாடு என்றால் என்ன என்று ரமேஷை நோக்கிக் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித ரெலோவின் இராணுவப் பொறுப்பாளரான ரமேஷ் இயக்கத்தின் கொள்கை கட்டுப்பாடாக மூன்று விடயங்களை முன்வைக்கிறார்.

1.திருமணம் செய்யக்கூடாது.

2. புகைப்பிடிக்கக்கூடாது.

3. சொலவதைச் செய்யவேண்டும்.

இவை மூன்றும் தான் இயக்கத்தின் கொள்கையும் கட்டுப்பாடும் என்கிறார்.

அதனைக் கேட்ட சுந்தரராஜன் தனக்குக் கொடுக்கப்பட்ட பேனாவால் இவை மூன்றுமே இயக்கத்தின் கொள்கை எனக் கேட்டு அறிந்துகொண்டேன் என எழுதிவிட்டு தனது கையொப்பமிட்டார்.

ரமேஷ் ஒவ்வொரு பத்திரமாக பார்த்துக்கொண்டிருந்த போது சுந்தராஜன் எழுதியைக் கண்டதும் ‘யாரடா சுந்தரராஜன்’ என சத்தமிட்டார். உடனே சுந்தரராஜன் எழுந்து நின்றார். சுந்தரராஜனக் கண்டதும் ரமேஷ் வழமைக்கு மாறாக அடக்கிவாசிக்கத் தொடங்கினார். ஏன் இப்படி வெட்டி புதிதாக எழுத வேண்டும் என்று கேட்டார்.

இயக்கக் கொள்கைகளைக் கேட்டு அறிந்துகொண்டதாலேயே அப்படி எழுதினேன் என்கிறார் சுந்தரராஜன். அதனை ஏற்றுக்கொள்ளாத ரமேஷ் புதிய பத்திரத்தை நிரப்புவதற்காகக் கொடுக்கிறார்.

புரட்சிகர அமைப்பு ஒன்று மக்கள் இராணுவத்திற்காக ஆட்சேர்ப்பது என்பதை விட ஒரு அரச இராணுவத்தின் ஒழுங்குகளே கடைப்பிடிக்கப்பட்டன.

சில தினங்களின் நாங்கள் அனைவரும் முன்னதாகவே ஒழுங்கு செய்யப்பட்ட சொகுசு பஸ் வண்டிகளில் பயிற்சிக்கான இறுதிப்பயணத்தை மேற்கொள்கிறோம். பஸ் வண்டி எங்கு செல்கின்றது என்பது எமக்குத் தெரியாது. எமது வண்டியில் சிறீ சபாரத்தினமும் பிரயாணம் செய்கிறார். சுந்தரராஜன் எனக்கு அருக்கில் அமர்ந்திருக்கிறார், சிறீ சபாரத்தினம் எமக்கு முன்னால் அமர்ந்திருக்கிறார்.

இரவிரவாக பஸ் தன்பாட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. நாமோ ஈழக் கனவில் மிதந்துகொண்டிருக்கிறோம்.

பஸ்சிலிருந்த வீடியோவில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

sri-saba.jpg

இவற்றின் மத்தியில் உறக்கம் மெதுவாக எம்மை ஆட்கொண்ட போது சிறீ சபாரத்தினம் அமைதியின்றி எழுந்து பஸ்சினுள் அங்குமிங்கும் நடமாடத் தொடங்கினார். பல தடவைகள் பஸ்சின் சாரதியிடம் சென்று பேசுவதும் பின்னர் இருக்கையில் வந்து அமர்வதுமாக சில கணங்கள் நகர்ந்தன. எமக்கு எதோ நடக்கிறது என்று மட்டும் தெரிந்தது. திடீரென பஸ் சாரதியை ‘கெட்ட வார்த்தைகளால்’ சிறீ சபாரத்தினம் திட்டத் தொடங்கினார்.

பஸ் சாரதி பாதை மாறிச் செல்வதாகக் கருதிய சிறீ சபாரத்தினம் இவ்வாறு திட்டுகிறார் என்பது உறக்கத்திலிருந்து எழுந்த எமக்குத் தெரியவந்தது. எனக்கும் சுந்தரராஜனுக்கும் பெரும் அதிர்ச்சியாகவிருந்தது. எம்மைப் பொறுத்தவரை இயக்கம் என்றால் கெட்டவார்த்தைகளால் திட்டிக்கொள்ளாமல் தோழமையுடன் நடந்துகொள்வார்கள் என்றே எதிர்பார்ப்பிருந்தது.

எது எவ்வாறாயினும் திட்டமிட்டபடி பஸ் குறித்த இடத்தை அதிகாலை நான்கு மணிக்கும் முன்னதாகவே அடைந்திருந்தது. அங்கு சென்றதும் தான் நாம் பெங்களூரை அடைந்திருக்கிறோம் என்று தெரியவந்தது. அங்கு ரமேஷ் எமக்காகக் காத்திருந்தார். அங்கிருந்து மீண்டும் நாம் புகையிரதம் ஒன்றில் பயணம் செய்யவேண்டும்.

 

 

http://inioru.com/?p=35998

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தொடருங்கள் 
வாசிக்க ஆவலுடன் 
  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 7) : கிளிங்டன்

camp.jpg

புகையிரத நிலையத்தில் நாங்கள் குழுக்களாக நாங்கள் காத்திருக்க பயணச்சீட்டுக்கான ஒழுங்குகள் நடைபெறுகின்றன. பயணச் சீட்டுக்களை ஒழுங்கு செய்தபின்னர் எம்மை பதுப்பத்து பேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து புகையிரத் நிலையத்தில் காத்திருக்கச் சொல்கிறார்கள்.

அப்போது அங்கே புகையிரத நிலையத்தில் சேகர் என்ற மன்னாரைச் சேர்ந்த ஒருவரும் எம்மை ஒழுங்கு படுத்தும் பொறுப்பிலிருந்தார். அவருக்கு யாரோ சுந்தரராஜன் குறித்து சொல்லியிருக்கிறார்கள். சுந்தரராஜன் சென்னையிலிருக்கும் போது கெட்டவார்த்தைகளால் ஒருவரைத் திட்டியதைக் காரணமாகக் காட்டி சேகர் அவரை அழைக்கிறார். நீ கெட்டவார்த்தை எல்லாம் பாவிப்பதாக் கேள்விப்பட்டேன் என சுந்த்ரராஜனை நோக்கி சேகர் கேட்கிறார்.

அதற்கு சுந்தரராஜன் கெட்டவார்த்தை பயன்படுத்தக் கூடாதா என்கிறார். பதிலளித்த சேகர், இல்லை இயக்கம் என்றால் கட்டுப்பாடு தேவை இப்படியான வார்த்தைகளைப் பய்ன்படுத்தக்கூடாது என்று சொல்கிறார்.

சுந்தரராஜனோ இப்போ சற்றுமுன்னர் பஸ்சில் பிரயாணம் செய்யும் போது இயக்கத் தலைவரே சாரமாரியாகக் கெட்டவார்த்தைகளால் திட்டியதைக் கேட்டோம், நீங்கள் மட்டும் என்ன கட்டுப்பாடுபற்றி பேசுகிறீர்கள் எனக் சேகரை நோக்கிக் கேட்க, உரையாடல் அதற்கு மேல் நகரவில்லை.

இருள் கவ்வியிருந்த பின்னிரவைக் கிழித்துகொண்டு சூரியக் கதிர்கள் உலகைக்காட்டின. எமக்கோ இன்னும் உலகம் புரிந்திருக்கவில்லை. இராணுவப் பயிற்சிக்காக வெளியூர் செல்கிறோம் என்பது மட்டும்தான் எமக்குத் தெரிந்திருந்தது.

மதியம் கடந்த பின்னரே புகையிரதம் அங்கு வந்து சேரும் என்பதை அப்போதுதான் அறிந்துகொள்கிறோம். அதுவரை எமது குழுக்களோடு புகையிரத நிலையத்திலேயே காத்திருக்க வேண்டும் என்பதால் நாமும் எமது குழுக்களோடு ஆசனங்களில் அமர்ந்துகொள்கிறோம்.

பல விடயங்களைப் பேசிக்கொண்டே மாலை நேரத்தை அண்மித்த வேளையில் புகையிரதம் வந்து சேர்கிறது.

நாங்கள் ஈழப் போருக்கான பயணத்தைத் தொடர்வதற்காக புகையிரதத்தில் ஏற்றப்படுகிறோம், ஒவ்வொரு புகையிரதப் பெட்டிக்குள்ளும் நான்கு ஐந்து இளைஞர்களே அமர்ந்து கொள்ளுமாறே பயணச் சீட்டு ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. எனது பயணச் சீட்டில் மோகன் என்ற பெயரே பதிவாகியிருந்தது. எமது அடையாளத்தை மறைப்பதற்கான முன்னேற்பாடாகவே நான் புரிந்துகொண்டேன். எமது உடை மற்றும் அனைத்துப் பொருட்களையும் முன்னரே பெற்றுக்கொண்டு பத்திரப்படுத்தி வைத்துவிட்டார்கள்.

நாங்கள் புகையிரதத்தில் ஏறியிருந்தோமே தவிர எங்கு செல்கிறோம் என்பது எமக்குத் தெரிந்திருக்கவில்லை. தாய் நாட்டின் விடுதலைக்காக எங்கோ செல்கிறோம் என்பதே எமக்குத் தெரிந்திருதது.

உணர்ச்சி மிகுந்த அந்தக் காலத்தில் துடிப்பான ஈழத் தமிழ் இளைஞர்கள் கண்களில் உறுதி மிகுந்த ஒளியோடு புகையிரதத்தின் வரவிற்காகக் காத்திருக்கிறோம்.

என்னோடு ஹென்றி என்பவர் உட்பட மேலும் இருவர் ஒரே பெட்டிக்குள் அருகருகே அமர்ந்துகொண்டோம். அப்போது புகையிரதம் வெறிச்சோடி வெறுமையாகக் காட்சியளித்தது. ரயிலின் ஓ வென்ற நீண்டு விரிந்த வெறுமைக்குள் எமது விடுதலை புதைந்திருப்பதைப் போன்ற உணர்வு துளைத்தது.

அப்போது நான் ஏற்கனவே சந்திதிருந்த பெரிய நந்தன் என்பவருடன் சிறீ சபரத்தினம் ரயில் பெட்டிக்ள் எம்மை நோக்கி வருகிறார். பெரிய நந்தனே எமக்குப் பொறுப்பானவர் என அறிமுகம் செய்கிறார்.

சந்தோசமாக பயிற்சிக்கு சென்று வாருங்கள் நான் உங்களை வந்து சந்திகிறேன் என சிறீ சபாரத்தினம் எம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

சற்று நேரம் கடந்ததும், பெங்களூரைச் சேர்ந்தவர்கள் ரயிலில் ஏறிக்கொள்கிறார்கள். அவர்கள் பேசிய மொழி எமக்குப் விளங்கவில்லை. அப்போது தான் புரிந்து கொண்டோம், தமிழில் மற்றவர்களிடம் பேசி எமது ‘இரகசியங்களை’ வெளியே சொல்லக் கூடாது என்பதற்காகவே தமிழ் நாட்டைத் தவிர்த்து பெங்களூரில் எமது ரயில் ஆரம்பிக்க செய்தார்கள் என்பதே அவர்களின் நோக்கம் என்று.

யாரும் எமது பயணத்தைப் பற்றிக் கேட்டால் நாம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் என்றும் தேசிய படையணிப் பயிற்சிக்காகச் செல்கிறோம் என்றும் சொல்லவேண்டும் எனப் பணிக்கப்பட்டிருந்தோம். எமக்கு அருகில் பெங்களூரைச் சேர்ந்த குடும்பம் ஒன்று அமர்ந்துகொண்டது. நட்பாக உரையாடலை ஆரம்பித்த அவர்கள் நாம் எங்கே செல்கிறோம் எனக் கேட்டார்கள். எனக்கு அருகில் இருந்த பப்பா என்பவர் பதிலளிக்கிறார். சொல்லித் தந்தபடி ஆங்கிலத்தில் அப்படியே ஒப்பிவிக்கிறார். அவர்கள் வியப்பாகப் எம்மைப் பார்த்தார்கள். படையணிப் பயிற்சிக்கு பயணப் பெட்டிகளோ பொதிகளோ இன்றி வெறும் கையோடு அமர்ந்திருந்த எம்மை விசித்திரமாக அவர்கள் நோக்கியதில் வியப்பில்லை.

அதிலும் மூன்று நாள் பயணம். அது கூட எமக்குச் சொல்லப்படவில்லை. கன்டீனிலிருந்து என்ன உணவு வேண்டும் என்று ஒருவர் வந்து கேட்டார். நாம் எதுவும் வேண்டாம் என்றதும், எங்களுடைய உணவு ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது என்று அவர் சொல்கிறார்.

புகையிரதம் இந்திய மண்ணில் வெளிகளையும் காடுகளையும் சேரிகளையும் அசட்டைசெய்யாமல் கடந்து செல்கிறது. இரவு அண்மித்த வேளையில் எமக்கு முன்னால் அமர்ந்திருந்த குடும்பம் போர்வைகளைத் தயார் செய்து உறங்குவதற்கு ஆயத்தமாகிறது. எம்மை நோக்கி நீங்கள் போர்திக்கொள்வதற்கு எதாவது கொண்டுவந்தீர்களா என்றதும், நாங்கள் கைகளை விரிக்கிறோம். அவர்கள் எங்கள் மீது சந்தேகம் கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

புகையிரதப் பயணம் மூன்று நாட்கள் நீளமானது. அது கூட எமக்குச் சொல்லப்படவில்லை. இதனால் மற்றவர்கள் சந்தேகம் கொள்வது சற்று இயல்பானதாகவே தெரிந்தது.

http://inioru.com/?p=36225

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

80 களில் தேசியப் போராட்ட அனுபவங்கள் (பாகம் 8 – இந்திய இராணுவப் பயிற்சி ) : கிளிங்டன்


Uttar-Pradesh.jpg

குழுக்களாககப் பிரிக்கப்பட்டிருந்த எங்களுக்கு குழுத் தலைவர்களும் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்கள். 80 களின் ஆரம்பத்தில் ரெலா என்ற இயக்கத்திலிருந்து துண்டுப்பிரசுரம் வினியோகித்த வேளையில் இலங்கை இராணுவத்தால் கைது செய்யப்பட்ட ராஜாஜி மற்றும் ஜெயபிரகாஷ் என்ற இரண்டு கொக்குவில் தொழில் நுட்பக்கல்லூரி மாணவர்கள் ரெலோ இயக்கத்தில் இணைந்திருந்தனர். இவர்கள் கைதுசெய்யப்பட்டு மட்டக்களப்பு சிறை உடைப்பின் பின்னர் அங்கிருந்து தப்பி ரெலொ இயக்கத்தில் இணைந்திருந்தனர். சேகர், ராஜாஜி, ஜெயபிரகாஷ் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த விஜி ஆகியோரே எமக்கு பொறுப்பாக தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். நந்தன் எமது குழுவிற்குப் பொறுப்பானவர். நந்தனுக்கு உதவியாக குழுத் தலைவர்களாக இந்த நால்வரையும் சிறீ சபாரத்தினம் நியமித்திருந்தார்.

விஜி 85 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இலங்கை இராணுவத்தால் யாழ்ப்பாணத்தில் பின்னதாகக் கொல்லப்பட்டுவிட்டார். ஆயிரக்கணக்கான போராளிகளின் வாழ்க்கையைப் பலியெடுத்த பேரினவாதத் தீயில் வெந்து சாம்பலாகிப் போன தியாகிகளில் விஜியும் ஒருவர்.

இரவுகளை மட்டுமல்ல நகரங்களையும், ஏழ்மையையும் அவலங்களையும் கடந்து சென்ற புகையிரதம் மூன்றாவது நாள் இரவை அண்மித்த போது நாங்கள் இறங்குவதற்கான இடம் வந்துவிட்டதாகக் கூறினார்கள்.

புகையிரத வாழ்க்கை முடிந்துபோகிறது என்ற மகிழ்ச்சியில் நாங்கள் ஆறுதலடைந்தோம். நாங்கள் நூறுபேரும் ஒரு சிறிய கேட்பாரற்ற புகையிரத நிலையம் ஒன்றில் அதிகாலையை அண்மித்த வேளையில் இறக்கப்படுகிறோம். அங்கு அந்த வேளையில் எம்மைத் தவிர வேறு யாரும் நின்றிருக்கவில்லை. அனைவரும் அங்கு இறங்கியதை உறுதிப்ப்படுத்தியவுடன் புகையிரத நிலையத்திற்கு வெளியே தயாராகவிருந்த பஸ் வண்டிகளில் எம்மை மீண்டும் ஏறுமாறு பணித்தார்கள். வெளியெ சென்றதும் இரண்டு பஸ் வண்டிகள் எம்மை எங்கோ ஏற்றிச்செல்ல தயார் நிலையிலிருந்தன.

பஸ் புறப்பட்ட சிறிது நேரத்திற்கு உள்ளாக எமக்குப் பின்னலிருந்து ஒருவர் எழுந்து யாராவது இங்கு ஆங்கிலம் பேசுபவர்கள் இருக்கிறார்களா என்றார். அப்போது ஒருவர் அவரின் ஆங்கிலத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்கிறார்.

எம் எல்லோருக்கும் குளிருக்கு அணிவதற்கான மேலங்கிகளும் சப்பாத்துக்களும் தரப்படும் என்றும் அளவில் வேறானதாக இருந்தால் அதனைப் பின்னதாக மாற்றிக்கொள்ளலாம் என்றார்.

குளிர்ப் பிரதேசம் ஒன்றை நோக்கியே நாம் கொண்டுசெல்லப்படுகிறோம் என்பதை அப்போது என்னால் அனுமானிக்கக் கூடியாதவிருந்தது. நீண்ட பயணத்தில் அனைவருமே களைத்துப் போயிருந்தோம். எங்கோ இனம் புரியாத தொலைவில் விடுதலைக்காக வந்திருக்கிறோம். இராணுவப் பயிற்சியெடுத்து விடுதலைக்காகப் போராப்போகிறோம் என்ற கனவு புதிய உத்வேகத்தை வழங்கியிருந்தது.

நாம் உத்திரப் பிரதேசத்தில் இந்திய இராணுவப் பயிற்சிக்காக செல்கிறோம் என்ற விபரங்கள் எதுவும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை. பயணித்துக்கொண்டிருக்கிம் போதே எமக்கு குளிருக்கான மேலங்கியும் சப்பாத்துக்களும் தரப்பட்டன.

பஸ் நகர்ந்துகொண்டிருந்தது. எனக்கு அருகில் அமர்ந்திருந்தவர் சற்று வயது முதிர்ந்தவர். சில ஆண்டுகள் அதிகமானால் கூட பெரியவராகக் மிகைப்படும் இளமை அரும்பும் வயதில் அவர் குளிர் மேலங்கிகளை அணிவதற்குத் தயாரான போது அவர் கைகள் முழுவதும் வெட்டுக்காயங்களைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போனேன்.

எனக்கோ பல களங்களைக் கண்ட தியாகி ஒருவரின் அருகில் அமர்ந்திருப்பதான மதிப்பு ஏற்பட்டது. தயக்கத்தின் மத்தியில் எப்படி அந்த வெட்டுக்காயங்கள் கைகளில் ஏற்பட்டது எனக் கேட்கிறேன். முதலில் எம்மை அறிமுகப் படுத்திக் கொள்கிறோம். நான் எனது பெயர் கிளின்டன் என்றது அவர் மணி தனது பெயர் என்கிறார்.

கைகளில் எப்படி வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது என்று கேள்வியெழுபியதும் மட்டக்களப்பு சிறையிலிருந்த போது ஏற்பட்டது என்றார்.

அக்காலப்பகுதியில் தான் மட்டக்களப்புச் சிறையிலிருந்து அரசியல் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பியிருந்த சம்பவம் தமிழ்ப் பகுதிகள் முழுவதும் மிகவும் பிரபலமானதாகப் பேசப்பட்டது. அப்போ நான் மட்டக்களப் சிறை உடைப்பின் போதா வெளிய்ல் வந்தீர்கள் எனக் கேட்கிறேன். அவர் ஆம் எனப் பதிலளித்ததும் அவர் மீதான மதிப்பு இன்னும் அதிகரிக்கிறது.

சற்று நேரத்தின் பின்னர் எப்படிக் கைதானீர்கள் எப்படியெல்லாம் இலங்கை இராணுவம் சித்திரவதை செய்தது என்று ஆர்வம் மிகுதியால் கேட்கிறேன். சில கணங்கள் மௌனித்த அவர், தான் திருடியதால் தான் கைது செய்யப்படேன் என்கிறார்.

பஸ் நேராக நெஞ்சை நிமிர்த்தி, போராட என இளமைக்காலக் கனவுகளைத் துறந்து வெளிவந்த எம்மை சுமந்து அன்னியமான இடத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை நான் ஆயிரம் அடிப் பள்ளத்தாக்கை நோக்கித் தள்ளப்பட்டதான உணர்வு ஏற்பட்டது. திடீரென ஒரு வெறுமை பற்றிக்கொண்டது.

என்னைச் சமாதானம் செய்துகொண்டு சிங்களச் சிறைக்காவலர்கள் தானே அவரைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும் என்று கேட்கிறேன். அவரோ, அவர்கள் வெட்டவிலை தானாகவே கைகளை வெட்டிக்கொண்டதாகக் கூறுகிறார். எனக்கு இன்னும் அதிர்ச்சியாகவிருந்தது. சிறையில் விசாரணை என்று அடித்தால்வெளியில் காயங்கள் தெரியாமலேயே அடிப்பார்கள். தானே வெட்டிக்கொண்டால் மருத்துவ மனையில் அனுமதித்டு விடுவார்கள் என்பதால் தானே வெட்டிக்கொண்டதாகக் கூறுகிறார்.

அதற்கு மேல் பேசுவதற்கு எனக்கு எதுவும் இருக்கவில்லை.இளைஞர்கள் பஸ்சிலேயே நண்பர்களாகிவிட்டோம் மணி பஸ்சினுள்ளேயே மணியண்ணையாகிவிட்டார்.

புகையிரதத்தில் பயணம்செய்த போது வந்த பயிற்சிக்கு போராளி ஒருவருக்கு அங்கு பொறுப்பாக இருந்த இருவர் அடித்தார்கள் என்ற சம்பவம் பேச்சாக அடிபடுகிறது. புகையிரத்தில் பயணம் செய்தபோது சிகரட் புகைத்தார் என்பதால் மலசல கூடத்திற்கு அழைத்துச் சென்று அவரைத் தாக்கியிருக்கிறார்கள். இது பஸ்சில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. எல்லோரும் அது தவறான நடவடிக்கை என்றும் எப்படி ஒருவரை அடிக்க முடியும் என்பதையும் பேசிக்கொள்கிறோம்.

அப்போது எமக்குப் பொறுப்பாக அனுப்பப்பட்ட பெரிய நந்தன் எமக்கு முன்னால் அமர்ந்திருந்தார். திடிரென எழுந்த அவர் சாரமாரியாக கெட்டவார்த்தைகளால் எம் அனைவரையும் திட்ட ஆரம்பித்துவிட்டார். ஒருவரும் பேசக்கூடாது என உத்தரவிட்டார். ஏதாவது பேச வேண்டுமானால் பயிற்சி முகாமிற்குச் சென்றதும் பேசிக்கொள்ளலாம் இப்போது வாய்திறக்கக்கூடாது என்கிறார்.

training.jpg

மீண்டும் ‘கெட்டவார்த்தை’… எமக்கோ எல்லாம் புதிராகவிருந்தது. கெட்டவார்த்தைக்குள்ளேயே ஆயிரம் புதிர்களும் முரண்பாடுகளும் புதைந்திருந்தன.

நாமெல்லம் இன்னொரு இடத்திற்கு வந்து சேர்கிறோம். அங்கே நான்கைந்து கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேனீர்ரும் சிற்றுண்ட்யும் கிடைத்தது. நாமோ அதுதான் பயிற்சி முகாம் என எண்ணினோம். சற்று நேரத்தின் பின்னர் அங்கிருந்து வேறு இடத்திற்குப் பயணம் செய்ய வேண்டும் என தெரிந்துகொண்டோம்.

சற்று நேரத்தில் அங்கே மலைப் பாதைகளில் பயணம்செயக் கூடிய இராணுவ பஸ் ஒன்று வந்து சேர்கிறது. அந்த வண்டியில் மலைகளைக் கடந்து தனிமைப்பட்ட பகுதிகள் ஊடாக நள்ளிரவு பன்னிரண்டு மணி வரைக்கும் பயணம் செய்கிறோம். நள்ளிரவில் எமது நீண்ட பயணத்தின் முடிவில் பயிற்சி முகாமை அடைகிறோம். இந்திய இராணுவ அதிகாரிகளோடு எமக்கு முதல் பயிற்சியெடுத்த சிலரும் அங்கே எமக்காகக் காத்திருக்கிறார்கள்.
 
http://inioru.com/?p=36377

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளால் தமிழருக்கு விடுதலையா :icon_mrgreen: .

 

 

லெபனானில் பயிற்சி எடுத்தது  ஊருக்குள் தேங்காய் மாங்காய் களவெடுக்க. :icon_mrgreen:  :icon_mrgreen:  பாவம் ரட்ன சபாவதி.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சேர்ந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தின் ஆரம்பமே இப்படியென்றால்

இவர்களின் போராட்டம் பற்றி வரும் இணைப்புக்கள்  எத்தனை பக்கங்கள்

தாண்டப்போகின்றதோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லெபனானில் பயிற்சி எடுத்தது  ஊருக்குள் தேங்காய் மாங்காய் களவெடுக்க. :icon_mrgreen:  :icon_mrgreen:  பாவம் ரட்ன சபாவதி.

 

அண்ணன் சும்மா  பகிடிக்கு கதைக்க நீங்கள் அதை சீரியஸாய் எடுக்கிறியள். :D

என்னத்தை பயிற்ச்சி எடுத்து என்ன அர்ப்பணிப்பும் அழுமையும் இல்லாத தலைமை இருக்குமானால் எதையும் சாதிக்க முடியாது...  மூழ்கிற கப்பலில் இருந்து ஓடும் எலிகள் போல ஆளாழுக்கு விலகி ஓடுவதில் தான் முடியும்... 

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்ல வந்தது புலிகளிடம் இருந்து விடுதலை என நினைக்கிறேன் :D

 

 

இப்போ டக்ளசிடம் இருந்து தீவக மக்கள் எப்படி விடுதலை பெறலாம் என ஒரு சில வரி எழுதலாமே???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.