Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெஞ்சத்தைக் கிள்ளாதே...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்ரின்ரை வலியை பகிடியாத் தன்னும் இப்பிடி கதையாதையுங்கோ . உங்கடை பகிடிக்கு கீழை வந்திருக்கிற மறுமொழியை பாத்தியளே ^_^  ^_^ . 

 

:( :( :(

பார்த்தேன்.. பார்த்தேன்.. ஆனால் பகிடி என்று எழுதவில்லை.. அந்தக்கதைக்கும் இந்தக்கதைக்கும் ஒரு ஒற்றுமை தெரிவதுபோல் இருந்தது.. அதனால் எழுதினேன்.. ஆனால் கடைசியில் முகக்குறி போட்டதும் பகிடி மாதிரி ஆகிவிட்டது..

 

கவிதை இதைப் பார்த்து வருந்தியிருப்பாரானால், எனது வருத்தங்களைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்..!

 

  • Replies 134
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே.. பகுதி-3

1.jpg

 

எப்போதும் பொடியளுடன் கல கல எனத் திரியும் மயூரன் குட்டி போட்ட பூனை போல மாறியிருந்தான். விளையாடுவதற்காய் வீடு வீடாய்ப் போய் பொடியளைக் கூட்டிக் கொண்டு வாறவன், இப்ப அவங்கள் வலிய வந்து கேட்டாலும்  விலகி இருந்தான். தனிமையும்,கை பேசியுமே அவன் வாழ்வாகியிருந்தது. அவன் நட்பு வட்டத்திற்கு அவனது மாற்றம் தெரிந்தும் அவனை தனிமையிலேயே விட்டு விட்டார்கள். ஏற்கனவே அவன் வேறொருத்தியை ஒரு தலையாய்க் காதலித்து தோல்வியுற்றிருந்தான், இதுவாவது கை கூடட்டுமே என்று தான் விட்டாங்கள்.

மயூரன் முதன் முதலில் காதலித்த பெண்ணின் பெயர் கூட அபி தான்.
அவளுடைய வீடும் கனக்கத் தூரம் இல்லை, ரண்டு நிமிச நடை தான்.  அவளும் நல்ல வடிவு "அரிதாரம் குழைச்சுப் பூசியது போன்ற மேனி , மூன்றாம் பிறை நெற்றி, வானவில்லொத்த வளை புருவங்கள் , கயல் விழிகள், கார் கூந்தல், மிளகாய் மூக்கு, செவ்விதள் இதழ்கள், சங்குக் கழுத்து, மூங்கில் கைகள், வெண்டைக்காய் விரல்கள், மெல்லிய சிற்றிடை, மெலிந்த தேகம், வாழைத் தண்டுக் கால்கள்...(அப்பாடா ஒரு மாதிரிச் சொல்லி முடிச்சிட்டன்)
என்று பிரம்மன் படைப்பில் அவள் ஒரு தேவதை.

அவள் சாமத்தியப் பட்டதிலை இருந்து மயூரன் அவள் பின்னால் திரிய ஆரம்பித்து விட்டான். அப்ப அவனுக்கு வயசு பதினைஞ்சு அவளுக்குப் பதின்மூன்று. பிஞ்சிலை பழுத்தது என்பதற்கு அவனை விட வேறு யாரையும் உதாரணம் காட்ட முடியாது ஆனால் இது யாருக்குமே தெரியாது அவளைப் பார்ப்பதற்காகவே அவள் படிக்கும் ரியூசனில் சேர்ந்திருந்தான். ஆனால்வீட்டுக்காரரின் பயம் காரணமாக யாருக்குமே அவன் சொன்னதில்லை, தன் மனதுக்குள்ளேயே புதைத்திருந்தான். மூன்று வருசங்களாக அவளுக்கு பின்னால் போவதும், திரும்பிப் பார்த்தால் பயத்திலை ப்றேக் அடிச்சு ஸ்லோ பண்ணுறதுமா தான் போச்சுது அவன் காதல். ஓ.எல் சோதனையில் மயூரன் தான் அந்த ஊரில் மிகவும் நல்ல ரிசல்ட் எடுத்து தேர்வாகியிருந்தான் ஏ.எல் இல் உயிரியல் துறையைத் தேர்ந்தெடுத்திருந்தான். பாடசாலை மாணவர் தலைவர்களிலும் ஒருவனானதும், இனி அவளிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்தான்.
மாணவர்த் தலைவருக்குரிய இலச்சினையை எப்போதும் சேட் பொக்கற்றுக்குள்ளையே வைத்திருப்பவன் அவளைக் கண்டதும் அவள் பார்க்க வேண்டும் என்பதற்காய் வெளியே எடுத்து விடுவான்.
அப்படி அவனது சீன்கள் சொல்லி வேலையில்லை.

உதயன்..
அவன் தான் ஓ.எல் வரைக்கும் அவனது நெருங்கிய ரியூசன் நண்பன்.
அவனது வகுப்பில் அநேகம் பேர் காதலிச்சிருந்தாலும், யாராவது ஒருத்தியைச் சொல்லி பட்டம் தெளித்திருந்தாலும் காதலில் ஜெயித்தது அவன் தான். சுபாசினி தான் அவன்ரை ஆள். அவன் ஏ.எல் இல் வர்த்தகமும், அவள் கணிதப் பிரிவிலும் படித்ததால், அவளும் மயூரனும் ஒரே ரியூசன் என்பதால் மயூரன் தான் அவனுக்கு நேரம் சொல்வது. அதனால் உதயனிடமே ஐடியா கேட்பம் என்று அவனையே உதவிக்கு அழைத்தான் மயூரன்.

"மச்சான் நான் எழுதி சுபாக்கு குடுத்த கடிதம் இருக்கு அதை பார்த்து எழுதிக் குடு சக்சஸ் தான் என்றான்."

மனதுக்குள் மத்தாப்பூ மின்ன ..எப்படா ரியூசன் முடியும் என்று இருந்தவன் ரியூசன் முடிந்ததும் வதிரி பொது நூலகத்தில் போய் இருந்து அவன் எழுதிய கடிதத்தை அப்படியே பிரதி பண்ணினான்.
கண்ணதாசன் வரிகள்,பட்டினத்தார் பாடல்,சினிமாப் பாட்டு வரிகளை எல்லாம் எழுதி இறுதியில் " வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன், இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்" என்று முடித்திருந்தான்.

அடுத்த நாள் காலமை அவளிடம் குடுத்து விட வேண்டும் என்று எண்ணியவன் இரவுகளைத் திட்டித் தீர்த்தான், விடியும் வேளை அவன் வாழ்வில் வசந்தம் வீசும் என்று எண்ணி தூக்கமே இன்றித் தவித்திருந்தான்.

"அன்று சனிக்கிழமை காலை ஆறு மணி, அவள் எப்போதும் பெரியம்மா வீட்டுக்குப் போட்டுத்தான் ரியூசனுக்குப் போவாள் அப்ப தான் றோட்டிலையும் சனம் நிக்காது, செருப்பாலை அடிச்சாலும் வீட்டை சொல்ல ஒருத்தரும் இருக்க மாட்டாங்கள் என்று நினைத்தவன், அவள் வருகைக்காய் பிள்ளையார் கோவில் பாலத்தடியில் காத்திருந்தான்.
அவன் நினைத்திருந்தது போலவே அவளும் வந்தான். ஆனால் ஜீன்ஸோடை உச்சா போகாத ஒன்று தான் குறை, அந்தளவுக்குப் பயந்திருந்தான். இதயத்துடிப்பு ஜெற் வேகத்தில் எகிற வேர்வை உடலை நனைக்க சுயத்தையே இழந்து நின்றான். திரும்பிப் பார்க்க அவள் கன தூரம் கடந்து விட்டாள். நேரில் குடுக்கும் தைரியத்தை இழந்தவன் அவள் பெரியம்மா வீட்டு வாசலில் சைக்கிளை விட்டிட்டு உள்ளை போனதும் சைக்கிள் கூடையில் கடிதத்தைப் போட்டு விட்டு வந்து விட்டான்."

நாட்கள் நகர்ந்தன அவளிடமும் எந்தப் பதிலும் இல்லை, இவனுக்கும் கேட்கும் தைரியம் இல்லை. மறுபடி உதயனையே உதவிக்கு அழைத்திருந்தான்.

"மச்சான்.. **** (செந்தமிழ்) உன்ரை கடிதம் குடுக்கச் சொன்னாய்  பார் இப்ப ஒரு பதிலும் இல்லை, தினம் தினம் பயந்து சாகுறேன் டா. ஒரு வேளை வீட்டை சொன்னால் நான் செத்தான்."

இப்படிப் பயப்படுறியே உனக்கு என்ன ***(மறுபடியும் செந்தமிழ்) லவ்???

ப்ளீஸ் .. மச்சான் அவள் இல்லாம இருக்கிறதுக்கு செத்திடலாம் டா..
எத்தனை வருசமா அவளை லவ் பண்ணுறேன் தெரியுமா? என்னை மாதிரி யாரும் இருக்க முடியாதடா. அவளை எனக்கு அவ்வளவு பிடிக்கும் டா..

" நிலா தூரத்திலை இருக்கு, பிடிக்க முடியாதென்றாலும் அதைக் காட்டி அம்மா குழந்தைக்குச் சோறு ஊட்டுவதில்லையா?
அப்படித் தான் டா அவளோடை இது வரைக்கும் பேசாட்டியும் அவளை என் சாமியா மனக் கோயில்லை வச்சிருக்கிறேன் டா.."

இவனது பைத்தியக் காரத்தனமான காதலை எண்ணி வருத்தப் பட்டவனாய் சரி சொன்னான் உதயன்.

கன நாட்கள் கூடச் சென்றிருக்காது ஒரு நாள் அவள் வரும் போது
"டேய் அவள் வாறாள் சொல்லடா என்றான் உதயன்"
பொறடா மச்சான் பயமா இருக்கு..
"அப்ப எப்படா சொல்லப் போறாய்?"
வீட்டை போக முதல் சொல்லுறேன்.

இவன் இப்படியே சொல்லுறான் சொல்ல மாட்டான்வீடு வரப் போகுது என்று நினைத்த உதயன், அவள் சைக்கிளுக்கு கிட்டப் போய்

"மயூரன் உங்களை லவ் பண்ணுறானாம்"
என்று சொல்லிப்போட்டு பக்கத்திலை இருந்த குச்சொழுங்கையுக்குள்ளாலை விட்டுக்கொண்டு பறந்திட்டான்.

அவள் எந்த வித பதிலும் இல்லாமல் போய்விட்டாள்.

"செத்திடலாமோ..! இயக்கத்துக்கு போகலாமோ..!!
செத்தால் எப்படிச் சாக? தப்பிட்டேன் என்றால்??
நான் செத்தால் அம்மா,அப்பா பாவம் ..... ஆயிரம் எண்ணங்கள் சிந்தையில் வர
சாப்பிடாமலே போய் உறங்கிவிட்டான்."

அவளைப் பார்க்காமலே இருக்கவேணும், நல்லாப் படிக்க வேணும் என்று நினைத்தவன் கொஞ்ச நாள் அவளைப் பார்ப்பதைத் தவிர்த்திருந்தான்.
நாட்கள் ஓடின ..

அந்த ஊர்த் திருவிழாவில் தான் அவளை அடிக்கடி பார்க்க முடிந்தது.
தினம் ஒரு உடுப்பில் அவள் வரும் போது அவளுக்காகச் செத்தாலுமே போதும் என்று தான் தோன்றும் அந்தளவுக்கு வடிவா இருப்பாள்.
ஆனாலும் அவளை நேரில் கண்டால் காணாதது போல விலகியே இருந்தான்.. இருந்தும்,

தேர்த்திருவிழா அன்றைக்குத் தான் அவனுக்கு சனி பிடிக்கப் போகுது என்பதை அன்று அவன் அறிந்திருக்கவில்லை.

தொடரும்..

 

பி.கு : எழுத்துப் பிழை திருத்தப் பட்டுள்ளது.

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

கதை சுப்பராய் போகுது முடிச்சை கெதியாய் அவிழுங்கோ ஜீவா

ம்ம்.. கதையை நல்லாய்த் தான் கொண்டு போறியள்!



தொடருங்கள்!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையை நகர்த்தும் விதம் நன்றாக இருக்கின்றது ஜீவா

 

தொடருங்கள்

நன்றி வாத்தியார் அண்ணா. :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக போகின்றது, தொடருங்கள்.  நல்ல படங்களை இணைக்கின்றீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

 அவளும் நல்ல வடிவு

"அரிதாரம் குழைச்சுப் பூசியது போன்ற மேனி , மூன்றாம் பிறை நெற்றி,

வானவில்லொத்த வளை புருவங்கள் , கயல் விழிகள், கார் கூந்தல், மிளகாய்

மூக்கு, செவ்விதள் இதழ்கள், சங்குக் கழுத்து, மூங்கில் கைகள், வெண்டைக்காய்

விரல்கள், மெல்லிய சிற்றிடை, மெலிந்த தேகம், வாழைத் தண்டுக்

கால்கள்..

கம்பன் இன்றிருந்தால், கம்பராமாயணம் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கும்!

 

நாங்கள் கடந்துவந்த பாதை, கொஞ்சம் நீளமானது!

 

ஆனால் இதுவரைக்கும் ;கிளி மூக்கு' கேள்விப்பட்டிருக்கிறேன்!

 

மிளகாய் மூக்கு, ????

 

நினைக்கவே காதுக்குள்ள உறைக்குது! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை இப்பிடியே போய் கவிதையின் கதையோடு சேராமல் விட்டால் சரி.. :D

கவிதை அண்ணாவின் கதையை நான் முழுமையாக வாசிக்கவில்லை மாம்ஸ். :(

 

இரண்டையும் வாசிக்கும் நீங்கள் தான் சரி,பிழையைச் சுட்டிக்காட்ட வேண்டும். :)

 

நன்றி மாம்ஸ் வரவுக்கும், கருத்துப் பகிர்வுக்கும் தொடர்ந்து இணைந்திருங்கோ.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி ரெயில் வேகம் பிடிக்கும் என நம்புகிறேன் கதை. 

இருந்தாலும் காதல் கடிதம் எழுதிக்கொடுப்பதும் ஒரு சுகம் தான் பாருங்கோ உங்கட முதல் அத்தியாயம் வாசிக்கேக்கை கனக்க நினைவுகள். 

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 

 

நன்றி உங்கள் வரவுக்கும்,கருத்துப் பகிர்வுக்கும்.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை சுப்பராய் போகுது முடிச்சை கெதியாய் அவிழுங்கோ ஜீவா

 

முடிச்சை அவிழ்த்தால் சுவாரசியம் குறைந்து விடும் அக்கா, :rolleyes:

உங்களைக் கொஞ்சம் காக்க விட்டு எழுதுவது தானே நல்லது.. :icon_idea:

ம்ம்.. கதையை நல்லாய்த் தான் கொண்டு போறியள்!

தொடருங்கள்!!

 

எல்லாம் உங்கள் போன்றோரின் ஆசீர்வாதம் தான் அக்கா. :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாய் தான் கதை எழுதிறிங்கள் தம்பி உங்களுக்கு பாராட்டுக்கள் .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக போகின்றது, தொடருங்கள்.  நல்ல படங்களை இணைக்கின்றீர்கள்

 

நன்றி உடையார் அண்ணா.

ந்ல்லாம் கூகிள் ஆண்டவரின் கிருபை தான். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கம்பன் இன்றிருந்தால், கம்பராமாயணம் வித்தியாசமாக எழுதப்பட்டிருக்கும்!

 

நாங்கள் கடந்துவந்த பாதை, கொஞ்சம் நீளமானது!

 

ஆனால் இதுவரைக்கும் ;கிளி மூக்கு' கேள்விப்பட்டிருக்கிறேன்!

 

மிளகாய் மூக்கு, ????

 

நினைக்கவே காதுக்குள்ள உறைக்குது! :D

 

:D :D

red%2Bchilli.gif

இப்படி இருக்கும் புங்கை அண்ணா.. :rolleyes:

 

நன்றி அண்ணா வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும். :)

வணக்கம் ஜீவா!!  ஓர் புது முயற்சியில் இறங்கியிருக்கின்றீர்கள் . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் . தொடர் முடிவடையும் பொழுது எனது விமர்சனம் உங்களுக்கு நிட்சயம் இருக்கும் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாகக் கதைசொல்வதில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள் ஜீவா. :D

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் மச்சி, அதிலும் மயூரன் ஜெயராமை தூசனத்தில கூப்பிட்டதும் அவன் லவ்வுக்கு சொல்லியிருக்கக் கூடிய அடை மொழியும் இயல்பான04 பச் காரன் எண்டு காட்டி விட்டது. ஜெயராம் இப்ப சிங்கையிலா? உங்கட கதை மாதிரியான கதை ஒன்று நானும் அரசல் புரசலா கேள்விப்பட்டனான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லாய் தான் கதை எழுதிறிங்கள் தம்பி உங்களுக்கு பாராட்டுக்கள் .

 

தொடர்ந்து ஊக்கமளித்து வருகிறீர்கள்.

நன்றி அக்கா கருத்துப் பகிர்வுக்கு.. :)

வணக்கம் ஜீவா!!  ஓர் புது முயற்சியில் இறங்கியிருக்கின்றீர்கள் . எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் . தொடர் முடிவடையும் பொழுது எனது விமர்சனம் உங்களுக்கு நிட்சயம் இருக்கும் :) :) .

 

விரைவாகத் தொடரை முடித்து விட்டு உங்கள் விமர்சனத்திற்காய் காத்திருப்பேன்.

நன்றி கோமகன் அண்ணா. :)

நன்றாகக் கதைசொல்வதில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள் ஜீவா. :D

 

இப்போது தான் கிறுக்கிப் பழகுகிறேன். எல்லாம் நீங்கள் அனைவரும் தரும் ஆக்கமும், ஊக்கமும் தான் அக்கா காரணம். :)

நன்றி அக்கா வரவுக்கும்,கருத்துப் பகிர்விற்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சூப்பர் மச்சி, அதிலும் மயூரன் ஜெயராமை தூசனத்தில கூப்பிட்டதும் அவன் லவ்வுக்கு சொல்லியிருக்கக் கூடிய அடை மொழியும் இயல்பான04 பச் காரன் எண்டு காட்டி விட்டது. ஜெயராம் இப்ப சிங்கையிலா? உங்கட கதை மாதிரியான கதை ஒன்று நானும் அரசல் புரசலா கேள்விப்பட்டனான்.

நான் கடைசியாக ஜெயராமோடு கதைத்து ஒரு வருடம் ஆகிறது. அப்ப அவன் வியாபாரி மூலையிலை தான் மனுசி வீட்டை இருந்தவன் இப்ப தெரியவில்லை. ஆனால் கதையில் வரும் கமல் தவிர மற்றவர்களை உனக்கு 100% தெரியும் நண்பா. ஹாட்லி,மெதடிஸ் & அமாவாசையட்ட படிச்ச ஆக்கள் தான். :rolleyes::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சத்தைக் கிள்ளாதே... பகுதி - 4

 

Love-you-Art-1920x1200.jpg

 

அதிகாலை நாலு மணிக்கெல்லாம் கோயில்லை பாடத்தொடங்கி விட்டுது.
அவசர அவசரமாக எழும்பிய மயூரன் பல்லை மினுக்கி,முகம் கழுவிட்டு ஜீன்ஸு,சேட்டைக் கொழுவிக் கொண்டு கோயிலடிக்குப் போனான்.

தேர் வீதியுலா வர முதல் எல்லாம் ஒருக்கா கூட்டிச் சிரமதானம் செய்து, அங்கப் பிரதட்சணை செய்யுற ஆக்களுக்கு கல்லு கில்லு குத்தினாலும் என்று அதையெல்லாம் பார்த்து பொறுக்கி எறிஞ்சு போட்டு , அப்படியே
அலெக்ஸ் அண்ணையின்ரை லான்ட்மாஸ்டரிலை தண்ணி ராங்கை தூக்கி வச்சிட்டு நிண்ட ரண்டு பொடியளைக் கூட்டிக்கொண்டு போய் மடத்து ராங்கிலை இருந்து தண்ணிய நிரப்பிக் கொண்டு ,  வீதியெல்லாம் ஊத்தி
ஈரமாக்கிப் போட்டு போய் மடத்திலை சமையலுகளை எல்லாம் பார்த்திட்டு அப்படியே பந்திக்கு  வாழை இலை எல்லாம் கழுவிக் குடுத்திட்டு

"மச்சான் இண்டைக்கு என்னைத் தேடாதையுங்கோடா பந்தி வைக்க வரமாட்டன் சரியோ"

பந்தி வைக்குறதே வாற பெட்டையளை "கரெக்ட்" பண்ண இண்டைக்கு வரமாட்டன் எண்டுறானே.. ஆரட்டையும் அடிவாங்காமல் விட்டால் சரி தான்.

"ஓடி வந்து மள மள வென்று நாலு வாழி தண்ணியை அள்ளித் தலைக்கு ஊத்தி விட்டு நல்ல அகலக்கரை வேட்டி ஒன்றைக் கட்டிக் கொண்டு, செக் சேட்டும் போட்டுக் கொண்டு, இராத்திரியே சார்ஜ் சுக்கு போட்ட கமராவை எடுத்துக் கொண்டு
"அம்மா.. என்ரை வீடியோ கஸட் எங்கையணை? பாக்குக்குள்ளை காணேல்லை?"

நீ தானேடா வச்சாய்.. போய் பாரு.

"காணேல்லை எண்டுறன், வாணை வந்து எடுத்துத் தாங்கோ."

.......... அம்மான்ரை சத்தத்தையே காணேல்லை.

"கேட்டிட்டு இருக்கிறன் அங்கை என்னணை செய்யுறாய்"?

ஏன்ரா அவசரப்படுறாய்? ஏதோ வச்சதை எடுக்கப் போறது போல..

இந்தா.....!!

"சேட்டுக் கழட்ட வெக்கம், அதாலை உள்வீதிக்குப் போகேல்லை வெளியிலையே காத்திட்டு இருந்தான் மயூரன்."

"அதிசயம், ஆனால் உண்மை...!!
அவள்  நண்பிகள் புடைசூழ கோவிலுக்கு வந்திருந்தாள் அபி.
"இருளைக் கிழித்துக் கிரணங்களைப் பரப்பும் கதிரவனின் வருகை போல " கருநீல நிறப் பஞ்சாபி, ஒரு கையிலை கறுத்தப் பட்டி மணிக்கூடு, மறுகையில் ஒரு சோடி காப்பு,கழுத்திலை ஒரு நெக்லஸ், தலைக்கு கனகாம்பரப் பூ வச்சு...

"மையோ மரகதமோ
மறி கடலோ, மழை முகிலோ
ஐயோ, இவன் அழகென்பதோர்
அழியா அழகுடையான்" என்று கம்பராமாயணத்தில் கம்பர் இராமனின் அழகை
வர்ணிக்க வார்த்தைகள் இன்றிச் சொக்கி நிற்கும் இடத்தில் "ஐயோ" என்ற வார்த்தையைச் சேர்த்து அந்த இடத்தை முக்கியப் படுத்தி இருப்பார் அப்படித்தான் மயூரனும் அவளது அழகை வரிந்து கொண்டான்."

ஆனால் அவள் ஏறெடுத்தும் பார்த்திராள். தன்ரை பாட்டுக்கு கோயிலுக்குள் போய் விட்டாள்.

பேசாமல் உள்ளை போகலாம் என்று நினைத்தவனை.

"இதிலை தனிய நின்று என்னடா மச்சான் செய்யுறாய் என்று கொண்டு வந்தான் கண்ணன்."

ஒருத்தரையும் காணேல்லையடா .. வா ..! சுவாமி வர வீடியோ எடுப்பம் என்று சொன்னவன். சுவாமி வந்ததும் அன்றைய நாளைக் காட்சிப் படுத்தினான்.

.......திருவிழாவும் முடிந்திருந்தது ....
ஒரு நாள்,

"மச்சான் நீ தேர்,காவடிக்கு எல்லாம் வீடியோ எடுத்தனி தானே அந்த கொப்பியை ஒருக்கா தா மச்சான் பார்த்திட்டு தாறேன் என்றான் விஜய்.."

சரி .. பின்னேரம் விளையாட வரேக்குள்ளை கொண்டு வாறன்.

நாலைஞ்சு நாள் போயிருக்கும். பிள்ளையார் கோவிலடி மதகிலை பொடியள் எல்லாரும் இருக்கும் போது ..
"மச்சான் என்னடா சுவாமியை விட அபியைத்தான் சுத்திச் சுத்தி எடுத்த்இருக்கிறாய். என்ன லவ் வா??? அவளும் நல்லா போஸ் குடுத்திருக்கிறாளடா.. அதிலை ஒரு கட்டத்திலை பார்த்தியே அவளவு சனத்துக்குள்ளையும் எட்டிப் பார்க்குறாள்.
சத்தியமா லவ் தான்டா .." என்றான் விஜய்.

நீ வேறை ******(செந்தமிழ்) நானே விசரிலை இருக்கிறன்.
அவளோடை வடிவுக்குச் நமக்கெல்லாம் சரிவராது டா..
சும்மா பார்க்கலாம் ஆனால் நடக்கணுமே.

"**** நான் சொல்லுறதைக் கேளடா...
நீ அவளட்டைச் சொல்லு சரி வராட்டி மொட்டை அடிக்கிறன் மச்சான் என்றான் விஜய்."

"இப்ப இல்லை ஆனால் சொல்லுறேன், அடி விழாட்டிச் சரி.."

"காணாமல் போகிறேன்"..

கருத்தரித்ததே உன் காலடித் தடங்களில்
காணாமல் போகவா..?
உன் காலடித் தடங்களில்
கால் வைத்து நடக்கிறேன்
உருக் கொண்ட உயிரின் உறவினைத் தேடி.."

வெற்றுக் காகிதங்களில் கிறுக்கி வீசிக் கொண்டிருந்தால் அபி நினைவுகளில்.

ஒரு ஞாயிறு பின்னேரம் ஆறு மணி இருக்கும் ..
அபியைப் பின் தொடர்ந்தவன் ஓராங்கட்டைச் சந்திக்கு கிட்ட வைத்து

" அபி ஒரு நிமிசம் நில்லுங்கோ, நான் உங்களோடை  கதைக்க வேணும்.
அவள் சைக்கிள் அருகில் சென்றவன். அபி எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு ஐ "லவ் யூ" .. உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா"??

" டேய் .. இனிமேல் எனக்குப் பின்னாலை வராதை, வந்தால் ஆமியட்டைச் சொல்லிடுவன்."

Love-love-26537101-497-367.jpg


"மௌனங்களுக்கே தெரிந்த உயிர் வலி அவள் வாய் மொழி வந்த போது
வெந்தணல் கூட இந்தளவுக்கு வேக வைத்திருக்காது, உடற்கலங்கள் எல்லாம் உதிர்ந்து விழுவது போல் உணர்ந்தான்."

எப்படி? என்ன செய்ய?? எங்கு போக??
நேராக வீட்டை போனவன் .." அம்மா தலையச் சுத்துது நான் படுக்கப் போறேன் என்றவன். தரையில் பாயைப் போட்டு விட்டு தலையணை கூட இல்லாமல் காலைக் குறுக்கி நெஞ்சோடு அணைத்தவறு சாரத்தாலை தலையை மூடிக் கொண்டு அழுது தொலைத்தான்."

"அப்பு, ராசா, என்னைய்யா? என்ன ஆச்சு என் தங்கத்துக்கு" அம்மா ஓடி வந்து சாரத்தை விலக்கி நெத்தியில்,கழுத்தில் என்று பிள்ளைக்கு காய்ச்சல் ஏதுமோ என்று கை வைத்துப் பார்த்தா.. " அப்பு ஒருக்கா வாயை ஊது.."

என்னம்மா? என்மேலை உங்களுக்கு நம்பிக்கை இல்லையா??

" என்ரை பிள்ளையப்பு நீ.. உன்னை நம்பாமலா? இத்தனை நாளா உன்னை நான் இப்படிப் பார்க்கேல்லையே.. என்னப்பு?"

ஒண்டுமில்லை போணை..

"சரிவா .. இரவு சாப்பிடாமல் படுக்கக் கூடாது, நான் குழைச்சு உனக்கு உருட்டி தாறன் ரண்டு வாயாச்சும் சாப்பிடப்பு, சாப்பிட்டு படப்பு"

"சொல்லுறேன். போங்கோம்மா.. நான் காலமைக்கு நேரத்துக்குப் போகவேணும். திங்கள் கிழமை பஸ்ஸிலை எல்லாப் பொடியளும் வருவங்கள் எனக்கு நூடில்ஸ் செய்யணை.. சாப்பிட்டிட்டு போறன்."

"பெத்த மனதுக்கு பிள்ளையின் வேதனை தெரிந்து விலகியிருந்தா"

மயூரனால் அழுகையைக் கட்டுப் படுத்தவே முடியவில்லை. நாலைந்து வருடங்களுக்கு மேலாய் அவள் பின்னால் சுத்தியிருப்பான். படிக்கிற பெட்டையள் வலியக் கதைச்சால் கூடக் கதைக்காதவன் அவளைத் தவிர யாரையுமே ஏறெடுத்துப் பார்க்காத அவனுக்கு அவளின் இந்த வார்த்தைகள் சொல்லொணா வேதனையைக் கொடுத்திருந்தது.

"நடுச்சாமம் எல்லாரும் நல்ல நித்திரை .. இனி உயிரோடை இருக்கக் கூடாது என்று நினைத்தவன், தோட்டத்திலை பூச்சிக்கு என்று அடிக்க வச்சிருந்த மருந்திலை ஒரு மிடறு குடிச்சவனுக்குப் பயம் வந்திட்டுது. செத்தால் அம்மா பாவம், அண்ணன்,அக்காள், தங்கச்சியை விட்டுச் சாகவேணுமோ.
சாகாட்டி...."

"மருந்தை மூடி எடுத்த இடத்திலை வச்சிட்டு ஓடிப்போய் கிணத்தடியிலை இருந்த சவர்க்காரத்தைச் சப்பித் தின்றிட்டு தண்ணியள்ளச் சத்தம் கேட்டிடும் என்று தொட்டியிலை இருந்த தண்ணியைக் குடிச்சிட்டுப் படுத்திட்டான்.
நாளை என்ன நடக்கும் என்று தெரியாமலே"....

தொடரும்...

 

பி.கு : எழுத்துப் பிழை திருத்தப் பட்டுள்ளது.

 

Edited by ஜீவா

இனி உயிரோடை இருக்கக் கூடாது என்று

நினைத்தவன், தோட்டத்திலை பூச்சிக்கு என்று அடிக்க வச்சிருந்த மருந்திலை

ஒரு மிடறு குடிச்சவனுக்குப் பயம் வந்திட்டுது.

 

இப்பிடி எத்தினை பரம்பரைக்கு சிந்திக்கப் போறியள் :icon_mrgreen: :icon_mrgreen: ??? கொஞ்சம் மாத்தி யோசிக்கிறது  :lol:  :D  . பாராட்டுக்கள்  :)  .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி உயிரோடை இருக்கக் கூடாது என்று

நினைத்தவன், தோட்டத்திலை பூச்சிக்கு என்று அடிக்க வச்சிருந்த மருந்திலை

ஒரு மிடறு குடிச்சவனுக்குப் பயம் வந்திட்டுது.

 

இப்பிடி எத்தினை பரம்பரைக்கு சிந்திக்கப் போறியள் :icon_mrgreen: :icon_mrgreen: ??? கொஞ்சம் மாத்தி யோசிக்கிறது  :lol:  :D  . பாராட்டுக்கள்  :)  .

 

:D :D

உண்மை தான் ஆனால் இலகுவில் கிடைக்கக் கூடியதும் அது தானே?

ஆனால் இந்த சம்பவம் தான் அவனை பலவிடையங்களில் மாற்றியிருந்தது. அடுத்தடுத்த பாகங்களில் அவை தொடரும்.

நன்றி கோமகன் அண்ணா வரவிற்கும்,கருத்துப்பகிர்விற்கும். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கோ தம்பி . கதையை நல்லாய்தான் கொண்டு போறியள் :)  :)  .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கோ தம்பி . கதையை நல்லாய்தான் கொண்டு போறியள் :)  :)  .

 

நன்றி அக்கா. :)

எல்லாம் நீங்கள் தரும் ஊக்குவிப்பு தான் அக்கா. :)

காதலும் நகைச்சுவையும் தம்பி ஜீவாவுக்கு சொல்லவா வேணும். நல்லா எழுதுறீங்கள் ஜீவா. இப்படி கதைகள் எங்கள் ஒவ்வொருவருக்கும் நடந்திருக்கும், எப்படி எழுதிறது என்று தெரியாமல் தான் நிறைய பேர் இருப்பார்கள். அனால் உங்கள் எழுத்துக்கள் அவர்களுக்கும் அவர்களின் நினைவை அசைபோட வைக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கை.

 

தொடருங்கள் ஜீவா 

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் கிடைக்காத காரணத்தால் அதிகம்யாழுக்கு வரமுடியாவிட்டாலும் எட்டிப்பார்க்கும் இடங்களில் ஜீவாவின் எழுத்தக்களும் ஒன்று

தொடரட்டும்

வாழ்க நலமுடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.