Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் பெண்ணின் ஹபாயா ஆடையில் கைவைத்த பொதுபலசேனா இளைஞர்கள்! – கொதிப்பில் முஸ்லிம்கள்

Featured Replies

கிழக்கில் முஸ்லிம் பெண்களின்
ஆடையிலும் கைவைத்துள்ளது கோத்தபாயவின் பொதுபலசேனா!
– கொதிப்பில் முஸ்லிம்கள்

ஹலாலில் வெற்றிகொண்ட கோத்தபாய ராஜபக்ஷவின் பொதுபலசேனா, முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயா ஒழிப்பு நடவடிக்கையை கிழக்கில் முஸ்லிம்களின் கோட்டையென வர்ணிக்கப்படும் ஓட்டமாவடியிலிருந்து நேற்று திங்கட்கிழமை ஆரம்பித்துள்ளது.
ஓட்டமாவடி முஸ்லிம் பெண் ஒருவரின் ஹபாயாவில் கைவைத்தே தமது அராஜக செயலை ஆரம்பித்துள்ளது பொதுபலசேனா.
முஸ்லிம் சமூகத்தைக் கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் நேற்றையதினம் திங்கட்கிழமை காலை மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தைக் கேள்வியுற்று கடும் அதிர்ச்சியும் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பொதுபலசேனாவுக்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் வீதிக்கு இறங்கும் நிலையையே இது எதிர்காலத்தில் தோற்றுவிக்கும் என்று கடும் தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருபவை வருமாறு:

மன்னம்பிட்டி தபால் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த ஓட்டமாவடி யுவதி, வழமைபோன்று திங்கட்கிழமை ஹபாயா ஆடை அணிந்து மன்னம்பிட்டியில் பஸ்ஸிலிருந்து இறங்கியுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த பொதுபலசேனாவைச் சேர்ந்த இளைஞர்கள் குறித்த பெண்ணின் ஹபாயா ஆடையை வேகமாக இழுத்துள்ளனர். இதனையடுத்து அப்பெண் கூச்சலிட்டவாறு அவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொண்டு தபால் நிலையத்துக்குள் ஓடோடிச் சென்று அடைக்கலம் தேடியுள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து மன்னம்பிட்டியில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் ஓட்டமாவடிப் பகுதியிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.
இக் கொடூரச் செயலைக் கேள்வியுற்ற மாகாணசபை உறுப்பினர் அமீர் அலி, உடனடியாக பொலிஸ் மா அதிபர், தபால் சேவைகள் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் தொடர்புகொண்டு விளக்கமளித்ததுடன் குறித்த பெண்ணுக்கும் மன்னம்பிட்டியவில் கடமையாற்றும் மற்றுமொரு முஸ்லிம் யுவதிக்கும் உடன் இடமாற்றம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி கூறியவை வருமாறு:
பொதுபலசேனாவின் காட்டுமிராண்டித்தனம் எல்லை கடந்து செல்கின்றது. இது விடயத்தில் அரசு இன்னுமின்னும் பாராமுகமாக இருக்கமுடியாது.
முஸ்லிம் சமூகம் அதி உச்சக்கட்டப் பொறுமையில் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கின்றது. இனியும் பொதுபலசேனாவின் அட்டூழியம் தொடருமாகவிருந்தால் அதற்கு எதிராக ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியிருக்கமாட்டாது.
இது இறுதியில் அரசுக்கே பாதகமான சூழ்நிலையைத் தோற்றுவிக்கும். அரசு உடன் இது விடயத்தில் தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும்.
இனியும் பாராமுகமாக அரசு இருக்கமுடியாது. பாரிய விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கவேண்டிய முழுப் பொறுப்பும் அரசுக்கே உண்டு என்று அமீர் அலி தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸும் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
எக்காரணம் கொண்டும் இச்சம்பவத்தை அங்கீகரிக்கவும் முடியாது. இனியும் பொறுமைகாக்கவும் முடியாது எனவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உணவில் கைவைத்து இன்று உடைக்கு மாறியிருக்கும் பொதுபலசேனாவை அடக்கி ஒடுக்கிவைக்க அரசு இனியும் பின்நிற்குமாயின் முஸ்லிம் சமூகத்தை அது பொறுமை இழக்கச் செய்யும் என்றும் முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=a87abfa2-fffb-4a80-8447-0be9d8731b48

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இதே கோத்தா தமிழ் பெண்கள் எமது இராணுவத்துக்கு இரையாக தமிழ் ஆண்கள் இந்துமா சமுத்திரத்திற்கு இரையாகட்டும் என்று வன்னிப் போரின் போது கொக்கரிக்கேக்க.. இந்தக் கூட்டம் கூட நின்று கூச்சல் போட்டதில்ல..! அனுபவிக்கட்டும்..! அப்ப தான் தெரியும் கூச்சல் போட்டதன் பின் விளைவு..! :icon_idea:

பொதுபலசேனவின் பணி தொடர வாழ்த்துக்கள்.

733897_494462110614992_312815925_n.jpg

Edited by கிளியவன்

  • தொடங்கியவர்

நெடுக்கு மர்ம மனிதர்கள் முஸ்லீம் பெண்கலை தொந்தரவு செய்தபோது பௌசியும், கக்கீமும் அது சும்மா ஊடகங்கள் ஊதி பெருப்பிக்கிறங்கள் என்று சொல்லவில்லையா.

கக்கீம் "ஒன்றுமே அறியாமல் வெளிநாட்டில் இருந்து வந்த அப்பாவி ஜனாதிபதியுடன் தான் பேசித்தீர்த்துவிட்டேன்" என்ற பின்னரும் மாதக்கணக்கில் அது தொடர்ந்து வெளிநட்டு தூதுவராலங்களும் கூட அதில் தலியிட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

பொதுபலசேனவின் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் ராசிக் குழு, ஜிகாத் அமைப்பு எல்லாரும் இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க மாட்டார்களா?? :(

  • கருத்துக்கள உறவுகள்

கியாப் ஆடை.... அரைப் பாவாடை, சட்டை... மாதிரி இருக்குமா?

கியாப் ஆடை.... அரைப் பாவாடை, சட்டை... மாதிரி இருக்குமா?
 ஹபாயா என்பது இவர்கள் அணிந்து இருப்பது. கியாப்?????????
 
niqab.jpg
Al-Karam-Latest-Abaya-Designs-2012-2013-
  • தொடங்கியவர்

 ஹபாயா என்பது இவர்கள் அணிந்து இருப்பது. கியாப்?????????
 
முதலாவதில் நீங்கள் காட்டியிருப்பது நிகப்

முழுவதாக மூடியிருப்பது பர்க. அதில் கண்கள் வெளியே தெரியமாட்டா

https://www.google.com/search?q=hijab&hl=en&client=firefox-a&hs=lLP&rls=org.mozilla:en-US:official&source=lnms&tbm=isch&sa=X&ei=asxIUZTGAbW24AOQlIDYBQ&ved=0CAoQ_AUoAQ&biw=1440&bih=756#hl=en&client=firefox-a&hs=pLP&rls=org.mozilla:en-US%3Aofficial&tbm=isch&sa=1&q=burqa&oq=burqu&gs_l=img.1.0.0i10j0j0i10l2j0l3j0i10l3.815328.827284.0.829565.11.9.1.0.0.0.232.733.5j2j1.8.0...0.0...1c.1.6.img.agPf2J4rrU0&bav=on.2,or.r_qf.&bvm=bv.43828540,d.dmg&fp=f78a5a3be2b0232f&biw=1440&bih=756

ஹபாயா என்பது ஆங்கிலத்தில் abaya என்று அழைக்கப்படுகிறது. (இதுதான் உண்மையில் செய்தியில் குறிப்பிடப்படும் ஆடையாக இருக்க வேண்டும். ரவுடிகளால் இழுத்து எடுக்க முயன்றதாக குறிபிட்ட படியால் நான் கியாப் தான் அப்படி அரபிக்கில் எழுத்து கூட்டப்பட்டிருக்கிறது என்று நினைத்தேன். பெயரை தேடும் வரை கருத்து பலதடவைகள் நீட்ட வேண்டி வந்துவிட்டது.)  

https://www.google.com/search?hl=en&sugexp=cpsugrccgaiagame&gs_rn=7&gs_ri=psy-ab&gs_mss=%E0%AE%85&tok=gtXZvdO1PCgs6Sj5CvctZg&cp=5&gs_id=23&xhr=t&q=abaya&bav=on.2,or.r_qf.&bvm=bv.44011176,d.dmg&biw=1280&bih=899&um=1&ie=UTF-8&tbm=isch&source=og&sa=N&tab=wi&ei=cd9IUabZMJTe4AOnl4GwDg

நன்றி கிளியவன்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படைப்பாளிகள் உலகில் எழுத்தாளர் டானியல் அவர்களை தெரியாதவர்கள் குறைவு, அவர் சிலவேளைகளில் கொஞ்சம் என்ன கூடுதலாகவே சில விடையங்களை விமர்சனம் செய்வார். அது பலருக்குப் பிடிக்காது அனால் அதில் ஓரளவு நியாயமும் இருக்கும். எழுபதுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சாதீய வேற்றுமையைக் கண்டித்து மிகப்பெரிய விழிப்புணர்வு தோன்றிய நேரமது. அப்போது தென்மராட்சிப் பகுதியில் பாடசாலை சென்ற உயர்சாதி அல்லாத மாணவர்களது புத்தகங்களை பறித்து தெருவில் மலையாகக் குவித்து தீக்கிரையாக்கிய சம்பவத்தை வரலாறு தெரிந்தவர்கள் நினைவில் வைத்திருப்பர்.

யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அதன்போது டானியல் கூறிய கருத்து நீங்கள் அண்டு செய்ததை இன்று வேறொருவன் செய்கிறான்.

இக்கருதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லாதுவிடினும், உண்மை வலிக்கும்.

என் அன்பான இஸ்லாமியச் சகோதரர்களே எமது துன்பத்தில் உங்கள் வாழ்வை வழமாக்கிக்கொண்டீர். அனுபவியுங்கள். இது மட்டுமல்ல இன்னும் இருக்கு. எனினும் உங்கள் துயருடன் நானும் மானசீகமாகப் பங்குகொள்கிறேன்.

தமிழீழத் தனியரசு தமிழர்க்கு முக்கியமில்லை, சிங்களவனுக்கு உங்களுக்குமே முக்கியமானது. ஏனெனில் நாமமெப்போது நிம்மதியையும் சுதந்திரத்தையும் உணர்கிறோமோ, அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக உறங்க முடியும்.

முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்துவிட்டது என நீங்களும் உங்கள் பங்காளி சிங்களவனும் நினைத்திருந்தால், அவ்வெண்ணத்தை மாற்றிவிடுங்கள். முள்ளிவாய்கால் என்பது தமிழினத்தின் தோல்வி இல்லை,  தாயகம் நோக்கிய பயணத்தின் திசை மாற்றம், இன்னும் கொஞ்சத்தூரம்தான் எமை அசுவாசப்படுத்த நேரம் இல்லை. இறுதிக் கணத்தில் நாணிக்குறுகி நீங்கள் எம்முடன் இணைவீர்கள், அப்போது எம்மிலிருந்து ஒரு புன்னகை மட்டுமே ஆயிரம் அர்த்தங்களுடன் உங்களை வரவேற்கும். உங்களுக்கு அது புரியாது, நீங்கள்தான் மனச்சாட்சியையும் மனிதத்தையும் சிங்கள தேசத்தில் தொலைத்துவிட்டீர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இனம் அழிக்கப்பட்டபோது, உள்ளுக்குள்ளும், வெளியிலும் கொதித்தோம்! கொதிக்கிறோம்!

சிங்களவன் சிரிக்கிறான் என்று எமக்குள் குமைந்தோம்!

இப்பொழுது இன்னொரு இனத்தின் மீது, சிங்களம் கை வைக்கின்றது!

நாங்கள் அதையிட்டுக்  கருத்தெழுதும் போது, எங்களது ஆதங்கங்களை அந்த இனத்தின் மீது துப்புகின்றோம்!

அவர்கள் மீது தவறுகள் பல இருந்தாலும், அவர்களும் தமிழர்கள் என்று நோக்குதலே சரியான பார்வையாகும் என நினைக்கிறேன்!

எத்தனை முஸ்லிம் மாணவர்கள், தமிழகத்தில் உணர்வுடன் கலந்து கொள்கிறார்கள் என்பதையும் நாம் கருத்தில் எடுக்க வேண்டும்!

அவர்களையும் அணைத்துச் செல்வதுதான், காலத்தின் தேவையாகும்!

அனைவருமே கண்ணுக்குக் கண் என்ற முறையில் நினைத்தால், முடிவில் எமதினம் முழுவதுமே குருடாவது தான் முடிவாக இருக்கும்!  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படைப்பாளிகள் உலகில் எழுத்தாளர் டானியல் அவர்களை தெரியாதவர்கள் குறைவு, அவர் சிலவேளைகளில் கொஞ்சம் என்ன கூடுதலாகவே சில விடையங்களை விமர்சனம் செய்வார். அது பலருக்குப் பிடிக்காது அனால் அதில் ஓரளவு நியாயமும் இருக்கும். எழுபதுகளின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சாதீய வேற்றுமையைக் கண்டித்து மிகப்பெரிய விழிப்புணர்வு தோன்றிய நேரமது. அப்போது தென்மராட்சிப் பகுதியில் பாடசாலை சென்ற உயர்சாதி அல்லாத மாணவர்களது புத்தகங்களை பறித்து தெருவில் மலையாகக் குவித்து தீக்கிரையாக்கிய சம்பவத்தை வரலாறு தெரிந்தவர்கள் நினைவில் வைத்திருப்பர்.

யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டது. அதன்போது டானியல் கூறிய கருத்து நீங்கள் அண்டு செய்ததை இன்று வேறொருவன் செய்கிறான்.

இக்கருதில் எனக்கு முழுமையான உடன்பாடு இல்லாதுவிடினும், உண்மை வலிக்கும்.

என் அன்பான இஸ்லாமியச் சகோதரர்களே எமது துன்பத்தில் உங்கள் வாழ்வை வழமாக்கிக்கொண்டீர். அனுபவியுங்கள். இது மட்டுமல்ல இன்னும் இருக்கு. எனினும் உங்கள் துயருடன் நானும் மானசீகமாகப் பங்குகொள்கிறேன்.

தமிழீழத் தனியரசு தமிழர்க்கு முக்கியமில்லை, சிங்களவனுக்கு உங்களுக்குமே முக்கியமானது. ஏனெனில் நாமமெப்போது நிம்மதியையும் சுதந்திரத்தையும் உணர்கிறோமோ, அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக உறங்க முடியும்.

முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் முடிந்துவிட்டது என நீங்களும் உங்கள் பங்காளி சிங்களவனும் நினைத்திருந்தால், அவ்வெண்ணத்தை மாற்றிவிடுங்கள். முள்ளிவாய்கால் என்பது தமிழினத்தின் தோல்வி இல்லை,  தாயகம் நோக்கிய பயணத்தின் திசை மாற்றம், இன்னும் கொஞ்சத்தூரம்தான் எமை அசுவாசப்படுத்த நேரம் இல்லை. இறுதிக் கணத்தில் நாணிக்குறுகி நீங்கள் எம்முடன் இணைவீர்கள், அப்போது எம்மிலிருந்து ஒரு புன்னகை மட்டுமே ஆயிரம் அர்த்தங்களுடன் உங்களை வரவேற்கும். உங்களுக்கு அது புரியாது, நீங்கள்தான் மனச்சாட்சியையும் மனிதத்தையும் சிங்கள தேசத்தில் தொலைத்துவிட்டீர்களே.

நன்றி எழுஞாயிறு..அருமையான கருத்து..

திரும்ப திரும்பபடித்தேன்..இந்த திரியை வாசித்தபோது என் மனதில் ஓடிக்கொண்டிருந்தவை கீழே கருத்துக்களை வசித்தபோது உங்கள் எழுத்தில்..

  • கருத்துக்கள உறவுகள்

முன்னம் எல்லாம் தமிழ் பேசும் முஸ்லீம் பெண்கள் சேலை அணிந்து சேலைத் தலைப்பால் மொக்காடு போட்டுக் கொள்வார்கள். இப்போது எல்லாம் அரேபிய கடும்போக்கு தீவிரவாத உடைகளை திணிப்பதோடு.. தாங்கள் தனி இனம் என்று சொல்ல.. குறுக்கு மறுக்கா எல்லாம் நடந்து கொள்கிறார்கள். (நம்ம பொண்ணுங்களும் இப்ப சல்வார்.. பஞ்சாபி தானே அணியினம்... அவை மேலையும் பொதுபலசேன கைவைக்க அதிக நேரம் எடுக்காது. முள்ளிவாய்க்காலில் வெகு சுலபமாக.. கைவைச்சு பழகிட்டினம் தானே..!)

எது எப்படி இருந்தாலும்.. முஸ்லீம்கள் தனி இனமல்ல. அவர்கள் ஒரு மதத்தைப் பின்பற்றும் ஒரு சமூகக் கூட்டத்தை சேர்ந்தவர்களே ஆவர். அதனை சிங்கள பேரின பொதுபலசேன அவர்களுக்கு உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை..!

பொதுபலசேன தமிழர்கள் விடயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கக் கேட்கப்பட்டுள்ளது. இந்தச் சேனை தமிழர்கள் நோக்கி திரும்ப அதிக நேரமும் எடுக்காது என்பதை தமிழ் மக்களும் உணர்ந்து செயற்பட வேண்டியது கட்டாயம்.

அபயாவில் முஸ்லீம் பெண்கள்.. இது தமிழ் பேசும் பெண்களின் உடையாக இருந்ததில்லை. இப்போ முஸ்லீம் காங்கிரஸ் மதவாத தீவிரவாதிகள் சந்தர்ப்பம் பார்த்து.. இதனை ஈழத்துள்ளும் புகுத்துகின்றனர். தமிழர்கள் இதனைத் தட்டிக்கேட்டால்.. புலிகளுக்கு உயிர் கொடுப்பதாக குற்றச்சாட்டிக் கொண்டு சிங்களவனை துணைக்கு அழைச்சிடுவினம். இல்ல பாகிஸ்தான்.. சவுதிட்ட ஓடிடுவினம்.  நல்ல காலம்.. சிங்களவனே கைவிச்சிட்டான். தெரிந்தோ தெரியாமலோ சிங்களவன் சில நல்லதுகளும் செய்கிறான். :icon_idea:

Abaya-Fashion-Muslim-Woman-Dress-Design-

 svveilswideweb470x3080dc0.jpg

200px-Styles_of_Sari.jpgJuwariya_Uvais.JPGelderly-Muslim-woman.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரியே

உனக்காவும்  தான் நாம் போராடினோம்  போராடுகின்றோம் 

இனியும் போராடுவோம் 

உன்னுடைய ஒரு சில சகோதரர்கள் பதவிக்காகவும் புகழுக்காவும் 

எம்மினத்தைப் பிரிக்க நினைத்தார்கள் இன்றும் நினைக்கின்றார்கள் 

அதற்காக நீ வேட்கப்பட்டிருப்பாய்.எங்களைப்போல. 

சிங்களத்திற்கு இந்துவோ  இஸ்லாமோ எதுவாக இருந்தாலும் 

பௌத்தனாக இல்லாவிட்டால் நீ அவனுக்கு எதிரியே

காலம் நேரம் தேவை அறிந்து போராடு

உன் உரிமைக்காகப் போராடு நாங்களும் தமிழர்களாக உன்னுடன்

சேர்ந்து போராடுவோம் எங்கள் உரிமையைப் பெற்றுக்கொள்வோம்

தமிழனாக வாழ்ந்து தமிழனுக்காகப் போராடுவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பண்ணியில் பண்ணிப்பாருமன்!!!!!! கதைக்கிறவை ஆரெண்டு தெரியுதோ??? இவையள்  பேசாமல் ரேடியோவையே நடத்தலாம்.....அல்லாவுக்கு ரிவி எண்டொரு சாமன் வருமெண்டு தெரியாமல் போச்சு :lol:  :D  ^_^

பண்ணியில் பண்ணிப்பாருமன்!!!!!! கதைக்கிறவை ஆரெண்டு தெரியுதோ??? இவையள்  பேசாமல் ரேடியோவையே நடத்தலாம்.....அல்லாவுக்கு ரிவி எண்டொரு சாமன் வருமெண்டு தெரியாமல் போச்சு :lol:  :D  ^_^

குசா, சிரிச்சு சிரிச்சு முடியல்லை...  :lol:  :lol:  :lol:

போதுபல சேனாவின் இந்த நடவடிக்கைகளை ஆதரிப்பதே இஸ்லாமிய மக்களுக்கு சில உண்மைகளை உணர்த்தவே.

இதை நாம் சொன்னால் கேட்கமாட்டார்கள் அதையே சிங்களம் இப்படி சொல்லும்போது தெளிவாக விளங்குவார்கள். 

பொறுமைக்கும் எல்லையுண்டு என்று வீணாக பீத்தாம ஆகவேண்டியதை பாருங்க.

உங்கட அறிக்கை சிங்களத்தை ஒன்றும் செய்யாது. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதும் தங்களைத் தமிழர்களாக எண்ணியது இல்லை. தமிழர் விடுதலப் போராட்டம் முனைப்போடு இருந்த காலகட்டத்தில் சிங்களம் அதன் ஒட்டுமொத்த வளங்களை மாத்திரமல்ல அதன் சிந்தனையையும் தமிழர் போராட்டத்தினை அடக்குவதிலேயே செலவிட்டது. அப்போதெல்லாம் தமிழ் மொழியைப் பேசிக்கொண்டு தமிழர் விரோதப் போக்கினைக் கடைப்பிடித்த இலங்கைச் சோனகர் சிங்களத்துக்கு ஆதரவாகவே செயற்பட்டனர். தமிழருக்கு கிடைக்கவேண்டிய சலுகைகளையும் அனுபவித்தனர்.

தமிழர் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட நிலையில் சிங்களம் தனது பார்வையை முஸ்லிம்கள் மீது திருப்பியுள்ளது. தற்போது முஸ்லிம்கள் எடுத்திருப்பது வெறும் சந்தர்ப்பவாதம் மட்டுமே.

எதிரியை நம்பலாம் ஆனால் துரோகியை ஒருக்காலும் நம்பக்கூடாது!

நீங்கள் கூறுவது அவ்வளவும் சரியே, யாழ் வாலி!

இவற்றில் ஒன்றைக்கூட நான் மறுக்கவில்லை!

நாளைக்கே, தீர்வு என்று ஒன்று வரும்போது, இவர்கள் தங்கள் சந்தர்ப்பவாதத்தை மீண்டும் காட்டத்தான் போகின்றார்கள்!

அதுவும் வரப்போகும்,தீர்வைத் தான் பாதிக்கும்! அதனால் வரப்போகும் இழப்பும், நமக்கே தவிர முஸ்லிம்களுக்கு அல்ல!

அதனால் தான், அணைத்துப்போவதை வலியுறுத்தினேன்! எதிரிகளை எப்போதும் எம்முடன் வைத்திருக்கவேண்டும்! அதுவே எமக்குப் பலமாகும்!

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சின்ன சந்தேகம். அநேகமாக.... முஸ்லீம்கள் வாழ்வது, வெப்பமான நாட்டில். அவர்கள் ஏன்... கறுப்பு உடையை தேர்ந்தெடுத்தார்கள்.
கறுப்பு நிறம், வெப்பத்தை உறிஞ்சும். கறுப்பு உடையால்... முழுக்க மூடும் போது, உள்ளுக்கு வேர்க்காதா? tired.gifschwitzen1.gif

சிறி

அவர்கள் வாழ்வது வெப்ப சீதோசன சூழலில்தான், தனால்தான் அவர்கள் வெள்ளை நிறத்திலான ஆடைகளை அணிவார்கள் (அதுவே அராபியர்களின் ஆடை). நான் கூறுவது ஆண்களை. 

பாலைவன சூழலுக்கு ஏற்ப அவர்கள் வெள்ளி உடையை சற்றுப் பெருசாக அணிவதனால் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்தும்.

முகத்தையும் தலையையும் மூடுவதனால் மணல் காற்றில் இருந்தும் பாதுகாப்பார்கள்.

அட இதுக்கும் இந்த கருப்பு உடைக்கும் என்ன சம்பந்தம் என்று நிங்க நினைப்பது தெறித்து. கருப்பு உடையை அணிவது பெண்களே, அவர்கள் வெளியில் போவது அரிது. அப்படிப் போனாலும் அந்த வேட்கை அகோரத்தில் அதிகம் வெளியல் சுத்தாமல் ஒழுங்கு மரியாதையா விட்டுக்கு நேரகாலத்துக்கு போகசொல்லியோ தெரியாது.

அதோட அண்களும் உப்பிட்யே கறுப்புப் போட்டால் என்னென்ன குழப்பங்கள் வருமெண்டு தெரியுந்தானே? 

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு சின்ன சந்தேகம். அநேகமாக.... முஸ்லீம்கள் வாழ்வது, வெப்பமான நாட்டில். அவர்கள் ஏன்... கறுப்பு உடையை தேர்ந்தெடுத்தார்கள்.

கறுப்பு நிறம், வெப்பத்தை உறிஞ்சும். கறுப்பு உடையால்... முழுக்க மூடும் போது, உள்ளுக்கு வேர்க்காதா? tired.gifschwitzen1.gif

இஸ்லாம் மதத்தின் ஆரம்பகாலக் கொடி கருப்புநிறம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்!

இரண்டாவதாகக் கறுப்பு நிறம், அதன் மீது படும் எல்லா நிறங்களையும் உள்வாங்கி விடுவதால். உடையைத் தாண்டியும் பாயக்கொட்டிய கண்களின் ஆர்வத்தை, முளையிலேயே கிள்ளி விடுவதனால் அதை அணிகின்றார்கள்!

முஸ்லிம் பெண்ணின் ஹபாயா ஆடையில் கைவைத்த பொதுபலசேனா இளைஞர்கள்!

இதுவும் ஒரு மனிதாபிமான நடவடிக்கை என்று ஹக்கீமும் ஏனைய முஸ்லிம் அமைச்சர்களும் ஐ. நா. சென்று சொல்லலாம்!

  • தொடங்கியவர்

மதம் என்று தாங்களும்தான் மூடிக்கட்டிகொண்டு போகிறார்கள். அவர்கள் மஞ்சளில்; இவர்கள் கறுப்பில். அவர்கள் மொட்டை அடிக்கிறார்கள்; இவர்கள் வளர்க்கிறார்கள். அவர்கள் ஆண்கள்;  இவர்கள் பெண்கள். "மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின்." ஆனால் அது மட்டும் இருவருக்கும் முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு 4 அடி விழுந்து விட்டது.. அவர்களுக்கும் விழவில்லையோ என்று கேட்பது சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றுகின்றது. எங்களுடைய வலிகளை நாங்கள் ஆழமாக உணர்ந்து கொள்ளததால் தானோ, அவர்களுக்கு அப்படி நடக்கும்போது, இகழ்ந்து எழுதுகின்றோம்? நமக்கிடையே பல இடைவெளிகள் இருக்கின்றன. ஆனால் தமிழீழம் என்று அமைந்திருந்தால் அவர்களும் தமிழீழக் குடிமக்களாக இருப்பின், எம் முகத்தோடு அவர்களை வரவேற்பது?

பலர் சொல்லிக் கொள்கின்ற ஒரு விடயம். யாழ் முஸ்லீம்கள் வெளியேற்றம். உண்மையில் அது வருந்தத்தக்க விடயமாயினும், அன்றைய சூழலில் புலிகள் கொண்டிருந்த ஒரே ஒரு வழி அது மட்டுமே என்பது என் கருத்து. உடும்பன்மலை தொடக்கம், கிழக்கில் பல இடங்களில் அஸ்ரப்பின் சதியால், பல தமிழ்மக்கள் கொல்லப்பட்டடுக் கொண்டிருந்தநிலையில் கிழக்கு மாகாணம், கொந்தளித்துக் கொண்டிருந்தது.

அதே நேரத்தில் யாழ்ப்பாணத்தில் முக்கியமாகச் சாவகச்சேரிப் பள்ளிவாசல் ஒன்றில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதும், வடக்கிற்கு பல முஸ்லீம் இளைஞர்கள் பேருந்தில் வரமுனைந்ததும், ஒருவகையில் சிறிபான்மை இனங்களுக்கிடையே சிறிலங்கா அரசு இனப்பிரச்சனையைத் துாண்டுகின்றதோ, என்ற அச்சம் இயக்கத்திற்கு ஏற்பட்டிருக்கலாம். அதற்கு சிறிது காலத்துக்கு முன்னர் தான், உள்ளே வந்த இந்தியாவோடு எம்மை மோதவைத்து சிறிலங்கா அரசுபிரச்சனையை உருவாக்கியிருந்தது.

இதையெல்லாம் மீறி ஒரே ஒரு வழி, மக்களிடையே முஸ்லீம்களை வெளியேற்றி உள்வாங்குதல். இயக்கம் மக்களைப் பரிசோதிக்க முயலவில்லையா என்ற கேள்விக்கே அன்று இடமிருக்கவில்லை. அந்தநேரத்தில் இயக்கம் கொண்டிருந்த ஆளணிவளத்தில் அது நடத்தக்கூடிய சாத்தியமே இல்லை. இருந்தபோராளிகள் பலரும் களமுனையில் நின்றார்கள்.

உண்மையில் கிழக்கு மாகாணம் போல வடக்கிலும் படுகொலைகள் நடந்திருந்தால் அழிவுகள் இரண்டுமே சிறுபான்மை சமூகமே சந்தித்திருக்கும். ஆனால் அம் முஸ்லீம் மக்கள் திரும்பி வரவேண்டும் என்றே இயக்கம் விரும்பியிருந்தது. அதனால் அவர்களின் பொருளாதார வளங்களைப் புலிகள் பிணையாக வைத்தார்கள். அவர்கள் திரும்பி வரவேண்டும் என்பதற்காக, சிறியளவிலான பொருட்களே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் சொத்துக்கள் சில ஆண்டுகள் பேணப்பட்டன. ஆனால் வெளியேறிய முஸ்லீம்கள் வரவே இல்லை.

இந்த வலிகள் நமக்கிடையே இருக்கத் தான் போகின்றது. ஆனால் அதை அவர்களோ, நாங்களோ புரிந்து கொள்வது தான் நன்று. ஒரு காலத்தில் கிழக்கு மாகாண முஸ்லீம்களைத் தமிழர்களிடம் இருந்து பிரித்து தான் ஆட்சியைப் பெற தமிழர் படுகொலைகளுக்கு அஸ்ரப் துணை போனார். அதனால் ஏற்பட்ட பிளவுகள் முஸ்லீம்காங்கிரஸ் பதவிகளாக இன்று அனுபவிக்கின்றோர்கள். ஆனால் அந்தப் பிரிவினையை நாங்களும் ஊக்குவித்துக் கொண்டிருந்தால் என்ன நியாயம்?

Edited by தூயவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.