Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீரத்தின் விளைநிலம் – துரோகத்தின் நிகழ்விடம் – வஞ்சகத்தின் அமைவிடம் – ஆனந்தபுரம்!

Featured Replies


                    45360803_tigerlead3_ap-100x75.jpg               
 ஆனந்தபுரம் தமிழர்களால் மறக்கப்பட்ட களமாகிவிட்டது. 2009ம் ஆண்டு

இன்றைய நாள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் விலைமதிப்பற்ற தளபதிகளை
துரோகத்திற்கும் வஞ்சகத்திற்கும் பலிகொடுத்த தினம். ஆனந்தபுரத்தில்
நடந்தவைபற்றி பெரும்பாலானவர் அறிந்திருப்பது தலைவர் சுற்றிவளைக்கப்பட்டது.
தளபதிகள் வீரப்போர் புரிந்து தலைவரை காப்பாற்றியது. இறுதியில் தளபதிகள்
வீச்சாவடைந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தளபதி கேணல் பானு அண்ணா
காட்டிக்கொடுத்தார் என்ற வதந்தி பற்றித்தான்.


சிங்களப்படைகளுடன் உலகநாட்டு படைகளும் சேர்ந்து ஆக்கிரமிப்புப் போரை
முழுவீச்சில் முன்னெடுத்து வந்த காலகட்டத்தில் தலைவர் உள்ளிட்ட தளபதிகள்
ஆனந்தபுரத்தில் ஏன் நின்றார்கள் என்ற கேள்விக்கு விடைகாண்பதன் ஊடாக மேலும்
பல செய்திகளை இங்கு பகிர்ந்து கொள்ளவிரும்புகின்றோம்.


முள்ளிவாய்கால் முடிவல்ல அது ஒரு தொடக்கம் என்ற காசி ஆனந்தன் அய்யாவின்
வரிகளிற்கு உயிர்கொடுப்பது அங்கு நிகழ்ந்த மாபெரும் இழப்புகளாகும். அந்த
வரலாற்றுத் துயரம்தான் இன்று உலகம் தழுவியதாக தமிழீழ விடுதலைப் போரை
முன்னகர்த்திவருகின்றது.


ஆனால் அந்த மாபெரும் இனஅழிப்பு துயரம் முள்ளிவாய்காலில் அரங்கேற்றம்
செய்வதற்கான புறச்சூழலை நாம் வலிந்து ஏற்படுத்தவில்லை. அவ்வாறு குற்றம்
சாட்டுபவர்கள் இன்றும் நம்மிடையே இருப்பதால் அதனை கூறியே ஆகவேண்டும்.


முள்ளிவாய்க்கால் இன அழிப்பை சிங்களப் பேரினவாதப் படைகள்
அரங்கேற்றியிருந்தாலும் அதற்கான மூலகாரணம் ஆனந்தபுரத்தில் நிகழ்த்தப்பட்ட
பச்சைத்துரோகம்தான் காரணமாகும்.


2006ம் ஆண்டு மன்னார் களமுனையில் வடக்கின் வசந்தம் என்ற போர்வையில்
முன்னெடுக்கப்பட்டுவந்த போர் கிளிநொச்சி எல்லையில் புலிகளி;ன் பலமான
எதிர்த்தாக்குதலால் தடுமாறியது யாவரும் அறிந்ததே.


கிளிநொச்சியை கைவிட்டு செல்வது என தலைவர் எடுத்த முடிவின் பலனாகவே
முகமாலை முதற்கொண்டு கிளிநொச்சி வரையான அகண்ட களம் ஒருஇரவில் இராணுவத்தின்
வசமானது. இந்த நிலையில் தலைவர் ஆனந்தபுரத்தில் உள்ள தளத்திற்கு செல்வதென்று
முடிவெடுக்கின்றார்.


கடாபி அண்ணாவுடன் தலைவர் ஆனந்தபுரத்திற்கு சென்ற தகவல் உள்ளிருந்து
எதிரிப்படைக்கு வழங்கப்பட்டதன் எதிரொளியாக தலைவர் இருப்பிடத்தை
இலக்குவைத்து சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான குண்டுவீச்சு விமானங்கள்
சரமாரியாக தாக்குதல் தொடுத்தன.


விமானப்படை தாக்குதல் ஒருபக்கம் என்றால் ஆட்லறி மற்றும் பல்குழல்
பீரங்கித்தாக்குதல்களும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதயைடுத்து
தரைவழியாக முற்றுகை முயற்சி தீவிரப்படுத்தப்பட்டது.


சிங்களப்படைகளின் முற்றுகைக்குள் தலைவர் அகப்பட்ட தகவலறிந்து புலிகளின்
தளபதிகள் துரிதகதியில் தயாராகி சிங்களப்படைகளின் முற்றுகையை
உடைத்துக்கொண்டு ஆனந்தபுரத்திற்கு சென்றார்கள். வடபோர்முனை கட்டளைத் தளபதி
தீபன் அண்ணா பானு அண்ணா மணிவண்ணன் அண்ணா மகளீர் தளபதிகளான துர்க்கா அக்கா
விதுசா அக்கா உள்ளிட்டவர்கள் தலைவரிற்கு பாதுகாப்பரனாக வியூகம்
வகுத்துநின்றார்கள்.


ஆனந்தபுரத்தில் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் ஒன்றாக நிற்பதையறிந்து வசமாக
சிக்கிவிட்டார்கள் என சிங்களம் கொக்கரித்தது. இந்தியா உள்ளிட்ட துணைநின்ற
உலகநாடுகளிற்கு உடனடித்தகவலாக பரிமாறப்பட்டது.


ஆனந்தபுரம் களத்திற்கு எவ்வளவு அண்மையாக வரமுடியுமோ அவ்வளவு கிட்டவாக
வந்து இந்தியா உள்ளிட்ட பலநாட்டு இராணுவத்தளபதிகள் சிங்கள இராணுவத்
தளபதிகளுடன் இணைந்து களத்தை நேரடியாக வழிநடத்தினார்கள்.


48 மணிநேரம்… 24 மணிநேரம் என தலைவர் உள்ளிட்ட தளபதிகள் சரனடைவதற்கு
இவர்களால் நேரம் வரையறுக்கப்பட்டது. ஒலிபெருக்கிவைத்து ஒவ்வொரு தளபதியின்
பெயரையும் குறிப்பிட்டு நீங்கள் எல்லோரும் நிற்பது தெரியும் சண்டையிட்டு
வீணாக உயிரை இழக்காமல் விரும்பினால் சரனடையலாம் என கொக்கரித்து நின்றனர்.


உலக வல்லாதிக்க நாடுகளிற்கு பெரும் சவாலாக சுத்தவீரனாக உருவெடுத்த
பிரபாகரனையும் அவரது புலிப்படையையும் பொறிக்குள் சிக்வைத்துவிட்ட
மகிழ்சிசயில் பெரும் ஆரவாரத்துடன் நின்றது சிங்களமும் துணைநின்ற பன்னாட்டு
படைகளும்.


ஆனந்தபுரத்தில் அன்று நடந்த சண்டை உலக போர்கள வரலாற்றில் எங்கும்
நிகழ்ந்திராத வீரதீரச் சண்டையாக அமைந்துவிட்டது. அந்த சண்டைக்காட்சிகள்
ஒருநாள் வெளிவரும். அப்போது உலகம் தலைவணங்கும். நூற்றாண்டுகள் கடந்து
வரலாற்றில் இந்தச் சண்டை நினைவுகூறப்படும்.


பதினைந்தாயிரத்திற்கு மேற்பட்ட பன்நாட்டுப்படைகள் சுற்றிவழைத்து வியூகம்
அமைத்து ஐநூறு சதுர மீட்டர் பரப்பிற்குள் பெட்டிவடிவ
முற்றுகைக்குள்ளாக்கிச் சண்டையிட்ட போது எதிர்வியூகம் அமைத்து உக்கிரமான
சண்டையிட்டு “தேசத்தின் சொத்து” மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாக
முற்றுகைக்குள் இருந்து வெளியேற்றப்படுகின்றார்.


தலைவரை பாதுகாப்பாக வெளியேற்றியாகிவிட்டது முடிந்தவரை சண்டையிடுவது என
முடிவெடுத்து நேருக்கு நேர் நின்ற புலிப்படையை இந்தியாவின் நயவஞ்சக
ஆலோசனையின் பேரில் தடைசெய்யப்பட்ட இரசாயணக் குண்டுகளை வீசி கோழைத்தனமாக
கொன்று குவித்தது சிங்களப்படை.


முக்கிய தளபதிகள் பலரும் வீரச்சாவடைந்த நிலையில் கேணல் பானு அண்ணா
மட்டும் எதுவித காயங்களும் இல்லாது வந்துள்ளமை அவர்மீதான சந்தேகத்தை
வலுப்படுத்தியிருந்தது. இதன் விளைவாக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு
அம்மான் அவர்கள் பானு அண்ணாவை பதுங்கு குழிக்காவலில் வைத்தார்.


கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்துவிட்டு பானு அண்ணா பொட்டு அம்மானால்
மூன்று நாட்கள் பதுங்கு குழிக்காவலில் வைக்கப்பட்டது தலைவரிற்கு உடன்பாடாக
இருக்கவில்லை. அதுகுறித்து மூத்தவர் ஒருவரை பொட்டு அம்மானை பார்த்து
தெரிவிக்க அனுப்புகன்றார்.


பொட்டு அம்மான் அந்த மூத்தவரையும் அழைத்துக் கொண்டு தலைவர்
இருக்குமிடத்திற்கு சென்றுள்ளார். தளபதி பானு அண்ணாவை இன்னும்
விடுவிக்காதது குறித்து கண்டித்து உடனடியாக விடுவித்து அழைத்துவர
உத்தரவிடும்படி தலைவர் கூறியுள்ளார்.


உடனடியாக புலனாய்வுத்துறை துணைத்தளபதியான கபிலம்மானிற்கு பொட்டு அம்மான்
தகவல் சொல்லி பானு அண்ணாவை விடுவித்து அழைத்து வரப்பட்டார்.
புன்சிரிப்புடன் அங்கு வந்த பானு அண்ணாவிடம் மூத்தவர் என்ன நடந்தது என
கேட்டுள்ளார்.


அண்ணையை காட்டிக்கொடுப்பது என்றால் அந்த பதவிமீது எனக்கு ஆசையிருக்க
வேண்டும். அது எப்போதும் என்னிடம் இருந்ததில்லை. அதற்கு முதலில் தகுதி
வேண்டும். தலைவரிடம் இருக்கும் திறமைகளில் ஒரு பத்துவீதமென்டாலும் என்னட்டை
இருக்கா என்டு நீங்களே சொல்லுங்கள் என மூத்தவரிடம் வினவினார்.


தொடர்ந்து பதிலளித்த பானு அண்ணா பெடியளின்ரை கரைச்சல் எதுவும் இல்லாமல்
மூன்றுநாள் நிம்மதியாக இருந்தனான். மூன்று வேளை சாப்பாடு நேரத்திற்கு நேரம்
வந்துவிடும். பொட்டுவின் புன்னியத்தில நிறையப் புத்தகங்கள்
படித்துவிட்டேன் என சிரித்துக்கொண்டு பானு அண்ணா பதிலளித்துள்ளார்.


அப்போதுதான் ஆனந்தபுரத்தில் என்ன நடந்தது என்பதுபற்றி பானு அண்ணா
சொல்லியுள்ளார். பானு அண்ணாவையும் விதுசா அக்காவையும் தலைவருடன் நிழல்போல்
நின்று பாதுகாப்பை கவனிக்கும்படி கடாபி அண்ணாதான் கூறியுள்ளார்.


விதுசா அக்கா சிறிதுநேரம் நின்றுவிட்டு துர்க்கா அக்கா தனித்து
நிற்கிறார் அங்கு செல்வதாக கூறிச் சென்றுவிட பானு அண்ணா மட்டும் தலைவருடைய
உடலில் எதுவித காயங்களும் ஏற்பட்டுவிடாதவாறு கவசம்போல் காத்துநின்றுள்ளார்.


அப்படியே தலைவருடன் பானு அண்ணாவும் பாதுகாப்பாக வெளியேறிவந்துள்ளார்.
இதனை பானு அண்ணா சொல்ல மௌனமாக கேட்டுக்கொண்டிருந்த தலைவர் அதனை
உறுதிப்படுத்தினார்.


ஆனந்தபுரம் சமரில் மூத்த தளபதிகள் களமுனைத் தளபதிகள் போராளிகள் என
அத்தனை பெரிய இழப்பை சந்தித்த போதும் போராளிகளதும் மக்களதும் வாய்கள் அங்கு
நிகழ்த்தப்பட்ட துரோகத்தை குறித்தே குறிப்பாக பானுஅண்ணாவை அந்த
துரோகத்துடன் சம்பந்தப்படுத்தி பேசிவந்தன. ஏன் இன்றுவரையும் அது தொடரத்தானே
செய்கின்றது.


இதனை அறிந்த தலைவர் வீணான குழப்பங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக அந்த
முயற்சியை எடுத்தார். புலனாய்வுத் துறைப்பொறுப்பாளர் பொட்டு அம்மான்
கடல்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அண்ணா உள்ளிட்ட முக்கிய தளபதிகளையும்
மூத்த உறுப்பினர்களையும் சந்திப்பிற்கு வருமாறு தலைவர் பணிக்கின்றார்.


தலைவரது கட்டளையை ஏற்று அத்தனை பேரும் தலைவர் குறிப்பிட்ட இடத்திற்கு
சென்று திரும்புகின்றார்கள். அப்போது தலைவரது அருகில் அமர்ந்து இருந்தவர்
தளபதி கேணல் பானு அண்ணா. இதன் மூலம் கேணல் பானு அண்ணா மீதான வதந்திகளிற்கு
முடிவுகட்ட நினைத்தார் தலைவர்.


பானு அண்ணாவின் பதுங்குகுழி காவலில் இருந்து விடுவிப்பதற்கு பொட்டு
அம்மானை சந்தித்தவரும் இந்த சந்திப்புக்கு சென்றவரும் இன்றுவரை உயிரோடு
இருப்பவருமான மூத்த பிரமுகர் இதுதொடர்பாக தெரிவித்தபோது… நாங்கள் அங்கு
போனபோது தம்பிக்கு பக்கத்தில் பானுவும் இருந்தான். என்ன தம்பி பானுதான்
காட்டிக்கொடுத்தது என்று கதைக்கிறாங்கள் என்னடா என்றால் இங்க பக்கத்தில
இருத்திவைச்சிருக்கிறியள் என்று கேட்டதற்கு சிரித்துவிட்டு
காட்டிக்கொடுக்கவில்லை பானுதான் என்னை காப்பாற்றினது என தம்பி(தலைவர்)
பதிலளித்துள்ளார்.


அடுத்ததாக அந்த களத்தைவிட்டு போகமாட்டேன் என தலைவர் அடம்பிடித்தவர்
என்றும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மறுத்த தலைவரை வலுகட்டாயமாக வெளியேற்ற
வேண்டி வந்ததாகவும் சிலர் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் எழுதியும்
கூறியும் வருகின்றவர்கள் குpறத்து பார்க்க வேண்டியது அவசியமாகும்.


தமிழ் சினீமா காதாநாயகன் அளவிற்கு தலைவரை சிறுமைப்படுத்துபவர்களால்
மட்டும்தான் இப்படி சிந்திக்க முடியும். தமிழர்களை கொன்று குவிக்கும்
சிங்களவர்களிற்கு பதிலடிகொடுக்க வேண்டும் என்ற உந்துதலில் போராட்டக்களம்
புகுந்த தலைவர் பின்னாலில் தனது காலத்தில் தமிழினத்திற்கு விடுதலையை
பெற்றுக்கொடுக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டிற்கு வந்துவிட்டார்.


நாற்பது வருடங்களாக விடுதலைப் போராட்டத்தை முன்நின்று வழிநடத்திவரும்
தலைவரை சிறுபிள்ளையைப் போல் ஆனந்தபுரத்திலும் முள்ளிவாய்காலிலும்
அடம்பிடித்தார் எனச் சொல்வதனூடாக அவர் உயிரோடு இருக்க வய்ப்பில்லை என்ற
பொய் வாதத்தை உண்மையாக்க இவர்களும் இவர்களின் பின்னால் உள்ளவர்களும்
முயற்சிக்கின்றார்கள்.


வன்னிப்போரின் நேரடிச்சாட்சி… இறுதிவரை தலைவருடன் நின்றவரின்
வாக்குமூலம்… என்று அடையாளப்படுத்தப்படும் இந்த நபர்கள் கூறியதாக
தமிழகத்தில் வெளிவரும் விகடன் குழும வார இதழ்கள் நக்கீரன் இதழ்கள் பரபரப்பு
செய்திகளை வெளியிடுவதும் அவைசார்ந்த வெளியீட்டகம் சார்பாக புத்தகங்களை
வெளியிடுவதும் வழக்கமாகிவிட்டது.


தலைவர் எந்தக்காலத்திலும் மான அவமானங்களிற்கு பயந்தோ தனிப்பட்ட விருப்பு
வெறுப்புகளின் அடிப்படையிலோ எந்த முடிவுகளையும் எடுத்ததில்லை என்பதும்
முற்றுமுழுதாக இனத்தின் விடுதலையை முன்நிறுத்தியே எந்த முடிவாக இருந்தாலும்
எடுத்துள்ளார் என்பதும் வரலாறு கூறிநிற்கும் உண்மையாகும்.


ஆனந்தபுரம் சண்டைக்களமானது வீரத்தின் விளைநிலமாகவும் துரோகத்தின் நிகழ்விடமாகவும் வஞ்சகத்தின் அமைவிடமாகவும் நிலைபெற்றுவிட்டது.


தமிழீழ விடுதலைப் போராட்டம் கண்ட வீரத்தளபதிகளதும் களமுனைத்
தளபதிகளினதும் நூற்றுக்கணக்கிலான போராளிகளினதும் இரத்தம் சிந்திய மண்
என்பதோடு மட்டுமல்லாது அந்த மாவீரர்கள் முத்தமிட்ட மண் இந்த ஆனந்தபுரம்
மண். வீரத்தின் விளைநிலமான ஆனந்தபுரம் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில்
நிலைபெற்றுவிட்போதும் துரோகத்தின் நிகழ்விடமாகவும் அமைந்துவிட்டது
துர்ப்பாக்கியமாகும்.


ஆனந்தபுரத்திற்கு தலைவர் சென்றதகவல் உள்ளிருந்து எதிரிகளிற்கு
வழங்கப்பட்டதால் ஏற்பட்ட நெருக்கடிநிலையை அடுத்து தலைவரை பாதுகாப்பாக
வெளியேற்றும் சண்டையில் விடுதலைப் புலிகளின் பெரும் படைபலம்
அழிவைச்சந்தித்தது.


அதனால்தான் சொல்லுகின்றோம் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் விதை
ஆனந்தபுரம் களத்தில் நிகழ்த்தப்பட்ட துரோகத்தின் போது
விதைக்கப்பட்டுவிட்டது. வீரம் துரோகம் என்பதோடு வஞ்சகமும் ஒருங்கே
ஆனந்தபுரத்தின் வரலாற்றோடு ஒன்றித்துவிட்டது.


இராசீவ் காந்தி என்ற ஒற்றை உயிருக்காக தமிழினத்தை வேரறுக்க நினைத்த
இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் சோனியா தலைமையிலான காங்கிரசு அரசின்
பழிவாங்கும் எண்ணமும் தெற்காசியப் பிராந்தியத்தில் சுயம்புவாக ஒரு
வலிமைகொண்ட தலைமை உருவகுவதில் உடன்பாடு இல்லாத அமெரிக்கா தலைமையிலான
மேற்கத்தைய நாடுகளின் பிராந்திய மேலாண்மை போக்கும் சிங்களத்தின் பின்
நின்று வஞ்சகம் செய்தமைக்கான சாட்சியாகவும் ஆனந்தபுரம் விளங்குகின்றது.


பெட்டிவடிவ முற்றுகைக்குள் அகப்பட்டுக்கொண்ட தளபதிகள் அடங்கிய புலிகள்
படையை பொசுக்கித்தள்ளுமாறு ஆலோசனை கொடுத்து சிங்களத்தை வழிநடத்தியவர்கள்
இவர்கள்தானே.


“தேசத்தின் சொத்து” மேதகு வே.பிரபாகரன் அவர்களை பாதுகாத்து
தமிழினத்திற்கு தந்துவிட்டு ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட எதிரிப்படைகளை
கொன்றும் அதேயளவு படைகளை படுகாயப்படுத்தியும் எதிரிப்படைகளிற்கு பேரிழப்பை
கொடுத்து தாய்மண்ணை முத்தமிட்ட வீரத்தளபதிகளான வடபோர்முனை கட்டளைத் தளபதி
பிரிகேடியர் தீபன் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர்
மணிவண்ணன் மாலதி படையணியின் சிறப்புத் தளபதி பிரிகேடியர் விதுசா சோதியா
படையணியின் சிறப்புத் தளபதி துர்க்கா ஆகியேரிற்கும் களமுனைத்
தளபதிகளிற்கும் நானூறிற்கு மேற்பட்ட மாவீரர்களிற்கும் எமது சிரம்தாழ்ந்த
வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.


ஆனந்தபுரத்தில் இருந்து புலிப்படையால் காப்பாற்றப்பட்ட எம் தலைவர்
முள்ளிவாய்காலிலும் புலிப்படையால் காப்பாற்றப்பட்டுள்ளார். ஆனந்தபுரத்தில்
தலைவரது நிழலாக நின்ற தளபதி கேணல் பானு அண்ணா முள்ளிவாய்க்கால் களத்தில்
இருந்து தலைவருடனே வெளியேறியதாகவும் உறுதியான தகவல் உண்டு. தமிழீழ
விடுதலைக்கான போரை நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது
ஆசீர்வாதத்துடனும் ஆத்ம பலத்துடனும் தலைவர் பிரபாகரன் அவர்கள் முன்னெடுத்து
வருகின்றார்.


ஐந்தாம் கட்ட ஈழப்போர் அல்ல தமிழீழத்திற்கான இறுதிக்கட்டப் போர்
வெடிக்கும். விரைவில் அது நடக்கும். களத்தை உருவாக்க வேண்டியது உலகத்
தமிழர்களது கையில்தான் உள்ளது. களத்தை நாம் தயார்செய்யும்போது தலைமையேற்று
வழிநடத்த தலைவர் வெளிப்படுவார். நம்புங்கள் தமிழீழம் நாங்கள் அமைப்போம்.


“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

http://www.eelamboys.net/archives/29383

  • கருத்துக்கள உறவுகள்

பதில் சொல்லச் சாட்சிகள் இல்லையென்பதால் காணததையெல்லாம் கண்டமாதிரி ஒரு அநாமேதயக் கட்டுரை வந்துள்ளது.

ஐந்தாம் கட்ட ஈழப்போர் அல்ல தமிழீழத்திற்கான இறுதிக்கட்டப் போர்

வெடிக்கும். விரைவில் அது நடக்கும். களத்தை உருவாக்க வேண்டியது உலகத்

தமிழர்களது கையில்தான் உள்ளது. களத்தை நாம் தயார்செய்யும்போது தலைமையேற்று

வழிநடத்த தலைவர் வெளிப்படுவார்.

ஆய்வாளர் இன்னும் அதிகம் முயற்சிக்கவேண்டும்.

banu_body.jpg windows 7 screen shot

தலைவருக்கு ஒரு பொம்மையை செய்தது போன்று பானுவுக்கும் ஒரு பொம்மையை சிறிலங்கா அரசு செய்து வைத்திருந்தது இந்தக் கட்டுரையை படிக்கின்ற போது புலனாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தமிழீழன்..! ஒப்பற்ற தளபதிகளின் தியாக வரலாறு என்றுமே மனக்கண்முன் நிற்கும்..!! தமிழராய்ப் பிறந்ததில் பெருமை கொள்ளும் கணங்கள் இவை..!! ஆனால் இந்தத் தியாகங்கள் வீண்போய்விடக்கூடாது என்பதில் நாம் எல்லோரும் அக்கறையுள்ளவர்களாகவும், பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ளவேண்டும்..!!

  • கருத்துக்கள உறவுகள்

செய்திகள் பலரிடமிருந்து வெளிவரல் வேண்டும். அறிந்த உண்மைகளைத் தயக்கமின்றி வெளியிடுங்கள், அப்போதுதான் ஒரு செய்தியோடு பல்வேறு வழிகளில் வந்தடையும் செய்திகளையும் ஒப்பீடுசெய்து உண்மைகளை மற்றவர்கள் சந்தேகமின்றி அறிந்துகொள்ள வழியேற்படும். ஒவ்வொருவரும் தங்களால் செய்யமுடிந்ததைச் செய்வதற்கு நம்பிக்கையைக் கொடுத்துதவும். பதிவிற்கு நன்றி தமிழீழன், மேலும் அறிந்தவற்றை வெளியிடுங்கள்.

  • தொடங்கியவர்

banu_body.jpgwindows 7 screen shot

தலைவருக்கு ஒரு பொம்மையை செய்தது போன்று பானுவுக்கும் ஒரு பொம்மையை சிறிலங்கா அரசு செய்து வைத்திருந்தது இந்தக் கட்டுரையை படிக்கின்ற போது புலனாகின்றது.

 

229290_205339482831651_7576417_n.jpg

 

தளபதி பானு அண்ணன் அவர்கள் எங்கே வீரசசாவடைந்தார் தண்ணீரிலா? தரையிலா?

அட! இரண்டு பொம்மைகள். சிங்களவனும் சும்மா இல்லை.

(நான் இணைத்த படத்தில் உள்ள உடலில் சேறு இருப்பதில் இருந்து அந்த உடல் ஒரு தண்ணீரில் இருந்து தரைக்கு இழுத்து வரப்பட்டிருக்கும் என்று விளங்கிக் கொள்ள முடியாமல் இருப்பது ஆச்சரியம்தான்)

  • கருத்துக்கள உறவுகள்
சபேசன் ஒரு  பேச்சுக்கு உங்கள் அவதாரில் உள்ள படத்தை வைத்தே நீங்கள் யாரோவால் சுட்டுக்கொல்லப்பட்டீர்கள் என்பதை நிறுவ முடியும்.ஆகவே நீங்கள் இறந்தவர் என ஆகி விடுமா??
 
நான் சொல்வது ஒரு படத்தை வைத்து முடிவுக்கு வரக்கூடிய காலம் இதுவல்ல.

நுணாவிலான்! நீங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அப்படி செய்தாலும், அதே தொழில்நுட்பம் படம் பொய்யானது என்பதைக் காட்டிக் கொடுத்து விடும்.

அதை விட முக்கியமானது நான் உயிரோடு நடமாடுகின்ற படமும் வெளியாகி விடும்.

இந்த இரண்டுமே எமது தலைவர்களின் படங்களில் நடக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
களத்தை உருவாக்க வேண்டியது உலகத் தமிழர்களது கையில்தான் உள்ளது. களத்தை நாம் தயார்செய்யும்போது தலைமையேற்று வழிநடத்த தலைவர் வெளிப்படுவார்.
நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு....புலத்தில அப்படி ஒரு நிலமை வந்தால் நான் சுழிச்சு போட்டு தாயகத்துக்கு போய் கிறிகட் விளையாடுவேன்....
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்! நீங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அப்படி செய்தாலும், அதே தொழில்நுட்பம் படம் பொய்யானது என்பதைக் காட்டிக் கொடுத்து விடும்.

அதை விட முக்கியமானது நான் உயிரோடு நடமாடுகின்ற படமும் வெளியாகி விடும்.

இந்த இரண்டுமே எமது தலைவர்களின் படங்களில் நடக்கவில்லை.

 

பானுவைப் பற்றி விடுவம்..

 

நீங்கள் இந்தப் படங்கள் உண்மையானவை தான் என்று அடிச்சுச் சொல்ல என்னென்ன தொழில்நுட்பங்களைப் பாவித்தீர்கள். அவற்றின் பெறுபேறுகள் என்ன.. அதில் இருந்து எவ்வாறு உங்களின் முடிவுக்கு வந்தீர்கள். இப்படியான விபரங்களை வெளியிட முடியுமா..???!

 

இதனை பொய் என்று தர்க்க ரீதியாகச் சொல்வதைப் போலவே நீங்களும் எந்த ஒரு அடிப்படையும் இன்றி உண்மை என்கிறீர்கள்..!

 

ஆனால்.. ஏதோ வித்தியாசமா எழுதிறதா மனசுக்க நினைச்சுக் கொள்கிறீர்கள்..?! :lol::)

நெடுக்காலபோவான்! நான் வித்தியாசமாக சிந்தித்து கேட்கிறேனோ இல்லையோ, நீங்கள் வித்தியாசமாகக் கேட்கவில்லை. வழமை போன்று உங்களின் கேள்வி அமைந்திருக்கிறது.

புகைப்படத்தை வெளியிடுகின்ற யாரும் அதை உண்மை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் புகைப்படத்தை மறுப்பவர்தான் அதை பொய் என்று நிரூபிக்க வேண்டும். உங்களின் வாதம் சரி என்று பார்த்தால், அனைவருமே படங்களை வெளியிடுவதற்கு முன்பு, அது உண்மை என்று நிரூபிக்க வேண்டிய நிலை உருவாகி விடும்.

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலான்! நீங்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அப்படி செய்தாலும், அதே தொழில்நுட்பம் படம் பொய்யானது என்பதைக் காட்டிக் கொடுத்து விடும்.

அதை விட முக்கியமானது நான் உயிரோடு நடமாடுகின்ற படமும் வெளியாகி விடும்.

இந்த இரண்டுமே எமது தலைவர்களின் படங்களில் நடக்கவில்லை.

 

சபேசன் நீங்களும் தலைவரும் ஒன்றா ?  :D
தலைவர் அப்படி நடமாடிய படங்கள் இருந்தாலும் அதை இப்போதைக்கு வெளி விடுவது சரியான சந்தர்ப்பமா ?  :rolleyes:

தமிழரசு! நானும் தலைவரும் ஒன்று அல்ல. ஆனால் அது இங்கே பிரச்சனை இல்லை. ஒரு மனிதர் இறந்து விட்டார் என்று புகைப்படம் மற்றும் விடியோவோடு அறிவிக்கின்ற பொழுது, அதற்கான மறுப்பு என்பது அவர் உயிரோடு இருக்கின்ற புகைப்படம், வீடியோக்களே ஆகும்.

நீங்கள் சொல்வது போன்று அதற்கான காலம் இதுவல்ல என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டால், என்ன ...க்கு இப்படியான கட்டுரைகள் வெளிவருகின்றன?

அவர் தன்னை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றால், தான் இறந்து விட்டதாக எதிரிகள் கருது வேண்டும் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தால், அவருடைய இருப்பை வலியுறுத்துபவர்கள், அவருக்கு ஆதரவானவர்களா? எதிரிகளா?

இப்ப பானு நல்லவரா? கெட்டவரா?



காசி ஆனந்தன் அய்யாவின்..

காசி ஜயா தமிழ்நாட்டில் அவர் பிள்ளைகள் வெளிநாட்டில் யுத்தமோ ஈழ நாட்டில் வெடிக்குமாம் மார்கழி மாதத்தில் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகளின் தியாகத்தை மனதில் நிறுத்தவேண்டிய தருணத்தில் சபேசன் ஒட்டுமொத்த கவனத்தையும் புகைப்படத்தில் நிறுத்திவிட்டார்..! வழக்கமாக ஒரு சிங்களவன் செய்யும் வேலை. அதை சபேசன் செய்கிறார். வாழ்க.

  • கருத்துக்கள உறவுகள்
எத்தனை பேர் இப்படி புதுப்,புது பெயரில கிளம்பியிருக்கிறீங்கள் பிலிம் காட்ட?...வெக்கமாய் இல்லையா இப்பவும் இப்படி ஒரு கட்டுரையை எழுத?

போராளிகளின் தியாகத்தை மனதில் நிறுத்தவேண்டிய தருணத்தில் சபேசன் ஒட்டுமொத்த கவனத்தையும் புகைப்படத்தில் நிறுத்திவிட்டார்..! வழக்கமாக ஒரு சிங்களவன் செய்யும் வேலை. அதை சபேசன் செய்கிறார். வாழ்க.

 

இந்த கட்டுரையே தேவைல்லாத ஒன்று  அதை கண்டிக்க காணோம் ஆனால்  நுங்கு குடிச்சவன் போக அதை நோண்டின் சாப்பிடவனை பிடிப்பது போல் உங்கள் கருத்து.

கடசி யுத்தத்தின் போது பல வதந்திகள் வந்தன ஆனால் எதையும் நம்ப முடியவில்லை, பானு , இளைந்திரையன் என பலபெயர்கள் அடிப்பட்டது ஆனால் இந்த கட்டுரையின் பின் பனுக்கு அவபெயரை கட்டுரையாளர் ஏற்படுத்தியுள்ளார்...

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவான்! நான் வித்தியாசமாக சிந்தித்து கேட்கிறேனோ இல்லையோ, நீங்கள் வித்தியாசமாகக் கேட்கவில்லை. வழமை போன்று உங்களின் கேள்வி அமைந்திருக்கிறது.

புகைப்படத்தை வெளியிடுகின்ற யாரும் அதை உண்மை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்தப் புகைப்படத்தை மறுப்பவர்தான் அதை பொய் என்று நிரூபிக்க வேண்டும். உங்களின் வாதம் சரி என்று பார்த்தால், அனைவருமே படங்களை வெளியிடுவதற்கு முன்பு, அது உண்மை என்று நிரூபிக்க வேண்டிய நிலை உருவாகி விடும்.

 

அப்ப மேலே உள்ள படங்களை நீங்கள் தான் எடுத்து வெளியிட்டனீங்க போல. ஏன்னா மூலமாக படத்தை வெளியிடுபவருக்குத்தான் தெரியும் அது உண்மையா பொய்யா என்று.

 

மக்களைப் பொறுத்தவரை.. ஊடகங்களைப் பொறுத்தவரை உண்மை பொய் ஆராய்வது இயல்பு. சனல் 4.. ஐநா கூட படங்களுக்கான காணொளிகளுக்கான உண்மைத் தன்மைகளை துறைசார் நிபுணர்களை வைத்து ஆராய்ந்து அவர்களின் நேரடி வாக்குமூலங்களையும் பதிவுசெய்தே வெளியிட்டிருந்தன.

 

நீங்க என்னடான்னா.. பொம்மை.. கிம்மை என்று எல்லாம் நக்கல் அடிக்கிற படியால்.. துரோகி.. கருணாவுக்கு பக்கத்தில் நின்று.. அடையாளமும் காட்டி..(அதாவது செத்த பிணங்களையும் காட்டிக்கொடுத்து.. உலகில் செத்த பிணங்களைக் காட்டி கொடுத்த ஒரு கொடூரன் என்றால் அது கருணா.. மற்றும் நம்ம துரோகிகளாகத் தான் இருக்கும்) காட்டிக்கொடுத்து.. படமும் எடுத்து இவற்றை நீங்கள் தான் பிரசுரித்த கனக்கா எல்லா கதை அளக்கிறீர்கள். அதுதான் சந்தேகமா இருந்திச்சு.. கேள்வி கேட்டு உறுதிப்படுத்த முயல்கிறம்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையே தேவைல்லாத ஒன்று  அதை கண்டிக்க காணோம் ஆனால்  நுங்கு குடிச்சவன் போக அதை நோண்டின் சாப்பிடவனை பிடிப்பது போல் உங்கள் கருத்து.

கடசி யுத்தத்தின் போது பல வதந்திகள் வந்தன ஆனால் எதையும் நம்ப முடியவில்லை, பானு , இளைந்திரையன் என பலபெயர்கள் அடிப்பட்டது ஆனால் இந்த கட்டுரையின் பின் பனுக்கு அவபெயரை கட்டுரையாளர் ஏற்படுத்தியுள்ளார்...

 

எனக்கு அந்தக் கட்டுரையில் என்ன தெரிந்தது என்பதை நான் எழுதினேன்.. எங்கே துரோகச் செய்திகள் வரும் என நீங்கள் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறீர்கள்.. ஞான் என் செய்யும்? :D

ஆனந்தபுரம் சமர், குடாரப்பு சமர் போன்றன தமிழர்கள் வரலாற்றில் பதிந்து வைக்கப்பட வேண்டியவைகள். சில, பல ஆண்டுகள் கழித்து இந்தச் சண்டைகள் பற்றி திரைப்படங்கள் கூட வரக்கூடும். குடாரப்பு தரையிறக்கம் பற்றி தமிழர் தரப்பு பதிவுகள் உண்டு.

ஆனால் ஆனந்தபுரம் பற்றி விதம் விதமான கதைகள் வந்து விட்டன. இதற்கு முன்பு வந்த ஒரு கட்டுரை ஆனந்தபுரம் சண்டையை விடுதலைப் புலிகளால் திட்டமிடப்பட்ட ஒன்றாக வர்ணித்தது. ஒரு பலமான பெட்டி அடித்து அதை நோக்கி படையினரை குவியச் செய்து, சண்டைகளை மாதக் கணக்கில் இழுத்து, படையினருக்கு கடும் இழப்பை ஏற்படுத்துவதற்காக ஆனந்தபுரம் தயார்படுத்தப்பட்டதாக அந்தக் கட்டுரை சொல்லியது.

ஆனால் இந்தக் கட்டுரை முற்றிலும் வேறாக ஒரு கோணத்தில் கதையை சொல்கிறது. அது கூடப் பரவாயில்லை. தியாகிகளின் கதையை பேசுவதை விடுத்து, பானு துரோகியா இல்லையா, தலைவர் உண்டா இல்லையா என்று போகிறது. எங்கள் கருத்துக்களும் கட்டுரைக்கு ஏற்றபடி வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த வரலாற்றை நீங்களோ.. நாங்களோ.. இல்ல புலம்பெயர் புண்ணாக்கு ஊடகங்களோ.. துரோகிகளோ.. எதிரிகளோ பதிவு செய்யக் கூடாது. அந்தச் சமரில் இருந்து மீண்ட போராளிகளுக்குத் தான் அதன் தார்மீக உண்மை தெரியும். நோக்கம் புரியும். அவர்கள் தான் அதனைப் பதிவு செய்ய வேண்டும். அதை அவர்கள் செய்யும் வரையாவது நீங்க மெளனமாக இருந்தாலே போதும். குட்டையைக் குழப்பாம..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கட்டுரை ஆனந்தபுரம் சமரைத் திரித்து வரலாற்றைக் குழப்பியுள்ளது என்பது நிச்சயம். ஆய்வாளர் ஈழதேசம் செந்தமிழ் போராட்டத்தைப் பற்றி கற்பனைக் கதைகளை எழுதுவதை நிற்பாட்டினால் உள்ள வரலாறாவது உருப்படியாக இருக்கும்.

Edited by கிருபன்

ஒரு சண்டையை களத்தில் அந்தக் களத்தில் நின்றவனால்தான் சிறப்பாக பதிவு செய்ய முடியும். அல்லது வேறு யாராவது களத்தில் நின்ற போராளிகளை, இராணுவத்தினரை நேர்காணல் செய்து, கள ஆய்வுகளை மேற்கொண்டும் எழுதலாம்.

இதுவரை ஆனந்தபுரம் பற்றி வந்த குழப்பகரமான கட்டுரைகள் அனைத்துமே களத்தில் நின்ற போராளி ஒருவர் எழுதுகின்ற தோற்றப்பாடோடுதான் வந்தன. இந்தக் கட்டுரையும் அப்படியான ஒரு தோற்றத்தையே கொடுக்கிறது. உண்மைகள் என்றைக்காவது ஒருநாள் வெளிவரும் என்று நம்புவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

banu_body.jpgwindows 7 screen shot

தலைவருக்கு ஒரு பொம்மையை செய்தது போன்று பானுவுக்கும் ஒரு பொம்மையை சிறிலங்கா அரசு செய்து வைத்திருந்தது இந்தக் கட்டுரையை படிக்கின்ற போது புலனாகின்றது.

 

இந்த படத்தைப்பார்த்த பானு அண்ணையின் தாய் சொன்னது

என்ர பிள்ளையை  எனக்கு தெரியாதா?????????????ஈ என்று.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.