Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் குத்தி முறிவு..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பள்ளிக்கூடத்தில் குத்தி முறிவு..

நேற்று ஒரு சுவாரசியமான அனுபவம். பகிர்ந்துகொள்ளலாம் என இதை எழுதுகிறேன்.. rolleye0014.gif

இரண்டு நாட்களுக்கு முன்பு இங்கே ஒரு நண்பரின் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. நண்பிதான் பேசினார்.

கோரிக்கை: இங்கே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் சனிக்கிழமை தமிழ் வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். அதை வார நாட்களில் மாலை நேரத்திற்கு மாற்ற முயற்சிக்கிறார்களாம் பள்ளி நிர்வாகத்தினர். அதை தடுத்து நிறுத்த பெற்றோர் - தலைமை ஆசிரியர் கூட்டத்தில் நான் பங்கு கொள்ள வேண்டும்.

அவர்கள் மாற்ற நினைத்தது வளர்ந்த பிள்ளைகளுக்கான வகுப்புகளை மாத்திரமே.. ஆகவே எனக்கு இதில் எந்தப் பிரச்சினையும் இப்போதைக்கு இல்லை.. ஆனால் நண்பிக்கும் அந்தப் பிரச்சினை இல்லையே.. அடடா.. இதில என்ன உள்குத்து என்று கொஞ்சம் விவரங்களைக் கேட்டேன்.. confused0006.gif

தமிழ் வகுப்புக்களில் ஒரு ஆசிரியை ஆங்கிலத்திலும் விளங்கப்படுத்தி படிப்பிப்பதாகவும், அவரது அந்த அணுகுமுறைக்கு சாதகமான மதிப்பீடுகள் நிர்வாகத்தால் வழங்கப்பட்டிருப்பதாகவும், அது தமிழ் படிக்கும் குழந்தைகளுக்கு நல்லதல்ல என்றும் சொன்னார்..

எனக்கு அது விளங்கவில்லை. கனடாவில் பல சிறு குழந்தைகளுக்கு தமிழ் எல்லாம் நடுத்தரத்திற்க்குக் கொஞ்சம் கீழேதான். அவர்களுக்கு ஆங்கிலத்திலும் விளங்கப்படுத்துவதுதானே சரியாக இருக்கும் என்றேன்.

"எதுக்கும் நீங்களும் வாறியளே.. அண்ணா.." indifferent0002.gif

"சரி.. வந்தோம்.. " இது நான். :D

நேற்றுக்காலையில் கூட்டம். அனைத்துலக மொழிகளுக்கான உப தலைமை ஆசிரியை (ஒரு வெள்ளையர்) வந்திருந்தார்.. தமிழ்க்குழந்தைகளின் பெற்றோர் குறை கேட்பது நோக்கம். ஏறக்குறைய முப்பது பெற்றோர் வந்திருந்தார்கள்.

கூட்டம் ஆரம்பமானது. எனக்கென்றால் இதில் பெரும் விளக்கமெல்லாம் ஒன்றும் இல்லை. சும்மா கேட்டு வைப்போம். பிற்காலத்துக்கு உதவும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

உப தலைமை ஆசிரியை எல்லோரையும் பண்புடன் வரவேற்று அவரவர் குறைகளைக் கூறுமாறு கேட்டார். முதலில் ஒருவர் தொடங்கினார்.. rolleye0014.gif

"நீங்கள் சனிக்கிழமை வகுப்புக்களை வாரநாட்களில் மாலை நேரத்திற்கு மாற்றுவது எங்களுக்கு கரிசனையாக உள்ளது. எங்கள் குழந்தைகள் வேறு சிறப்பு வகுப்புகளுக்கும் போகிறார்கள். அதனால் களைப்படைந்து விடுவார்கள். அதனால் வகுப்பு நேரங்களை நீங்கள் மாற்றக்கூடாது என எதிர்பார்க்கிறோம்."

இப்படி ஆரம்பித்தவர் அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.. :huh: அதைத் தொடர்ந்து ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

"உங்களுக்கு ஏற்கனவே தெரியும். இங்கே நல்ல தமிழ் அறிவுள்ள ஆசிரியர்களுக்குப் பற்றாக்குறை. எனது மனைவியும் அவ்வாறான ஒரு ஆசிரியைதான். :wub: பல ஆசிரியைகள் வாரநாட்களில் வேறு வேலைக்குப் போகிறவர்கள். நீங்கள் மாலை நேரத்திற்கு வகுப்புகளை மாற்றினால் தகைமையுள்ள ஆசிரியைகள் தமிழ் படிப்பிக்க முடியாமல் போய்விடும்." என்றார்.

எனக்கோ தூக்கி வாரிப் போட்டது.. பிள்ளைகளுக்கு படிப்புச்சுமை அதிகரிக்கும் என்கிறாரா.. அல்லது தனது மனைவிக்கு வேலை போய்விடும் என்கிறாரா என்று விளங்கவில்லை.. :D

பரவாயில்லை வெள்ளைக்காரி.. புலம்பெயர்வாசிகளிடம் நல்ல அனுபவம் இருக்கும்போல.. love0034.gif பொறுமையாகப் பதில் தந்தார். வேறு பல தரமான ஆசிரியர்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சொல்லி வைத்தார். இவருக்கு சப்பென்று போயிருக்கும் என நினைக்கிறேன். scared0005.gif

அடுத்து இன்னொருவர் ஆரம்பித்தார். தான் பெற்றோர்களின் பிரதிநிதி என்கிற தகவலுடன் ஆரம்பித்தார். எந்த தேர்தலில் வென்று பிரதிநிதி ஆனார் என்று தெரியவில்லை.. indifferent0012.gif

"நீங்கள் ஒன்ராரியோ மாநில ஆசிரியர் தேர்வில் சித்தியடைந்த ஆசிரியர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறீர்கள். ஆனால் அங்கே தேர்வு செய்பவர்களுக்கு என்ன தமிழறிவு இருக்க முடியும்? ஆகவே, அந்தச் சான்றிதழையெல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. தமிழ் சமூகத்தில் "நல்ல படித்தவர்கள்" உள்ளார்கள். அவர்களைக்கொண்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.." என்றார்.  :huh:  என்ன.. இவரின் மச்சாளுக்கு இவர் வேலை தேடுகிறாரோ என்று எனக்கு சந்தேகம் வந்துவிட்டது.. :D

பொறுமையின் சிகரமாக இருந்த உப-தலைமை ஆசிரியைக்கு சிறிது கோபம் வந்துவிட்டது.

"நீங்கள் நடைமுறையில் இருக்கும் நடத்தை முறைகளில் நம்பிக்கை வைக்க வேண்டும். மாநில சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டியது ஆசிரியராக வரவிரும்பும் அனைவருக்குமே உள்ள ஒரு கடப்பாடு. அதை மீறக்கூடாது.. ஆனாலும், தமிழில் போதுமான சான்றிதழ் பெற்ற ஆசிரியர்கள் இல்லாமையால் ஒரு இடைக்கால தீர்வாக சான்றிதழ் பெறாத தகுதியான ஆசிரியைகளையும் நேர்முகத்தேர்வின்மூலம் தேர்வு செய்கிறோம். இது வேற்றுமொழி பேசும் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்களாலான ஒரு நடவடிக்கை. இல்லாவிட்டால் பல இடங்களில் தமிழ் பாடசாலைகளையே நடத்தமுடியாமல் போய்விடும்." என்றார்.

இப்பொழுது ஏன் இவர் நேர்முகத்தேர்வில் "தகுதியான" ஆட்களைப் போடவேண்டும் என்று கேட்டவர் என்று விளங்கிவிட்டது.. :D

சரி.. நானும் சும்மா இருக்க முடியாதுதானே.. ஒரு கேள்வியைக் கேட்டு வைப்போம் என்று ஆரம்பித்து, வகுப்புகளில் படிப்பித்தலுக்கு எந்த அளவுக்கு ஆங்கிலத்தை உபயோகப்படுத்தலாம் என்று நிர்வாகம் எதிர்பார்க்கிறது என்று நண்பியின் கரிசனையை ஒரு கேள்வியாக கேட்டு வைத்தேன்.

அதற்குரிய முடிவு ஆசிரியர்களிடமே உள்ளது என்றும், மாணவர்களின் புரிதலை அடிப்படையாக வைத்து அவர்களே அதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது என்றும் கூறிவைத்தார் உப-தலைமை ஆசிரியை.

உடனே விவாதத்துக்குள் உட்புகுந்தார் நமது பெற்றோர் பிரதிநிதி. scared0005.gif

"அதெப்படி ஆங்கிலத்தையும் கலப்பது? முழுவதும் தமிழிலேயே படிப்பிக்க வேண்டும். அப்பொழுதுதான் பிள்ளைகள் தமிழைக் கற்பார்கள். நான் கனடாவுக்கு வந்தபோது ஆங்கில அறிவு எனக்கு இல்லை. ஆனால் எனது ஆங்கில ஆசிரியை "You come!", "Take this!" என்றெல்லாம் ஆங்கிலத்தில் சொன்னதால்தான் என்னால் இன்று ஆங்கிலத்தில் பேச முடிகிறது.." என்றார். scared0005.gif

பொறுமையின் சிகரமான நமது உ.த. ஆசிரியை ஒரு விளக்கத்தைத் தந்தார். தான் இலங்கைக்குப் போய் தமிழ்ப்பாடசாலையில் சேர்ந்தால், அங்கே முழுவதும் தமிழில் கற்பித்தால் எனக்கு தமிழ் ஏறுமா என்று கேட்டு வைத்தார்..

இப்போது எனக்கு விடயங்கள் சிறிது விளங்க ஆரம்பித்தன. ஒரு தமிழ் ஆசிரியைக்கு (ஆங்கிலத்திலும் விளக்கம் சொல்லி படிப்பிப்பவர்.. பள்ளி நிர்வாகத்தால் பாராட்டப்பட்டவர்) எதிரான குழிபறிப்போ இது என்று எண்ணத் தோன்றியது.. மேலும் வேறு சில உரையாடல்களின்பிறகு வேறு சில ஆசிரியர்களுக்கு ஆங்கில அறிவு கம்மி எனவும், அது ஒரு பிரச்சினையாக வராமல் இருக்க இங்கே குத்திமுறிகிறார்கள் என்றும் அறிய முடிந்தது. :D

இதன் இடையே 12 ஆம் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவியையும் (தமிழ் கற்பவர்) யாரோ பேச அழைத்து வந்திருக்கிறார்கள். அவரும் வார நாட்களுக்கு மாற்றினால் தங்கள் படிப்புச்சுமை கூடிவிடும் என்றார். பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பில் மாணவிக்கு என்ன வேலை என்பது கூட்டிக்கொண்டு வந்தவர்களுக்குத்தான் வெளிச்சம்.. scared0005.gif

இதன்பிறகு சேவையாளர்களாகச் (volunteers) சேர்வதில் தங்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுகிறதா என்கிற தொனியில் சிலர் கேள்வி எழுப்பினார்கள்.

அதாவது தமிழ் ஆசிரியைகள் கற்பிக்கும்போது அவர்கள் தமக்குத் தேவைப்பட்டால் சேவையாளர்களை வேண்டி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கலாம். அதற்கு இவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். ஆனால் ஒரு பதிலும் கிடைக்கவில்லையாம்.

அப்போது உ.த. ஆசிரியை கேட்டார்.. "உங்களுடைய பின்புல ஆய்வு (Background check-up) முடித்து அதன் பெறுபேறுகளை அனுப்பிவிட்டீர்களா? அப்படி அனுப்பியிருந்தால் வகுப்பு ஆசிரியர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் சேவையாளர்களைச் சேர்த்துக்கொள்வோம்." என்றார்.

அதற்கு ஒருவர் சொன்னது.. "I have my criminal record in school..!" :( அதாவது பின்புல ஆய்வை முடித்து பெறுபேறுகளைப் பள்ளிக்கூடத்தில் கொடுத்துவிட்டேன் என்பதை அப்படிச் சொன்னார்.. scared0005.gif

ஆனால் நமது வெள்ளைக்காரி யார்? இதிலேயே கரைபுரண்டவர் அல்லவா.. happy0046.gif அவருக்கு சகலமும் விளங்கிவிட்டது.. நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். :D

உங்களிலும் யாருக்காவது இப்படியான அனுபவங்கள் கிடைத்திருந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள்..

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதென்ன குத்தி முறிவு என்று தலையங்கம்?

ஒரு பாடசாலை பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்ட அறிக்கை என்று சொன்னால் என்ன? இதில் உள்ள பெரும்பாலான/ஆக்கக்குறைந்தது சில பிரச்சனைகள் ஏற்ருக்கொள்ளப்பட்கூடியவை.

கண்ட கண்ட அன்ரிமாரை சைட் அடிக்கிறதை தவிர்க்கவும்.

  • தொடங்கியவர்

ஆகா.. என்ன எரிமலை பிளம்பைக் கக்கிவிட்டீர்கள்..! நடந்ததைச் சொன்னனப்பா.. :D

இணைப்பிற்கு நன்றி நண்பா ..........

நான் கனடாவில் இப்படி இருக்காது என நினைத்தேன் ............கொலண்டைப்போலவே கனடாவிலும் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் .................ஏனனில் இங்குள்ள 10000 தமிழ் மக்கள் மத்தியில் இப்படி பிரச்சனைகள் வருவது தவிர்க்கமுடியாது என்றும் நினைத்தேன் .........ஆனால் 100000 மேற்பட்ட தமிழர்கள் வாழும் கனடாவிலும் இதே பிரச்சனையா என்பதை நினைக்கும்போது ......அந்த மன்மதன்தான் எம் இனத்தை இரட்சிக்கணும் . :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
கன்டாவில் இப்பத் தான் தொட‌ங்கி இருக்குது போல லண்ட‌ன் கதையை எழுதினால்  :lol:

தமிழ்ச்சூரியன், இங்குதான் இது அதிகம்.  இசை இவற்றிற்கெல்லாம் மிகவும் புதிது.   எமது தமிழ்ப பிள்ளைகளுக்கு அரசியலைக் கற்றுக் கொடுப்பதே தமிழ் வகுப்புகளில்தான்.   அதுவும் பிள்ளைகள் திறமைசாலிகளாக இருந்தால் போதும்.  போட்டி, பொறாமை என எல்லாவற்றையும் இவர்களே பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்து விடுவார்கள்.   அந்த யேசுவால்கூட எம்மினத்தை இரட்சிக்க முடியாது.

இசை, நீங்கள் பார்க்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.  அவதானமாக இருங்கள்.    :icon_idea:  :icon_idea:  :icon_idea:

தமிழ்சூரியன், ரதி.. உங்கள் அனுபவங்களையும் இரண்டு வரி எழுதிப் போடுங்கோ.. பிற்காலத்துக்கு உதவும்.. :D

கதையை விட்டுப்போட்டு, ஓரிரு எச்சரிக்கைகளை வழங்கினால் நாமும் பயன்பெறுவோம் அல்லவா? :icon_idea::unsure:

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இசை கவனம்.....

இங்கு எல்லாம் பொதுநலன் என்பதைக்காட்டிலும் அவரவர் சுயநலன் சார்ந்தே நடக்கிறது. இதற்கு தமிழ் பள்ளிக்கூடம் விதிவிலக்கல்ல. கூட்டம் என்று வாங்கோ என்பார்கள் அங்கு துணிந்து கருத்து வெளியிடவில்லை என்றால் ஏற்கனவே திட்டமிட்டு இப்படித்தான் என்று பேச வேண்டும் இதையே முடிவாக்கவேண்டும் என்பவர்களின் கருத்துகளுக்கு தலையாட்டிகளாக மாறி தெரிந்தோ தெரியாமலோ விருப்பமின்றி அனுமதியின்றி உங்களைத் தங்கள் ஆதரவாளராக்கிக் கொள்வார்கள்..... கி...கி... நீங்கள் இப்போதுதானே எட்டிப்பார்க்கிறீர்கள்.... 1996 - 1999 வரை இப்படியான இடங்களில் நிறைய தோய்ந்து எழுந்திருக்கிறேன்...கதையோடு கதையாக இப்போதைய தொப்பியை அடையாளங்காண எனக்கு கிடைத்த சந்தர்ப்பமும் அந்தக்காலங்கள்தான்... :lol:

:D     :lol:  :lol: ஒரே ஒரு அனுபவம் கூறுகிறேன் ........பாடசாலை கலைநிகழ்வு ஒன்றில் தனது மகனின் நிகழ்வை வீடியோவில் பதிவாகவில்லை என்ற காரணத்தால் அந்த பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப மறுத்த பெற்றோரின் கதையை சொல்லவா , ...........அல்லது ........................................

.வேண்டாம் இப்போதான் எச்சரிக்கை புள்ளிகளை அகற்றி மனிதனாய் இருக்கிறேன் .

தமிழ்சூரியன், ரதி.. உங்கள் அனுபவங்களையும் இரண்டு வரி எழுதிப் போடுங்கோ.. பிற்காலத்துக்கு உதவும்.. :D

கதையை விட்டுப்போட்டு, ஓரிரு எச்சரிக்கைகளை வழங்கினால் நாமும் பயன்பெறுவோம் அல்லவா? :icon_idea::unsure:

முடிந்தவரை, இவ்வாறான கூட்டங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.  உங்கள் பிள்ளை பற்றிப் பேசுவதாயின் தனியே அந்தஆசிரியருடன் மட்டும் விவாதியுங்கள்.  அப்படியும் மீறி இந்தக் கூட்டங்களுக்குச் சென்றாலும் உங்களது குறைகளைத் தலைமை ஆசிரியரோடு தனியாகக் கதைக்க முயற்சியுங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசை கவனம்.....

இங்கு எல்லாம் பொதுநலன் என்பதைக்காட்டிலும் அவரவர் சுயநலன் சார்ந்தே நடக்கிறது. இதற்கு தமிழ் பள்ளிக்கூடம் விதிவிலக்கல்ல. கூட்டம் என்று வாங்கோ என்பார்கள் அங்கு துணிந்து கருத்து வெளியிடவில்லை என்றால் ஏற்கனவே திட்டமிட்டு இப்படித்தான் என்று பேச வேண்டும் இதையே முடிவாக்கவேண்டும் என்பவர்களின் கருத்துகளுக்கு தலையாட்டிகளாக மாறி தெரிந்தோ தெரியாமலோ விருப்பமின்றி அனுமதியின்றி உங்களைத் தங்கள் ஆதரவாளராக்கிக் கொள்வார்கள்..... கி...கி... நீங்கள் இப்போதுதானே எட்டிப்பார்க்கிறீர்கள்.... 1996 - 1999 வரை இப்படியான இடங்களில் நிறைய தோய்ந்து எழுந்திருக்கிறேன்...கதையோடு கதையாக இப்போதைய தொப்பியை அடையாளங்காண எனக்கு கிடைத்த சந்தர்ப்பமும் அந்தக்காலங்கள்தான்... :lol:

உதுக்கெல்லாம் அசையிற ஆள் நானில்லை.. :D

எனக்கு அழைப்பு வந்தபோதே சொல்லிவிட்டேனாக்கும்.. என்னுடைய கருத்தைத்தான் (அப்படி ஏதாவது இருந்தால் :D ) சொல்லுவேன் என்று.. இதுக்குமேலயும் நான் வரவேணுமா எண்டும் கேட்டேன்.. :lol:

ஆனால் கூட்டத்தின் பின் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.. இப்படியெல்லாம் எதிர்பார்த்திருக்கவில்லை.. :blink:

முடிந்தவரை, இவ்வாறான கூட்டங்களுக்குச் செல்வதைத் தவிருங்கள்.  உங்கள் பிள்ளை பற்றிப் பேசுவதாயின் தனியே அந்தஆசிரியருடன் மட்டும் விவாதியுங்கள்.  அப்படியும் மீறி இந்தக் கூட்டங்களுக்குச் சென்றாலும் உங்களது குறைகளைத் தலைமை ஆசிரியரோடு தனியாகக் கதைக்க முயற்சியுங்கள். 

இது நல்ல ஆலோசனையாகத் தெரிகிறது..

ஆனால் ஒதுங்கியிருக்கும் பட்சத்தில் அவலங்களைப் புகுத்திவிடுவார்கள் என்கிற கரிசனையும் உள்ளது. அதுமட்டுமில்லாமல் எமது சமூகம் பற்றிய ஒரு தவறான புரிதல்களை மற்றவர்களுக்கு ஏற்படுத்திக்கொண்டும் உள்ளார்கள்..!

எமது சமூகத்தை மாற்றவேண்டியது எமது ஒவ்வொருவரினதும் கடமை.   ஆகவே, நீங்கள் துணிந்து கதைப்பீர்களானால் துணிந்து கதைப்பதே நல்லது.  ஆனால், பெரும்பான்மையானவர்களின் பகையைச் சந்திக்க வேண்டி வரலாம்.  அதோடு, தமிழ் ஆசிரியரோடு பகைக்கும் சந்தர்ப்பம் வரின், அது உங்கள் பிள்ளையைப் பாதிக்கும் சந்தர்ப்பங்களும் அதிகம்.  வேறு பாடசாலைக்கு மாற்றவேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.    நீங்கள் துணிந்து செயற்பட வேண்டுமென்பதுதான் எனது விருப்பம்.  ஆனால், மேற்கூறிய விடயங்களையும் கருத்திலெடுத்துச் செயற்படுங்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D     :lol:  :lol: ஒரே ஒரு அனுபவம் கூறுகிறேன் ........பாடசாலை கலைநிகழ்வு ஒன்றில் தனது மகனின் நிகழ்வை வீடியோவில் பதிவாகவில்லை என்ற காரணத்தால் அந்த பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப மறுத்த பெற்றோரின் கதையை சொல்லவா , ...........அல்லது ........................................

.வேண்டாம் இப்போதான் எச்சரிக்கை புள்ளிகளை அகற்றி மனிதனாய் இருக்கிறேன் .

தமிழ்சூரியன்.. உங்களின் அனுபவத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது.. இதற்குமேல் எழுதாமல் பாதுகாப்பு நிலையெடுப்பதே நல்லது.. :icon_idea:

இங்கேயும் இப்படி இருக்கிறது இசை. 
 
திரும்பத்திரும்ப படிக்கிற ஒரு பாடம் -->
 
தமிழனின் மதிப்பு..  mlAVZpdftIXNiOXxUOrilDQ.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கேயும் இப்படி இருக்கிறது இசை. 
 
திரும்பத்திரும்ப படிக்கிற ஒரு பாடம் -->
 
தமிழனின் மதிப்பு..  mlAVZpdftIXNiOXxUOrilDQ.jpg

எனக்கும் இந்த எண்ணம் வந்துவிட்டது ஈசன்..

முகமனும் கோள் சொல்லலும் திறமையை விடத் தெரிந்தவர்களுக்கு முன்னிடமும் காலை வாருதலும் இந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களுடன் கூடவே பிறந்தது போலும்... :mellow:  :(  :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

க‌ன‌டாவுக்கு குடியேற‌ வேணுமெண்டு சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் ஒரு யோச‌னை இருந்து பின்ன‌ர் ம‌ன‌தை மாற்றிக் கொண்டோம். வாராவார‌ம் ந‌ட‌க்கும் விழாக்களுக்கு மொய் எழுதி ஓட்டாண்டி ஆகி விடுவோம் என்ற‌ ப‌ய‌ம் தான் முடிவை மாற்ற‌ ஒரு கார‌ணமாய் இருந்த‌து. இப்ப‌ நிறைய‌க் கார‌ண‌ங்க‌ள் கிடைக்கின்ற‌ன‌. த‌ப்பி விட்டோம் என்ற‌ உண‌ர்வு தான் வ‌ருகிற‌து! :lol:

இவற்றில் இருந்து எல்லாம் தப்பி அஞ்சா நெஞ்சன் நிழலி இந்தக் கனடாவில் தான் குப்பை கொட்டுறாராக்கும். என் வருடம் ஒன்றிக்கான மொய் எழுதும் பணமே வெறும் 300 டொலர்ஸ்களுக்குள் தான்.

இசை குறிப்பிட்டுள்ள தமிழ் வகுப்பு பிரச்சனை இன்னும் எனக்கு அறிமுகமாகவில்லை. மகன் போய் வரும் தமிழ் வகுப்பு வார நாளில் மாலை 5 மணிக்குத்தான்.

வ‌ருட‌ம் 300 டொல‌ர் எண்டாலும் மாத‌ம் 25 டொல‌ர் ப‌டி போகுது! என் க‌ருத்து என்ன‌ண்டா அந்த‌ 25 டொல‌ரைக் கூட வ‌ச‌தியான‌ ஆக்க‌ளுடைய‌‌ சாம‌ர்த்திய‌ வீட்டுக்கும் பிற‌ந்த‌ நாளுக்கும் கொடுக்கிற‌தை விட‌, க‌ஷ்ட‌ப் ப‌டுகிற‌ ச‌ன‌த்துக்குக் கொடுத்தால் அதுக‌ளுக்கு சோறும் ஒரு க‌றியுமாவ‌து கிடைக்குமே எண்ட‌து தான்! ஆனால் ம‌னுஷிக்கு நூற்றுக்கு மேற்ப‌ட்ட‌ சொந்த‌ங்க‌ள் க‌ன‌டாவில‌ இருக்கும் போது இந்த‌ என் "மொய்" கொள்கையை ந‌டைமுறைப் ப‌டுத்துவ‌து இய‌லாத‌ காரிய‌ம்! அமெரிக்காவில‌ ஒரு பாதுகாப்பான‌ மூலையில‌ இருந்து கொண்டு இடைக்கிடை க‌ன‌டா வ‌ந்து மோத‌க‌மும் வாய்ப்ப‌னும் சாப்பிடுற‌து தான் எங்க‌ளுக்குச் ச‌ரிப் ப‌டும்!  :D   

  • கருத்துக்கள உறவுகள்
லண்ட‌னில் பொலிடிக்ஸ் இல்லாத தமிழ் பள்ளிகூட‌மே இல்லை...தமிழோடு சேர்ந்து நட‌னம்,இசை போன்றனவும் படிப்பிக்கப்படுது.அவர்களுக்கு சம்பளம் தங்களை விட‌ அதிகம் என தமிழாசிரியர்களுக்கு குறை.தமிழாசிரியர்கள் எல்லோரும் ஊரில் இலக்கிய,இலக்கணம் படித்து வந்த ஆட்களும் இல்லை :D
 
பதவிப் போட்டி காரணமாக  பாட‌சாலைகள் இரண்டாக உடைந்திருக்குது...தங்கட‌ பிள்ளைகளை கலை நிகழ்ச்சியில் சேர்க்கவில்லை என்பதற்காக பச்சை தூச‌னத்தால் ஆசிரியர்களை பேசினதும் நட‌ந்திருக்கு :lol: இதே நேர‌த்தில ஆசிரியர்கள் கலை நிகழ்ச்சிக்கு தங்களுக்கு தெரிந்த,விருப்பமான பிள்ளைகளை தெரிவு செய்வதும் நட‌ந்து கொண்டு தான் இருக்குது.சில கோயில்களும் தமிழ் பாட‌சாலையை நட‌த்துது :)
 
ஆனால் எது எப்படி இருந்தாலும் லண்ட‌னைப் பொறுத்த வரை பிள்ளைகள் வீட்டில் தமிழ் கதைக்காமல் ஓர‌ளவுக்கேனும் 'தமிழைப்' பற்றி தெரிந்து கொள்வது இந்ததமிழ் பாட‌சாலைகள் மூலம் தான்.இதன் மூலம் தான் எங்கட‌ கலாச்சார‌ம்,பண்பாடு சொல்லிக் கொடுக்கப்படுகிறது   
  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனிநாட்டில் பேர்லின் நகரிலுள்ள தமிலாலயத்தில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் நடைபெற்றதாக அறியப்பெற்ற ஒரு சம்பவம்:-

யேர்மனியில் நேர, தூர, நிதி வசதிகள் காரணமாக தமிலாலயத்திற்கு வருவதற்கு சிரமப்படும் பிள்ளைகளும் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டனர். கூட்டத்தில் ஒரு ஆசிரியர் தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார். பாடசாலைக்கு வரும் மாணவர்களை விடவும், பாடசாலைக்கு வராமல் பரீட்சை எழுதும் மாணவர்கள் அதிக புள்ளிகளைப் பெற்றுச் செல்கின்றனர். இது பாடசாலைக்கு கிரமமாக வரும் மாணவர்களைப் பாதிக்காதா?.

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் தமிழ் மக்கள் பரந்து வாழ்வதால் (ஜேர்மன்காரன் அப்பவே தமிழனைப் புரிந்து கொண்டதால் பிரித்து வைத்திருந்தான்  )

தமிழ்ப் பாடசாலைகளில் நடக்கும் திருகு தாளங்கள் வெளிவந்தாலும் குறைவானதாகவே 

வெளிவரும்.தனிப்பட்டவர்களுக்கிடையில் இருக்கும் கோபதாபங்கள் பாடசாலை 

நிகழ்வுகளில் வெளிவருவது இங்கும் நடக்கின்றது. பாதிக்கப்படுவது புலம்பெயர்ந்தாலும் தங்கள் சொந்த மொழியைக் கற்க வேண்டும் எனும் 

ஆவலில் இருக்கும் எமது இளையவர்களே.  :)  

க‌ன‌டாவுக்கு குடியேற‌ வேணுமெண்டு சில‌ ஆண்டுக‌ளுக்கு முன்ன‌ர் ஒரு யோச‌னை இருந்து பின்ன‌ர் ம‌ன‌தை மாற்றிக் கொண்டோம். வாராவார‌ம் ந‌ட‌க்கும் விழாக்களுக்கு மொய் எழுதி ஓட்டாண்டி ஆகி விடுவோம் என்ற‌ ப‌ய‌ம் தான் முடிவை மாற்ற‌ ஒரு கார‌ணமாய் இருந்த‌து. இப்ப‌ நிறைய‌க் கார‌ண‌ங்க‌ள் கிடைக்கின்ற‌ன‌. த‌ப்பி விட்டோம் என்ற‌ உண‌ர்வு தான் வ‌ருகிற‌து! :lol:

 உண்மையில் இந்த மொய் எழுதும் கலாச்சாரம் நீக்கப்படவேண்டும் ..................இந்த குறைந்த தமிழ்மக்கள் வாழும் நாட்டிலேயே இவ்வளவு பிரச்னை என்றால் கனடா போன்ற நாட்டில் சொல்லி வேலையில்லை என்று நினைக்கிறேன் ....................உண்மையில் எவ்வளவோ மொய் எழுதியாயிற்று ...............இன்றுவரை எந்த மொய் வாங்கும் நிகழ்வும் நடாத்த இஸ்டமில்லை .....................உண்மையில் ஆடம்பர அனாவசிய வாழ்க்கைமுறையாகவே அதனையும் நான் பார்க்கிறேன் ........................ஒரு தரம் அனைவரையும் இணைத்து உபசரிக்கும் எண்ணம் உண்டு ...நிச்சயம் மொய் என்னும் விடயம் தவிர்க்கப்படவேணும் என்ற கொள்கையுடன் ....நன்றி. :D

இந்த விடையத்தில கனடா நாட்டு தமிழர்கள் பரவாயில்லை என தோனுகிறது..

நெதர்லாந்தில் நான் இருக்கும் இடத்து பாடசாலையில்  கூட்டம் பாடசாலையை  ஆரோக்கியமாக தொடர்ந்து நடத்துவதுக்கு என்று பேச தான் அழைப்பார்கள் ஆனால் அங்கு குடும்ப பிரச்சனைகளை இழுத்து பாடசாலை இழுத்து மூடப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது...

  • கருத்துக்கள உறவுகள்

 உண்மையில் எவ்வளவோ மொய் எழுதியாயிற்று ...............இன்றுவரை எந்த மொய் வாங்கும் நிகழ்வும் நடாத்த இஸ்டமில்லை .....................உண்மையில் ஆடம்பர அனாவசிய வாழ்க்கைமுறையாகவே அதனையும் நான் பார்க்கிறேன் ........................ஒரு தரம் அனைவரையும் இணைத்து உபசரிக்கும் எண்ணம் உண்டு ...நிச்சயம் மொய் என்னும் விடயம் தவிர்க்கப்படவேணும் என்ற கொள்கையுடன் ....நன்றி. :D

இதற்காக உங்களோடு ஒட்டி உறவாடிப் பழகிவந்த நண்பர்களும், உங்களோடு வெளிப்படையாக பழகுவதற்கு தயக்கம் காட்டுவதோடு, அவர்கள் மனதை தாங்களே தேற்றிக்கொள்வதற்காக இல்லாத குற்றம் குறைகளை உங்கள்மேல் சுமத்தி, அதை மற்றவர்களோடு பகிர்தும் மகிழ்ந்துகொள்வார்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.