Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐபாட்டும் நானும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்குத் தெரியுமோ தெரியாது, எனக்கு உந்தக் கணனி மற்றும் போன் ரெக்னோலொயியள் என்றாலே சிம்ம சொப்பனம். ஆனால் கணணி வீட்டில கிட்டத்தட்ட 23 வருடங்களாக இருக்கு. பல விடயங்களிலும் நாட்டம் கொண்டு எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் எனக்கு, இந்த இரண்டும் பெரிய சவாலாகவே இன்றுவரை இருக்கு. அதோட எனக்குப் போன்கள் நீண்ட நாட்கள் பாவிப்பதும் குறைவு. நான் அடிக்கடி மாத்த யோசிக்காமலே அதுவா விழுந்து உடஞ்சுபோகும். அடுத்தது மாற்றும் மட்டும் வாங்கிற போன் எல்லாம் ஏதாவது ஒரு பிரச்னையை தந்து கொண்டும் இருக்கும் . மாறி மாறி ஒவ்வொரு போன் இலும் முக்கியமானவர்களின் தொலைபேசி இலக்கங்களை மட்டும் பதிந்துவிட்டு வரும் போன்களை மட்டும் பதிந்து கொள்வேன். அதனால் அவசரத்துக்கு தேவைப்படும் என்பதற்காக பழைய தொலைபேசியையும் காவிக்கொண்டு திரிவேன்.

ஒருமுறை மகளிடம் எல்லா இலக்கங்களையும் பதிந்து தந்தால்  £5 பவுண்ட்ஸ் தருவதாக ஆசை காட்டிப் பார்த்தும் பயனில்லை. ஒரு முப்பது இலக்கங்களை மட்டும் பதிந்துவிட்டு உங்கள் காசும் வேண்டாம் உந்த வேலையும் வேண்டாம் என்று தந்துவிட்டுப் போய் விட்டாள். கணவர் ஒரு நாளைக்கு பத்துப் பாத்தாப் பதியன் என்றுகூறினார். அதுக்கும் மனம் கேட்கவில்லை.

சரி எத்தனை விடயங்களுக்காகப் போராடி வெண்டிருக்கிறன். உந்த டெக்னோலொயி  விசயத்தையும் ஒரு கை பாக்கிறதுதான் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, கணவரிடம் எனக்கு ஐபாட் ஒண்டு வாங்கித் தாங்கோ என்றேன். உனக்கு போனே ஒழுங்காப் பாவிக்கத் தெரியாது . உதை வாங்கி என்ன செய்யப் போறாய் என்றார். எனக்கு போற இடங்களில பயன்படுத்த இலகுவாக இருக்கும். அதோடை கொண்டுபோகவும் சுகம் அது இது என்று ஒருவாறு கதை விட்டதில் மனிசனும், அட இவள் என்னட்டை வாங்கித் தரச்சொல்லிக் கேட்டுப் போட்டாளே எண்ட சந்தோசத்தில சரி வாங்கு என்றுவிட்டார்.  நான் மனிசனுக்குச்  சொல்லாமலேயே பல பொருட்களை வாங்கிவிடுவன். திட்டுக்குப் பயந்து பிறகுதான் சொல்லுற வழக்கம் எண்டதையும் சொல்ல வேணும். ஆனா இது கொஞ்சம் விலை அதிகம் என்பதால் சொல்லியே தீரவேண்டிய கட்டாயம் ஒருபுறம், திட்டும் கிடைக்காதுதானே என்ற நினைப்பும் மறுபுறமுமாய் ஒரு மாதிரி சம்மதம் வாங்கியாச்சு.

அடுத்து பிள்ளையள். படிக்கிற பிள்ளையள் இருக்கேக்குள்ள அவைக்கு வாங்காமல் நான் வாங்க ஒரு மாதிரி இருந்தபடியால் மூத்த மகளைக் கேட்டேன். உங்களுக்கு ஐபாட் வச்சிருக்க விருப்பமோ எண்டு. எனக்குத்தானே நல்ல போன் இருக்கு. வீட்டில மடிக் கணணி இருக்கு. உது என்னத்துக்கு என்றாள். சரி ஒரு பிரச்சனை தீர்ந்தது. மற்றவரைக் கேட்டபோது அவரும் இதே பதில்தான். கடைசி மகளை கேட்கவே இல்லை. ஏனெனில் அவர் இப்பதான் ஒன்பதாம் வகுப்பு. அவவுக்கு உதெல்லாம் தேவை இல்லை என்றனர் மற்ற இருவரும்.

அப்பாடா என்று மனதுள் நினைத்துக்கொண்டு நான் ஒரு ஐபாட் வாங்கப்போறன் என்றவுடன் ஒருவித அதிர்ச்சியுடன் என்னைப் பார்த்தவர்கள் உடனே சிரிக்க ஆரம்பித்தனர். அம்மா உங்களுக்கு உது என்னத்துக்கம்மா என்று. போனையே விழுத்தி உடைக்கிறனீங்கள். ஐபாட் பாவம் என்றாள்  மகள். எனக்கு சரியான ரோசம் வந்திட்டுது. நான் வாங்கத்தான் போறன். உங்களுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள். எனக்கு ஆசையாக இருக்கு வாங்கப் போறன் என்றதுக்கு, வாங்குங்கோ ஆனால் அதைச் செய்துதாங்கோ இதைச் செய்துதாங்கோ என்று எங்களிட்டை வரக்கூடாது என்று கூறிவிட்டனர்.

எனக்கும் ரோச மானம் இருக்கும் தானே. அதனால் உங்களிடம் ஒன்றுமே கேட்கப் போவதில்லை என்றுவிட்டு, கணவரிடம் இன்றே வாங்கலாமோ என்றேன். சரி வாங்கு. வான்குகிறதுதான் வாங்குகிறாய் நல்லதாக வாங்கு என்று அப்பிளில் கடைசியாக வந்த மொடலை வாங்கித் தந்தார்.   வாங்கின புதிசில கொஞ்சம் அதோட மல்லுக்கட்டினன்தான். கட்டிலில் கொண்டுபோய் வைத்து, சோபாவில் சாய்ந்துகொண்டு, குசினியில் சமைத்துக்கொண்டு என்று எல்லா விதமாகவும் ஆசைதீர வைத்துப் பயன்படுத்தினன். கொஞ்சநாள் போக அது அலுத்துப்போச்சு. நேற்று கணவர் கேட்டார் ஐபாட் இப்ப நீ பாவிக்கிறதில்லையோ என்று. நெடுகப் பாவிக்கிறதும் கூடாதுதானே. அதுதான் இருந்துவிட்டு வீட்டில் பாவிக்கிறனான் என்றேன். இப்ப அலுத்துப் போச்சு என்று எப்பிடிச் சொல்ல முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு பிடித்திருந்தால் ஐ பாட்டை தலைமாட்டுக்கு பக்கத்தில் வைத்து விட்டுத்தான் தூங்கி இருப்பீர்கள். :)

  • தொடங்கியவர்

இரண்டு மூண்டு நாள் தலை மாட்டிலையும் கிடந்ததுதான். :)

  • கருத்துக்கள உறவுகள்

அத்தானை என்ன செய்யுற ஜடியா

  • கருத்துக்கள உறவுகள்

அத்தானை என்ன செய்யுற ஜடியா

இதைத்தான் நானும் யோசிச்சனான்

பாவம் அந்த மனுசன்

வெளியில் சொல்லவும் முடியாமல்

விழுங்கவும் முடியாமல்

துப்பவும் முடியாமல்

என்ன பாடு படுகுதோ............. :lol:  :D  :D

அத்தானையும் பக்கத்தில வச்சிருக்கிறதான்

இதைத்தான் நானும் யோசிச்சனான்

பாவம் அந்த மனுசன்

வெளியில் சொல்லவும் முடியாமல்

விழுங்கவும் முடியாமல்

துப்பவும் முடியாமல்

என்ன பாடு படுகுதோ............. :lol::D:D

அத்தானும் போனும் ஒண்டே ...?.....???...என்னண்ணா நீங்கள்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

அத்தானையும் பக்கத்தில வச்சிருக்கிறதான்

அத்தானும் போனும் ஒண்டே ...?.....???...என்னண்ணா நீங்கள்

நன்றி

பகிடி விடலாமோ என்று யோசித்தேன்

சகோதரி தானே

பகிடியாக எடுத்துக்கொள்வார் என்று நினைத்தே பதிந்தேன்

சிரித்தால் ஆயுள் கூடுமாம்

ஏதோ நம்மால் முடிந்தது....... :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஆக்கம் எல்லாம் எடுப்புக்கு எழுதுறது என்பது என் கருத்து :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் இருந்துவிட்டு வீட்டில் பாவிக்கிறனான் என்றேன். இப்ப அலுத்துப் போச்சு என்று எப்பிடிச் சொல்ல முடியும்.

உங்களுக்கு இதெல்லாம் எதுக்கு..???!  எத்தினை அப்ஸ் வைச்சிருக்கீங்க..! ஐபாட் அடிப்படையில் மாணவர்களுக்குரியது. உங்களப் பார்த்தா மாணவராத் தெரியல்ல. இல்லத்தரசியாத்  தான் தெரியுது. அந்த வகையில் உதை.. வாங்கின நேரத்திற்கு ஒரு ஐபோனை வாங்கி இருக்கலாம். மற்றவர்களுக்காவது பிரயோசனப்பட்டிருக்கும்.

இப்பவும் ஒன்றும் அநியாயமாப் போகேல்ல. ஈபே.. கம்றீ அல்லது அமேசனில் விற்பனைக்குப் போட்டால் நல்ல விலைக்கு விற்கலாம். :)

[ஐபாட் ஐ ஐபொட் என்று கருதி எழுதிய பதிலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.]

Edited by nedukkalapoovan

ஒருமுறை மகளிடம் எல்லா இலக்கங்களையும் பதிந்து தந்தால்  £5 பவுண்ட்ஸ் தருவதாக ஆசை காட்டிப் பார்த்தும் பயனில்லை. ஒரு முப்பது இலக்கங்களை மட்டும் பதிந்துவிட்டு உங்கள் காசும் வேண்டாம் உந்த வேலையும் வேண்டாம் என்று தந்துவிட்டுப் போய் விட்டாள். கணவர் ஒரு நாளைக்கு பத்துப் பாத்தாப் பதியன் என்றுகூறினார். அதுக்கும் மனம் கேட்கவில்லை.

தொடர்பு இலக்கங்களை ஒவ்வொன்றாக விரல்களினால் தட்டி 30 இலக்கங்களை பதிவதற்கு £5 பவுண்ட்ஸ் சொற்பமே. எல்லாவற்றையும் பதிந்து தருவதற்கு £50 பவுண்ட்ஸ் சன்மானம் கொடுக்கலாம்.

 ஐபாட்டில் கேம் விளையாடுங்கோ சுமே , அது தான் நான் செய்வது, அத்தார் ஐபாட் 3 வாங்கின பிறகு ஐபாட் 1 இனை எனக்கும் மகளுக்கும் எண்டு தந்தார் . எங்கட வீட்டில் இது தான் வழமையாக நடக்கிறது, அத்தாருக்கு அலுத்தவுடன் மகள் அல்லது என்னிடம் பழைசுகளை தள்ளிவிடுவது. நான் விரும்பி வாங்குவது எனக்கு எண்டு உடுப்புகளும், கான் பாக்குகளும் தான் 

எலேக்றோனிக்ஸ் சாமான்களில் எனக்கு இன்றஸ்ரே இல்லைப்பா :lol:

பழயை வேம்படி தெலிபோன் நம்பர்களோ அல்லது புதிசும் ஏதாவது இருக்கோ. யாழ்ப்பாண கோடுகளும்(code) மாறிவிட்டுது :( .

இருந்தாலும் நம்பர்களை காட்டினீங்கள் என்றால் $5க்கு டைப் பண்ணித்தர முடியுமா என்று சொல்லேலும்.

:D

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி

பகிடி விடலாமோ என்று யோசித்தேன்

சகோதரி தானே

பகிடியாக எடுத்துக்கொள்வார் என்று நினைத்தே பதிந்தேன்

சிரித்தால் ஆயுள் கூடுமாம்

ஏதோ நம்மால் முடிந்தது....... :D

பகிடி விளங்காத ஆளா  அண்ணா நான். முகக்குறி தவறிவிட்டது. :D :D

இப்படியான ஆக்கம் எல்லாம் எடுப்புக்கு எழுதுறது என்பது என் கருத்து :lol:

இதில என்ன எடுப்பு இருக்கு ரதி??? எனக்கு விளங்கவில்லை.

தொடர்பு இலக்கங்களை ஒவ்வொன்றாக விரல்களினால் தட்டி 30 இலக்கங்களை பதிவதற்கு £5 பவுண்ட்ஸ் சொற்பமே. எல்லாவற்றையும் பதிந்து தருவதற்கு £50 பவுண்ட்ஸ் சன்மானம் கொடுக்கலாம்.

வருகைக்கு நன்றி. நீங்கள் கூறுவது சரிதான். சிம்மில் பதிந்துள்ள இலக்கங்கள் 300 ம் தன்ர  பாட்டில வரும். மிச்சம் தான் பிரச்சனை.

 ஐபாட்டில் கேம் விளையாடுங்கோ சுமே , அது தான் நான் செய்வது, அத்தார் ஐபாட் 3 வாங்கின பிறகு ஐபாட் 1 இனை எனக்கும் மகளுக்கும் எண்டு தந்தார் . எங்கட வீட்டில் இது தான் வழமையாக நடக்கிறது, அத்தாருக்கு அலுத்தவுடன் மகள் அல்லது என்னிடம் பழைசுகளை தள்ளிவிடுவது. நான் விரும்பி வாங்குவது எனக்கு எண்டு உடுப்புகளும், கான் பாக்குகளும் தான் 

எலேக்றோனிக்ஸ் சாமான்களில் எனக்கு இன்றஸ்ரே இல்லைப்பா :lol:

எனக்கு கேம் விளையாடுவதில் நாட்டமும் இல்லை அதற்கு நேரமும் இல்லை அலை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு இதெல்லாம் எதுக்கு..???!  எத்தினை அப்ஸ் வைச்சிருக்கீங்க..! ஐபாட் அடிப்படையில் மாணவர்களுக்குரியது. உங்களப் பார்த்தா மாணவராத் தெரியல்ல. இல்லத்தரசியாத்  தான் தெரியுது. அந்த வகையில் உதை.. வாங்கின நேரத்திற்கு ஒரு ஐபோனை வாங்கி இருக்கலாம். மற்றவர்களுக்காவது பிரயோசனப்பட்டிருக்கும்.

இப்பவும் ஒன்றும் அநியாயமாப் போகேல்ல. ஈபே.. கம்றீ அல்லது அமேசனில் விற்பனைக்குப் போட்டால் நல்ல விலைக்கு விற்கலாம். :)

[ஐபாட் ஐ ஐபொட் என்று கருதி எழுதிய பதிலில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.]

எனக்கு எது வேணும் என்று நானெல்லோ முடிவு செய்வது நெடுக்ஸ். நீங்கள் அப்ஸ் என்று அப்பிளிகேசனை கூறுகிறீர்களா?? அல்லது வேறு ஏதாவதா ??? என்று எனக்கு விளங்கவில்லை. தற்போது ஒரு 20 அப்ஸ் தான் வைத்திருக்கிறேன். தேவை ஏற்படின் இத்தனையையும் அதில் டௌன்லோட் செய்துகொள்ளலாம்.  அதுசரி ஐபாட் கறள் பிடிக்காதுதானே. பிறகேன் ebay இல் போட்டு விக்கச் சொல்கிறீர்கள் என்று விளங்கவில்லை.

 Apple iPad with Retina Display, Apple A6X, 1.6GHz, iOS 6, 9.7”, Wi-Fi & Cellular, 128GB, Black

பழயை வேம்படி தெலிபோன் நம்பர்களோ அல்லது புதிசும் ஏதாவது இருக்கோ. யாழ்ப்பாண கோடுகளும்(code) மாறிவிட்டுது :( .

இருந்தாலும் நம்பர்களை காட்டினீங்கள் என்றால் $5க்கு டைப் பண்ணித்தர முடியுமா என்று சொல்லேலும்.

:D

பழைய வேம்படி இலக்கங்கள் எல்லாம் சிம்மில பதின்சதால அப்பிடியே இருக்கு. மிகுதி ஒரு 160 இலக்கங்கள் தான். பதிஞ்சுதர முடியுமோ மல்லை ??

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது போ.....................

நெடுக்கு சொல்வது சுமேக்கு புரிவதற்குள்..............ஐபாட்டில் புதிசா பத்து வந்திடும்...

:lol:

Edited by விசுகு

பழைய வேம்படி இலக்கங்கள் எல்லாம் சிம்மில பதின்சதால அப்பிடியே இருக்கு. மிகுதி ஒரு 160 இலக்கங்கள் தான். பதிஞ்சுதர முடியுமோ மல்லை ??

அக்கா நீண்ட நாளாய் கேட்க வேணும் என்றிருந்தேன் .எனது நண்பிகள் வரிசையில் வேம்படியில் படித்த ஒரு நண்பி பற்றி உங்களிடம் அறிய ஆவலாய் உள்ளேன்.................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயோ..

iPad um ஒரு ஆப்பிள் டிவி யும் இருந்தால்...சிவனே என்று இருந்த  idaththil இருந்து எல்லாம் பார்க்கலாம். சொஞ்சம் காசு இருந்தால் netflix இல்லாட்டி hulu என்ற அப்பாசை இறக்கி வைத்து விட்டு வேண்டிய படத்தை வேண்டிய மாதிரி பார்க்கலாம்.... புத்தகம் வாசிக்கலாம் கடவுளே iPad  வைத்து என்ன செய்கிறது என்று கேக்கிரீர்களே..  

வேம்படியில் படித்த நண்பி என்கிறீர்கள். தொடர்புகள் ஏதும் இல்லையா??? அல்லது மனைவிக்குப் பயந்து எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டீர்களா??? :D :D கேளுங்கள் எனக்குத் தெரிந்திருந்தால் கூறுகிறேன்.

அதுதான் அக்கா கேட்பதா ,விடுவதா ,என்று தவியாய் தவிக்கிறேன் ...........என் குற்றமா அது உன்குற்றமா என பாட்டுக்கூட வருது,,,,,,,,,,,,,,,,, :D  :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ..

iPad um ஒரு ஆப்பிள் டிவி யும் இருந்தால்...சிவனே என்று இருந்த  idaththil இருந்து எல்லாம் பார்க்கலாம். சொஞ்சம் காசு இருந்தால் netflix இல்லாட்டி hulu என்ற அப்பாசை இறக்கி வைத்து விட்டு வேண்டிய படத்தை வேண்டிய மாதிரி பார்க்கலாம்.... புத்தகம் வாசிக்கலாம் கடவுளே iPad  வைத்து என்ன செய்கிறது என்று கேக்கிரீர்களே..  

வொல்கானோ,

அததை அந்த விதமாய்த்தான்  செய்யவேணும். படம் தியேட்டரில் பாக்காமல்விட்டாலும் தொலைக்காட்சியில் பார்ப்பதுதான் எனக்குப் பிடிக்கும். மடிக் கணனியில் கூட நான் பார்க்க மாட்டேன். தற்பொழுது இணையங்களிலும், யாழிலும், மெயில் பார்ப்பதும் skype இல் கதைப்பதும் தான் அதில் செய்வது. என்ன செய்வது உங்கள் வருத்தம் புரிகிறது. இதுதான் விதி என்பது. போயும் போயும் என்னட்டை வந்து மாட்டுப்பட்டு கிடக்கு ipad. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயோ ..."ஆப்பிள் டிவி" என்கிறவர் iPad யும் உங்கட 40/50/60 இஞ்சி பிளாஸ்மா/LCD டிவி யும் வயர்லேஸ் ஆல் இணைகிறவர். (என்னுடைய 2 வயது மகன் செய்வார்..அவர் iPhone ஊடக செய்வார்.- நீங்கள் அதை வடிவாக செய்யலாம்)

பழைய வேம்படி இலக்கங்கள் எல்லாம் சிம்மில பதின்சதால அப்பிடியே இருக்கு. மிகுதி ஒரு 160 இலக்கங்கள் தான். பதிஞ்சுதர முடியுமோ மல்லை ??

இதைதான் சொல்லுறது வேலுப்பிள்ளை அண்ணைக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாதுதென்டு :D

(உங்களின் ஐபாட்டோடு வேலைசெய்யும் PC Sync Applicationயை கண்டு பிடித்தீர்களாயின் PC யில் தட்டச்சு செய்து ஐபாட்டுக்கு அனுப்புவது இலகு. மேலும் PCஇல் இருக்கும் விலாசங்கள் வேறு பல மென்பொருள்களுடனும்(Outlook, Mail Merge) பாவிக்க முடியும். நான் ஆப்பிள் பாவிப்பத்தில்லை. ஆனால் விண்டொவில் அப்படித்தான் செய்வேன்.) 

  • கருத்துக்கள உறவுகள்

கண் மங்குகின்ற வயதில் இதுகளைப் பாவித்தால் கெதியில் 

கண் பார்வை போய்விடும் போல் இருக்கின்றது.  :D

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது போ.....................

நெடுக்கு சொல்வது சுமேக்கு புரிவதற்குள்..............ஐபாட்டில் புதிசா பத்து வந்திடும்...

:lol:

அவங்க அதையும் ஒரு ஆண் என்ன கேட்கிறது என்ற கோணத்தில பார்க்கிறது.. கொடுமை. அதைவிடக் கொடுமை.. கறள் கட்டிறது பற்றிக் கதைக்கிறது.

இதில ஜெயில் பிரேக் அதுஇதென்று கதைக்க வெளிக்கிட்டுருந்தால்.. என்ன நான் என்ன கிரிமினல் என்று நினைச்சியோன்னு வேற கேட்டிருப்பாங்க..!

இவர்களை எல்லாம் வேம்படி உருவாக்கி இருக்கேன்னு நினைக்கிறப்போ.. வேம்படி வேப்பமரத்தில தூக்குப் போட்டு மாண்டிடலாமோன்னு தோனுது..! :lol::D

==============

சாரி சிஸ்டர்.. உங்களோட இப்படியான மாற்றர்கள் கதைக்கிறது ரெம்ப தப்புண்ணு புரிஞ்சுக்கிட்டன்..! :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நீங்கள் ஐபாட்லை நிக்கிறியள்....... கை போன் வந்தகாலத்திலை எனக்கு நடந்தகதையை சொல்லுறன்.
 ஜேர்மனியிலை உந்த ரெலிபோன் வந்த புதிசிலை எனக்கும் பெரிய ஆசையாய் இருந்தது.... வாங்குவமெண்டு விலையை கேட்டவுடனை தலைசுத்தி விழாக்குறையாய் தவண்டுகொண்டு திரிஞ்சதையெல்லாம் இஞ்சை சொல்லேலாது..........இருந்தாலும் என்ரை கணக்குக்குக்கு விலை சரிவர நானும் ஒரு கைத்தொலைபேசி வாங்கினன்...வாங்கினன்...வாங்கினதுதான்.....
 
என்ரை ரமிழ் கூட்டுவள்....கண்டவையள்...பார்த்தவையள்...கூடித்திரிஞ்சவையள்,சொந்தங்கள் எல்லாம்  அடிக்காத, நக்கலேயில்லை.....
 
உவர் என்ன கான் போனோடையோ பிறந்தவர்?
பந்தா காட்ட வெளிக்கிட்டுட்டார்?
ரெலிபோன் கதைக்கோணுமெண்டால் உங்கை மூலைக்குமூலை ரெலிபோன் பூத் இருக்கெல்லே?
காசுக்கொழுப்பு?
இவர் என்ன போலிஸ் வேலையோ பாக்கிறார்?
 
எண்டு என்னை நக்கலடிச்சவையெல்லாம்.......இப்ப ரெலிபோனை இடுப்பிலை கட்டிக்கொண்டு திரியினம்.....அதிலையே வாழ்க்கை நடத்தீனம்......
 
வேளாவேளைக்கு சாப்பிடினமோ இல்லையோ அது பிரச்சனையில்லை.....வேளாவேளைக்கு கான்போனுக்கு சார்ச் பண்ணுறதிலை வலு கவனம். :icon_idea:
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.