Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவிஸ் தமிழ் அழகிப் போட்டி

Featured Replies

சுவிஸ் தமிழ் அழகிப் போட்டி 25.05.2013 அன்று தலைநகர் பெர்னில் 

 பிரபல அறிவிப்பாளர் எஸ் கே ராஜனின் நிகழ்ச்சி தொகுப்பில் மிக விமரிசையாக இடம் பெற்றது. பல பெண்கள் கலந்து கொண்டாலும் மாறுதடம் திரைப்பட நாயகி விஷ்ணி முதலாவது இடத்தை தட்டிக் கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்கு பல தமிழர்களால் தமிழ் அமைப்புக்களால் கலாச்சார சீர்கேடு என்று எதிர்ப்புகள் தெரிவித்த போதும் சிலரால் இந்  நிகழ்ச்சி திட்டமிட்ட படி நடாத்தப் பட்டது.400814_333074966821614_1940620582_n.jpg

 

382631_333075566821554_961986482_n.jpg

942111_333075863488191_402767910_n.jpg

 

969625_333075750154869_836212051_n.jpg

 

253278_333075746821536_707461923_n.jpg

 

  •  

 

பொண்ணு அழகாகத்தான் இருக்கிறா.

 

ஊரோடு ஒத்து வாழ்வதில் கலாசார சீர்கேடு எதுவும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது அழகிப்போட்டியோ? இல்லாட்டி ஆடைஅலங்கார போட்டியோ? :rolleyes:

 

  • கருத்துக்கள உறவுகள்

உது அழகிப்போட்டியோ? இல்லாட்டி ஆடைஅலங்கார போட்டியோ? :rolleyes:

காத்தான்குடிப்பக்கம் மாதிரிக்கிடக்கு!

 

அவ்வளவுக்குப் 'பொத்தல்'! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்தான் ரஜனியின் அடுத்த பட "இமிக்ரான்ட்"-  கதாநாயகி. (  எந்திரன் போல )

 

  • கருத்துக்கள உறவுகள்

நானும் காசப்பாக்காமல் செலவழிச்சு போயிருந்தன் அந்தச் சிகப்புக் கம்பள மேடைக்கு கிட்டத்தான் கன நேரமா அண்ணாந்து பாத்துக்கொண்டு நிண்டனான், நான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் வரவேயில்லை எல்லமே வேஸ்ராப்போயிட்டுது. வாற கிழமை எங்கட ஊரில மாரியம்மன் கூளூத்தல் அதில "சம்பா" டான்ஸ் வருகுது. கமராவும் கையுமா போய் விட்டகுறை தொட்ட குறைகளைத் தொடர ஆயத்தம் இப்பவே நடக்குது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் காசப்பாக்காமல் செலவழிச்சு போயிருந்தன் அந்தச் சிகப்புக் கம்பள மேடைக்கு கிட்டத்தான் கன நேரமா அண்ணாந்து பாத்துக்கொண்டு நிண்டனான், நான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் வரவேயில்லை எல்லமே வேஸ்ராப்போயிட்டுது. வாற கிழமை எங்கட ஊரில மாரியம்மன் கூளூத்தல் அதில "சம்பா" டான்ஸ் வருகுது. கமராவும் கையுமா போய் விட்டகுறை தொட்ட குறைகளைத் தொடர ஆயத்தம் இப்பவே நடக்குது.

 

 நீங்கள் என்னைமாதிரி அடிபட்டகாயளோடை  கலந்தாலோசித்திருந்தால் உந்த அணிலை ஏறவிட்டுட்டு அண்ணாந்து பாத்த வவ்வவ்வவ் சிற்றிவேசன் வந்திருக்காது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உது அழகிப்போட்டியோ? இல்லாட்டி ஆடைஅலங்கார போட்டியோ? :rolleyes:

 

இதுக்குத்தான் சொல்வது

கூழுக்கும் ஆசை

மீசைக்கும் ஆசை என்று.

 

அவனவன் அதை அதை செய்யணும்

அழகையும் காட்டணும்

அதையும் காட்டக்கூடாது என்றால் இரண்டும் நாசம்.......

 

சரி

முடிஞ்சுது

போய்ப்படுப்பம் :(

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிஞ்ச பெண்ணு மாதிரியும் உரு ஆள் இருக்கிறா :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கானாட மயிலாட, பார்த்திருந்த வான் கோழி... தானும் ஆட வெளிக்கிட்டுதாம்.
ஒன்றில்... செய்தால், ஒழுங்காய்.. வெள்ளைக்காரன் மாதிரி அழகிப் போட்டி நடத்த வேண்டும்.
அது சரி வராவிட்டால்... எமக்கு தெரிந்த முறைகளில், வேறு போட்டிகளை நடத்த வேண்டும்.

 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில்... இதில் கலந்து கொண்ட இளம் பெண்களுக்கும்,
அவர்களைப் பெற்ற தாய், தந்தையருக்கும்... இந்த விமர்சனங்கள்... கவலை, மன வேதனை உண்டாகலாம்.
எமது பண்பாட்டிற்கு... உந்த அழகிப் போட்டிகள் சரி வராது என்பதை, உணர்ந்து... இனியாவது திருந்தப் பாருங்கள்.
இனியும்... அழகிப் போட்டியில், உங்கள் மகள் கலந்து கொள்ள அனும‌திப்பீர்களாக இருந்தால்...
நாம்... அதே, மேடையில்... கோவணத்துடன், அழகன் போட்டி வைப்போம்.

 

பிரபல IBC அறிவிப்பாளர் S.K ராஜன் அண்ணை  கலந்து இதை நடாத்தியதை நான் வன்மையா கண்டிக்கிறேன் 

 

சுவிற்சர்லாந்தின் 20 நிமிட செய்தித்தாளின் செய்தி,

அழகிப்போட்டியை குழப்புவதற்காக பல தமிழர் கத்தி மற்றும் பெப்பர் ஸ்பிரே  போன்றவற்றோரு முயற்சிகளை மேற்கொண்டிருந்ததாகவும் ஜீப்பில் வந்து எப்படியும் குழப்பியே தீருவோமென கூறிச் சென்றார்கள் எனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளரான திசோத் சிறிதரன் குறிப்பிட்டுள்ளதாக அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.20min.ch/schweiz/bern/story/12562105

 

மேற்படி சுவிஸ் தமிழ் அழகிப்போட்டியானது எந்த விதத்திலும் தமிழ் பண்பாட்டிற்கு எதிரானதல்ல. பண்பாடு என்பது ஒரு இடத்தில் நிற்பதல்ல. காலத்திற்கு காலம் மாறிச்செல்லவதே பண்பாடு.இது உலக நியதி.  பழைய பஞ்சாங்க பண்பாட்டு பித்தர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நிகழ்வை திறம்பட நடத்தி முடித்த ஏற்பாட்டாளர்களுக்கு எனது பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

946112_637876322893964_276286422_n.jpg

 

அவர்களின் படங்களை போட்டு எழுத முதல் சுவிஸ் அழகு ராணி போட்டி பற்றி அவர்களிடம் ஒரு சொல் கேட்டு அந்த அபிப்பிராயத்தை போட்டிருந்தால் அதுதான் அழகு.

 

இது அவர்களின் முகத்தை கையாக் பண்ணுவது.  :(

எந்த நிகழ்விலாவது  விருப்பமில்லாவிட்டால் No interest  என்று கூறிவிட்டு  அந்நிகழ்வில் பங்குபற்றாமல் இருப்பதுதான் மனிதர் பண்பாடு. அதை விட்டு அதை திட்டுவது நிச்சயமாக தமிழர் பண்பாடாக இருக்க முடியாது. அதற்கு உலக பிரசித்திபெற்ற  முற்போக்கு பெண்மணிகளில் படத்தை உபயோகிப்பதுஅதைவிட  அநாகரிகம்.

உண்மையில் அங்கு யாரும் சென்று குழப்பமுயலவில்லை. அழகிப்போட்டிக்கு தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பில்லை சுவிஸ் மக்களும் பெரிதாக வரவேற்கவில்லை சுமார் 20 முதல் 30 சுவிஸ் நாட்டவரும் அழகிகளும் அவர்களின் உறவினர்களும் பெட்டையளைப் பாக்கப்போன கொஞ்சப் பெடியளுமா சுமார் 150 முதல் 200 பேர்தானாம் அந்த நிகழ்வுக்கு சென்றிருந்தார்கள். அதனால் சுவிஸ் ஊடகங்கள் அழகிப்போட்டி பற்றி செய்திகளை தவிர்த்துவிட்டன. இந்த நிலையில் சுவிற்சர்லாந்து ஊடகத்தின் போக்கறிந்து தன் நிகழ்வுக்கான விளம்பரத்தை நகர்த்த திசோத்தும் அவரது பின்னணியும் திட்டமிட்டது. அதுவே அழகிப் போட்டி தமிழர்களால் குழப்ப முயற்சி அதனை முறியடித்தோம் என இவர் செய்தியை வழங்க சுவிஸ் ஊடகமான 20 நிமிடப் பத்திரிகை பிரசுரித்துள்ளது. ஏனெனின் தமிழர் தொடர்பான இழிவான செய்திகளை தேடிக் கொண்டு வருவதில் இந்த ஊடகம் முன்னின்று செயற்படுவது குறிப்பிடத்தக்கது. இப்போ நான் சொல்லவில்லை தனது திட்டம் பின்னணியார் என்பதை திசோத்தே தெளிவுபடுத்திவிட்டார். இனியாவது வக்காளத்து வேண்டிய வண்டவாளங்களே புரிந்து கொள்ளுங்கள் என்ன நடக்கின்றது என்று.

 

அந்த நிகழ்வுக்கு சென்ற அனைவரும் ஓமந்தை சோதனை சாவடியில் சோதனைக்குட்படுத்தப்பட்டது போல சுவிஸ்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளால் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டே அனுமதிக்கப்பட்டார்கள். யாரோ ஒருவரின் திறப்புக் கோர்வையில் கொழுவப்பட்டிருந்த சிறிய சுவிஸ்கத்தியைதான் அவர்கள் கண்டுபிடித்தார்கள். அந்த திறப்புக்கோர்வையை வைத்திருந்த நபரை உள்ளே அனுமதிக்காமல் திருப்பிவிட்டார்கள். இதுதான் அங்கு நடைபெற்ற விடயம். சாதாரணமாக பெரும்பாலானவர்களின் திறப்புக்கோர்வையில் இத்தகைய கத்தியோடு கூடிய கோர்வையை வைத்திருப்பது அதிகம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி பெற்ற பிகருக்கு வாழ்த்துக்கள்..! :)

 

தங்க காலத்தில இப்படி ஒன்னும் நடக்கல்லையே என்ற ஆற்றாமையில்... பொறாமையில் சிலதுங்க.. இப்படித்தான் நாலு கதை சொல்லித் திரியுங்க. அதை எல்லாம் கணக்கில எடுக்கப்படாது..! தமிழ் பொண்ணுங்களும் அழகு என்னு காட்டனும்..! :lol:

வெற்றி பெற்ற பிகருக்கு வாழ்த்துக்கள்..! :)

 

தங்க காலத்தில இப்படி ஒன்னும் நடக்கல்லையே என்ற ஆற்றாமையில்... பொறாமையில் சிலதுங்க.. இப்படித்தான் நாலு கதை சொல்லித் திரியுங்க. அதை எல்லாம் கணக்கில எடுக்கப்படாது..! தமிழ் பொண்ணுங்களும் அழகு என்னு காட்டனும்..! :lol:

 

சரியா சொன்னீங்க நெடுக்ஸ். இங்கு கலாச்சார பண்பாட்டு காவலர்களாக காட்டிக்கொள்ளும் பலரது உண்மை நிலை இதுதான்.

திசோத் என்பவரா, ரதிகா, சிற்சபேசன், வாணி, ஜனனி என்பவர்களின் படங்களையும் போட்டு வியாபாரம் செய்ய முயல்வது?

 

அழகுராணி போட்டி என்பது பொழுது போக்கு நிகழ்வு. பொருளாதார முன்னேற்றங்களுடன் சேர்த்துப் பார்க்கப்படுவது. திசோத் என்பவர் இந்த இரண்டு பக்க நீதிகளையும் மீறியிருந்தால் அவர் மீது விமர்சனம் வைக்கலாம்.

 

மற்றயது எல்லாம் முன்னேறி, முன்னேறி இந்து, கிறிஸ்தவ  பெண்களுக்கும் அபயா அணிவிக்கும் பணி. அவர்கள் அபயா அணிய வேண்டும் என்று இந்து, கிறிஸ்த மதங்கள் கூறவில்லை. வாணியோ, சிற்சபேசனோ நடக்கும் கால்களால் எல்லா தமிழ் பெண்களும் நடந்தால் அந்தக் கால்கள் எல்லோரையும் தாங்க முடியாமல் உடந்துவிடும். என்வே ஒவ்வொருபெண்ணும் தன் காலால் நடக்கட்டும். <_<

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் figure Swiss பிகருங்கள் எண்டாலே ஒரு அழகு தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.