Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சின்ன சின்ன ஞாபகங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க ஆர்வமாக இருக்கு

  • Replies 148
  • Views 11k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளிநொச்சிக்கும் அக்கராயனுக்கும் இடையில்,செழிப்பான அந்த கிராமம் அமைந்திருக்கிறது.தென்னைகளால் நிரம்பிய அந்தக்கிராமம் அகதியாய் வந்தவர்களை எப்போதும் வரவேற்றது.அந்தக்கிராமத்து போராளியொருவன்  எங்கள் பிரிவில் இருந்தான்.அவனின் பெற்றோரிடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் கிடைத்திருந்தது.அந்தப்போராளியின் தாய் மரணப்படுக்கையில் இருப்பதாகவும் மகனை தாய் பார்க்கவிரும்புவதாகவும் எழுதப்பட்டிருந்தது.நாங்கள் உடனடியாய் அந்தப்போராளியை விடுப்பில் அனுப்ப தீர்மானித்து எங்கள் பிரதான முகாமுக்கு எடுத்தோம்.

நான் மன்னார் போகும் வழியில் அவனை வீட்டில் இறக்கிவிட்டு,தாயின் நோயை விசாரிக்க அவனுடன் கூடச்சென்றேன்.அவர்கள் குடும்பநிலை சுமாராய் இருந்தது.சிறு தோட்டம் ,ஆடு மாடு,கோழிகள் நின்றன.மண் வீடு என்றாலும் அழகாக இருந்தது.தாய் படுத்த படுக்கையாய் கிடந்தாள்.தகப்பனும் சகோதரியும் அவனை கொஞ்சினார்கள்.தாயுக்கு அருகில் மகன் இருக்க தாய் விழித்துக்கொண்டாள்.அவனை மாறி மாறி கொஞ்சினாள்.அது ஒரு வழமையான தமிழ்ப்பாசக்குடும்பம்.எனக்கு இருக்க ஒரு கதிரை தந்தார்கள்.தகப்பன் கதைப்பது குறைவென்றாலும் ஓடித்திரிந்தார்.பத்துநிமிசத்தில கேட்காமல் சாப்பாடு வந்தது. வெள்ளைப்புட்டு சம்பல் முட்டைப்பொரியல். தாயின் நோயை விசாரித்தேன். தாயின்ற வயிறு வீக்கமாயும் இருந்தது.தாயிற்கு வயிற்றில கட்டியாம் ஆனால் அது கான்சர் இல்லையாம்.நோய் மட்டைகளையும் காட்டினார்கள்.கிளிநொச்சி அரசாங்க ஆஸ்பத்திரியில இருந்து வவுனியா அனுப்பி ,அங்கிருந்து அனுராதபுரம் அனுப்பியும் நோயாளி ஒப்பெரசன் தாங்கமாட்டார் என்று திருப்பி அனுப்பிட்டினம்.கட்டி இனி வெடிச்சிடும் என்றும் சொல்லிவிட்டிருக்காங்கள். என்ர பிள்ளை இருக்கிறான் எனக்கு கொள்ளிவைக்க, நான் இல்லாமல் என்ர குஞ்சுகள் கஷ்டப்பட்டிடுங்கள் தாய்  இடைக்கிடை புலம்பிக்கொண்டாள்.

அடுத்தநாளே கிளிநொச்சி பொன்னம்பலம் மருத்துவமனையில் ஒப்பெரசன் செய்யப்பட்டது.தாய் பூரணகுணமடைந்தாள்.

போராளியின் சகோதரியின் திருமணத்தின் போதும் எங்கள் எல்லோருக்கும் அழைப்புவிடப்பட்டிருந்தது. அந்தக்குடும்பத்தை மிக சந்தோஷ மனநிலையில் பார்த்தோம் .பின் மகன் மாவீரன் ஆனான்.தாயை தவிர ஏனையோர் இறுதி யுத்தத்தில் கிபீர் அடித்து இறந்து போனார்களாம்.தாய் சித்தம் கலங்கிப்போனாள் .பூவோடு கனகபுரம் துயிலும் இல்லத்தை நோக்கிப்போவாவாம் .யாரும் கண்டு பிடித்து வருவார்களாம்.அண்மையில் அந்த தாய் இறந்து போனாள்.அவளின் உடலை சவப்பெட்டி இல்லாமல், துணியால் சுற்றி ,தடிகளோடு கட்டி,காவி சுடலையில் எரித்தார்களாம்.

 

ஓவியன்

  • கருத்துக்கள உறவுகள்

கதைகள், கண்களில் நீர் பனிக்க வைக்கின்றன! :o

 

அதற்காக வாசிக்காமல் விட்டுவிடவும் முடியவில்லை!

 

தொடர்ந்து எழுதுங்கள், லியோ!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான குடும்பங்கள்தான் போராட்டத்தின் ஆன்மாக்களாக இருந்து வருகின்றன.. :(

ம்.......................


:(

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான குடும்பங்கள்தான் போராட்டத்தின் ஆன்மாக்களாக இருந்து வருகின்றன..

மனதை நெருடும் சம்பவம் லியோ

 

ஈழவிடுதலைக்காக சமூகம் சந்தித்த செய்த அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்

 

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கனமான பதிவுகள் :o  பல அறியமுடியாத விடையங்கள்  தொடருங்கள் லியோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுண்டல்,வாத்தியார்,வாணன்,அலை,இசை,புங்கை,சுவி,அர்ஜுன்,சுமே வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்   


எண்பத்தி ஐந்தாம் ஆண்டாய் இருக்கவேண்டும்.எனக்கு ஒரு அறிவித்தல் வந்தது.எங்களுடைய வேலை சம்மந்தமாய் கொழும்பு சென்ற ஒருவர் அங்கு கொலை செய்யப்பட்டுவிட்டதாய். அந்த வீட்டுக்கு இந்த அறிவித்தலை தெரியப்படுத்திவிடவும்.நானும் நண்பனும்தான் வெளிக்கிட்டம்.சங்கானைக்குப்போய்,சேர்ச் ரோட்டுக்கு போய் உள்ளுக்குப்போகவேணும். ஒருமாதிரி வீட்டை கண்டுபிடித்து போய் விட்டோம்.இருவருக்குமே இப்படி செய்தி சொல்லி பழக்கமில்லை.அங்கு யாரும் தெரிந்தவராயும் இல்லை.ஒருமாதிரி ஒரு ஐயாவிடம் அந்த செய்தியை சொல்லிவிட்டேன்.திடீர் சாவுதானே அந்த இடம் அல்லோலகல்லோலப்பட்டது.வீட்டில் இருந்த சாமிப்படங்கள் எல்லாம் முற்றத்தில் போட்டு உடைக்கப்பட்டன. அந்த இடத்தில் ஒரு இருநூறு பேர் கூடிவிட்டனர்.நாங்கள் அங்கு இருக்க இன்னொரு போராளி வந்து என்னை அழைத்தான்.நான் எழுந்து போய் என்ன என்று வினவினேன்.உங்களுக்கு சொல்லட்டாம் இறந்தது இவரில்லையாம் அது வேற ஆளாம்.எனக்கு தலை சுற்றிற்று.அவன் போய் விட்டான்.அதில நான் எப்படி சொல்கிறது.நண்பனை இரகசியமாய் அழைத்து விடயத்தை சொன்னேன்.அவன் சொன்னான் இதுக்குள்ள ஒரு ஆள் அமைதியாய் வேலை செய்துகொண்டிருக்கிறார்.அவரை கொஞ்ச தூரம் கூட்டிப்போய் விசயத்தை சொல்லிட்டு போவம்.அப்படியே செய்தோம்.நாம் சொல்லும்போது நாம் எதிர்பார்க்காதமாதிரி அந்த மனிதர் சந்தோசப்பட்டார்.நாங்கள் தப்பினோம் பிழைச்சோம் என்று வந்து சேர்ந்தோம்.எனது நண்பன் எண்பத்தி ஏழில் வீரச்சாவு அடைந்துவிட்டான்.

 

 ஓவியன்  

Edited by லியோ

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு நாள் காலையிலும் உங்கள் பதிவைப் பார்ப்பதற்கே யாழிற்கு வருகின்றேன் .ஒவ்வொருவரும் தங்கள் போராட்ட காலப் பதிவை எழுதவேணும்

  • கருத்துக்கள உறவுகள்

.ஒவ்வொருவரும் தங்கள் போராட்ட காலப் பதிவை எழுதவேணும்

போராட்ட காலப்பதிவு எழுத வேண்டிய கடமை உங்களுக்கும் உண்டு அண்ணாச்சி. பலாலி, கட்டுவன், புன்னாலைக்கட்டுவன், கோட்டை ஈறாக உங்கள் ஞாபகங்களும் வரலாறாக்கப்பட வேண்டிய கதைகள் நிறைய இருக்கு. நீங்களும் எழுதுங்கோ.

பிற்குறிப்பு :- புலி செய்தது பிழை புலி அழியும்வரையில் வராத சுடலை ஞானமெல்லாம் இப்ப வருதெண்டு எழுதப்படும் பொய்யான புரளிகளையும் புனைகதை விற்பன்னர்களையும் வெல்ல உங்களது உ;மையான போராட்ட அனுபவங்கள் பதிவு செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தை புரிந்து எழுதத் தொடங்குங்கள் நந்து.

புலி செய்தது பிழை புலி அழியும்வரையில் வராத சுடலை ஞானமெல்லாம் இப்ப வருதெண்டு எழுதப்படும் பொய்யான புரளிகளையும் புனைகதை விற்பன்னர்களையும் வெல்ல உங்களது உ;மையான போராட்ட அனுபவங்கள் பதிவு செய்ய வேண்டிய காலத்தின் கட்டாயத்தை புரிந்து எழுதத் தொடங்குங்கள் தொடர்ந்து.

 

சரியாக சொன்னீர்கள் சாந்தி.

 

குணா.கவியழகன்  சொல்கின்றார்

 

சிறப்பான அரசியற் தீர்மானம் திறமையான முன்னுணர்வாலேயே நிகழும் - குணா.கவியழகன்

 

கவியழகன் (பவா, அரசியல்துறை அரசியல் கல்விக்குழுப் பொறுப்பாளர், ஈழநாதம் பத்திரிகையின் பொறுப்பாளராக 2005 வரை செயற்பட்டவர் ) சொல்கின்றார்  ”சிறப்பான அரசியற் தீர்மானம் திறமையான முன்னுணர்வாலேயே நிகழும்” என்று.

 

பவா நீங்கள் சொல்வது நல்லவிடயம், ஆனால்  நீங்கள் போராட வந்ததும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்டதும் தங்களது தனிப்பட்ட அரசியல் தொடர்பான தீர்மானமே. அப்படியாயின் தனிநபராக ஒரு சரியான அரசியல் பாதை எது என்று சிறப்பான அரசியல்த்தீர்மானம் எடுக்கத்தெரியாத  முன்னுணர்வற்ற நீங்கள் எப்படி விடுதலைப்புலிகளின் தீர்மானத்தை விமர்சிப்தற்கு தகுதியானவர் ஆவார்கள்.

 

நிற்க, 1998 காலப்பகுதியில் என்று நினைக்கின்றேன் தீவிர அரசியல் பேச்சாளராகவும், அரசியல் துறைப் போராளிகளை அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கும் பணியிலும் பின்னர் ஈழநாதம் பத்திரிகையிலும் பல அரசியல் கட்டுரைகளை எழுதிய, பொறுப்பாயிருந்த நீங்கள் சொல்லுகிறார் ”விடுதலைப்புலிகள் அமைப்பு 1990 ஆண்டிலிருந்தே பல அரசியல்தவறுகளைச் செய்தது என்று”.

 

அப்படியாயின் பவா நேர்மையானவரா? தவறான திசையில் விடுதலை இயக்கம் சென்று கொண்டிருப்பதை முன்னுணர்ந்திருந்தால் ஒன்று  அதைச் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும், அல்லது அந்த விடுதலை இயக்கத்தில் இருந்து விலகி சரியான முன்னுணர்வு அரசியல் வழியில் பயணித்திருக்க வேண்டும்.

 

இவற்றையெல்லாம் விடுத்து விடுதலை இயக்கத்தில் பொய்யனாக, சுயநலத்திற்காக, செயற்பட்டது மட்டுமல்லாமல் மக்களுக்கும் போராளிகளுக்கும் தவறான கருத்தை விதைத்துவிட்டு தற்போது புலம்பெயர்ந்து வந்து தூய்மைவாதியாக வேஷம் போடும் வேடதாரியாக இருக்கிறார்கள்.

 

இவர்களைப்போல தீராணியற்ற, நேர்மையற்ற, முதுகில் குத்துகின்ற, சந்தர்ப்பவாத தன்மையான பலரால் தான் போராட்டம் பின்னடைவைச் சந்தித்ததேயன்றி வேறுகாரணங்களைத் தேடாதீர்கள்.

 

நீங்கள் ஒரு நேர்மையான சமூகப்போராளியாய் இருந்திருந்தால் விடுதலைப்போராட்டத்தின் தவறுகளை அப்போதே சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்  அல்லது அமைப்பில் இருந்து வெளியேறி சுயகருத்தை வைத்திருக்கலாம். அல்லது குறைந்தது தவறான பாதை யில் பயணிப்பதை தவிர்த்திருக்கலாம். ஒன்றையும் செய்யாத நீங்கள்! தற்போது  விடுதலைப்புலிகளை விமர்சிப்பதற்கு தகுதியற்றவர் ஆகிறீர்கள். இவர்களின் கருத்துக்கள் ஒன்றும் புதியவையல்ல. 

 

தற்போது நீங்கள் விடுதலைப்புலிகளுடன் இறுதிவரை செயற்பட்டவர் என்ற அடையாளத்தில்  புதிய பானையில் பழையகள் என்பதைப்போல் மீட்டுகின்றார்கள்.

 

அவர்களின் சந்தர்ப்பவாதத்தனத்தின் வெளிப்பாடு உப்புச்சப்பின்றித்தான் இருக்கின்றது ஏனெனில் “உப்பிட்டவரை உள்ளவரை நினை“ என்ற பழமொழியின் இங்கிதம் தெரியாத இவர்களைப்போன்றவர்களை முன்னுணராததே விடுதலைப்புலிகளின் தோல்வியாகும்.


Edited by காளமேகம், Today, 01:19 PM.

 

Edited by காளமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் லியோ

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுவப்பகிர்வுகளக்கு நன்றி லியோ அண்ணா.. அன்று அவர்கள் ஆறுதல் அடைந்திருந்தாலும் இரண்டு வருடங்களில் அதே துயரை மீண்டும் உணர்ந்திருப்பார்கள்..

தொடருங்கள் லியோ! 


ஒவ்வொருவரும் தங்கள் போராட்ட காலப் பதிவை எழுதவேணும்

 

நீங்களும் தான் நந்தன், எழுதுங்கோ வாசிக்க மிக ஆவல்!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுவப்பகிர்வுகளக்கு நன்றி லியோ அண்ணா.. அன்று அவர்கள் ஆறுதல் அடைந்திருந்தாலும் இரண்டு வருடங்களில் அதே துயரை மீண்டும் உணர்ந்திருப்பார்கள்..

 

இசை நான் நினைக்கிறேன் இவரோடு செத்த வீடு சொல்லப் போன ந்ண்பர் தான் 87 யில் இறந்து விட்டார் என்று :unsure: ...தொடருங்கள் லியோ
  • கருத்துக்கள உறவுகள்

இசை நான் நினைக்கிறேன் இவரோடு செத்த வீடு சொல்லப் போன ந்ண்பர் தான் 87 யில் இறந்து விட்டார் என்று :unsure: ...தொடருங்கள் லியோ

ஓ.. நான்தான் தவறாக விளங்கிக்கொண்டேன்.. நன்றி..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கரும்புலிகளின் முகாமுக்கு மாதத்தில் ஒரு ஞாயிறு நான் போய்வரவேண்டும். அந்த முகாமில் ஆண்,பெண் கரும்புலிகள் பயிற்சி

எடுத்துக்கொண்டிருந்தார்கள்.ஞாயிற்றுக்கிழமைதான் அவர்களுக்கு ஓய்வுநாள்.அந்தப்போராளிகளின் வெள்ளை உள்ளமும்

உபசரிப்பும், கலகலப்பும் என்றும் தனித்துவமானது.

ஒருதடவை அவர்களின் முகாமில் இருந்து விடைபெறும்போது ஒரு கரும்புலி வீரன் அருகில் வந்து என்னுடன் தனிய கதைக்கோணும் என்றான்.சற்றுத்தள்ளிப்போய் என்ன என வினவினேன்.தான் ஒரு பெண் கரும்புலி உறுப்பினரை காதலிப்பதாகவும்,அவளின் விபரங்களையும் சொன்னான். நான் சொன்னேன் அது பிரச்சனை இல்லைத்தானே நீங்கள் சாதாரண போராளியாகி திருமணம் செய்யலாம்.தாம் இருவரும் கரும்புலியாகவே வாழ்வோம் என்று உறுதியாய் சொன்னான்.

நான் கேட்டேன் பொறுப்பாளருக்கு தெரியுமா?யாருக்குமே தெரியாது என்றான்.என்னிடம் என்ன எதிர்பார்ப்பதாய்க்கேட்டேன். யாராவது ஒருவரிடம் சொல்லோனும் அதுதான் என்றான்.நானும் விடைபெற்று அப்படியே போய்விட்டேன். நான் பின்பும் சந்தித்திருக்கிறேன் எந்த வித்தியாசமும் இல்லை அதே கலகலப்புத்தான்.

ஒரு நாள் காலை வழமை போல முதற்கடமையாய் ஈழநாதத்தை கையில் எடுத்தேன்.வெற்றி பெற்ற பெரும் கரும்புலித்தாக்குதலின் செய்தியிருந்தது.அடுத்து நெஞ்சு படபடக்க தலைவருடன் கரும்புலிகள் இருக்கும் படத்தைப்பார்த்தேன்.ஒவ்வொருவராய் பார்த்துப்பார்த்து போக அவனும் அவளும் இருந்தார்கள்.காதலர்களாயே வெடித்திருக்கிறார்கள்.

நான் இந்தக்காதலை உரியவர்களிடம் தெரியப்படுத்தி இருக்கலாமோ?என ஒரு குற்ற உணர்வு எனக்குள் தோன்றிற்று.

பின்பு சில தடவைகள் அண்ணையை சந்திக்கும்போது ,வேறு ஆட்கள் இருந்தமையால் இந்த விடயத்தை கதைக்க முடியவில்லை.ஆறு மாதத்திற்கு பிறகு அண்ணையை தனிய சந்திக்கும்போது இந்த கதையை தொடங்கினேன். அண்ணை சொன்னார் தனக்கு தெரியும் அவற்றை கடிதம் கிடைத்தது அப்ப அவர் வெடிச்சிட்டார். அந்தக்கடிதத்தில உங்களுக்கு தான் தெரியப்படுத்தியதாயும் எழுதியிருந்தார்.சொல்லி சிறிது நேரம் மேல் நோக்கிப்பார்த்தார்.பின் வேறு விடயங்களை சகஜமாய் கதைக்கத்தொடங்கினார். நான் செய்தது சரியோ பிழையோ எனக்கு இன்னும் விளங்கவில்லை.

 

ஓவியன்

 

  • கருத்துக்கள உறவுகள்

எப்படிப்பட்ட தியாகங்கள்..! நினைத்தே பார்க்க முடியவில்லை..!!

  • கருத்துக்கள உறவுகள்

மனித உணர்வுகளை அடக்கி வைக்க, முனிவர்களால் மட்டுமே முடியும்!

 

முற்றும் துறந்தவர்களால் மட்டுமே, தங்களையே தீப்பந்தமாக்கவும் முடியும்!

 

தொடருங்கள், லியோ!

  • கருத்துக்கள உறவுகள்

எங்குமே வாசிக்க முடியாத அனுபவ பதிவு. லியோ அண்ணா போன்று பலரும் எழுதும் போது உண்மையான வரலாற்று பதிவொன்றை எழுத முடியும். சுயநலவாதிகளின் புளுகுமூட்டைகள் தவிடு பொடியாகும்.

தொடருங்கள் லியோ. வாசிக்க மிக ஆவல்!  (கெதியாய் எழுதுங்கோ!)

அனைவரும் விரும்பி  வாசிக்கும் உண்மைத்தொடர் இது .

தயவு செய்து பின்னூட்டம் இடுபவர்கள்  உங்கள் சுய அரசியலை தவிர்த்துவிடுங்கள் .உண்மையும் பொய்யும் சரியையும்  பிழையையும் வாசகர்களிடமே விட்டுவிடுங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இறுதி யுத்தகாலத்தில் ஒரு நாள் இரட்டைவாய்க்காலில்  இருந்து வலைஞர்மடப்பகுதிக்கு  உட்பக்கமாய் போய்க்கொண்டிருந்தேன்.சிறுவர்கள் பனைவடலியில் இருந்து குருத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.பசியின் காரணமாய் குருத்தையும் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள்.யாரும் யாருக்கும் உதவக்கூடிய வசதியில் இல்லை.மேலே வண்டு சுற்றிக்கொண்டு இருந்தது.அதைக்கடந்து சென்ற நிமிட நேரத்திலே இரண்டு செல்கள் அந்த வடலிப்பகுதியில் வீழ்ந்து புகைகிளம்பியது. அந்த பகுதியை நோக்கி ஓடினேன்.மூன்று குழந்தைகள் இறந்துவிட்டன.அதில் ஒன்று முதுகால் செல்துளைத்து பனையிலும்  குத்தி பனையோடு இறுகியபடிஇருந்தது.  ஒருவர் அந்தக்குழந்தையை இழுத்து எடுத்தார்.நெஞ்சு பிரிந்தநிலையில் குழந்தை இறந்துகிடந்தது.பிரிந்த இரப்பையில் பனங்குருத்துத்தான் இருந்தது. காயங்களுடன் துடித்த குழந்தைகளை புலிகளின் மருத்துவமனைக்கு அனுப்பினோம். நேற்று முன்தினமும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் (சகோதரர்கள்) ஏதோ கிழங்கை பசிதீர்க்க சாப்பிட்டு மாண்டுபோனார்கள். பசிபோக்க இறந்து போன குழந்தைகளை பார்க்கும் கொடுமை உலகில் யாருக்குமே வரக்கூடாது.

 

யுத்தத்தின் இறுதிவாரத்தில் ஒரு நேர சீனிக்கஞ்சி உப்புக்கஞ்சியாய் மாறியிருந்தது.எனது போராளிகள் ஓய்வு அறையில் கதைத்துக்கொண்டு இருந்தது எனக்கு கேட்டது.பாணும் ஒரு சம்பலும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?.மீன் குழம்பும் குத்தரிசி சோறும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?. புட்டும் முட்டைப்பொரியலும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்? நான் போய் கடிந்துகொண்டேன் என்ன நேரம் என்ன கதைக்கிறது என்று தெரியாது என்று.அவர்கள் சிரித்தபடி அந்த இடத்தை காலி செய்தனர். இப்ப நினைக்க கஸ்டமாய் இருக்கு.அவர்கள் விரும்பியதை சாப்பிடாமல் போய் விட்டார்கள்.உடல் முழுக்க புற்றுநோய் வந்து வலிப்பதுபோல் இருக்கிறது.

 

 ஓவியன்

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி யுத்தகாலத்தில் ஒரு நாள் இரட்டைவாய்க்காலில்  இருந்து வலைஞர்மடப்பகுதிக்கு  உட்பக்கமாய் போய்க்கொண்டிருந்தேன்.சிறுவர்கள் பனைவடலியில் இருந்து குருத்தை வெட்டிக்கொண்டிருந்தார்கள்.பசியின் காரணமாய் குருத்தையும் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள்.யாரும் யாருக்கும் உதவக்கூடிய வசதியில் இல்லை.மேலே வண்டு சுற்றிக்கொண்டு இருந்தது.அதைக்கடந்து சென்ற நிமிட நேரத்திலே இரண்டு செல்கள் அந்த வடலிப்பகுதியில் வீழ்ந்து புகைகிளம்பியது. அந்த பகுதியை நோக்கி ஓடினேன்.மூன்று குழந்தைகள் இறந்துவிட்டன.அதில் ஒன்று முதுகால் செல்துளைத்து பனையிலும்  குத்தி பனையோடு இறுகியபடிஇருந்தது.  ஒருவர் அந்தக்குழந்தையை இழுத்து எடுத்தார்.நெஞ்சு பிரிந்தநிலையில் குழந்தை இறந்துகிடந்தது.பிரிந்த இரப்பையில் பனங்குருத்துத்தான் இருந்தது. காயங்களுடன் துடித்த குழந்தைகளை புலிகளின் மருத்துவமனைக்கு அனுப்பினோம். நேற்று முன்தினமும் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று குழந்தைகள் (சகோதரர்கள்) ஏதோ கிழங்கை பசிதீர்க்க சாப்பிட்டு மாண்டுபோனார்கள். பசிபோக்க இறந்து போன குழந்தைகளை பார்க்கும் கொடுமை உலகில் யாருக்குமே வரக்கூடாது.

 

யுத்தத்தின் இறுதிவாரத்தில் ஒரு நேர சீனிக்கஞ்சி உப்புக்கஞ்சியாய் மாறியிருந்தது.எனது போராளிகள் ஓய்வு அறையில் கதைத்துக்கொண்டு இருந்தது எனக்கு கேட்டது.பாணும் ஒரு சம்பலும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?.மீன் குழம்பும் குத்தரிசி சோறும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்?. புட்டும் முட்டைப்பொரியலும் சாப்பிட்டால் எப்படியிருக்கும்? நான் போய் கடிந்துகொண்டேன் என்ன நேரம் என்ன கதைக்கிறது என்று தெரியாது என்று.அவர்கள் சிரித்தபடி அந்த இடத்தை காலி செய்தனர். இப்ப நினைக்க கஸ்டமாய் இருக்கு.அவர்கள் விரும்பியதை சாப்பிடாமல் போய் விட்டார்கள்.உடல் முழுக்க புற்றுநோய் வந்து வலிப்பதுபோல் இருக்கிறது.

 

 ஓவியன்

 

பசியிருந்து இழப்பற்கு எதுவமில்லாமல் எல்லாவற்றையும் இழந்தவர்கள் இன்றும் அதே பசியோடு போராடும் நிலமையில் வாழ்வது எல்லாவற்றிலும் கொடுமையாக இருக்கிறது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.