Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்கள் மனமே அப்படித்தான் .

Featured Replies

“அப்பா சுபி போன் பண்ணினவா நாளைக்கு புது வீட்டில  பாட்டியாம் ” வேலையில்இருக்கும் எனக்கு மத்தியான சாப்பாட்டு நேரம்  ஒருக்கா போன் பண்ணாவிட்டால் மனுசிக்கு பொச்சம் தீராது.கடந்த இருபதுவருடங்களாக  இதற்கு மாத்திரம் குறைச்சல் இல்லை.விஷயம் எதுவாகவும் இருக்கலாம்.மாமிக்கு சுகமில்லை ,சின்னவன் படிக்கிறானில்லை,சூப்பர் சிங்கர் இந்த முறை சரியில்லை ,சமைக்க பச்சை மிளகாய் இல்லை இப்படி ஏதாவது உப்பு சப்பில்லாத விடயத்துடன் போன் அடித்து இரண்டு வார்த்தை கதைத்துவிட்டு மனுசி போனை வைத்துவிடுவார்.

 

.”சரி என்னவாம்” என கேட்டேன்.

 

“பாட்டி என்ற பெயரில புது வீட்டை ஆட்களுக்கு காட்ட போறா போல”

 

“அதில என்ன பிழை, இப்ப எல்லாரும் செய்கினம் தானே, இது அவர்கள் மிக ஸ்பெசலாக காணி வாங்கி கட்டிய வீடு அதை நாலு பேருக்கு காட்டாமல் விடுவார்களோ? என்னத்தை சொன்னாலும் சுபி  ஆள் கெட்டிக்காரிதான் “என்றேன்

 

‘எங்களுக்கு ஏன் அந்தளவு பெரிய வீடு, இப்ப இருக்கிறது எனக்கு காணும். சும்மா சுபியை  பற்றி எனக்கு கதை சொல்லாமல் வீட்டை வரும்போது சாப்பிட ஏதும்  வாங்கி வாங்கோ,எனக்கும் வேலை முடிய நாலரை ஆகும் வீட்டை போய் சமைக்க பஞ்சியாக இருக்கு”. மனைவி போனை வைத்துவிட்டார் .

 

சுபி எனது நண்பன் பிரகாசின் மனைவி. 89  களில் கனடாவில் தமிழர்களே குறைவு. அப்படி  இருந்தவர்களும் டவுண்டவுன் வெலஸ்லி அண்ட் பார்லிமென்ட் அப்பாட்னேண்டுகளில் தான்  இருந்தார்கள் .அப்படி ஒன்றில் தான்  நாங்கள் ஆறுபேர் நான் ,பிரகாஸ் முரளி ,நேசன் ,சுதன் விஜயன்  ஒன்றாக இருந்தோம்.ஒருவரிடமும் நிரந்தர வதிவுரிமையாயோ, காரோ கிரடிட் காட்டோ இருக்கவில்லை ,தற்காலிக வேலை பத்திரம் தந்திருந்தார்கள் .கிடைக்கும் அகதிப்பணத்துடன் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த காலமது .அப்பாட்மென்ட்  நேசனின் நண்பனின் பெயரில் இருந்தது .காலை எழும்பி ஒரு துண்டு பாணுடன் வேலை தேட என்று வெளிக்கிட்டு சும்மா நாலு இடங்களுக்கு சுத்தியடிதுவிட்டு மதியம் திரும்பி சமையல் சாப்பாடு குட்டித்தூக்கம். பின்னர் ஒரு சொப்பிங்  கையில் இருக்கும் காசை பொறுத்து விஸ்கி அல்லது பியருடன் கிரேக்க கடையில் நல்ல ஆட்டுஇறைச்சி ,மரக்கறி வாங்கி வந்து ஆளுக்கு ஆள் கதை ,பகிடி சொல்லி சமைத்து சாப்பிட்டுவிட்டு படுத்துவிடுவோம்.இப்படியாக நாலு  ஐந்து மாதங்கள் ஓடியிருக்கும். முரளிதான் முதல் வேலை எடுத்தான். அருகில் இருக்கும் ரெஸ்ரோரண்டில் கோப்பை கழுவும் வேலை. மணித்தியாலத்திற்கு நாலு டொலர்கள் .கிழமைக்கு இரு நூறு டொலர்கள் கொண்டுவருவான் .WELFARE MONEY ஐ விட கூடுதலாக வரும் அந்த பணம்  அப்போது பெரிய தொகையாக  இருந்தது. அவன் ஊருக்கும் கொஞ்சம் அனுப்பி எங்களுக்கும் அவ்வப்போது உதவிகள் செய்வான்.சிறிது காலத்தில் எல்லோருமே ஏதோ வேலைகள் கைகாசிற்கு எடுத்துவிட்டோம் .

இந்த நேரத்தில்  முரளி தனது தங்கையை ஏஜென்சி மூலம் கூட்டிவர காசை கொடுத்துவிட்டு தங்கை கனடா வந்துசேர்ந்தால் தான் வேறு இடம் பார்த்துபோய்விடுவதாக சொன்னான் .அதை விட முரளி இரண்டாவது வேலைக்கு வேறு போக தொடங்கியிருந்தான். சொன்னமாதிரியே முரளியின் தங்கை சுபத்திரா மூன்று வாரத்தில் வந்துசேர்ந்துவிட்டார். அடுத்த அபாட்மென்ட்  எடுத்து முரளியும் தங்கையும் போகும்வரை நாலு நாட்கள் இருந்த ஒரு  ரூமையும் முரளியின் தங்கைக்கு கொடுத்துவிட்டு எல்லோரும் சிற்ரிங் றுமிலேயே படுத்து எழும்பினோம் .ஆனால் அந்த நாலு நாட்களும் எங்களுக்குள் ஒரு சிறிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. உடை உடுப்பதில் இருந்து சகல பழக்க வழக்கங்களையும் ஒரு பெண்ணுக்காக மாற்றவேண்டிஇருந்தது .அந்த நாலு நாட்களும் எவரும் வீட்டில் வைத்து குடிக்கவில்லை .சுபத்திராவிற்கு முன்னால் எல்லோருமே நாம்  ஒரு கதாநாயர்களாக காட்ட முனைந்துகொண்டே இருந்தோம்.

 

முரளி ஒரு கிழங்கன்.வேலை வேலை, வீட்டிற்கு காசு அனுப்புவது,கொஞ்சம் குடிப்பது சாப்பிடுவது இதுதான் அவன் வாழ்க்கை .கையில் காசு இல்லதாத நாங்களே EATON CENTRE வரை போய் உடுப்பு வாங்குவது,கிரிக்கெட்,புட்போல் விளையாட போவது, BAR இல் போய் குடிப்பது,ஆங்கில படம் பார்ப்பது என  முன்னேறியிருந்தோம்.  எனவே  முரளிக்கு இப்படி அழகான தங்கை இருப்பார்  என கனவிலும் எவரும் நினைக்கவில்லை.அதைவிட சுபத்திரா மிக ஸ்டைலாக உடையிலும் பழக்க வழக்கத்திலும் இருந்தார். கொஞ்சம் சரளமாக ஆங்கிலம் வேறு பேசினார்.அதேகட்டிடத்தில்  வேறு அப்பாட்மென்ட்  எடுத்து முரளி தங்கையுடன் போய்விட்டான் .இருந்தாலும் நாம் முரளியின் அப்பாட்மேண்டிற்கு போவதும் சுபத்திரா எமது அப்பாட்மேண்டிற்கு வருவதும் வழக்கமாக இருந்தது. சுபத்திரா DATA –ENTRY ,COMPUTER SKILSS  என்று படிக்க பாடசாலை போக தொடங்கியிருந்தார் .நாங்கள் எல்லோரும் சுபத்திரா முன் கீரோ வேஷம் போட்டாலும் சுபத்திராவின் ஸ்டைலும் ஆங்கில கதையும் அவரை  காதலிக்கும் துணிவு எவருக்கும் வரவில்லை. அது இவாவை கட்டி மேய்க்கேலாது என்ற கள்ளப்புத்தியாகவும் இருக்கலாம் .

 

பிரகாஸ் கார் வைத்திருப்பதால் அவ்வபோது சுபத்திராவை இமிகிரேசன் அலுவலகம் ,லோயர் ,பாடசாலை என்று கூட்டிக்கொண்டு போய்வருவான். இப்படியான ஒரு நாட்களில் தான் பிரகாஸ் எம்மிடம் வந்து  தான் சுபத்திராவை காதலிப்பதாகவும் சுபத்திராவும் அதற்கு சம்மதம் என்றும்  சொன்னான். இருவரும் முடிவை எடுத்த பின் நாம் அதில் கருத்து சொல்ல என்ன இருக்கு என்று விட்டுவிட்டோம் . எமது உள்மனது அண்ணை கஷ்டபடபோறார் என்பதுபோல் ஏனோ சொல்லியது. நாலு வருடங்களின் பின்னர்  முரளியின் சம்மதத்துடன் எல்லோர் ஆசிர்வாததுடனும்  பிரகாஸ் –சுபத்திரா கலியாணம் இனிதே நிறைவேறியது.

 

வருடங்கள் பல உருண்டு ஓடுகின்றது  .நாங்கள் எல்லோரும் கலியாணம் கட்டி பிள்ளைகள் பெற்று ஆளுக்கொரு திசையாக வீடுகள் வாங்கிப்பிரிந்துவிட்டோம்.பிள்ளைகளின் பிறந்ததினம் ,கிறிஸ்மஸ் ,ஒன்றாக விடுமுறை போவது என்று ஆறு குடும்பமும் இப்போதும் மிக அன்னியோன்னியம் .எங்களது மனைவிமாரும் ஆளுக்கு ஆள் நண்பர்களாகிவிட்டிருந்தார்கள். இப்போ பிள்ளைகள் வேறு மிக நெருக்கம். எப்போதும் பெரிதாக பொருளாதார வித்தியாசம் எமக்குள் இருக்கவில்லை. கணவன் மனைவி வேலை ,நல்ல வீடு ,கார் ,பிள்ளைகள் யுனிவெர்சிட்டி  இதுவே பொதுவான வாழ்க்கை. இப்படி அன்நியோன்யமாக இருந்தாலும் இடைக்கிட  சிறு பிரச்சனைகள் சண்டைகள் வந்து போய்க்கொண்டுதான் இருந்தது ,குறிப்பாக மனைவிமார் இடைக்கிடை கதைக்காமல் விடுவதும் பின்பு கதைப்பதுமாக இருந்தார்கள் .இந்த நேரங்களில் கூட நாங்கள் ஆறு பேரும் அந்த மாதிரித்தான் இருந்தோம் .

 

சுபத்திரா சுபியாகி ஒரு பிரபல வங்கியில் வேலை செய்கின்றார் .அதைவிட வீடு வாங்குபவர்களுக்கு மோட்கேஜ் வேறு செய்வதால் மிக பிரபலமாகிவிட்டார் . முன்னரே ஸ்டைலாக இருந்தவர் இப்போ போடும் உடைகளில் இன்னும் பல முன்னேற்றம் . அவரின்  வேலை சம்பந்தமான சந்திப்புகள், ஒன்றுகூடல்களில் இருக்கும் படங்கள் அடிக்கடி  பத்திரிகைளில் வரும்.எங்கள் எல்லோருடனும் அண்ணா அண்ணா என்று மிக அன்பாக பழகுவார்.எமது மனவிமார்தான் சில வேளைகளில் இருந்தாலும் கொஞ்சம் கூடிப்போய்விட்டது என்று அங்கலாய்பார்கள்.

 

இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் வீட்டில் நடந்த ஒரு பாட்டியில் மிக இறுக்கமான  கட்டை  சோட்சுடன் மெல்லிய  சின்ன பிளவுசுடன் நின்றது மாத்திரம் இல்லாமல் தான் வளர்க்கும் நாயின் மேலிருந்து குதிரை போல சவாரி விட்டுக்கொண்டிருந்தது  எமது மனைவிமாருக்கு பெரும் ஆத்திரம் .

“இவ்வளவு ஆண்பிள்ளைகளுக்கு மத்தியில் அவள் தன்ரை வெள்ளை துடையை காட்ட நிக்கிறாள் “ என்ற கொமண்ட்ஸ் பாட்டி நடக்கும் போதே எனது காதுகளில் விழுந்தது.

 

சுபி காணி வாங்கி கட்டிய வீட்டில் பாட்டி போய் வந்து மிகுதி ?

(தொடரும்)

 

 

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்கள்/மனைவிகளின் கதை. யோசித்து எழுதுங்கள் அர்ஜுன். சண்டைக்கு வந்து விடுவார்கள்.

 

உ ங்கள்   நண்பனுக்கு தன் நண்பர்கள் எவ்வளவு நம்பிக்கை இருந்திருத்தால் துணைவி "மிக இறுக்கமான  கட்டை  சோட்சுடன் மெல்லிய  சின்ன பிளவு" போடும் பொழுது உங்களை கூப்பிட்டு இருப்பார் பார்ட்டிக்கு . இப்படி பொது வெளியில் எழுதி நம்பிக்கை துரோகம் பண்ணுகிறீர்களே அண்ணா! நீங்கள் படிச்சனீங்கள் நான் உங்களுக்கு புத்திமதி சொல்ல தகுதி அற்றவன். இருத்ந்தாலும் மனது கேட்கவில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான எழுத்து நடை உங்களுடையது, அர்ஜுன்!

 

மற்றப் பொம்பிளையளைப் பார்த்து எல்லோரும் தான், 'வீணி' வடிக்கிறார்கள்! :D

 

அதை,இப்படிப் பகிரங்கமாக எழுதுவது, ஆண்குலத்தைப் பற்றிப் பெண்களிடையே,ஒரு பிழையான கருத்தை உருவாக்கி விடும்! பெண்கள், எல்லாவற்றையும் எம்மிடம் சொல்லிக்கொண்டா இருக்கிறார்கள்? :o  

  • கருத்துக்கள உறவுகள்
அது இவாவை கட்டி மேய்க்கேலாது என்ற கள்ளப்புத்தியாகவும் இருக்கலாம் .
ம்ம்ம்ம்ம் தொடருங்கோ

உ ங்கள்   நண்பனுக்கு தன் நண்பர்கள் எவ்வளவு நம்பிக்கை இருந்திருத்தால் துணைவி "மிக இறுக்கமான  கட்டை  சோட்சுடன் மெல்லிய  சின்ன பிளவு" போடும் பொழுது உங்களை கூப்பிட்டு இருப்பார் பார்ட்டிக்கு . இப்படி பொது வெளியில் எழுதி நம்பிக்கை துரோகம் பண்ணுகிறீர்களே அண்ணா! நீங்கள் படிச்சனீங்கள் நான் உங்களுக்கு புத்திமதி சொல்ல தகுதி அற்றவன். இருத்ந்தாலும் மனது கேட்கவில்லை.

 

இது எல்லாம் எருமை மாட்டில் மழை பெய்கின்ற மாதிரி. பீலா காட்ட இதைவிட எழுதுவார்

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்குது அர்ஜீன் அண்ணா.இது உங்கள் நண்பர்கள்,அவர்களது குடும்பம் சம்மந்தப்பட்ட கதை என்பதால் கவனமாக பார்த்து எழுதுங்கள்

சில தமிழ் பெண்கள் தங்கள்  கலாச்சாரத்தை எப்படித் தான் இவ்வளவு கெதியாய் மறக்கின்றார்களோ தெரியாது  :rolleyes:  

 

 

தொடருங்கள் அர்ஜுன் அண்ணா :) . வாசிக்க ஆவல், 2014  முடியிறதுக்கிடையில் எழுதி முடிச்சிடுவிள் தானே  :D

Edited by அலைமகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் புதினம் என்றால் அவல் தானே எழுதுங்கோ அர்ஜுன்

சில தமிழ் பெண்கள் தங்கள்  கலாச்சாரத்தை எப்படித் தான் இவ்வளவு கெதியாய் மறக்கின்றார்களோ தெரியாது  :rolleyes:  

 

 

தொடருங்கள் அர்ஜுன் அண்ணா :) . வாசிக்க ஆவல், 2014  முடியிறதுக்கிடையில் எழுதி முடிச்சிடுவிள் தானே  :D

 உடை கலாச்சாரம் என்பது அவர்கள் வளர்ந்த சூழல்  பொறுத்து தான் இருக்கும். அந்த பெண்ணுக்கும் கணவனுக்கும் சரி என்றால் அது தப்பே இல்லை. 
 
அப்படி கலாச்சாரம் என்று நோக்கினால் , விருந்து சாப்பிட்டு வந்து பெண்களை பற்றி "வெள்ளை துடைகாட்டி கொண்டு நின்றாள்" என்று பொது வெளியில் சிலாகிப்பது தான் எங்க கலாச்சரமா? அதை பெண்களும் ஊக்குவிப்பத்து கவலையாக உள்ளது.
 
அண்ணா! நீங்க நன்றாக எழுதுகிறீகள். எதோ ஒரு எங்கள் சமுதாய சீர்கேட்டை திருத்த முனைகிறீர்கள்  இந்த கதையால் என்றும் புரிகிறது. அதை வேறு விதமாக எழுதாலேமே
  • தொடங்கியவர்

பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி .

விரைவில் முடித்துவிடுகின்றேன் .

 

 உடை கலாச்சாரம் என்பது அவர்கள் வளர்ந்த சூழல்  பொறுத்து தான் இருக்கும். அந்த பெண்ணுக்கும் கணவனுக்கும் சரி என்றால் அது தப்பே இல்லை. 
 
அப்படி கலாச்சாரம் என்று நோக்கினால் , விருந்து சாப்பிட்டு வந்து பெண்களை பற்றி "வெள்ளை துடைகாட்டி கொண்டு நின்றாள்" என்று பொது வெளியில் சிலாகிப்பது தான் எங்க கலாச்சரமா? அதை பெண்களும் ஊக்குவிப்பத்து கவலையாக உள்ளது.
 
 

 

 

 

அப்ப உள்ளாடையோடு நிண்டாலும் சரி தான் போலை. அவா அப்படி நிண்டதே தன்னுடையதுகளைக் காட்டத் தானே.  (அவவின்படம் இருந்தால் போட்டுவிடுங்கோ அர்ஜுன் அண்ணா)

அப்ப உள்ளாடையோடு நிண்டாலும் சரி தான் போலை. அவா அப்படி நிண்டதே தன்னுடையதுகளைக் காட்டத் தானே.  (அவவின்படம் இருந்தால் போட்டுவிடுங்கோ அர்ஜுன் அண்ணா)

 

நன்றி அலைமகள். :D உடையை  பார்த்து பெண்களின் எண்ணங்களை கணகிடுவது தப்பு. இதை மத்திய கிழக்கில் வாழ்ந்தவர்களுக்கு   அல்லது வாழ்கிறவர்களுக்கு நன்றாக தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 உடை கலாச்சாரம் என்பது அவர்கள் வளர்ந்த சூழல்  பொறுத்து தான் இருக்கும். அந்த பெண்ணுக்கும் கணவனுக்கும் சரி என்றால் அது தப்பே இல்லை. 
 
அப்படி கலாச்சாரம் என்று நோக்கினால் , விருந்து சாப்பிட்டு வந்து பெண்களை பற்றி "வெள்ளை துடைகாட்டி கொண்டு நின்றாள்" என்று பொது வெளியில் சிலாகிப்பது தான் எங்க கலாச்சரமா? அதை பெண்களும் ஊக்குவிப்பத்து கவலையாக உள்ளது.
 
அண்ணா! நீங்க நன்றாக எழுதுகிறீகள். எதோ ஒரு எங்கள் சமுதாய சீர்கேட்டை திருத்த முனைகிறீர்கள்  இந்த கதையால் என்றும் புரிகிறது. அதை வேறு விதமாக எழுதாலேமே

 

 

எப்படி உடை உடுப்பது என்பது அவரவர் விருப்பம் ஆனால் கணவனின் நண்பர்கள் முன்னால் எப்படி உடுக்க வேண்டும் என்ற அளவிற்கு விபரம் தெரியாத பெண்ணாகவா இருப்பார்?...அவருக்கே பெரிய பிள்ளைகள் இருக்கும் போது கொஞ்சம் வயசுக்கு ஏற்ற மாதிரி உடுத்தலாம் தானே!...கணவரோடு அவர் எங்கும் தனியே போகும் உடுத்தும் உடைக்கும்,வீட்டில் பார்ட்டியில் எல்லோருக்கும் முன்னால் உடுத்தும் உடைக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் அல்லவா
  • தொடங்கியவர்

பிரகாசின் புதிய வீடு எனது வீட்டில் இருந்து ஒன்றும் பெரிய தூரத்தில் இல்லை .டொராண்டோவின் கிழக்கு எல்லையில் காடுகளாக காட்சியளிக்கும் அந்த மிக பழைமை வாய்ந்த அந்த  குடியிருப்புகளில் ஒரு பழைய வீட்டை வாங்கி அதை உடைத்து புது வீடு கட்டியிருந்தார்கள் .நாங்கள் அங்கு செல்லும் போது ஏற்கனவே சில நண்பர்கள் வந்துவிட்டிருந்தார்கள். டிரைவ் வேயில் காரை நான் பார்க் பண்ணும் போதே “வாங்கோ வாங்கோ,அப்பா ------- வந்திருக்கின்றார்“ என்றபடி சுபிதான் கதவை திறந்தவர்  எனது மனைவியையும் பெயர் சொல்லி  “எங்கேயைப்பா நீர் இப்படியெல்லாம் உடுப்பு தேடிப்பிடித்து வாங்குகின்றநீர். நல்லா இருக்கப்பா “ என்று எடுத்த எடுப்பிலேயே சிக்ஸ் அடித்தார்.

 

“வீட்டிற்குள் போயிருந்து கதைக்க தொடங்கினால் பிறகு மறந்து போவோம். கையோட வீட்டை ஒருக்கா பார்ப்பமோ “என்று சுபியிடம் கேட்டேன். முரளி அண்ணாவுடன்  போய் கதைத்துகொண்டு இருங்கோ ஒரு நிமிசத்தில வாறன் என்று சுபி மேல்மாடிக்கு சென்றுவிட்டார். .முரளி ,நேசன் இன்னும் வேறு சில நண்பர்கள், மனைவிகள் சகிதம் உள்ளே இருந்தார்கள் .பரஸ்பரம் கை கொடுக்கல்களும் கட்டி பிடிப்புகளுக்கும் பின்பு “பிரகாஸ் எங்கே” என்று நான் கேட்கவும் “மச்சான் நீ வாறாய் என்று தான் இந்த பிராண்ட் வாங்கினான்” என்று கிலைன்லவற்றை காட்டிக்கொண்டு பிரகாஸ் வருகின்றான்.

“நீங்கள் உதிலை இருந்தால் அசைய மாட்டீர்கள் வாங்கோ வீட்டையும் ஒருக்கா பார்ப்பம் “என்ற படி சுபி வருகின்றார் .முதல் போட்டிருந்த அந்த  உடுப்பை மாற்றி புது கருப்பு நிற சுடிதார் போட்டிருந்தார்.அதுவும் கீழே ஐயர்மார் கட்டும் பஞ்சகட்சரம் போல புதுவிதமாகதான் இருந்தது.

 

“புது வீடு வாங்குகின்ற ஐடியா தான் முதலில் எங்களுக்கு இருந்தது ,பிறகு சிலர் வீடு கட்டுவதற்கும் மோட்கேஜ் எடுக்க வரும் போதுதான் நாமும் ஒரு வீட்டை கட்டினால் என்ன என்று நினைத்தோம்” என்று சுபி தொடங்க “என்னத்தையாவது நீயே செய்யென்று சொல்லிவிட்டேன் ,ஆள் நல்லாத்தான் கஷ்டப்பட்டது. இப்ப எங்களுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல திருப்தி .நினைத்ததை விட மிக வடிவாகத்தான் வந்திருக்கு”  இது பிரகாஸ் .

 

“வீடு நாங்கள் கட்டவில்லை எல்லாம் கூகுள் தான் உபயம் .முதலில ஒரு தமிழ் ஆளைத்தான் பிடித்தோம் ,அதுதான் உங்கட இந்து கல்லூரி நண்பர் ,அவர் காசும் கனக்க கேட்டார் அதைவிட பெரிய கொண்டிசன்கள்  எல்லாம் போட்டார் .மெல்லமாக காய் வெட்டிவிட்டு பின்னர் ஒரு இத்தாலியன் பில்டரை பிடித்து கட்டினோம் .ஆளும் நல்ல FLEXIBLE  காசும் ஒரு லட்சதிற்கு கிட்ட  குறையத்தான் முடிந்தது . ஒவ்வொரு அங்குலமும் எங்கட சொல்லு கேட்டுத்தான் கட்டினானார்கள்.

சும்மா சொல்ல கூடாது கல்லிலே கலை வண்ணம் கண்டிருந்தான் இத்தாலியன் .

அந்த மரங்கள் சூழ்ந்த பெரும் காணியில் இரட்டை முன் கதவுடன் திறந்த உள்ளமைப்பான வீடு .(OPEN CONCEPT) ஐந்து படுக்கை அறைகளும் குளியலறையுடன். (ENSUITE) மாபிளில் போட்ட கவுண்டர் டோப்புடன் இருந்தது .குசினி கவுண்டர் டாப், கீழ்பரப்பு நிலம் எல்லாம் கருப்பு கிரனைட். குசினியில் இருந்துஅடுத்த குடும்ப இருப்பிடம் விலை கூடிய கண்ணாடியால்(BEVELED GLASS). மறைக்க பட்டிருந்தது வீட்டின் பின் பக்கமும் இரு கதவுகளால் ஒரு பெரிய டேக் இற்கு செல்கின்றது .ஒவ்வொரு ரூமும் வெவ்வேறு ஸ்டைலில் அலங்கரிக்கபட்டிருந்தன .ஜன்னல் திரை சேலைகளும், சுவரில் மாட்டப்பட்டிருந்த ஓவியங்களும், சிற்பங்களும், பெரிய பெரிய மினுங்கும் பூச்சாடிகளும் நடுவீட்டில் இருந்த மர ஊஞ்சலும் வீட்டிற்கு ஒரு இந்திய தன்மையை கொடுத்திருந்தது.

 

“வீடு அழகு  அதன் அலங்காரம் அழகு அதைவிட அதை அலங்கரித்தவர் தான் இன்னும் அழகு” என்று நேசன் பகிடி விட 

“அவாவும் அப்படித்தான் நினக்கின்றா ” என்று பிரகாஸ் சொல்ல எல்லோரும் சிரிக்க

“இந்த வீட்டை கட்டி முடிக்க  நான்பட்ட பாடு எனக்குதான் தெரியும். கிட்டத்தட்ட இப்படி ஒரு வீடு இங்கு ஒரு மில்லியனுக்கு மேல் போகுது எங்களுக்கு இது எண்ணூறுக்கு குறையத்தான் முடிந்தது. நான் கஷ்டப்பட்டதால தான் இவ்வளவு மிச்சமும் என்று அவருக்கு விளங்குதில்லை. வாங்கோ பேஸ்மன்ட்டிற்கு போவோம்”என்றபடி சுபி கீழே போகின்றார் .

 

கட்டி முடிக்கப்படாத பேஸ்மன்ட்டில் ஒரு மினி பாரே இருக்கு. திறந்த அந்த நிலகீழ்அறையில் கதிரைகள் போட்டு ஒரு பெரிய டி.வி யும் வீடியோ விளையாட்டுகளும் இருந்தது  ஆண் ,பெண் என்ற பாகுபாடில்லாமல் விஸ்கி வோட்கா,வைன் என்று அவரவர் விருப்பத்திற்கு எடுத்துக்கொள்ள பாட்டி களை  கட்டுகின்றது.  பலவிதமான சோட்ஈட்ஸ்களும் சலாட், குயுகம்பர் ,செலரி என்று தொட்டுதின்ன DIPPING SAUCE உம் அடுக்கபட்டிருக்கு. தண்ணி உள்ளே போக இன்னனதுதான் என்றில்லாமல் பிள்ளைகள்,அவர்கள் படிப்பு, வேலைஇட பிரச்சனைகள், வீட்டு விலை ,சினிமா, அரசியல் என்று அவனவன் தனக்கு தெரிந்ததை அவிழ்துவிடுகின்றான்.

“ மன்னிக்க வேண்டும் சமைக்க இன்று நேரம் கிடைக்காததால் ராஜாராம் சாப்பாடுதான். பரவாயில்லைதானே. கொஞ்சம் ஒயிலி ஆனால் டேஸ்டாக இருக்கும்.அவசரமில்லை ஆறுதலாக இருந்து சாப்பிட்டுவிட்டு போங்கோ. .விரும்பியவர்கள் படுத்துவிட்டு நாளைக்கும் போகலாம்” என்கின்றான் பிரகாஸ்.  

 

தண்ணி ஆறாக ஓடுது .முரளி “நிலா அது வானத்து மேலே “என்று இளையராஜாவை இழுக்க தொடங்க மற்றவர்களும் கை தட்ட பாட்டு உச்சத்தை தொடுகின்றது .முரளிக்கு பாட்டி என்றால் பாட்டு பாடியே ஆகவேண்டும்.பழையது புதியது பைலா என பாட்டுகள் தொடர ஒரு சிலர் ஆடவும் தொடங்குகின்றார்கள்.

சுபி வழக்கம் போல் தனக்கு பிடித்தமான “வை ராசா வை உன் வலது காலை வை” என்ற பஞ்சதந்திரம்  பாட்டை போட்டு துப்பட்டாவை சுழட்டி சுழட்டி அந்த மாதிரி ஆடுகின்றார். எல்லோருமே ஆடினாலும் சுபியின் ஆட்டம் ஸ்டேப் எல்லாம் வைத்து தனித்தன்மையாகவே எப்போதும்  இருக்கும். வேறு சிலர் ஆங்கிலபாட்டுக்களை போட்டு ஆடினாலும் சுபிக்கு தமிழ் பாட்டு போட்டு தமிழ் நடிககைகள் மாதிரி ஆடத்தான் விருப்பம் .

 

வழக்கம் போல் நான்  பாட்டிற்கும் ஆட்டத்திற்கும் உற்சாகம் கொடுத்துக் கொண்டு  எனது கிளாசை திரும்ப திரும்ப நிரப்பவதிலேயே குறியாக  சோபாவின் ஒரு மூலையில் மித மிஞ்சிய மயக்கத்தில் இருக்கின்றேன் . சிலர்  சாப்பிட மேலே செல்கின்றார்கள்.

யாரோ எனது முழங்காலுடன்  தலை வைப்பதை உணர்ந்து குனிந்தால் தரையில் இருந்து எனது காலுடன் ஒட்டியபடி  பிரகாஸ் .

“என்ன மச்சான் சந்தோசம் கூடிட்டிது போல” என்றபடி நான் அவனது தலையை தடவ அவனது உடம்பு சிறிது குலுங்க விசும்புகின்றான் .

YOU GUYS ARE SO LUCKY.   எனக்குத்தான் இப்படி அமைந்திட்டிது. நான் என்ன பாவம்  செய்தேன் ” என்றவனின் முகத்தை நான் நிமிர்த்த “ஒன்றுமில்லை” என்றபடி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எழும்பி வாஸ் ரூமை நோக்கி போய்விட்டான். சுபி “உப்பு கருவாட்டிற்கு” மனிஷா கொய்ராலாவின் ஸ்டெப் வைத்து ஆடிக்கொண்டு இருக்கின்றார்.

பிரகாஸ் திரும்பி ஏதும் நடவாதவன் போல் வந்து எங்களுடன் இருந்துவிட்டு எல்லோருக்கும் சாப்பாடும் தந்து விடையனுப்பிவிட்டான் .

 

எனக்கு எல்லாமே ஒரு கனவு மாதிரி இருந்தது .இவனுக்கு திடீரென்று அப்படி என்ன நடந்தது. கார் ஓடிக்கொண்டிருக்கும் மனைவியிடம் பிரகாஸ் நடந்துகொண்ட விதம் பற்றி சொன்னேன்.

அப்பா இது என்ன புதுக்கதையே, கலியாணம் கட்டிய நாளில் இருந்து உந்த பிரச்சனை இருந்துகொண்டுதானே இருக்கு .சுபியின் ஸ்டைலும் போடும் உடுப்புகளும் பிரகாசுக்கு பிடிப்பதில்லை. இரண்டு மூன்று தரம் பிரகாஸ் கை வைத்ததும் உங்களுக்கு தெரியும் தானே .சுபி ஒரேயடியாக பிரகாசுக்கு சொல்லிவிட்டாள் “இனி கை வைக்கின்ற வேலையெல்லாம் சரிவராது அது டிவேர்சில் தான் போய்முடியும்” என்று .பிரகாஸ் “உந்த வேலையால் தான் நீ இப்படி திரிகின்றாய், உந்த வேலையை விடு” என்று வேறு  கத்தினவராம்.

 

சுபி யாழ்பாணம் கொன்வென்ட்டில்  படித்தவள் அங்கு நெட்போல் டீமில  காற்சட்டை போட்டு விளையாடினவள். அவளது தாயே அவளுக்கு அந்த மாதிரி உடுப்புகள் எல்லாம் தைத்துகொடுத்திருக்கின்றார். அது அவளுக்கு பழக்கமான ஒன்றாக போய்விட்டது.

சுபியின் அண்ணன் முரளியும் இண்டைக்கு பாட்டிக்கு வந்தவர்தானே? அவர் பாடேக்க தானே சுபி எழும்பி ஆடத்தொடங்கியவர். உதெல்லாம் ஒரு பெரிய விடயமே .பிரகாஸ்  செய்கின்ற இரண்டு வேலைகளின்  சம்பளத்தை கூட்டினாலும் சுபியின் சம்பளம் வராது. வங்கியில் வேலை,மோட்கேஜ் சம்பந்தமாக அடிக்கடி கூட்டங்கள்,சந்திப்புகள்,பாட்டிகள் என்று போறவள். ஏற்கனவே சுபிக்கு ஸ்டைலாக வெளிக்கிட நல்ல விருப்பம். சுபி அந்த மாதிரி உடுப்புகள் போட்டுக்கொண்டு BMW இல் வந்து இறங்கும் போது எனக்கே பெருமையாக இருக்கின்றது இதில அவருக்கு என்ன குறைந்து விட்டதாம்.

தனது சுதந்திரத்தில் நீங்கள் தலையிட கூடாது என்று அடித்து சொல்லிவிட்டாளம். அதன் பின் ஆள் இப்ப மூச்சு காட்டுகின்றதில்லையாம். மனதில அடக்கி வைத்திருப்பது இன்று தண்ணியில் கொஞ்சம் வெளியில வந்திட்டுது போல .

 

இந்த ஆம்பிளைகள் எல்லோருமே உந்த விசயத்தில் உதவாத கேசுகள்தான்  ஆரும் பொம்பிளைகள் கொஞ்சம் வடிவா ஸ்டைலா இருந்தா போய் பல்லை காட்டுவினம். படிச்சு நல்லவேலைக்கு போனால் புழுகி தள்ளுவினம் ஆனால் தங்கட மனுசிமார் அவர்களுக்கு அடங்கி ஒடுங்கி அடக்கமாக இருக்கவேண்டும்.

நீங்கள் மட்டும் என்னவோ திறமோ? சும்மா முற்போக்கு என்று விடுகை  வேறு விடுவீர்கள் ஆனால் உங்களுக்கும் நான் செய்யும் பலவிடயங்கள் பிடிக்காது என்று எனக்கு தெரியும் ஆனால் நல்ல பிள்ளைக்கு நடிக்க காட்டிக்கொள்ள மாட்டீர்கள்.  நானும் சுபி மாதிரி இருந்திருந்தால் உங்களுக்கு பிடித்திருக்காது. உங்களுக்காக நான் இப்படி இருக்கவில்லை இப்படி இருக்கத்தான் எனக்கு இருக்க விருப்பம் அதை விளங்கிகொள்ளுங்கோ. 

 

பிரகாஸ் கூட வேறு ஒருவர் மனைவி அப்படி இருந்தால் பெருமைதான் பட்டிருப்பார்  ஆனால் தனது மனைவி அப்படி இருப்பது அவனுக்கு பொறுக்குதில்லை .உந்த ஆம்பிளைகளே உப்படித்தான்.

எனக்கு ஏன் தேவையிலாமல் வாயை கொடுத்து “இப்ப இது தேவையா “ என்பது போலிருந்தது .காரை பார்த்து ஓட்டும் என்றேன்.

 

உதுதான் ஆம்பிளை புத்தி. எவ்வளவு வருடங்கள் நான் கார் ஓடுகின்றன். எப்ப பக்கத்தில் இருந்தாலும் ஏதாவது பிழை பிடித்துக்கொண்டு ........

ஐயோ என்னை விட்டால் காணும் சாமி.  

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது பிழை பிடித்துக்கொண்டு ........ :icon_idea:  :icon_idea:  :icon_idea:  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

:D :D :D

எங்களின் சமூகம் பெருமளவில் இதற்கெல்லாம் தயாரில்லை என்பதே காரணம் என நினைக்கிறேன்.. ஒரு கதைக்கு எல்லோருமே இப்படி உடுத்தினால் இது ஒரு பிரச்சினையாக எழ வாய்ப்பில்லை..

போன அலுவலக கிறிஸ்மஸ் விருந்தில் தனது தனங்கள் :D இரண்டிலும் ஓளிரும் விளக்குகளைப் பொருத்திக்கொண்டு கணவனுடன் காட்சி தந்தார் ஒரு வெ ள்ளைப் பெண்மணி.. :D சற்று வயதானவர்.. பல ஆண்கள் பகிடி விட்டார்கள் .. அவவும் சிரித்துக்கொண்டு சிலுக்குமாதிரி வேறு செய்து காட்டினா.. :D இவ ஒரு மேலதிகாரி..

http://www.dailymail.co.uk/news/article-2042177/Canadian-MP-Rathika-Sitsabaiesan-centre-Photoshopping-controversy.html

 

நீங்கள் 'காட்டுவதுதான் மேற்கு கலாச்சாரம் என விவாதிக்கலாம் ஆனால் ஏன்  ராதிகாவின் படம் சர்ச்சைக்கானது? மேற்கத்தையவர் எங்களை மாதிரிக் கட்டுப்பெட்டிகள் இல்லைதான். ஆனால். அவர்கட்கும் ஒரு வரைமுறை உண்டு.

 

 

ஒரு குடும்பத்தை பற்றி கதையெழுத உங்களுக்கு என்ன உரிமையிருக்கு. அது அவர்களின் தனிப்பட்ட பிரச்சனை. அதை இங்கு கொண்டு வந்து பகிர்ந்து அதற்கு பலர் விருப்பு வாக்கு வேறு. இந்த கதையும் மற்றவனின் படுக்கை அறையை எட்டிப்பார்ப்பதற்கு சமன். உங்கள் வீட்டுக்கதையை மற்றவன் எழுதினால் உங்களுக்கு எப்படியிருக்குமென முதலில் யோசியுங்கள்.

 

முதுகில் உள்ள ஊத்தை கடிக்கும்போதுதான் தெரியும் எவ்வளவு ஊத்தையென்று.

 

இவர்களைப்பற்றி தெரிந்த பலர் யாழ் வாசகர்களாக இருக்கும்.

தொடருங்கள், வாசிக்க ஆவல்!

 

சில சனங்களுக்கு இப்ப கிறுக்கவே சரிவருகுதில்லை உள்ளக் குமுறல், உதுகளை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்!   :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், வாசிக்க ஆவல்!

 

சில சனங்களுக்கு இப்ப கிறுக்கவே சரிவருகுதில்லை உள்ளக் குமுறல், உதுகளை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்!   :lol:  :icon_idea:

அடுத்த வீட்டு பிரச்சனை என்றால் .............

உங்களுக்கு அவல்மாதிரி  இருக்கும் என்பது தெரிந்த விடயம்தானே.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுதான் வாசித்தேன்....

 

 

தொடருங்கள், வாசிக்க ஆவல்!

 

சில சனங்களுக்கு இப்ப கிறுக்கவே சரிவருகுதில்லை உள்ளக் குமுறல், உதுகளை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்!   :lol:  :icon_idea:

 

கதை முடிஞ்சுது போலைகிடக்கு....நீங்கள் தொடருங்கோ எண்டுறியள்???? ஓமோம் அண்ணையிட்டை உப்புடியான ஊர் உளவாரக்கதையள் எக்கச்சக்கமாய் இருக்கும்.smileys-mehrere-smilies-014635.gif

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல் நான் பாட்டிற்கும் ஆட்டத்திற்கும் உற்சாகம் கொடுத்துக் கொண்டு எனது கிளாசை திரும்ப திரும்ப நிரப்பவதிலேயே குறியாக சோபாவின் ஒரு மூலையில் மித மிஞ்சிய மயக்கத்தில் இருக்கின்றேன் . சிலர் சாப்பிட மேலே செல்கின்றார்கள்.
அளவோடு எடுத்து சுபியை ரசிக்கிறதிலேயே குறியா இருந்த மாதிரி எனக்கு விளங்குது :D .....எல்லா ஆம்பிளைகளும் அப்படித்தான்.....:D

Edited by putthan

 

அடுத்த வீட்டு பிரச்சனை என்றால் .............

உங்களுக்கு அவல்மாதிரி  இருக்கும் என்பது தெரிந்த விடயம்தானே.

 

 

 

நீங்கள் எதுக்கு இங்கை??

  • தொடங்கியவர்

தமிழ் நாட்டின் மூன்று முதல்வர்களின் கதையை அப்படியே இருவர் என்ற படமாக  எடுத்திருந்தார் மணிரத்தினம்  .அது தமிழ் நாட்டில் எதுவித பிரச்சனையுமில்லாமல் ஓடியது .கடைசி PRIMARY COLORS என்ற ஆங்கில படத்தையாவது பாருங்கோ .ஒரு அமெரிக்க ஜனாதிபதியின் படுக்கை மட்டும் போகின்றார்கள் .

கதை என்ற தலையங்கத்தில் ஒன்றை எழுதியதற்கு ஏன் பலர் குத்தி முறிகின்றார்கள் என்று விளங்கவில்லை .எல்லாம் அரசியல் செய்யும் வேலை .

கட்டபொம்மன்,சங்கிலியன் வந்தியதேவன் என்று பெயரை வைத்து அதே காலத்தில் தான் இன்னும் பலர் இங்கு கிடந்தது வேகுகின்றார்கள்.உலகம் எங்கோ போய்விட்டது .

அதைவிட சிலர் புலம் பெயர்ந்தும் வடலிக்க தான் போக நிற்கின்றார்கள் .அவர்கள் திருந்த இடமே இல்லை .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.