Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயக்குனர் மணிவண்ணன் மாரடைப்பால் திடீர் மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இன உணர்வாளனை இழந்துவிட்டோம்......நம்பவே முடியவில்லை.....என்றும் எம் மனதில் இருப்பார்.....அவர் ஆசை நிறைவுபெற தேசியக்கொடி போர்த்தப்பட வேண்டும்......

Edited by alvayan

  • Replies 118
  • Views 12.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மணிவண்ணன் ஐயாவின் உடல் நாளை 3 மணிக்கு எடுக்கப்படும் என சீமான் அண்ணா அறிவித்துள்ளார்.

 

http://www.youtube.com/watch?v=AJexayIbYIY&feature=youtu.be

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

1013693_590755670964046_403319271_n.jpg

 

 

அந்த மனிதன்,
மணிவண்ணன்,

ராஜ்ய சபாவில் 'சீட்' கேட்டாரா ?..
கட்சியில் தலைமைப் பதவி கேட்டாரா ?...
'பத்மஸ்ரீ' விருதுக்கு அலைந்தாரா ?..
... தனக்கு பொன்னாடை போர்க்கச் சொன்னாரா ?..
இல்லை..காலமாகியதும்
கலாநிதிப் பட்டம் வேண்டுமென்றாரா ? ...

அவர் கேட்டது..
தன உயிரற்ற உடலுக்கு
புலிக் கொடியைப் போர்த்திவிடுங்கள் என்று.

மரணித்த பின்னரும்
எது தனக்கு மகிழ்வினைத் தரும்
என்று உணர்பவனே உண்மையான போராளி.
 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள்.. :( :(

 

நல்ல தமிழுணர்வாளரும், தமிழீழ ஆதரவாளர்  மதிப்பிற்குரிய மணிவண்ணன் அவர்களை  இழந்துவிட்டோம்  என்மனம் நம்பமறுக்கிறது.

 

அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களும், அஞ்சலிகளும்.

 

 

  • தொடங்கியவர்

இளையராஜா, விஜய், பாலா என பல திரையுலகினர் மணிவண்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

 

mg_6651.jpg

 

mg_6656.jpg

 

mg_6658.jpg

 

mg_6672.jpg

 

mg_6676.jpg

 

mg_6679.jpg

 

mg_6681.jpg

 

mg_6687.jpg

 

mg_6689.jpg

 

mg_6695.jpg

 

mg_6723.jpg

 

mg_6756.jpg

 

mg_6760.jpg

 

mg_6778.jpg

 

http://www.tamizl.com/?p=19438

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா, விஜய், பாலா என பல திரையுலகினர் மணிவண்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

mg_6689.jpg

 

 

 

 

 

 

 

 

 

mg_6778.jpg

 

http://www.tamizl.com/?p=19438

வீட்டில் தேசியத்தலைவரின் படம்.

சொல்வதோடு மட்டுமல்ல புலியாகவே வாழ்ந்தவன் வீழ்ந்து கிடக்கின்றான்..... :(  :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • தொடங்கியவர்

ஐயா மணிவண்ணனுக்கு எங்கள் தேசத்தின் அஞ்சலி! - தமிழீழ மக்கள் பேரவை-பிரான்சு
ஜூன் 15, 2013

மரணங்கள் வலி மிக்கவை. வேதனைகள் நிறைந்தவை. குடும்பத்தில் பலத்த இழப்புக்களை உருவாக்குபவை. ஆனாலும் சிலரது மரணம் அவரது உறவுகளையும், நட்பு வட்டத்தையும் தாண்டிப் பல அதிர்வுகளை உருவாக்கி விடுகின்றன.

அமரர் மணிவண்ணன் அவர்களது மரணம் அவரது எல்லாத் தளங்களையும் தாண்டி, உலகத் தமிழர்கள் அனைவரையும் சோகம் கொள்ளச் செய்துள்ளது. அவரது வாழ்தலின் அர்த்தம் தமிழுக்கானது. தமிழர்களுக்கானது என்பதனால், அவர் தனது உடலையும் தான் நேசித்த தமிழ்த் தலைவனிடம் ஒப்படைக்கச் சொல்லியிருக்கின்றார்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனுக்கான ஆசைகளே விஞ்சியிருக்கும். இறுதியாக என்ன ஆசை என்று கேட்டாலும், தனக்குப் பின்னரான தன் உறவுகளுக்காகவே அவனுக்குக் கேட்கத் தோன்றும். ஐயா மணிவண்ணன் அவர்கள் தனக்கான ஆசையாகத் தமிழினத்தின் விடுதலையையே யாசித்துள்ளார். தமிழீழத் தேசியக் கொடியினைத் தன்மீது போர்த்தச் சொல்லிச் சென்றுள்ளார்.

ஈழத் தமிழர்கள் தங்கள் தேசியக் கொடியினை மனப் பிரமிப்பின் உயரத்தில் எப்போதும் பறக்கவிட்டுள்ளார்கள். உலகத் தமிழினத்தின் அடையாளமாகவே புலிக்கொடி புனிதம் அடைந்துள்ளது. அதனால், ஐயா மணிவண்ணன் அவர்கள் தான் போகும் தருணத்திலும் புலிக்கொடியுடனேயே புறப்பட்டுச் சென்றுள்ளார்.

ஐயா மணிவண்ணன் அவர்களது தமிழ்ப் பற்றும், தமிழ்த் தேசிய உணர்வும் பிரமிக்கத்தக்கது. அவர் தமிழீழ விடுதலைக்கான பல கனவுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தார். அதை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தியும் வந்துள்ளார். விடுதலைப் புலிகள் முள்ளிவாய்க்கால் களத்தில் வீழ்ச்சியுற்றபோது அவர் நொருங்கியே போனார்.

முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் பலரும் முகம் மாறி, திசைக் குருவிகளாகப் பறந்த போதும் ஐயா மணிகண்ணன் அவர்கள் தமிழ்த் தேசியத்தின் தலை மகனின் பாதையில் தொடர்ந்து பயணித்தவர். ஒரு சமூகப் போராளியாக உருவானவர், ஒரு விடுதலைப் போராளியாகத் தன் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்.

அவரது மறைவு உலகத் தமிழர்களை உலுக்கியது போலவே எம்மையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், தமிழீழ வரலாற்றில் ஆழமான பதிவினை உருவாக்கியுள்ள அந்த மாமனிதனின் கனவினை நோக்கிய எமது பயணத்தை அவரது நினைவுகளுடன் தொடர்வதே அவருக்கான எமது அஞ்சலியாக அமையும்.

அவரது குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த கவலையினைத் தெரிவிப்பதுடன், அவரது வாழ்தலைத் தலை சாய்த்து வணங்குகின்றோம்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

:தமிழீழ மக்கள் பேரவை-பிரான்சு

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்
கண்ணீர் அஞ்சலி அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல மனிதன் !  கண்ணீர் அஞ்சலிகள் !!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=U3mm3GaOFRo

Edited by குமாரசாமி

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் மணிவண்ணன் அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்.

மணிவண்ணனுக்கு மனமார்ந்த அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப முடியவில்லை. அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி மூச்சு வரை தமிழ்த் தேசியப்

போராளியாகவே வாழ்ந்தவர் மணிவண்ணன்!

திருமாவளவன் இரங்கல்!

manivannanthirumavalavan00001.jpgதிரைப்பட இயக்குநர் மணிவண்ணன் மறைவையொட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இயக்குநர் மணிவண்ணன் அவர்கள் திடீர் மாரடைப்புக்கு ஆளாகி காலமாகிவிட்டார் எனும் செய்தி தாங்கிக்கொள்ள இயலாத அளவில் வேதனை அளிக்கிறது.  இடதுசாரிக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களுக்காகச் சிந்திப்பதும் செயல்படுவதுமாக இருந்த மணிவண்ணன் திரைப்படத் துறையில் அதே கருத்துக்களைப் பரப்பினார். 

வசனகர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் திரைப்படத் துறையில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று மகத்தான பங்களிப்பைச் செய்தார். பொதுமக்களின் பேராதரவையும் நன்மதிப்பையும் பெற்றார். அதேவேளையில் தமிழ் மொழி, தமிழின நலன்களுக்காக தயக்கமின்றி அச்சமின்றி குரல்கொடுக்கும் வல்லவராகவும் விளங்கினார். குறிப்பாக தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த் தேசிய அரசியலுக்காகவும் தீவிரமாகக் களமிறங்கிப் பணியாற்றினார்.

விடுதலைப் புலிகளை ஆதரிப்பதிலும், தமிழீழத்தை ஆதரிப்பதிலும் முன்னணியிலிருந்தார்.  தம்முடைய இறுதி மூச்சு வரையில் ஒரு தமிழ்த் தேசியப் போராளியாகவே வாழ்ந்தார். உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்கும் நன்மதிப்புக்கும் உரியவராக விளங்கினார். 

அவருடைய இழப்பு திரைப்படத் துறைக்கு மட்டுமின்றி தமிழ்த் தேசிய அரசியலுக்கும் மாபெரும் இழப்பாகும்.  அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் திரைப்படத் துறையினருக்கும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு அவருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

 

-நக்கீரன்-

மணிவண்ணன் மறைவு:

வடிவுக்கரசி, சரண்யா, பொன்வண்ணன் அஞ்சலி

manivannanvadivukarasi7777.jpg

 

படங்கள்: அசோக்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xevPVKGeh9U

  • தொடங்கியவர்

இன மான இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் இரங்கல் நிகழ்ச்சி.

தமிழ் மக்களின் விடிவிற்காக, தமிழ் தேசமொன்றின் மீள்வருகைக்குமாக உழைத்த ஒரு உன்னத மனிதரை தமிழினம் 15.06.2013 அன்று இழந்துவிட்டது. இவரின் இரங்கல் நிகழ்வு கனடாவில் நடைபெறும் விபரம் பின்வருமாறு.

இடம்: கனடா கந்தசாமி கோவில் - 733 Birchmount Rd, Scarborough, Ontario
காலம்: ஜுன் 16, ஞாயிறு மாலை 5 மணி.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்று வெளிப்படையாகவும் உறுதியாகவும் கூறுபவர். சுயநல வாழ்வு எனும் குறுகிய வட்டத்திற்குள் தனது நீண்ட வாழ்வை சிறைப்படுத்திக் கொள்ளாமல் உயர்ந்த வாழ்வு வாழ்ந்தார். தனது இனப்பற்றாலும் தேசப்பற்றாலும் தமிழ்ச் சமூக மேன்மைக்காக இறுதிவரை சேவையாற்றினார். ஈழத் தமிழ் மக்கள் விடுதலை அடையவேண்டுமென்ற உயரிய எண்ணத்திற்கு தனது அறிவாற்றல், செயலாற்றல் அனைத்தையுமே ஒருங்கிணைத்து தேசப் பணிபுரிந்தார்.

ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட தமிழ் இனத்தின் விடியலிற்காக தனது தேசப்பணியை உறுதியோடு முன்னெடுத்தார். கொடிய நோயினால் இவரது உடல் தளர்ந்து போயிருந்தாலும் உள்ளத்தில் சுதந்திர உணர்வு நிரம்ப இளமை மிடுக்குடன் மிளிர்ந்த இவர் இறுதிவரை தமிழ் மண்ணிலும், மக்களிலும் பற்று மிகுதியுடன் வாழ்ந்தார்.

ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் சிறீலங்கா இனவெறி அரசு பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்களை கண்மூடி தனமாக கொன்று குவித்தது .இவ் விவாகரத்தில் சிறீலங்கா அரசு நடந்து கொள்ளும் விதத்தை கண்டித்து தமிழ் நாட்டில் தனது மூச்சு இருக்கும்வரை ஓங்கி குரல் கொடுத்தார் .தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் அர்ப்பணிப்பு என்றும் அழியாச் சுடர்விளக்காய் எரிந்து நிற்கும்.

''நான் மட்டும் ஈழத்தில் பிறந்திருந்தால் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராளியாகி வீர மரணம் அடைந்திருப்பேன், என் சடலத்தின் மீது விடுதலைப்புலிகள் கொடி போர்த்த வேண்டும். இதுதான் என் கடைசி ஆசை. வேறொன்றுமில்லை'' என்று அன்று இனமான இயக்குனர் கூறிய வார்த்தைகள் அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் வைத்திருந்த உணர்வுகளை கோடிட்டு காட்டுகின்றது.

தமிழருக்கு நிரந்தர தமிழீழ தாயகம் விரைவிலே மலரும் என்ற உறுதியோடு தேசத்தின் விடுதலை மீதும், எமது இனத்தின் பற்றோடும் உறுதியோடும் இறுதி மூச்சு வரை செயற்பட்டு வந்த இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கலை இத்துடன் தெரிவிக்கின்றோம்.

இனமான இயக்குனர் மணிவண்ணன் அவர்களின் இழப்பால் துயருறும் குடும்பத்தார், நண்பர்கள் அனைவரின் துயரிலும் நாம் பங்கு கொள்கிறோம்.

மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416.830.7703
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
முகநூல்: facebook.com/canadianncct

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hDLza0Wf4JU

  • கருத்துக்கள உறவுகள்

திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் மறைவு:

நடிகர் பாக்யராஜ் அஞ்சலி

manivannanbakiyaraj00001.jpg

 

படங்கள்: அசோக்

மணிவண்ணன் மறைவு:

பா.ம.க.வினர் அஞ்சலி

manivannanpmk666.jpg

படங்கள்: அசோக்

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த இன உணர்வாளர் இயக்குநர் திரு.மணிவண்ணன் அவர்கள் காலமான செய்தி உலகத்தமிழர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் எம்மினம் எதிர்கொண்டுவரும் இனஅழிப்புக்கு எதிராகவும் திரு. மணிவண்ணன் அவர்களது குரல் ஓயாது ஒலித்து வந்துள்ளது. இவர் வெறும் பேச்சாளராக மட்டும் தன்னை மட்டுப்படுத்தாமல் பல்வேறு தளங்களில் ஈழ விடுதலைக்காகவும் சமூக விடுதலைக்காகவும் உண்மையான இன உணர்வோடு உழைத்த களச்செயற்பாட்டாளர். ஈழப் போராட்டத்தோடு திரு.மணிவண்ணன் அவர்களின் தொடர்பும் பங்களிப்பும் அளப்பெரியது. எமது தாயகத்துக்கு நேரடியாக வருகை தந்து எமது போராட்டத்தோடும் எமது மக்களோடும் தன்னை ஒன்றித்துக் கொண்டவர். எமது போராட்டம் தொடர்பில் ஆழமான பார்வையைக் கொண்டிருந்த திரு.மணிவண்ணன் அவர்கள் தமிழகத்தில் ஈழப்போராட்டச் செயற்பாடுகள் பலவற்றுக்கு அடிகோலியவர்.

"தேசிய விடுதலைப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மன உறுதி படைத்த மாமனிதர்கள் என்றுதான் அழைக்கவேண்டும்" என்ற தேசியத் தலைவரின் கூற்றுப்படி மணிவண்ணன் ஐயாவும் மனவுறுதி படைத்த ஒரு செயற்பாட்டாளராகவே திகழ்ந்தார். மணிவண்ணன் ஐயா அவர்களின் இழப்பு, இச்சந்தர்ப்பத்தில் ஈழப்போராட்டத்தைப் பொறுத்தவரை பேரழிப்பாகும். ஈழ விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்து உழைத்த ஆயிரமாயிரம் செயற்பாட்டாளர்கள் வரிசையில் மணிவண்ணன் ஐயாவும் இணைந்து கொண்டுள்ளார். அவரின் கனவான ஈழவிடுதலையை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து உழைப்பதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதையாக அமையும்.

"விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்படுவது மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும்" என்று கலைஞர்கள் தொடர்பில் தேசியத்தலைவர் குறிப்பிட்டதைப் போன்று தனது இன மக்களுக்கான போராட்டத்தோடு ஒன்றித்து வாழ்ந்த மணிவண்ணன் ஐயாவின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இராமு.சுபன்,

இணைப்பாளர்,

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

(facebook)

  • தொடங்கியவர்

16 June 2013

 

Letter of condolence

 

The Tamil Youth Organisation UK wishes to convey our deep shock and sadness at the news of the demise of Mr Manivannan on 15 June 2013.

 

We are saddened by the loss of Mr Manivannan who was fondly known by many Tamil youth in the Diaspora as a great actor and director. At a time like this we must not forget to celebrate his achievements, he played a key role in Indian politics and within the south-Indian film industry for the Tamil Eelam struggle.

 

His last wish in April this year echoes in our ears as we mark his demise today. As we pay our respects we reiterate the lines, “If I am to die, drape my body with the Tiger flag and organise a funeral without other rituals”. We the Tamil youth of the UK are inspired by the efforts he took in actively participating in campaigns for the Tamil Eelam struggle and for being a leading Tamil nationalist activist in Tamil Nadu. His contributions will forever be remembered by the Eelam Tamil nation.

 

We in the Tamil Youth Organisation United Kingdom wish to express our heartfelt condolences to the family and friends of Mr Manivannan. We would like to emphasise that an inspiring icon like Mr Manivannan will never leave the hearts of the Eelam Tamils. Like the Eelam Tamil nation, Mr Manivannan too wished to see a free, sovereign state of Tamil Eelam and so it is with this freedom thought we would like to pay our last respects to him.

 

May Mr Manivannan rest in peace.

 

Tamil Youth Organisation

United Kingdom

 

(facebook)

  • தொடங்கியவர்

தமிழீழ ஆதரவாளர், ஆர்வலர் மற்றும் நடிகர் / இயக்குனர் மணிவண்ணன் அவர்களுக்கான வணக்க நிகழ்வு லண்டனில் இன்று (16.06.2013) மாலை 4 மணிக்கு நடைபெறும்.

 

இடம்: Challenge House, 616 Mitcham Road Croydon, CRO 3AA

மேலதிக தகவல்களுக்கு : 02033719313.

TCC, TYO

(facebook)

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.