Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதையில் தரையிறங்கிய மஹிந்த

Featured Replies

தமிழீழத்தில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்டு, சிறிலங்கா விமானப்படையினரால் புனரமைக்கப்பட்ட இரணைமடு விமான ஓடுதளத்தை சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்துள்ளார்.

இரணைமடுவில் விடுதலைப் புலிகள் சுமார் 600 மீற்றர் நீளம் கொண்ட விமான ஓடுபாதையை அமைத்திருந்தனர்.

இந்த ஓடுபாதை வான்புலிகளின் விமானங்களின் பறப்புக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

2009 ஜனவரி 14ம் நாள் இந்த ஓடுபாதையை சிறிலங்கா இராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர்.

அதையடுத்து, அங்கு சிறிலங்கா விமானப்படையின் அணியொன்று நிறுத்தப்பட்டு அதனை விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் அங்கு நிரந்தரமாக விமானப்படைத் தளம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது 1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலமும் கொண்டதான ஓடுபாதை சிறிலங்கா விமானப்படையினரால் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஓடுபாதையில் சிறிலங்கா விமானப்படையினரிடம் உள்ள மிகப்பெரிய போக்குவரத்து விமானமான சி-130 விமானத்தையும் தரையிறக்க முடியும்.

விடுதலைப் புலிகளால் தமது தொழில்நுட்ப அறிவின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது விமான ஓடுபாதை இதுவாகும்.

http://www.paristamil.com/tamilnews/view-news-Mjc2MDA0NTcy.htm#.Uby9e9j9VEc

  • Replies 52
  • Views 3.8k
  • Created
  • Last Reply

இரணைமடு விமான ஓடுதளத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

4.jpg
கிளிநொச்சி, இரணைமடுவில் இலங்கை விமானப்படையினரால் புனரமைக்கப்பட் புலிகளின் விமான ஓடுதளத்தை இன்று (15.06.2013)சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்படது.

1500 மீற்றர் நீளமும் 25 மீற்றர் அகலத்தையும் கொண்டிருக்கும் இந்த ஓடுதளத்தை இலங்கை விமானப்படையின் திட்டம், பொறியியல், நிரமாணம், உபகரங்கள் மற்றும் தொழில்நுட்பம் என்பவற்றை பயன்படுத்தி இலங்கை விமானப்படையிடம் இருக்கின்ற மிக பெரிய விமானமான சீ-130 விமானத்தையும் ஓடுதளத்தில் ஏற்றியிறக்க கூடியவகையில் நிரமாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2.jpg3.jpg5.jpg6.jpg7.jpg

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பலி கொழுத்த சாமானாகத்தானே இருக்க வேணும்.....இனி அடிக்கடி மத்தளவில் இருந்து ..விமானம் போகும்...விமான நிலையமும்...விமானம் இறங்கி பழகத்தானே வேணும்..

Edited by alvayan

ஆகாய படை தளம் வரபோகுதா? அல்லது உள்ளூர் பயணத்துக்கான பொது  விமானநிலையம் வரப்போகுதா?

சிங்களவனுக்கு குளிர் விட்டு போச்சு...ஒரு 4 வருடத்துக்கு முன்... இருண்டவுடன் பயத்தில் பேதி போன பயலுகள்  :) :) ஆடுற ஆட்டம் சகிக்க முடியல்ல

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுகுழுக்களுக்கும் தானாக போனதாம்.அதாவது பேதி இல்லாமல். :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

அப்பே மாத்தையா புலிகளின் ஒடுபாதையில் இறங்கிட்டார் ஆகவே அவருக்கு தொடர்ந்து நாங்கள் வோட்டு போடவேணும் என ஒவ்வொரு சிங்கள்வ்னையும் உசுப்பேத்தும் செயல்......இது.....

அப்பே மாத்தையா புலிகளின் ஒடுபாதையில் இறங்கிட்டார் ஆகவே அவருக்கு தொடர்ந்து நாங்கள் வோட்டு போடவேணும் என ஒவ்வொரு சிங்கள்வ்னையும் உசுப்பேத்தும் செயல்......இது.....

இது சிங்களத் தேவைக்காக மாதிரி மாத்துகருத்துகள் படம் காட்டுகின்றன. சதத்திற்கு வழியில்லாமல் பிச்சை எடுத்துக்கொண்டு  விமானப்படையை வைத்து சர்வதேச தரத்தில் விமானத்தளம் கட்டுவதாக சிலிப்பிக் காட்டுகின்றன மாத்துக்கள். உள்ளூரில்  ரோட்டு போடக்கூட சீனவுக்கு மட்டும்தான் தெரிகிறது. விமானப் படைத்தளம் கட்ட சிங்களத்திற்குத்தான் தெரிகிறது.

இது கட்டப்படுவது சீனத் தேவைக்கு. பூநகரி விமானத்தளமும் வந்த பின்னர் மிகுதியை மாத்துக்கருத்துகள் எழுதலாம். அது வரைக்கும் கொஞ்சம் பொறுமை காட்டினால் அடக்கமாக இருக்கும்.

அகதிகளுக்கு வீடு கட்ட என்ற பெயரில் இந்தியாவும் இவற்றைக் கண்காணிக்க  முயல்கிறது. ஆனால் உணவகத்தில் மேசை துடைத்தவர்களின் பழிவாங்கள் அரசியல், உண்மையான தொழில் அரசியல் வாதிகளான சீனர்களுக்கு முன்னால் பஞ்சாக பறக்கிறது. இதற்குள் இந்திய புவிசார் அரசியலும், பாதுகாப்புகொள்கையும்  தியறி எழுதிவாசித்த மாற்றுக்கருத்துகள் இந்தியா பக்கத்திலிருந்து தமது கருத்துக்களை மாற்றி சீனா கட்டும் விமான தளங்கள் மீது விட்டு லெவல் அடிக்கிறார்கள்.

புளிச்ச சப்பத்தியை சாப்பிட்டு பேதி போனால் என்ன, பேட் புளூ பீகிங் டக்கை சாப்பிட்டு பேதி போனால் என்ன சிங்களம் குரல் எடுத்து கத்தியவுடன் பின்னால் நின்று துடைத்துவிடும் தொழிலிருந்து மட்டும் நம்ம மாத்துக்கருத்துக்களுக்கு மாத்தமே வர  மாட்டேங்கிறது. :(

<_<

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

6.jpg

இரணைமடுவில் இறங்கியயவனுக்கு  தமிழர்களின் தவில் நாதஸ்வரமில்லாமல் சிங்கள  ஆலவட்டங்களுடன் மங்கலவாத்திய வரவேற்பு. எனவே அது சிங்களப்பிரதேசம்.

7.jpg

இது திறக்க அது கைதட்டுது....

மகிந்தா இரணைமடுவில் விமானத்தில் இறங்கியதிலிருந்து சிலபேருக்கு நல்லா எரிஞ்சு..எரிஞ்சு போகுது போல இருக்கு .....

மகிந்தா இரணைமடுவில் விமானத்தில் இறங்கியதிலிருந்து சிலபேருக்கு நல்லா எரிஞ்சு..எரிஞ்சு போகுது போல இருக்கு .....

சிலபேருக்கு வயித்தை எரியும். 

சில பேர் கொண்டாடுவினம்.

சில் பேர் வாய் பார்க்க மட்டும்தான் கொடுத்துவைத்திருப்பார்கள்.

scary-drooling-dog.jpg

எஜமானிக்கு வயிறு நோக கட்டிலை ஏறிப்படுந்திருந்து பார்கும் வேலைக்காரிகள்தான் இந்த மாத்துக்கருத்துக்கள்.

Edited by மல்லையூரான்

சிங்கள இனம் வலிமை,புத்திசாலித்தனம்,ராஜதந்திரம் மிக்கதுமான ஆசியாவில் தலைசிறந்த இனம். அதனால் இரணைமடுவில் விமானத்தளத்தையும் தனதாக்க முடியும் தமிழகத்தில் பயிற்ச்சியும் எடுக்க முடியும். ஐ நா உட்பட அனைத்து நாடுகளையும் கையாளவும் முடியும் என்பதை தொடர்ந்து நிருபித்து வருகின்றது. வல்லவன் வாழ்வான்.

திருடர்களும், கொலைகாரர்களும், கடத்தல் பேர்வழிகளும் உலகின் தலை சிறந்த இனம். அதுதான் என்னதான் பாதுகாப்பு, சட்டம், நீதி போன்றவை இருந்தாலும் தொடர்ந்து கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

அல்கொய்தா கூட அமெரிக்காவை விட மிகச்  சிறந்த அமைப்பு அதனால் தான் அமெரிக்கா இராணுவத்தால்  பலவருடங்கள் கடந்தும் அவர்களை  அழிக்க முடியாமல் உள்ளது. :o

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகியிருக்கிறது. 

இலங்கை அரசுக்காக பிரச்சரமாக இறங்கி அது சங்கடங்களை சந்திக்க, அதை முஸ்லீம் தமிழ் பிரிவினையாக நாடகமாடி, அதுவும் பிரச்சனையாக மாறிவிட்டத்தால் " எல்லோரும் கொண்டாடுவோம், நால்லோரர்கள் வாழ்வை எண்ணி" என்று அரசுக்கு வாழ்த்து பாடுவதுடன் நிற்கும் நிலைக்கு வந்து நிற்கிறது இந்த மாத்து கருத்துகள்.  இவைகள் பயணம் செய்த மலைகளான இராமநாதன் மேட்டுக்குடி தத்துவங்கள், காள்மாக்ஸ், லெனின் சோசலிச வேதாந்த பாலைவனங்கள்,  தமிழர் மதம், இந்து மதம் என்ற அருமையான பூங்கவனங்கள் எல்லாம் கை நழுவிப்போக இப்போ மேட்டுக்குடிச் சிங்களம் மட்டும் வாழத்தான் உலகம் படைகப்பட்டதாக புதிய வேதாந்தத்தில் வந்து சங்கமாக இருக்கிறார்கள். இவர்கள் தமிழ்கள்தான் ஆயின் அரசுக்காக பிரச்சாரத்தில் இறங்கி, அந்த மலையளவு வளங்களை வைத்திருந்தும் தங்கள் பிரசங்கங்கள் தோல்வியைத் தழுவியிருப்பதை காணும் இவர்கள், தமிழ் அல்லாத மற்றவர்கள்தான் வாழ்வார்கள் என்று சோர்ந்து போய் தடுமாறி நிற்க ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இதுவும் இன்னொரு தடுமாற்றக் கருத்தேயல்லாமல் அது மாற்றுக்கருத்து அல்ல. தமிழர் மட்டும்தான் சரிதிரத்தில் 10,000 ஆண்டுகள் ஆண்டு தமிழர் மதத்தையும் ஸ்தாபித்து இந்து மதம் தோன்றக்கரணமானவர்கள். அவர்கள் திரும்ப ஆளத்தொடங்க போகிறார்கள் என்பதை கண்டு சிங்களம் படும் தடுமாற்றம்தான் இந்த வாழ்த்துக்கூறல்.

எஜமானின் இலைப் பார்த்து வீழ்நீர் வடிக்கலாம். ஆனால் ஏதாவது எஜமான் போட்டால்த்தால் வயிற்றுப்பாடு போகும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனம் வலிமை,புத்திசாலித்தனம்,ராஜதந்திரம் மிக்கதுமான ஆசியாவில் தலைசிறந்த இனம். அதனால் இரணைமடுவில் விமானத்தளத்தையும் தனதாக்க முடியும் தமிழகத்தில் பயிற்ச்சியும் எடுக்க முடியும். ஐ நா உட்பட அனைத்து நாடுகளையும் கையாளவும் முடியும் என்பதை தொடர்ந்து நிருபித்து வருகின்றது. வல்லவன் வாழ்வான்.

மிகவும் யதார்த்த பூர்வமான கருத்து ...... தமிழர் இனம் பெருமை பேசி பேசியே அழிந்த இனம்...... இதுக்குள்ள மோட்டு சிங்களவன் என்று தினா வெட்டு கதையள் வேற....

சிங்கள இனம் வலிமை,புத்திசாலித்தனம்,ராஜதந்திரம் மிக்கதுமான ஆசியாவில் தலைசிறந்த இனம். அதனால் இரணைமடுவில் விமானத்தளத்தையும் தனதாக்க முடியும் தமிழகத்தில் பயிற்ச்சியும் எடுக்க முடியும். ஐ நா உட்பட அனைத்து நாடுகளையும் கையாளவும் முடியும் என்பதை தொடர்ந்து நிருபித்து வருகின்றது. வல்லவன் வாழ்வான்.

முட்டுகொடுகும்   ஹிந்திய  ஆதரவாளர்கள்  வலிமையுடன் இருக்கும்வரை , ஆனால்  அது  நிரந்தரம்  கிடையாது .

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகியிருக்கிறது. 

இலங்கை அரசுக்காக பிரச்சரமாக இறங்கி அது சங்கடங்களை சந்திக்க, அதை முஸ்லீம் தமிழ் பிரிவினையாக நாடகமாடி, அதுவும் பிரச்சனையாக மாறிவிட்டத்தால் " எல்லோரும் கொண்டாடுவோம், நால்லோரர்கள் வாழ்வை எண்ணி" என்று அரசுக்கு வாழ்த்து பாடுவதுடன் நிற்கும் நிலைக்கு வந்து நிற்கிறது இந்த மாத்து கருத்துகள்.  இவைகள் பயணம் செய்த மலைகளான இராமநாதன் மேட்டுக்குடி தத்துவங்கள், காள்மாக்ஸ், லெனின் சோசலிச வேதாந்த பாலைவனங்கள்,  தமிழர் மதம், இந்து மதம் என்ற அருமையான பூங்கவனங்கள் எல்லாம் கை நழுவிப்போக இப்போ மேட்டுக்குடிச் சிங்களம் மட்டும் வாழத்தான் உலகம் படைகப்பட்டதாக புதிய வேதாந்தத்தில் வந்து சங்கமாக இருக்கிறார்கள். இவர்கள் தமிழ்கள்தான் ஆயின் அரசுக்காக பிரச்சாரத்தில் இறங்கி, அந்த மலையளவு வளங்களை வைத்திருந்தும் தங்கள் பிரசங்கங்கள் தோல்வியைத் தழுவியிருப்பதை காணும் இவர்கள், தமிழ் அல்லாத மற்றவர்கள்தான் வாழ்வார்கள் என்று சோர்ந்து போய் தடுமாறி நிற்க ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் இதுவும் இன்னொரு தடுமாற்றக் கருத்தேயல்லாமல் அது மாற்றுக்கருத்து அல்ல. தமிழர் மட்டும்தான் சரிதிரத்தில் 10,000 ஆண்டுகள் ஆண்டு தமிழர் மதத்தையும் ஸ்தாபித்து இந்து மதம் தோன்றக்கரணமானவர்கள். அவர்கள் திரும்ப ஆளத்தொடங்க போகிறார்கள் என்பதை கண்டு சிங்களம் படும் தடுமாற்றம்தான் இந்த வாழ்த்துக்கூறல்.

எஜமானின் இலைப் பார்த்து வீழ்நீர் வடிக்கலாம். ஆனால் ஏதாவது எஜமான் போட்டால்த்தால் வயிற்றுப்பாடு போகும்.

10,000 ஆண்டுகள் என்பதற்கு என்னுமொரு சைபரையும் கூட்டி லெமோரியா கண்டத்து தண்ணியை வேறுபக்கம் இறைத்து கடலுக்கு கீழ உள்ள தமிழர் கோட்டையை வெளியே கொண்டுவருவதில் தமிழர் காட்டும் அக்கறை ஒன்றுதான் இப்போதைக்கு தமிழ்த்தேசீய எழுச்சிக்கு நம்பிக்கையாக உள்ளது.

சமணமும் பெளத்தமும் வளர்த்த தமிழை சைவம் தனதாக்கிகொண்டு பின்னர் அதையே நீச பாசை என்ற பார்ப்பனர்களின் கூற்றை ஏற்று இந்துத்தவத்தின் காலடியில் அடிமையாய் கிடக்கின்றது. சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள் என்று வரலாறு இதுதான்.வாழ்க்கை முழுக்க வாயால் வடைசுடுவது வரலாறு ஆகாது. கழிசடை சாதியத்தை நிறுவனமயமாக்கிய இந்துமதத்துக்கு பூங்காவனம் என்ற அடைமொழி வேறு !

எனது கூற்று சிங்களவர்களுக்கான வாழ்த்து அல்ல மாறாக வெளிப்படையான உண்மை. கருணாவும் டக்ளசும் ஏனைய இயக்கங்களும் சிங்களவருக்கு எதிராக அடிப்படையில் ஆயுதம் தூக்கியவர்கள்தான். அடிப்படையில் சிங்களத்தின் எதிரிகள். ஆனாலும் சிங்களம் அவர்களை அரவணைத்து தனது திட்டத்துக்கு பாவித்துக்கொண்டது. இதே தமிழர்கள் என்ன செய்தார்கள்? ஒட்டுக்குழு மட்டைக்குழு துரோகி விரோதி என்று போடு போடு என்று மாற்றி மாற்றி போட்டுத்தள்ளி இனத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி உலகின் முழுமுதல் பொறுமையற்ற நிதானமற்ற முட்டாள் கூட்டமாக இருக்கின்றது. இப்படித்தான் இஸ்லாமியத்தமிழருக்கும் ஏனையவருக்குமான பிரச்சனைகளும். எப்ப பாத்தாலும் துரோகி ஒட்டுக்குழு சோனி தொப்பி பிரட்டி என்று கடசில என்னத்தை கண்டீர்கள். சிங்களவர்கள் ஒடுக்குமுறையாளர்கள் தமிழரை கொன்று குவித்தவர்கள் என்பது உண்மை அதற்காக தமிழர் ஒன்றும் யோக்கியர் கிடையாது. அவன் தனது நாட்டை விஸ்தரிக்க தனது இனத்தை பலம்மிக்கதாக்க தமிழரை பலத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் அடித்தான் அடிக்கின்றான் அடித்துக்கொண்டே இருப்பான். தமிழர் தன்னை தக்கவைக்கும் நோக்கில் தன்னை பாதுகாக்கும் நோக்கில் கூட ஒன்றுபட்டு இருந்ததில்லை. இதில் யார் முட்டாள் யார் புத்திசாலி என்று உலகிற்கே நன்கு தெரியும். 10.000 ஆண்டுகள் பழமையும் வரலாறும் புனிதமும் என்னும் பல பூராயங்களும் உள்ளவர்கள் ஏன் என்னும் மட்டையாய் அடிமையாய் கிடக்கின்றார்கள்? உங்கள் கற்பனை உலகிற்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதன்.. எதையாவது குடுத்தால்தான் யாராவது வருவார்கள்.. சிங்களவனிடம் அங்கீகரிக்கப்பட்ட அரச பரிபாலனம் உள்ளது.. நிலத்தை, வளத்தை, வியாபார வாய்ப்புக்களை விற்று தன் அரசியலைச் செய்கிறான்.. சில்லறைகளுக்கு மது, மாது மற்றும் இரத்தினக்கற்கள் போதுமானவையாக உள்ளன.. :D

இவற்றுள் தமிழரிடம் என்ன உள்ளதென்று நினைத்து நீங்கள் தமிழரின் அரசியலை சிங்களவனுடையதுடன் ஒப்பிடுகிறீர்கள்?

தமிழனிடம் எந்த நிலை வந்தபோதும் மிருகமாக நடந்து கொள்ளாத  குணம் ஒன்றுண்டு

இப்படித்தான் வாழணும் என்ற வரையறைக்குள்  எப்பொழுதும் தமிழினம் இருந்துள்ளது

இதற்கு கடைசி  உதாரணம் தலைவர் பிரபாகரன்......

சண்டமாருதன்.. எதையாவது குடுத்தால்தான் யாராவது வருவார்கள்.. சிங்களவனிடம் அங்கீகரிக்கப்பட்ட அரச பரிபாலனம் உள்ளது.. நிலத்தை, வளத்தை, வியாபார வாய்ப்புக்களை விற்று தன் அரசியலைச் செய்கிறான்.. சில்லறைகளுக்கு மது, மாது மற்றும் இரத்தினக்கற்கள் போதுமானவையாக உள்ளன.. :D

இவற்றுள் தமிழரிடம் என்ன உள்ளதென்று நினைத்து நீங்கள் தமிழரின் அரசியலை சிங்களவனுடையதுடன் ஒப்பிடுகிறீர்கள்?

இயலாதவர்களின் வேத வாக்கியம் .எதோ மது மாது கொடுத்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்பது போல .

எமது போராட்டம் பயங்கரவாத போராட்டமாக மாறியது மட்டுமே தோற்றதற்கு ஒரே காரணம்.அதை விளங்கிக்கொள்ளும் நிலையில் தலைமையோ  அல்லது  வாலுகளோ இருக்கவில்லை .அதற்கான அறிவும் பக்குவம் எள்ளளவும் இருக்கவில்லை .

செத்தவனுக்கு புலி கொடி போர்த்த தான் இவர்கள் லாயக்கு .இவர்களிடம் போய் சர்வதேச அரசியல் கதைத்தால் ?

10,000 ஆண்டுகள் என்பதற்கு என்னுமொரு சைபரையும் கூட்டி லெமோரியா கண்டத்து தண்ணியை வேறுபக்கம் இறைத்து கடலுக்கு கீழ உள்ள தமிழர் கோட்டையை வெளியே கொண்டுவருவதில் தமிழர் காட்டும் அக்கறை ஒன்றுதான் இப்போதைக்கு தமிழ்த்தேசீய எழுச்சிக்கு நம்பிக்கையாக உள்ளது.

- இன்றைய யாழின் செய்தி மூன்று நாட்களுக்கு  முன்னர் ஆங்கில பத்திரிகைகளில் வெளியான  ஜெயவர்மனின் நகரங்களில் ஒன்றை , மேற்குநாட்டு ஆய்வாளர்கள்  கண்டுபிடித்திருப்பதுதான்.  சிங்களமே தமிழில் ஒரு பகுதி என்பது ஞானப்பிரகாசர் முதன் முதல் மொழி ஒப்புவமையியல் என்ற துறையை உலகுக்கு காட்டிவைத்த போது கண்ட உண்மை. இதில் பாண்டி நாட்டில் இருந்த வந்த தமிழர் தாம் சோழநாட்டிலிருந்து வந்த தமிழரை, கேரளநாடிலிருந்து வந்த தமிழரை விட திறம் என்ற மயக்கநிலையில் புத்த துறவிகளால் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த துறவிகள் தமிழ் நாட்டிலிருந்து துரத்தப்பட்டவர்கள். இதில் பேசும் வேக்கக்கேடான வீரபிரதாபத்தைப்பற்றி என்னசொலவது. எது இருந்தும் அதில் வலிந்த நக்கல் தவிர சிந்தனையோ அறிவோ எள்ளவும் தொனிக்கவில்லை.

சமணமும் பெளத்தமும் வளர்த்த தமிழை சைவம் தனதாக்கிகொண்டு பின்னர் அதையே நீச பாசை என்ற பார்ப்பனர்களின் கூற்றை ஏற்று இந்துத்தவத்தின் காலடியில் அடிமையாய் கிடக்கின்றது. சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள் என்று வரலாறு இதுதான்.வாழ்க்கை முழுக்க வாயால் வடைசுடுவது வரலாறு ஆகாது. கழிசடை சாதியத்தை நிறுவனமயமாக்கிய இந்துமதத்துக்கு பூங்காவனம் என்ற அடைமொழி வேறு !

-இந்த மாற்று கருத்துத் ததுவங்கள் மலைகளைக் கடந்து, பாலை வனங்களைக், கடந்து பூங்காவனங்களை கடந்து இன்று புதிதாக ஆறுகள் நதிகள் கடக்க முயற்சிக்கின்றன. அதுதான் "சமணமும், இலங்கையின் இனவெறி, கொலை வெறி புத்தமும் வளர்த்த தமிழ்" என்ற புதிய கண்டுபிடிப்பு.

தலைக்குள் இருக்கும் இந்த தத்துவ குழப்பம் காரணமாக, தமிழில் குறையை காண்பதாக நினைத்துத் தடுமாறி இந்து மதத்தில் குறையைக்கண்டு பின்னர்  திரும்ப தடுமாறி அதை தமிழின் குறையாக குழம்பி, தமிழ் என்றால் என்ன இந்து மதம் என்றால் என்ன என்ற அறிவே இல்லாத குழப்பத்தில் தவிக்கிறார்கள். முடிவில் தமிழர் இந்துக்களா, இந்துக்கள்தான் தமிழரா தெரியாத  தடுமாற்றத்தில் போய் விழுகிறார்கள். இவ்வளவு தடுமாற்றங்களுக்கு பின்னர் தான் இந்துகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுவிட்டதாக  கூப்பாடு போடுகிறார்கள்.

.தமிழர் என்பார் புத்தம், சமணம், ஆரிய மதம், தமிழ் மதம், இந்து மதம், முஸ்லீம் மதம், கிறிஸ்தவ மதம் எல்லாவற்றையும் பின்பற்றியவர்கள்.  இலங்கைக்கு பௌத்தம் வந்தது தமிழ் நாட்டிலிருந்து மட்டுமே. அது முதலாம், இரண்டாம் நூற்றண்டுகளில் அங்கு பௌத்தம் பரவ ஆரம்பித்து சமணத்திடம் தோல்வி கண்ட பின்னர்தான். 6 ம் நூற்றாண்டு Bestiality story க்கும் உண்மையாக பௌத்தம் இலங்கைக்கு வந்த சரித்திரத்திற்கும் ஒரு தொடர்பும் இல்லை.   இலங்கையில் வடக்கு, கிழக்கு, தெற்கு எங்கும் பௌத்ததை வளத்தவர்கள் தமிழர் மட்டுமே.  பல தமிழ் கல்வெட்டுக்கள் இதை நிரூபிக்கின்றன. எங்கும் கிடைக்கும் இந்த புராதன அடையாங்களை சிங்கள அரசு வேண்டுமென்றே அழித்து வருகிறது என்பதுதான் உண்மை.  எனவே சிலர் தடுமாறி சிங்களத்தின் பெருமையாக நினைக்கும் இனவேறி, கொலைவெறி பௌத்தமும் தமிழர்களினதே.

சமணமும், பௌத்தமும் தமிழை வளர்த்தது ஒன்றும் பிரமாதம் இல்லை.  அதில் ஆழமான உண்மையும் ஒன்றும் இல்லை.  தமிழுடன் ஆரிய பாசை சேர்ந்த போது வடமொழி உண்டானது. இது பிற்காலம் மிக வலிமையான மொழியாக மாறியது.  எப்பவும் இரண்டு கலாச்சரங்கள் சேரும் போது ஒரு புதியது ஆரம்பமாகிறது. இது நன்மையா தீமையா என்பதை ஆராய்வது ஆராசியாளர்கள் பொறுப்பு. ஆனால்  நடந்ததை தெரியாமல் கொக்கரிப்பது அறியாமை.

தமிழ் எவ்வளவுகாலமாக செழிப்பான மொழியாக இருந்தது எனபது சிந்து வெளி ஆராச்சியின் பின்னர்தான் நிர்ணயிக்கப்படும். சீனம், யப்பான், மேற்கு நாடுகள் எல்லா மொழிகளிலும் அம்மா, அப்பவும், ஒன்று இரண்டும் காணப்படுகிறது. இதை இலங்கையின் புத்தம் வளர்த்த தமிழ் என்று படம் கட்ட முயல்வது பரிதாபத்திற்குரியது.  தமிழின் சரித்திரத்தில் 200 ஆண்டுகள் மட்டுமே இந்த பௌத்த சமண மதங்கள் ஆதிக்கத்தை காட்டின.  மேலும் இந்த ஆரிய மதங்கள்  மட்டும்தான் வடநாட்டு மதங்களை தமிழில் புக இடமளித்திருந்தன. இவையின் தொடர்சியே இன்றைய தமிழில் காணப்படும் இந்து மதம். இன்று தமிழில் கிடைக்கும் அதி உச்ச இலக்கியங்கள், சங்க இலக்கியங்கள். அவற்றுக்கு முந்தியவை அழிந்துவிட்டன. தொல்காபியத்தின் இருக்கை, சங்க இலக்கியத்திற்கு முன்னர் ஒரு மலையளவு தமிழ் இலக்கியங்கள் பிறந்து அழிந்ததற்கு சான்று.  இவை மத வெறி, ஆட்சி வெறி கலக்காத துய மொழிமட்டும் சார்ந்த, வேறு எந்த மொழியிலும், நாட்டிலும்  கிடைக்காத, சாமானிய மக்களின் வாழ்கைக்களைப்பற்றிய  அதி உன்னத இலக்கியங்களாக கருத்தப்படுகின்றன.

தூய பௌத்த, சமண நூல்கள் தமிழில் பிரபல்யம் இல்லை. இந்த மதங்கள் வட மொழியையும், பாழியையும் தமது சமய மொழியாகக்கொள்வன. இவை மட்டும்தான் இந்து மதம் தமிழில் பரவ காரணமாயின. இவை திணித வடமொழி முலம்தான் இந்துமதம் பரவியது.  1000 வருடங்களுக்கு பின்னர் இந்து மதம் தமிழில் பரவிய காலத்தில் பூசைகள் வட மொழிக்கு சென்றன.  ஆழ்வார்கள் கூட தழிழில் பாடியதால்   வைணவர்கள் தமது  மிகத்தூய்மையானவையாகக் கொள்ளும்  பிரபந்தங்கள் தமிழில்த்தான் இருக்கின்றன. இவற்றுக்கும் சைவத்துக்கும் எந்த பேதமும் இல்லை.  தத்துவம், தரம், தமிழ் ஆழுமை  எல்லவற்றிலும் பிரபந்தங்கள் தேவார இலக்கியங்களை நிகர்க்கின்றன. 

சமண இலக்கியங்கள் நீதி நூல்களின் தோற்றத்திற்கு காரணமாயின. இதனால் சங்க மதம், சமணமதம் கலந்த நீதி நூல்கள் தமிழில் பிரபல்யமாக காணப்படுகின்றன.  சமணச் சாயல் மிகவாக மணக்கும்   திருக்குறள் கூட அந்தணர் யார், இந்திரன் யார் என்று  வரையறுக்கிறதே்தவிர தீர்த்தங்கர்கள் யார் என்று கூறவே இல்லை. இதில் சமணமும், புத்தமும் தமிழ் வளர்த்தகதை புதிய மாற்றுக்கருத்து தத்துவமே.

அதன் பின்னர் பக்த்திமார்க்க நூல்கள் தோன்றலாயின. இவை இந்துமத வேத நுல்களுக்கு எதிரானவை. இதனால் இன்று கூட தேவாரங்கள் சிதம்பரத்தில் பாடுவது தடுக்கப்படுகிறது.  கப்பம் ராமானயணம், வில்லிபுத்தூரின் பார்தம் (பெருந்தேவனாரினது அல்ல)  போன்றவை தூய  இந்து மத நூலாக கருத்தப்படத்தக்கவை. 

உலகில் எந்த நாட்டிலும் இலக்கணம் என்ற சொல் தோன்றமுதல் இலக்கண நூல் தோன்றியது சமணத்திலோ அல்லது புத்தத்திலோ அல்ல. உண்மையில் இந்த மதங்கள் பிறக்க 300 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்காபியம் எழுத்தபட்டு தமிழில் இலக்கிய வளம் நிரூபிக்கப்பட்டுவிட்டது.  தமிழ் இன்று செம்மொழி ஆக இருப்பதன் முதல் காரணம்  சங்க இலக்கியங்களே. மற்றயது திருமுறை இலக்கியங்கள். சைவ சிந்தந்தாந்த இலக்கியங்கள் பழையனவாக இல்லை. பெரும்பாலானவை 1000 வருடங்களுக்குட்பட்டவை. ஆரிய தாக்கத்தை தமிழில் திணிக்க காரணமாக இருந்தவைத்தான் சமணமும், பௌத்தமும்.  இன்று இந்த கொடூரம் பிடித்த  துறவு வெறிச்சமயங்கள் தமிழில் ஒதுக்கப்படுவிட்டன. தமிழர்கள் ஆதிகாலம் தொடக்கம்  பண்பாடாண சமரசன்மார்க்கத்தை பிரதாண மதமாகக் கொள்[பவர்கள் . இலங்கையில் மட்டுமல்ல, இனத்துவேச பௌத்தம்,   தெற்கு, தெனகிழக்கு, கிழக்காசியா எங்கும் இரத்தம் சிந்த வைக்கும் கொடூர கொலைகார மதமாக இன்று மாறியிருக்கிறது.  அது என்றுமே அப்படி என்பதால்த்தான் தமிழர்கள் அதை ஒதுக்கிவிட்டர்கள். நல்ல காலதிற்கு திருநாவுக்கரசரால் இந்த கொலை வெறித்துறவு மதங்களை தமிழிலில் இருந்து துரத்தப்படுவிட்டன. அவைகளின் அழிவுக்கு காரணம் அவை அவரை அழிக்க முயன்ற்மையே.

எனது கூற்று சிங்களவர்களுக்கான வாழ்த்து அல்ல மாறாக வெளிப்படையான உண்மை. கருணாவும் டக்ளசும் ஏனைய இயக்கங்களும் சிங்களவருக்கு எதிராக அடிப்படையில் ஆயுதம் தூக்கியவர்கள்தான். அடிப்படையில் சிங்களத்தின் எதிரிகள். ஆனாலும் சிங்களம் அவர்களை அரவணைத்து தனது திட்டத்துக்கு பாவித்துக்கொண்டது. இதே தமிழர்கள் என்ன செய்தார்கள்? ஒட்டுக்குழு மட்டைக்குழு துரோகி விரோதி என்று போடு போடு என்று மாற்றி மாற்றி போட்டுத்தள்ளி இனத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கி உலகின் முழுமுதல் பொறுமையற்ற நிதானமற்ற முட்டாள் கூட்டமாக இருக்கின்றது. இப்படித்தான் இஸ்லாமியத்தமிழருக்கும் ஏனையவருக்குமான பிரச்சனைகளும். எப்ப பாத்தாலும் துரோகி ஒட்டுக்குழு சோனி தொப்பி பிரட்டி என்று கடசில என்னத்தை கண்டீர்கள். சிங்களவர்கள் ஒடுக்குமுறையாளர்கள் தமிழரை கொன்று குவித்தவர்கள் என்பது உண்மை அதற்காக தமிழர் ஒன்றும் யோக்கியர் கிடையாது. அவன் தனது நாட்டை விஸ்தரிக்க தனது இனத்தை பலம்மிக்கதாக்க தமிழரை பலத்தாலும் புத்திசாலித்தனத்தாலும் அடித்தான் அடிக்கின்றான் அடித்துக்கொண்டே இருப்பான். தமிழர் தன்னை தக்கவைக்கும் நோக்கில் தன்னை பாதுகாக்கும் நோக்கில் கூட ஒன்றுபட்டு இருந்ததில்லை. இதில் யார் முட்டாள் யார் புத்திசாலி என்று உலகிற்கே நன்கு தெரியும். 10.000 ஆண்டுகள் பழமையும் வரலாறும் புனிதமும் என்னும் பல பூராயங்களும் உள்ளவர்கள் ஏன் என்னும் மட்டையாய் அடிமையாய் கிடக்கின்றார்கள்? உங்கள் கற்பனை உலகிற்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பே இல்லை.

செயலாளர் நாயகம் என்று அடை மொழி எழுதியவர்கள், குத்தி மந்திரிசபை கூட்டத்திற்கு போகாமல் விட்டவுடன் எப்படி மாறி டக்கிலஸ் என்று ஒருமையாக எழுதுகிறார்களோ அப்படித்தான் ஒருநாள் தமிழருக்கு போராடிய கருணா மாறிவிட்டான்.  நான் மேலே குத்தியின் வாழப்ழக்கதையை எழுதிய  உறவு பற்றிக்குறிப்பிட்டிருக்கிறேன்.  குத்தி தமிழருக்காக போராடியது என்பது வழமையான தடுமாற்றக்கருத்து மட்டுமே.

1956லிருந்து கீழே போய்விட்ட சிங்களவர் வாழ்கிறார்கள் என்று படங்காட்டுவதிலும் பார்க்க நான் சொன்னது மாதிரி வாழ்த்துகிறார்கள் என்றே விட்டிருந்திருக்கலாம். தென்கிழக்காசியாவில் ஒரு நாட்டுக்கும் சுதந்திரம் கிடைத்தால் பலன் வரவில்லை.  ஆனால் இந்தியாவில் மகாராஸ்டிரா, குஜராத், தமிழ் நாடு போன்றவை முன்னேற்றம் கண்டிருக்கின்றன.  இதில் தமிழ் நாட்டின் முன்னேறம் பிரத்தியேகமானது.  ஏன் எனில் இலங்கையில் முன்னேறியிருந்த தமிழரை எப்படி பொறாமையால் அழிக்கிறார்களோ, அப்படியேதான் இந்தியாவிலும் முன்னேறப் பார்க்கும் தமிழ் நாட்டை அழிக்க முயல்கிறார்கள். 

முஸ்லீம்களை  செல்வா அரவணைத்த மாதிரியோ,  தலவர்  மதித்த மாதிரியோ முஸ்லீம்கள், இலங்கையின் சரித்திரதில் பிறந்து, தமிழரை அரவணைத்த கதை  இலங்கையில் நடக்கவில்லை.  பதியுதின் பிறந்து தமிழருக்கு எதிராக உலகில் எங்குமே காணப்பாடத இன வெறிக்கல்வி கொள்கைகளை கொண்டுவந்தார்.  அதன் பின்னரும் செல்வா அணைத்தார். தமிழர் போராட்டம் தோற்க ஒட்டுக்குழுக்களுக்கு இணையான பங்கை புலநாய்வு செய்து வஞ்சகம் செய்த பின்னரும் தலைவர் மதித்தார். இன்று சம்பந்தர் தங்களுக்கு கிடைக்காத முதல் அமைச்சர் பதவியை கக்கீமுக்கு கொடுக்க கக்கீம், தமிழரையும், முஸ்லீம்களை சேர்த்துக்கெடுத்தார்.  இன்றைய ரிசாட் பதியுதின் மீது அவரின் அரசே அவர் தமிழ் மக்களின் இடங்களில் செய்த அடாவடிகளைப்பற்றி வழக்குப்போட்டு வைத்திருக்கிரது.

எங்கேயாவது தனிபட்ட குசு குசுப்பு கதைகளில் வரும் சோனி என்ற சொல்லை தூக்கி பிடிப்பது ஏன் எனில், "பற தெமிழு, கள்ளத்தோனிக்காறய " ஒடு இந்தியாவுக்கு என்று ஒவ்வொரு கலவரத்திலும் சிங்களவன் அடிச்சு  கடைகளை எல்லாம் உடைச்சு போட்டு போக அங்கு போய்நின்று மிச்ச சொச்சங்களை பொறுக்கிய கதைகளை மறைக்கவே.

Edited by மல்லையூரான்

இயலாதவர்களின் வேத வாக்கியம் .எதோ மது மாது கொடுத்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்பது போல .

எமது போராட்டம் பயங்கரவாத போராட்டமாக மாறியது மட்டுமே தோற்றதற்கு ஒரே காரணம்.அதை விளங்கிக்கொள்ளும் நிலையில் தலைமையோ  அல்லது  வாலுகளோ இருக்கவில்லை .அதற்கான அறிவும் பக்குவம் எள்ளளவும் இருக்கவில்லை .

செத்தவனுக்கு புலி கொடி போர்த்த தான் இவர்கள் லாயக்கு .இவர்களிடம் போய் சர்வதேச அரசியல் கதைத்தால் ?

பயங்கரவாதம் என்றால் என்ன  என்று வரைவிலக்கணம் எழுதும் PhD கள், என்று, எந்த விதமாக ஆயத போராட்டம் ஆரமானது என்பதையும், அது எந்த வழியில் வளர்ந்து வந்தது என்பதையும், போராட்டம் எப்படி முடிந்தது என்பதையும் அறியாமல் எழுதுபவர்கள்.  இவர்களுக்கு இவர்கள் சொல்லும் பயங்கரவாதமாக  போராட்டம் மாறுவதற்கு, முன்னர் போராட்டம் எப்படி இருந்தது அதன் பின்னர் எப்படி இருந்தது என்று எப்பவுமே விரித்து எழுத முடியாமையால்த்தான் இப்படி எழுதுபவர்கள். போதிக்கிறது இலகு போராடுவது கஸ்ட்டம் என்றதை உணர்ந்தவர்கள்தான் போராடிவிட்டு துரோகிகளுடன் இணைவது வழமை.

தான்  புலிகளில் பிழைகண்டபின்னர், ஒருகணம் சிந்திக்க விரும்பாமல் அதேநேரத்தில்  கழிவாக கருத்தப்பட்ட PLOTE ல் ஓடிப்போய் சேர்ந்தது சரியென்பது கருத்து. இயலுமை உள்ள சிந்தனையாளன், தான் இரண்டுமுறை விட்ட தவறை மறைத்துவைத்துக்கொண்டு, மூன்றாம்முறைக்கு PLOTE விடை கேவலமான துரோக சக்திகளுக்கு வால் பிடிக்கிறார்.  இவர்களை அணைத்து PLOTE தனது இயலுமையை பெருக்கிய கதையைப்பற்றித்தான் சிங்களவர் கருணாவையும், குத்தியையும் அணத்த கதை மூலம் சொல்கிறார் சண்டமாருதன்.  ஒரு நாட்டில் அதன் ஒரு இராஜதானி தமிழர்களுடையது. இரண்டு சிங்களவர்களுடையதாக இருந்தது. அதிலும் ஒன்றை ஆண்டவர்கள் தமிழர்கள். இந்த மூன்றையும் அடிமையாகியவர்கள் இந்த மது, மாது வியாரிகளான சிங்களவர்கள் மட்டும்தான். அப்படியான ஒரு ஈனத்தைதை தமிழர் எந்த மூளையையையும் சேர்த்து இது வரையில் செய்ய வில்லை.

சுதந்திரம் பெற்ற நாட்டின் கணனிகளை மடக்கி, அங்கு வெளிநாட்டுக்கம்பனிகள் சொத்துவைத்திருக்க கூடாது என்று  சட்டம் இடம் கொடுக்காத, போது நுரை சோலையை கைப்பற்றியிருக்கிறார்கள் சீனர்கள். இது போத்துக்கீசர் கோட்டையில் செய்து கொண்ட அடிமை வியாபார ஒபந்தங்களுக்கும் கீழானது என்பதை அரசியல் விளங்குபவனுக்கு விளங்கும்.  தன்னையேதான் சிங்கள மோடைய என்று பெயர் வைத்து அழைத்தவனுக்கு விளங்காது. செய்த தவற்றால், இந்தியா (அதுவே ஒரு கேணைத்தனமான நாடு. அந்த கோமாளி நாடு பிடிக்க என்று படை அனுப்பிய நாடு இலங்கைகை. கிந்தியை ஓட்டிக்கலைக்க புலிகள் இல்லாதிருந்தால் இன்று சிங்களவர்கள் கிந்தியாவின் அடிமைகள். ஈழத்தமிழர் கிந்திய சிங்களவர்களின் அடிமைகள்) சுதந்திரமடைந்த நாட்டுக்குள் படையை அனுப்பியது என்றதை விளங்கிய ஒரு சிங்களவன் தனது அரசியல் கட்சிகளுக்கு வாக்குப் போடுவது தனக்கு தான் செய்யும்  அவமரியாதை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இயலாதவர்களின் வேத வாக்கியம் .எதோ மது மாது கொடுத்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்பது போல .

எமது போராட்டம் பயங்கரவாத போராட்டமாக மாறியது மட்டுமே தோற்றதற்கு ஒரே காரணம்.அதை விளங்கிக்கொள்ளும் நிலையில் தலைமையோ அல்லது வாலுகளோ இருக்கவில்லை .அதற்கான அறிவும் பக்குவம் எள்ளளவும் இருக்கவில்லை .

செத்தவனுக்கு புலி கொடி போர்த்த தான் இவர்கள் லாயக்கு .இவர்களிடம் போய் சர்வதேச அரசியல் கதைத்தால் ?

நாட்டாமை தீர்ப்பைச் சொல்லிட்டாரய்யா.. எல்லாரும் வீட்டைப்பார்த்துப் போங்க.. :D

சமாதான காலத்தில் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இலங்கை அரசாங்கமே தடையை நீக்கியிருந்தது.. இதற்கு ஏதாவது பதில் உண்டா? பட்டியலை வைத்திருந்த மற்ற நாடுகளின் முகத்தில் கரி பூசியதுதான் மிச்சம்.. :D

ஆக, சின்னப்பிளளைகளுக்கு கிலுகிலுப்பையைக் காட்டி பிராக்குக் காட்டுவது மாதிரி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. பட்டறிவற்ற, ஏட்டறிவுமற்ற மக்கள் என்ன செய்வார்கள் பாவம்.. :(

எங்கே எல்லாம் போயிருக்கிறது நம்ம இனத்தின் பெருமை.

 யாழில் வந்து போகும் எல்லோரும் இதற்கு பச்சை குத்த வேண்டும்.  

சிங்களவன் ஒரு இனம் மட்டும்தான் உலகில் சிவிக்கும்; மற்றயவை எல்லாம் அழியப்போகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம். ( இதே போலத்தான், யாழ் போற போக்கிலை யாழ்தான் ஒரு இணையத்தளம் தப்பி ஒட்டி இருக்க போகுது போலும் இருக்கு.) நிச்சயமாக இப்படி செய்யத்தெரியா இனத்தவன் எல்லோரும் மொக்கு கூட்டம்.  

மேர்வின் சில்வா கட்டிவைத்து அடித்தார்.  மகன் மலக்க சில்வா ஆமிக்கரனை அவிட்டு விட்டு அடித்தார். அது ஆண்களை. பௌத்த துறவிகளிடம் கற்ற கல்வி இந்த அளவுக்கு போயிருக்கிறது. ஒரு பெண் ஆசிரியை விளையாட்டு மைத்தானத்தில் வைத்து இப்படி செய்திருக்கிறார்கள் வாழத்தெரிந்த இனம். தூ. இப்படித் தான் வாழவேண்டுமாயின் நான் தமிழ் இனம் முழுவதற்கும் கூட வாழ வழி கிடைக்காவிட்டாலும் கவலைப்பட மாட்டேன்.     எங்கே போய்விட்டர்கள் அரச செய்த்திகளை இங்கே கொண்டுவரும் றிப்போட்டேஸ்? இதை கண்ட பின்னர் எரிஞ்சு எரிஞ்சு போனதெல்லாம் மாறி பளக்கெண்டு போகுது.

  PC member kneels down a teacher
 
Published on Saturday, 15 June 2013 17:41
emailButton.pngprintButton.png

techer_knelt_410px_15-06-13.jpgAn incident has been reported where a lady teacher of the Nawagaththegama Maha Vidyalaya in Nawagaththegama had been made to kneel down due to disciplinary action she had taken against a student at the school.

The female teacher of the school is reported to have warned the politician’s daughter in grade 7 regarding her uniform as it was shorter than the allowed length.

The student in return had informed her father regarding the incident, after which he had arrived at the school yesterday (15) and punished the teacher by making her kneel down

ஆசிரியை ஒருவரை முழந்தாலிட வைத்து தண்டனை வழங்கி கொலை அச்சுறுத்தல் விடுத்த அரசியல்வாதியின் செயலை வன்மையாக கண்டிப்பதாக மலையக ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்தள்ளது. 

இவ்வாறு எந்த ஆசிரியரையும் தண்டிப்பதற்கு அரசியல்வாதிகளுக்கு தகுதியும் இடமும் இல்லா நிலையில் இந்த ஆசிரியை இந்த நிலைக்கு உட்படுத்திய அரசியல்வாதியின் செயலுக்கு தமது கடுமையான கண்டனங்களை மலையக ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துக் கொள்கிறது. 

இவ்வாசிரியைக்கு தேவைப்படும் எல்லா சட்ட உதவிகளையும் செய்ய ஒன்றியம் தயாராக இருப்பதாக ஒன்றியத்தின் பிரதம இணைப்பாளர் ஆர்.சங்கரமணிவண்ணன் தெரிவித்தார். 

http://www.adaderana.lk/tamil/news.php?nid=40430

(அத தெரண நிருபர்)

இந்த செய்தியை முடிந்தவர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் முக நூல் எங்கும் பரவிவிடவும்.

Edited by மல்லையூரான்

இயலாதவர்களின் வேத வாக்கியம் .எதோ மது மாது கொடுத்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்பது போல .

எமது போராட்டம் பயங்கரவாத போராட்டமாக மாறியது மட்டுமே தோற்றதற்கு ஒரே காரணம்.அதை விளங்கிக்கொள்ளும் நிலையில் தலைமையோ  அல்லது  வாலுகளோ இருக்கவில்லை .அதற்கான அறிவும் பக்குவம் எள்ளளவும் இருக்கவில்லை .

செத்தவனுக்கு புலி கொடி போர்த்த தான் இவர்கள் லாயக்கு .இவர்களிடம் போய் சர்வதேச அரசியல் கதைத்தால் ?

மொக்குதனமாக புலம்பாமல் பயங்கரவாதத்துக்கு வரை விலக்கணம் என்ன எண்டு சொல்லுங்கோ... 

அதோடை விடுதலை போராடாட்டம் பயங்கரவாதத்திலை இருந்து எவ்வளவு வித்தியாசப்படுகிறது எண்டதை ஒருக்கா விளங்கப்படுத்த முடியுமோ...?? 

ம்ம்ம்

உண்மையான பயங்கரவாதி என்று பிரபாகரனை அவர் நினைத்தால் அவரை நோக்கி  கை நீட்டுவாரா???

பாவம்

இப்படியும் நாலு வேண்டும் தானே

யாழிலேயே அதை புரிந்து கொள்ளலாம்................. :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.