Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலைக்கு செல்கின்ற பெண்கள் வீட்டில் சமைக்கவேண்டுமா?? வேண்டாமா ??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் வீட்டில்   அன்ரன்றுதான்  சமையல். நான் வேலைக்குப் போகும்  போது  காலையில் நேரத்தோடு சமைத்து  பெட்டியில் போட்டுத் தருவா.சோறு குறைவு. மதியம் பழுதாகி விடும் . நான் வீட்டில் நிக்கும்  போது  நான்தான் சமைப்பேன். இங்கு காலை 9.00க்கு கடைகள் திறக்கும். சும்மா ஒரு ரவுண்ட் போய் ஏதாவது பிரெஸ் சாய்  வாங்கி வந்து  சமைப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். 11.00 மணிக்கு குக்கரில் அரிசி போட்டு , அது சோறாகவும், அதற்குள் நான் ஒரு பருப்பு, ஒரு கீரை, சைவக் குழம்பு ஒன்று, மச்சக் குழம்பு ஒன்று வைத்து விடுவேன் . விரும்பினால் ஒரு அப்பளம், மிளகாய் . 12.15 க்கு மகன் பள்ளியால் வந்து சூட்டோடு சாப்பிடுவதைப் பார்க்க  ஆனந்தமாய்  இருக்கும். பின் மனைவி 2.00 க்கு வேலையால்  வந்து  ஒரு அன்புப் பார்வையுடன் அள்ளிச் சாப்பிடுவதைப்  பார்க்க பேரானந்தமாய் இருக்கும் ! :D  :D  

இங்கே தான் வாழ்க்கையின் 'சூச்சுமம்' மறைந்திருப்பதாக நான் கருதுகின்றேன்!

அண்டைக்கொரு நாள், காரைக்கொண்டு வந்து கராஜில் நிறுத்தும்போது, ஒரு பக்கத்துக் கதவில், படலைச்சுவர் கொஞ்சம் கீறிவிட்டது! ஆறுதலாகப் 'பார்க்' பண்ணியிருக்கலாம்! அந்த 'ஆம்பிளைத் தனம்' விடவில்லை!

அடுத்த நாள் காலையில், மகள் (என்னிடம் கார் பழகினவள்), அடியடா-பிடியடா எண்ட மாதிரி நின்றாள். கொஞ்சம் கோபம் வந்தது தான். ஆனால் நான் எதுவுமே கூறவில்லை.

பிறகு, மடிக்கணணியில் இருக்கும்போது, வந்தாள்!

அவள் தான் ஏதோ சமைத்தாள்! பின்னர், சாப்பிடாம இஞ்ச இருந்து என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்டாள்!

கோபமெல்லாம் பறந்தே போய் விட்டது!

இங்கு தான் சமையல், ஒரு ஊடகமாகச் செயல்படுகின்றது! :D

சும்மா வெறுமனே, 'புதுமை' என்று சொல்லி எல்லாவற்றையும் தூக்கி எறிவதில், எனக்கு உடன்பாடில்லை!

இறுதியாக, எமக்கான எல்லாத் தனித்துவங்களையும் தொலைத்து விட்டு, வெறுமனே அம்மணமாக, அடையாளமிழந்து நிற்கப் போகின்றோம்! :o

வேதவாக்கு!  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

வேலைக்குப் போகும் பெண்கள் சமைப்பது, சமைக்காதது அவரவர் விருப்பம், வசதியைப் பொறுத்து. எனது வீட்டில் எனக்கும் வேலை கொஞ்சம் படிப்பு எண்டு இருக்கு மனிசியுக்கும் வேலை, படிப்பு எண்டு இருக்கு இதால அவரவர் வசதிப்படி சமையல். கூடுதலாக சமைப்பது மனிசிதான். ஒவ்வொரு நாளும் சமைப்பது இப்போது நன்கு குறைந்து விட்டிச்சு. முதலே சமைச்சு பெட்டிகளில் போட்டு வச்சுவிடுவோம். நான் வேலைக்கு ஒரு சான்விச், ஒரு பழம், ஏதாவது ஒரு நட்ஸ் வகை, ஒரு சிறிய ஜூஸ் போத்தல் இவளவும் தான் கொண்டுபோவது. சோறு கறி  கொண்டு போவது மிக அரிது. அடிக்கடி கூட வேலை செய்பவர்கள் lets go out எண்டு சொல்லும் போது நானும் போகவேண்டி வந்துவிடும். இல்லை என்றும் சொல்ல முடியாத நிலை. எனது Section குளிரூட்டியில் ஏதாவது சாப்பாடு எப்போதும் இருக்கும் என்பதால் பிரச்சனை இல்லை.

மனிசிக்கு நான் தான் கிச்சின் ஹாண்ட் மாதிரி, கோழி வெட்டுவது, வெங்காயம் உரிப்பது வெட்டுவது எண்டு எல்லாம் நான் தான் அத்துடன் dish washer இனுள் போடமுடியாதவற்றை கழுவுவதும் எனது பொறுப்பு. எனக்கும் சமைக்கத் தெரிந்தாலும் மனிசியின் கைப் பக்குவம் இல்லை. இதால அவளையே டிப்பாட் மெண்ட் ஹெட்டாக விட்டிருக்கு. வேலைக்குப் போகும் பெண்கள் மனமிருந்தா, நேரமிருந்தா, பொறுமை இருந்தா, முக்கியமாக சமைக்கத் தெரிஞ்சா வீட்டில் சமைக்கக முடியும்.

ஓர் நல்ல விவாதத்திற்குரிய பொருளை சமூக அரங்கில் வைத்த மைத்திரேயிக்கு எனது பாராட்டுக்கள் . நான் இங்கு வந்த ஆரம்பகாலங்களில் நான்குபேர் கூட்டாளிகள் . ஆரம்பவேலையாக பேப்பர் வீடு வீடாகப் போடுவும் , பின்பு உணவங்களில் வேலை செய்வதுமே பிரதானவேலைகள் . அப்பொழுது வசதிகள் என்பது எங்களுக்கு எட்டாக்கனி . அறை என்றபெயரில் 20 m2 பரப்பளவில் நான்குபேரும் குடியிருந்தோம் . குசினி அறையின் ஒருபக்கமாகவும் , பாத்றூம் பிறிம்பாகவும் இருக்கும் . சில அறைகளில் பாத்றூம் இருக்காது . ரொய்லெட் மட்டுமே உண்டு . மாநகரசபை பொதுக்குளிப்பறையில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை குளித்த அனுபவமும் உண்டு . குசினியில் ஒரு ரைஸ்குக்கர் , ஒரு பெரிய சட்டி , ஒரு சிறிய சட்டி , சமைக்க காஸ் ஸிலிண்டருடன் கூடிய இரண்டு பேர்ணர் அடுப்பு இவ்வளவுதான் எமது சமையல் உபகரணங்கள் . அப்பொழுது சமையலை முறைவைத்து செய்வோம் . ஒரு இறைச்சிக்கறி , பருப்புக்கறி அல்லது கீரைக்கறி ,  சோறு இவைதான் நாளாந்த மெனு . இதை சமைக்க கள்ளம் பண்ணும் அறை கூட்டுகளும் இருந்திருக்கிறார்கள் . ஒவ்வொருநாளும் இறைச்சி இரண்டு மூன்று கிலோ என்று வாங்குவோம் . முக்கியமாக குக்கரில் சோறு முடியும்பொழுது யார் அந்த சோற்றைச் சாப்பிட்டாரோ , அவரே குக்கரை கழுவி மீண்டும் சோறு போடவேண்டும் என்ற விதி எல்லா அறைகளிலுமேயே இருந்தது . அப்பொழுது " சுரீநாம்  அரிசியே " எங்களிடம் பிரபல்யமாக இருந்தது  .

உணவகங்களில் வேலை செய்த எங்கழுக்கு இரண்டு நேரவேலை . காலை பத்தில் இருந்து இரண்டுமணிவரை ஒன்றும் , பின்பு மாலை ஆறு அரையில் இருந்து இரவு பதினொரு மணிவரை இரண்டாவது வேலையும் இருக்கும் . மத்தியனம் சாப்பிட்டுவிட்டு றூமில் படம் பார்த்தல் , காட்ஸ் அடி , றெஸ்லிங் வீடியோ கொப்பி பார்த்தல் என்பன முக்கிய பொழுது போக்கு . அப்பொழுது நான்கு பேருக்குமே வெளிகூட்டுகள் , அந்தக்கூட்டுகளின் கூட்டுகள் என்று அறைக்கு வந்து , அறையே அல்லோலகல்லோலப்படும் . எல்லோருமே அறையில் சாப்பிடுவார்கள் . இரவிலே சிலர் எங்களுடன் படுப்பதும் உண்டு . இது வார இறுதி நாட்களிலேயே இருக்கும் . வார இறுதி நாட்களில் றொட்டி சுடுவோம் . நான் றொட்டிக்கு உருளைக்கிளங்கு கறிதான்  வைப்பேன் . அப்பொழுது வசதிகுறைவினால் இருப்பதைக்கொண்டு வேலையுடன் சமைத்தே எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டோம் . பின்பு காலங்கள் மாறியது . ஒவ்வருவரும் திருமணபந்தத்தில் நுளைந்தோம் . கூட்டுகள் எல்லாம் சிதறியது . ஆனாலும் நல்லது கெட்டதுகளில் ஒன்றுகூடுவோம் . அப்பொழுது அறையில் இருந்த உணர்வையே அடைவோம் .

இன்று உள்ள நிலை சிறிது கவலைக்கு இடமாகவே உள்ளது . அந்தநேரம் நாங்கள் பட்ட கஸ்ரங்களை தங்களை நம்பி வந்த மனைவி அனுபவிக்கக் கூடாது என்ற நல்லுணர்வுடனேயே பலர் திருமணம் செய்தார்கள் . எதுவித சீதனமோ நகைநட்டோ பெண்வீட்டாரிடம் வாங்காமல் திருமணம் செய்த பல நண்பர்களை நான் அறிவேன் . ஆனால் அந்த நல்லுணர்வை ஒருசில மனைவியர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்ற சூழ்நிலையே காணப்படுகின்றது . வேலைக்குப் போகமாட்டார்கள் . வீட்டில் சமைக்கமாடார்கள் . கணவனே எல்லாம் செய்யவேண்டும் என்ற எதிர்பார்புடன் தொலைக்காட்சியிலே மூழ்கி இருப்பார்கள் . ஆகமிஞ்சினால் உணவகங்களில் " ரேக்கவே " எடுப்பது என்ற புதிய " நாகரீக ஸ்டேட்டஸ் சிம்போலில் " சிக்கியிருக்கின்றார்கள்  சில மனைவியர்கள் . இந்தப் போக்கு கண்டனத்திற்கு உரியது . எனது வீட்டில் இருவருமே வேலைக்கு செல்வதால் , இருவருமே சமைப்போம் .  லீவுநாட்களில் நான் வீட்டு வேலை செய்ய மனைவி சமைப்பாள் . சமைத்த பாத்திரங்களைக் நான் கழுவிக் கொடுப்பேன் . முக்கியமாக வேலைக்குப் போகும் நாளில்  சமைத்த சமையலில் இருவருருமே குற்றம்குறை பிடிப்பதில்லை . ஒருவேளை மனைவிகள் அமைவதும் இறைவன் கொடுத்தவரமோ !!!!!!!!!!!!!

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இப்பவெல்லாம் எங்கடைசனத்தின்ரை லேட்டஸ்பாஷன்  விலைகூடின கிச்சினை வாங்கிவைச்சு வடிவுபாக்கறதுதான்........பசியெண்டால் கடையிலைவாங்கி சூடாக்கிப்போட்டு சாப்பிடவேண்டியதுதான்.....கிச்சினும் பழுதாகாது....எண்ணையும்  பிடிக்காது......வீட்டிலையும் சமையல் மணமும் மணக்காது......எல்லாம் பளிச்செண்டு பளபளப்பாயிருக்கும்.காலம் இப்பிடியிருக்க...........
 
நீங்கள் என்னடாவெண்டால் வெங்காயம் உரிக்கிறதிலையும்........கிழங்கை அவிச்சுப்போட்டு தோல் உரிக்கலாமோ இல்லாட்டி உரிச்சுப்போட்டு அவிக்கலாமோ எண்ட ஆராச்சியிலை நிக்கிறியள் :lol:  :D

இதுக்குத் தான் சொல்லுறது நாலு பெரிய மனுசர் இருக்க வேணும் என்று.. :lol:

வேலைக்குப் போகும் பெண்கள் சமைப்பது, சமைக்காதது அவரவர் விருப்பம், வசதியைப் பொறுத்து. எனது வீட்டில் எனக்கும் வேலை கொஞ்சம் படிப்பு எண்டு இருக்கு மனிசியுக்கும் வேலை, படிப்பு எண்டு இருக்கு இதால அவரவர் வசதிப்படி சமையல். கூடுதலாக சமைப்பது மனிசிதான். ஒவ்வொரு நாளும் சமைப்பது இப்போது நன்கு குறைந்து விட்டிச்சு. முதலே சமைச்சு பெட்டிகளில் போட்டு வச்சுவிடுவோம். நான் வேலைக்கு ஒரு சான்விச், ஒரு பழம், ஏதாவது ஒரு நட்ஸ் வகை, ஒரு சிறிய ஜூஸ் போத்தல் இவளவும் தான் கொண்டுபோவது. சோறு கறி  கொண்டு போவது மிக அரிது. அடிக்கடி கூட வேலை செய்பவர்கள் lets go out எண்டு சொல்லும் போது நானும் போகவேண்டி வந்துவிடும். இல்லை என்றும் சொல்ல முடியாத நிலை. எனது Section குளிரூட்டியில் ஏதாவது சாப்பாடு எப்போதும் இருக்கும் என்பதால் பிரச்சனை இல்லை.

மனிசிக்கு நான் தான் கிச்சின் ஹாண்ட் மாதிரி, கோழி வெட்டுவது, வெங்காயம் உரிப்பது வெட்டுவது எண்டு எல்லாம் நான் தான் அத்துடன் dish washer இனுள் போடமுடியாதவற்றை கழுவுவதும் எனது பொறுப்பு. எனக்கும் சமைக்கத் தெரிந்தாலும் மனிசியின் கைப் பக்குவம் இல்லை. இதால அவளையே டிப்பாட் மெண்ட் ஹெட்டாக விட்டிருக்கு. வேலைக்குப் போகும் பெண்கள் மனமிருந்தா, நேரமிருந்தா, பொறுமை இருந்தா, முக்கியமாக சமைக்கத் தெரிஞ்சா வீட்டில் சமைக்கக முடியும்.

மச்சி ,

ஆத்துக்காரி நல்லா ஈரப்பிலாக்காய் சமைப்பாவோ????? :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சம்சாரிகளின் கருத்தை படிக்கிறப்போ.. என்ன தோனுதென்னா.. சம்சாரிகள்... பசியாறச் சமைப்பதில்லை.. மனைவியரை சமாளிக்கவா சமைக்கிறார்கள்..????! என்ன கொடுமை சரவணா..! :lol:

இதில் சம்சாரிகளின் கருத்தை படிக்கிறப்போ.. என்ன தோனுதென்னா.. சம்சாரிகள்... பசியாறச் சமைப்பதில்லை.. மனைவியரை சமாளிக்கவா சமைக்கிறார்கள்..????! என்ன கொடுமை சரவணா..! :lol:

சும்மா வெளியிலை நிண்டு சீ.............. இந்த பழம் புளிக்கும் கொட்டாவி விட்டால் இப்பிடியான யோசனையள்தான் வரும்  :lol:  :lol:  .  சும்மா வெக்கப்படாமல் வந்து எங்கடை ஜோதியிலை கலவுங்கோ  :D  , பேந்து தெரியும் இல் அறம் எண்டால் என்னவெண்டு :) :) .

எங்களால.. எல்லாம் ஒரு எச்சில் முத்தத்திற்காக.. அல்லது போலிப் பாராட்டுதலுக்காக.. சமைச்சுப் போட முடியாது..! நாங்கள் தன்மானம் உள்ளவர்கள்..! :):lol:

இந்த பழம் புளிக்கும் கொட்டாவி விட்டால் இப்பிடியான யோசனையள்தான் வரும்  :lol:  :lol:

அது வரைக்கும் நெடுகரின் ஆலோசனைகள் ஏற்றுகொள்ளப்பட மாட்ட. முதலில் Certification காட்ட வேண்டும். மற்றவை எல்லாம் professional grade அல்லாதவை. :D

  • கருத்துக்கள உறவுகள்

மச்சி ,

ஆத்துக்காரி நல்லா ஈரப்பிலாக்காய் சமைப்பாவோ????? :D:lol::icon_mrgreen:

இஞ்சற்றாபார் இவன்ட கதைய. அதுசரி, மனிசி எப்ப வருகுதாம்?

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சற்றாபார் இவன்ட கதைய. அதுசரி, மனிசி எப்ப வருகுதாம்?

மனிசி வந்து ஒருமாதம் ஆகிது நீங்கள் வேற.

எங்களால.. எல்லாம் ஒரு எச்சில் முத்தத்திற்காக.. அல்லது போலிப் பாராட்டுதலுக்காக.. சமைச்சுப் போட முடியாது..! நாங்கள் தன்மானம் உள்ளவர்கள்..! :):lol:

ஆனானப்பட்ட ஆதாமே ஏவாள் கடிச்சுப் போடுக் குடுத்த கனியை ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டவர் . ஆதாமுக்கே ஏவாளின் எச்சில் பிடிச்சிருக்கு . நீங்கள் என்னடாவெண்டால் தன்மானம் எண்டு பம்பல் அடிக்கிறியள் :lol: :lol: :D .

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது வீட்டில் இருவருமே சமையல் செய்வோம். நான் கூடுதலாக மரக்கறிதான் செய்வேன். அவளும் வேலைக்குச் செல்வதால் சமையலில் மட்டுமல்ல மற்ற எல்லாவற்றிலும் அவளுக்கு உதவியாக இருக்க முயற்சிப்பேன். ஆனாலும் கூடுதலான சமையல் வேலைகளை அவள்தான் செய்வாள். மற்றும்படி இருவருமே பெரிய சமையல் வல்லுனர் இல்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லொள்ளு தானே வேணாம்கிறது அக்கோய் அதுவும் Paris ல இருந்து கொண்டு சமைக்கிறதா வேண்டாமா எண்டு கொண்டு

வேலையால வந்த சமைக்க பஞ்சியா இருந்தா உடன வேளையில் நிக்கிற அத்தானுக்கு போன் போட்டு சொல்லுறது தானே....

அப்பா அப்பிடியே வரேக்க லா சாப்பலுக்கு போயிட்டு இடியப்பம் கொத்து ரொட்டி எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி.....

உங்க ஆதுக்கரருக்கு கடைவைசிருக்கிற ஆக்கள் எல்லாரும் நல்ல பழக்கம் சோ நல்ல தரமா செஞ்சு கொடுப்பாங்க......

மற்றது சமையல் விஷயத்தில உங்க ஆள் நல்லா புகுந்து விளையாடுவார் பிறகென்ன கவலை? அதுவும் விதம் விதமா French சாப்பாடு செயுரதில ஆள் நல்ல விற்பனர்... :D

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் போட்ட பதிவுக்கு இவ்வளவு  பேர் கருத்து எழுதி இருக்கிறிங்ள் எனக்கு சந்தோசமாய் இருக்கு .  எல்லாருக்கும் நன்றி சொல்லிறன் . எனக்கு நேரம் கிடைக்கிற நேரம் என்ரை கருத்தை சொல்லிறன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.