Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் யுவதிக்கும் இராணுவ வீரருக்கும் காதல் திருமணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
army-tamil-wedding-seithy-3-20130630-150

முல்லைத்தீவு முள்ளியவலை, பொன்னகர் பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் யுவதியொருவரும் தெற்கைச் சேர்ந்த இராணுவ வீரரொருவரும் இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். வவுனியா, தண்ணீரூற்று பிரதேசத்தில் இவர்கள் இருவருக்கும் திருமணம் இடம்பெற்றது. முல்லைத்தீவிலுள்ள இராணுவத்தின் 23வது காலாற்படை முகாமைச் சேர்ந்த கோப்ரல் சிறிமல் பிரசங்க குமார (வயது 22) என்ற இராணுவ வீரருக்கும், மேரி தெரேசா (வயது 20) என்ற தமிழ் யுவதிக்குமே திருமணம் இடம்பெற்றது. இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் தொடர்பினையடுத்து, வீட்டாரின் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் இடம்பெற்றதாக முல்லைத்தீவு 23வது காலாற்படை முகாமின் தளபதி கேணல் சஷிந்திர விஜேவர்தன தெரிவித்தார்.

army-tamil-wedding-seithy-1-20130630-198

army-tamil-wedding-seithy-2-20130630-188

army-tamil-wedding-seithy-3-20130630-585

http://www.seithy.com/breifNews.php?newsID=86393&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சீருடையை அவர்களின் சிறுவர்களோ குழந்தைகளோ புகைப்படம் வெளியானால் சிங்கள அரசும் கூடவே துணை நிற்கும் ஒட்டுக்குழுக்களும் புலிகள் இயக்கத்தில் சிறுவர்களை இணைக்கின்றார்கள் என்று சர்வதேசத்திக்கும் யுனஸ்கோ போன்ற அமைப்புக்கும் சொல்லி வந்தவர்கள் இப்போது எனது கேள்வி இந்த படத்தில் உள்ள சீர் உடையில் இருக்கும் சிறுவர்களை ஒட்டுக்குழுக்களும் யுனஸ்கோவும் பார்ப்பது இல்லையா ....? 

W01(24).jpg

  • கருத்துக்கள உறவுகள்

எமது தமிழ் பெண்களுக்கு வெளிநாட்டு விசா மேல காதல் வரும்.. இந்திய ஜவான்கள் மேல காதல் வரும்... ஒட்டுக்குழு கைக்கூலிகள் மேல காதல் வரும்.. கண்ணிவெடி எடுக்க வாற கறுப்பன் கூட காதல் வரும்.. செஞ்சிலுவைச் சங்கத்தில வேலை செய்ய வாற வெள்ளைக்காரன் கூட காதல் வரும்.. வியாபாரத்திற்கு  வாற முஸ்லீம்கள் கூட காதல் வரும்.. சிங்களவனோட வாறது என்ன பெரிய விசயமா..???!

விடுங்க சார்.. இரண்டு தசைத் துண்டுகளுக்கு இச்சை வந்தா அதுங்க சேர்ந்து தான் ஆகும்..! இடையில அதை நம்ம பெண்கள் பல வித ஆதாயங்கள் கருதிப் பாவிச்சிடுறாங்க..! இற்ஸ் ஆல் ரைட். நம்ம தமிழினி அக்காவே கடந்த காலத்தை மறந்து இன்னொரு அழகிய வாழ்க்கைக்குள்ள நுழையுறப்போ.. நம்ம யாழ்ப்பாண அரச பரம்பரை.. மகிந்த வீட்டில் சம்பந்தம் செய்யுறப்போ... சாதாரண.. சுப்பன்ர மகளுக்கு சிங்களச் சிப்பாயின் கொழுத்த சம்பளம்.. அவன் வழங்கப் போகும்.. பாதுகாப்பு.. மீது காதல் வராதா பின்ன...???! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சீருடையை அவர்களின் சிறுவர்களோ குழந்தைகளோ புகைப்படம் வெளியானால் சிங்கள அரசும் கூடவே துணை நிற்கும் ஒட்டுக்குழுக்களும் புலிகள் இயக்கத்தில் சிறுவர்களை இணைக்கின்றார்கள் என்று சர்வதேசத்திக்கும் யுனஸ்கோ போன்ற அமைப்புக்கும் சொல்லி வந்தவர்கள் இப்போது எனது கேள்வி இந்த படத்தில் உள்ள சீர் உடையில் இருக்கும் சிறுவர்களை ஒட்டுக்குழுக்களும் யுனஸ்கோவும் பார்ப்பது இல்லையா ....? 

W01(24).jpg

புலிகள் வடிவமைத்த.. வரிச்சீருடை அணிவதுதான் பயங்கரவாதம்.. சிறுவர் படையணி. அமெரிக்க டிசைன் இராணுவச் சீருடைகள் அணிவது பாஷன்..! இதெல்லாம் உங்களுக்குப் புரியல்ல..! இதுதான் நம்ம கணவான் அமைப்புக்களின் சீரிய கொள்கை..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமண நல்வாழ்த்துக்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

அக்காச்சியை.. சிப்பாய் தன்ர ஊருக்குக் கூட்டிக் கொண்டு போய் ஊர் காட்டும் போது தான் அக்காச்சிக்கு தெரிய வரும் அத்தானின் உண்மை நிலை. அநேக சிங்களச் சிப்பாய்கள் வறுமை காரணமாக படைக்கு வருபவர்கள். அவர்களின் குடும்பப் பின்னணிகளும் அவ்வளவு திறமானவை அல்ல. றோட்டில வைச்சே.. தூசணத்தால பேசிக் கலைக்குங்கள். வேசிக.................. வில தொடங்கினால்.... முடிய ஒரு நாள் எடுக்கும். அதுவும் சும்மா இல்ல பெரிய அரிவாள் கூட.. ஆண் பெண் என்று கிளம்பிடுங்கள்.

ஒரு தடவை பாணந்துறைப் பக்கம் ஒரு சிங்கள நண்பனின் வீட்டுக்குப் போனது. அவனின் தந்தை ஒரு பேராசிரியர். வசதியான குடும்பம். ஆனால் அயலில் ஒரே சண்டை. காரணம் கேட்டால் இரண்டு படைத்தரப்புக் குடும்பங்களாம். அதுகளுக்கிடையில் பொறாமை போட்டி. குத்து வெட்டு..! மேலும் வசதி படைத்த சிங்களவர்கள்.. சாதாரண சிப்பாய்களாக.. படையில் சேர்வதில்லை. காரணம் அது அவர்களுக்கு கெளரவக் குறைச்சலான தொழில். உயர் பதவிகள் என்றால் மட்டும் இணைவார்கள்.

பிரச்சனை திருமணம் என்று வாறப்போ.. திருமண நாளில் எல்லாரும் நல்லா படம் பிடிச்சு.. பலியாட்டுக்குப் பூசை செய்து விடுவார்கள். அப்புறம்.. வாழப் போறவை தான்.. சிந்திக்கனும். சூழ்நிலைகளை எவ்வளவு மோசமானவையா இருக்கும் என்று. வாழ்த்திறவைக்கு ஒரு செலவும் இல்ல. வாழப் போறவை தான் நாசமாகிறது.

அதுதான் சொல்லுறது.. தனக்கெடா கலியாணம் தன் பிடரிக்கு சேதம் என்று..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிப்பாய் அக்காச்சியை பொய் வார்த்தைகள் சொல்லி காதலித்து ஏமாத்தாமல்,படுத்துப் போட்டு விட்டுட்டு போகாமல் திருமணம் செய்ததே பெரிய விசயம் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அக்காச்சியை இந்த நிலையில.. நினைச்சுப் பார்க்க... சிரிப்புச் சிரிப்பா வருகுது... :D:lol:

இப்ப மட்டும் ஏமாத்திட்டுப் போகமாட்டார் என்றதுக்கு ஏதோ உத்தரவாதம் உள்ளது ஆக்கும்..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிப்பாய் அக்காச்சியை பொய் வார்த்தைகள் சொல்லி காதலித்து ஏமாத்தாமல்,படுத்துப் போட்டு விட்டுட்டு போகாமல் திருமணம் செய்ததே பெரிய விசயம் :icon_idea:

இராணுவ முகாமில் இருந்து கொண்டு அதற்கு அவளவு வசதி இருக்குமா???

கலியாணம் கட்டிவிடால் ............
பிரச்சாரத்திற்கு என்றாலும் .... கொஞ்ச நாளைக்கு சொகுசாக விடுவார்கள் அதற்குள் பிரித்து மேய்ந்துவிட்டல் சரி என்றும் நினைத்திருக்கலாம் அல்லவா??
 
(சிங்களவர்களுக்குள் தமிழர்களை விட நல்லவர்களும் இருக்கிறார்கள். முஸ்லிம்களை (ஆண்களை) நம்புவது கடினம். வறுமை பட்ட பல சிங்களவர்கள் நல்லவர்கள் அறிவு கொஞ்சம் குறைவு......... அது எல்லா எடமும் உள்ளதுதானே)
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இனவாதிகள் ஈழத்தமிழரை சொந்த நிலங்களில் இருந்து அகற்றியதுடன் நிற்காமல்

இப்போது சிங்கள இளைஞர்களை வைத்துக் காதல்  எனும் பெயரில் அப்பாவிப் பெண்களையும் சிங்களத்திகளாக்கும் வேலைகளைச் செய்து வருகின்றனர்.

ஒரு பக்கம் ஒட்டுக்குழுக்களின் தொல்லை மறுபக்கம் சிங்கள ராணுவத்தின் தொல்லை 

இவர்களிடம் இருந்து தங்கள் மானத்தைக் காக்க வேறு வழிகள் இல்லாமல் இப்படியான

திருமணங்களுக்குத் தமிழ்ப்பெண்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். 

  • கருத்துக்கள உறவுகள்
அக்காச்சியைப் பற்றி உண்மையிலேயே நெடுக்ஸ் கவலைப்பட்டால் இப்படியான பெண்ணாய் பார்த்து வாழ்க்கை கொடுக்கலாம் தானே!
 
இராணுவ முகாமில் இருந்து கொண்டு அதற்கு அவளவு வசதி இருக்குமா???

கலியாணம் கட்டிவிடால் ............
பிரச்சாரத்திற்கு என்றாலும் .... கொஞ்ச நாளைக்கு சொகுசாக விடுவார்கள் அதற்குள் பிரித்து மேய்ந்துவிட்டல் சரி என்றும் நினைத்திருக்கலாம் அல்லவா??
 
(சிங்களவர்களுக்குள் தமிழர்களை விட நல்லவர்களும் இருக்கிறார்கள். முஸ்லிம்களை (ஆண்களை) நம்புவது கடினம். வறுமை பட்ட பல சிங்களவர்கள் நல்லவர்கள் அறிவு கொஞ்சம் குறைவு......... அது எல்லா எடமும் உள்ளதுதானே)

நீங்கள் சொல்வது உண்மை தான்.புலிகள் அமைப்பு இல்லாமல் போன பிறகு அதில் இருந்த சிலரே ஏமாத்துக்காரர்களாகவும்,பொய்யர்களாகவும் இருப்பதை கண்டு உள்ளேன்.ஒரு ஒழுக்கமான,கட்டுக்கோப்பான அமைப்பில் இருந்தவர்களால் எப்படி ஏமாத்த முடியுது?

  • கருத்துக்கள உறவுகள்

அக்காச்சியைப் பற்றி உண்மையிலேயே நெடுக்ஸ் கவலைப்பட்டால் இப்படியான பெண்ணாய் பார்த்து வாழ்க்கை கொடுக்கலாம் தானே!
 
நீங்கள் சொல்வது உண்மை தான்.புலிகள் அமைப்பு இல்லாமல் போன பிறகு அதில் இருந்த சிலரே ஏமாத்துக்காரர்களாகவும்,பொய்யர்களாகவும் இருப்பதை கண்டு உள்ளேன்.ஒரு ஒழுக்கமான,கட்டுக்கோப்பான அமைப்பில் இருந்தவர்களால் எப்படி ஏமாத்த முடியுது?

இந்த மந்தையை மேய்த்தவர்கள் தான் புலிகள்.

இப்போ மேய்ப்பான் மேல்தான் எல்லா பழியும்.
 
ஜேசுவையே கொல்ல ஒரு கூட்டம் இருந்த உலகம் இது.
  • கருத்துக்கள உறவுகள்

அக்காச்சியைப் பற்றி உண்மையிலேயே நெடுக்ஸ் கவலைப்பட்டால் இப்படியான பெண்ணாய் பார்த்து வாழ்க்கை கொடுக்கலாம் தானே!

ஆ னா.. உனான்னா... சிங்கள ஆமிக்காரன் தமிழ் பெண்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறான்.(அதேனோ தெரியல்ல.. ஒரு சிங்களப் பொண்ணும் தமிழ் புலிப் பையன்களுக்கு வாழ்க்கை கொடுக்கிறதில்ல.) நான் தமிழ் புலியா ஒரு சிங்களப் பெண்ணிற்கு வாழ்க்கை கொடுத்து படம் எடுத்து பிபிசில போடப் போறன்..! வந்திட்டாங்கைய்யா... வாழ்க்கை கொடு.. கரம் பிடின்னு கொண்டு..! பூமில பிறந்தா கலியாணம் கட்டனுன்னு ஏதாவது சட்டம் இருக்குது..???! கலியாணம் கட்டாமலே.. எத்தனையோ மகான்கள்.. (மாவீரர்கள் உள்ளடங்க) வாழ்ந்து போன பூமி இது..! :icon_idea:

 சுதந்திரமா விடுதலைக்கு குரல் கொடுப்பவரின் குரவளைய நெரிக்கதான் வாழ்க்கை கொடு என்று பீலாவா  சவுண்டு விடுறாங்க கவனம் நெடுக்ஸ் உங்கள் வாழ்க்கை உங்கள் முடிவு யாருக்கும் உரிமைய விட்டுக் கொடுக்காதீங்க  :D 

தமிழர் தேசத்தை சிங்கள மயமாக்கும் திட்டத்தின் கீழ் இராணுவத்தினன் தமிழ் பெண்ணை மணந்தார். - 

இதுதான் உண்மை நிலை. ஏன் கொழும்பில் ஒரு தமிழரும் சிங்களவனை கட்டல்வில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

திருமணங்கள் என்பது அவரவர் தனிப்பட்ட விசயம் எனினும், நாம் முக்கியமான ஒன்றைக் கவனிக்க மறந்து விடுகின்றோம்!

இப்படியான திருமணங்களில், மணப்பெண் அனேகமாக, 'சிங்கள' பாரம்பரிய முறையில் தான் மணப்பெண்ணுக்கான உடைகளை அணிகின்றார்!

இது தமிழ்க்கலாச்சாரமும், இந்து மதமும், சிங்களக் கலாசாரத்தையும், புத்தத்தையும் விடவும், தாழ்ந்தது என்பதை அப்பட்டமாக நிறுவும் ஒரு செயலாகவே நான் இதைக் கருதுகின்றேன்! :o

இது பற்றிக் மற்றைய கள உறவுகள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை அறிய ஆவல்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்கிரிய மகாநாயக்கர் 50 வருட எச்சரிக்கையை வழங்கியது இதற்காகத்தான். இன்றைய நிலையில் துரிதமாக சிங்கள மயமாகக் கூடியதாக தமிழரும் தமிழர் நிலமுமாக உள்ளது. அதை ஒரு முடிவுக்குள் கொண்டு வந்திட்டால் அப்புறம் முஸ்லீம்கள் தங்கள் பாட்டில் கோவணத்தை கழற்றி தலைப்பாயாகக் கூட கட்ட முடியாது..! சிறீலங்கா பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூய சிங்கள பெளத்த தேசமாக இருக்கும்.

அந்த நோக்கத்திற்கு இந்தச் சிங்களச் சிப்பாய் தன்னால ஆன சிறிய பங்களிப்பைச் செய்துள்ளான். சிங்களவனை திருமணம் செய்யும் தமிழிச்சி.. சிங்களத்தியாக மாறினால் தானே அவளுக்கு புகுந்த வீட்டில் சாப்பாடு போடுவாங்க. இதனை எல்லாம் சிந்திக்கக் கூடிய நிலையில் எம் மக்கள் இல்லை. இன்று அவர்கள் மத்தியில் இருப்பது இராணுவ அராஜகமும்.. இராணுவ அதிகாரமும் ஆட்சியும். இதனை ஜனநாயகம் வளர்க்கிறோம் என்று நாடு நாடாக சென்று குண்டு போடுபவர்கள் கண்கட்டி வேடிக்கை பார்த்து மகிழ்கின்றனர்.

பயங்கரவாதத்தை அழிக்க இணைத்தலைமை வகுத்தோர் அழித்த பின் மக்களை காக்க.. தலையே காட்டுகிறார்கள் இல்லை..! புலிகள் இருந்த போது.. வன்னிக்கு நாட்டுக்கு நாடு போட்டி போட்டு தூதுவர்களை அனுப்பியோர் இன்று.. வன்னியில் என்ன நடக்குது என்ற ஒரு கிஞ்சித அக்கறையும் இன்றி உள்ளனர். இராணுவ மயமாக்கலையும் சிங்கள மயமாக்கலையும் வரவேற்றபடி. இடையில் முஸ்லீம்கள் தங்கட விளையாட்டு..! :icon_idea: :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்காச்சியைப் பற்றி உண்மையிலேயே நெடுக்ஸ் கவலைப்பட்டால் இப்படியான பெண்ணாய் பார்த்து வாழ்க்கை கொடுக்கலாம் தானே!
 
ஏன் தீக்குளிக்க வில்லை?

ஏன் வாழ்வு கொடுக்க வில்லை?

ஏன் உதவுகின்றீர்கள் இல்லை?

சிறிய வயதில், பாடசாலையில் ஆதிரியரின் கேழ்விகளுக்கு பதில் தெரியாதவர்கள் தான் முதலில் கை உயர்த்துவது வழக்கம். ஏன் எனில் கேழ்விகள் அவர்களை கேட்காமல் இருப்பதற்க்காக.

இங்கேயும் அதே வயதின் பாதிப்பு போன்று, கேழ்விகளால் தம் தகுதிகளை உயர்த்த நினைப்பதும் ஆகும்!

இது போன்ற களம்களிலே, கருத்துக்கள்தான் பதிவர்களின் முகவரி அதை தவிர யோதிடம் பார்கின்ற வகை அறியாமையின் அரிச்சுவடி நிலை!

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்கிரிய மகாநாயக்கர் 50 வருட எச்சரிக்கையை வழங்கியது இதற்காகத்தான். இன்றைய நிலையில் துரிதமாக சிங்கள மயமாகக் கூடியதாக தமிழரும் தமிழர் நிலமுமாக உள்ளது. அதை ஒரு முடிவுக்குள் கொண்டு வந்திட்டால் அப்புறம் முஸ்லீம்கள் தங்கள் பாட்டில் கோவணத்தை கழற்றி தலைப்பாயாகக் கூட கட்ட முடியாது..! சிறீலங்கா பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூய சிங்கள பெளத்த தேசமாக இருக்கும்.

அந்த நோக்கத்திற்கு இந்தச் சிங்களச் சிப்பாய் தன்னால ஆன சிறிய பங்களிப்பைச் செய்துள்ளான். சிங்களவனை திருமணம் செய்யும் தமிழிச்சி.. சிங்களத்தியாக மாறினால் தானே அவளுக்கு புகுந்த வீட்டில் சாப்பாடு போடுவாங்க. இதனை எல்லாம் சிந்திக்கக் கூடிய நிலையில் எம் மக்கள் இல்லை. இன்று அவர்கள் மத்தியில் இருப்பது இராணுவ அராஜகமும்.. இராணுவ அதிகாரமும் ஆட்சியும். இதனை ஜனநாயகம் வளர்க்கிறோம் என்று நாடு நாடாக சென்று குண்டு போடுபவர்கள் கண்கட்டி வேடிக்கை பார்த்து மகிழ்கின்றனர்.

பயங்கரவாதத்தை அழிக்க இணைத்தலைமை வகுத்தோர் அழித்த பின் மக்களை காக்க.. தலையே காட்டுகிறார்கள் இல்லை..! புலிகள் இருந்த போது.. வன்னிக்கு நாட்டுக்கு நாடு போட்டி போட்டு தூதுவர்களை அனுப்பியோர் இன்று.. வன்னியில் என்ன நடக்குது என்ற ஒரு கிஞ்சித அக்கறையும் இன்றி உள்ளனர். இராணுவ மயமாக்கலையும் சிங்கள மயமாக்கலையும் வரவேற்றபடி. இடையில் முஸ்லீம்கள் தங்கட விளையாட்டு..! :icon_idea: :icon_idea:

கிழமைக்கு இரண்டு அறிக்கையாவது புலிகளை தாக்கி விட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இன்று எங்கே? அறிக்கைகளுக்கு என்ன நடந்தது? அல்லது சிங்கப்பூராக மாறிவிட்டது என்று  சொன்னது அவர்களுக்கும் கேட்டு விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்

புலத்திலும் இளைப்பாறியசிங்கள இராணுவ அதிகாரிகளின் பிள்ளைகளை எங்கன்ட சனம் கட்டியிருக்கு......என்ன அங்கு சிங்களத்தில் குடும்பம் நடத்துவினம்....இங்கு இங்கிலிஸில் குடும்பம் நடத்துவினம்

கொஞ்சப்பேர் மண்ணுக்காக மண்ணோடு மண்ணாகிப் போட்டினம் நீங்கள் நல்லாய் இருங்கோ  :(

திருமணத்தின் அன்றே அவர்களின் முகத்தை பார்க்க சரியாக இல்லை.

உடை அலங்காரங்கள் தொடுத்தவைத்தது மாதிரித்தான் படுகிறது.

உண்மை .....

  • கருத்துக்கள உறவுகள்

காதல் எவர்மேலும் எவ்ருக்கும் வரக்கூடும். சிங்களவர் மேல் தமிழர் காதல்வயப்படுவது தவறென நான் நினைக்கவில்லை. ஆனால் இங்கு திட்டமிட்ட இராணுவ ஆக்கிரமிப்புக்குட்பட்ட நிலையில் இந்தக் காதல் துவங்கியிருக்கிறது. இதனை இனவழிப்பின் ஒரு அங்கமாகவே கருதவேண்டும். இதனைக் கருத்திற்கொண்டே சிங்கள கொள்கைவகுப்பாளர்கள் செயற்படுகின்றனர். இனியும் இவ்வாறான சம்பவங்கள் சாதாரணமாக நடக்க வாய்ப்புக்கள்தான் அதிகம். அதிகரித்த இராணுவ நடமாட்டமும் மக்களின் வறுமைநிலையும் காரணமாக அமையக்கூடும்.

இராணுவ ஆக்கிரமிப்பை அகற்றும் நிலையில் தமிழர் தரப்பு தற்போது பலமாக இல்லை, ஆனால் மக்களின் வறுமையைப் போக்கக்கூடிய பொருளாதார பலம் நிறையவே உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்கிரிய மகாநாயக்கர் 50 வருட எச்சரிக்கையை வழங்கியது இதற்காகத்தான். இன்றைய நிலையில் துரிதமாக சிங்கள மயமாகக் கூடியதாக தமிழரும் தமிழர் நிலமுமாக உள்ளது. அதை ஒரு முடிவுக்குள் கொண்டு வந்திட்டால் அப்புறம் முஸ்லீம்கள் தங்கள் பாட்டில் கோவணத்தை கழற்றி தலைப்பாயாகக் கூட கட்ட முடியாது..! சிறீலங்கா பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் தூய சிங்கள பெளத்த தேசமாக இருக்கும்.

அந்த நோக்கத்திற்கு இந்தச் சிங்களச் சிப்பாய் தன்னால ஆன சிறிய பங்களிப்பைச் செய்துள்ளான். சிங்களவனை திருமணம் செய்யும் தமிழிச்சி.. சிங்களத்தியாக மாறினால் தானே அவளுக்கு புகுந்த வீட்டில் சாப்பாடு போடுவாங்க. இதனை எல்லாம் சிந்திக்கக் கூடிய நிலையில் எம் மக்கள் இல்லை. இன்று அவர்கள் மத்தியில் இருப்பது இராணுவ அராஜகமும்.. இராணுவ அதிகாரமும் ஆட்சியும். இதனை ஜனநாயகம் வளர்க்கிறோம் என்று நாடு நாடாக சென்று குண்டு போடுபவர்கள் கண்கட்டி வேடிக்கை பார்த்து மகிழ்கின்றனர்.

பயங்கரவாதத்தை அழிக்க இணைத்தலைமை வகுத்தோர் அழித்த பின் மக்களை காக்க.. தலையே காட்டுகிறார்கள் இல்லை..! புலிகள் இருந்த போது.. வன்னிக்கு நாட்டுக்கு நாடு போட்டி போட்டு தூதுவர்களை அனுப்பியோர் இன்று.. வன்னியில் என்ன நடக்குது என்ற ஒரு கிஞ்சித அக்கறையும் இன்றி உள்ளனர். இராணுவ மயமாக்கலையும் சிங்கள மயமாக்கலையும் வரவேற்றபடி. இடையில் முஸ்லீம்கள் தங்கட விளையாட்டு..! :icon_idea: :icon_idea:

சும்மா சிங்களவனை மட்டும் திட்டி ஒரு பிரயோசனமும் இல்லை அதைத் தடுக்க நாங்கள் என்ன செய்யலாம் என்றும் யோசிக்க வேண்டும் :icon_idea:  :icon_idea:  :icon_idea:

ஏன் தீக்குளிக்க வில்லை?

ஏன் வாழ்வு கொடுக்க வில்லை?

ஏன் உதவுகின்றீர்கள் இல்லை?

சிறிய வயதில், பாடசாலையில் ஆதிரியரின் கேழ்விகளுக்கு பதில் தெரியாதவர்கள் தான் முதலில் கை உயர்த்துவது வழக்கம். ஏன் எனில் கேழ்விகள் அவர்களை கேட்காமல் இருப்பதற்க்காக.

இங்கேயும் அதே வயதின் பாதிப்பு போன்று, கேழ்விகளால் தம் தகுதிகளை உயர்த்த நினைப்பதும் ஆகும்!

இது போன்ற களம்களிலே, கருத்துக்கள்தான் பதிவர்களின் முகவரி அதை தவிர யோதிடம் பார்கின்ற வகை அறியாமையின் அரிச்சுவடி நிலை!

உங்களை மாதிரி கேள்வியே கேட்காத ஒரு அறிவாளியை சந்தித்ததில் யாழ்களம் பெருமையடைகிறது

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா சிங்களவனை மட்டும் திட்டி ஒரு பிரயோசனமும் இல்லை அதைத் தடுக்க நாங்கள் என்ன செய்யலாம் என்றும் யோசிக்க வேண்டும் :icon_idea:  :icon_idea:  :icon_idea:

பெரிசா ஒன்றும் செய்யத் தேவையில்ல கொஞ்சோண்டு இன உணர்வுள்ள உப்புப் போட்டு உணவு சாப்பிட்டாலே போதும்..! இத்தனை ஆயிரம் கரும்புலிகளும் மாவீரர்களும் வாழ்ந்த தேசத்தில் இவை கொஞ்சப் பேருக்குத்தான் காதல் சிங்கள சிப்பாய் மேல சொல்லி வைச்சு வருகுதாமில்ல..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல குடும்பத்து பொண்ணுங்க இப்பிடி செய்யாது..... இதெல்லாம் வேற வேற வேற.....

அவங்க அவங்க தான்

இவங்க இவங்க தான்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.