Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

crush....கிரஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை வளாகத்தில் தனது கிளைகளை பரப்பி அந்த மரம் விருச்சமாக வளர்ந்திருந்தது.அந்த நாட்டைப்போல் அந்தமரமும் பல் தேசிய காதல் ஜோடிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தது.அந்த மரத்தின் கீழ் மாணவ,மாணவிகள் இடைவேளை நேர்த்தில் ஒன்றுகூடுவார்கள் ,பாடசாலை முடிவடைந்தபின்பு பெற்றோர்வரவுக்காகவும்,பேருந்தின் வரவுக்காகவும் காத்திருப்பார்கள்.ஒன்று கூடுபவ்ர்களில்சிலர் காதல் செய்வார்கள் வாங்குகளின் ஒருவரின் மடியில் மற்றவர் படுத்திரிந்து தலையை வாரிவிட்டபடியே காதல் மொழி பேசுவார்கள்.சில ஜோடிகள் புல்தரையில் அமர்திருந்து காதல் புரிவார்கள்.ஒரே தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் ,வெவ்வேறு தேசியங்களை சேர்ந்த ஜோடிகள் அதில் இருக்கும்.அதாவது சீனா ஜோடிகள் ,தமிழ்(இந்திய பின்னனி) ஜோடிகள்,வெள்ளைக்கார ஜோடிகள்.....மற்றும் சீன இந்திய,இந்திய வெள்ளை,வெள்ளை சீன என கலப்பின ஜோடிகள் ஆகும்.

ஜோடிகளற்ற மாணவர்கள் குழுக்களாக நின்று கதைத்துகொண்டிருப்பார்கள் இவர்களை கண்டு பொறாமை படவோ ,எரிச்சல் படவோ இல்லை.அதிபர் ,ஆசிரியர்கள் வந்து போவார்கள் சில சமயம் ஆசிரியர்கள் அந்த மரத்தடியிலிருந்து உணவும் உண்பார்கள் ,ஆனால் காதல் ஜோடிகள் தன்னிலை மறந்து அந்த இடத்திலயே இருப்பார்கள்.காதல் ஜோடிகள் ஆசிரியர்களை கண்டு ஒதுங்குவதுமில்லை ஆசிரியர்களும் அவர்களை வெருட்டுவதுமில்லை.இவற்றை பார்த்த சுரேஸுக்கு ஒருவித பய உணர்வும்,பெற்றொர் என்ற அதிகாரமும் தலைதூக்குவதுண்டு.இந்த வெள்ளைகளின் கன்றாவி கலாச்சாரமும் ,பண்பாடும் எங்கன்ட கலாச்சாரத்தை அழிக்கின்றது வாத்திமாரும் கண்டிக்கிறதில்லை என வெள்ளைகள் மீது பலியை போட்டு நிம்மதி அடைவான்.தன்னுடைய கலாச்சாரம் பண்பாட்டை பிள்ளைகளுக்கு புகட்ட தாயகத்திற்கு புலம் பெயர்ந்து செல்லவேண்டும் என எண்ணியதுமில்லை இனிமேலும் எண்ணப்போவதுமில்லை.

.....>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

சுரேசுக்கு இந்த காதல் ஜோடிகளை காணும்பொழுதெல்லாம் இளமை காலத்தில் தவறவிட்ட சம்பவங்களை எண்ணி ஏக்கம் வருவதுண்டு.சில சமயங்களில் இரைமீட்பதுண்டு.அவனின் பாடசாலை ஆண்கள் பாடசாலை.சகோதர பாடசாலையின் சகவகுப்பு மாணவியுடன் ஒருவித இது (ஒருதலைகாதல் என்றும் சொல்லலாம்)ஏற்பட்டுவிட்டது.அவளை பார்ப்பதற்காகவும் ,காதலை சொல்ல வேணும் என்ற காரணத்திற்காகவும் அவள் செல்லும் டியுசன் வகுப்புக்களுக்கும் சென்றான்.இருந்தும் காதலை இறுதி வரை சொல்லவில்லை. சுரேஸ் தன்னைச்சுற்றி வருவது தெரிந்திருந்தாலும் சுதா கண்டு கொள்ளவில்லை நீ ஏன் என் பின்னால் சுற்றுகிறாய் என கேட்கவுமில்லை.இரு வருட கடின சைக்கிள் சுற்றல் மூலம் சுரேசால் தனது ஒருதலை காதலை இருதலை காதலாக மாற்றமுடியவில்லை.

சுதா வீட்டு ஒழுங்கைவாழ்வாசிகள், தேவையற்ற பயணங்களை சுரேஸ் மேற்கொள்வதை அறிந்து கொண்டார்கள்.பெடிப்பயள் இங்குள்ள பெண்ணை காதலிக்க முயற்சி செய்கிறான் என ஒழுங்கை வாழ் அண்ணன்மாரும் உசார் அடைந்துவிட்டனர்.ஒரு நாள் சுரேஸை பின் தொடர்ந்து இரு அண்ணமார் வந்தனர் அவன் சுதா வீட்டு ஒங்கைக்குள் சென்றவுடன் ஒரு அண்ணன் ஒழுங்கை முகப்பில் நின்றுவிட்டார்.மற்றவர் அவனை முந்தி சென்று சைக்கிளை குறுக்கே நிற்பாட்டினார்.

"தம்பி உம்மை இந்த ஒழுஙகைக்குள் அடிக்கடி காணுகின்றேன் உம்மோட சினேகிதப்பெடியள் யாரும் இந்த ஒழுங்கைக்குள் இருக்கினமோ?"

"இல்லை அண்ணே சும்மா வந்தனான்"சொல்லியபடியே சைக்கிளை திருப்பினான்.

"பிடிடா அவனை " என இந்த அண்ணை கத்த முகப்பில் நின்ற அண்ணை சைக்கிள் கன்டிலை பிடித்துநிறுத்தி சைக்கிளின் முன் டயரை தனது கால்கள் இரண்டுக்குமிடையில் வைத்துக்கொண்டார்.அவனால் ஓடமுடியவில்லை. இரு அண்ணமாரும் ஒன்றாக இணைந்து விசாரணை தொடங்கினர்.

"சும்மாவோ இந்த ஒழுங்கைக்குள் வாறனீ ,உண்மையை சொல்லு அந்த மதில் கட்டின வீட்டிலிருக்கிற சுதாவை சுழற்றத்தானே வாராய்"

"இல்லை அண்ணே"

"பின்னே என்னத்திற்கு ஒரு நாளைக்கு இரண்டு மூன்று தரம் இந்த ஒழுங்கை வந்து போறாய் ,ஓவ்வொரு தரம் போகும் பொழுது மதில் பக்கம் ஒரு பார்வையை விட்டிட்டு போறாய்...எல்லாம் நங்கள் கவனிச்சுப்போட்டுத்தான் உன்னை இப்ப மடக்கினாங்கள்"

"இல்லை அண்ணே, சுதா என்னோட டியுசன் கிளாசுக்கு வாரவ"

"டியுசன் கிளாசுக்கு வந்தால் நீங்கள் சுழற்றிவியளோ மவனே

இனி இந்த பக்கம் உன்னை கண்டால் வீட்டை உருப்படியா போய் சேரமாட்டாய் ஓடு" என விரட்டீவிட்டனர்.

அதன் பின்பு அந்த ஒழுங்கை பக்கம் செல்வதை குறைத்துக்கொண்டான்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

பாடசாலயில் இருந்து மகளை கூட்டிவருவதற்கு சென்றவன் காரை வழமையாக தரிக்குமிடத்தில் நிற்பாட்டிவிட்டு அந்த மரத்தடியை பார்த்து அதிர்ச்சியடைந்தான்.என்கன்ட பெடியன் போல கிடக்குது என உற்றுப்பார்த்தான்.எங்கன்ட பெடியன் மட்டுமல்ல அவனுக்கு அறிமுகமான ஒருத்தரின் மகன் வேறு.பையனுக்கு அருகில் இருந்தபெண் வேற்று இனத்தை சேர்ந்தவள்.மீண்டும் உறுதி செய்வதற்காக உற்று பார்த்தான்.

"கலோ அப்பா" என்றபடியே மகள் வந்து காரினுள் ஏறிக்கொண்டாள்.

"கலோ"கலோ என மகளுக்கு கூறியபடியே மரத்தடியை பார்த்துக்கொண்டிருந்தான்.

"என்ன அப்பா அங்கேயே பார்த்துக்கொண்டிருக்கிறீங்கள்" என கேட்டபடியே தந்தை பார்த்த திசையை நோக்கி பார்த்தாள்.

"அப்பா அது சுதன் எங்கன்ட கிளாசில் படிக்கிறவர், அவரின்ட girlfriend Korean "

"அவரின்ட அப்பாவின் பெயர் பொன்னம்பலம் தானே"

" உங்களுக்கு தெரியுமோ, Do you know him? நெடுகலும் அங்கேயே பார்த்துகொண்டிருக்க வேண்டாம், it's not nice "

"உப்படி பெடியளும் பெட்டையளும் ஒன்றாக இருக்கிறதற்க்கு டீச்சர்மார்,மாஸ்டர்மார் ஒன்றும் சொல்லமாட்டினமோ"

"They cannot say anything. it's against the law,"

"அப்ப நான் அவரின்ட அப்பாவிட்ட சொல்ல வேணும்"

"No, அப்பா, that is his private business. You cannot interfere in other's business."

"படிக்கிற வயசில உது என்ன இப்படி சேட்டைகள்விடுகிறது,இதை நான் கட்டாயம் அவரின்ட அப்பாவிட்ட சொல்லவேணும் ,எங்கன்ட பெட்டையை பிடிச்சிருந்தாலும் காரியமில்லை போயும் போய் ஒரு சப்பையை பிடிச்சிருக்கிறான்"என்று சொன்னபடியே காரை ஸ்டார்ட் பண்ணினான்.

"இப்ப நீங்கள் உதுக்கு போய் ஏன் டென்சன் ஆகிறீங்கள், this is normal in high school, it's just a crush. நீங்கள் ஸ்கூலில் படிக்கும் பொழுதும் உங்களுக்கும் crush எதாவது இருந்திருகுத்தானே அப்பா அப்ப.........பா"

"ஏய் !யாரோட என்ன கதைக்கிறீர் ,நான் உன்ட அப்பன்டி"

"So what?"

"நாங்கள் எல்லாம் அந்த காலத்தில் எங்கன்ட அப்பா அம்மாவோட இப்படியெல்லாம் கதைக்க மாட்டோம்,கதைச்சால் அப்பாவின்டா ஐந்து விரலும் கன்னத்தில் பதியும்"

"That is your fault"

"நான் படிக்கிற காலத்தில் லெமன் கிரஷ்,லைம் கிரஷ் என்ற கூல் ரின்க்ஸ்தான் கடையில் வித்தவை அதுகளைக்ப்பற்றி தெரியும் உந்த கன்றாவி கிரஷ்களைப்பற்றி தெரியாது"

"mmmmmm. Like I am going to believe you"

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

வழக்கம் போல புத்தனின் அழகிய கிறுக்கல்! :D

 

ஆனாலும் நாங்கள் வாழ்க்கை என்ற புத்தகத்தில் முதல் சில அத்தியாயங்களை வாசிக்காமல், அல்லது வாசிக்க இயலாமல், இடையில இருந்து வாசிக்கின்ற படியால், எங்களால் முன்னைய அத்தியாயங்களைப் பற்றி வெறும் அனுமானங்களை மட்டுமே செய்ய முடிகின்றது!

 

காதல் விசயம் மட்டுமில்லை, கார் பழகுதல், வீட்டுக்கடன் எடுத்தல், என எல்லாமே இடைநடுவில் தான் ஆரம்பிக்கின்றன!

 

அடுத்த தலைமுறை ஓரளவுக்கு 'யதார்த்தங்களுடன்' வாழும் என நினைக்கின்றேன்!

 

நன்றிகள், புத்தன்!

கிடுகுவேலிகளை என்றுமே உயர்திய ஓர் குழுமத்தில் இப்படியான புரிதல்களுடன் இணைவது என்பது பல உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தவல்லது . இருபாலாரின் தொடர்பாடல்களை தவறான புரிதல்களுடன் பார்த்தவர்கள் , புலத்திலும் அதை நிறுவ முயல்வதும் கவலைதருகின்ற விடையம் . புத்தனின் தோலைகட்டி ரசத்திற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .

 

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு இடத்து காதலையும் ஒப்பிட்ட புத்தனின் கிறுக்கல்களுக்கு நன்றி.இக்காதலை விளங்காமல் பிள்ளையையும் பிள்ளையின் ஆண் நண்பனையும் காரால் அடித்து கொல்ல முயன்ற சம்பவங்களும் நிறைய இருக்கு.ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எமது சமுதாயத்துக்கு குறைவாக உள்ளதாகவே எனது அவதானம் சொல்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த மாதிரி எழுத்து 

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு அரைவாசி ஆங்கிலத்தில எழுதியிருக்கிறீங்கள் கு.சா அண்ணா வந்து திட்டப் போகிறார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதை சாதாரணமாகத் தொடங்கி முடியும்போது மனதில் எதோ ஒன்றை உருவாக்கிவிட்டுச் செல்கிறது. நன்று புத்தன்.

புத்தன் வயித்தில நெருப்பை கொட்டுகிறீங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கும் மன்னிக்கவேண்டும் சுரேசுக்கும் கிடுகுவேலிக் காதல் இருந்திருக்கிறதோ. இப்பவும் பழைய நினைவுகள் அடிக்கடிவந்து மனதினை ஆறுதல்படுத்தியோ, காயப்படுத்தியோ போகின்றதா?

இரசித்து படித்தேன். :) தலைமுறை இடைவெளி 

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு அங்கையும் இல்லை.. இங்கயும் வெறுமன பார்த்துத் துலைக்கவேண்டியிருக்கு.. :D கிறுக்கலுக்கு நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு அங்கையும் இல்லை.. இங்கயும் வெறுமன பார்த்துத் துலைக்கவேண்டியிருக்கு.. :D கிறுக்கலுக்கு நன்றி..

நம்பிறம்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்காலத்துப்பிள்ளைகள் கொடுத்துவைச்சவை. கைத்தொலைபேசி, முகநூல்(அதுதாங்க வேஸ்புக்), மின்னஞ்சல் என எக்கச்சக்கமான வசதிகள் இருக்கிறது. உந்த வசதிகள் அப்ப இருந்தால் கனபேரின்ட வாழ்க்கை வேறுவிதமாக இருந்திருக்கும். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினைவேணும் பாருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்காலத்துப்பிள்ளைகள் கொடுத்துவைச்சவை. கைத்தொலைபேசி, முகநூல்(அதுதாங்க வேஸ்புக்), மின்னஞ்சல் என எக்கச்சக்கமான வசதிகள் இருக்கிறது. உந்த வசதிகள் அப்ப இருந்தால் கனபேரின்ட வாழ்க்கை வேறுவிதமாக இருந்திருக்கும். எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினைவேணும் பாருங்கோ.

 

உண்மைதான் கந்தப்பு.. ஆனால் சொன்னாலும் நம்புறாங்க இல்லையே.. :D

 

நம்பிறம்! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தலைமுறை ஓரளவுக்கு 'யதார்த்தங்களுடன்' வாழும் என நினைக்கின்றேன்!

 

நன்றிகள், புத்தன்!

 

நன்றிகள் புங்கையூரன் ,அவர்கள யதார்த்தத்துடன் வாழ நினைத்தாலும் நாங்கள் விட மாட்டோம் போல உள்ளது.:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிடுகுவேலிகளை என்றுமே உயர்திய ஓர் குழுமத்தில் இப்படியான புரிதல்களுடன் இணைவது என்பது பல உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தவல்லது . இருபாலாரின் தொடர்பாடல்களை தவறான புரிதல்களுடன் பார்த்தவர்கள் , புலத்திலும் அதை நிறுவ முயல்வதும் கவலைதருகின்ற விடையம் . புத்தனின் தோலைகட்டி ரசத்திற்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள் .

 

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்......கிடுகுவேலி எல்லாம் கறையான் அறித்து கொண்டு போகுது.... :Dநன்றிகள் கோமகன்

இரண்டு இடத்து காதலையும் ஒப்பிட்ட புத்தனின் கிறுக்கல்களுக்கு நன்றி.இக்காதலை விளங்காமல் பிள்ளையையும் பிள்ளையின் ஆண் நண்பனையும் காரால் அடித்து கொல்ல முயன்ற சம்பவங்களும் நிறைய இருக்கு.ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எமது சமுதாயத்துக்கு குறைவாக உள்ளதாகவே எனது அவதானம் சொல்கிறது.

 

நன்றிகள் நுனாவிலான் வருகைக்கும் கருத்துக்கும்....

அந்த மாதிரி எழுத்து 

 

நன்றிகள் லியோ வருகைக்கு...

Edited by putthan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதற்கு அரைவாசி ஆங்கிலத்தில எழுதியிருக்கிறீங்கள் கு.சா அண்ணா வந்து திட்டப் போகிறார் :lol:

 

நன்றிகள் ரதி , அவர் அடுத்த கதையை ஜெர்மன் பாசையில் எழுதுவார்.... :D

கதை சாதாரணமாகத் தொடங்கி முடியும்போது மனதில் எதோ ஒன்றை உருவாக்கிவிட்டுச் செல்கிறது. நன்று புத்தன்.

 

நன்றிகள் சுமே....வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் வயித்தில நெருப்பை கொட்டுகிறீங்கள்...

 

சுழியன்கள் சுழிச்சுகொண்டு வந்திடுவாங்கள் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கும் மன்னிக்கவேண்டும் சுரேசுக்கும் கிடுகுவேலிக் காதல் இருந்திருக்கிறதோ. இப்பவும் பழைய நினைவுகள் அடிக்கடிவந்து மனதினை ஆறுதல்படுத்தியோ, காயப்படுத்தியோ போகின்றதா?

 

புத்தன் எப்பவும் பிரசன்ட் முமன்ட்டில் தான் இருப்பான்,......அதாவது காட்டில் இருக்கிற ஆயிரம் குருவிகளை விட கையில் இருக்கிற ஒரு திறம் என்ற கொள்கையுடன்.... நன்றிகள் அப்பு.... கனகாலத்தின் பின்பு யாழில் காண்பதில் மகிழச்சி

இரசித்து படித்தேன். :) தலைமுறை இடைவெளி 

 

நன்றிகள் காளான்

இரசித்து படித்தேன். :) தலைமுறை இடைவெளி 

 

நன்றிகள் காளான்

எங்களுக்கு அங்கையும் இல்லை.. இங்கயும் வெறுமன பார்த்துத் துலைக்கவேண்டியிருக்கு.. :D கிறுக்கலுக்கு நன்றி..

 

நன்றிகள் இசை,இப்ப பார்க்கிறதோட வேறு ஆசையும் வருகுது...... :D

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் (Mark Zuckerberg)என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK). தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த எண்ணம் அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணையதளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பின்னர் மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. தற்போதோ 13 வயதுக்கும் மேற்பட்ட எவரும் இதில் உறுப்பினராக முடியும். அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டும் இருந்தால் போதும். 2005ம் ஆண்டு காதலில் மனம் உடைந்த இளைஞனால் விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், தற்போது அவனை உலகின் முக்கியமான பணக்காரர்களில் ஒருவனாக ஆக்கி இருக்கிறது. இன்று இந்த இணைய தளத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் போட்டி போடு கின்றன. வணிகரீதியில் மதிப்பு வாய்ந்த எம்.டி.வி. நிறுவனத்துக்கு இணையாக வாங்குவதற்கு போட்டி போடப்படும் நிறுவனங்களில் ஒன்றாக ஃபேஸ்புக் இருக்கிறது. இதில் உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முதலீடு செய்திருக்கிறது.

முக நூலில் படித்ததினை மேலே பதிந்திருக்கிறேன். தனது காதலியைத் தேடுவதற்காவே முக நூலைக்கண்டுபிடித்தார். சுரேசின் காலத்தில் முகநூல் இருந்தால் அவரின் காதல் வெற்றியடைந்திருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதற்கு அரைவாசி ஆங்கிலத்தில எழுதியிருக்கிறீங்கள் கு.சா அண்ணா வந்து திட்டப் போகிறார் :lol:

 

நீங்கள்  கொழுவுப்படுறதுக்கு நானே கிடைச்சன்????

 

புத்தன் டோண்ட் வெறி...கதை அவ்வளவும் பொருள்......இரண்டொரு வசனம் விளங்கேல்லையே தவிர மற்றும் படி எல்லாம் ஓகே....buero-0280.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

. சுரேசின் காலத்தில் முகநூல் இருந்தால் அவரின் காதல் வெற்றியடைந்திருக்கும்.

 

அப்பு ஏன் அந்த வயித்தெரிச்சலை கிளப்பிரியள்.....

நீங்கள்  கொழுவுப்படுறதுக்கு நானே கிடைச்சன்????

 

புத்தன் டோண்ட் வெறி...கதை அவ்வளவும் பொருள்......இரண்டொரு வசனம் விளங்கேல்லையே தவிர மற்றும் படி எல்லாம் ஓகே....buero-0280.gif

 

நன்றிகள் கு.சா வருகைக்கும் கருத்துக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருவும்,கதை சொன்ன விதமும் அருமை. புத்தன் அண்ணாவின் எழுத்துக்கள் சொல்லவும் வேண்டுமா?

 

கதையில் வரும் அண்ணாக்கள் போல கலாச்சாரக் காவலர்களைக் கடந்து வந்ததால் கண்முன்னே பல சம்பவங்களை நினைவு மீட்டிச் சென்றுள்ளது கதை. வாழ்த்துக்கள் புத்தன் அண்ணா.. :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு  பதிவு

கிறுக்கல்

 

தொடருங்கோ

 

(எனது வாழ்வில் என் பிள்ளைகளைக்கண்டிக்க முன் நான் செய்வது சுய  விமர்சனம்.  முடிவு .....அவர்கள் பாடு யாலி தான் :D )

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருவும்,கதை சொன்ன விதமும் அருமை. புத்தன் அண்ணாவின் எழுத்துக்கள் சொல்லவும் வேண்டுமா?

 

கதையில் வரும் அண்ணாக்கள் போல கலாச்சாரக் காவலர்களைக் கடந்து வந்ததால் கண்முன்னே பல சம்பவங்களை நினைவு மீட்டிச் சென்றுள்ளது கதை. வாழ்த்துக்கள் புத்தன் அண்ணா.. :)

 

நன்றிகள் ஜீவா வருகைக்கும் ,கருத்து பகிர்வுக்கும்

நல்லதொரு  பதிவு

கிறுக்கல்

 

தொடருங்கோ

 

(எனது வாழ்வில் என் பிள்ளைகளைக்கண்டிக்க முன் நான் செய்வது சுய  விமர்சனம்.  முடிவு .....அவர்கள் பாடு யாலி தான் :D )

 

நன்றிகள் விசுகு ..வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.