Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைக்கு எட்டியது வாய்க்கு ?

Featured Replies

தனிமையில் அதுவும் பாரில் இருந்து குடிப்பது என்பது மிகவும் அசவுக்கியமான ஒரு விடயம். கதைக்க ஆளில்லாமல் தண்ணியடிப்பது கண்ணை கட்டி கடலுக்க விட்டது போல, இன்று அந்த நிலை தான் நகுலனுக்கு, ஏனடா இதற்குள் தனியே வந்தம் என்றிருந்தது அவனுக்கு . நாலு பியரை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு போனால் தொலைக்காட்சியில் ஒரு நல்ல சினிமா படத்தையோ அல்லது பிரகாஷ்ராஜ் இன்  நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடியை பார்த்துக்கொண்டு தனது இந்திய சினிமா, பொது அறிவையும் செக் பண்ணிக்கொண்டு இருந்திருக்கலாம்.

 

ஒவ்வொரு வெள்ளி பின்னேரமும் வேலை முடிய வேலையிடத்து நண்பர்களுடன் டாப்ஸ் ரெஸ்டோரண்டில் இல் போய் இரண்டு பியர் அடித்துவிட்டுத்தான் வீட்டிற்கு போவது நகுலனின் வழக்கம். வேலை செய்யும் பல்லின நண்பர்களுடன் இந்த பழக்கம் பழகி நகுலனுக்கு பத்து வருடங்ககளுக்கு மேலாகின்றது .

வின்டரில் பாருக்கு உள்ளேயும் சம்மர் வர வீதியோரம் அவர்கள் விரிக்கும் குடைக்குள் இருந்து நாலு கதைகள் பேசியபடி பியரை அடிப்பதிலும் இருக்கும் சுகம் வேறு எதிலும் இல்லை மாதிரி அந்த  தருணங்களில் அவனுக்கு  இருக்கும். விளையாட்டு ,சினிமா ,அரசியல் என்று ஒரு சீரியசுமில்லாமல் கதைத்து, சிகரெட்டும் பத்தி விடைபெறும் போது ஆளுக்கு ஆள்  கட்டி பிடித்து  வாரவிடுமுறை நன்றாக இருக்கட்டும் என்று விட்டு போகும் அந்த வெள்ளைநிற, கயனிஸ் நண்பர்களை நகுலனுக்கு நன்கு பிடித்து போயிற்று . வெள்ளிகிழமை இந்த ஒன்றுகூடல் கட்டயாய விதியாகி இருந்தாலும் இடையில் கூட  சிலவேளை எட்டிப்பார்பார்கள். ரேஸ்ரோரண்டிற்கு குடிக்க போவது எத்தனை மணியாக இருந்தாலும் மாலை  ஏழு  மணிக்கு மேல் எவரும் அங்கு இருப்பதில்லை வீடுகளுக்கு ஓடிவிடுவார்கள்.

 

இன்று நீண்ட வார விடுமுறை என்பதால் வேலை இரண்டு மணிக்கே முடிந்துவிட்டது .நண்பர்கள் பலரும் காம்பிங் ,கொட்டேஜ் என்று போக திட்டம் போட்டதால் டாப்ஸ் ரெஸ்ட்டோரன்ட்  போகும் பிளான் கை விடப்பட்டு இருந்தது .நகுலனின்  மனைவி வேறு வெள்ளி என்றால் வேலையால் தனது தம்பியுடன் இருக்கும் தாயாரிடமும் போய்விட்டு இரவு பத்து பதினோரு மணிக்குத்தான் வீடு திரும்புவார்.

 

வேலை முடிய இன்று வீட்டிற்கு போய் வீட்டுதோட்டத்தில் வேலை செய்யவவேண்டும் என்று இருந்தவன் டாப்ஸ் பாரைஐ தாண்டும் போது ரீனா பாருக்குள் நடந்துபோவதை  கண்ணாடிக்குள்ளால் பார்த்துவிட்டான் .எதற்கும் ஒரு பியரை அடித்துவிட்டு ரீனாவிற்கும் கலோ சொல்லி விட்டு போவம் என்று காரை திருப்புகின்றான் .

ரீனா டாப்ஸ் பாரில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக வேலை செய்யும் வெயிடர்ஸ் .ரீனா வேலைக்கு வந்த முதல் வார வெள்ளியே மறக்கமுடியாத ஒரு நாள்தான் .வேலை முடிய நகுலனுடன் சேர்த்து  ஒரு பத்து பேர்கள் போய் வழக்கமாக இருக்கும் இடத்தில குந்தினால் நாலாம் நம்பர் மேசைக்கு உடன் ஓடிவரும் வெள்ளை நிற கண்ணாடி போட்ட எல்லாம் திறந்துவிட்ட நிகோல் இல்லாமல் ஒரு ஸ்பானிய முகத்துடன் ஒருத்தி வந்து தன்னை அறிமுகம் செய்கின்றார் .நான்தான் ரீனா இனிமேல் நாலாவது மேசைக்கு உபசரிக்கபோகின்றவள் .

 

ஸ்பானிஸ் பெண்கள் எல்லோருமே ஜெனிபர் லோபெஸ் மாதிரி இருப்பது ஏன் என்று இன்றுவரை நகுலனுக்கு  விளங்காமல் இருக்கு .உடற்கட்டும் சரி முகமும் சரி ஒரு இறுகிய தன்மை.கை கால் எல்லாம் சொல்லி செய்தது மாதிரி இருக்கும் .ரீனாவின்  முன்பக்கம் மட்டும் சொல்லாமலே  செய்தது போலிருக்கும்  .இந்த வேயிட்டேர்ச்கள் டிப்ஸ் இற்காகவோ என்னவோ மேற்சட்டை பட்டன்களை போடுவதேல்லை .இவர்கள் குனிய நிமிர குடித்தவன் வெறி முறிந்து இன்னமும் இரண்டு மேலதிகமாக குடிப்பார்கள் .முதலாளி இதற்கென்றே அவர்களை வேலைக்கேடுத்து உடுப்பும் கொடுக்கின்றான் போல கிடக்கு என்று நகுலன் நினைக்காத நாளில்லை.

 

ரீனா டாப்ஸ் இல் வேலைக்கு சேர்ந்த நாளில் இருந்து நகுலனது வேலையிடத்திலும் ரீனா ஒரு கதை பொருள் ஆகியிருந்தாள்.அவள் போடும் ஆடைகளில் இருந்து அவளின் அங்கங்களின் அளவை பற்றி ஒரு பட்டி மன்றமே நடக்கும். அவள் கண்ணுக்கு முன்னே மேசையில் இருக்கும் நாப்கினில் ரோசா படம் வரைந்து கொடுத்தவர்களும் கிறிஸ்மஸ் ,புது வருடங்கள் வரும் போது பரிசுகள் என்று கொடுத்தவர்களும் பலர். எல்லோருடனும் சிரித்து சிரித்து அவள் வளைய வருவதால் ஒரு நாளைக்கு எப்படியாவது கொத்திக்கொண்டு போக வேண்டும் என்ற நல்ல  எண்ணம் தான் எல்லோர் மனதிலும்  இருந்தது ஆனால் அந்த ஆசை  ஒருவருக்கும் இதுவரை ஈடேறவில்லை. ஆனால் அவனவன் மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதில்  மட்டும் விக்கிரமாதித்தன்கள் ஆக இருந்தார்கள் .

 

அவளுக்கு ஒரு காதலன் இருப்பதும் அவன் குடி ,கஞ்சா ,போலிஸ் கேஸ் என்று அலைவதுமாக இருப்பதாக அவளே சொல்லியிருக்கின்றாள் .தான் கொலம்பியாவில் இருந்து கனடாவிற்கு குடிபுகுந்த நேரம் அவன் தான் முழு உதவிகளும் செய்ததால் தன்னால் அவனை விட்டு பிரியமுடியவில்லை என்றும் அடிக்கடி சொல்லுவாள்.அவள் சொல்லுவது எவர் காதிலும் ஏறியதாக நகுலனுக்கு ஒரு போதும் பட்டதில்லை .அவர்களுக்கு அவளை எப்படியாவது மடக்குவது என்ற கருமமே தான் கண்ணே ஒழிய மற்றவைகள் எல்லாம் இரண்டாம் பட்சம் .

 

நகுலனுக்கும்  ரீனாவின் அழகில் ஒரு வித மயக்கம் இருந்தது உண்மை.ஆனால் தனது நிறத்தாலும் முற்றாக சிலருக்கு எடுத்தவுடன்  விளங்காத தனது ஆங்கிலத்தாலும் எப்போதும் சற்று தள்ளியே இந்தவிடயத்தில் இருப்பான். இருந்தாலும் குடித்து முடிய தாராளமாக டிப்சை வைத்து அவளின் கவனத்திற்கு தன்னையும்  கொண்டுவந்திருப்பதாக மனதிற்குள் நினைப்பான் .வெள்ளைகள் எல்லாம் மிக பகிரங்கமாக அவளை பற்றி பேசும்போது நான் மணமுடித்தவன் இதிலெல்லாம் ஆர்வம் இல்லை என்பதுபோல மிக அலட்சியமாக  காட்டிக்கொள்ளுவான். இருந்தாலும் ரீனா உடுக்கும் உடையில் இருந்து அவளின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு அத்துப்படி. ஒரு நாள் சற்று அதீதவெறி மயக்கத்தில் இவ்வளவு அழகான வாளிப்பான ஒரு பெண்களை எல்லாம் யார் தான் அனுபவிக்கின்றார்களோ தெரியாது, நான் என்றால் தொடக்கூட மாட்டன் பார்த்துக்கொண்டே இருப்பன் என்று வாய் தடுமாறி சொல்லிவிட்டான் .

 

அடுத்தநாள் வேலையில் நண்பர்கள் நகுலன் ரீனா உடுப்பை கழட்டினால்  அதை பார்த்து ஓவியம் மட்டும்தான் வரைவார்  என்று சொல்லி சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். தனக்கு அப்படி வரைய தெரியாது ஆனால்  ஒரு பிக்காசோவை பிடித்து  அவளை வரைய வேண்டும் என்று ஆசை இருக்கு என்று கதையை மெல்ல திசை திருப்பிவிட்டான் .அவன் மனதில் இருக்கும் ரீனாவின் மீதான அந்த ஈர்ப்புத்தான் இன்று அவனை தனியாக அந்த  ரேச்டோரண்டிற்கு இழுத்துக்கொண்டு போனது .

ரீனாவிடம் ஹாய் சொல்லி ஒரு ரெட்ரிகாட் லாகரை வெளிமேசைக்கு கொண்டுவர ஆர்டர் பண்ணிவிட்டு வெளியில் போய் ஒரு குடைக்குள் கீழருந்து  சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கின்றான்.  பியருடன் வந்த ரீனா,

 

“என்ன இன்று தனிமையில் “

 

“மற்றவர்கள் நீண்ட வாரவிடுமுறை என்று ஓடிவிட்டார்கள் ,எனக்கும் பல அலுவல்கள் இருக்கு இருந்தாலும்  ,அதற்கு முதல் ஒரு பியரையும் அடித்து அப்படியே உன்னையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் “

 

“பியர் அடிப்பது சரி பிறகென்ன என்னை பார்ப்பது என்று”

 

“ஏனோ அப்படி இன்று தோன்றியது அதுதான் வந்தேன் “

 

“நல்லது.என்னை பார்த்துவிட்டாய் ஒரு பியரை குடித்துவிட்டு போய்விடு “

 

“நீ சொன்னாலும் சொல்லாவிடாலும் இந்த பியருடன் நான் போகத்தான் போகின்றேன் “

 

நன்றி என்றபடி ரீனா ரேஸ்டோரண்டிற்குள் போய்விட்டாள். பியரை மெல்ல குடித்துமுடித்துவிட்டு ஒரு சிகரெட்டை பற்றிக்கொண்டு நகுலன் எழும்பும் போது

 

“எனக்கு ஒரு சிகரெட் தருவாயா “ என்றபடி ரீனா வருகின்றாள் .

 

“அப்ப எனக்கு இன்னமும் ஒரு பியர் கொண்டுவா ,நான் ஒரு சிகரெட் தருகின்றேன் “

 

சிரித்தபடி உள்ளே போய் பியரை கொண்டுவந்தவள் அவனருகில் இருந்து அவன் கொடுத்த சிகரெட்டை பற்றிகொண்டு

“இன்று எனக்கு நாலு  மணிக்கு வேலை முடிகின்றது .என்னை கென்னடி சப்வேயில் ஒருக்கா இறக்கிவிட முடியுமா “

 

மணிக்கூட்டில் நேரத்தை பார்த்த நகுலன்

“உனக்காக எனது அலுவல்களை பின் போட்டு இன்னமும் ஒரு மணித்தியாலம் இங்கு இருந்து விட்டு உன்னை கொண்டுபோய் இறக்கிவிடுகின்றேன் ,அதற்கு நீயாக விரும்பி ஏதாவது தரலாம் .அது டிப்ஸாக இருக்க கூடாது “

 

“ஏன் அதை இப்போதே தந்துவிடுகின்றேன் “ என்ற படி ஒரு சின்ன கட்டிப்பிடிப்புடன் உள்ளே போய்விட்டாள்.

 

நகுலனுக்கு பிசாசுபோல ஒன்று நரம்பெங்கும் புகுந்து  பேயாக ஊரத் தொடங்கியது. இனி குடிக்க கூடாது சிலவேளை அப்படி ஏதாவது  சந்தர்ப்பம் கிடைத்தாலும் சொதப்பிவிடுவம் என்று கள்ள உள்ளுணர்வு சொல்லுகின்றது .மனதிற்குள் ஒருமுறை  ரீனாவின் காதலன் கென்னடி சப்வேயில் கஞ்சா பற்றியபடி வந்து தனது முகத்தில் குத்துவதுபோலவும் ஏனோ வந்து போனது .

 

தனது வேலை உடுப்பை மாற்றி பலவர்ண நிறத்தில் ஒரு கைக்குட்டையளவு சட்டையுடன் ரீனா வருகின்றாள்.

 

“என்ன எக்ஸ்ட்ரா பெரிசா இருக்கே”

 

“எதை சொல்லுகின்றாய் “

 

“என்ன உடுப்பையா சொல்கின்றேன் “

 

“எடு காரை போவம் நகுல் “

 

காசியரில் போய் பில்லை கட்டிவிட்டு ரீனாவுடன் போய் காரில் ஏறுகின்றான் நகுல். காரை மார்க்கம் வீதியில் ஏற்றியபடியே,

 

.”நீ எங்கே இருக்கின்றாய் ரீனா “

 

“என்ன குரல் ஒரு மாதிரி மயங்குது .அது ஒரு மணித்தியால ஓட்டம் ,என்னை கென்னடி சப்வேயிலேயே இறக்கிவிட்டால் போதும்  “

 

“பரவாயில்லை. உன்னை நான் உனது வீட்டிலேயே பாதுகாப்பாக ? இறக்கி விடுகின்றேன். எங்கே என்று சொல்லு.”

 

“இப்ப பெருந்தெரு எடுத்து மேற்கிற்கு போ. வீடு பிராம்டனில் இருக்கு ”

 

“விலாசத்தை சொல்லு கதைத்துக்கொண்டே போகலாம் “

 

நகுலனின் கார் ரீனாவின் அப்பாட்மேன்ட்டின்  முன் நிற்கின்றது .

 

“நன்றி நகுல் .எனது காதலன் இங்கு போலிஸ் தேடுவதால் வன்கூவர்  போய்விட்டான். நான் தனியாத்தான் இருக்கின்றேன். அடுத்த வாரம் எனக்கு ஒரு சோதனை இருப்பதால் படிக்க வேண்டும். அதனால் தான் வேலையை முன்னதாகவே முடித்தேன் .இவ்வளவு தூரம் வந்து என்னை  இறக்கியதற்கு  நன்றி. நான் போய் வருகின்றேன்"

 

“இவ்வளவு தூரம் உன்னை கூட்டி கொண்டு வந்ததற்கு நன்றி மட்டும்தானா ரீனா  “

 

காரை விட்டு இறங்கிய ரீனா காரை சுற்றி வந்து திறந்திருக்கும் காரின் கண்ணாடி யன்னல் ஊடாக முகத்தை நீட்டி நகுலனுக்கு  ஏதோ சொல்கின்றாள்.

 

என்ன சொன்னாள் என்பது அடுத்த பதிவில் ............

Edited by arjun

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நகுலன் நல்லாய் அவியப்போறார் போலை கிடக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

முடிவை தலைப்பே சொல்லி விட்டது போலுள்ளது.என்றாலும் எதுவும் நடக்கலாம். ஸ்பானிய பெண்ணல்லவா!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சாதாரண மனிதனின் மனதில் ஓடுகின்ற நினைவுகள் அவ்வளவையும் அழகாக வடித்திருக்கின்றீர்கள், அர்ஜுன்!

 

கதையை விட்டிட்டுப் போன இடம், நகுலனிலும் பார்க்க நமக்குத் தான், கடுப்பேத்திற மாதிரிக்கிடக்கு! :o

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு நாளைக்கு எப்படியாவது கொத்திக்கொண்டு போக வேண்டும் என்ற நல்ல எண்ணம் தான் எல்லோர் மனதிலும் இருந்தது
நகுலன் கொத்திப்போட்டானோ???......எவன்டாப்பா தொடர் கதையை கண்டுபிடிச்சவன்?மனுசரை டென்சன் ஆக்கிறாங்கள்:D

கதை சாதாரண கதையாக இருந்தாலும், எழுதிய விதம் அடுத்து என்ன நடக்குமோ என்ற ஆவலைத் தூண்டுகிறது.

 

வயிறு பத்துது.  ரீனா நகுலனுக்கு 'bye' சொல்லி அனுப்பியதாக கதையை முடிங்கோ. :D

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாக கதையை நகர்த்தியுள்ளீர்கள் அர்யுன். எங்களைக் காக்க வைக்காது மிகுதியையும் எழுதிவிடுங்கோ.

  • தொடங்கியவர்

பின்னோட்டம் இட்டவர்களுக்கு நன்றி .நாளை மிகுதி எழுதிவிடுகின்றேன் .

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ரீனா காரை சுற்றி வந்து கண்ணாடி யன்னலுக்குள்ளால் முகத்தை விட்டு நகுலை பார்த்து ,

 

“வேலையிடத்து உறவுகளை  நான் வேலையிடத்துடனேயே விட்டுவிடுவேன் ,நீ என்னில் தனி கவனம் எடுப்பது  கூட எனக்கு எப்பவோ தெரியும், உன்னில் எனக்கு ஒரு நல்ல அபிப்பிராயம் இருக்கு, அதை கெடுக்கமாட்டாய் என்றால் காரை பார்க் பண்ணிவிட்டு மேலே வா ஒரு கொலம்பியன் கோப்பி குடித்துவிட்டுபோகலாம்.”

 

ரீனாவின் உறவை தொடர்ந்தும் தக்கவைக்க எதற்கும் நல்ல  பிள்ளையாக ரீனாவின் இருப்பிடத்திற்கு ஒருமுறை போய் வருவம்  என்ற எண்ணத்துடன் நகுலன் காரை பார்க் பண்ணிவிட்டு ரீனாவுடன் சேர்ந்து அவளின் நாலாம் மாடி குடியிருப்பிற்குள் நுழைகின்றான்.

 

“இதை உனது வீடுமாதிரி நினைத்து இரு ,நான் ஒரு சிறு குளியல் போட்டு விட்டுவருகின்றேன் .டி வி பார் அல்லது பாட்டு கேள். பிரிட்சில் பியர் இருக்கு அல்லது கொஞ்சம் பொறு வந்து ஒரு சுப்பர் கொலம்பியன் கோப்பி போட்டுத்தருகின்றேன்”

 

அடுத்த ரூமிற்குள் ரீனா போய்விட்டாள் . புத்தகங்கள் ,சீடி, டிவிடி, சுவர் எங்கும் சீலை சித்திரங்கள், கைவினை பொருட்கள்  என்று அறை முழுக்க பொருட்கள் நிரம்பியிருந்தாலும் ஒருவித ஒழுங்கும் கலைநயமும் அதில் இருந்தது.  டிமூலியன் ஜிமினேஸ் இன் புகைப்படம் ஒன்று கொரில்லா வீரர்  உடையுடன் கொழுவியிருக்கு, அதன் கீழ் VICTORY TO FARC  எழுதியிருந்தது .எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு மட்டும் குறைவில்லை போலிருக்கு அதானால் தான் உலகெங்கும் ஆயுத் போராட்டமும் தொடருது போல என நகுலன நினைக்க ,

 

“கோப்பி போடவா “ என்றபடி அறையால் ரீனா வருகின்றாள் .மிக சின்னதாக  ஒரு மிக குறுகிய காற்சட்டை இடுப்புடன் அப்பிக்கொண்டு நின்றது. பொன்னிற கால்களை முழுதாக காட்டியபடி மேலே ஒரு மெல்லிய டீ-சேட்டும் அணிந்திருந்தாள். இப்படி உடை அணிவது இவர்களுக்கு மிக சாதாரணம் என்று நகுலனுக்கு தெரியும். இருந்தும் ரீனாவை அந்த உடையில் பார்க்க அவனுக்குள் உண்டான கிறக்கத்தில்

 

“இந்த உடையில் நீ மிக அழகாக இருக்கின்றாய். மன்னிக்கவும் எந்த உடையிலும் நீ அழகுதான். இதில் நீ மேலும் அழகாக இருக்கின்றாய்”

 

“நன்றி நகுல் .” என்றபடி கேத்திலில் தண்ணீரை சூடாக்க வைத்துவிட்டு சில்வர் மூடி போட்ட ஒரு கண்ணாடி கிளாசுக்குள் கோப்பியை கொட்டுகின்றாள் .

 

“திங்ககட்கிழமை எனக்கு கடைசி பரீட்சை.  அவன் (போய் பிரெண்ட்) இங்கு இல்லாததும் எனக்கு வசதியாக போய்விட்டது.  இல்லாவிடில் வெள்ளி ,சனி இரவு என்றால் டொராண்டாவில் உள்ள பாரெல்லாம் போய் குடித்து பின்னர் பிரச்சனை பண்ணுவதுதான் அவன் வேலை, அவனை சமாளித்து வீடு திரும்ப எப்படியும் அதிகாலையாகிவிடும். ஆண்கள் எதிர்காலதைவிட நிகழ்காலத்தில் தான் வாழுபவர்கள் .அன்றாட சந்தோசமே அவர்களுக்கு முக்கியம் “

 

என்றபடி நகுலை பார்த்து கண்ணடிக்கின்றாள்.

 

ரீனா கொடுத்த கோப்பியை ருசித்தபடி நகுலன் சொன்னான் .

 

“நல்லாயிருக்கின்றது என்றால் ஏதோ தேவைக்கு சொல்லுகின்றான் என நினைப்பாய் ஆனால் உண்மையில் இந்த கோப்பியில் இருக்கும் ஒரு வகை உவர்ப்பு மிக நன்றாகத்தான் இருக்கு “

 

என்றபடி கோப்பிப் கப்பை மேசை மீது வைத்துவிட்டு

 

“அடுத்த வெள்ளி சந்திப்போம்”

 

என்றவன் வாசல் கதவை நோக்கி நடக்க ஆரம்பிக்கின்றான் .

 

“ஹேய் நகுல், உன் முகமும் உடல்மொழியும்  விளையாட்டு போட்டியில் எதிர்பாராமல் தோற்று அனைத்தையும் இழந்தது போல வெறுமையாக போவார்களே அது போல இருக்கு, ஏன் எதையும் உண்மையில் எதிர்பார்த்து வந்தாயா சொல்லு? “

 

“அப்படி ஏதும் இல்லை,  இருந்தாலும் உனது உதட்டால் ஒரு முத்தம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்து இருந்தேன். அதுதான் சற்று ஏமாற்றமாகிவிட்டது. இன்று இல்லாவிட்டாலும் இன்னொரு நாளைக்கு நீ என்ன எனக்கு  தராமலா விடப்போகின்றாய் “

 

என்றபடி நகுல் போய் வாசல் கதவை திறக்க, சோபாவில் இருந்து எழும்பி அவனை நோக்கி வந்த ரீனா இரு கைகளாலும் அவன் கழுத்தை கட்டி இழுத்து அவன் உதட்டில் தனது உதட்டை பதிக்கின்றாள். தன்னிலை மறந்த நகுல் ஏது செய்வது என்று தடுமாற, ரீனா வெகு லாவகமாக அவனை அப்படியே சோபாவில் தள்ளி அவன் மீதேறி அவன் உடலெங்கும் முத்த மழை பொழிய தொடங்க,

 

அந்த நேரம் பார்த்து அப்பாட்மென்ட் பஸ்ஸர் ஒரு நராசுகமான ஒலியை எழுப்புகின்றது.  மெல்ல எட்டி பஸ்ஸரை ரீனா அமத்த,

 

“கதவை திற கதவை திற” 

 

என ஒரு ஆண் குரல் பெருங்குரலில் சத்தம் இடுகின்றது.  குரலை கேட்டதும் உடனே தன்னை சுதாகரித்து எழுந்த ரீனா நகுலை நோக்கி,

 

“எனது போய் பிரென்ட் வந்துவிட்டான், உடனே ஓடித்தொலை. உன்னை அவன் இங்கு பார்த்தான் என்றால் உன்னை கொன்றுவிடுவான் “

 

என்ன நடக்கின்றது என்றே புரியாமல் ஒரு கணம் திகைத்த  நகுல் “போய் பிரென்ட் ,கொலை” என்ற சொற்கள் மாத்திரம் காதில் பாய, சோபாவை விட்டு துள்ளி எழும்பியவன் தான்  உடையிலாமல் இருப்பது புரிகின்றது.

 

நகுலின் டெனிம் பான்ட்ஸ்சையும் சேட்டையும் அவன் அவன் மீது சுருட்டி எரிந்தபடி ரீனா,

 

“இப்படியே ஓடு ,ஓடு, மாடிப்படிகளால் ஓடு”  என்றபடி வாசல் கதவை திறக்கின்றாள் .

 

உயிர் தப்பினால் காணும் என்றநிலையில்  சுருட்டிய உடுப்புகளை தூக்கியபடி  அண்டர்வேயருடன் நகுலன் மாடி படிகளை நோக்கி ஓடியவன்  மாடிப்படிக்கதவை திறந்து ஒரு ஏக்க பெருமூச்சுடன் வேர்க்க விறுவிறுக்க மாடிபடிகளில் நின்றபடியே தனது பான்ட்ஸ்சை அணிகின்றான் .கடவுளே  நல்லவேளை ஒருவரும் கொரிடோரில் வரவில்லை .தலையோடு வந்தது தலைப்பாகையுடன் போய்விட்டது , விட்டால் காணும் வீடு போய் துலைவம் என்ற மன நிலையில் நகுலன் படிகளால் இறங்கி லோபிக்கு வருகின்றான் .

 

லோபியில் சிறு சனக்கூட்டம். நாலு ஐந்து போலீஸ்காரர்கள் வேறு நிற்கின்றார்கள் .என்னடா மதுரைக்கு வந்த சோதனை என்று நினைத்தபடி வாசல் கதவை திறக்க போனவன்  டாக்சிகாரன்  போலீசிடம்,

 

“விமானநிலையத்தில் ஏறியவன் இங்கு அப்பாட்மென்ட் வாசலில் இறக்கியதும் ஓட தொடங்கிவிட்டான். நான் அவன் பின்னே ஓடி வர  அவன் இரண்டாவது கதவில் யாரிடமோ கதவை திறக்க சொல்லி பஸ்சரில் குரல் கொடுக்க கதவு  திறக்கும் போது அவனை உள்ளே போகவிடாமல் நான் இழுத்து பிடித்துவிட்டேன் .என்னை  அவன் திரும்பி அடிக்க நீங்களும் வந்துவிட்டீர்கள்”

 

“அவன் ஏற்கனவே எம்மால் தேடப்பட்டுவருபவன் தான் ,அவனை சோதனை செய்ததில் அவனிடம் எதுவித பணமுமில்லை. நீ போகலாம் பின்னர் தொடர்பு கொள்கின்றோம்”.

 

நிலத்தில் வைத்து அமத்தி இரு பொலிஸ்காரர்களால் கைவிலங்கு இடப்பட்ட ஒருவனை போலிஸ் தனது காரின் பின் இருக்கையில் தள்ளுகின்றார்கள். இந்த வேடிக்கைகள் எல்லாவற்றையும் பார்த்தபடியே மெதுவாக முன் கதவை திறந்து காரை நோக்கி மிக விரைவாக நடையை கட்டுகின்றான் நகுல் .

 

“நீ ஒரு கள்ள அதிஸ்டக்காரனடா”  என்ற குரல்கேட்டு மேலே அப்பாட்மென்ட் மாடிகளை நிமிர்ந்துபார்க்கின்றான் .

 

“நன்றாக பயந்துவிட்டாய் போலிருக்கு .அவன் தான் எனது போய்-பிரென்ட் ,எனக்கு சொல்லாமல் வன்கூவரில் இருந்து பிளைட்டில் வந்ததவன் தேவையில்லாமல் டக்சிகாரனுடன் காசு கொடுக்காமல் தகராறு பண்ணி போலீசில் மாட்டுப்பட்டுவிட்டான். எனக்கு இப்படி நடப்பது எல்லாம்  மிக சாதாரணம். அடிக்கடி நடப்பதுதானே. அவன் அப்படித்தான் திருந்தவே மாட்டான் .”

 

ரீனாவை பார்த்து சிரித்தபடியே பதில் ஏதும் கூறாமல் போய் வருகின்றேன் என்று  கையை மட்டும் காட்டிய நகுல்

 

“நீ விரும்பினால் விட்டதில்  இருந்து தொடர மேலே வரலாம்,  நீ கட்டயாம் வருவாய் என்றும் எனக்கு தெரியும் “

 

என்றபடி ரீனா உள்ளே போகின்றாள் .

 

எனக்கு எங்கெல்லாம் மச்சம் இருக்கு என்று ஒருக்கா எண்ணத்தான் வேண்டும் என்று மனதிற்குள் சிரித்தபடி நகுலன் ரீனாவின் ஒட்டுமொத்ததிற்காக  திரும்ப போய் படியேறுகின்றான் .

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் இனிமேல் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லக்கூடாது சரியா?? :D

 அர்ஜீன் உங்கள் எழுத்து நடையும்,அனுபவமும் அருமை

  • கருத்துக்கள உறவுகள்

அழகான எழுத்து நடையுடன்  அளவாகவும் ரசனையாகவும் எழுதியுள்ளீர்கள் , வாழ்த்துகள்  அர்ஜுன் !! :D  :D

  • தொடங்கியவர்

பின்னூட்டங்களுக்கும் பச்சைகளுக்கும்  நன்றி .

  • கருத்துக்கள உறவுகள்

இனியாவது 

ஆத்ம சாந்தியடையக்கடவது..................... :lol:  :D  :D

கதை நன்றாக இருத்தது,  :) அர்யுனின் அம்பு ஒரு நாளும்  குறி தப்புவது இல்லை  :lol: அவன் தம்பி நகுலனின் அம்பும் குறி தப்பாது போலுள்ளது  :D 


இனியாவது 

ஆத்ம சாந்தியடையக்கடவது..................... :lol:  :D  :D

 

யாரது சாந்தி ?

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கதை அந்தமாதிரி......படியாலை திரும்ப ஏறிப்போன நகுலின்ரை கதையின்ரை மிச்சம் வருமோ????
 
அதுசரி நகுலன்ரை சொந்தமனுசியும் ரீனா மாதிரி கேம் போடவெளிக்கிட்டால்??????.........நகுலன் என்ன செய்வார்? :lol:
 
எப்பவும் தனிய ஒருபக்கம் யோசிக்கக்கூடாது கண்டியளோ.......இரண்டுபக்கமும் யோசிக்கோணும். :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

கதை அருமை அர்ஜுன்.

  • தொடங்கியவர்

பச்சைகளுக்கும் பின்னூட்டங்களுக்கும் ஊக்கங்களுக்கும் நன்றி .

மீண்டும் அடுத்த கதையுடன் சந்திப்போம் .

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மலையாள மசாலா படம் எடுத்த திருப்த்தி ஏற்ப்படுகின்றது....,,:D

  • கருத்துக்கள உறவுகள்

கதை அந்தமாதிரி......படியாலை திரும்ப ஏறிப்போன நகுலின்ரை கதையின்ரை மிச்சம் வருமோ????
 
அதுசரி நகுலன்ரை சொந்தமனுசியும் ரீனா மாதிரி கேம் போடவெளிக்கிட்டால்??????.........நகுலன் என்ன செய்வார்? :lol:
 
எப்பவும் தனிய ஒருபக்கம் யோசிக்கக்கூடாது கண்டியளோ.......இரண்டுபக்கமும் யோசிக்கோணும். :icon_idea:

 

நடத்தை கெட்டவள் என்று சொல்லிப்போட்டு ஊருக்கு போய் இன்னொருத்தியை கூட்டிக்கொண்டுவர வேண்டியதுதான்... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.