Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவி ஆத்திரம்: கொதிக்கும் எண்ணையை ஊற்றியதால் கணவர் உடல் வெந்தது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பூர் அருகே குடும்ப தகராறில் கொதிக்கும் எண்ணையை ஊற்றியதால் கணவரின் உடல் வெந்தது. தப்பி ஓடிய மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் அண்ணாநகர் ஜோதிபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் தங்கபெருமாள் (வயது 43). இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் கோவையை சேர்ந்த ஆறுமுகத்தின் மகள் சர்மிளாவுக்கும் (37) திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனுஷ் (7), சச்சின் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

வீட்டில் இருந்த சர்மிளா அந்த பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து வந்தார். மனைவி வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வது கணவர் தங்கபெருமாளுக்கு பிடிக்கவில்லை. அதனால் மனைவியை சத்தம் போட்டு வந்தார். மேலும் பாத்திரக்கடைக்கு பாத்திரம் வாங்க வரும் பெண்களிடம் தங்கபெருமாள் பேசுவது மனைவி சர்மிளாவுக்கு பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்தது.

குடும்ப தகராறு காரணமாக கடந்த 3 நாட்களாக தங்கபெருமாள் வீட்டுக்கு வராமல் பாத்திரக்கடை குடோனிலேயே படுத்து தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சர்மிளா நேற்று இரவு பாத்திர குடோனுக்கு சென்று தங்கபெருமாளை கண்டித்துள்ளார்.
 
இதைத்தொடர்ந்து தங்கபெருமாள் கடையை பூட்டிவிட்டு இரவு 11 மணி அளவில் வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் சாப்பிட்டு விட்டு அறையில் படுத்து தூங்கினார். அப்போது கோபத்தில் இருந்த சர்மிளா சமையல் எண்ணையை நன்றாக தீயில் கொதிக்கவைத்து, அதை எடுத்து கணவர் தங்கபெருமாள் உடல் மீது ஊற்றினார்.

தங்கபெருமாளின் கை, கால்கள், நெஞ்சு, வயிறு ஆகியவை வெந்து வலி தாங்க முடியாமல் அலறினார். உடனே சர்மிளா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, கதவை வெளிப்புறமாக தாழ்பாள் போட்டுவிட்டு வேகமாக சென்றுவிட்டார்.

உடல் வெந்து அவதிப்பட்ட தங்கபெருமாள் கதவை திறந்து வெளிவரமுடியாமல் உயிருக்கு போராடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, தங்கபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சோக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் சர்மிளா மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=103831

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சநாளா தமிழ்நாட்டில் பெண்கள் எல்லாம் டெரரா இருக்குறாங்க.. :D

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சநாளா தமிழ்நாட்டில் பெண்கள் எல்லாம் டெரரா இருக்குறாங்க.. :D

எங்கையாவது ஆயிரத்தில ஒண்டு இப்படி இருக்கும்!

நாங்க அதுகளைத் தானே தேடித் பிடிக்கிறம், இசை!

நாய் மனிதனைக் கடித்தால், அது சம்பவம்!

மனிதன் நாயைக் கடித்தால், அது செய்தி! :icon_idea:

ஏமாற்றும் கணவர்மார்க்கு நல்ல தண்டனை! :lol:  :lol: வாழ்க சர்மிளா!!! :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இது நல்லாய் இல்லை. இதை ஏன் யாழிலை இணைத்த நீங்கள். உதுகளை வாசிக்கும் மனிசிமார்கள் , கணவன்மார்களை எதாவது செய்தாலும் செய்துவிடுவார்கள். எதுக்கும் கல்யாணம் கட்டின ஆம்பிளையள் கவனமாக இருங்கோ.

சர்மிளாவுக்கு தைரோயிட் பிரச்சனை போபோலுள்ளது பாவம் கணவன் :( 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையாவது ஆயிரத்தில ஒண்டு இப்படி இருக்கும்!

நாங்க அதுகளைத் தானே தேடித் பிடிக்கிறம், இசை!

நாய் மனிதனைக் கடித்தால், அது சம்பவம்!

மனிதன் நாயைக் கடித்தால், அது செய்தி! :icon_idea:

நெடுக்ஸ் இந்த மாதிரி செய்திகளை போட்டு அம்மாவை வெருட்டுறார் போலை.. :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது ஓரிரு பெண்களுக்குள்.. என்று வைச்சுக் கொண்டாலும்.. கொலையும் செய்வாள் பத்தினின்னு ஏன் எம் முன்னோர் எச்சரிச்சாங்க..???! பத்தினி என்றாள் ஓரிரு பெண்களின் பெயரா..??!

பெண்கள் பார்ப்பதற்கு சாதுவாகத் தெரிந்தாலும்.. கொலை செய்யுற அளவுக்கு கொடூரமானவங்க என்றதையும் உணர்த்த வேண்டியது அவசியம். :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொலையும் செய்வாள் 'பத்தினி' என்பது உண்மைதான்...!

கொதிக்கும் எண்ணையை, தாலிகட்டிய கணவன் மீது ஊற்றுமளவுக்கு, மனைவியின் மனம் கொதிக்க அவர் என்ன செய்தாரோ? அவர் ராமரோ, ராவணனோ? :o

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இது நல்லாய் இல்லை. இதை ஏன் யாழிலை இணைத்த நீங்கள். உதுகளை வாசிக்கும் மனிசிமார்கள் , கணவன்மார்களை எதாவது செய்தாலும் செய்துவிடுவார்கள். எதுக்கும் கல்யாணம் கட்டின ஆம்பிளையள் கவனமாக இருங்கோ.

நியாமான கவலைதான்.

எதற்கும் காவல் நிலையத்தில் ஒரு முன் புகார் கொடுத்து வைக்கலாம். ஆயுட் காப்பீடு பாலிசி ஒன்றும் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஓரிரு பெண்களுக்குள்.. என்று வைச்சுக் கொண்டாலும்.. கொலையும் செய்வாள் பத்தினின்னு ஏன் எம் முன்னோர் எச்சரிச்சாங்க..???! பத்தினி என்றாள் ஓரிரு பெண்களின் பெயரா..??!

பெண்கள் பார்ப்பதற்கு சாதுவாகத் தெரிந்தாலும்.. கொலை செய்யுற அளவுக்கு கொடூரமானவங்க என்றதையும் உணர்த்த வேண்டியது அவசியம். :):lol:

நெடுக்கர், தன் 'பத்தினித்' தன்மை பறிபோகாமல் இருக்கக், கொலையும் செய்வாள் பத்தினி என்பது தான் பழ மொழி! :D

  • கருத்துக்கள உறவுகள்

பாத்திரக் கடையில படுத்திருந்தவரை நாடு இரவு கூட்டிவந்து  உடம்புக்கு இதமாய் சுடுஎண்ணையால் நன்றாய்த் தேய்த்து தோயவார்த்து  மார்பில் சாய்வம்  என்று நினைத்திருக்கின்றா , கொஞ்சம் மிஸ்சாயிட்டுது ! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச  நாளுக்கு முன் 

அதைவிட கிருமிகள் உள்ள  இடம்  வேறெதுவும் இல்லை  என்றார்கள்

இப்ப  பக்கத்தில் படுப்பதற்கும் உலை  வைக்கிறார்கள். :lol:

கொஞ்சநாளா தமிழ்நாட்டில் பெண்கள் எல்லாம் டெரரா இருக்குறாங்க.. :D

அதுக்குப்பக்கத்தில் தானே  இத்தனை  நாளாக படுக்கின்றோம் என்று தைரியமாக எழுதிய  தங்களின் இந்த மனமாற்றம் :D பெரும் வெற்றி ராசா

 நம்ம நெடுக்குக்கும் சுபேசுக்கும்........... :lol: .

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் குணாதிசயங்களை செய்தியாக இங்கே வாசித்த நாம், கீழே இணைத்துள்ள இந்த செய்தியிலுள்ள ஆணின் செய்கைக்கு என்ன பதில் வைத்துள்ளோம்?

http://tamil.oneindia.in/news/2013/07/18/india-retired-government-employee-arreste-179359.html

பெண்களை சுட்டுமுன், சற்றே சிந்திப்போமா? :huh:

(அநாகரீகமான, மிருகச்செயலின் செய்தியென்பதால் நேரடியாக இங்கே பதியவில்லை)

.

Edited by ராஜவன்னியன்

அப்படியே இதையும் படியுங்கோ... ராஜவன்னியன் அண்ணா. இதற்கும் என்ன பதிலை நாங்கள் வைச்சிருக்கிறம்.........

சிறுமியை விபச்சார கும்பலிடம் விற்ற தாய்.

ராஜஸ்தான் மாநிலம் டான்க் பகுதியில் ஒரு பெண், தனது 11 வயது மகளை 6 லட்சத்துக்கு ஒரு விபச்சார கும்பலிடம் விற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் துணையுடம் அந்தச் சிறுமி தப்பினார். இதனால் இந்தத் தகவல் வெளியே தெரியவந்துள்ளது.

அந்தப் பெண், தனது மகளை ரூ.6 லட்சத்துக்கு விற்ற ஒப்பந்தப் பத்திரத்தை போலீஸார் கைப்பற்றினர்.

இது குறித்து துணை காவல் ஆய்வாளர் ராகேஷ் வர்மா கூறிய போது, “நாங்கள் அந்தச் சிறுமியிடம் இருந்து அந்தப் பத்திரங்களை கைப்பற்றினோம்.

அதில் மிகத் தெளிவாக, அந்தச் சிறுமியை கஞ்சார் பஸ்தியைச் சேர்ந்த சண்ட்ரா மற்றும் தாரா சந்த் ஆகியோருக்கு ரூ.6.5 லட்சத்துக்கு விற்பனை செய்துள்ளார் அவரது தாய். இந்த ஒப்பந்தத்தில் டிச.16 அன்று ரூ.2 லட்சம் உடனே தரப்பட் டுள்ளது.

அடுத்த இரு மாதங்களில் ரூ.4 லட்சம் தரப்படும் என்று கூறப் பட்டிருந்தது’’ என்றார்.

தற்போது அந்தச் சிறுமி, மகளிர் காப்பகமான நாரி நிகேதன் ஷெல்டருக்கு அனுப்பப் பட்டுள்ளார். சிறுமியை விற்ற தாய் ராஜ்ராணி, வாங்கிய தம்பதி, இடைத் தரகராகச் செயல்பட்டவர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விதவையான ராஜ்ராணியோ, தனது சமுதாயப் பஞ்சாயத்தால் தனக்கு அபராதம் விதிக்கப் பட்டதாகவும், அதற்காக மகளை அடமானம் வைத்து ரூ.2 லட்சம் பணத்தைப் பெற்றதாகவும், இதை மீண்டும் கொடுத்து மகளை மீட்க இருப்பதாகவும் கூறுகிறார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?PVN=91027

மகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய் உள்பட 3 பெண்கள் கைது.

சென்னை நகரில் லாட்ஜ் மற்றும் வீடுகளில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்யவும், அப்பாவி இளம் பெண்களை மீட்கவும், போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டார்.

சென்னை விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கிங்ஸ்லின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கொளத்தூர் விநாயகபுரம் பகுதியில் ஒரு வீட்டில் சில பெண்களை வைத்து விபச்சாரம் செய்வதாக கிடைத்த தகவலின்படி அந்த பெண்களிடம் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் செல்போனில் தொடர்பு கொண்டனர்.

அப்போது அந்த வீட்டில் 4 அழகிகள் இருப்பதாகவும், ரூ.5 ஆயிரம் கொண்டு வந்தால் பெண்களை பார்த்து தேர்வு செய்து உல்லாசமாக இருக்கலாம் எனக்கூறினர். போலீசார் வாடிக்கையாளர்போல் அந்த இடத்துக்கு பணத்துடன் சென்றனர். போலீசாரிடம் பெண்களை காட்டி பணம் வாங்கியபோது விபச்சாரம் நடப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

அங்கு விபச்சாரம் நடத்தி வந்த உஷா ஜெயின் (47), ஜெகதீஸ்வரி (48) ஆகியோரை கைது செய்தனர். அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம் பெண்களை போலீசார் மீட்டனர். விசாரணையில் மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் உஷா ஜெயினின் சொந்த மகள் ஆவார்.

கொருக்குப்பேட்டை பகுதியில் சமூக சேவகி என்ற பெயரில் வேலை வாங்கி தருவதாக கூறி வேலை கேட்டு வரும் பெண்களை ஆசைவார்த்தை கூறி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த வேளா என்கிற வேளாங்கண்ணி (37) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். அப்பெண் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இளம் பெண்ணை மீட்டனர்.

http://www.maalaimalar.com/2012/01/28171902/prostitute-matter-3-lady-arres.html

மிருகத்திலும் கேடுகெட்ட மனிதர்கள் என்று பார்த்தா... ஆண் பெண் இரண்டிலும் சரிக்குச் சமனா இருக்குதுங்க..! இதை உலகம் ஆண்கள் மீது மட்டும் திணிக்கப்படாது. பெண்கள் மீது மென்போக்கு கண்ணோட்டம் மட்டும் இருக்கக் கூடாது. இதனாலும்.. வன்முறைகளை.. சமூகவிரோதச் செயல்களைப் பெண்கள் செய்ய அவர்களுக்கு கூடுதல் துணிவு ஏற்படுகிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மனைவி ஆத்திரம்: கொதிக்கும் எண்ணையை ஊற்றியதால் கணவர் உடல் வெந்தது.

காலைமை பின்னேரம் காலாலை ஒண்டு அப்பப்ப போட்டிருந்தால் மவனே உனக்கு உந்த நிலை வந்திருக்குமா? :D

  • கருத்துக்கள உறவுகள்

மிருகத்திலும் கேடுகெட்ட மனிதர்கள் என்று பார்த்தா... ஆண் பெண் இரண்டிலும் சரிக்குச் சமனா இருக்குதுங்க..! இதை உலகம் ஆண்கள் மீது மட்டும் திணிக்கப்படாது. பெண்கள் மீது மென்போக்கு கண்ணோட்டம் மட்டும் இருக்கக் கூடாது. இதனாலும்.. வன்முறைகளை.. சமூகவிரோதச் செயல்களைப் பெண்கள் செய்ய அவர்களுக்கு கூடுதல் துணிவு ஏற்படுகிறது.

உண்மைதான். ஆனால் ஆண்டாண்டு காலமாக ஆணாதிக்கம் தானே கொடிகட்டிப் பறந்தது? இன்னமும் அதே நிலைய தக்க வைக்க முயல்கிறது? ஆண்,பெண் இருபாலரும் சட்டதின் முன் சமமென இருக்கையில், வெளி சமுதாயத்தில் அந்நிலை இன்னமும் வரவில்லையே? பெண்மை அடக்கியாள்வதே ஆண்மையென இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார்களே? அவர்களின் தேவைகளை, உணர்வுகளை மனதளவாவது ஏற்று சிந்திக்கிறோமா? இல்லையே? அவர்களுக்கும் சற்றே உரிமை வருவது ஆட்பட்ட ஆண் பலவீனமாகும்போது தானே?

உடற்கூறு ரீதியிலும், மனதளவிலும் சிறுவயது முதல் பெண்ணென்றால் ஆணிற்கு அடிமைதான் என சொல்லிச் சொல்லியே வளர்க்கப்பட்ட பெண்ணை நம் சமுதாய கட்டமைப்பு இன்னமும் சுதந்திரமாக அவர்களை விடவில்லையே? பெண் தவறு செய்தால், ஏளனமாக அவளை ஒதுக்கி வைத்து தூக்கிப் போட்டு மிதிக்கத் துடிக்கும் ஆண் மனம், தன் ஆணாதிக்க புத்தியை விட்டுவிட்டு என்று திருந்துமோ அன்று தான் பெண்களுக்கு உண்மையான சுதந்திரம்.

பெண் குற்றங்களை நன்றாக அலசி ஆராய்ந்தால், ஒவ்வொரு பெண்ணின் குற்றச் செயல்களுப் பின் ஒரு தகப்பனோ, உடன்பிறந்தாரோ, சக ஊழியரோ அல்லது கணவனோ நிச்சயம் இருப்பர்.

காலைமை பின்னேரம் காலாலை ஒண்டு அப்பப்ப போட்டிருந்தால் மவனே உனக்கு உந்த நிலை வந்திருக்குமா? :D

நல்ல சிகிச்சை, ஐயா. :rolleyes:

இதே நியாயப்படுத்தலை ஆண்கள் செய்யும் குற்றங்கள் தொடர்பிலும் பெண் மீது செய்யலாம் அண்ணா. ஆனால் அது பிரச்சனைக்குத் தீர்வல்ல. பிரச்சனைக்குத் தீர்வு.. ஆணோ பெண்ணோ குற்றவாளிகள் பாரப்பட்சமின்றி தண்டிக்கப்படுவதும்.. திருந்தி நல்வழிக்கு வர வழிகாட்டுவதுமே ஆகும். பெண் என்பதற்காக அவள் செய்யும் குற்றங்களை மறைப்பதும்.. குறைத்து மதிப்பிடுவதும்.. ஆணைப் பலிக்கடா ஆக்குவதும்.. அதற்கு ஆணாதிக்க சாயம் பூசி நியாதிப்பதும் தவறு என்பது தான் எங்களின் நிலைப்பாட்டு. :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஓரிரு பெண்களுக்குள்.. என்று வைச்சுக் கொண்டாலும்.. கொலையும் செய்வாள் பத்தினின்னு ஏன் எம் முன்னோர் எச்சரிச்சாங்க..???! பத்தினி என்றாள் ஓரிரு பெண்களின் பெயரா..??!

பெண்கள் பார்ப்பதற்கு சாதுவாகத் தெரிந்தாலும்.. கொலை செய்யுற அளவுக்கு கொடூரமானவங்க என்றதையும் உணர்த்த வேண்டியது அவசியம். :):lol:

:).

‘கோவம் என்ற ஒன்று வந்துவிட்டால்..’ஆண் என்ன பெண் என்ன? ‘ தன்னிலை மறத்தல் அல்லது தன்னிலை இழப்புத்தான்.

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒவ்வொரு ஆண் இருக்கிறான். ‘ பெண்களுக்கு கோவம் வந்தால் அந்த “ஆண்’ தலைகாட்டுகின்றான்.

அவ்வளவுதான்.

:) நெடுக்ஸ் அண்ணை எப்படி உங்கட தங்கையின் விளக்கம்?:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:).

‘கோவம் என்ற ஒன்று வந்துவிட்டால்..’ஆண் என்ன பெண் என்ன? ‘ தன்னிலை மறத்தல் அல்லது தன்னிலை இழப்புத்தான்.

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒவ்வொரு ஆண் இருக்கிறான். ‘ பெண்களுக்கு கோவம் வந்தால் அந்த “ஆண்’ தலைகாட்டுகின்றான்.

அவ்வளவுதான்.

:) நெடுக்ஸ் அண்ணை எப்படி உங்கட தங்கையின் விளக்கம்? :)

இதை விட தெளிவா ஒரு விளக்கத்தை இது தொடர்பில்.. சுருங்கச் சொல்ல முடியாது. எங்கட தங்கச்சிங்க என்றால் சும்மாவா..! சாதாரண பெண்கள் போல இருந்தால் எங்கட தங்கச்சிகளாக இருக்க முடியாதே..! :lol::)

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் இனிமேல் கொஞ்சம் அவதானமாக  இருக்கவேண்டும் :D  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் இனிமேல் தூங்கும் போதும்கூட கொஞ்சம் அவதானமாக  இருக்கவேண்டும் விழித்து இருக்கும்போது என்னை துரத்தி பிடிக்கமுடியாது   :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கும் இனிமேல் கொஞ்சம் அவதானமாக  இருக்கவேண்டும் :D  :lol:  :lol:

தமிழரசு

Posted Today, 10:48 PM

எதுக்கும் இனிமேல் தூங்கும் போதும்கூட கொஞ்சம் அவதானமாக  இருக்கவேண்டும் விழித்து இருக்கும்போது என்னை துரத்தி பிடிக்கமுடியாது    :D   :lol:

உப்புடி நாள்முழுக்க பயந்து பயந்து சாகிறதை விட தாயேசரணம் எண்டு காலிலை விழுறது பெட்டர். :D  

உப்புடி நாள்முழுக்க பயந்து பயந்து சாகிறதை விட தாயேசரணம் எண்டு காலிலை விழுறது பெட்டர். :D  

நான் என்ற அகங்காரம்(ego)   இடங்கொடுக்காது  அண்ணா :D 

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ற அகங்காரம்(ego)   இடங்கொடுக்காது  அண்ணா :D 

அப்ப நல்ல அடிவாங்குங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.