Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சிங்கள மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
jaffna-sinhala-girls-house-seithy-1-2013

யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவிகள் தங்கிருக்கும் வீட்டுக்கு இனம்தெரியாத நபர்கள் மது போத்தல்கள் மற்றும் கற்கள் என்பனவற்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். பல்கலைக்கழகத்திற்கு பின் புறமாக உள்ள கம்பஸ் லேனில் தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று சிங்கள மாணவிகள் தங்கி கல்வி கற்று வருகின்றனர். நேற்று நள்ளிரவு மது போதையில் குறித்த வீட்டுக்கு சென்ற சிலர் கத்தி கூச்சலிட்டதுடன், வாயில் கதவையும் தள்ளி திறக்க முற்பட்டுள்ளனர். கதவை திறக்க முடியாது போனமையினால் வீட்டுக்கு கற்கள் மற்றும் வெற்று மது போத்தல்கள் என்பவற்றை வீசியுள்ளார்கள். இதனால் வீட்டு யன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளதுடன் வீட்டின் முன்பகுதி முழுவதும் வீசப்பட்ட போத்தல்களின் கண்ணாடிகள் சிதறியுள்ளன.

இச் சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவிகளால் அறிவிக்கப்பட்டதை அடுத்து நிர்வாகத்தினால் அங்கு தங்கியிருந்த 16 தென்னிலங்கை மாணவிகளும் பாதுகாப்பாக யாழ். பல்கலைக்கழக விடுதிக்கு இடம்மாற்றப்பட்டுள்ளார்கள். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

jaffna-sinhala-girls-house-seithy-1-2013

http://www.seithy.com/breifNews.php?newsID=88124&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மாணவிகளின், சிங்கள --- செய்திருப்பார்கள்.
அநியாயமாக தமிழனின் வீட்டுக் கண்ணாடி உடைந்து விட்டது.
இனியும்... சிங்கள மாணவ, மாணவிகளை அங்கே... வாடகைக்கு குடியிருக்க விடக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோவின் அலுவலகம் தாக்கப்பட்டது, சிங்கள மாணவிகள் தங்கிய வீடு தாக்கப்பட்டது என்பன ஒரு திட்டமிட்ட தாக்குதல்களின் மாதிரியை கொண்டுள்ளது. அரசின் உளவுப்படை மீது பலத்த சந்தேகம் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவது தேர்தல் வந்தால் இப்படியான அசம்பாவிதங்களும்

நடைபெறுவது வழமை அல்லவா.

கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் அதிகளவிலான சோதனைச் சாவடிகள் 

மக்களை அச்சுறுத்த உதவியாக இருக்கும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சிறிலங்கா தேர்தல் நாடகத்தின் ஒரு அங்கம் 

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் இந்துவில் படித்த ஒரு நண்பருக்கு பெட்டை சுத்த, அவர் திட்டம் போட்டு, கிடுகு வண்டில் காரரிடம், அந்த வீட்டில் 600 கிடுகு இறக்குங்கோ. அம்மா கத்துவா, அவோ அப்படித்தான், சும்மா கத்துவா, உன்னை யாரு போடச் சொன்னது எண்டுவா . பொம்பிளைப் பிள்ளை இருக்கிற வீடு  எண்டு வேலி அடைக்க  அப்பா என்னட்ட தந்த காசு, பாங்கில எடுத்துக் கொண்டு ஓடி வாறன். நீங்க போடுங்கோ, எண்டு சொல்லிப் போட்டான்.
 
பெட்டையிண்ட அம்மா காளி மாதிரி நிக்க, இடுப்பில கையோட பெட்டை, தாய்க்குப் பக்கத்தில நிக்க, கிடுகு போட்டவர் தம்பி எல்லாம் விபரமா சொன்னவர், இப்ப வருவார் எண்டு, கூலா வெத்திலையப் போட்டுக் கொண்டு வேலி ஓரமா, குந்தி இருக்க, அடுத்த நாள் முதல் பெட்டைக்கு, 'பாவம் கிடுகுக் காரன். இறக்கச் சொல்லிப் போட்டு காசை குடுக்காமல்... இங்க பெரிய எடுப்பு' என்டு நக்கல் தொடங்கி விட்டுது.
 
'மச்சான், கிடுகுக் காசு எப்ப குடுப்பாய்' எண்டு வந்தது, போனது எல்லாம்  கேட்டுக் கேட்டு பெட்டைக்கு விசர் வராக் குறை.
 
ஆமியோ, போலிசோ, உளவுப் படையோ, சிங்களப் பொடியள். சிங்களப் பெட்டையள், யாழ்ப்பாணம்.
 
சிங்களப்பெட்டை ஒண்டு பொடிக்கு சுத்த, பொடி, தண்ணியப் போட்டிட்டு வந்து கல்லை எறிஞ்சிருப்பான்.
 
இதுக்குப் போய் பலகலை கழக  நிருவாகம் பெரிசாக அலட்டக் கூடாது.
 
இதெல்லாம் சகயமப்பா!

Edited by Nathamuni

அது சரி கிடுகுக் காசு கொடுத்திட்டியளோ ? :lol:  :D 

அது சரி கிடுகுக் காசு கொடுத்திட்டியளோ ? :lol:  :D 

சரியான கஸ்ட்டம்தான். போற போக்கிலை அலுமாரி காசு, கட்டில் மெத்தை காசு எல்லாவற்றுக்கும் துரத்த ஆயத்தம் போலை இருக்கு. :D

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மாணவ மானவிகளின் பாதுகாப்பு தென்னிலங்கை பல்கலைக் களகங்களில் படிக்கும் தமிழ் மாணவ மாவிகளின் நலன்களுடன் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்ற உணர்வே 1976, 1977, 1978 ஆரம்பம் என நெருக்கடி மிக்க 2 வருடங்களுக்கு அதிகமாக யாழ் மாணவர் தலைவனாக நான் செயல்பட்டபோது என்னை வழி நடத்தியது.

1977 கலவரத்தின்போது இலங்கை பல்கலைகளக மாணவர் சங்கங்களின் உப தலைவன் என்கிற முறையில் யாழ்ப்பாணத்தில் சிங்கள மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் அதற்க்கு  நான் பொறுப்பு தென் இலங்கைப் பல்கலைக்களகங்களில் இருக்கும் தமிழ் மானவ மாணவிகளின் பாதுகாப்புக்கு மானவர் சங்கங்களும் ஆசிரியர் சங்கங்களும் பொறுப்பெடுக்கவேண்டுமென அவர்களை தொடர்புகொண்டு ஆதரவு கேட்டேன்.

சிங்கள மானவ மானவிகளை பல்களைக் களகத்துக்குள் எடுத்து பாதுகாக்கும் நடவடிக்கையில் திருமாஸ்ட்டர் உட்பட அனைத்து மாணவர்களும் கருத்து வேறுபாடின்றி பாடுபட்டோம். எங்களையும் மீறி யாழ்ப்பாணத்தில் இரண்டு சிங்கள மாணவர்கள் போத்திலால் குத்தப்பட்டு சிறு காயங்களுக்கு ஆளானார்கள்.  மாணவர் விடுதிகள் சில தாக்கப்பட்டு உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டன. . ஒரு பெண்கள் விடுதி முற்றுகைக்கு ஆளானது. இராணுவ கெடுபிடி தீவிரமானது. மானவர்களுக்கு நான் பொறுப்பு  இராணுவத்தை தலையிடவேண்டாம் என கேட்டுவிட்டு நாங்களே பல்கலைக் களக ஜீப்பையும் ஒரு  தனியார் வாகங்த்தையும் பலாத்காரமாக எடுத்துச் சென்று மாணவிகளை மீட்டு வந்தோம். ஏனைய பல்கலைக் களக மாணவர் அமைப்புகள் என்னோடு நேரடி தொலைபேசித் தொடர்பில் இருந்தார்கள்.

இதன்பின்னர் சமாதான காலத்தில்  யாழ் பல்கலைக் களகத்தில் சிங்கள மாணவிகள் சிலர் பயின்றார்கள். அவர்களை ரெயில் வீதியில் குடியிருந்த அகதிகள் சிலர் தொல்லை கொடுப்பதாக புகார் இருந்தது. நான் பல்கலை களக துணைவேந்தருடன் பேசினேன் அந்த பேச்சில் பின்னர் துணைவேந்தராக பதவியேற்ற சண்முகலிங்கனும் மருத்துவ பீடாதிபதியும் கலந்துகொண்டார். ரயில் பாதையில் குடியிருந்த  அகதிகளோடும் பொற்பதி வீதியில் இருந்த விடுதலைபுலிகளின் யாழ் பொறுப்பாளரோடும் (இளம் குமரன் என்று ஞாபகம்).பேசினேன். எல்லோரும் பிரச்சினையை தடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். கண்ணன் என்ற சர்வதேச மாணவர் பொறுப்பாளர் என்மீது பகைமையுடன் தகராறு செய்தபோது  வன்னியில் இருந்து அவருக்கு கடுமையான அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டது.

இத்தகைய பிரச்சினையை ஏற்ப்படுத்த ஓரிரு காடையர்கள் போதும். உல்கம் முழுவதிலும் ஏன் யாழ்ப்பாணத்திலும் போதிய அளவு இளம் காடையர்கள் இருக்கிறார்கள். இதனை நீங்கள் யாரும் மறுக்க மாட்டீர்கள். நமது காடையர்களா அல்லது அரச அதிகாரிகளா சம்பவத்தின் பின்னணியில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இத்தகைய சம்பவங்கள் கண்டிக்கப் படவேண்டும். நிலமை சுமூகமாக்கப் படவேனும். 

மனிதாபிமான அடிப்படையிலும் தென்னிலங்கையில் படிக்கும் எமது செல்வங்களுடைய பாதுகாப்புத் தொடர்பாகவும் இது முக்கியம்

Edited by poet

அப்ப இந்த ஆள் தான் ஸ்ரீ ரெலோ ஆபிசையும் பாதுகாக்க போகுது.

எதற்குள்ளும் குருவி நுளந்து தன் புகழ் பாடி கெடுப்பதை தவிர செய்வது ஒன்றும் இல்லை. என்ன எழுதினாராகும் சிறி ரெலோ ஆபிசு தாக்கப்படடதற்கு.

இந்த ஆபிசு 2012 கார்த்திகையில் பல்கலை கழக மாண்வர் தாக்கபட்ட போது விட்ட சேட்டைகள் நினைவில் வரவில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் அவர்கள் உடனடியாக அவருடைய படைகளை இறக்கி சிங்கள மாணவிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ் கள வாலிபர் சங்கம் கோரிக்கை விடுகின்றது.....,

யாரவது மாணவிகள் பாதிக்கப்பட்டால் எமது கழக கண்மணிகள் வாழ்க்கை கொடுக்க கூட தயாராக இருக்கின்றார்கள் என்பதனையும் இந்த வருத்தபடாத வாலிபர் சங்கம் சார்பில் பொயட் அவர்களுக்கு தெரிய படுத்துகின்றோம்......

வளவில் நின்ற மாங்காய் மரத்திற்கு கல்லு எறியும் போது குறி தவறி ஜன்னல்களில் பட்டதனால் ஏற்ப்பட்ட கலகலப்பாகவும் இருக்கலாம் அதனால் பொயட் அவர்கள் தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எமது யாழ் நகர வருத்தப்படாத வாலிபர் சங்க உறுப்பினர்களுக்கு இலவசமாக மாங்காய் கொடுக்க முன்வர வேண்டும்...

சில பேர் இன்னும் 1970 களில் தான் வாழினம். அதற்குப் பிறகு தென்னிலங்கைப் பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் வேட்டையாடப்பட்ட போது எங்க போனவையோ தெரியல்ல. இப்ப மீண்டும் சிங்கள மாணவிகளுக்கு ஒன்று என்ற உடன.. தென்னிலங்கையில் உள்ள தமிழ் மாணவர்களுக்கு எச்சரிக்கை வழங்கினம்.

தென்னிலங்கையில் நாங்கள் தான் எங்கட பாதுகாப்பை உறுதி செய்து படிக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆமிக்காரனைச் சுத்தனும். சி ஐ டியை சுத்தனும்.. ஒட்டுக்குழுக்களைச் சுத்தனும்.. சிங்களக் காடைகளைச் சுத்தனும்.. முஸ்லீம் காட்டிக்கொடுப்பாளர்களைச் சுத்தனும்.. இப்படி பலவற்றைச் சுத்தித் தான் அங்க தமிழ் மாணவர்கள் கல்வி கற்றார்கள்.. கற்கிறார்கள். எங்களை ஒன்றும் நல்ல வரவேற்பு அளிச்சு தங்கத் தாம்பாளத்தில சிங்களவன் தாங்கிப் பிடிக்கேல்ல..! எத்தனையோ சித்திரவதைகள் மன அழுத்தங்களை சிங்களவர்களால் சந்தித்துத்தான் தமிழ் மாணவர்கள் அங்கு கல்வி கற்கிறார்கள்.

தென்னிலங்கைக்கு தமிழ் மாணவர்கள் போகக் காரணம்..

1. மேற்படி பாட நெறிகள் தமிழ் பிரதேச பல்கலைக்கழகங்களில் இல்லாமை.

2. மெரிட் (கோட்டா முறை)

ஆனால் தென்னிலங்கையில் இத்தனை பல்கலைக்கழகங்களும் அனைத்துப் பாடத்துறைகளும் கல்வி கற்பிக்கப்படும் நிலையில்.. அவர்களுக்கு என்ன தேவை உள்ளது.. யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க..??!

  • கருத்துக்கள உறவுகள்

பொயட் ஐயா உங்களது மனிதாபிமான சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்...அதே நேரம் 1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்திற்கு யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவ்ர்களின் பங்கு உண்டு என்பதை மறந்துவிடவேண்டாம்...இரண்டு பஸ்களில் தென்னிலங்கைக்கு சென்றவர்கள் வழி நெடுக என்ன செய்து சென்றார்கள் எனபது எல்லோருக்கும் தெரிந்தவிடயம்.....நாங்கள் எல்லாம் உத்தமர்கள் என்று சொல்லவில்லை அதேபோல் சிங்கள மாணவ மாணவிகள் எல்லோரும் உத்தமர்கள் அல்ல.....

  • கருத்துக்கள உறவுகள்

நட்ப்புக்குரிய புத்தனுக்கு,

நேற்றுப்போல இருக்கிறது. பஸ்ஸில் மானவர்கலை ஏற்றி அனுப்பிவிட்டு கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் மாணவர்களைப் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பும்  பணியில் ஈடுபட்டிருந்தேன். திரும்பிச் சென்ற மாணவர்கள் சிலர் முறுகண்டி  மாங்குளம் பகுதிகளில் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் பல சிங்கள மானவர்கள் இதனை எதிர்த்ததாகவும்  செய்திவந்தது. பாதுகாப்புக்குச் சென்ற இராணுவதினரும் இதற்க்குப் பின்னணியில் இருந்துள்ளனர்..  

மதவாச்சி, அனுராதபுரம் போன்ற இடங்களிலும் இப்படியான சேட்டையை செய்தவர்கள் அதனால் அங்கு பல கடைகள் தீக்கிரையானது

  • கருத்துக்கள உறவுகள்

1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்போது அநுராதபுரம் கச்சேரியில் தஞ்சமடைந்திருந்த எங்களனைவரையும் (நாங்கள் 300பேருக்கும் மேல்) வவுனியாவிற்கு ற்கு அனுப்ப பேரூந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டன. ஆனால் யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் பாதுகாப்பாக வந்து சேரும்வரை உங்களை அனுப்ப முடியாதென அன்று பொலீஸ் அத்தியட்சகராக இருந்த அனா செனிவிரத்தினா எங்களிடம் நேரடியாகத் தெரிவித்தான். அந்தச் சிங்கள மாணவர்கள் வந்தபோது வழி நெடுக என்ன செய்து வந்தார்கள் என்பதை நாங்கள் போகும்போது கண்டோம். முறுகண்டியில் கடலைவிற்கும் ஆச்சிகளின் கடகங்களைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நட்புக்குரிய புத்தன்,

நீங்கள் இந்த விடயங்களை அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்கு என்னை நேரில் தெரியும் என நினைக்கிறேன். மனம் திறந்து பேசுங்கள். எனது அன்றைய  செயல்பாடுகள் பிழையானது என்று கருதுகிறீர்களா? 

மேற்படி சம்பவம் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுதியது. வித்தியோதயா வளாகத்தில் அவர்களில் சிலரை சந்தித்தபோது ஆத்திரப்பட்டேன்.  ஒரு பஸ்ஸில் சென்|ற மானவர்கள் மட்டும் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் அவர்களை  தாங்கள் எதிர்த்ததாகவும் பல மாணவர்கள் சொன்னார்கள். திரும்பிச் சென்ற சிங்கள மானவர்கள்  தீவைப்பில் ஈடுபட்டதாக தகவல் இல்லை

நிச்சயமாக இல்லை நீங்கள் அன்று செய்த செயல் வரவேற்கபட வேண்டியது.அநேக தமிழ் பல்கலைகழக மாணவர்கள் இதை ஆதரித்திருப்பார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின்போது அநுராதபுரம் கச்சேரியில் தஞ்சமடைந்திருந்த எங்களனைவரையும் (நாங்கள் 300பேருக்கும் மேல்) வவுனியாவிற்கு ற்கு அனுப்ப பேரூந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டன. ஆனால் யாழ் பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் பாதுகாப்பாக வந்து சேரும்வரை உங்களை அனுப்ப முடியாதென அன்று பொலீஸ் அத்தியட்சகராக இருந்த அனா செனிவிரத்தினா எங்களிடம் நேரடியாகத் தெரிவித்தான். அந்தச் சிங்கள மாணவர்கள் வந்தபோது வழி நெடுக என்ன செய்து வந்தார்கள் என்பதை நாங்கள் போகும்போது கண்டோம். முறுகண்டியில் கடலைவிற்கும் ஆச்சிகளின் கடகங்களைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை.

நட்புக்குரிய பஞ்சு,

உங்களுக்கு என்னை தெரியும் என்று நினைக்கிறேன். என்மீது தவறிருந்தால் தயங்காமல் இங்கு பதிவு செய்யுங்கள்.

யாழ் பல்கலைக் களக சிங்களமாணவர்கள் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு எடுத்து தென்னிலங்கை பல்கலைக் களக தமிழ் மாணவர்களது பாதுகாப்புக்கு நான் உத்தரவாதம் பெற்றிருந்தேன். சிங்கள மாணவர் தலைவர்கள், இராணுவம் பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்ந்து இதுபற்றி வலியுறுத்தியபடி இருந்தேன். யாழ் வளாகத்துக்குள் ஊர்வலம்போன மானவர்களை சுட இராணுவம்  நிலை எடுத்த நிலையில் நான் Don't shoot students are under my control என வலாக மாடி ஜன்னலூடாக கத்திவிட்டு முன்னுக்கு ஓடிச் சென்று தடுத்தேன். அன்ரு பெரும் இரத்தக்கலரியை தடுத்து நிறுத்தும் வல்லமைக்கு சிங்கள மாணவர்களது ஏகோபித்த ஆதரவும் காரணம்.  

மிகவும் நெருக்கடியான தருணங்கள் அவை.

அனா செனிவிரத்தினாபோன்ற பலரது தகவல்கள் எனக்கு கிடைத்தது.  சிங்கள மானவர்கள் பாதுகாப்பாக இருப்பதையும் பாதுகாப்பான பயண ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப் படுகிறதையும் சகல தென்னிலங்கை பொலிஸ் நிலையங்களுக்கும் யாழ் பொலிஸ் அத்தியட்சர்மூலம் அறிவிதிருந்தோம். இத்தகைய பல தகவல்கள் தெற்கில் வந்துகொண்டிருந்தது. நான் என் கடமையை யாருக்கும் அஞ்சாமல் செய்தேன்.

பின்னர் விடுதலை இயக்க தலைவர்களான சில இளைஞர்களுக்கு என்மீது மதிப்பை ஏற்படுத்திய நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. 

நேரடியாக சம்பந்தப்பட்ட உங்கள் பதிவுக்கு நன்றி பஞ்சு. என்மீது தறு இருந்தால் அதனை பதிவு செய்யுங்கள்.

Edited by poet

மனிதாபிமான அடிப்படையிலும் தென்னிலங்கையில் படிக்கும் எமது செல்வங்களுடைய பாதுகாப்புத் தொடர்பாகவும் இது முக்கியம்

விளங்குது 1977 லையும் சரி அதுக்கு முன்னரும் சரி இல்லை இப்பவும் சரி தென்பகுதிக்கு போய்வாற எங்கட ஆக்கள் பாதுக்காப்பாய் இருக்க வேணும் எண்டு சரியான விட்டுக்கொடுப்பை செய்து இருக்கிறீயள்...

பாராட்டலாம்... ஆனால் சொந்த வீட்டிலை சொந்த மண்ணிலை வாழுற மக்கள் பாதுகாப்பாக இருக்க ஏதாவது செய்ய உங்களாலை முடிந்து இருக்கா...?? ஏன் கேக்கிறன் எண்டால் எங்கை அடிவிழுந்தாலும் ஓடிவந்து நிக்க எங்களுக்கு பாதுகாப்பாய் ஒரு இடம் வேணும் இல்லையா...??

நாங்கள் எங்கை வேணும் எண்டாலும் போகலாம் வாழலாம் ஆனால் சுதந்திரமான வாழ்க்கைக்கன ஆதாரத்தையும் பாதுகாப்பை விட்டு குடுப்பு தரமாட்டுது.. தன்மானத்தை விட்டு போட்டு தலை குனிஞ்சு வாழலாம்... ஆனால் அதுவே மிதிப்பவனுக்கு மேலும் மிதிக்கலாம் எனும் எண்ணத்தை தான் தரும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

தயா எங்கள் பிரச்சினையில் உடனடி இலக்கு எது  நீண்டகால இலக்கு எது என்பதில் நாம் எப்பவுமே குளம்பம் அடைந்திருக்கிறோம். நீண்டகால இலக்குகளை மட்டுமே வலியுறுத்தி உடனடி இலக்குகலை தவற விட்டிருக்கிறோம்.

1977 மாணவர் பிரச்சினை ஒரு உடனடி இலக்கு. சொந்த மண் மீட்ப்பு நீண்டகால இலக்கு.

தராக்கி டி.சிவராம்  Island மற்றும் Nothesten herald பத்திரிகைகளில் என்னை ”father of Military geography tinging”  என பதிவு செய்திருக்கிறார். 

நான் என் பணிகளை செய்யவே எப்போதும் முயன்றேன். 2006க்குபின்னர் இயலவில்லை.  

இலங்கைக்கு வரவேண்டாம் என நட்பினால் முஸ்லிம் அமைச்சர்களே தடுக்கும் நிலையில்தான் இப்போதும் வாழ்கிறேன். கனவுகளோடு.

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ள பொயற்!

நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டனவா என்று என்னால் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியவில்லை. இன்றைய யாழ் பல்கலைக்கழகம் அன்று பரமேஸ்வராக் கல்லூரியாகவிருந்து அங்கு நான் படித்தேன் என்பதைத் தவிர, யாழ் பல்கலைக்கழகத்தோடு எனக்குத் தொடர்புகள் எதுவுமில்லை. உங்கள் பதிவுகளின் மூலம் உங்களின் மனிதாபமான செயற்பாடுகளை அறிந்துகொண்டுள்ளேன். நீங்கள் யாரையும் திருப்திப்படுத்தவோ, மன்னிப்பைப் பெறவோ முயற்சிசெய்யத் தேவையில்லை. உங்கள் செயற்பாடுகள் சரியானதே என்று உங்கள் மனச்சாட்சி பாராட்டி ஏற்றுக்கொள்ளுமாக இருந்தால், அதுவே போதும். நீங்கள் யாரையும், அவர்கள் பாராட்டுகளைக்கூட எதிர்பார்க்க வேண்டியதில்லை. மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் செய்யக்கூடியவற்றைத் துணிந்து செய்யுங்கள். அது ஒன்றே உங்களுக்கு மன நிறைவைத் தருவதோடு, நிம்மதியாகவும் வாழவைக்கும். நாங்கள் தூற்றினாலும் அது உங்களுக்கு ஆற்றலையே தந்து உயர்விக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி பஞ்சு. நண்பா, நான் மரனத்துக்கு அஞ்சியதில்லை. நான் என் மனச்சாட்சியினால் மட்டுமே எப்போதும் வழிநடத்தப்படுகிறேன். தொடர்ந்தும் அப்படியே வாழ்வேன்.

பலதடவைகள் என் தலையை காத்த தர்மத்தை நான் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.

Edited by poet

விக்கினேஸ்வரனின் தெரிவை இலங்கை அரசு மிகவும் Grand Scale ல்த்தான் கொண்டாடுகிறது. அவரை பிரபாகரனாக வருணிக்கிறார்கள்.  பாலா அண்ணை செய்ததை தொடர வந்திருப்பவராக வருணிக்கிறார்கள். புலிகள் மீண்டும் வந்துவிட்டதாக காட்ட விடுதி வீடுகளை உடைக்கிறார்கள். காடைகள் காட்டுத் தர்பார் நடத்தும் கட்டிடங்களை உடைப்பதாக நடிக்கிறார்கள்.

இன்றைய சிங்கள் மாணவிகளின் வீட்டின் யன்னல் உடைப்பில் அது அரச, ஒட்டுக்குழு நடவடிக்கை அல்லாமல் இருக்கலாம் என்ற ஒரு சந்தேகத்தை விதைக்க முயல்வர்கள், தமிழக மாணவர்கள் போராட்ட நேரம் 13ம் திருத்தத்தை திணிக்க முனைந்தவர்களே. இவர்கள் இளம் மனதுகளை குறிவைக்கும் தாட்சணியம் அற்றவர்கள்.  தமிழருக்குள்ளும் காடைகள் இருக்கலாம் என்றதை நிறுவி தமிழருக்கு வயிற்று வலி என்றும் இலங்கை, இந்தியா மலை என்றும் நினைவூட்டி தமது agenda வை முன்னால் எடுத்து செல்ல முயல்பவர்களே. அதுதான் 1977 கலவரத்தில் எண்ணை ஊற்றிய யாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள மாணவர்களின் நடத்தையை, தங்கள் புகழ் பாடும் நிகழ்சி மட்டும்தான் என்ற போர்வைக்குள் போர்த்தி இன்னொரு கலவரத்தை சிங்கள மாணவர்கள் நடத்துவார்கள் என்று மிரட்டுகிறார். 

நான் சவால் விடுகிறேன்: நடந்தது தமிழ்க் காடைகளால் என்றால் இந்த மாணவர் விடையத்தை வைத்து சிங்களம் இன்னொரு இனக்கலவரத்தை நடத்தட்டும் பார்க்கலாம்!

முடியாது என்றால் எதற்கு யாழ்ப்பாண பல்கலை கழக சிங்கள மாணவர்கள் எண்ணை ஊற்றிய  1977ம் ஆண்டு கலவரத்தை இங்கே இழுப்பான்?

2011 ல் ஜெனிவாவுக்கு சம்பந்தர் போவதை பொய்யட் போன்ற சிலர் அரசுடன் கூடி எதிர்த்தார்கள். சம்பந்தர் விமான ரிக்கெட் வரை முன்கூட்டி பதிந்தார். அதன் பின்னர் சிங்கள அரசு, சம்பந்தர் போனால் தன்னால் இனக்கலவரம் ஒன்றை நடத்தமுடியும் என்று மிரட்டி சம்பந்தரை நிற்பாட்டியது. ஆனால் அடுத்த மகாநாட்டில் சம்பந்தர் போய்த்தான் வந்தார். என்ன ஆச்சு 19ம் தொடர் மகாநாட்டு இனக்கலவர மிரட்டல்?

நேற்றைய தினம்தான் சிங்கள ரவுடிகள் தமிழ் பெண்ணை இலண்டனில் வைத்து காலால் அடித்தார்கள். இந்த 1977 பல்கலைக்கழக கதையை அந்த திரியில் எழுதி சிங்களக்காடைகளை அமைதியாக போக சொல்லிக் கேட்டிருந்தால் இந்த சமாதான  நடத்தைகளில் உண்மை இருக்கும்.

1977 கலவரம் அந்த நிலைக்கு வெடித்ததற்கு அன்றைய யாழ்ப்பாண பல்கலை கழக சிங்கள மாணவர்களும் காரணம் என்றது எழுதிவைக்கப் பட்டிருக்கு. அதை இங்கே இழுத்து திரியின் திசை திருப்பியதின் காரணம் தமிழருக்கு வயிற்று வலி எனபதால் அவர்கள் அடங்கித்தான் ஆக வேண்டும் என்ற ஏமாற்று தத்துவத்தில் இருந்து எழுவது மட்டுமே.

இந்த திரியில் சிலர்  1977ல் இலங்கையை கட்டி மேய்த்ததாக நடிக்கிறார்கள்.  இப்படியான  பல படப்பாயங்களை இங்கே எழுதிய போது அவை 100 % கட்டுக்கதை என்பதை பலர் பலதவைகளில் எடுத்துக்காட்டியிருந்தார்கள்.

இவர்கள் தாங்கள் சமாதானம் பிடிப்பதாக நடித்து ஆமிகளுடன் தங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி, உண்மையான புரிந்துணர்வும் இயல்பான சினேகிதமும் தமிழ்-சிங்கள மாணாவர்களுக்குள் வரவிடாமல் தடுத்துப் பிடித்ததினால் தான் சிங்கள் மாணவர்கள் வெளியேறியதன் பின்னர் சாப்பிட்ட கோப்பைக்குள் மலம் கழிப்பது போன்ற நடத்தையில் ஈடுபட்டார்கள்.

இவர்கள் தங்கள் புகழுக்கு சிங்கள மாணவர்களை பயன் படுத்தும் தொலை நோக்கற்ற நடத்தையால் நாடு முழுவதும் இருந்த தமிழ் மாணவர்கள் ஆபத்தில் இருந்தார்கள் என்ற கருத்தை வெளிவிடுகிறார்கள்.  தனி நபர் புகழ் தேடும் நடத்தையால் தமிழ் மாணவர்களிடம் இருந்து சிங்கள் மாணவர்களை காப்பாறுவதாக நாடகம் ஆடி முடித்தார்கள். தமிழ் மாணவர்கள் சிங்கள் மாணவர்களை தாக்கத் துடிக்கவில்லை, மாறாக பாதுகாத்தார்கள் என்ற உண்மையை, தங்கள் புகழை வெளிக்காட்டுதற்காக, சோற்றுப் பானைக்குள் போட்டு மூடிவிட்டார்கள்.  இதனால் வெளியேறிய சிங்கள மாணவர்கள் கலவரத்தில் எண்ணை ஊற்றும் ஈனத்தை செய்தார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன் பஞ்ச் இருவரதும் தொடர்பை விரும்புகிறேன். என் மின்னஞ்சல் visjayapalan@gmail.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.