Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Barbeque செய்தால் கொழுப்பு குறையுமா?

Featured Replies

வணக்கம்,

கடந்த சில நாட்களாக மனதுக்குள் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி இது. Barbeque செய்வதால் இறைச்சி போன்ற உணவுகளில் இருக்கும் கொழுப்பு சூட்டில் உருகிக் குறைந்து விடுமா?

அண்மையில் Scarborough வில் உள்ள என்னுடைய நணபர் வீட்டுக்கு சென்றிருந்தேன். தாங்கள் Barbeque போடுவதால் என்னையும் விருந்துக்கு அழைத்து இருந்தனர். சரி, நான் தான் இலவசமாக Pynol கிடைத்தாலே அருந்தும் ஜென்மம் என்பதால் சந்தோசமாக போனேன். அங்கு அவர்கள் நிறைய Pork chops உம் Lamb chops உம் வைத்து இருந்தனர். இவை இரண்டும் அதிக கொழுப்புள்ள மோசனாம இறைச்சிகள்.

என் நண்பருக்கும் அவர் மனைவிக்கும் உடலில் cholesterol அளவு அதிகம் இருப்பதாக மருத்துவர் எச்சரித்து இருந்தமை எனக்குத் தெரியும் என்பதால் "என்னடா உங்கள் இருவருக்கும் கொழுப்பு இருக்கு என்று டொக்டர் சொல்லி இருந்தும் ஏன் இவ்வளவு கொழுப்புள்ள இறைச்சியை வாங்கினாய்" என்று கேட்டேன்.

அதற்கு அவன் "இல்லை மச்சான், சட்டியில் வைத்து சமைப்பது போல இல்லை இது.... Barbeque போட்டால் நெருப்புச் சூட்டில் கொழுப்பு எல்லாம் உருகி கீழே விழுந்து எரிந்து போய் விடும்..அதனால பயம் இல்லை" என்றான். இதே மாதிரி என் நண்பர்கள் மற்றும் அதி புத்திசாலி உறவினர்களும் அடிக்கடி சொல்வதையும் கேட்டு இருக்கின்றன். என்னால் இதனை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

இறைச்சியில் இருக்கும் கொழுப்பு என்பது வெறுமனே சூட்டில் இளகி இல்லாமல் போய் வெறும் கொழுப்பற்ற சக்கையாகவா இறைச்சி மாறிவிடும்? அதன் ஒவ்வொரு cell லிலும் அது இருக்காதா? இது ஒரு Myth ஆக, தவறான வாதமாகத்தான் எனக்குத் தெரிகின்றது.

இது பற்றி உங்களு மேலதிகமாகத் தெரியுமா? கொஞ்சம் விளக்கவும்.

நன்றி

நீங்கள் கேட்ட விடயம் முக்கியமானது. Barbeque, grill, pan frying செய்யும் போது கொழுப்பு ஓரளவு குறையும். 

அரைத்த இறைச்சியில் செய்த burger ஐ Grill செய்யும் போது,  27% கொழுப்பை கொண்டுள்ள  மாட்டிறைச்சியில் செய்த burger உள்ள கொழுப்பு 35 கிராமில் இருந்து 18 கிரமாக குறைந்ததை கண்டறிந்துள்ளனர். ஆனால் 18 கிராம் கொழுப்பு இறைச்சியில் மீதமாக இருக்கிறது. Grill செய்யும் போது கொழுப்பு குறைவது அரைத்த இறைச்சியில் தான் அதிகமாக இருக்கும். ஏன்  எனில் அரைத்த இறைச்சியில் திடமான கல அமைப்புகள் இருப்பதில்லை. கொழுப்பு வழிந்து ஓட இடைவெளிகள் அதிகம்.

steak, beef chuck போன்ற முழு துண்டு இறைச்சிகளில் அரைத்த இறைச்சியில் இருந்து கொழுப்பு குறையும் அளவுக்கு குறையும் என எதிர்பார்க்க முடியாது.

சமையலில் கொழுப்பு அதிகம் உள்ள இறைச்ச்யில் இருந்து தான் கொழுப்பின் இழப்பு அறியப்பட்டுள்ளது. கொழுப்பு குறைந்த (5 % கொழுப்புள்ள மாட்டிறைச்சி ) இறைச்சியை எப்படி சமைத்தலும், அதன் கொழுப்பின் அளவு குறைவடைவதில்லை எனவும் சொல்லபடுகிறது.

அடுத்தது ஒரு சராசரி மனிதருக்கு நாளுக்கு 70 கிராம் இறைச்சியே தேவையானது. மருத்துவ ஆலோசனையில் இந்த எடுகோளை வைத்து கொண்டு, சிவப்பு இறைச்சி (மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி) போன்றவற்றை குறைக்க குறைக்க சொல்லுவார்கள். அந்த 70 கிராம் இறைச்சியையே கிழமைக்கு ஓரிரு தடவைக்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல என்பார்கள். ஆனால் Barbeque செய்யும் பொது 70 கிராம் இறைச்சியையா ஒவ்வொருவடும் சாப்பிடுகிறார்கள், சாப்பிடும் இறைச்சியின் நிறை 300 - 400 கிராமை தாண்டும்.

300 - 400 கிராம் இறைச்சியில் Barbeque உருகி போனது போக மிகுந்து இருக்கும் கொழுப்பு ஒருவரின் தேவைக்கு மிக அதிகமாக இருக்கும். அதை கணித்து சொல்ல வேண்டி இருக்காது. ( 100 கிராம் இறைச்சியில் 18 கிராம் கொழுப்பு, 400 கிராம் இறைச்ச்யில் 72 கிராம் கொழுப்பு மிகுந்து இருக்கும்)

http://www.foodsafety.wisc.edu/assets/pdf_files/reducing%20fat%20in%20ground%20beef.pdf

கொழுப்பு குறைகிறதோ இல்லையோ, Barbeque செய்த இறைச்சியை அடிக்கடி சாப்பிட்டு புற்று நோய் (Cancer) வரும் வாய்ப்பை அதிகரிப்பது மட்டும் நிச்சயமானது.  

Barbeque செய்கிறோம் என இறைச்சியை கருக்கி/ எரித்து சமைக்கும் பொது அதில் heterocyclic amines (HCAs ) மற்றும் polycyclic aromatic hydrocarbons (PAHs) இரசாயன பொருட்கள் உருவாக்கின. இவை காலங்களில் இருக்கும்  DNA யில் மாற்றத்தை உருவாக்க வல்லவை. இம்மாற்றம்  குடல், சமிபாட்டு தொகுதியில் புற்று ஏற்படும் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும்.

இறைச்சி எவ்வளவுக்கு கருகி போகிறதோ, அவ்வளவுக்கு புற்று நோய் ஏற்படும் சந்தர்ப்பம் அதிகரிக்கும். கருகி போன இறைச்சியை தவிர்ப்பது நல்லது. ஆனால் Barbeque பிரியர்கள், இறைச்சி கருகுவது தான் சுவை என்பார்கள்.

Barbecue செய்த இறைச்சியும் புற்று நோய் அதிகரிப்பும் பற்றிய ஆய்வு கட்டுரைகளும், செய்திகளும்

1.Does BBQ'd food really cause cancer

http://www.theglobeandmail.com/life/health-and-fitness/ask-a-health-expert/does-bbqd-food-really-cause-cancer/article590015/

2.Meat, Fish, and Colorectal Cancer Risk: The European Prospective Investigation into Cancer and Nutrition

http://jnci.oxfordjournals.org/content/97/12/906.short

3.Cancer risk of heterocyclic amines in cooked foods: an analysis and implications for research

http://carcin.oxfordjournals.org/content/16/1/39.short

4.Well-done, Grilled Red Meat Increases the Risk of Colorectal Adenomas

http://cancerres.aacrjournals.org/content/59/17/4320.short

Barbeque தவிர்க்க முடியாது, சாப்பிட்டு தான் ஆக வேண்டும் என அடம் பிடிப்பவர்கள், புற்று நோய்  ஏற்படும் சந்தர்பத்தை குறைத்து எவ்வாறு சமைப்பது என்பது பற்றி சில குறிப்புக்களை இந்த இணைய பக்கங்களில் பெறலாம்.

1. http://www.mdanderson.org/publications/focused-on-health/issues/2011-june/grillmeatcancer.html

2. http://www.foodsafety.wisc.edu/assets/pdf_Files/FFH_Reducing%20Cancer%20Risk%20from%20Grilled%20Meats.pdf

3. http://www.health.harvard.edu/press_releases/cancer-risk-from-bbq-meat

சில எழுத்து பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

Edited by KULAKADDAN

தகவலுக்கு நன்றி குளக்கட்டான்.

ஐரோப்பியர்கள் கருகிய இறைச்சியை விரும்புவதில்லை. கோழி, பன்றி ஆகியவை மட்டும் நன்றாக வேகி இருக்க வேண்டும். ஏனையவை இறைச்சி வகைகளை வெளிப்புறம் வேகி இருந்தாலும் வெட்டும்போது உள்ளே இரத்தப் பிடிப்புடன் இருப்பதுதான் சுவையாக இருக்கும். அதேபோல் முற்றிலும் கொழுப்பு உருக்கபப்ட்ட இறைச்சியும் சுவை குறைந்ததாகவே காணப்படும். சாதாரண சாப்பாடுகளுடன் ஒப்பிடும்போது Barbeque சாப்பிடும்போது அதிக அளவிலான இறைச்சியை உண்கிறோம். இது உடலுக்கு மட்டுமன்றி சுற்றாடலையும் பாதிக்கும் (அதிக இறைச்சிப் பாவனையால் இறைச்சி உற்பத்தியையும் அதிகரிப்பதால்).

நான் கூடுதலாக மீன் இறால் நண்டு போன்றவற்றிலும் Barbeque செய்வதுண்டு.

நீங்கள் சொல்லும் தகவலும் முக்கியமானது. கோழி பன்றி இறைச்சியை முழுமையாக சமைக்க வேண்டும்.

மாட்டு இறைச்சி எனில், அதுகும் வேறு எந்த பதப்படுத்தலு க்கும் உட்படாத steak, beef chuck போன்ற வற்றை முழுமையாக சமைப்பதில்லை/ அல்லது பெரும்பாலனவர்கள் முழுமையாக சமைக்க விரும்புவதில்லை (rare / medium  rare). நடுவில் இறைச்சி அவியாது, இரத்தம் வரும், அப்படியான சமையலில் கொழுப்பு உருகி குறைந்து போக சந்தர்ப்பம் குறைவு.

பொதுவாக இறைச்சி துண்டங்களின் மேற்பரப்பில் நோயை உருவாக்கும் Escherichia coli O157:H7, Salmonella போன்ற பக்ரியாக்கள் இருக்கலாம். இறைச்சியின் நடுப்பகுதியில் உள்ள தசைகளை அவை சென்றடைய வாய்ப்பில்லை. அதனால் வேறு பதப்படுத்தலுக்கு உட்படாத மாட்டு இறைச்சி எனில் வெளி புறம் வேகி இருந்தால் போதுமானது.

steak, beef chuck போன்ற இறைச்சிகளை மெதுவாக வர செய்ய ஊசிகளை கொண்டு குத்தி இறைச்சியின் தசை நார்களை சிதைப்பர்கள். அப்படி செய்யும் பொது மேற்பரப்பில் இருக்கும் நோய்  உருவாக்கும் பக்ரிரியக்கள் இறைச்சியின் உட்தசைபகுதியை சென்றடையும் சாத்தியம் அதிகம். அப்படியான இறைச்சியை முழுமையாக சமைக்காது, (உடபகுதியில் இருந்து இரத்தம் வரும்) சாப்பிட்டால் நோய்கள் வர சந்தர்ப்பம் அதிகம்.

கனடாவில் 33 % ஆனா மாட்டிறைச்சி இவ்வாறு பதப்படுத்த படுகிறது. ஆனால் இறைச்சியை கண்ணால் பார்த்து பதப்படுத்த பட்டதா இல்லையா என சொல்ல முடியாது.

இதைப்பற்றி கனேடிய ஒலிபரப்பு கூட்டுதபன செய்தி, மற்றும் காணொளி

1. http://www.cbc.ca/news/canada/story/2012/10/25/marketplace-ecoli-meat-mechanical-tenderizer.html

2. http://www.cbc.ca/marketplace/episodes/2012/10/high-steaks.html

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

Red meat உண்பதால் புற்றுநோய்க்கான காரணிகள் அதிகரிக்கும் என ஒரு ஆராயச்சி முடிவு இரு வருடங்களுக்கு முன் வெளிவந்தது.. இதுகுறித்து சிபிசி வானொலியில் ஒரு விவாதம் நடைபெற்றது.. பல வெள்ளைகள் மறுப்பு வெளியிட்டார்கள்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

எதையும் அளவோடு  சாப்பிட்டால்  நல்லது தான்

நாம் புதுமையை  புகுத்துகின்றோம் என  தொடங்கி  அதில் எமது வீரத்தையும் காட்ட வெளிக்கிடுவோம்

மதுவிலும் சரி

சாப்பாட்டிலும்  சரி

அங்கு தான்  சிக்கலே ஆரம்பம்

வெள்ளைக்காறன்

1  இறைச்சித்துண்டை  வாட்டி சலாத்துடன்  ஒரு பாண் துண்டும்  ஒரு  முறடு  வைனும்  குடிப்பான்

நாம் 2 கிலோ இறைச்சி ( ஆடு மாடு கோழி வாத்து குருவி.........................) 

1 கிலோ றால்

1 கிலோ நண்டு

வேறு ஏதாவது விசேடமாக கிடைத்தால் அதையும் வாட்டி

சர்வதேச  லெவலில்  அதற்கு தொட்டுக்க Sauces வகைகளையும்  போட்டுக்கலந்து

2 போத்தல் Whisky யையும  முழுங்கினால் தான் சாப்பிட்ட  மாதிரி  குடித்த மாதிரி  இருக்கும் :(

(இணையவன் ராசா

இந்த றால்  நண்டில்தான் அதிக  கொழுப்பு ராசா.

 பார்த்து  பார்த்து  Gambetta வில்  சந்திக்க வைத்துவிடவேண்டாம் :(  :( )

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

(இணையவன் ராசா

இந்த றால்  நண்டில்தான் அதிக  கொழுப்பு ராசா.

மீன் மற்றும் றால் நண்டு வகை உணவுகளில் அதிமான புரதச் சத்து இருக்கும்

எந்த இறைச்சியானாலும் அதனைத் தவிர்த்து மரக்கறி மற்றும் மீன் வகைகளை அதிகமாக உட்கொள்வது தேக ஆரோக்கியத்திற்கு நல்லது .

மீன் வகைகளில் கொழுப்பு அதிகம் என்பது தவறாக இருக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இறாலில் கொழுப்பு (fat) குறைவு.. கெட்ட கொலஸ்டரொல் அதிகம் என நினைககிறேன்..

என்னதான் வாட்டினாலும் கொழுப்பு முற்றிலும் போகாது. இறைச்சியை தீயில் வாட்டுவதால் புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்கிறார்கள்.

 Barbeque செய்யும் பொழுது கொள்ளி எரிந்து முடிந்ததும் வரும் சாம்பல் பூத்த தணலிலே இறைச்சியை வாட்ட வேண்டும். அது கூடிய நேரமெடுக்கும். பொறுமை இன்மையால் அதிகமானவர்கள் ஆரம்பத்தில் வரும் தீயிலே வாட்டிவிடுவார்கள். இது கெடுதலான முறை. எங்கட ஆக்கள் ஒரு கையில கிளாசை வைச்சிட்டு, Barbeque போடுபவரை அவசரப்படுத்துவார்கள். அவரும் என்ன செய்வார்.

விசுகு அண்ணா சலாட் என்றதும் ஒரு விடயம் சொல்ல வேண்டும். இறைச்சி வகைகளுடன் பாண் உருளைக்கிழங்கு போன்றவற்றைத் தவிர்த்து இலை குழைகளை அதிக அளவில் உண்ண வேண்டும். இலை குழைகள் சமிபாட்டின்போது இறைச்சியிலுள்ள கொழுப்பினைச் சம்பாட்டுத் தொகுதிகள் உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்தும்.

இவ்வளவு பிரச்சனகளைச் சமாளித்து அவஸ்தைப்பட்டு Barbeque சாப்பிவேண்டுமா என்று யோசிக்கலாம். எல்லைகளை மீறி ஒரு நாள் சந்தோசமாக சுதந்திரமாக வாய்க்கு ருசியானவற்றைச் சாப்பிடுவதுதான் Barbeque.  :) 

  • கருத்துக்கள உறவுகள்

அதற்கு அவன் "இல்லை மச்சான், சட்டியில் வைத்து சமைப்பது போல இல்லை இது.... Barbeque போட்டால் நெருப்புச் சூட்டில் கொழுப்பு எல்லாம் உருகி கீழே விழுந்து எரிந்து போய் விடும்..அதனால பயம் இல்லை" என்றான். இதே மாதிரி என் நண்பர்கள் மற்றும் அதி புத்திசாலி உறவினர்களும் அடிக்கடி சொல்வதையும் கேட்டு இருக்கின்றன். என்னால் இதனை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

இறைச்சியில் இருக்கும் கொழுப்பு என்பது வெறுமனே சூட்டில் இளகி இல்லாமல் போய் வெறும் கொழுப்பற்ற சக்கையாகவா இறைச்சி மாறிவிடும்? அதன் ஒவ்வொரு cell லிலும் அது இருக்காதா? இது ஒரு Myth ஆக, தவறான வாதமாகத்தான் எனக்குத் தெரிகின்றது.

உங்கள் நண்பர் குறிப்பிட்டத்தில் ஒரு பகுதி தான் உண்மை உள்ளது.

பொரித்தலைக் காட்டினும்.. கிரில் வகை சமைத்தலின் போது உள்ளெடுக்கப்படும் கொழுப்பின் அளவை குறைத்துக் கொள்ளலாம். அதற்காக சக்கை ஆகும் அளவிற்கு கொழுப்பு உருகி ஓடி விடும்... என்பது..எல்லாம் ஓவர் பில்டப்..! :lol:

இறாலில் கொழுப்பு (fat) குறைவு.. கெட்ட கொலஸ்டரொல் அதிகம் என நினைககிறேன்..

g_prawnnutrition_fat2.jpg

இறால் வகைகளும் கொழுப்புகளும்.

[http://www.queenslandprawns.com/nutrition.html }

ஒப்பீட்டளவில் இறாலில் குறிப்பிடத்தக்க அளவு நிரம்பிய கொழுப்பு உண்டு எனலாம். அதனை கூடிய அளவில் உள்ளெடுப்பது உடலுக்கு தகுந்ததல்ல..! (மாடு ஆடு கோழி பன்றி யோடு ஒப்பிடும் போது இறால் எவ்வளவோ திறம் உண்பதற்கு.)

இறாலில் மாடு.. ஆடு.. கோழி..பன்றியோடு ஒப்பிடும் போது கூடிய நிரம்பாத கொழுப்பு உண்டு எனலாம்.

g_prawnmeat_omega3.jpg

பொதுவாக மீன்களில் கூடிய அளவு நிரம்பாத கொழுப்புகள் உண்டு. சில வகை மீன்களில் நிரம்பிய கொழுப்பு அதிகம் உள்ளது. நிரம்பாத கொழுப்புக்கள் உடலுக்கு அவசியமானவை. நிரம்பிய கொழுப்புக்களே இரத்தத்தில் கொலஸ்ரோல் அளவு மாறுபட (அதிகரிக்க) அதிகம் வழிவகுக்கின்றன.. இருந்தாலும் அவையும் குறிப்பிட்ட அளவில் உடலுக்கு அவசியம். அதிகம் நிரம்பாத கொழுப்பை உட்கொள்வதும் ஆபத்தானது. :)

எனவே இது விடயத்தில் ஒரு சமநிலையைப் பேணிக் கொள்ளும் வகையில் உணவு வழக்கத்தை கொண்டிருக்க.. மக்கள் பழகிக் கொள்வது நல்லது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
கிரில் சாப்பாடு வாய்க்குருசிதான்...ஆனால் பின்விளைவுகள் எக்கச்சக்கம்.
அதிலையும் அரைச்ச இறைச்சி, ஆட்டுறைச்சி, பண்டி இறைச்சி எல்லாம் நோமலாயே விக்கனம் கூடின இறைச்சி வகைகள்.அதை கிரில் பண்ணினால் அவ்வளவுதான்....
 
இறால் கணவாய் நெத்தலி சூடை எல்லாத்திலையும் கெட்ட கொலஸ்ரோல் எக்கச்சக்கம்.
 
இறைச்சியோ மீனோ அவிச்சு சாப்பிடுறதுதான் புத்திசாலித்தனம். பொரியல்,பிரட்டல்,வாட்டல் எல்லாத்திலையும் பின்விளைவுகள் எக்கச்சக்கம்.பிறகு குளிசையள் கனக்க போடவேண்டி வரும்.

அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு .

DR.OZ SHOW எல்லாம் பார்த்து அதன்படி எல்லாம் சாப்பிடமுடியாது . அதே போல எம்மவர் பலர் போல எதையும் பொருட்படுத்தாமல் கண்டதையும் அளவு கணக்கின்றி வெட்டவும் கூடாது.

பார்பிகியூ போடும் போது வடியும் எண்ணையின் அளவை பார்த்து கொழுப்பு உருகி ஓடிவிட்டது என்று நினைப்பதும் தவறு .எல்லா மாமிசங்களுகுள்ளும் கொழுப்பு இருக்கு அது எப்படி சமைத்தாலும் போகாது .மாமிசத்திற்கு மாமிசம்  கொழுப்பின் அளவும் மாறுபடும் .

ஆட்டை ட்ரேட் மில்லில் ஓடவிட்டு பின்னர் வெட்டினால் கொழுப்பு இருக்காது என்று பகிடி வேறு இருக்கு .

RED MEAT நான் பெரிதாக சாப்பிடுவதில்லை .காரணம் எனது பெருவிரல் மொளி சற்று வீங்க டாக்குதரிடம் போக அவர் சொன்ன காரணம் .இரத்தத்தில் யூரிக் ஆசிட்(uric acid) கூடுதலாக இருக்கு என்று .அந்த வருத்தம் gout . சரியான நோ நோகும் கவனமாக இருங்கள் .

டாக்டர் தவிர்க்க சொன்ன பொருட்கள் முதல் இரண்டு அல்ககோல் ,ரெட் மீட் .

வீணாக ஏன் உயிர்களை கொன்று சாப்பிடுகிறீர்கள் ? தானிய வகைகள், காய்கறி , கீரை , பழங்கள் என்பவற்றை புசியுங்கள்  :D 

  • கருத்துக்கள உறவுகள்

-----

எனது பெருவிரல் மொளி சற்று வீங்க டாக்குதரிடம் போக அவர் சொன்ன காரணம் .இரத்தத்தில் யூரிக் ஆசிட்(uric acid) கூடுதலாக இருக்கு என்று .அந்த வருத்தம் gout . சரியான நோ நோகும் கவனமாக இருங்கள் .

டாக்டர் தவிர்க்க சொன்ன பொருட்கள் முதல் இரண்டு அல்ககோல் ,ரெட் மீட் .

உங்களது பெருவிரல் மொழி வீங்கினதுக்கு....

கணனி தட்டச்சிலை, குத்தி முறிஞ்சதும்... இன்னொரு காரணமாக இருக்கலாம். :D  :lol:

கிரில் சாப்பாடு வாய்க்குருசிதான்...ஆனால் பின்விளைவுகள் எக்கச்சக்கம்.
அதிலையும் அரைச்ச இறைச்சி, ஆட்டுறைச்சி, பண்டி இறைச்சி எல்லாம் நோமலாயே விக்கனம் கூடின இறைச்சி வகைகள்.அதை கிரில் பண்ணினால் அவ்வளவுதான்....
 
இறால் கணவாய் நெத்தலி சூடை எல்லாத்திலையும் கெட்ட கொலஸ்ரோல் எக்கச்சக்கம்.
 
இறைச்சியோ மீனோ அவிச்சு சாப்பிடுறதுதான் புத்திசாலித்தனம். பொரியல்,பிரட்டல்,வாட்டல் எல்லாத்திலையும் பின்விளைவுகள் எக்கச்சக்கம்.பிறகு குளிசையள் கனக்க போடவேண்டி வரும்.

அப்ப என்னத்தை தான் வேலையால வந்து வயுத்துக்கை தள்ளுறது. மனிசர் வேலையால வரேக்க இருக்கிற பசி உங்களுக்கு தெரியுமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப என்னத்தை தான் வேலையால வந்து வயுத்துக்கை தள்ளுறது. மனிசர் வேலையால வரேக்க இருக்கிற பசி உங்களுக்கு தெரியுமே?

இடியப்பமும் சொதியும், புட்டும் வாழைப்பழமும்,பால்புக்கை, வெள்ளைப்புக்கை,சோறும் கதரிக்காய்க்கறி,பயித்தங்காய்க்கறி.பருப்புக்கறி,கீரைக்கறி எல்லாத்தையும் மறந்து போனியளோ? இவங்கடை சாப்பாட்டை சாப்பிட்டு ஊர்பேர் தெரியாத வருத்தமெல்லாம் வருது கவனமாயிருங்கோ.....வெள்ளையள் பெரிசாய் விக்கனமில்லையெண்டு எங்கடை சாப்பாட்டை தேடி அலைய......நாங்கள்  இவங்கடை சாப்பாட்டுக்கு நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு திரியிறம். :D

RED MEAT நான் பெரிதாக சாப்பிடுவதில்லை .காரணம் எனது பெருவிரல் மொளி சற்று வீங்க டாக்குதரிடம் போக அவர் சொன்ன காரணம் .இரத்தத்தில் யூரிக் ஆசிட்(uric acid) கூடுதலாக இருக்கு என்று .அந்த வருத்தம் gout . சரியான நோ நோகும் கவனமாக இருங்கள் .

டாக்டர் தவிர்க்க சொன்ன பொருட்கள் முதல் இரண்டு அல்ககோல் ,ரெட் மீட் .

Gout இற்கு அதிகமான உணவுகள் உண்ணக் கூடாது. புரதம் கூடிய உணவுகள், இறைச்ச்சி, ஓடு உள்ள கடல் உணவுகள்,  பருப்பு, கடலை, வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு, வினிகர், சோய்  சோஸ் ........ என்று நீண்டு கொண்டே போகும். ஆரோக்கியமான உணவுகளான கீரை, மககரல் மீன், கீறி மீன், காளான், cauliflower, asparagus, cucumber, red wine  ........உம்  இதில் அடக்கம். இப்படிப் பார்த்தால் ஒன்றுமே உண்ண முடியாது.

கிழமைக்கு ஒரு தரம் பார்லி அரிசியை (Purle barley rice) 7, 8 மணித்தியாலங்கள் நீரில்  ஊறவைத்து அவித்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அப்ப என்னத்தை தான் வேலையால வந்து வயுத்துக்கை தள்ளுறது. மனிசர் வேலையால வரேக்க இருக்கிற பசி உங்களுக்கு தெரியுமே?

கீரை, இலைகுழைகளை நீராவியில் வேக வைத்து உண்ணுங்கள். :D

Gout இற்கு அதிகமான உணவுகள் உண்ணக் கூடாது. புரதம் கூடிய உணவுகள், இறைச்ச்சி, ஓடு உள்ள கடல் உணவுகள்,  பருப்பு, கடலை, வேர்க்கடலை, முந்திரிப் பருப்பு, வினிகர், சோய்  சோஸ் ........ என்று நீண்டு கொண்டே போகும். ஆரோக்கியமான உணவுகளான கீரை, மககரல் மீன், கீறி மீன், காளான், cauliflower, asparagus, cucumber, red wine  ........உம்  இதில் அடக்கம். இப்படிப் பார்த்தால் ஒன்றுமே உண்ண முடியாது.

கிழமைக்கு ஒரு தரம் பார்லி அரிசியை (Purle barley rice) 7, 8 மணித்தியாலங்கள் நீரில்  ஊறவைத்து அவித்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கீரை, இலைகுழைகளை நீராவியில் வேக வைத்து உண்ணுங்கள். :D

அட தப்பிலி இதுகளெல்லாம் தெரிந்த ஆளா?

  • தொடங்கியவர்

நாம் 2 கிலோ இறைச்சி ( ஆடு மாடு கோழி வாத்து குருவி.........................) 

1 கிலோ றால்

1 கிலோ நண்டு

வேறு ஏதாவது விசேடமாக கிடைத்தால் அதையும் வாட்டி

சர்வதேச  லெவலில்  அதற்கு தொட்டுக்க Sauces வகைகளையும்  போட்டுக்கலந்து

2 போத்தல் Whisky யையும  முழுங்கினால் தான் சாப்பிட்ட  மாதிரி  குடித்த மாதிரி  இருக்கும் :(

ஆஹா... வாசிக்கும் போதே வாயூறுகின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

ஆஹா... வாசிக்கும் போதே வாயூறுகின்றது...

நினைச்சன்

காடு தான்  இவருக்கு சரி

இடைக்கிடை வேலைக்கு அனுப்பாமல் நிரந்தரமாக அங்க விட்டுடணும் :lol:  :D  :D

///Barbeque செய்தால் கொழுப்பு////

வர வர நிம்மதியாய் சாப்பிடவும் விடமாட்டாங்களாம் ......... :D  :D 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழுப்பு...

இது தனியே என்னத்தை சாப்பிடுகிறோம் என்பதில் மட்டுமல்ல எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதிலும் தங்கியுள்ள விடயம். கொழுப்பு என்பது எமது சேமிப்பு ஆகும். தேவைக்கு அதிகமாக உடலில் சக்தி சேர்ந்தால் அது கொழுப்பாக மாறி சேமிக்கப்பட்டு உபத்திரம் தரும். மனித உடலில் உள்ள தொகுதிகளில்-உணவுக்கால்வாய் தொகுதி, நரம்புத்தொகுதி, சுவாசத்தொகுதி, .....போன்ற தொகுதிகளில், உணவுக்கால்வால் தொகுதி பெரியளவில் தனது செயற்பாடும் தன்மையை இழப்பதில்லை-வயது கூடும் போதோ அல்லது நோய்வாய்படும் போதோ. ICU இல் இருக்கும் போதும் இது பல சந்தர்பங்களில் முறையாக வேலை செய்யும். அதனால்தான்  சிலர் ICU இருந்து வெளியே வியாதி மாறி வரும் போது உடல்பருத்து வருவார்கள். அதே போல, வாயில் இடப்படும் பெரும்பாலான, உணவுப்போருட்ட்கள் உடலில் அகத்துறிஞ்சபடும்.  அது உடலுக்கு தேவையோ இல்லையோ என்பதை பொறுத்து மாறுபடாது. குடலில் எந்த ஒரு கட்டுப்பாடு பொறிமுறையும் இல்லை. அறிசுனனுக்கு உள்ளது போல gout இருந்தாலும், வாயில் ரெட் மீட் போட்டால், ஒரு குறையும் இல்லாமல் அதும் அகத்துரிச்சபடும், காட் பெய்லியர் ஆள் உப்பு சாப்பிட்டாலும் அதும் அகத்துறிஞ்சபடும். எனவே வாயில் இட முன்பு கட்டுபடுத்துவதுதான் சிறந்த முறை.
சட்டியில் போட்டு காச்சுவதிலும் பார்க்க Barbeque செய்தால் கொழுப்பு குறைவாக இருக்கும். அதேநேரம் மற்றவர்களும் சொன்னது போல 4 kg இறைச்சியை 4 பேர் 1 கேஸ் பீர் போத்தல் ஓடு சாப்பிட்டால் கொழுப்பு கூடுமே தவிர குறையாது.
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.