Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் மீண்டும் அடிப்பார்கள்-காசியானந்தன்! [படங்கள் /வீடியோ ]

Featured Replies

இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றம் பொது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு மாணவர்களை தமிழ்நாட்டு மாணவர்கள் என்று சொல்லுவதை விட தமிழ்நாட்டு மக்களுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் என்று நான் சொல்லுகின்றேன்.உண்மையிலேயே தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையில் ஒரு பெரிய மாறுதலை கொண்டுவந்தவர்களாக மாணவர்கள் போராட்டத்தை நடத்தி அவர்கள் யார் என்பதை வரலாற்றில் பதிவு செய்திருக்கின்றார்கள்.

அவர்களின் ஆற்றல் மறைந்து கிடந்தது மாணவர்கள் போராளிகள் என்பதை நிறுவினார்கள் நிலைநாட்டினார்கள் அதனை நாங்கள் பார்த்தோம் மாணவர்கள் அப்படித்தான் வரலாற்றில் பெரிதும் இருந்திருக் கின்றார்கள். சிங்களவர்கள் தமிழீழ மக்களை ஒடுக்கியபொழுது இந்த மண்ணில் இராயறாஜேந்திரன் போன்றவர்கள் சுந்தரபண்டியன் போன்றவர்கள் இங்கிருந்து படைஎடுத்துக்கொண்டு வந்து சிங்களவர்களை எதிர்த்து தமிழருக்கு துணையாக இருந்தார்கள் அது அந்தக்காலம்.இன்று அப்படி இந்த மண்ணில் இருந்து ஓடிவந்து காப்பதற்கு யாரும் இல்லை.இன்று ஏதும் இல்லாத தமிழனுக்கு யாரும் இல்லை இப்படிப்பட்ட மன்னர்களின் உணர்வுகளை மாணவர்களிடம் தான் அந்த எழுச்சியினை பார்க்கமுடிந்தது.என்றும் தெரிவித்த காசியானந்தன் அவர்கள்.

இன்று ஈழமண்ணில் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கின்றார்கள் ஒன்றும் இல்லாத ஒன்றாக 13ஆவது சட்டதிருத்தம் காணப்படுகின்றது  முழுக்க முழுக்க சிங்களவர்களால் சிக்கிய அடிமகளாக தமிழர்களை ஆக்குகின்ற முயற்சிதான் 13ஆவது சட்டதிருத்தம் இன்றைக்க அதுதான் தமிழர்களுக்கு எல்லாமான தீர்வு என்று சொல்லப்படுகின்றது அது பச்சைப்பொய் அதில் எதுவுமேகிடையாது.

1833 ஆம் ஆண்டு கோல்புறுக்கால் சொல்லப்பட்டதுதான் தமிழர்களின் தாயகம் வடக்கு கிழக்கின் எல்லைகள் என்று.அவன் தமிழ்தேசத்தையும் சிங்கள தேசத்தையும் இணைப்பதற்காக வந்தவன் அதுதான் தமிழர்களின் தாயகம் என்று சொன்னான்.

தாயகத்தின் இன்று சொல்லணாத் துன்பங்களை மக்கள் அனுபவித்துக்கொண்டிருக்கின்ற காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் மாணவர்கள் எழுச்சியினை காட்டினார்கள் இங்கு மாணவர்கள் எழுச்சியினை மேற்கொள்ள அமெரிக்காவின் அதிகாரிகள் கூட இந்த போராட்டத்தை பற்றி பேசியிருக்கின்றார்கள்.தமிழ்நாட்டில் மாணவர்களுடைய போராட்டம் தான் சிங்களவர்களுடைய எதிரிநாடு என்று தமிழ்நாட்டில் தீர்மானம் போடவைத்தது.

இந்த மாணவர்களின் போராட்டத்தை சிறப்பான ஒருஆவணமாக வெற்றிவேல் உருவாக்கி எடுத்திருக்கின்றார்.
ஒருபாலச்சந்திரனின் படம் உலகினை உலுக்கியது இப்படியான ஆவணங்கள் உலகினை உலுக்கும்,உலகினை உருவாக்கும்,உலகை தமிழீழவிடுதலை உரிமைபோர் நோக்கி நகர்த்தும் என்று உறுதியாக நம்புகின்றேன்.
தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் மீண்டும் அடிப்பார்கள் அப்படி அடிக்கின்ற போழுது தமிழ்நாட்டில் மாணவர்கள் நெருப்பாக எழுந்து தமிழீழத்தில் நடக்கினற் மிகப்பெரிய எழுச்சியான விடுதலைப்போருக்க தோழ் தாருங்கள் என்று நான் மாணவர்களை வேண்டிநிக்கின்றேன்.என்றும் காசியானந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது

இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் போராட்ட வரலாற்று ஆவணப்படமான அறப்போர் ஆவணப்படம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் சென்னை அண்ணாசாலை புக்பாயின்ட்அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையினை சி.கபிலன் நிகழ்த்த அரங்க நிகழ்வுகளை கவிபாஸ்கர் தொகுத்து வளங்கினார்.அறப்போர் ஆவணப்படத்தினை கவிஞர் காசியானந்தன் அவர்கள் வெளியிட மே 17இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து கருத்துரைகளை உணர்ச்சி கவிஞர் காசியானந்தன் அவர்கள்,தமிழ்தேசபொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் வெங்கட்ராமன்,ம.செந்தமிழன்,வெற்றிவேல்சந்திரசேகர், ஆகியோர் நிகழ்த்த சிறப்புரையினை இயக்குனர் அமீர் நிகழ்தினார்தொடர்ந்து அறப்போர் ஆவணப்படத்தில் பணிபுரிந்தவர்களுக்கு நினைவு பரிசில்களை இயக்குனர்அமீர் வழங்கி மதிப்பளித்துள்ளார். arappoor-01-150x150.jpg arappoor-02-150x150.jpg arappoor-04-150x150.jpg arappoor-05-150x150.jpg arappoor-06-150x150.jpg arappoor-07-150x150.jpg arappoor-08-150x150.jpg arappoor-09-150x150.jpg

 

http://goldtamil.com/?p=3017

Edited by chinnavan

  • கருத்துக்கள உறவுகள்
தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் மீண்டும் அடிப்பார்கள்
ஐயா உங்கள் உணர்ச்சியை மதிக்கிறோம் அதற்காக இப்படி எல்லாம் உணர்ச்சிகரமான பேசனுமா?தமிழகமே பொங்கி எழுந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது......என்பதை நன்றாக பட்டறிந்த பின்பும் நாம் இப்படி பேசலாமா?

' சிங்களவர்கள் தமிழீழ மக்களை ஒடுக்கியபொழுது இந்த மண்ணில் இராயறாஜேந்திரன் போன்றவர்கள் சுந்தரபண்டியன் போன்றவர்கள் இங்கிருந்து படைஎடுத்துக்கொண்டு வந்து சிங்களவர்களை எதிர்த்து தமிழருக்கு துணையாக இருந்தார்கள் அது அந்தக்காலம்'

 

காசி ஆனந்தனின் இந்த வருடத்து வரலாற்று நகைசுவை 

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காக இப்படிப் பேசுகிறார்???

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்காக இப்படிப் பேசுகிறார்???

 

அவருக்காக....அப்படி பேசுகிறார்.....என்று எண்ணதோன்றுகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னுமா இவங்களை எல்லாம் சனம் நம்புது????  :wub:<_<

  • கருத்துக்கள உறவுகள்
புலிகள் மீண்டும் தாக்குவார்களா இல்லையா என்பதற்கு அப்பால் எனக்கு ஒரு சந்தேகம் புலிகளுக்கு ஆதரவான சாதாரண மக்களையே கைது செய்து வருடக்கணக்காக விசாரணை இன்றி அடைத்து வைத்திருக்கின்ற இந்தியாவில் இருந்து கொண்டு இப்படியான அறிக்கைகள் விடவும் பேட்டிகள் கொடுக்கவும் முடிகின்றது என்றால் எப்படி ?  இவர் இந்திய புலனாய்வு துறையினரின் (றோவின்) கையாளா ?? அவர்களின் சில நரித்தந்திரங்களுக்கு துணை போகின்றார ??? என்றெல்லாம் என்ன தோன்றுகிறது ........   
 
  
*எனக்கும் காசி அண்ணாவுக்கு தனிப்பட்ட முன்விரோதங்கள் இல்லை என்பதினை இவ்விடத்தில் பதிவு செய்கின்றேன். 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

புலிகள் மீண்டும் தாக்குவார்களா இல்லையா என்பதற்கு அப்பால் எனக்கு ஒரு சந்தேகம் புலிகளுக்கு ஆதரவான சாதாரண மக்களையே கைது செய்து வருடக்கணக்காக விசாரணை இன்றி அடைத்து வைத்திருக்கின்ற இந்தியாவில் இருந்து கொண்டு இப்படியான அறிக்கைகள் விடவும் பேட்டிகள் கொடுக்கவும் முடிகின்றது என்றால் எப்படி ?  இவர் இந்திய புலனாய்வு துறையினரின் (றோவின்) கையாளா ?? அவர்களின் சில நரித்தந்திரங்களுக்கு துணை போகின்றார ??? என்றெல்லாம் என்ன தோன்றுகிறது ........   
 
  
*எனக்கும் காசி அண்ணாவுக்கு தனிப்பட்ட முன்விரோதங்கள் இல்லை என்பதினை இவ்விடத்தில் பதிவு செய்கின்றேன். 

 

 

காசி  அண்ணா

ஒரு கவிஞர்

அவர்  (படைப்பாளி) சொல்வதற்கும் 

உண்மைக்கும் தொடர்பிருக்கவேண்டுமென்றில்லை  என்று  ஒரு  கருத்து படைப்பாளிகளிடையே உண்டு.

அப்படிப்பார்த்தால் அதை அவரது படைப்பாக  மட்டுமே பார்க்கவேண்டும்.

 

நேற்று 

இங்கிருந்து  தனது கிராமமான முல்லைத்தீவுக்கு சென்று திரும்பிய  ஒருவரைச்சந்தித்தேன்.

அவரும்  காசி  அண்ணாவும  சொல்வதும  அப்படியே  பொருந்துகிறது. (அவர்  சொன்னதை  இங்கு எழுதி அங்கு வாழ்  மக்களை இடைஞ்சல்  செய்யவிரும்பவில்லை)

அப்படிப்பார்த்தால்

ஒரு கவிஞரான படைப்பாளியான காசி  அண்ணா அதை  சொல்வதை  தடுப்பதற்கு  நாம்  யார்????

  • கருத்துக்கள உறவுகள்

காசி ஐயாவுக்கு இபபடிச் சொல்வதால் தனிப்பட்ட லாபம் என்று ஒன்றுமில்லை.. அவர் புதிதாக எதையும் சொல்லிவிடவும் இல்லை.. தந்தி தொலைக்காடசிக்கான செவ்வியிலும் இதையே தெரிவித்திருந்தார்.. யார் எவர் என்பதற்கு அப்பால் தமிழருக்கான தீர்வு எப்படி உருவாக முடியும் என்பதையே சிந்தித்திருக்கிறார்..

இன்று நான்காண்டுகள் கழிந்த நிலையில் எது சாத்தியம் எதுசாத்தியமில்லை என்பதை நாமும் திறந்த மனத்துடன் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.. நாம் எதையாவது நம்பி அதை எழுதி பிறகு நடக்காமல்போனால் என்னாகும் என்று பயம் கொள்ள வேண்டியதில்லை.. யாரும் எதையும் தாராளமாக நம்பலாம்.. ஆனால் எதையும் எழுதவேண்டியதில்லை.. :D

காசி ஆனந்தன் தனது வாரிசாக தீபசெல்வனை உருவாகியதை நினைக்க பெருமையாக இருக்கு .

பிழைக்க இப்படிஎல்லாம் வழி இருக்கா ? ஒரு சிரட்டை தண்ணி கிடைக்கவில்லையா ?

காசி ஆனந்தன் தனது வாரிசாக தீபசெல்வனை உருவாகியதை நினைக்க பெருமையாக இருக்கு .

பிழைக்க இப்படிஎல்லாம் வழி இருக்கா ? ஒரு சிரட்டை தண்ணி கிடைக்கவில்லையா ?

 

 

காசியை பழுதாக்கியது நம்ம நெடுக்கு. :lol:

 

ஒரு நாளைக்கு நெடுக்கர்

"சட்டமும் நானுறைத்தேன் தைரியமும் நான் கொடுத்தேன்

பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்ல பாக்குதடி' என்று காசியப்பற்றி கவலைப்பட்டு பாடப்போகிறார். :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி டக்லஸ்,கருணா  போன்றவர்கள் தேசியம் பேசியா வயிறு வளர்க்கிறார்கள்  :wub:  :wub:  :wub: 

 

அவர்கள் நேரடியாகவோ அல்லது அவர்களுக்குத் தெரிந்த வகையிலோ அரசியில் செய்கிறார்கள் அதை துரோகம் என்று சொல்ல ஒரு கூட்டம் இல்லை  மாற்று அரசியல் என்று சொல்ல ஒரு கூட்டம் ஆனால்  தமது இருப்புக்காக  வயிறு வளர்க்க இப்படியானவர்களால் மட்டும் தான் முடியும்.

காசி ஆனந்தன் எல்லாம் கவிதை எழுவதோடு மட்டும் நிற்பது தான் ஈழத்தமிழருக்குச் செய்யும் உதவி, புண்ணியமாய் அமையும்.  <_<:wub:<_<:icon_idea:

Edited by ஜீவா

கலைகள் யாதெனினும் வெறும் மனமகிழ்வுக்குரியன மட்டுமல்ல. உருகியுருகி உள்ளொழுகிக் கரையச் செய்வனவல்ல. கலைகள் தேவநிலை சித்திக்கப் பாதை சமைப்பனவல்ல. பாடும் குயிலைப்போல, ஆடும் மயிலைப்போல சுயத்தைமட்டும் திருப்திப்படுத்துவனவல்ல. இதற்கப்பாலும், கலைகளுக்கு ஓர் சமூகப்பணி உண்டு. நேற்றிருந்ததிலும் பார்க்க இன்று மனங்களைப் புதிதாக்கி மானுடத்தின் தளையறுப்புக்கு கலைகள் தம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். விடுதலைக்கேங்கும் மனிதர்களுக்கு முழு விடுதலையும்கிட்ட வழிசமைப்பனவாகவும் கலைகள் வியாபகம் கொள்ளவேண்டும். உண்மையான மானுடநேசிப்புள்ள கலைஞன் புதிய உலகொன்று படைக்கப்போரிடுவான். அவனோடிணைந்து கலைகளும் போரிடும். அப்போதே கலைகள் முழுமையெய்தும்.

- புதுவை இரத்தினதுரை

புதுவையும் காசியும் தமிழீழத்தின் கவிகளில் இரு கண்களைப் போன்றவர்கள்.  :icon_idea: 


971572_525213237532863_648359161_n.jpg
 

 


பிறரது பாரட்டுக்கும்,பழிக்கும் செவி சாயத்தால் மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது ...... தமிழா இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை.... நம் தமிழின தேசியத்தலைவர் பாதையில் தொடர்ந்து செல்வோம் :D 

  • கருத்துக்கள உறவுகள்

காசியானந்தன் தெரிகிறார்.. தோளில் துண்டு போட்டிருப்பவர் யார், அன்பு?

  • கருத்துக்கள உறவுகள்

காசி ஆனந்தன் தனது வாரிசாக தீபசெல்வனை உருவாகியதை நினைக்க பெருமையாக இருக்கு .

பிழைக்க இப்படிஎல்லாம் வழி இருக்கா ? ஒரு சிரட்டை தண்ணி கிடைக்கவில்லையா ?

 

இதெப்ப நடந்தது ? தீபச்செல்வனையும் காசி ஐயா விட்டு வைக்கப்போறதில்லையோ ?

 

 

Edited by shanthy

காசியானந்தன் தெரிகிறார்.. தோளில் துண்டு போட்டிருப்பவர் யார், அன்பு?

செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா  :icon_idea: 

 

ஓ.. நன்றி தகவலுக்கு யாழ் அன்பு..! :D

 

969569_374901715966519_374514905_n.jpg

ஏன் என்றால் அவர்கள் சாப்பாட்டுக்கு நீங்க தானே பணம் அனுப்புறிங்கள். முல்லிவாய்க்காலுக்கும் முன்னும்  ஒவ்வொரு கவிதைக்கும் 1000 பொற்காசுகள் கொடுத்தீர்கள். அந்த ஏக்கத்தில் அவர் உங்களிடம் பொற்காசுகளை எதிர்பார்த்து கவி படைக்கிறார். பார்த்து நல்ல பொட்காசாய் கொடுங்கள் அவசரத்தில் செல்லாக் காசை கொடுத்து விடப் போறீங்கள்  :icon_idea:  :icon_idea:  :icon_idea: 

ஆயுத போராட்ட காலம் முடிவடைந்த பின்னர் காசி ஆனந்தனின் நிலைப்பாடுகள் எனக்கு ஒத்துவராதவை. ஆனால் ஜீவா இதைத்தான் பாரதி, வோல்ரையர் எல்லோருக்கும் சொல்வாரா?

  • கருத்துக்கள உறவுகள்

உணர்ச்சிக் கவிஞர் அவர்களைப்பற்றி பலருக்குத் தெரியாத விடயங்கள் இங்கு இணைக்கும் இணைப்பில் இருக்கின்றன. இங்கு எழுதப்படாத விடயங்கள் ஈழவர் பலரின் மனக்கிடக்கைகளுக்குள் ஆழ தரித்திருக்கிறது. வெற்றி பெற்றிருந்தால் கொண்டாடியிருப்போம். இப்போது தோல்வியா என்பதையே கேள்விக்குறியோடு குழப்பத்தோடு நோக்கும் காலத்தில் நிற்கிறோம். எல்லோரும் குழம்புவது இயல்புதானே... எழுகை இல்லாமல் இயல்பு வாழ்க்கை அமைய எந்தவித சாத்தியமும் ஈழத்தில் இல்லை என்பதை நாம் ஏற்றே ஆகவேண்டும்.

 

பகுதி 1

http://mdmkfriends.blogspot.ca/2013/05/1_26.html

 

பகுதி 2

http://mdmkfriends.blogspot.ca/2013/05/2_27.html#more

  • கருத்துக்கள உறவுகள்

காசி ஆனந்தன் தனது வாரிசாக தீபசெல்வனை உருவாகியதை நினைக்க பெருமையாக இருக்கு .

பிழைக்க இப்படிஎல்லாம் வழி இருக்கா ? ஒரு சிரட்டை தண்ணி கிடைக்கவில்லையா ?

 

 

நீங்கள் வந்து யாழில் எழுதுவதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அதே உரிமை பொயட்டுக்கோ காசியானந்தனுக்கோ தீபச்செல்வனுக்கோ  உள்ளது. டக்ளஸ், சித்தாத்தன் போன்றவர்கள் தேர்த்தலில் நின்று தமிழ் மக்களுக்கு வாக்கு கேட்கும் போது காசியானந்தன் கவிதை எழுத்த முடியாதோ? அத்தோடு ஒரு  கவிஞர். அவருக்கு கவிதை தான் வடிக்க முடியும். உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர் கவிதை எழுதாமல் விட முடியுமோ?? 
 
ரொரண்டோவில் இருந்து புலிகளுக்கு எதிராக வசை பாடுபவர்களை ரொரண்டோவில் தப்பு தண்ணி இல்லையோ என்று ஒருவரும் கேட்கவில்லை. யோ.கர்ணன்  எழுதும் போது சிரட்டை தண்ணி இல்லையோ என யாரும் கேட்கவில்லை. மாறாக விமர்சனம் தான் வைத்தார்கள்.
 
உங்களுக்கும் நெஞ்சழுத்தம் இருந்தால்  துணிந்து விமர்சனத்தை வையுங்கள் பார்க்கலாம். நீங்கள் மற்றவர்களை மொக்கு கூட்டம் என்பதால் நிச்சயமாக அறிவுக்கூட்டமாக தான் இருப்பீர்கள்.எங்கே அறிவு பூர்வமான விமர்சனத்தை வையுங்கள் பார்க்கலாம்.

உண்மைக்கும் பொய்யிற்கும், அறிவிற்கும் அறியாமமைக்கும்,நல்லதிற்கும் கெட்டதிற்கும் இடையில் வித்தியாசம் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக்கும் பொய்யிற்கும், அறிவிற்கும் அறியாமமைக்கும்,நல்லதிற்கும் கெட்டதிற்கும் இடையில் வித்தியாசம் இருக்கு .

 

 

உங்களைப் பொறுத்தவரை உண்மை எது? கெட்டவர் யார்? புலிகள் கெட்டவர்கள், அதனால் அவர்களை ஆதரித்தவர்கள் கெட்டவர்கள், இங்கே எழுதுபவர்கள் ஒன்றில் கெட்டவர்கள் அல்லது அறிவிலிகள்....இதைவிட வேறு என்ன சொல்லிவிடப் போகிறீர்கள் ??

 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இங்கே உள்ள ஒரேயொரு அறிவாளியும், நல்லவரும், உண்மையானவருமாக உங்களைத்தான் பார்க்கிறேன். ஆனால் என்ன, அப்படி நீங்கள் ஒருதடைவையாவது இவற்றை நிரூபிக்கும்படி நடந்துகொள்வீர்கள் என்று இன்னும் எதிர்பார்த்து இருக்கிறேன். 

தமிழீழ விடுதலைப்புலிகளின் பலம் என்பது அவர்கள் கொண்டிருக்கும் மிக பலமிக்க முப்படைகளோ அல்லது அவர்களின் வீரம் மிக்க போராளிகளோ அல்லது அவர்கள் கொண்டிருக்கும் அதிநவீன ஆயுதங்களோ அல்ல, மாறாக உலக தமிழர்களின் மத்தியில் புலிகளுக்கு இருக்கும் ஆதரவு எனும் மாபெரும் சக்திதான் புலிகளின் பலம்.

இந்த ஒரே சக்திதான் அன்று ஒற்றை துப்பாகியுடன் தொடங்கப்பட்ட எமது விடுதலைப்போராட்டத்தை, உலகமே வியக்கும் வகையில் பலமிக்க முப்படைகளுடன் கூடிய மரபுரீதியான விடுதலைப் போராட்டமாக மாற்றிக் காட்டியது.

இந்த ஒரே காரணம் தான் அன்று முள்ளிவாய்க்காளில் 32ர்கும் மேற்பட்ட நாடுகள் புலிகளை எதிர்த்தபோதும், எதற்கும் பணியாது, எதற்கும் அஞ்சாது எம் தலைவரையும், அங்கிருந்த போராளிகளையும் தொடர்ந்து உறுதியுடன் போராட வைத்தது. 

எமது மூன்று தசாப்த கால நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தின் பாதையில், நாம் பலமிழந்து தோல்வியடையும் போது, நம்மை கைகொடுத்து தூக்கி விட்டதும், நாம் பலத்துடன் போர்க்களங்களில் வெல்லும் போது கைதட்டி பாராட்டி எமது விடுதலைப்போராட்டத்தை இன்றளவும் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக இருப்பது இந்த உலக தமிழர்களின் ஆதரவு எனும் ஒரே சக்திதான். 

இந்த ஆதரவு எனும் மாபெரும் சக்திமிக்க ஆயுதம் எம் தலைவரிடம் இருக்கும் போது, எந்த படை வந்து என்ன செய்துவிட முடியும் எம்மை...? எந்த ஒரு விடுதலைப்போராட்டமும் தோல்விகளையும், துன்பங்களையும் துரோகங்களையும் சந்திக்காமல் வெற்றியடைந்ததாக சரித்திரமும் இல்லை. எமது வரலாறும் அது போன்றதே 

எமக்கான வெற்றி காலம் தாழ்த்தி போகலாம், ஆனால் ஒருபோதும் கைநழுவிப் போகாது என்பதுவே உண்மை. இலங்கை இருநாடாக வேண்டும், தமிழீழம் தனிநாடாக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம், நிச்சயமாக அது ஒரு நாள் நடந்தே தீரும். 

தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.