Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் ஒரு புலி - ஒன்று

Featured Replies

  • தொடங்கியவர்

நட்புடன் நண்பர்களுக்கு வணக்கம்....
உங்கள் எல்லாவிதமான கருத்துக்களுக்கும் நன்றி

தயா

எனக்கு வரலாற்றை திரிப்பதில் நம்பிக்கையில்லை.... இது என் நினைவூகளின் பதிவூகள் மட்டுமே....
சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்...
திருத்திவிடுகின்றேன்...

ரதி 

அடக்கப்பட்ட மக்கள் அடக்கப்பட்ட மக்களையே நம்பவேண்டும்....
அந்தவகையில் நாம் இந்திய அரசைஅல்ல இந்திய மக்களையே நம்பியிருக்கவேண்டும்... அவர்களுடன் உறவை வளர்த்திருக்கவேண்டும்.... ஆனால் நமது விடுதலைப் போராட்டம் இந்திய அரசையூம் தமிழக அரசியல் வாதிகளையூம் நம்பியது.... அதன் விளைவூ இன்றும் நம்மை நமது விடுதலைப் போராட்டத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.... 

எனக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகளில் நம்பிக்கை இருக்கவில்லை....
பல போராளிகள் நேர்மையூடன் இணைந்து செயற்பட்டவர்கள் தான்..
ஆனால் தலைமையூம் அதன் கொள்கைகளும் நடைமுறைகளும் மக்கள் விரோதமானவை என இப்பொழுதும் நம்புகின்றேன்.
அந்தவகையில் தீலிபனின் போராட்டம் என்னை ஈர்க்கவில்லை...
பதிவில் ஏற்கனவே ;குறிப்பிட்டதுபோல் குமராப்பா புலேந்திரன் போன்றவர்கள் அந்த சூழலில் நீதிமன்றத்தை தமது நிலைப்பாட்டை நம் மீதான ;அடக்குமுறையை எடுத்துரைக்க பயன்படுத்தியிருக்கலாம்.... குட்டி மணி தங்கத்துரை ஆகியோர் அதனையே ;செய்தனர்.... ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையைப் பொறுத்தவரை மனித ;இறப்பில் தான் அதன் பலம் தங்கியிருந்தது....
மரணத்தை  முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்கலாம் என நம்பியது....
ஏன் இப்பொழுதுகூட ;சில புலி ஆதரவாளர்கள்....
இறுதி யூத்தம் எனக் கூறப்படுகின்ற 2009ம் ஆண்டு நடைபெற்ற சில ;சம்பவங்களில் தலைவர் வேண்டுமென்றே மக்கள் மரணிப்பதை; விரும்பயிருப்பார் என்கின்றார்கள்..... இவ்வாறான இனப்படுகொலை நடப்பதன் மூலமாவது நமக்கு விடுதலை கிடைக்கும் என நம்பியிருக்கலாம் எனக் கூறுகின்றார்கள்... எனக்கு இவர்கள் இவ்வாறு கூறியது ஆச்சரியமாக இருந்தபோதும்..... அவ்வாறு கூறிவது நம்புவது ;அவர்கள் தப்பில்லை..
ஏனெனில்  அதுதான் விடுதலைப் புலிகளின் தலைமை கட்டமைத்த அரசியல்.
நன்றி

  • Replies 103
  • Views 10.6k
  • Created
  • Last Reply

தயா

எனக்கு வரலாற்றை திரிப்பதில் நம்பிக்கையில்லை.... இது என் நினைவூகளின் பதிவூகள் மட்டுமே....

சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்...

திருத்திவிடுகின்றேன்...

உங்களின் வரலாற்றை நீங்கள் எழுதுவதில் எந்த தவறையும் காணுவது எண்ணம் கிடையாது... !  

ஆனால் அதில் வரும் மற்றவர்கள் சம்பந்தமாக எழுதும் போது வரும் வழுக்கள் அவர்கள் மீதான சேறடிப்பாக முடிந்து விடக்கூடாது... !  அதில் பலவற்றில் சிலதை நானும் சொல்ல முடியும்... 

இந்தியாவில் வைத்து தலைவர் பிரபாகரன் மிரட்டப்பட்டும் போது  பேரம் பேசுதல் மிரட்டுதலுக்கு பணியேன் என்பதை தெளிவாகவே சொல்லி இருந்தார்...  பின்னர் அவரின் தொலைத்தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்த போது இந்தியாவிலேயே  தண்ணீரும் இல்லாது உண்ணாவிரதம் இருந்தார்...  

பின்னர் இந்திய இராணுவம் ஈழம் வந்த போது  அவர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் எனும் சரத்தின் படி ஆயுதங்கள் பெரும்பாலானவை ஒப்படைக்க பட்டு இருந்தன... 

ஆனால் ஒப்பந்தம் செய்தபடி இலங்கை அரசோ இல்லை இந்திய படைகளோ நடந்து கொள்ள வில்லை...  அமுலாக்க இந்திய படைகள் தயாராகவும் இல்லை....  விசேட தூதர் ஜே என் டீக்சிற்,  இந்திய தளபதிகள்  கல்கட், திபேர்ந்தசின் போண்றவர்களுடனான புலிகளின் பேச்சுக்கள்  முடிவை எட்டவில்லை...  இந்திய படைகளுடன் வந்து இருந்த துணைக்குழுக்கள் ஆயுதங்களுடன் செய்த அட்டகாசங்கள் அளவில்லாமல் போய்க்கொண்டு இருந்தது,  வடக்கில் முக்கியமாக மணலாற்றில் தமிழ் மக்கள் அடித்து துரத்தப்பட்டு கொண்டும்  சிங்களக்குடியேற்றங்கள் வேகமாக்கவும் பட்டு இருந்தன...   கிழக்கில் திருகோணமலை மட்டக்களப்பில் அம்பாறையில் நிலமை இதைவிட மோசம்.. 

 அதன் சாரமாக  புலிகளின் அரசியல் பொறுப்பாளர் திலீபன் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்து உண்ணாவிரதம் இருக்கிறார்... 

அவை.. 

  1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலுமான புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

  2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

  3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.

  4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

  5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

அவரின் ஜனநாயக ரீதியான போராட்டத்துக்கு மதிப்பளிக்காத இந்திய அரசு அவரின் வீரச்சாவுக்கு காரணமாகிறது...   

பின்னர் இந்தியாவுக்கு பயணமான 17 புலிகள் இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை படைகளிடம் ஒப்படைக்க படுகிண்றனர்...  கைது செய்த புலிகளை கொழும்பு கொண்டு வருமாறு லலித் அத்துலத் முதலி பிடிவாதம் பிடிக்கிறார்...    ஒப்பந்தத்தின் போது  புலிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு அளித்து  அறிக்கை சமர்பித்து இருந்தார் J R...    ஒப்பந்தத்தை மீறி புலிகளை கைது செய்ததும் இல்லாது  கொழும்பு கொண்டு செண்று பணயக்கைதிகளாக்கும் திட்டத்துக்கு புலிகள் ஒத்துக்கொள்ளவில்லை... அவசர கால சட்டம் இருப்பில் இருக்கும் வரை நீங்கள் சொல்வது போல சட்டத்தின் முன் நிற்க வைக்க வேண்டிய தேவை கூட இலங்கை அரசுக்கு கிடையாது... 

பலாலியில் தடுத்து வைத்து இருந்த புலிகளை சந்திக்க மாத்தையாவை அனுப்பி வைக்கிறார் தலைவர்...  புலிகளை சந்தித்து உணவு பொட்டலங்களோடு  சைனட்டையும் கொடுத்த மாத்தையா இந்திய தளபதி "கல்கட்"டுடன் பேச்சுவார்த்தை நடத்துக்கிறார்...   புலிகள் தாங்கள் வைத்து இருக்கும் மிகுதி ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டும் எண்று நிபந்தனை விதிக்கிறார் "கல்கட்"  இந்த தகவலை தலைவர் பிரபாகரனுக்கு உடனடியாக சொல்கிறார்....  

ஏற்கனவே ஒப்பந்தம் பூரணமாக அமுல் படுத்தாமல் ஆயுதங்களுடன் நடமாடிய இந்திய ஒட்டுக்குழுக்களின் தொல்லையில் இருந்த புலிகள் தலைவர் அதை முற்றாக நிராகரிக்கிறார்...   அதோடு பேரம்பேசுதல் புலிகளுக்கு பிடிக்காது என்பதையும் தெளிவாக சொல்லி விடுமாறு  சொல்லி விடுகிறார்... முக்கிய தளபதிகளுக்காக கொடுக்க பட்ட சைனட் 17 பேரும் கடித்து விடுகிறார்கள்...  அதில் 5 வரை இந்திய இராணுவ வைத்திய பிரிவு காப்பாற்றி விடுகிறது... 

மறு நாள் இரவு  இந்திய படைகளின் பரா இராணுவ பிரிவு  தலைவர் பிரபாகரனை குறிவைத்து யாழ்பல்கலைக்களக மைத்தானத்தில் வானில் இருந்து தரை இறங்க அடுந்த நாள் காலை புலிகள் அவர்கள் அனைவரையும் தாக்கி அழிக்க சண்டை ஆரம்பிக்கிறது.... 

இதில் நீங்கள் பலவற்றைமறைத்து உங்களின் கருத்தை புகுத்த நினைக்கிறீர்கள் என்பது எனது குற்றச்சாட்டு... ! 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நீங்கள் பலவற்றைமறைத்து உங்களின் கருத்தை புகுத்த நினைக்கிறீர்கள் என்பது எனது குற்றச்சாட்டு... ! 

பதில் வரூம்.....வரா......து   தயா உதெல்லாம் வல்லை வெளிக்கு இறைத்த நீர்போல 

மீரா அண்ணை உங்கள் எழுத்துக்களை ஆவலுடன் வாசிக்கிறேன்.
தொடர்ந்து பதிவிடுங்கள்.
உங்கள் ஊகங்கள்தான் மனதுக்கு கஷ்டமாய் இருக்கிறது.உதாரணத்திட்கு 
நான் காயமடையும் போது என்னை எடுப்பதிட்காய் ஒரு போராளி வீரச்சாவு அடைந்தான்.   நானும் முன்பு ஒருமுறை காயமடைந்த வீரச்சாவு அடைந்த போராளிகளை மீட்க வயிற்றில் காயமடைந்தேன்.
எந்த பிரச்சாரத்திட்காகவும் இதை செய்வதில்லை 
  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் மீரா அண்ணா எங்கே எப்பிடி ஏன் எதற்காக எமது போராட்டம் தோல்வி அடைந்தது என்பது ஆராயப்பட வேண்டியதே......

அதற்கு போராட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து .....
சூடு காய்ந்து சில புத்தகங்களை எழுதி. இலக்கியம் படைத்த 
சொபசுத்தி போன்றவர்களுடன். இவரும் கூடி ஒரு ஆராய்ச்சியை நடத்தினால்தான்....
போராட்டம் ஏன் தோற்றது என்ற உண்மை தெரியவரும்.
 
85ஆம் ஆண்டில் இருந்து 87க்கு பல்டி அடிச்சல்தான். உண்மைகளை அப்படியே புதைக்கலாம்.
என்பது எழுதுபவர்களுக்கு நல்லக தெரியுது..........
வாசிப்பவர்கள்தான் வாசித்து உண்மைகளை அறிகிறார்கள்!
  • கருத்துக்கள உறவுகள்

நட்புடன் நண்பர்களுக்கு வணக்கம்....

உங்கள் எல்லாவிதமான கருத்துக்களுக்கும் நன்றி

தயா

எனக்கு வரலாற்றை திரிப்பதில் நம்பிக்கையில்லை.... இது என் நினைவூகளின் பதிவூகள் மட்டுமே....

சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்...

திருத்திவிடுகின்றேன்...

ரதி 

அடக்கப்பட்ட மக்கள் அடக்கப்பட்ட மக்களையே நம்பவேண்டும்....

அந்தவகையில் நாம் இந்திய அரசைஅல்ல இந்திய மக்களையே நம்பியிருக்கவேண்டும்... அவர்களுடன் உறவை வளர்த்திருக்கவேண்டும்.... ஆனால் நமது விடுதலைப் போராட்டம் இந்திய அரசையூம் தமிழக அரசியல் வாதிகளையூம் நம்பியது.... அதன் விளைவூ இன்றும் நம்மை நமது விடுதலைப் போராட்டத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.... 

எனக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் செயற்பாடுகளில் நம்பிக்கை இருக்கவில்லை....

பல போராளிகள் நேர்மையூடன் இணைந்து செயற்பட்டவர்கள் தான்..

ஆனால் தலைமையூம் அதன் கொள்கைகளும் நடைமுறைகளும் மக்கள் விரோதமானவை என இப்பொழுதும் நம்புகின்றேன்.

அந்தவகையில் தீலிபனின் போராட்டம் என்னை ஈர்க்கவில்லை...

பதிவில் ஏற்கனவே ;குறிப்பிட்டதுபோல் குமராப்பா புலேந்திரன் போன்றவர்கள் அந்த சூழலில் நீதிமன்றத்தை தமது நிலைப்பாட்டை நம் மீதான ;அடக்குமுறையை எடுத்துரைக்க பயன்படுத்தியிருக்கலாம்.... குட்டி மணி தங்கத்துரை ஆகியோர் அதனையே ;செய்தனர்.... ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையைப் பொறுத்தவரை மனித ;இறப்பில் தான் அதன் பலம் தங்கியிருந்தது....

மரணத்தை  முன்வைத்து போராட்டத்தை முன்னெடுக்கலாம் என நம்பியது....

ஏன் இப்பொழுதுகூட ;சில புலி ஆதரவாளர்கள்....

இறுதி யூத்தம் எனக் கூறப்படுகின்ற 2009ம் ஆண்டு நடைபெற்ற சில ;சம்பவங்களில் தலைவர் வேண்டுமென்றே மக்கள் மரணிப்பதை; விரும்பயிருப்பார் என்கின்றார்கள்..... இவ்வாறான இனப்படுகொலை நடப்பதன் மூலமாவது நமக்கு விடுதலை கிடைக்கும் என நம்பியிருக்கலாம் எனக் கூறுகின்றார்கள்... எனக்கு இவர்கள் இவ்வாறு கூறியது ஆச்சரியமாக இருந்தபோதும்..... அவ்வாறு கூறிவது நம்புவது ;அவர்கள் தப்பில்லை..

ஏனெனில்  அதுதான் விடுதலைப் புலிகளின் தலைமை கட்டமைத்த அரசியல்.

நன்றி

குமரப்பா,புலேந்திரனை நீதிமன்றத்திற்கு எப்படியும் கொண்டு சென்று இருப்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள் என்று புரியவில்லை :unsure:
 
இறுதி யுத்த பற்றி நீங்கள் சொன்னதை நானும் கேள்விப்பட்டேன்.எத்தனையோ மக்கள் இறந்தாலும் நல்ல தீர்வொன்று கிடைத்திருந்தால் பேசாமல் இருந்திருப்பீர்கள்.அதுவே எதிர் மறையாகப் போன படியால் தானே விமர்சிக்கிறீர்கள் 

மீரா பாரதி மற்றவர்களைப் போல் நான் இங்கு புலி ஒரு பரிசுத்த இயக்கம் மற்ற அமைப்புகள் எல்லாம் தமிழின துரோகிகள் என்று சொல்ல வரவில்லை.

ஆனால் உங்களை நோக்கிய எனது கேள்வி என்னவென்றால் .... இந்த உலகத்தின் வரலாற்றில் எங்காவது ஒரு மூலையில் இருந்து கூட எடுத்தாவது ஒரு இலட்சிய ஆட்சிக்கு உதாரணம் காட்டுங்கள் இங்கு இலட்சிய ஆட்சி என்பது

1) தனது தரப்பு இலாப நட்டங்களை எள்ளளவேனும் கணக்கெடுக்காமல் முற்றுமுழுதாக 100% மக்களின் நலன் கருதி செயற்படுவது
2) அதிகாரம் மீது எதுவித ஆசையும் இன்றி ஒரு தொண்டு செய்பவன் போல் ஆட்சி செய்வது
3) எந் நேரத்திலும் மக்களின் நன்மைக்காக ஆட்சியை விட்டு இறங்கவோ இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்கவோ தயாராகவிருப்பது.

கற்பனையில் கூட நடக்கமுடியாத விடயங்கள். அப்ப ஆட்சி அதிகாரம் எண்டு வந்தாலே பல தவறுகள் கெடுபிடிகள் இருந்தே ஆகும். புலி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

சரி உங்கள் போன்றோரின் ஆதங்கம் ஏன் புலி தனக்குத் தான் எல்லாம் என்று தமிழர் மீது ஏக பிரதிநிதித்துவத்தை எடுத்துக் கொண்டது? ஏன் மற்றைய அமைப்புக்களை எல்லாம் அழித்தது? ஞாயமான ஆதங்கங்கள் தான். 

சரி ஒரு பேச்சுக்கு புலி தானும் தன் பாடும் எண்டு இராணுவத்தோடு மட்டும் போராடிக் கொண்டிருந்தது என்று வையுங்கள். ரெலோ வந்து வாம்மா புலி என்ர செல்லம் எண்டு கொஞ்சி இருக்கும் எண்டா நினைக்கிறியள். அடக்கி ஆளுறதும், ஆட்சியை விஸ்தரிக்கிறதும், தனக்கு சவாலானவனை ஒழிப்பதும் தான் தொன்று தொட்டு இன்று வரை உலக வரலாறு. அப்ப புலி இல்லாட்டி ரெலோ, ரெலோ இல்லாட்டி இன்னொன்று. அல்லது சமபலத்தால் ஒவ்வொன்று ஒவ்வொரு ஏரியாவை கொன்றோல் பண்ணிறதும் மாறி மாறி தட்டுப் படுறதும் நொட்டுப் படுறதுமா போயிருக்கும் 

இது தான் நியதி. ஏனென்றால் நாங்கள் ஆயுதப் போராட்டத்தை அலசி ஆராஞ்சு மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் ஒன்றுகூடி கையில் எடுக்கவில்லை. மோசமான மகாவம்ச சிந்தனையால் உருவாகப்பட்ட பேரினவாதத்துக்கும், இலங்கை தீவை விழுங்க நினைச்ச பிராந்திய வல்லாதிக்கத்தும் பிறந்தது தான் இந்த குழந்தை.பிறப்பே வக்கிரம். பிறகு அது எவ்வாறு ஆரோக்கியமாக வளர்வது? எங்கெல்லாம் இன்னொரு நாடு தன்ர ஆதாயத்துக்காக ஆயுதங்களை கொட்டுதோ அங்கெலாம் ஆப்கானிஸ்தான்கள் தான் உருவாகும். இது வரலாற்று நியதி.

எங்கட ஆயுதப் போராட்டத்தைப் பொறுத்தளவில் இரண்டு தான் வழி: 
1) புலி காட்டிய வழி
2) ரோவின் கைப்பிள்ளை

முதலாவது அழிக்கப்பட்டது வரலாறு. இரண்டாவதும் தேவை முடிந்தபின் அழிக்கப்பட்டிருக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.

இதை விட முக்கிய கேள்வி. சிங்களவன் அடிக்க முதல் நாங்க ஒரு ஐக்கியமான இனமா இருந்தோமா என்பதுதான். யாழ்ப்பாணத்தான், வன்னியான், மட்டக்கிளப்பான் ... சின்ன யாழ்ப்பாணத்துக்குள்ளயே வடமராட்சி தென்மராட்சி தீவான் ... ஆயிரம் சாதிகள் வர்க்க பேதங்கள் இப்பிடி ஒரு குழம்பிய குட்டையாகத் தானே இருந்தோம். இந்த குட்டைக்குள்ள ரோ காரன் ஆயுதத்தை கொண்டு வந்து இந்தா நீயும் பிடி அவனும் பிடி எண்டு பத்து பேரிட்ட குடுத்தா, குட்டை கூவம் ஆகாமல் தேவலோகத்து பாற்கடலாகவா மாறும்?

இதில நீங்க மார்க்ஸியம் படிச்சு தோழர் தோழர் எண்டு சுத்துறத்தாலயோ காந்தியத்தை அக்கக்கா பிரிச்சு மேயுறத்தாலயோ எதையும் சாதிச்சிருக்க முடியாது.

இந்த கூவம் எண்டுற நிலையில் இருந்து பிரபாகரனுக்கு ஆயிரம் தெரிவும் உக்காந்து யோசிக்க நேரமும் எல்லாத்தையும் செய்து முடிக்கக் கூடிய வசதி வாய்ப்புக்களும் கிடைக்கவில்லை. என்னை பொறுத்தவரை அவர் செய்த தவறு அடைஞ்சா தமிழீழம் எண்டுற ஒரு மூர்க்கமான சாத்தியமற்ற கொள்கையை முன்னெடுத்தது தான். அந்த கொள்கையில் உறுதியா நிண்டா நெருப்பாற்றில் நீந்துவது மட்டும் தான் ஒரே ஒரு தெரிவு. அதை நீங்கள் பிண அரசியல் என்டு சொல்லுறீங்கள். ஆனால் தன்னையும் தன் குடும்பத்தையும் அந்த நெருப்பாற்றை விட்டு ஓரமா தள்ளி வைச்சிருக்கேல்லை. கடைசிவரை அதிலேயே பயணித்து வீரச்சாவையும் அடைஞ்சு விட்டார். சாதாரண மக்கள் அதிலும் எம் தமிழ் மக்கள் உயிர் பயம், பந்த பாசங்கள், பொருள் கல்வி வசதி வாய்ப்புக்கள், பாலியல் இச்சைகள் இவற்றோடு இந்த மூர்க்கமான நெருப்பாற்றில் தொடர்ச்சியாக பயணிக்க முடியாதவர்கள் என்பதை உணரத்தவறி விட்டார்.

எனக்குள் ஒரு சின்ன ஆதங்கம் என்னவென்றால் 87 ஆம் ஆண்டு புலிகள் அந்த இடைக்கால நிர்வாக சபையை ஏற்றுக்கொண்டு ஆயுதங்களை கைவிட்டு அரசியலுக்குள்ள போயிருந்தா ... தீர்வு என்று கிடைத்திருக்கவிட்டாலும் முள்ளிவாய்க்கால் அழிவு வந்திருக்காது. ஏதோ ஈழ்த்தமிழினம் அந்த தீவில் தனது இருப்பையாவது உறுதி செய்திருக்கும் என்பதே......? ஆனாலும் அடிபடையாக சிந்தித்தால் ஏன் இந்தியா வட கிழக்கில் காலூன்றியது? தமிழனின் நன்மை கருதியா? இல்லவே இல்லை. சரி அப்ப வடக்கு கிழக்கை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு பெரும் தென் சிங்களப் பகுதியை தனக்கு எதிரியாகவோ அல்லது வேறோர் நாடு செல்வாக்கு செலுத்தவோவா? இல்லவே இல்லை. ஒரே நோக்கம் முற்று முழு இலங்கை மீதான தன் ஆதிக்கம். அந்த ஆதிக்கத்தை நிறைவேற்ற ஏதுவான சூழல் எது? நிரந்தரமான சமாதானமா? இருக்கவே இருக்காது. பிறகு என்ன ... ஒரே குத்து வெட்டுத் தான். அப்பத் தானே பஞ்சாயத்து பண்ணலாம்.  சரி இன்னொரு பக்கத்தால் யோசித்தால் ... பனிப் போரின் பின் இந்தியாவின் மேற்கு சார்பான பல்டியின் பின் நிலமை எப்படிப் போயிருக்கும்? சீனாவை தடுக்கும் நோக்கில் அம்பேரிக்காவோடு சேர்ந்து சிங்களவனோடு டீலைப் போட்டுவிட்டு தமிழனை கைவிட்டிருந்தா ...?  என்ன இண்டைக்கு ஏதோ ஒரு இணையத் தளத்தில் பிரபாகரன் எப்பேற்பட்ட எழுச்சியான ஒரு போராட்டத்தை கைவிட்டு தமிழினத்தின் நம்பிக்கையை சிதைச்சிருக்கிறார் எண்டு எழுதியிருந்தாலும் எழுதியிருப்பம் :wub: 

physicsல் dynamics என்று ஒரு பாடம் உள்ளது. நடக்கும் ஒவ்வொரு அசைவுகளும் அந்தந்தக் கணத்தில் தாக்கிய விசைகளின் பொருட்டு நடந்து விடும். எமது போரட்டமும் அதே போன்றது தான்.
அதற்கு timing machine இல் பின்னால் போய் அலசி அங்கலாய்ப்பது. சுயவிமர்சனம் என்னும் பேரில் வீணாக வெறும் வாயை இரை மீட்டி காலம் கடத்துவது. எல்லாமே சுத்த வேஸ்ட் (இதை எழுதி முடிக்கும் போது இன்னும் தெளிவாகப் புரிந்தது -- எவன் போய் நான் எழுதியதை மினக்கெட்டு இருந்து வாசிக்கப் போகிறான் என்று உணர்ந்த போது  :icon_mrgreen: ).

ஏனென்றால் மீண்டும் ஒரு பனிப் போர், ஜே.ஆர், இந்தியாவின் ஆயுதப் பயிற்சி ... சாத்தியங்கள்? சரி இவையே நடந்தாலும் மக்கி மண்ணாய் போய் ஏறக்குறைய இப்பவே 3ஆம் சிறுபான்மை எண்ட நிலைக்குப் போன என் இனத்தால் ... ஒரு தடி தண்டே தூக்க முடியுமோ தெரியாது ... இதற்குள் ஆயுதமா? சரி அப்படி ஒரு நடந்தாலும் ... அது ரோவின் வழிகாட்டலில் நடக்குமே தவிர இங்கிருந்து நாங்கள் செயும் மீளாய்வு புண்ணாக்கு என்று எதிலும் நடக்கப் போவதில்லை. 

ஆக இதை விட்டால் சுவாரசியமாக அடி பிடி எண்டு விவாதிக்க வேறு மேட்டர் கிடையாது என்பதால் 1983 - 2009 க்குளேயே மீண்டும் மீண்டும் சுத்தித் சுழருவோமாக.

Edited by பரதேசி

அதற்கு timing machine இல் பின்னால் போய் அலசி அங்கலாய்ப்பது. சுயவிமர்சனம் என்னும் பேரில் வீணாக வெறும் வாயை இரை மீட்டி காலம் கடத்துவது. எல்லாமே சுத்த வேஸ்ட் (இதை எழுதி முடிக்கும் போது இன்னும் தெளிவாகப் புரிந்தது -- எவன் போய் இதை மினக்கெட்டு இருந்து வாசிக்கப் போகிறான் என்று உணர்ந்த போது  :icon_mrgreen: ).

ஏனென்றால் மீண்டும் ஒரு பனிப் போர், ஜே.ஆர், இந்தியாவின் ஆயுதப் பயிற்சி ... சாத்தியங்கள்? சரி இவையே நடந்தாலும் மக்கி மண்ணாய் போய் ஏறக்குறைய இப்பவே 3ஆம் சிறுபான்மை எண்ட நிலைக்குப் போன என் இனத்தால் ... ஒரு தடி தண்டே தூக்க முடியுமோ தெரியாது ... இதற்குள் ஆயுதமா? சரி அப்படி ஒரு நடந்தாலும் ... அது ரோவின் வழிகாட்டலில் நடக்குமே தவிர இங்கிருந்து நாங்கள் செயும் மீளாய்வு புண்ணாக்கு என்று எதிலும் நடக்கப் போவதில்லை. 

ஆக இதை விட்டால் சுவாரசியமாக அடி பிடி எண்டு விவாதிக்க வேறு மேட்டர் கிடையாது என்பதால் 1983 - 2009 க்குளேயே மீண்டும் மீண்டும் சுத்தித் சுழருவோமாக.

அது...பெயரை மாற்றுங்கள் ...அரசியல் ஆய்வாளர் எண்டு... :D

  • தொடங்கியவர்

kkaran

நட்புடன் நண்பர் கரனுக்கு முதலில் எனது எழுத்துக்கள் சொற்களை எந்தவகையிலாவது உங்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவூம். எனது நோக்கம் உங்களை நோகடிப்பதல்ல.

மாறாக அன்று நான் என்ன மனநிலையில் இருந்தேன் என்பதை பதிவூ செய்வதே.
 
மற்றும் படி ஒரு காலத்தில் ஆயூதப் போராட்டமே சரியான பாதை என்று நம்பியவன். அந்தவகையில் உங்களைப் போன்றவர்களிடம் நிறைய மதிப்பு இருக்கின்றது. உங்கள் கருத்துக்களுடன் உடன்படாவிட்டாலும்.
 உங்கள் கஸ்டங்கள் வலிகளைப் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றேன்...
 
ஆனால் அன்று இயக்கங்களில் சேர்ந்த ஒவ்வொருவருக்குமு; ஒரு காரணம் இருந்தது....
உண்மையிலையே அரசியலைப் புரிந்து கொண்டு அர்ப்பணிப்புடன்
 செயற்பட்டவர்களும் உண்டு.....

அரசியiலைப் புரிந்து கொண்டு தவறாகப் பயன்படுத்தியவர்களும் உண்டு....
ஆயூதமோகத்தினால் இணைந்து சிறந்த போராளிகளாக மாறியதும் உண்டு....
கையில் ஆயூதம் இருந்ததினால் கொலைகார்களாக மாறியவர்களும் உண்டு.....
இப்படிப் பலவிதம்....
 
மற்றுப்படி சமூகவிடுதலைக்காககப் போராடுகின்றவர்கள் ஆயூதம் ஏந்தினால் மட:டும்தான் போராளி என்ற புரிதல் எனக்கில்லை....
போராட்டங்கள்  பல்வேறு வழிகளில் செயற்பாடுகளில் முன்னெடுக்கப்படலாம்.

இன்றைய நிலையில் ஆயூதப் போராட்டமாக அல்லாது எவ்வாறு மக்கள் போராட்டம் ஒன்றைக் கட்டி எழுப்பது என்பதே ;எனது அக்கறைக்கும் சிந்தனைக்குமு; உரிய விடயம்...
 
மாறாக மக்களைப் பலி கொடுத்து பெறும் விடுதலை யாருக்கு வேண்டும்....
வெறுமNனு நிலத்தை விடுதலை செய்வதும் ஆள்வது மட்டுமல்ல விடுதலை....
 
அடக்கப்படுகின்ற மக்கள் விடுதலை பெற்று சுதந்திரமாகவூம் ஆனந்தமாகவூம் சகல உரிமைளுடனும் வாழவேண்டும்....
அதை எப்படி அடைவது என்பது பற்றி எனக்குமு; தெரியாது.... தேடுகின்றேன்...
அவ்வளவூதான்...
 
சில நண்பர்களின் கேள்விகளுக்கும் இங்கு சில பதில்கள் கிடைத்திருக்கம் என நம்புகின்றே;ன....
அதேநேரம் எல்லாவற்றுக்கும் பதில் எழுதவூம் முடியாது...

பதில் என்னிடம் இருக்குமு; என்றுமில்லைதானே....
நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

மாறாக மக்களைப் பலி கொடுத்து பெறும் விடுதலை யாருக்கு வேண்டும்....

வெறுமNனு நிலத்தை விடுதலை செய்வதும் ஆள்வது மட்டுமல்ல விடுதலை....

அடக்கப்படுகின்ற மக்கள் விடுதலை பெற்று சுதந்திரமாகவூம் ஆனந்தமாகவூம் சகல உரிமைளுடனும் வாழவேண்டும்....

அதை எப்படி அடைவது என்பது பற்றி எனக்குமு; தெரியாது.... தேடுகின்றேன்...

அவ்வளவூதான்...

இங்கு கருத்து எழதுபவர்கள் அனைவரையும் துச்சமாக  மதித்து ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்தவனுக்கு எமது மண்ணின்  விடுதலை வரலாற்றை சொல்வது போல் எழுதப்பட்டிருக்கிறது.

80 களில்   மக்களிடையே  நடமாடி

கண்டாலே மக்கள்  ஓடிப்போகும்

இந்த சிவப்பு மற்றும்  தாடிக்காறர்கள்  

இன்னும்   மாறவில்லை  என்பது எமது இனத்துக்கான  சாபக்கேடு

புலிகள் மேல் விமர்சனம் என்ற ரீதியில் 

அவர்களை தட்டிவைக்கணும்  என்ற வகையில்  எழுதப்பட்டு

மிக மிக ஆளமாக

விடுதலை என்றால்  என்னவென்றே  தெரியாதபடி  இவர்  இருந்ததை

இப்பொழுதும் இருப்பதை ஒப்புக்கொள்கிறார்.

அதற்காகவே ஒரு பச்சை  இவருக்கு போட்டுள்ளேன்.

இவர்கள்  வெளியில்  வரப்போவதில்லை

வாழ்நாள் முழுவதும் தேடுதல்  தொடரும்

தலைவிதி............. :(  :(  :(

எங்களுக்கு  மிட்டாய் வேணும் காசோ வேறை எதையும் குடுக்காமலும் வேணும்,  அது இனிப்பாகவும் வேணும்... !

எதையுமே இளக்காமல் இந்த உலகத்திலை எதையாவது பெற முடியுமே எண்டு எனக்கு தெரியவில்லை...  தேடுகிறேன் அவ்வளவு தான்...  !  

ஒருவேளை இந்தியா எங்களுக்கு தனிநாடும் சுதந்திரமும் எடுத்து தந்திருந்தால் இனிப்பாக இருந்து இருக்குமோ...??   நாங்கள் நோகாமல் நுளம்படிக்கிற வேலையை பாக்க பழக வேண்டும்... 

மீரா அண்ணை உங்கள் கருத்துக்களை நீங்கள் எழுதுகிறீர்கள் அது உங்களின் உரிமை அதை நான் மதிக்கிறேன்.
ஒருவர் தனது வீட்டைப்பற்றி எழுதும் போது தரவுகள் சரியாக இருப்பதும் 
அயல் வீட்டைப்பற்றி எழுதும் போது தரவுகள் ஊகங்களாக இருப்பதும் 
ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.  
  • கருத்துக்கள உறவுகள்

மாறாக மக்களைப் பலி கொடுத்து பெறும் விடுதலை யாருக்கு வேண்டும்....

வெறுமNனு நிலத்தை விடுதலை செய்வதும் ஆள்வது மட்டுமல்ல விடுதலை....

அடக்கப்படுகின்ற மக்கள் விடுதலை பெற்று சுதந்திரமாகவூம் ஆனந்தமாகவூம் சகல உரிமைளுடனும் வாழவேண்டும்....

அதை எப்படி அடைவது என்பது பற்றி எனக்குமு; தெரியாது.... தேடுகின்றேன்...

அவ்வளவூதான்...

3.8.மில்லியன் மக்களை இழந்து வியட்நாமிய மக்கள் சுதந்திரம் பெறவேண்டி இருந்தது.எனவே மக்களை இழக்காமல் சுதந்திரம் கிடைக்குமென எதிர்பார்க்க முடியாது.

http://mattsteinglass.wordpress.com/2008/06/20/vietnam-war-killed-38-million-vietnamese-not-21-million/

  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரத்திற்காக மில்லியன் மக்கள் சாக வேண்டுமானால் அடிமைகளாகவே இருந்துவிட்டுப் போகலாம்.. அல்லது எல்லா திட்டங்களையும் போட்டுவிட்டு 24 மணிநேரத்தில் அடித்துப் பிடிக்க வேண்டும்.. :o:rolleyes:

மீரா பாரதி மற்றவர்களைப் போல் நான் இங்கு புலி ஒரு பரிசுத்த இயக்கம் மற்ற அமைப்புகள் எல்லாம் தமிழின துரோகிகள் என்று சொல்ல வரவில்லை.

ஆனால் உங்களை நோக்கிய எனது கேள்வி என்னவென்றால் .... இந்த உலகத்தின் வரலாற்றில் எங்காவது ஒரு மூலையில் இருந்து கூட எடுத்தாவது ஒரு இலட்சிய ஆட்சிக்கு உதாரணம் காட்டுங்கள் இங்கு இலட்சிய ஆட்சி என்பது

1) தனது தரப்பு இலாப நட்டங்களை எள்ளளவேனும் கணக்கெடுக்காமல் முற்றுமுழுதாக 100% மக்களின் நலன் கருதி செயற்படுவது

2) அதிகாரம் மீது எதுவித ஆசையும் இன்றி ஒரு தொண்டு செய்பவன் போல் ஆட்சி செய்வது

3) எந் நேரத்திலும் மக்களின் நன்மைக்காக ஆட்சியை விட்டு இறங்கவோ இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்கவோ தயாராகவிருப்பது.

கற்பனையில் கூட நடக்கமுடியாத விடயங்கள். அப்ப ஆட்சி அதிகாரம் எண்டு வந்தாலே பல தவறுகள் கெடுபிடிகள் இருந்தே ஆகும். புலி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

சரி உங்கள் போன்றோரின் ஆதங்கம் ஏன் புலி தனக்குத் தான் எல்லாம் என்று தமிழர் மீது ஏக பிரதிநிதித்துவத்தை எடுத்துக் கொண்டது? ஏன் மற்றைய அமைப்புக்களை எல்லாம் அழித்தது? ஞாயமான ஆதங்கங்கள் தான். 

பல தேசம் கண்டவரே உங்கள் கருத்துக்கள் மிக அருமை .இதுதான் நியதி. வாழ்த்துக்கள் i

  • தொடங்கியவர்

இந்திய இராணுவம் அமைதிப்படையாக வரும் பொழுது மக்கள் ஆனந்தமாக ஆர்பரித்து வரவேற்றனர். இருப்பினும் ஏன் இவ்வளவு கனரக வாகனங்கள் மற்றும் ஆயுதங்களுடன் வருகின்றார்கள் என எல்லோர் மனதிலும் கேள்வி எழுந்தது. அதற்கான விடை இப்பொழுது கிடைத்தது....

இந்திய இராணுவம் தமிழ் மக்கள் மீதும் போர் தொடுத்ததுவிடுதலைப்புலிகள் எதிர்த்து தாக்கினார்கள். பல மனித இழப்புகளை இந்தப் போர் எமக்குத் தந்தது.... இந்திய இராணுவம் யாழ். ஆஸ்பத்திரிக்கு முன்னால் இறந்த மனிதர்களை அடுக்கி அரணாக வைத்து சுட்டார்கள் எனக்  கூறினார்கள்.... கிடைத்த இடங்களில் எல்லாம் வன்புணர்வும் செய்தார்கள் எனக் கண்டவர்கள் அறிந்தவர்கள் சொன்னார்கள்.....

இந்த சண்டை ஆரம்பிப்பதற்கு முதல் நாம் நாவற்குழி சந்தியிலிருந்த ஒரு பழைய கல் வீட்டிற்கு குடியேறினோம்இது பார்ப்பதற்கு பாழடைந்த வீடு போல் இருந்தது…. இல்லை பாழடைந்த வீடுதான்ஆனாலும் பல அறைகள் இருந்தனமின்சாரம் இருந்ததுகிணறு இருந்தது…. ஆனால் அயல் வீடுகள் இல்லைநாம் அநாதரவாக இருந்தோம்

நாம் வசித்த வீட்டின் உரிமையாளரான ஒரு பொறியியளாலர். அவரது இன்னுமொரு சொந்த வீடு நாம் வாழ்ந்த வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் கைதடி நோக்கி செல்லும் வழியில் இருந்தது. இந்திய இராணுவம் முன்னேறி வரும் பொழுது காரணம் ஏதுவும் இல்லாமல் அந்த வீட்டில் வைத்து அவரைச் சுட்டுக்கொன்றார்கள்… … இதை அறிந்து நமக்கு பழக்கமாக இருந்த முன்னால் இயக்க அண்ணர்களின் ஆயூதங்களுடன் இருந்த படங்களை கிணற்றடியில் புதைத்தோம்.

நம் வீட்டுக்கு இன்னுமொரு இந்திய இராணுவக் குழு வந்தது.... அப்பா, அம்மா, இரு தங்கைகள் மற்றும் நான் வீட்டில் இருந்தோம். அவர்கள் நம்மையும் நமது வீட்டையும் சோதனை செய்த போதும் நம்மைப் பார்த்து கவலைப்பட்டார்கள். … அக்கறையுடன் உண்ண உணவு கொடுத்தார்கள்நம்மை இந்த இடத்திலிருந்து பாதுகாப்பான இடம் தேடி வெளியேறும்படி பணித்தார்கள்இதனால் நாம் கண்டி வீதியைக் கடந்து கடற்கரைப் பக்கமாக இருந்த பள்ளத்துக் காணியை நோக்கிச் சென்றோம்.. இங்கு குடியிருந்தவர்கள் சாதியால் அடக்கி ஓதுக்கப்பட்ட மனிதர்கள்இவர்கள் வாழ்ந்த பகுதியில் இருந்த சிறு கொட்டில் ஒன்றில் ஒரு நாள் இருந்த பின் அங்கு இருப்பது பாதுகாப்பனதல்ல என்பதால் மீண்டும் கண்டி வீதியைக் கடந்து நாவற்குழி சித்திவினாயகர் கோயிலடியை நோக்கி செல்ல முடிவெடுத்தோம்காலை வேலை கண்டி வீதியைக் கடக்கும் பொழுது மரணத்தையும் கடந்தே சென்றோம்…. ஆம் இராணுவத்திற்கும் இயக்கத்திற்கு சண்டை நடந்து கொண்டிருந்ததுகுண்டுகளும் சன்னங்களும் இரு பக்கங்களிலிருந்தும் தாறுமாறாக பறந்து கொண்டிருந்தனஇதற்குள் தப்பித்து நாவற்குழி புகையிரத நிலையத்திற்கூடாக நூழைந்து மாதிரிக் கிராமத்திற்கூடாக நடந்து வந்தோம்……

பள்ளத்துக் காணியில் இருக்க முடியாது என்பதால் ஏதோ ஒரு நம்பிக்கையில் அங்கிருந்து வெளிக்கிட்டு வந்துவிட்டோம்ஆனால் இனி எங்கே இருப்பது என்பது கேள்விக்குறியாகிவிட்டதுநாம் முன்பிருந்த கோயில் காணியிலிருந்த கொட்டிலும் இல்லாமல் போய்விட்டதுஆனால் சொக்கலிங்கம் மாஸ்டர் தனது வீட்டுக்கு அருகில் தாம் பயன்படுத்தாது வைத்திருந்த தனது சிறு வீட்டை தற்காலிகமாக நாம் வாழ்வதற்கு தந்தார்இங்கும் நீண்ட நாட்கள் இருக்க முடியவில்லைஇந்திய இராணுவம் நாவற்குழி சந்தியில் முகாமிட்டதுஅங்கிருந்து கேரத்தீவு வீதி வழியாக அங்குள்ள கிராமங்களுக்கு வரப்போகின்றது என்ற பயத்தின் காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு வெளியேறினர்பலர் நாவற்குழி மாகாவித்தியாலயத்தில் தஞ்சமடைந்தனர்

இக் காலங்களில் மிக குறைந்த புலி உறுப்பினர்களே நாவற்குழியில் இருந்தனர்எனக்குத் தெரிய மூன்று பேர் மட்டுமே. அருள் பொறுப்பாளராக இருந்தார். மழை பெய்து கொண்டிருந்த ஒரு பொழுதில்... நாவற்குழி சந்தியில் சுட்டுச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன... அருள் காலில் சுடுபட்டு நொண்டி நொண்டி பச்சைப் பசேல் என வளர்ந்திருந்த வயல் வெளிகளுக்கூடாக தனது சனங்கள் இருக்கின்ற இடத்தை நோக்கிப்  போய்க் கொண்டிருந்தார்.... கோயில் மண்டபத்தில் குழுமியிருந்த நாம் அவர் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நாம் ஒருவரும் அவருக்கு உதவப் போகவில்லை. அப்பொழுது மண்டபத்தில் இருந்த ஒருவர்  “இந்த நள நாய்க்கு இது வேண்டும்” என்றார்.

இறுதியாக இந்திய இராணுவம் பள்ளிக்கூடத்திற்கு வரஅப்பா இராணுவத்திற்கும் சனங்களுக்கும் இடையிலான தொடர்பாளராக மாறினார்இது நாவற்குழி புலிகளின் பொறுப்பாளர் அருளுக்கு பிடிக்கவில்லைஅதனால் அவர் அப்பாவிற்கு மரண தண்டனை கொடுப்பதற்காக அலைந்தார்இதன் காரணமாக பாதுகாப்பு கருதி அருளின் நடமாட்டம் குறைந்த பகுதியான நாவற்குழி சந்தியிலிருந்த பள்ளக் காணியில் வாழ்வதற்காக மீண்டும் சென்றோம்அங்கு நாம் வாழ்வதற்கு ஒரு குடும்பம் தாம் பயன்படுத்தாத கொட்டிலை தந்தார்கள்இங்கு வந்தபின் நாம் முன்பு சந்தியில் குடியிருந்த வீட்டிற்கு சென்று நமது சமான்களை எடுக்கச் சென்றோம். முதலில் நம்மைக் கண்டு உதவி செய்த இந்திய இராணுவக் குழுவின் தளபதி ஹிந்தி மொழியில் நாம் எங்கிருந்தாலும் நலமுடன் இருக்க வேண்டும் என சிறு கவிதை போல் ஒன்று எழுதிவைத்துவிட்டு சென்றிருந்தார். அதைப் பார்ந்து உண்மையிலையே சிலிர்த்துப் போனோம்... இந்த இராணுவத்தில் இப்படியும் மனிதர்களா என...

இக் காலங்களில் உயர்தரப்பரிட்சையில் நான் சித்தியடைந்த தகவல் அறிந்து மகிழ்தேன். வீட்டில் உள்ள அனைவருக்கும்  மிகுந்த  மகிழ்ச்சி.

அப்பா அம்மாவின் குடும்ப உறவுகளிலிருந்து முதன் முதலாக ஒருவர் இலங்கைப் பல்கலைக்கழத்திற்கு தெரிவு செய்யப்பட்டது மகிழ்சியானதுதானே. பெரும்பாலான உறவினர்கள் சொத்தும் பணமும் கல்வீடுகளும் உள்ளவர்கள். நமக்கு இப்படியெல்லாம் ஒன்றுமில்லாதபோதும் நான்  படித்து பல்கலைக்கழம் செல்வது பெருமைதானே.

மீண்டும் ஒரு போர் முடிவடைந்தது. ஆனால் இராணுவத்தில் நெருக்கடிகள் இன்னும் குறைந்தபாடில்லை. புலி உறுப்பினர்கள் தலைமறைவானார்கள். காடுகளுக்குள் போனார்கள். புலிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தாலும் போராளிகள் இராணுவத்திற்கு உச்சிக் கொண்டு மதில் பாய்ந்து ஒழுங்கைகளால் ஓடித்திரிந்து கொண்டிருந்தார்கள். அப்படி இருந்தாவாரே நகருக்குள் வந்து வசதி கிடைக்கும் பொழுது அல்லது காத்திருந்து இந்திய இராணுத்தினரின் மேல் தாக்குதல் நடத்தி விட்டுச் செல்வார்கள். அல்லது துரோகிகள் என தாம் நினைப்பவர்களை   சுட்டு தண்டனை கொடுத்தார்கள். அதேவேளை போரின் பாதிப்புகளையும் மீறி மனிதர்கள் மீண்டும் வழமைபோல வாழ ஆரம்பித்தார்கள்.... முயற்சித்தார்கள். ......

அப்பாவால் நீண்ட காலம் நம்முடன் வாழ முடியவில்லைஏனெனில் ஒரு நாள் அப்பாவை சந்திப்பதற்காக அருள் அழைத்திருந்தார்அவரை சந்திப்பது தனக்கு ஆபத்தானது என்பதை அறிந்த அப்பா இங்கிருந்து ஏதோ ஒரு வழியாக தப்பித்து கொழும்புக்கு சென்றார்….

இந்திய இராணுவம் எவ்வளவு கஸ்டப்பட்டும் கண்டுடிபிடிக்க முடியாமல் இருந்த, அவர்களுக்கு ஊச்சிக் கொண்டு திரிந்த அருள்... ஒரு பொழுதில் காட்டிக் கொடுக்கப்பட்டு சுடப்பட்டார்.

நான் மீண்டும் யாழ் நகர் நோக்கி சென்றேன்.

செலவுக்கு காசு வேண்டும் என்றபடியால் போகின்ற வழியில் உள்ள மரக்காளை ஒன்றில் விறகு வெட்டும் வேலை செய்யலாமா எனக் கேட்டேன். ஒரு கோடரியைத் தந்து அங்கிருந்த குற்றிகைள பிளக்கும்படி கூறினார்கள். கோடரியைக் தூக்கி குற்றி மேல் ஒரு போடு போட குற்றி அசையாமல் இருந்தது. கோடரி எனது கையையும் இழுத்துக் கொண்டு ஒரு பக்கத்திற்கு சென்றது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த விறகு காளையின் முதலாளிஇந்த வேலை உனக்கு சரிவராது போய்ட்டு வா” என அனுப்பிவிட்டார்சரி இதுதான் தலைவிதி  என்று என் வழியில் நடந்தேன்.

பாலாலி வீதியிலிருந்த அலுவலகத்திற்கு சென்று மீண்டும் நண்பர்களை சந்தித்தேன். நண்பர் பண்டாரி நான் முல்லைத்திவிற்கு போய் கற்பிக்கலாமா எனக் கேட்டார். நான் ஆர்வத்துடன் உடனடியாகவே உடன்பட்டேன். நந் ஏற்கனவே அங்கு சென்றிருந்தார். முதல் முறையாக முல்லைத்தீவுக்கு செல்வதால்  மகிழ்ச்சியாக இருந்தது....

முல்லைத்தீவு மத்திய மாகவித்தியாலயதிற்கு முன்னாலிருந்த சந்தியில் மாலை நேர வகுப்புகள் நடந்தன. அங்கு கணிதப் பாடம் கற்பித்தேன். அதன் அருகில் குடியிருந்த ஈரோஸ் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் சாப்பிட்டு, கடற்கரைக்கு அருகிலிருந்த ஒரு கட்டிடத்தில் இரவில் நித்திரை கொண்டோம்.

இக் காலங்களில்தான் பெண் உறுப்பினர் ஒருவரை சந்தித்தேன். இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஊர்காவற்படையால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டவர் என மற்றவர்கள் கூறியிருந்தார்கள்;. ஆனால் அதன் பின்பும் நம்பிக்கையுடன் வாழ்ந்தார். எனது விட்டுக்கு நான் அழைத்து வந்த முதல் பெண் இவர்தான். எனக்கு காதல் உறவு அப்பொழுது யாருடனும் இல்லாதபோதும், காமம் பொங்கி எழுகின்ற வயதானபோதும் எமக்குள் தோழமை உணர்வு மட்டுமே இருந்தது. வேறு எண்ணங்கள் எனக்கு இருக்கவில்லை. அப்படி இருந்ததை இப்பொழுது நினைத்தாலும் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும்தான் இருக்கின்றது. ஆனால் அது உண்மை. நான் கணிதம் படித்ததும் படிப்பிப்பதும் அவருக்குப் பெருமையாக இருந்தது. ஏனெனில் அவருக்கு கணிதம் ஓடாது. ஆனால் அவர் எனக்கு அரசியல் பொருள் முதல்வாதம், வரலாற்றுப் பொருள்முதல் வாதம் என்பவற்றின் அடிப்படைகளை எளிமையாக விளக்கினார். (எதிர்காலத்தில் ஒரு நாள் இந்தப் பெண் கவிதை ஒன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்இச் செய்தி கேட்டு ஒரு கணம் ஆடிப்போனேன்.)

முல்லைத்தீவில் ஒரு மாத காலம் இருந்தேன். பின் மீண்டும் யாழ் சென்று பண்டாரியை சந்தித்தேன். அவர் மாணவர் அமைப்புக்கு வீடு ஒன்று பார்க்கவேண்டும் என்றார்திண்ணவேலி சந்திக்கு அப்பால் இருந்த செம்பாடு தோட்டத்திற்குள் ஒரு வீடு பார்த்தோம். என்னை இங்கு தங்கியிருந்து கொண்டு செம்பாடு தோட்டத்தில் இருந்த சாதியால் அடக்கப்பட்ட வறுமையில் இருந்த மாணவர்களுக்கு கற்பிக்கும் படி பண்டாரி கூறினார்.   நானும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.

வீட்டாருக்கும் சந்தோசம். அவர்கள் மூவரும் நிம்மதியாக கால் நீட்டிப் படுக்கலாம். இருப்பதை சாப்பிடலாம். நானாவது  ஒழுங்காக சாப்பிடட்டும் என விரும்பியிருக்கலாம்.. (இந்த செம்பாடு தோட்டத்திற்கு கற்பிக்கப் போகின்ற இடத்தை இப்பொழுது நினைத்துப் பார்க்கும் பொழுது வாகைசூடவா படத்தில் வருவதுபோன்ற ஒரு கிராமம் போல இருந்ததாகத் தோன்றுகின்றது.)

காலையில் திண்ணவேலி சந்தியில் இருக்கின்ற சந்தைக்குச் சென்று மரக்கறிகள் வாங்கிவருவேன். மதியம் சமைத்துவிட்டு மாலையில் தோட்டத்திலுள்ள மாணவர்களுக்கு வகுப்பெடுக்க செல்வேன். ஒரு நாள் நேச… என்பவர்,தனக்குத் தெரிந்த வீட்டில் உள்ள நான்கு பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும்முடியுமா?” எனக் கேட்டார். நானும் உடன்பட்டேன். என் செலவுகளுக்கு சிறு வருமானமாவது வருமல்லவா?

இக் காலங்களில் முத்திரச் சந்தியிலிருந்த அன்புவின் வீட்டுக்கு சென்று வாசலிருந்து வீதியில் போவோரைப் பார்த்துக் கொண்டு உரையாடுவோம்.... வேலுவும் அவரும் உரையாடுவதைக் கேட்பேன்.... அவர்கள் நான் அறியாத திரைப்பட நெறியாளர்கள் பற்றி உரையாடுவார்கள். இவர்கள்தான் சத்தியஜித் ரே போன்ற நெறியாளர்களை எனக்கு அறிமுகப்படுத்தினர். இவர்களுக்கு அலை ஆசிரியர் யேசுராச அறிமுகப்படுதியதாக கூறினர்நண்பர் வேலு ஒரு ஓவியத்தை எவ்வாறு பார்ப்பது என்பதை விளங்கப்படுத்துவார்.... இவ்வாறு தான் சிறந்த திரைப்படங்கள் ஓவியங்கள் தொடர்பான அடிப்படை அறிவை பெற ஆரம்பித்தேன்.

நாட்கள் இப்படி நகர்ந்தன... கைஸ் மாணவர் அமைப்பு ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுத்தார்கள். இலங்கையிலுள்ள ஓவியர்களின் ஓவியங்களை சேகரித்து நம் கடந்தகால வரலாற்றை ஓவியக் கண்காட்சி ஒன்றினுடாக மீண்டும் நினைவுபடுத்துவதும் வெளிக்கொண்டுவருவதும் நோக்கமாக இருந்தது. இதற்கான ஓவியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்கப்பட்டன. சில ஓவியங்கள் நம்முடன் இருந்தஆட்டிஸ்”டால் வரையப்பட்டன... அல்லது உருவாக்கப்பட்டன..... அவை பயணங்களின் போது பாதிக்கப்படாமல் இருப்பதற்காக பாதுகாப்பான வழிமுறைகளினால் பேணப்பட்டன. இக் கண் காட்சியை தெல்லிப்பழை மாகாஜானக் கல்லுரி பருத்துறை ஹாட்லி கல்லுரி மற்றும் திருகோணமலை இந்ததுக் கல்லுரி என்பவற்றில் பார்வைக்கு  வைக்கப்பட்டன. இந்த ஓவியங்களினுடாக புதிய அரசியல் சிந்தனைகளை உருவாக்குவதும் அதைப் பரவலாக்குவதையும் செய்தோம். இக் காலங்களில் வெளிப்படையாக அரசியல் கதைப்பது சிக்கலான ஒன்றாக இருந்தது.  அனைவரும் ஆர்வமாக  ஈடுபட்டோம்.

இதற்காக நான் பிறந்தபோது வாழ்ந்த திருகோணமலைக்கு மீண்டும் பயணித்தேன். யாழ்ப்பாணத்தவர்களுக்கு இந்திய இராணுவம் வந்தது இப்பொழுது கசந்தது... ஆனால் திருகோணமலையில் சந்தித்த பலர் இப்பொழுதுதான் தாம் சுதந்திரமாக திரிவதாகவும் சிங்களவர்கள் பயத்துடன் கட்டுப்பாடாக இருப்பதாகவும் கூறினார்கள்.

இருப்பினும் இக் கண்காட்சி வைத்த காலங்களில் இந்திய இராணுவத்தினரதும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட முன்னால் விடுதலை இயக்கங்களினதும் இடையூறுகள் நிறையவே இருந்தன.

ஒரு நாள் இரவு பருத்துறை ஹாட்லி கல்லுரியில் கண்காட்சி முடிந்து திண்ணவேலி வீட்டுக்கு வந்தோம்.

இரவு ஒன்பது மணியாகி விட்டது. பசி. இருந்தாலும் சைக்கிளை எடுத்துக் கொண்டு நல்லுரடியில் இருந்த கற்பிக்கும் வீட்டுக்குச் சென்று நாளை கற்பிக்க வருவதாக கூறினேன். பரிட்சைக்குப் படிப்பதற்காக வகுப்பு ஒன்று வேண்டும் என ஏற்கனவே கேட்டிருந்தார்கள். பயணம் முடித்து வந்த பின் கூறுவதாக கூறியிருந்தேன்.  அதை உறுதி செய்துவிட்டு வரும்வழியில் பரமேஸ்வரா சந்தியிலுள்ள கடையில் சாப்பிட்டேன். அப்பொழுது காசுப் பற்றறையில் நண்பர் கொ நிற்பதைக் கண்டேன்.  அவர் என்னைப் பார்த்த பார்வை நல்லதாகத் தோன்றவில்லை. அவர் என்னுடன் கதைக்காமல் சென்று விட்டார். அவர் ஏன் அந்தப் பார்வை பார்த்தவர் என்ற சிந்தனை எனக்குள் ஓடினாலும் பின் மறந்துவிட்டேன்.

நான் திண்ணவேலி வீட்டுக்குப் போனபோது ஒரு அறையில் நண்பர்கள் கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தார்க்ள. என்னைக் கண்டவுடன் அமைதியானனார்கள். சகஜநிலையை உருவாக்க மீண்டும் உரையாடினார்கள். நான் பயணம் செய்த களைப்பு,  சைக்கிள் ஓடிய களைப்பு, பின் சாப்பிட்ட களைப்பு என்பவற்றால்    நான் நித்தரைக்கு சென்றேன். நண்பர்களின் செய்கைகள்  வித்தியாசமாக இருந்தன. ஆனாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நித்திரை கொண்டேன்.

காலை எழும்பி முகம் கழுவி குளித்து விட்டு தேநீர் குடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர் பண்டாரி என்னை வெளியே கூப்பிட்டார். அவர் கூப்பிட்ட முறை நன்றாக இருக்கவில்லை. வெளியே சென்றபோது சுவர் ஒன்றில் சாய்ந்திருந்தார். அவரது பால் வடியும் முகத்தில் அவரையும் மீறி வெறுப்பு தெரிந்தது. கோவம் இருந்தது. "நீ என்ன புலியா.. அவங்களுக்கு உளவு செய்கின்றாயா" என்றார். “இனி இங்கிருக்க வேண்டாம். விரும்பினால் வந்து போகலாம்” என்றார்.

நான் உடைந்து போய்விட்டேன்.

ஆனாலும் நான் ஒரு புலிதான். எப்படி?

நான் ஒரு புலி -இரண்டு பதில் சொல்லலாம். காத்திருங்கள்...

அதுவரை இதுவரை பல்வேறு கருத்துகள் கூறிய நண்பர்களுக்கு நன்றிகள்....

சண்டை பிடிக்காது முரண்பாடுகளை வெளிப்படையாக உரையாடுவோம்.... இன்று நாம் செய்யக் கூடியது இதுதான்.

நட்புடன் மீராபாரதி

தொடருங்கள் மீரா அண்ணா

பிரபாகரனும் அவரது அமைப்பான புலிகளும் கடந்த காலங்களில் செய்த பிற்போக்குத்தனமான செயற்பாடுகளையும் முன்வைத்த கொள்கைகளையும் போராட்ட விரோத செயற்பாடுகளையும் இந்தக் கணத்தில்   மறந்திருந்தேன்.

மக்களும் மறந்திருந்தார்கள் என்றே நினைக்கின்றேன்..

வெற்றிகரமாக தங்களுடைய கருத்துகளை மக்களூடாக விதைப்பதை அறிய முடிகிறது.

அது சரி.. 2009க்கு முன்னர் இவற்றை எழுத எது தடுத்தது? கால் தடுக்கி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக இருக்கிறது உங்க கதை?!

Quote: "அப்பொழுது மண்டபத்தில் இருந்த ஒருவர்இந்த நள நாய்க்கு இது வேண்டும்” என்றார்"

கதையை நகர்த்துவதிற்க்கும் ஒரு தனி வழியிருக்கு, இதை இங்கு சுட்டிக்காட்ட தேவையில்லை.

Quote:"இக் காலங்களில்தான் பெண் உறுப்பினர் ஒருவரை சந்தித்தேன். இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். ஊர்காவற்படையால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டவர் என மற்றவர்கள் கூறியிருந்தார்கள்;. ஆனால் அதன் பின்பும் நம்பிக்கையுடன் வாழ்ந்தார். எனது விட்டுக்கு நான் அழைத்து வந்த முதல் பெண் இவர்தான். எனக்கு காதல் உறவு அப்பொழுது யாருடனும் இல்லாதபோதும், காமம் பொங்கி எழுகின்ற வயதானபோதும் எமக்குள் தோழமை உணர்வு மட்டுமே இருந்தது. வேறு எண்ணங்கள் எனக்கு இருக்கவில்லை. அப்படி இருந்ததை இப்பொழுது நினைத்தாலும் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும்தான் இருக்கின்றது"

அப்படியொரு புனிதமான எண்ணம் உங்களுக்கு இருந்திருந்தால் இந்த இடத்தில் இப்படி எழுத மனமே வராது :rolleyes:  :rolleyes:  :rolleyes: 

"அப்படியொரு புனிதமான எண்ணம் உங்களுக்கு இருந்திருந்தால் இந்த இடத்தில் இப்படி எழுத மனமே வராது :rolleyes:  :rolleyes:  :rolleyes:"

அது தானே மீராபாரதி...ஆனானப்பட்ட "விசுவாமித்திரருக்கே" பொங்கினது....உங்களுக்கு மட்டும் எப்படி இருக்காது... :)

தொடருங்கள்  :)

அது தானே மீராபாரதி...ஆனானப்பட்ட "விசுவாமித்திரருக்கே" பொங்கினது....உங்களுக்கு மட்டும் எப்படி இருக்காது... :)

தொடருங்கள்  :)

துணிந்தவன் காதலையோ காமத்தையோ நேரடியாகவே வெளிப்படுத்துகிறான்.. பயந்தவன் மனதுக்குள் நினைத்து நினைத்து அதை மறக்க முடியாதவனாகிறான்.. இந்த பயம் பலவகைப்படும்.. குறிப்பிட்ட பெண் அவமானப்படுத்திவிடுவாளோ என்ற பயம். நட்பு பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயம்.. வன்புணர்வுக்குள்ளானவளை திருமணம் செய்ய நேரிட்டுவிடுமோ என்ற பயம்.. இப்படி பல பயம்! எனக்கென்னமோ இந்தச் சந்தர்ப்பத்தில் 'குரைக்கிற நாய் கடியாது' என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது. :) :)

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியொரு புனிதமான எண்ணம் உங்களுக்கு இருந்திருந்தால் இந்த இடத்தில் இப்படி எழுத மனமே வராது :rolleyes:  :rolleyes:  :rolleyes: 

இதில்  2  வகைதான்  இருக்கமுடியும்

1- அன்று சூழ்நிலை இடம்  கொடுத்திருக்காதிருக்கணும்

2- இன்றும்   அந்த ஏக்கம்   மனதை வாட்டணும் :rolleyes:  :rolleyes:  :rolleyes:

உண்மையை  எழுதுவதை வாழ்த்தணும்

ஆனால் அதிலும்  நல்லவன்  என்பது சரியல்ல

இயற்கைக்கு முரணானது :(

நீங்கள் சும்மா ஒரு புலி, பின்னால் ஒரு 'லி' யை போட்டால் நான் ஓர் கரும்புலி. (சும்மா ஒரு சுவாரசியத்துக்கு, மக்களே அமைதி).

மீராபாரதி, நான் உங்கள் கட்டுரையை தொடர்ந்து வாசிக்கின்றேன். நான் எதையும் தராசில்போட்டு எடைபோட முயற்சிக்கவில்லை. ஆனால், சிறுவயது ஞாபங்கள் பலவற்றை உங்கள் பதிவு கிளறிச்செல்கின்றது. இயக்கங்களிடையே அடிபாடு நடந்த காலத்தில் நான் நினைக்கின்றேன் அப்போது ஏழு, எட்டாம் வகுப்பு. தொக்குவிலில் இருந்தபோது நிதரசனம் தொலைக்காட்சியில் டெலோ பிரமுகர் கொல்லப்பட்ட செய்தியை பார்த்த நினைவு உள்ளது. ஏனோ தெரியவில்லை எனக்கு அன்றைய பிரச்சனைகள், அடிபாடுகள், காரணங்கள் தெரியவில்லை. அப்போது அதுபற்றி அதிகம் அறியவும் முயற்சிக்கவில்லை. அந்நேரத்தில் அறிவு காணாதோவும் தெரியாது. ஆனால், த.வி.பு ஊடகங்கள் மூலம் கூறப்பட்ட காரணங்கள் எவை என்றால் பெண்களுடனான தகாத தொடர்புகள் / தவறான நடத்தைகள் / ஒழுக்கமின்மை காரணமாகவே இதர இயக்கங்கள் தடை செய்யப்படுகின்றன என்று.

சிறுவயதில் வகுப்பில் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வோர் இயக்கதிற்கு பெயரளவில் ஆதரவாய் விளங்கினார்கள். எனது மூளைக்கு விளங்கிய அளவில் மதில்களில் ஒட்டப்பட்ட பெரிய நோட்டீசுகளை பார்த்ததனால் டெலோ மீது எனக்கு பிடிப்பு இருந்தது. பின்னர் எல்.ரி.ரி.இ - த.வி.பு என்று சக மாணவன் மூலம் பெருசு பற்றி அறிந்துகொண்டேன். அவன் தனது கையில் பேனையால் எல்.ரி.ரி.ஈ என்று கொட்டை எழுத்தில் எழுதி இருந்தான். விஞ்ஞான ஆசிரியர் அதைப்பார்த்து சிரித்துவிட்டு அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டார். அவன் லிபரேசன் டைகேர்ஸ் ஒவ் தமிழ் ஈழம் என்று கூறினான். எனக்கு மூத்திரம் போகாத குறை. அடேயப்பா இங்கிலிசிலில் இவ்வளவு அறிந்து வைத்துள்ளானே என்று ஆச்சரியப்பட்டேன். (இவ்வளவிற்கும் அவனிற்கு ஆங்கில பாடத்திற்கு ஏதாவது தவணைப்பரீட்சையில் இருபது மார்க்ஸ் தாண்டி இருக்குமா என்பது கேள்விக்குறி). இவனை சுமார் எட்டு, பத்து வருடங்களில் த.வி.பு இயக்கத்தில் இவனது அண்ணன் சேர்ப்பித்தார், பின்னர் அவனது அண்ணன் த.வி.பு மூலமே தண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது வேறு கதை.

எட்டாம் வகுப்பில் த.வி.பு மாணவர் அமைப்பில் இணைந்தேன் (அதாவது எழுத்து ரீதியாக). இதையறிந்த வகுப்பில் இருந்த இதர மாணவர்கள் விரைவில் நான் த.வி.புவில் கட்டாயமாக இணையவேண்டி வரப்போகின்றது என்று பயங்காட்டத்தொடங்கினார்கள். ஒரே ஓர் தடவை த.வி.பு மாணவர் அமைப்பு கல்லூரி பொறுப்பாளர் வந்து உறுப்பினர்களை எழுந்து நிற்குமாறு கூறினார். இருவர் எழுந்து நின்றோம். அவ்வளவுதான், வேறு ஏதும் காரியங்களில் ஈடுபடவில்லை. மாணவர் அமைப்பு பொறுப்பாளர் முரளி எமது பாடசாலைக்க்கு வந்து கூட்டம் வைத்தபோது அதில் கலந்துகொண்ட நினைவும் உள்ளது. கூட்டத்தின் உள்ளடக்கம் நினைவில்லை.

உங்கள் அரசியல் சார்புநிலைகள், சித்தாந்தங்கள், வாழ்க்கைக் கொள்கைகளிற்கு அப்பால் நீங்கள் வாழ்வில் நல்ல பழுத்த அனுபவத்தை பெற்று இருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது மீராபாரதி. நான் வயதில் அப்போது குறைந்தவன் என்றாலும் உங்கள் அனுபவத்தொடரை வாசிக்கும்போது அப்படியே தொலைக்காட்சியில் படம் பார்ப்பதுபோல் அப்படியே மனத்திரையில் காட்சிகளை காணமுடிகின்றது.

வடமராட்சி ஒபரேசன் லிபரேசன் பற்றி கூறினீர்கள். அப்போது நாம் காங்கேசன்துறை வாழ் மக்களுடன் வலிகாமம் வடக்கு பெருவாரி மக்கள் மல்லாகம் வரை இடம்பெயர்ந்ததை நீங்கள் மறந்துவிட்டீர்கள் அல்லது உங்கள் பதிவில் குறிப்பிடவில்லை, ஒபரேசன் லிபரேசனில் வடமராட்சியை மட்டும் குறிப்பிட்டுள்ளீர்கள், வலிகாமம் வடக்கை குறிப்பிடவில்லை. 

ஒவ்வொருவர்  மத்தியிலும் இருந்து வெவ்வேறு விதமான விமர்சனங்கள் காரசாரமாகவும், குளிர்வாகவும் வருவது வழமை. உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்துகொள்ளுங்கள். அவைமூலம் நானும் சில விடயங்களை நினைவுகூர்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எதோ.... புதிதாய்.... வந்திருக்குமெண்டு பார்த்தால்....
சாமரை... வீசிக் கொண்டிருக்கிறார்.

யார் எனது கருத்திற்கு இவ்வாறு கூறுகின்றீர்களா? புதிதாய் எதை எழுதுவது சிறி? அமெரிக்கா சிரியா மீது கை வைக்குமா வைக்காதா என்பதுதான் புதிதாய் கதைக்கக்கூடியது. ஓபாமாவிற்கு நெருக்கடி. ஓர் அரசியல் ஆய்வு பார்த்தேன். சிரியா மீது ஏன் தாக்குதல் நடாத்தப்படவேண்டும் என்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும்.

பழைய பசுமையான நினைவுகள் தவிர வேறு தாயகம் பற்றி என்னிடம் புதிதாக ஏதும் செய்திகள் இல்லை. மீராபாரதி எழுதுவது பலருக்கு பிடிக்கவில்லை என்பது வெளிப்படையாகவே தெரிகின்றது. மீராபாரதி கூறும் கதையில் சம்பவங்கள், விடயங்களில் தவறுகள் காணப்பட்டால் நீங்கள் அந்தக்காலப்பகுதியில் குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழ்ந்து நேரடி அனுபவம் காணப்பட்டால் உங்கள் கதையையும் கூறுங்கள், வாசிக்க ஆவலாகவே உள்ளேன்.

நான் சுமார் பதின்னான்கு வருடங்கள் யாழ் மாவட்டத்தில் வாழ்ந்தவன். சிறுவயதில் நடந்த பல சம்பவங்களின் காரண, காரியங்கள் பெரிதாக தெரியாது, நினைவிலும் இல்லை. ஆனால், ஓரளவு அறிவுதெரிந்த காலத்து நினைவுகள் தெளிவாக இன்றும் உள்ளன. ஈபி ஆர் எல் எவ் இந்தியன் ஆமி தொடக்கம் இதர பல இயக்கங்கள், இலங்கை அரச படைகள் என... இன்றும் அவர்களின் அகோர சம்பவங்கள் நினைவிலிருந்து அகலவில்லை.

நீங்கள் எதையோ மனதில் வைத்துக்கொண்டு கருத்துக்களத்தில் கருத்துக்களை எதிர்பார்த்தால் சாமரம் வீசுவது போல் தோன்றலாம், குடைபிடிப்பது போல் தோன்றலாம், மசாஜ் குடுப்பதுபோல் உணரலாம். யாழ் களத்திற்கு இவை எல்லாம் புதியதா என்ன? நான் யாழில் இணைந்த காலம் தொட்டு கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக இதைத்தானே தினம், தினம் காண்கின்றேன்.

ஆனால், இவை எல்லாவற்றுக்கும் அப்பால் ஏதோ ஒன்று நம் எல்லோரையும் ஒன்றாக ஈர்த்து வைத்துள்ளது என்றால் அது என்னவென்பதை நாம்தான் அனுபவத்தில் உணரவேண்டும்.

பல்வேறு கருத்தியல் நிலைப்பாடுகளை உடைய சுமார் முப்பது யாழ் உறவுகளை நேரில் சந்தித்துள்ளேன். அவர்களைக்கண்டபின் கருத்தாடலில் வெற்றிபெற்று எனது பார்வையை ஆழமாகப்பதிக்கவேண்டும் என்பதற்கு அப்பால் ஒவ்வொருவரையும் மதித்து அவர்கள் கூறும் கருத்துக்களை பொறுமையாக கேட்கும் மனப்பக்குவம் ஓரளவிற்காவது வந்துவிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.