Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உல்லாசக் கடற்கரை + உதைபந்தாட்ட மைதானம் = உல்லாசபுரி ( BARCELONA ).

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகப் புகழ் பெற்ற உல்லாசக் கடலும், உதைபந்தாட்ட வீரர்களினதும் ,ரசிகர்களினதும் கனவு மைதானமான Camp Nou  மைதானமும் , பழமையான கலையுடன் கூடிய  கட்டிடங்களும், அதை விஞ்சும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கட்டிடங்களும் சிறப்பான வீதிப் போக்குவரத்தும் நிறைந்த நகரம்தான்  ஸ்பெயின் நாட்டின் பிரதான நகரம் பார்சிலோனா.

 

சென்றவாரத்தில் இரு நாட்கள் நான் எனது பிள்ளைகளுடனும் ,மருமகள்களுடனும் நான் அங்கு தங்கினேன் .அந்த சிறிய ஆனால் சுவாரசியமான அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன் .    

 

 

1185979_640114492674276_1295921743_n.jpg

 

1239029_640114829340909_417997603_n.jpg

 

1175683_640114939340898_1893822948_n.jpg

 

994893_640116776007381_280029733_n.jpg

 

மீண்டும் வருவேன்:

Edited by suvy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவ் வருட விடுமுறையில் எனது மருமகள்கள் மூவர் ஜெர்மனியில் இருந்து எனது வீட்டுக்கு வந்திருந்தனர் .வழமைபோல்  தினம் ஒரு சுற்றுலாத் தலமென  இங்கு இருக்கும் பல இடங்களுக்கும் லூர்து (LOURDES)  உட்பட சென்று வந்தார்கள் .ஒரு நாள் மதிய உணவுக்குப் பின் எல்லோரும் கூடியிருந்து கதைக்கும் போது அவர்களின் பேச்சில் அவர்கள் உதைபந்தாட்டத்தின்  பரம ரசிகைகள் எனத் புரிந்து கொண்டேன் . உலக அளவில் அத்தனை உதைபந்தாட்டங்கள், உதைபந்தாட்ட வீரர்கள்  அவற்றின் விபரங்கள் எல்லாவற்றையும் விரல்நுனியில்  வைத்திருந்தனர் . 

 

அவர்கள் ஜெர்மனியில் இருந்தாலும்  லயனல் மெர்சி ,நெய்மார் ,இனிஎஸ்தா ,பப்ரிகாஸ்  போன்றோரின் ரசிகைகலாகவும் இருந்தனர் .  அதனால் நானும் இவர்களுக்கு ஒரு ஆச்சரியத்தைக் கொடுப்போம் என்று  மகனிடம் கூறி பார்சிலோனாவில்  ஒரு விடுதியில்  இரண்டு அறைகள்  20 ம் தேதிக்கு  பதிவு செய்து கொண்டேன் . பின் 19 ம் தேதி திங்கள் இரவு  அவர்களிடம் உங்களுக்கு "காம் நூ " உதைபந்தாட்ட மைதானம் பார்க்க விருப்பமா என்று கேட்டேன் .இதை அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை  நான் பகிடி பண்ணுறன் என நினைத்தனர் .மீண்டும்  மீண்டும்  கேட்டபோது  அவர்கள் ஒ ...ஊஒ ... அது  எங்கள் கனவு தேசம் என்று கத்தினார்கள். சரி எல்லோரும் தயாராய் இருங்கள் நாளை காலை நாங்கள் பார்சிலோனா செல்வோம் என்று சொன்னேன் . 

அதன்படி  செவ்வாய் காலை  ஏழு மணிக்கு இங்கிருந்து கிளம்பினோம் . எனது மனைவிக்கும் அன்று விடுமுறையான படியால்  காலையிலேயே  அவர்களுக்கு கோழிப்பிரியாணியும் , எனக்கு மரக்கறிப் பிரியாணியும், கோப்பியும்  தயார்பண்ணித் தந்தா .

1001244_640114516007607_1731878669_n.jpg

 

1098212_640114506007608_975831789_n.jpg

 

1146679_640114569340935_1003659192_n.jpg

 

1240643_640114549340937_529621099_n.jpg

 

 

மீண்டும் வருவேன் ....

கலக்குங்கோ சுவியர் .  அப்படியே குழுமாடு பிடிக்கிற விளையாடுக்குப் போனால் அதையும் எழுதுங்கோ படங்கள் எல்லாம் அந்தமாதிரி இருக்கு. அனுபவப் பதிவுக்குப் பாராட்டுக்கள் தொடருங்கோ  :)  :) .

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவியண்ணா வாசிக்க ஆவலாய் காத்திருக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

அசத்துங்கோ அண்ணா.. தொடரை வாசிக்க ஆவலாக உள்ளோம்..

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதுங்கோ, சுவியர்!

 

வெள்ளை நிறக்கடற்கரை மணல், பல பழைய நினைவுகளைக் கிளறி விடுகின்றது! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவியர்! நீங்கள் அமசடக்கு கள்ளன் ஐயா :) எழுத்துக்களும்  சிந்தனைகளும் இயற்கையாகவே இருக்கின்றது....தொடரட்டும்.

Hola சுவி அண்ணா, Gracias!

  • கருத்துக்கள உறவுகள்

விடுமுறைக்கு உங்களிடம் வந்த, மருமக்களுக்கு.... நீங்கள் கொடுத்த. இன்ப அதிர்ச்சியை... அவர்கள் தம் வாழ்நாளில் மறக்கமாட்டார்கள்.
எழுதுங்கள்... சுவி, உங்களுடன் சேர்ந்து... நாமும், "பார்சிலோனா"வை பார்க்க ஆவலாக உள்ளோம். :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயினின்  மிக முக்கிய நகரமான  பார்சிலோனா பலவகையான சிறப்புகள் கொண்டது. மிக அழகான கடற்கரையும்,  சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட  "Camp nou "  உதைபந்தாட்ட மைதானமும் ,மிகப் பிரபலமான  மாடுபிடிக்கிற விளையாட்டும் இருக்கும் சிறப்பான நகரம். சுமார் 100 கி.மீ  பரப்பளவும் , 17 லட்சம் வரை மக்கள் தொகையும்முடையது .

 

நாங்கள்  பார்சிலோனா நகரத்துக்குள் நுழையும்முன்  ஒரு மரங்கள் அடர்ந்த தரிப்பிடத்தில் மதிய உணவை  முடித்துக் கொண்டோம் . பின் 12.30 க்கு எமது வாகனம் நகரத்துக்குள் நுழைகின்றது. நாம் நேராக பதிவு செய்த விடுதிக்குச் சென்று  பதிவு செய்த அறைகளைப் பெற்றுக்கொண்டு ( இது முக்கியம், இந்த மாதிரிச் சுற்றுலா நகரங்களில் நாங்கள் தாமதித்தால் அறைகளை வேறு யாருக்கும் கொடுத்து விடுவார்கள். பிறகு வீணாக விவாதங்கள் செய்ய வேண்டி வரும்.).நல்ல வெயில் ,அதனால் கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொண்டு அந்த அழகிய நகரத்தை காரிலும் ,நடந்தும் சுற்றிப் பார்த்தோம்.

எமது விடுதியில் இருந்து கடலும் சரி, விளையாட்டு மைதானமும் சரி 5/6 கி.மீ.க்குள் தான் இருந்தது. நாம் மாடுபிடிக்கிற விளையாட்டு பார்க்கப் போகவில்லை. நேராக  கடலுக்குப் போனோம்.  இது பொன்மாலை நேரமான படியால்  கடற்கரை முழுதும்  பொன்மேனி மாந்தர்களால் நிறைந்திருந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது அந்தக் கடற்கன்னியின் கழுத்துக்கு நவரத்தின ஆபரணம் அணிந்ததுபோல் கரையில் பலவர்ண  சிறு ஆடைகள் மட்டுமே அணிந்திருந்த மாந்தர் சூரியக் குளியலில்  மூழ்கி மயங்கிக் கிறங்கிக் கிடந்தனர். எங்கும் வெள்ளைக்  குடைகளும்  அருகருகே சிறிய சார்மனைக் கதிரை அல்லது கட்டில்களும் அந்த வெண் மணலில் இருந்தன. முதலில் நாங்கள் போய் சும்மாகிடந்த ஒரு குடையும் இரண்டு கட்டிலிலும் இருந்தோம். எனது மகனும் அருகில் கிடந்த இன்னுமொரு கதிரையையும் எடுத்து  அருகே போட்டுக்கொண்டு சொல்கிறார் இந்த மாநகரசபை எமது வசதிக்காக இதெல்லாம் கடற்கரையில் போட்டிருக்கின்றார்கள் என்று. ஆனால் சற்று நேரத்தில் ஒருவர் ஊரில் நன்கொடை வாங்க ரசீதோடு வாறவர் மாதிரி வந்து நின்றார். வந்து  மிஷ்சு , ஒரு குடைக்கு  6 ஈரோ , மற்றும் ஒவ்வொரு கதிரைக்கும் ஆறு,ஆறு ஈரோ மொத்தமாய் 24 ஈரோ என்றார்.  , நான் பர்ஸ் எடுப்பதா என்று யோசிக்க ....... , பிள்ளைகள் கொஞ்சமும் யோசிக்காமல்  துவாய்களை   எடுத்து சற்றுத் தள்ளி மணலில் போட்டு விட்டு அமர்ந்து கொண்டனர். ஆகா இவங்கள் எல்லாம் விபரமாத்தான் இருக்கிறாங்கள். 

 

598506_640114616007597_726454874_n.jpg

 

 

1240395_640114589340933_937648498_n.jpg

 

 

1175370_640114652674260_9926630_n.jpg

 

மீண்டும்  வருவேன்:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைதரும், வாழ்த்தும் அனைத்து உறவுகளுக்கும்  :D  மிகவும் நன்றிகள் !

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவியண்ணா வாசிக்க ஆவலாய் காத்திருக்கிறேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பிள்ளைகள் கொஞ்சமும் யோசிக்காமல்  துவாய்களை   எடுத்து சற்றுத் தள்ளி மணலில் போட்டு விட்டு அமர்ந்து கொண்டனர். 

 

சுவியர்! பிள்ளையள் வெய்யிலுக்கை இருந்தால் கறுத்துப்போவினம் எண்ட யோசினை உங்களுக்கு வரேல்லையோ? இல்லாட்டி இதுக்குமிஞ்சி என்ன கறுக்க இருக்கெண்டு யோசிச்சியளோ? சும்மா பகிடிக்கு சொன்னனான் பிறகு கோவிக்கிறேல்லை :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

------

எங்கும் வெள்ளைக்  குடைகளும்  அருகருகே சிறிய சார்மனைக் கதிரை அல்லது கட்டில்களும் அந்த வெண் மணலில் இருந்தன. முதலில் நாங்கள் போய் சும்மாகிடந்த ஒரு குடையும் இரண்டு கட்டிலிலும் இருந்தோம். எனது மகனும் அருகில் கிடந்த இன்னுமொரு கதிரையையும் எடுத்து  அருகே போட்டுக்கொண்டு சொல்கிறார் இந்த மாநகரசபை எமது வசதிக்காக இதெல்லாம் கடற்கரையில் போட்டிருக்கின்றார்கள் என்று. ஆனால் சற்று நேரத்தில் ஒருவர் ஊரில் நன்கொடை வாங்க ரசீதோடு வாறவர் மாதிரி வந்து நின்றார். வந்து  மிஷ்சு , ஒரு குடைக்கு  6 ஈரோ , மற்றும் ஒவ்வொரு கதிரைக்கும் ஆறு,ஆறு ஈரோ மொத்தமாய் 24 ஈரோ என்றார்.  , நான் பர்ஸ் எடுப்பதா என்று யோசிக்க ....... , பிள்ளைகள் கொஞ்சமும் யோசிக்காமல்  துவாய்களை   எடுத்து சற்றுத் தள்ளி மணலில் போட்டு விட்டு அமர்ந்து கொண்டனர். ஆகா இவங்கள் எல்லாம் விபரமாத்தான் இருக்கிறாங்கள். 

 

சுவி, நீங்கள்... அந்த நேரம், மகனைப் பார்த்த பார்வையை... கற்பனை பண்ணிப் பார்த்தேன். அடக்க முடியாத, சிரிப்பு வந்துவிட்டது. :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் சுவியண்ணா வாசிக்க ஆவலாய் காத்திருக்கிறேன்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆவலுடன் வாசித்தேன். தொடருங்கள் சுவி அண்ணா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவியர்! பிள்ளையள் வெய்யிலுக்கை இருந்தால் கறுத்துப்போவினம் எண்ட யோசினை உங்களுக்கு வரேல்லையோ? இல்லாட்டி இதுக்குமிஞ்சி என்ன கறுக்க இருக்கெண்டு யோசிச்சியளோ? சும்மா பகிடிக்கு சொன்னனான் பிறகு கோவிக்கிறேல்லை :lol:  :D

சி, சி  இதில என்னத்தக் கோவிப்பான். கு.சா.  உண்மையைத்தானே சொல்லுறீங்கள்.

மற்றும் அனைவருக்கும் மிகவும் நன்றி ! :D

 

நிழலிக்கும் ,சுபெசுக்கும் மிக நன்றிகள் .( படங்கள் இணைக்க உதவியதற்கு .)

Edited by suvy

தொடருங்கள் அண்ணா .

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சுவி அண்ணா.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அசத்துங்கோ அண்ணா.. தொடரை வாசிக்க ஆவலாக உள்ளோம்.. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடல் மிகவும் அழகாய் இருந்தது.கிட்ட நல்ல பச்சை நிறமும், கொஞ்சம் தூரத்தில் நல்ல மயில் கழுத்து நீலமுமாய் ரம்மியமாக இருந்தது. அலைகளும் பெரிசாய் இல்லை.ஒரு அரை மீற்றர், ஒரு மீற்றர்  உயரத்தில் வந்துகொண்டிருந்தது. இப்போ பிள்ளைகள் நால்வரும் கடலில்  இறங்கி  அலைகளுக்குள் முங்கி,முங்கி விளையாடிக் கொண்டிருக்கின்றனர். நான் கரையில் அவர்களையும் கவனித்துக் கொண்டு ,பைகளையும் பார்த்துக் கொண்டு, அக்கம் பக்கம் பிராக்கும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.மாலையானாலும் கொஞ்சம் வெயில் சூடு இருந்தது. சுற்றுலாப் பயணிகளும் நிறைந்திருந்தனர். சிறு வியாபாரிகளும்   கோலா, பெப்சி ,தண்ணீர், பியர் எண்டு எல்லாம் விற்றுக் கொண்டிருந்தார்கள்.சிறிது நேரத்தில் இரண்டு பிள்ளைகள் வந்து நிண்டுகொண்டு என்னைப் போய் குளிக்கச் சொன்னார்கள். நானும் காண காலம் கடலில் குளித்து. அதனால் மிகவும் ஆர்வத்துடன் ஓடிப்போய் கடலில் குதித்து நீந்தினேன். கொஞ்சம் சுழியோடி, கொஞ்சம் பிறநீந்தல்  என நமக்குத் தெரிந்த விளையாட்டெல்லாம் சுழட்டி அடிச்சேன். கரயொரமாத்தான்  நிறைய சனம். கொஞ்சம் தள்ளிப் போக சனம் குறைய. அலைகள் தூக்கி எறிய ஆனந்தமாய் இருந்தது.கீரிமலையில் நீரில் நல்ல உப்பு உண்டு. இங்கு உப்பு இல்லை/குறைவு.பின் நான் கரைக்கு வந்து மணலில் படுத்திருந்தேன். வெயில் இப்போது சூடில்லாமல் பொன் வண்ணத்துடன் நன்றாக இருந்தது. இப்படியே நாங்கள் மாறி மாறி கடலில் குளிப்பதும், கரையில் படுப்பதுமாய்  இரண்டு  மணித்தியாலங்களுக்குமேல் நின்று விட்டு  கடலை விட்டு வர மனமின்றியே  அறைக்கு வந்தோம்!

 

இதை எழுதும்போது:

 

கண்கள்: அடியே பேனையே! நான் பர்த்தது  எதுவும் நீ எழுதவே இல்லையே , அப்பா நீ எழுத மாட்டியா!

பேனை:  சீ ... போடி  வெட்கம் கெட்டவளே, அதெல்லாம் நான் எழுத மாட்டேன் போ ..... எனக்கெண்டு ஒரு இது...    ஆங்  ...அதுதான் இமேஜ்  இருக்கு  உனக்குத் தெரியாதா!

கண்கள்:  ம்..... உண்ட இமேஜும்  புண்ணாக்கும். எனக்குத் தெரியாதா உன்னைப் பற்றி!

 

பேனா: இப்ப என்னத்தை எழுதச் சொல்லுறாய், ஆயிரக் கணக்கானவர்கள்  இருந்த இடத்தில ஒரு ஐம்பது , நூறு பேர்  மேலாடையுடன் இருந்தாங்களே அதைச் சொல்லுறியா!

 

கண்கள்: ம்... இவ  பெரிய  இவ்வாட்டம் , இல்லாதத விட்டிட்டு  இருக்கிறத எழுதப் போறாவாம்!

கண்கள் மூடிக் கொள்கின்றன!

 

1157418_640116802674045_1432660118_n.jpg

 

 

946959_640116792674046_307723856_n.jpg

 

 

மீண்டும்  வருவேன்!

  • கருத்துக்கள உறவுகள்

ஜமாயுங்கோ சுவியண்ணா இமேஜ் பற்றி கவலைப்பட வேண்டாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்சிலோனாவில் எல்லா வீதிகளும் சந்திகளும் சதுரம், சதுரமாக வடிவமைத்திருக்கின்றனர்.  அதனால் பெரும்பாலான சந்திகளில் வாடகைக் கார் ( டாக்சி ) தரிப்பிடங்களும், கடைகளுக்கு சாமான்கள் இறக்கும் மஞ்சள்  கோட்டுடன் கூடிய  தரிப்பிடங்களும் உண்டு. எமது வாகனத் தரிப்பிடங்கள் பெரும்பாலும் நிலத்துக்குக் கீழேதான் இருக்கின்றன. சில இடங்களில் மட்டும் வீதிக்கு மேலேயும்  நீலக் கோட்டுடன் கூடிய தரிப்பிடங்கள் உண்டு. நாம் எமது விடுதிக்கு அருகில் இருந்த சந்தியில் ஒரு தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு அறைக்குப் போய் உடுப்புகளும் மாற்றி அணிந்து கொண்டு நல்ல ஒரு உணவு விடுதிக்குப் போய் இரவு சாப்பிடுவோம் என்று வந்தோம்.நாங்கள் நகரத்துக்குள் நிப்பதால் கொஞ்சத் தூரம் நடந்து போய்ச் சாப்பிடுவம் எனப் பிள்ளைகள் கூறினார்கள் . நானும் சரியெண்டு அவர்களுடன் நகரத்தின் இரவு நேர அழகை இரசித்தபடி நடந்து போனோம். நகரம் கடைகள், கட்டிடங்கள் எல்லாம் நியான் விளக்குகளாலும் , நடனமாடும் நீர் விளையாட்டுக்களாலும் ஜொலித்துக் கொண்டிருந்தது. நல்ல நீளமான பேரூந்துகள் , அதிகமான பேரூந்துகளுக்கு மாடியில் கூரை கிடையாது. பழைய கட்டிடங்கள் எல்லாம் நல்ல பெலனான கட்டிடங்கள். அதற்கு எதிராக புதிய கட்டிடங்கள்  நிறைய கண்ணாடிகளுடன் அமைக்கப் பட்டிருந்தன.  நாங்கள் போன  ரெஸ்டுரன்ட் பெயர் நுரியா. பிள்ளைகள் அங்கு பிரபலமான மெனுவை பெற்று ஓடர் பண்ணி சாப்பிட்டினம். எனக்கு ஒலிவ் எண்ணையில் மிதந்தபடி சிறிய காளான்களும், பிரித்தும் எடுத்துச் சாப்பிட்டேன். பின் திரும்பி வரும்போது  நடைபாதையில் திடீர் கடைகள் வேற்று நாட்டவர் பரப்பி இருந்தனர். இந்தக் கடைகளைப் பற்றி நான் கூறியே ஆக வேண்டும்.

 

ஒரு சதுரமான பெட்சீட்டில்  நான்கு மூலைகளிலும் கயிறு கட்டி ( ஊரில் மரக் காலைகளில் விறகு நிறுக்கும் தராசு போல் ) அக்கயிருகளின் நுனியைக் கையிலேயே பிடித்திருப்பார்கள். பெட்சீட்டில் பலதரப் பட்ட சாமான்களும் பரப்பப் பட்டிருக்கும். நல்ல மார்க்கான பொருட்களும் மிகவும் குறைவான விலையில் அங்கு கிடைக்கும். வியாபாரம் செய்துகொண்டிருக்கும் பொழுது தூரத்தில்  போலீசைக் கண்டால் அப்படியே  முதுகில் மூட்டையாக  தூக்கிக் கொண்டு ஓடி விடுவார்கள். எனது மருமகள் ஒராள்  ஒரு கைப்பை ஒன்றைப் பார்த்து விட்டு,  மாமா இது நான் வாங்கப் போறன் .ஜெர்மனில் இந்த மார்க் கண காசு, இங்கு மலிவாய்க் கிடக்கு என்று சொன்னா. மற்றவள் வா நாளைக்கு வந்து வாங்குவம் என்றால். வேணுமெண்டால் நீ இப்பவே வாங்கு. என்று நான் சொன்னேன். அவளும் நாளைக்கு  வாங்குவம்  எண்டு வந்திட்டா .

 

நாங்கள் அப்படியே விடுதிக்கு வந்தோம். அந்த விடுதியில் கார் தரிப்பிடம் கிடையாது. விடுதிக் காப்பாளர் சொன்னார் இங்கு பக்கத்தில் தரிப்பிடங்கள் இரவுக்கு காசு கூட.  கொஞ்சம் தூரத்தில் ஒன்று இருக்கு அது காசு குறைவு என்றார். பின்ன நானும் மகனும் அந்த இடத்தில விட்டிட்டு நடந்து வருவம் எண்டு போனோம். அங்கு  மகன் காருக்குப் பக்கத்தில் இருந்த விளம்பரப் பலகையைப்  பார்த்துவிட்டு  அப்பா இந்த இடம் இரவு எட்டில் இருந்து நாளைக் காலை எட்டு வரைக்கும் காசில்லை . நான் விடிய எட்டுமணிக்கு முன் வந்து காரை எடுத்து நல்ல தரிப்பிடத்தில் விட்டு ரசீது அடித்து வைக்கின்றேன் என்றார். நானும் சரியென்று சொல்லி விடுதிக்கு வந்திட்டோம். (எனக்கு ஒரு விடயம் நன்றாகத் தெரியும் ,இவங்கள் இரவில தூங்காமல் எவ்வளவு வேலையும் செய்வினம், ஆனால் காலையில் பத்து மணிக்கு முதல் எழும்பமாட்டான்கள்.) அவர்கள் நால்வரும் மடிக்கணணியில் ஒரு படம் பார்க்கப் போறதாக  சொல்லிச்சினம்.  நான் போய் கைகால் கழுவிட்டுப் படுத்துவிட்டேன்.

 

1230073_640115016007557_984117736_n.jpg

 

 

249076_640115036007555_76294972_n.jpg

 

 

1239591_640114666007592_749437856_n.jpg

 

 

மீண்டும் வருவேன்:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.