Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பாய்ச்சல் அனுபவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நகைச்சுவை உணர்வு சாந்தி.  புலிப்பாய்ச்சல் சண்டையோ இல்லை இராணுவம் ஊருக்குள் நகர்ந்து ஒருவாரம் போனதின் பின்னர்  யாழ்மாவட்ட தளபதி கரிகாலன்  பஜிரோவில் சுற்றிப்பார்க்க போனாரா.?   

காத்து கரிகாலண்ணா ஊரைச்சுத்திப் பாக்க ஊருலா போகேல்ல அவர் ஒரு தளபதியாக துணிச்சல் மிக்க வீரனாக போனார். அதைத்தான் அதே சமரில் பங்கெடுத்த போராளிகள் தங்கடை வாயலை சொல்லீனம். இந்த சண்டையில் நின்றவர்களுக்கு இது தெரியும். ஆனால் பலர் இங்கு வாயை மூடியிருக்கினம். வாணன்கூட கரிகாலண்ணாவின் பஜீரோ அடிபட்டது பற்றி அறிந்திருப்பார் கட்டாயம். ஏன் வம்பெண்டு பேசாமல் இருக்கிறார் என நினைக்கிறேன்.

காத்தாக வந்து சுனாமிச் சூறாவழியாகி காத்து என்னை கலைக்காதையுங்கோ நான் பாவம். :D

இங்கு தொடர்ந்து புலிப்பாய்ச்சல் புலிகளின் படையணி வேறுபாடுகள் கட்டமைப்புகள் பற்றி எழுதும் காளமேகம் உங்களுக்கு கரிகாலண்ணாவின் பஜீரோ தாக்குதல் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும்.

Edited by shanthy

  • Replies 115
  • Views 13.4k
  • Created
  • Last Reply

காத்து கரிகாலண்ணா ஊரைச்சுத்திப் பாக்க ஊருலா போகேல்ல அவர் ஒரு தளபதியாக துணிச்சல் மிக்க வீரனாக போனார். அதைத்தான் அதே சமரில் பங்கெடுத்த போராளிகள் தங்கடை வாயலை சொல்லீனம். இந்த சண்டையில் நின்றவர்களுக்கு இது தெரியும். ஆனால் பலர் இங்கு வாயை மூடியிருக்கினம். வாணன்கூட கரிகாலண்ணாவின் பஜீரோ அடிபட்டது பற்றி அறிந்திருப்பார் கட்டாயம். ஏன் வம்பெண்டு பேசாமல் இருக்கிறார் என நினைக்கிறேன்.

கரிகாலன் வண்டி அடிபட்டது புலிப்பாய்ச்சல் சண்டை நடந்த இடத்திலை எண்டா இப்பவும் சொல்கிறீர்கள்.

யாழ்மாவட்ட தளபதிக்கு சண்டை தொடங்கி ஒரு வாரம் ஆனதும்,  இராணுவம் அவரின் பகுதிக்கை வந்தது கூடவா தெரிய இல்லை எண்டுறீயள்.   உங்களுக்கு கதை சொன்ன தளபதி உண்மையிலை தளபதி தானா.?    

Edited by காத்து

முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையிலேயே கரிகாலண்ணாவின் சம்பவம் நடந்தது. இங்கு புலிப்பாய்ச்சல் என மாறி எழுதிவிட்டேன். மன்னியுங்கள் உறவுகளே. வாணன் சுட்டிக்காட்டிய போதுதான் ஞாபகம் வந்தது.

கரிகாலண்ணாவின் பஜீரோ மீதான சம்பவம் திகதிவாரியாக தெரிந்தவர்களில் வாணனும் ஒருவர். காத்து காத்தாய் வந்து சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

சரி பிள்ளை  அதை விட பெரிய ஓட்டை ஒண்டு இருகே. ?  அங்கை கரிகாலன் அண்ணை வந்த  பஜிரோவை நிச்சயமாக RCL  ஆலைதான் அடிச்சவனோ.?   RPG , LAW , B-10  எண்டு வேறை எதாலையும் அடிக்க இல்லை எண்டு உங்கட தளபதிக்கு எப்பிடியாம் தெரியும்.?

அடிவிழும் போது எதாலை அடிச்சவன் எண்டு பாத்திட்டு தான் ஓடி வந்தவரோ கரிகாலன் அண்ணை.? 

கரிகாலன் பஜிரோ எந்த இடத்திலை அடிபட்டது எண்டு உங்கட தளபதியை கேட்டு பாக்க இல்லையோ.?  இடம் தெரியாது.? 

*** எனக்கு உங்கட கதையிலை மயிர் புடுங்கிற எண்ணம் இல்லை பாருங்கோ ஆனால் நீங்கள் சொல்லுறது கூட பொய் எண்டு யாராலையும் நிறுவ முடியும்.***  விளங்கினால் சரி இல்லை எண்டால் இன்னும் உதாரணங்களை சொல்கிறன். 

சண்டை , வேட்டை , கடல் பயணம் மூண்டிலையும் பாத்ததுகளை அதிலை பங்கு பெறும் ஆக்கள் சொல்வதை வைச்சு தான் தகவல்கள் பெறலாம்.  அப்ப நடந்த சம்பவங்கள் திரும்பவும் எப்போதும்  நடப்பதில்லை.  

Edited by காத்து

தயா நீங்கள் சொல்லுவதை நம்புவது என்பதை விட  ஏற்றுக்கொள்வது  கடினமாக இருக்கிறது.

இது தான் உண்மை நிலமை. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முழுசா வாசிச்சதும் தெளிவு வந்ததோ இல்லையோ, கண்ணைக்கட்டினது  தான் மிச்சம்.. :o

யாழில் முன்னாள் போராளிகளின் அதிகரிப்பு மட்டும் ஏனோ சந்தேகத்தையே விதைக்குது... :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கருணாகரன்,நிலாந்தன்,யோ.கர்ணன் எழுதியதையும் வாசித்தேன்.வவுனியா முகாமில் சகோதரி உட்பட பலருடன் ந்நெரடியாக 2009ல் உரையாடி உள்ளேன். 300 பேர் முள்ளிவாய்க்காலில் இருந்து இங்கு வந்துள்ளார்கள். அவர்களுடனும் உரையாடி உள்ளேன். 
 
புலிகளின் குறிப்பிட்ட தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களுக்குள் தான் ரகசியங்கள் காக்கப்படும். வெளியில் உள்ள போராளிகளுக்கு எல்லா விடயங்களும் தெரிய வாய்ப்பில்லை.

நுணா சுகன் எழுதியதில் இருந்து நான் விளங்கிக் கொண்டது யாழில் எழுதுபவர்கள் ஒருவரது கருத்தின் நம்பகத்தன்மையைப் பார்க்காமல் யார் சொல்கிறார்கள் என்று பார்த்துத் தான் அவர்களுடைய கருத்தை ஏற்கிறார்கள் சுருக்கமாக சொன்னால் உண்மையை யார் சொன்னாலும் ஏற்க வேண்டும் என்று சுகன் சொல்கிறார்.
 
நீங்கள் அதை ஆமோதித்து பச்சை குத்தினீங்கள்[ஒருவர் இரு ஜடியில் வந்து பச்சை குத்தி இருக்கார் :lol: ]நான் சிலருடைய பெயரைச் சொல்லி அவர்கள் சொல்வதை ஏற்பீர்களாக என்று கேட்டதும் ஊருல தங்கச்சி இருக்கினம் அவை இப்படி சொன்னவை என்று சொல்கிறீர்கள்.அப்படியாயின் எப்படி சுகனின் கருத்தோடு உங்கள் கருத்து ஒத்துப் போகுது என்று எனக்கு விளங்கவில்லை :unsure:
 
தயாண்ணா சொல்கிறது உண்மை என்டால் நிலாந்தன் போன்ற ஆட்கள் சொல்வதும் உண்மையாத் தான் இருக்கும்.எல்லாரும் தாங்கள் கண்ட பக்கத்தை கொஞ்சம் கூட்டித் தான் எழுதுவினம்.எல்லோரும் எல்லாத்தையும் பாத்திருக்க முடியாது அல்லவா. உங்கட தங்கச்சிக்கு தெரிஞ்சது அவர்களுக்கு தெரிந்திருக்காது.அவர்களுக்கு தெரிந்தது உங்கட தங்கச்சிக்கு தெரிந்திருக்காது.எல்லாரும் தாங்கள் பார்த்ததை,நடந்ததை எழுதும் போது அவர்கள் எழுதுவது மட்டும் பொய் என்று உங்களால் எப்படி சொல்ல முடியும்?
 
கனடாவில் 300 பேர் புலியில் இருந்து போட்டு தப்பி வந்திருக்கினமா? அவையிட்ட கேட்டுச் சொல்லுங்கோ எப்படி தலைவரை விட்டுப் போட்டு அவர்களால் மட்டும் தப்பி வர முடிஞ்சது என்று :)  அடுத்ததாக புலி  தான் செய்ததும் பிழை தான் என்று எப்பவாவது ஒத்துக் கொண்டு இருக்கா
 
வொல்கனோ இன்னும் 30 வருடத்தால பிரபாகரனை துரோகி என்று ஆதாரங்கள் வைச்சுக் கொண்டு எழுதுவினம் அதை அப்படியே பேசாமல் நொட்டை சொல்லாமல் ஏற்றுக் கொள்வோமா?

தலை சொன்னது உண்மையாக இருக்கலாம். காளமேகம் சொல்வதிலும் உண்மைகள் இருக்கலாம்.

விதி, விலக்குகள் எப்போதும் உண்டு. அதேசமயம் பிரமையும் உண்டு.

90களில் நாம் கொக்குவிலில் பொற்பதி வீதியில் இருந்தபோது அப்பா ஒருநாள் வந்து தான் பிரபாகரன் ஒரு பஜரோவில் போவதை பார்த்தேன் என்று கூறினார். உண்மையாக இருக்கலாம், பிரமையாகவும் இருக்கலாம். சிலவேளைகளில் உருவத்தில் ஒத்த வேறு யாரையும் கண்டு அவ்வாறு எண்ணி இருக்கலாம். உதாரணத்திற்கு பேபி சுப்பிரமணியம் அவர்களிற்கு ஒத்த ஆடைகளை அணிவித்தால் தூரத்தில் பார்க்கும்போது த.வி.பு தலைவர் என யாரும் எண்ணலாம்.

யாழ் கருத்துக்களத்தில் குத்தி, முறிந்து மனத்தாபப்பட்டு சாதிக்கப்படக்கூடியது என்ன என்றுதான் விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா புலிகளே ஆயுதத்த மௌனிச்சு தங்கள் அமைப்ப கலைச்சு 4 வருஷம் ஆச்சு நீங்கள் இன்னும் சண்டை போட்டுக்கொண்டு...

ஆயுதத்தை மெளனிச்சாங்க சரி. அதெப்ப அமைப்பை கலைச்சாங்க. உங்க கிட்ட சொல்லிட்டா??! :)

நம்ம மக்கள்.. சில பேருக்கு தாங்கள் பத்திரமா இருக்க.. மற்றவன் போராடிக்கிட்டே இருக்கனுன்னு மட்டுமே தேணுது. அது தான் எப்படின்னே புரியல்ல..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலிப்பாய்ச்சல் பற்றி விடுதலைப்புலிகள் ஏடு அன்று மக்களோடு பகிர்ந்து கொண்டதை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.

http://www.eelamhomeland.com/vp_paper/V_P_59.pdf

எதுக்கு நான் பெரிசு நீ பெரிசுன்னு அடிபடுறீங்க. கடந்த கால முக்கிய போரியல் நிகழ்வுகளை புலிகளே பதிவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள்.

அதற்கு மேலதிகமாக.. அனுபவப் பகிர்வுகளை எமது போராட்ட விழுமியம் பிசகாமல் சொல்ல விளைபவர்களுக்கு வழிவிடுதலே நாகரிகம்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வீட்டுக்கு... அருகில் 500 மீற்றர் தூரத்தில் இராணுவத்தினர் மீது, தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது...
தலைவர் பிரபாகரனை வீட்டிற்கு முன்னால்... மிக அருகில் கண்டதாக, அப்பா சொன்னவர்.
ஆன படியால்... தயா சொல்வதில் உண்மை உள்ளதை, ஏற்றுக் கொள்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நுணா சுகன் எழுதியதில் இருந்து நான் விளங்கிக் கொண்டது யாழில் எழுதுபவர்கள் ஒருவரது கருத்தின் நம்பகத்தன்மையைப் பார்க்காமல் யார் சொல்கிறார்கள் என்று பார்த்துத் தான் அவர்களுடைய கருத்தை ஏற்கிறார்கள் சுருக்கமாக சொன்னால் உண்மையை யார் சொன்னாலும் ஏற்க வேண்டும் என்று சுகன் சொல்கிறார்.
 
நீங்கள் அதை ஆமோதித்து பச்சை குத்தினீங்கள்[ஒருவர் இரு ஜடியில் வந்து பச்சை குத்தி இருக்கார் :lol: ]நான் சிலருடைய பெயரைச் சொல்லி அவர்கள் சொல்வதை ஏற்பீர்களாக என்று கேட்டதும் ஊருல தங்கச்சி இருக்கினம் அவை இப்படி சொன்னவை என்று சொல்கிறீர்கள்.அப்படியாயின் எப்படி சுகனின் கருத்தோடு உங்கள் கருத்து ஒத்துப் போகுது என்று எனக்கு விளங்கவில்லை :unsure:
 
தயாண்ணா சொல்கிறது உண்மை என்டால் நிலாந்தன் போன்ற ஆட்கள் சொல்வதும் உண்மையாத் தான் இருக்கும்.எல்லாரும் தாங்கள் கண்ட பக்கத்தை கொஞ்சம் கூட்டித் தான் எழுதுவினம்.எல்லோரும் எல்லாத்தையும் பாத்திருக்க முடியாது அல்லவா. உங்கட தங்கச்சிக்கு தெரிஞ்சது அவர்களுக்கு தெரிந்திருக்காது.அவர்களுக்கு தெரிந்தது உங்கட தங்கச்சிக்கு தெரிந்திருக்காது.எல்லாரும் தாங்கள் பார்த்ததை,நடந்ததை எழுதும் போது அவர்கள் எழுதுவது மட்டும் பொய் என்று உங்களால் எப்படி சொல்ல முடியும்?
 
கனடாவில் 300 பேர் புலியில் இருந்து போட்டு தப்பி வந்திருக்கினமா? அவையிட்ட கேட்டுச் சொல்லுங்கோ எப்படி தலைவரை விட்டுப் போட்டு அவர்களால் மட்டும் தப்பி வர முடிஞ்சது என்று :)  அடுத்ததாக புலி  தான் செய்ததும் பிழை தான் என்று எப்பவாவது ஒத்துக் கொண்டு இருக்கா
 
வொல்கனோ இன்னும் 30 வருடத்தால பிரபாகரனை துரோகி என்று ஆதாரங்கள் வைச்சுக் கொண்டு எழுதுவினம் அதை அப்படியே பேசாமல் நொட்டை சொல்லாமல் ஏற்றுக் கொள்வோமா?

அதென்ன உங்களுக்கு சிலரில் கருத்தோடு ஒத்து
 போகும் போது என்னால் ஒத்துப்போக முடியாதா? அல்லது நீங்கள் சொன்னவற்றை நான்  வேதமந்திரமாக ஏற்க வேண்டுமா? நான் சொன்னது நிலாந்தன் சொன்னதை ஏற்க வேண்டுமென்பதில்லை. எனது சகோதரி சொன்னதை ஏற்க என்னால் முடியும் என்பதே.உங்களுக்கு சிலரின் கருத்தை ஏற்க முடியாத போது எனக்கு ஏற்க முடிகிறது. அதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.காரணங்கள் இல்லாமல் கூட இருக்கலாம்.
 
எல்லாரும் தாங்கள் கண்ட பக்கத்தை எப்படி கூட்டி எழுதுவினம் என என்ன அடிப்படையில் சொல்கிறீர்கள் என பத்து காரணங்கள் சொல்ல முடியுமா?
 
இற்றை வரை நீங்கள் போட்ட பச்சைகளுக்கு ஏன் எதற்காக போட்டீர்கள் என்பதற்கு பூரண விளக்கங்கள் தேவை.நான் சுகனுக்கு போட்ட பச்சைக்கு விளக்கம் தேவை எனில் நீங்கள் போட்ட அத்தனை பச்சைகளுக்குமான விளங்கங்கள் வரிக்கிரமாக தரப்பட வேண்டும்.
 
கனடாவில் 300 பேர் வந்து நிற்கிறார்கள் என்று எங்கே சொல்லி உள்ளேன் என  கூற முடியுமா?
 
மற்றவர் எந்த ஐடியில் வருகிறார் எங்கிருந்து வருகிறார் நீங்கள் அவரா ? என மற்றவரின் உயிரை ஏன் வாங்குகிறீர்கள்?

:mellow:  :mellow:  :mellow:  :mellow:

நுணா ஒரு கருத்திற்கு பச்சை குத்துவது அந்தக் கருத்தை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்/ஆதரிக்கிறோம் என்பதற்காகத் தான்.நீங்கள் சுகனின் கருத்திற்கு பச்சை குத்தியதன் மூலம் அவர் கருத்தை ஏற்கிறீர்கள் என்று அர்த்தம்.இப்ப வந்து சொல்கிறீர்கள் யாருடைய சொல்லை கேட்பது உங்கள் விருப்பம் என்று நீங்கள் இப்படி எழுதுவதற்கும்,சுகனின் கருத்திற்கு பச்சை குத்தினதிற்கும் முரண்பாடு உள்ளதல்லவா அதைத் தான் எனது 65 வது கருத்தில் சுட்டிக் காட்டினேன்.
 
மற்றப்படி யாருடைய கருத்தை நீங்கள் கேட்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம்.நீங்கள் ஒருவருடைய கருத்திற்கு போமாலிட்டிக்காக பச்சை குத்துபவர் என்று உங்கள் கருத்தை வாசித்ததும் விளங்கிக் கொண்டேன்.
 
ஒருவர் இரு ஜடியில் வந்து ஒரே கருத்திற்கு பச்சை குத்துறார்கள் என்டால் உங்களுக்கு ஏன் கோபம் வருது? நீங்களும் அப்படியா செய்கிறீர்கள்? அல்லது நீங்கள் எழுதிப் போட்டு இன்னொரு ஜடியில் வந்து பச்சை குத்திறீங்களோ இல்லாட்டில் ஏன் உங்களுக்கு நான் எழுதினது குத்துது
 
300 பேர் அங்கு வந்துள்ளனர் என எழுதி உள்ளீர்கள் அங்கென்டால் எங்கு?
 
சிகப்பு வரியில் எழுதினதை வாசிச்சாலே தெரியுது நீங்கள் எவ்வளவு மொக்குத் தனமாய் யோசிக்கிறீர்கள் என்று   :(
 
எழுதும் போது வார்த்தைகளில் கொஞ்சம் நிதானத்தை கடைப் பிடித்தால் நல்லது.
  • கருத்துக்கள உறவுகள்

புட்டுக்கு மண்சுமந்து அடிபட்ட சிவபெருமான் எங்கன்ட ஆள்....கிழவி சிவபெருமானை கண்டிருக்கா....மணிவாசகர் கண்டிருக்கார்....சம்பந்தன் கண்டிருக்கா.....ஆகவே நானும் கண்டேன் என் தலைவனை......:D

நான் காத்துவாக்கில வர்ற செய்திகளை உள்வாங்கி கையில வர்றத தட்டச்சுப்பண்ணிக் கொண்டிருக்கவில்லை. உண்மை வரலாறு கலப்பில்லாமல் எழுதப்படவேண்டும் என்பதற்காகத்தான் எழுதுகின்றேன். மிகச்சாதாரணமாக எல்லாப்போராளிகளுக்கும் தெரிந்த விடயத்தை பொருத்தமில்லாமல் மிகைப்படுத்தப்படுவதைச்  சுட்டிக்காட்டும்போது அதை  ‘முட்டையில மயிர் புடுங்குவது’ என்று சொன்னால் அது  அவர்களின்   தகவல் குறைபாடின் வெளிப்பாடு. 
 
 விடுதலைப்போராட்டம் தொடர்பாகவும்  அங்கு நடந்த சம்பவங்கள் தொடர்பாகவும்  அமைப்பின் உள்விவகாரங்கள், நடைமுறைகள் தொடர்பாகவும்  சரியான புரிதல், தகவல்  இருப்புகள் உள்ளவர்கள்  இலகுவாக இதைப் புரிந்து கொள்வார்கள் அல்லது அவர்களின்  அறிவு,  சம்பவங்களைப் பகுத்தறியத் துாண்டும். யானை பார்த்த குருடன் போல இருக்கும் சிலரின் தகவல் வெற்றிடத்தில் இருந்து உருவாகும் கருத்துக்களுக்கும், பிரம்மைகளில் இருந்து  உருவாகும் கருத்துக்களுக்கும்,  மிகைப்படுத்தல் கருத்துக்களுக்கும், தகவல் இருப்பிலிருந்து முன்வைக்கப்படும் கருத்துக்களுக்குமிடையில் மோதல்  எழுவது  தவிர்க்க முடியாதது. 
 
இதை உணர்வு ரீதியாக அணுகாமல் தகவல் செழுமை என்ற கோணத்தில் பார்ப்பது தான் பொருத்தமானது. இதன் பெறுபேறானது புலிகளின் வரலாற்றைச் செம்மைப்படுத்தும் நினைவூட்டலைத்தரும்.  இதன் விளைவு மீள்நினைவூட்டலினையும் நல்லபலனையும் தரும் என்றே நினைக்கிறன் (புலிகளின் ஏட்டின் லிங்கைப் போட்டு நெடுக்ஸ் நினைவுபடுத்தியதைப்போல). எனவே இதை உணர்வு வழி அணுகாமல் தகவல் வழியே அணுக வேண்டும். இந்தக் கருத்தாடலை ஒரு ‘தன்முனைப்புச் சிந்தனை’ (EGO CENTRIC) கொண்ட மனோநிலையில் இருந்து முன்வைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
விடுதலைப்புலிகளின் வரலாற்றைப் பேசும் போது  உணர்வுகள் மட்டுமல்ல உண்மைகளே வேண்டும். உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் என்பதன் அடிப்படையில் உண்மைகளின் திரிபுகளை  மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது. 
 
மேலும் தயா சொன்ன சம்பவத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிய விடயத்திற்கான பதிலை அவர்  கொடுப்பது தான்  இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
 
அத்துடன் ‘உடுக்கை இழந்தவன் கைபோல் ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு’ என்பதற்கிணங்க சிலர் தங்களது கருத்துக்களை முன்வைப்பது புரிகின்றது அது ஒரு பெரிய விடயமல்ல. மனித குண இயல்பின் யதார்த்தம்.
 
அதேவேளை தமிழ்சிறியின் பின்னூட்டத்தில் ”எங்கள் வீட்டுக்கு... அருகில் 500 மீற்றர் தூரத்தில் இராணுவத்தினர் மீது, தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது... தலைவர் பிரபாகரனை வீட்டிற்கு முன்னால்... மிக அருகில் கண்டதாக, அப்பா சொன்னவர். ஆன படியால்... தயா சொல்வதில் உண்மை உள்ளதை, ஏற்றுக் கொள்கின்றேன்.” என்று மொட்டையாக, தான் கேட்ட ஒரு தகவலை போட்டுள்ளார். 
 
விவாதம் ஏற்பட்டது தலைவர் களமுனைக்கு நெருக்கமாக சென்றவரா? இல்லையா? என்பதல்ல. தயா சொன்ன சம்பவத்தின் மீது தான்  விவாதம் முன்வைக்கப்பட்டது. 
 
எனவே விவாதம் ஏற்படக்காரணமாக இருந்த சம்பவத்திலிருந்து விவாதத்தை பிறிதொரு திசைக்குத் பிரித்தெடுத்து அதன் மீது பின்னூட்டங்களைப்பதிந்து சுத்தி நின்று மொட்டை அடிக்கலாம் என்று யாரும் எண்ண வேண்டாம்.
 
தமிழ்சிறி மாதிரி மொட்டையாகச் சொல்லாமல் இலகுவாக நம்பகத்தன்மை மிக்க சம்பவங்களைச் சொல்லலாமே. முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் தலைவர் மிகக்குறுகிய நிலப்பரப்பில் மோசமான செல், துப்பாக்கிச் சூட்டு எல்லைக்குள் இருந்தார் என்றும். யாழ் பல்கலைக்கழகத்தில் இந்திய இராணுவத்தின் பராத்துருப்பினர் தரையிறங்கி தலைவரை சுற்றி வளைக்கும் போது சண்டையிட்டவர்தானே என்றும் திருநெல்வேலித்தாக்குதலில் ஜீ 3 ஆயுதத்துடன் சண்டையிட்டவர்தானே என்றும் இந்திய இராணுவம் மணலாற்றில் தலைவரை சுற்றி வளைத்து அவருக்கு நெருக்கமாக வந்தபோது எத்தனை ஆபத்துக்களைச்சந்தித்தவர் என்றும்  பின்னூட்டங்களைப்போட்டு விவாதத்தை விவாதத்தின் மையத்திலிருந்து வேறு திசைக்கு நகர்த்தி விவாதத்தை நடத்தாமல்,  தயா குறிப்பிட்ட சம்பவத்தை மட்டும் மையப்படுத்தி பின்னூட்டங்கள் வருவது இந்த விவாதத்திற்கான சரியான தளம். எனவே இப்படியெல்லாம் நடந்ததால் இதுவும் நடந்திருக்கலாம் என்ற நிறுவல்கள் சம்பவம் தொடர்பான கேள்விக்குப் பதிலாகாது. 
 
எனக்கும் விவாதத்தந்திரோபாயங்கள் தெரியும். ஒரு பிரச்சினை அந்த இடத்தில் கையாள்வதற்கு கடினம் எனில் பிறிதொரு  வாய்ப்பான தளத்திற்குள் இழுத்து கொண்டு சென்று விவாதிப்பதும், விவாதத்தின் மீது  தொடர்பற்ற பல செய்திகளைப்பதிந்து சந்தேகத்தை ஏற்படுத்தி பலவீனப்படுத்துவதும், பொய்யை திருப்பத்திருப்ப பலகோணங்களில் இருந்து சொல்லி உண்மையாக்க முயல்வதும்,  பொய்க்கு மேல் பொய்களைக்கட்டி உண்மையாக்க முயல்வதும், இது போன்ற வகையைச்சார்ந்த பின்னூட்டங்கள் விவாதிப்பவர்களின் பலவீனத்தையே வெளிப்படுத்துகின்றது அத்துடன் அவர்களின் நடுநிலை மீதும் கேள்விகளை உருவாக்குகின்றது.
 
ஒரு பழைய சம்பவத்தை பதியும் போது ஏற்படும் தகவல் வழு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது. ஆனால் அதை  பிரம்மை அல்லது கற்பனை மனோநிலையில இருந்து உருவாக்கும் போது விவாதத்துள்ளாகின்றது. சம்பவத்தை எழுதும்போது, சம்பவத்திற்கு வெளியே சிறிதளவிலான கற்பனையை சுவாரசியத்திற்காக கலக்கும் போது சகித்துக்கொள்ளலாம் ஆனால் சம்பவமே மிகை நிரம்பிய கலப்படமாக இருக்கும் போது அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கின்ற அக முரண்பாடு தான் விவாதமாக பரிணமித்தது என்பது தான் இங்கிருக்கும் உண்மை.
 
பிறகு நான் மேல சொன்ன கருத்துக்களிலிருந்தும் புதிதாக ஒரு திரியை இழுத்து விவாதைத்தை திசை திருப்பாதைங்கோப்பா வேணுமென்றால் இதுக்கென்று புதுத்திரியை உருவாக்கி விவாதிப்பம் அதுக்கு முதல்ல தொடங்கின விவாதத்திற்கு முடிவு வரட்டும்.
 
- உண்மையை எழுதுங்கோ எண்டுதானே கேட்டனான்...... ஏம்பா, அது நான் சண்டை பிடிக்கிற மாதிரியாவா இருக்கு :huh:  :o
 
Edited by காளமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நிறையவே திண்ணைப்பேச்சு மன்னர்கள் அதிகரித்துவிட்டார்கள். தவிர ஒருத்தரது கருத்தை இன்னுமொருத்தர் விமர்சனம்செய்து மற்றவரைச் சீண்டிப்பார்த்து இன்பமடைகிறார்கள். ஆனால் பாவம் மக்கள். தயாவினது கருத்து ஒருசிலருக்குத் தவறானதாக இருக்கலாம் அதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது எனும் ஒற்றைவரி விமர்சனத்தின்மூலம் நாணையமாக வெளிப்படுத்தலாம். தவிர்த்து விவாதிப்பதில் பயனில்லை. இங்கு நாம் எல்லோருமே தமிழீழவிடுதலைப்புலிகளது, களச்சண்டைகளது பரிணாமத்தையும், திட்டமிடலையும், அவை எப்படி நடந்தது என்ற விபரங்களையும் யானையைப்பார்த்த குருடர்கள்போலவே அறிந்திருக்கிறோம். எதற்காக  அருமையான களவுறவுகள் ஒருத்தரோடொருவர் வாதுபுரிகிறீர்கள். 

Edited by Elugnajiru

இப்ப முடிவு / தீர்ப்பு என்ன??

போங்கப்பா போய் ஏதாவது உருப்படியாய் செய்யுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப முடிவு / தீர்ப்பு என்ன??

போங்கப்பா போய் ஏதாவது உருப்படியாய் செய்யுங்கள்!

 ஆனானப்பட்ட அலையையே பயப்பிடித்திப் போட்டினம் :D

இந்த சண்டை நடந்த போது தலைவர் அரியாலை உள்ள ஒரு இடத்தில் இருத்து கட்டளை வழங்கினார் அதுக்கா பிரத்தியோகமா அண்டனாக்கள் இரவுடன் இரவா உயர்த்த பட்டு அப்பகுதி தீவிர கண்காணிப்பில் இருந்தது எல்லாம் முடிந்த பின்னர்தான் சொன்னார்கள் தலைவர் இங்கதான் இரண்டு நாள் நிண்டவர் எண்டு காது வழி செய்தி உண்மை பொய் தெரியாது ஆனால் நிங்கள் சொல்வது 1990ஆம் ஆண்டுக்கு முன் வெளிநாடு வந்தவர்கள் நம்புவார்கள் இப்ப இப்படியான கதை விட முடியாது பாருங்கோ .

தலைவரின் பொட்டம்மான் பற்றி

தன்னுடன் வருவது தன் நிழல்தான் என உறுதிப்படித்தி விட்டதுதான் பொட்டு என்னை விட்டு விலகி போகும் இதுகும் போராளிகளிடம் தலைவர் சொன்னது தானாம்

இதுகும் எனக்கு காது வழி செய்தி

உடையவன் இல்லாட்டி ஒரு முழம் கட்டை என்பர் இங்க ஒன்பது முழம் கட்டையா நிக்கு தலைவா :(

இங்கு காளமேகம் தரப்பினர் சொல்வது போல தலைவருக்கு அதிமேன்மையான பாதுக்காப்பு கொடுக்க பட்டு இருக்குமா எண்று ஆராய்ந்து பார்த்தால் இல்லை எண்று சொல்லவே தோண்றுகிறது.  தலைவர் ஈழத்திலும் பாதுகாப்பு குறைபாடுகளோடு  தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தலைமறைவு வாழ்க்கையையே நடத்தி இருக்கிறார். 

மகிந்த இராஜபக்ஸவுக்கு வளங்கப்படுவது போண்ற ஒரு பாதுகாப்பு தலைவர் பிரபாகரனுக்கு வளங்கப்பட்டு இருந்ததா என்பதை பார்த்தால் உண்மை நிலை இல்லவே இல்லை என்பதுதான்.  தான் போகும் இடங்கள், பொதுக்கூட்டங்கள்,  இருப்பிடம் எதையும் வெளிப்படையாக வைத்துக்கொள்ளும் பாதுகாப்பு வலை அமைப்பு இருந்தும் இருக்கவில்லை.    இந்தியா இலைங்கை எனும் இரு நாட்டில் இருந்து வந்த தொழில் நுட்பவலை அமைப்பு அவரை வெளிப்படையாக நடமாட அனுமதிக்கவும் இல்லை.   எந்த தளபதிக்கும் இல்லாத பெரும் பாதுகாப்பு கெடு பிடிகள் அவரின் இருப்பிடத்தை காட்டவே செய்வன. 

தனது சொந்த இடத்திலேயே அவர் இருக்கிறாரா இல்லையா எண்று தெரியாமல் மறைந்து வாழ்வதை உயர் பாதுகாப்பு எனும் குறிக்குள் கொண்டு வர முடியாது.  தலைவர் இந்த வீட்டில் இருக்கிறாரா இல்லையா எண்று தெரியாமலே பல மக்களும் போராளிகளும் அந்த வீட்டுக்கு அருகில் வாழ்ந்தும் போய் வந்தும் கொண்டு இருந்தமையை பாதுகாப்பு எண்று சொல்வது முட்டாள் தனமானது. 

யாழ் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் உலகஉலா எனும் மாதாந்த சஞ்சிகையின் ஆண்டு நிறைவை கொண்டாடிய போது அதற்கு போய் இருந்த எனது நண்பர் சொன்னது யாதெனில்.  பிரபாகரன் வருவார் என்பது யாருக்கும் அங்கு தெரிந்து இருக்கவில்லை, அங்கு அவர் வந்த போது அதிர்ச்சியே அனைவருக்கும் இருந்தது.  அவர் வந்ததின் பிறகு யாரும் அந்தக்கூட்டத்தில் வெளியேற அவருடன் வந்த சில போராளிகள் அனுமதிக்க வில்லை.  வெளியில் இருந்த மக்களுக்கோ, வீதியால் போய் வந்த மக்களுக்கோ பிரபாகரன் அங்கு ஒரு சந்திப்பை நடத்துகிறார் என்பது தெரிந்து இருக்கவில்லை.  

இதுதான் தலைவருக்கு வளங்கப்பட்ட உயர் பாதுகாப்பு என்கிறார்கள். 

தலைவர் எங்கு போகுறார் வருகிறார் எண்று தெரியாத தலைமறைவு நிலையில் தலைவர் இந்த இடத்துக்கு வந்ததே இல்லை எண்று ஒருவர்  சொல்வாராக இருந்தால் புலிகளை அவருக்கு சரியாக தெரியவில்லை என்பதே  உண்மை.   தாங்களாக ஒரு கற்பனையை வளர்த்து விட்டு அதை நிறுவுவதையும் அதுதான் வரலாறு எண்று அடம் பிடிக்கும் முட்டாள்தனமானவர்களை விலக்கி விட்டு பயணம் செய்வதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும். 

Edited by காத்து

காத்து....................................................... வடிவேலு பாத்த மாதிரி ” வா..ம்மா....... மின்னலு.....” எண்டு போனால் இப்பிடித்தான். நிண்டு நிதானமாக வாசிக்கவேணும். 

நான் காத்துவாக்கில வர்ற செய்திகளை உள்வாங்கி கையில வர்றத தட்டச்சுப்பண்ணிக் கொண்டிருக்கவில்லை. உண்மை வரலாறு கலப்பில்லாமல் எழுதப்படவேண்டும் என்பதற்காகத்தான் எழுதுகின்றோம். 
 
யானை பார்த்த குருடன் போல இருக்கும் சிலரின் தகவல் வெற்றிடத்தில் இருந்து உருவாகும் கருத்துக்களுக்கும், பிரம்மைகளில் இருந்து  உருவாகும் கருத்துக்களுக்கும்,  மிகைப்படுத்தல் கருத்துக்களுக்கும், தகவல் இருப்பிலிருந்து முன்வைக்கப்படும் கருத்துக்குமிடையில் மோதல்  எழுவது  தவிர்க்க முடியாதது. 
 
தயா குறிப்பிட்ட சம்பவத்தை மட்டும் மையப்படுத்தி பின்னூட்டங்கள் வருவது இந்த விவாதத்திற்கான சரியான தளம். எனவே இப்படியெல்லாம் நடந்ததால் இதுவும் நடந்திருக்கலாம் என்ற நிறுவல்கள் சம்பவம் தொடர்பான கேள்விக்கு பதிலாகாது. 
 
வாசிக்க சிரமம் என்றால், அஞ்சரன் சொன்னதை அஞ்சுமுறை (ஐந்துமுறை) எழுதிப்பாருங்கோ........

 நிங்கள் சொல்வது 1990ஆம் ஆண்டுக்கு முன் வெளிநாடு வந்தவர்கள் நம்புவார்கள் இப்ப இப்படியான கதை விட முடியாது பாருங்கோ .

உடையவன் இல்லாட்டி ஒரு முழம் கட்டை என்பர் இங்க ஒன்பது முழம் கட்டையா நிக்கு தலைவா :(

காத்து...... ஈழதேசக்காத்தாக இருந்தால் அதில் மாவீரரின் மூச்சுக்காற்று கலந்திருக்க வாய்ப்பிருக்கும்  :unsure:  :unsure:  :unsure:  :unsure:  :unsure:  :unsure:

Edited by காளமேகம்

இப்ப முடிவு / தீர்ப்பு என்ன??

போங்கப்பா போய் ஏதாவது உருப்படியாய் செய்யுங்கள்!

வாம்மா. மின்னலு. :D

காத்து....................................................... வடிவேலு பாத்த மாதிரி ” வா..ம்மா....... மின்னலு.....” எண்டு போனால் இப்பிடித்தான். நிண்டு நிதானமாக வாசிக்கவேணும். 

வாசிக்க சிரமம் என்றால், அஞ்சரன் சொன்னதை அஞ்சுமுறை (ஐந்துமுறை) எழுதிப்பாருங்கோ........

காத்து...... ஈழதேசக்காத்தாக இருந்தால் அதில் மாவீரரின் மூச்சுக்காற்று கலந்திருக்க வாய்ப்பிருக்கும்  :unsure:  :unsure:  :unsure:  :unsure:  :unsure:  :unsure:

தயா சொன்னவை சரி பிழை எண்வைகளுக்கு அப்பால் பார்த்தால், காளமேகமாகிய  நீங்கள் சொல்வது மட்டுமே சரி உங்களுக்கு மட்டுமே உண்மைகள் தெரியும் எனும் குழப்ப வாதம் மட்டுமே இங்கே தெக்கி நிக்கிறது. 

அப்படி நீங்கள் மட்டுமே வரலாற்றை அறிந்தவர்கள் தலைவரின் அனைத்து நகர்வையும் புரிந்தவர்கள் எனும் தொனிப்படும் சொற்கோவைகள் உங்கள் மீதான நம்பிக்கையை இங்கே கேள்விக்கு உள்ளாக்கிறது. 

தவிரவும்  புலிப்பாய்ச்சல் சண்டையில் தலைவர் எந்த பாத்திரமும் வகிக்கவில்லை என்பதுக்கு உங்கள் பக்கம் இருந்தும் கூட எந்த ஆதாரங்களும் வைக்கப்படவில்லை.  வெறும் பொய் வரலாற்றில் தலைவர் அப்படி வந்ததாக இல்லை எனும் கூச்சல்கள் மட்டும் தான் கேக்கின்றது. 

தவிரவும் சந்தேகம் வரும் இன்னும் ஒரு பகுதி என்ன எண்றால் உங்களின் குழு நிலைவாதம்.  ஒரு குழுவாக சேர்ந்து நிண்று ( பிரான்சில் இருந்து இயக்கப்படும் குழுவாக  இருக்கவேண்டும்.)  எவர் மீதாவது அவதூறுகளை அள்ளி வீசும் பொதுத்தன்மை உங்களிலும் பிரதிபலிக்கிறது.  

Edited by காத்து

தவிரவும்  புலிப்பாய்ச்சல் சண்டையில் தலைவர் எந்த பாத்திரமும் வகிக்கவில்லை என்பதுக்கு உங்கள் பக்கம் இருந்தும் கூட எந்த ஆதாரங்களும் வைக்கப்படவில்லை.  வெறும் பொய் வரலாற்றில் தலைவர் அப்படி வந்ததாக இல்லை எனும் கூச்சல்கள் மட்டும் தான் கேக்கின்றது. 

ஸப்பா............... முடியலை..................... ஒருவேளை தெலுங்கில எழுதிட்டனோ.... :(  :(  :(  இது தமிழெண்டுதானே சொன்னாங்கள் :unsure:  :unsure:  :unsure:  :unsure:

மற்றும் ஒரு சண்டை தலைவரால் கட்டமைக்கப்படும் முறையை புலிப்பாய்ச்சல் சண்டைக்கூடாகவே பார்க்கலாம். திட்டமிட்ட தாக்குதலின் பிரதான திட்டத்தை வகுத்த தலைவர், புலிப்பாய்ச்சல் சண்டைக்கட்டமைப்பில் தரை நடவடிக்கைக்கு பிரதான தளபதிகளாக சொர்ணம், பால்ராஜ்  ஆகியோரையும், காங்கேசன்துறை துறைமுகத்தில் ஒரு திசைதிருப்புத்தாக்குதல் நடவடிக்கைக்கு கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களையும்  நியமித்திருந்தார். அதேநேரம், அளவெட்டிப்பகுதிக்குள்ளால் கரும்புலிகள் மற்றும் விசேடவேவுப்பிரிவு உள்ளடங்கலாக ஒரு அணியை உள்ளனுப்பி இராணுவத்தின் உள் செயற்பாட்டைக் குழப்பும் நடவடிக்கைக்கான ஒரு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. மேலும் விமான எதிர்ப்பு ஏவுகணைப்பிரிவும் உள்வாங்கப்பட்டிருந்தது.

இது தவிர தகவல் ரீதியாக பிரதான மொனிற்றறிங்  மற்றும் புலனாய்வுத்துறை பொட்டம்மானால் வழங்கப்படும் இராணுவ நகர்வு தொடர்பான தகவல்கள் தலைவருக்கு நேரடியாகச் செல்லும். அத்துடன்,  சண்டைப்பின் களத்திற்கான பிரதான ஒழுங்குகள் தலைவர் சரிபார்ப்பார். தேவைப்படின் மேலதிக அணிகளையும் சிறப்பு அணிகளையும் அனுப்பி வைப்பார். தரைப்படை,கடற்புலிகள், கரும்புலிகள், விமான எதிர்ப்பு, இராணுவ தகவல் பரிமாற்றம், சண்டைக்கான பிற ஒழுங்குகள் போன்ற தனித்தனி நடவடிக்கைகளை தலைவர் தனது நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்து ஒழுங்கு படுத்துவதைத்தான் தலைவரின் நேரடி வழிநடத்தலில் என்று சொல்வது.  
 
Edited by காளமேகம்

மிக் 27 அடிவாங்கி வந்தவன் எல்லாம் சிவனே எண்டு இருக்க புக்காரக்கரன் கிளித்தட்டு மறிப்பது சிரிப்பை கொண்டுவரும் வரலாறை திரித்து எழுதி என்ன இலாபம் யோசியுங்கோ சீமான் மாதிரி அடிச்சு விடாமல் இப்படி எழுத தொடங்கினா வன்னியில் இருத்து வந்தவன் பக்கம் பக்கமா கதை எழுதலாம் .லைக்கும் ஆதரவும் நீளும் ஆனால் உண்மை செத்து கிடக்கும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.