Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மொழிமூல இணைய சேவையிலிருந்து புலிகளின் கொடி நீக்கப்பட்டது!

Featured Replies

1231676_160079864192610_176642977_n.jpg

இங்கிலாந்தின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் உள்ளூர் லிவிசாம் பரோ கவுன்சிலும் தமது இணைய சேவையில் தமிழ் மொழிக்கு புலிகளின் கொடி ஒதுக்கப்பட்டிருந்ததை தற்போது தடைசெய்துள்ளது.

மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் மக்களுக்கு செய்யும் பணிகளை விளக்கிக் கூறுவதற்கு இந்த இணையத்தளங்கள் உதவுகின்றன.

பொலிஸார் மக்களுக்கு செய்யும் சேவையை தெளிவாக விளக்கும் முகமாகவே இந்த இணையத்தளங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தமிழ் மொழியை தெரிவுசெய்யும்போது அதற்கான தேசியக் கொடியாக புலிகளின் கொடி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் லண்டனில் உள்ள இலங்கையின் உயர் ஸ்தானிகராலயத்திற்கு அறியக்கிடைத்ததை அடுத்து இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து லண்டனின் மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் லிவிசாம் பரோ கவுன்சிலும் புலிகள் கொடியை அகற்றுவதற்குத் தீர்மானித்துள்ளன.

மற்ற நாடுகள் தங்கள் இணையத்தளங்களுக்கு தேசியக் கொடியை சேர்த்துக் கொள்ளும் போது இந்த இணையத்தளத்தில் புலிகள் கொடியை சேர்த்துக் கொண்டது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டது. இந்த முறைப்பாட்டை அடுத்து லிவிசாம் பரோ கவுன்சிலின் மேயர் ஸ்டீவ் புளொக் உடனடியாக இந்த தவறை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார்.

மெட்ரோ பொலிட்டன் பொலிஸாரும் இது விடயத்தில் தவறிழைத்து விட்டதாக மேயர் குற்றம் சாட்டுகிறார். இதனால், லண்டன் பொலிஸார் இப்போது தங்கள் நாட்டினால் உத்தியோகபூர்வமாக தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் கொடிதான் இந்த புலிக் கொடி என்பதை சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளனர்.

இந்த தீர்மானத்தை அடுத்து குறித்த இரு இணையத்தளங்களில் இருந்து புலிகள் கொடி உடனடியாக அகற்றப்பட்டது. உலகெங்கிலும் பரந்துவாழும் சுமார் 80 மில்லியன் தமிழர்கள் தங்களுக்கென ஒரு தனியான கொடியை விரும்புகிறார்கள் என்று லண்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

http://tamilworldtoday.com/home

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்

-----

 உலகெங்கிலும் பரந்துவாழும் சுமார் 80 மில்லியன் தமிழர்கள் தங்களுக்கென தனியான கொடியை  ஒரு விரும்புகிறார்கள் என்று லண்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

kovanam.jpg

உலகில் உள்ள எல்லாத் தமிழரும் விரும்பும் கொடியை...

இவரின்... இடுப்பிலிருந்து தான், உருவி எடுக்க வேண்டும்.

அதுதான்... தற்போதைக்குச் சாத்தியம்.

இலங்கையின் ஊத்தியோக மொழி என்று சொல்லி இலங்கை கொடியை போட வேண்டியது தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மொழிக்கு அடையாளமாகத்தான் சிறீலங்காக் கொடி வைக்கப்பட முடியும். அதனை தமிழர்களுக்கான கொடியாக அமைக்க முடியாது. தமிழீழத் தேசியக் கொடிதான் தமிழுக்கான அடையாளமாவது கூடிய பொருத்தம்.

ஏலவே ஸ்காட்லண்ட் ஜாட்.. இந்தக் கொடிவிவகாரத்தில் முரண்டு பிடித்து.. பின்னர்.. அது தமிழீழத் தேசியக் கொடிதான் என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். இப்போ மீண்டும்.. குரோதிகளின் தூண்டலின் பெயரில்.. இந்த விவகாரத்தை கையில் எடுக்கிறார்கள்.

தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் எதுவுமே பாவனையில் இருக்கக் கூடாது என்றால் அப்புறம் எதற்கு அரச ஊடகங்கள்..  ஒசாமா பின்லேடனின் படத்தை போடுகின்றன. அதுவும் தடை செய்யப்பட்டது தானே..???!

புலிகள் இயக்கச் சின்னம்.. கொடி வேறு. தமிழீழத் தேசியக் கொடி வேறு. இதனை ஸ்காட்லண்ட் ஜாட் அறியும் என்பதால்.. இந்த நீக்கம் குறித்து ஒரு முறையீட்டினை தமிழர்கள் பதிவு செய்து சுயாதீன விசாரணைக் கமிசன் ஒன்றின் விசாரணைக்கு இந்த விவகாரத்தை கொண்டு வர தமிழ் இளையோர் அமைப்புக்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். :icon_idea:

இவ்வாறான விவகாரங்களுக்கு சட்ட ரீதியான ஒரு தீர்வு பெறுவது தான் குரோதிகளின் சீண்டல்களுக்கு அப்பால் எமது இன தேசிய அடையாளம் சர்வதேச அளவில் பேணப்பட வசதியாக அமையும். இதில் நாம் தொடர்ந்து பலவீனமான நிலையில் எமது தேசியக் கொடியையை மற்றும் அடையாளங்களை வைத்திருப்பது நல்லதல்ல..!  :icon_idea: 

நெடுக்கு:

சினிமா படங்களில் வருகிற இரட்டை பிறவிகள் மாதிரி...மீசை இருந்தால் சந்திரன்...இல்லை என்றால் இந்திரன் என்கிற மாதிரி தான் இந்த புலிக்கொடியும் தமிழ்கோடியும் :)

இதை நாங்கள் நம்புவம்....ஆனால் எல்லாரும் கேணையல் இல்லையெல்லோ

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக அணுகினால் வெற்றி நிச்சயம்.சிங்கள மொழிக்குத்தான் சிங்கக்கொடி அடையாளம்.தமிழ்மொழிக்கு புலிக்கொடியே அடையாளம்.

ஏற்க்கனவே யாரோ இந்த செய்தியை முன்னரும்  இணைத்திருந்தார்கள் ஏன் திரும்பவும் இணைக்கின்றீர்கள்   ?

இதை சட்டரீதியாக அணுக முடியாது. அணுகினால் தோல்வியே நிச்சயம். புலிக்கொடி அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டின் தேசியக் கொடி. கொடிக்கு தடையும் இல்லை, அங்கீகாரமும் இல்லை என்பதுதான் நிலை.

வேண்டுமென்றால் தமிழ்மொழிக்கு தமிழ்நாட்டு அரசின் சின்னத்தை அல்லது, வட மாகாணசபையின் சின்னத்தை வைக்கச் சொல்லி கேட்டுப் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம யாழை, ஹை கொமிசன் காரர் வாசிக்கினம் போல கிடக்குது.

இதை சட்டரீதியாக அணுக முடியாது. அணுகினால் தோல்வியே நிச்சயம். புலிக்கொடி அங்கீகரிக்கப்படாத ஒரு நாட்டின் தேசியக் கொடி. கொடிக்கு தடையும் இல்லை, அங்கீகாரமும் இல்லை என்பதுதான் நிலை.

 இருந்தாலும் ஒரு வழக்கு போட்டு பார்த்தால் தப்பா?

தமிழ்மொழிக்கு அடையாளமாக புலிக்கொடியை பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்தால் அது நன்றாகவா இருக்கும்?

தமிழ்மொழிக்கு அடையாளமாக புலிக்கொடியை பயன்படுத்த முடியாது என்று நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வந்தால் அது நன்றாகவா இருக்கும்?

இப்போது இருப்பது என்ன?

தமிழ் மொழிக்கு புலிக்கொடி பாவிக்கலாம் என்பதா?

அப்படி ஒரு தீர்ப்பு வந்தால் அதில் என்ன இழப்பு?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

புலியைப் போடலாம், சிங்கத்தைப் போடலாம், ஏன் நந்தியினையும் அல்லது மீனையும் போடலாம்.

ஆனால் இரண்டு துவக்குகள் இருப்பது தான் எதிர்ப்பவர்களுக்கு வசதியாக உள்ளது போல் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எமது தேசியக் கொடிக்கான அங்கீகாரத்தை நாம் தான் தேடிப் பெற வேண்டும். துவக்கிருக்கு.. சீறும் புலி இருக்கு.. சிவப்பிருக்கு என்று கொண்டு.. நாமே அதனை பற்றி சந்தேகங்களை வளர்க்கக் கூடாது.

ஏலவே எமது தேசியக் கொடியை பிடிக்க.. தடை என்ற ஒன்றை வைச்சுப் பூச்சாண்டி காட்டினார்கள். இளையோர் போராடி அந்த கெடுபிடியை நீக்கியதால்.. இன்று தேசியக் கொடி உலக நாடெங்கும் பறக்கிறது.

எத்தனையோ நாடுகளின் கொடிகளில் துவக்கு இருக்குது. வாள் இருக்குது. போர்க்குணம் விலங்குகள் உள்ளன. பிரச்சனை என்ன என்றால் எம்மிடம் உறுதியான நிலைப்பாடில்லை. அவர்களிடம் உள்ளது. அதனால் அவர்கள் அதற்கு அங்கீகாரம் பெற்றார்கள். நாம் தானே பல்தேர்வு வினாக்களுக்கு விடை காணும் சுழியன்கள் ஆச்சே..??! உள்ளதை விட்டிட்டு.. இல்லாததற்கு தேவையற்றதற்கு அங்கீகாரம் தேட விளையும் "புத்திசாலிகள்" நாங்கள்.

எதுஎப்படியோ.. இளையோர் இந்த விடயத்தை கையில் எடுப்பார்கள். தீர்வு ஒன்றை காண முயல்வார்கள் என்று நம்புகிறேன். இது பற்றி அவர்களோடு கதைப்பது.. யாழில் கதைப்பதிலும் கூடிய வினைத்திறனானது..! இச்செய்தியை பல்வேறு வழிகளிலும்.. இளையோரிடம் சேர்ப்பதுவே இதனை இங்கு பதியக் காரணமும் ஆகும். இங்குள்ள நடைமுறைகளை சரிவர தெரியாதவர்கள் எல்லாம் சட்டம் படித்த கணக்கா.. அது தோற்கும்.. இது வெல்லும் என்று எதிர்வு கூறுவது வேடிக்கையானது.

எத்தனையோ தமிழர்கள்.. களவா வந்து அசைலம் அடிக்கேக்க.. என்ன வெல்லும் என்றா அடிச்சவை. தோற்றதற்காக கைவிட்டிட்டு ஊருக்கா போனவை. இல்லைத்தானே. அதற்குப் பிறகும் எத்தனையோ வழிகளில் சுத்துமாத்துச் செய்து அசைலம் அடிக்கல்ல... பிரஜா உரிமை பெறல்ல. அதில உள்ள அக்கறை ஏன் தேசியக் கொடி விவகாரத்தில் வருகுதில்லையோ..???! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு:

சினிமா படங்களில் வருகிற இரட்டை பிறவிகள் மாதிரி...மீசை இருந்தால் சந்திரன்...இல்லை என்றால் இந்திரன் என்கிற மாதிரி தான் இந்த புலிக்கொடியும் தமிழ்கோடியும் :)

இதை நாங்கள் நம்புவம்....ஆனால் எல்லாரும் கேணையல் இல்லையெல்லோ

மொழிக்கு ஒரு கொடி என்பது பொருத்தமில்லாதது. சிங்கள தேசத்திற்கே சிங்கக்கொடி அன்று சிங்கள மொழிக்கானது இல்லை.

தேசங்களுக்கே கொடி தவிர மொழிக்கு இல்லை.

மொழி ஒரு தொடர்பாடல்க் கருவி. தேசமின்றி தேவையின்றி மொழி நீண்டகாலம் உயிர்வாழாது. அதேபோல்தான் இதரவிசயங்களும் உயிர்வாழாது.

தேசீயக் கூறுகளில் பூர்விக நிலம் ஒன்றே பெறுமானம் உள்ளது.

பூர்வீக நிலம் = 1

தொடர்பாடல் மொழி =0

கலாச்சாரம் = 0

பண்பாடு பழக்கவழக்கங்கள் = 0

உணர்வுகள் இதர பூராயங்கள் = 0

ஒன்றுடன் எத்தனை சைபர்களையும் போட்டு பெறுமதியை அதிகரிக்கலாம் தவிர நிலமில்லாத தேசமில்லாத எத்தனை விசயங்களும் பெறுமதியற்றது. புலம்பெயர்ந்த தேசீயம் என்பது சைபர் நிலையே. அதற்கொரு கொடி என்பதும் அர்த்தமற்றது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் தேசீய உணர்வளவில் தாம் ஒரு பெறுமானம் உடையவர்கள் என்று கற்பனையில் மிதக்கின்றனர். மொழி கலாச்சாரம் மதம் பண்பாடுகளை தாம் கடைப்பிடிப்பதால் இந்த கற்பனை உருவாகின்றது. பத்து சைபர்களை வைத்திருக்கலாம் அல்லது எத்தனை சைபர்களையும் வைத்திருக்கலாம். வேணுமானால் அதற்கொரு கொடியும் அல்லது பல கொடிகளையும் வைத்திருக்கலாம். ஆனால் பெறுமானம் என்பது 0.

நீங்கள் எழுதியது எல்லாம் நன்றாக இருக்கிறது ............
இந்த "பெறுமானம்" பெறுமாதம் என்று நீங்கள் எழுதியதுதான் விளங்க வில்லை.
 
எமக்கு பூர்விக நிலம் இல்லை என்று உங்களுக்கு யார் சொன்னார்??
 
பாலஸ்தீனத்தின் கொடி பற்றி என்ன பெறுமானம் இருக்கிறது?? 
 
நாம் தமிழர்கள்.
எமக்கு என்று சில அடையாளங்கள் இருக்கின்றது.
அவற்றை பல நூற்றாண்டு காலங்களின் முன்பிருந்தே பல தேசங்களும் அரசுகளும் படை எடுத்து வந்து அழித்து  வருகின்றன.
 
இப்போது  தொடர்பு சாதன வளர்ச்சி என்பது அபராத வளர்ச்சி கண்டுள்ள நிலையில். ஒரு மூலையில் தமது ஆதிக்கத்தை வைத்து நடாத்தும் அடக்குமுறை இவளவு காலம் நீடிக்கும் என்பதற்கு . காலம் தான் பதில் சொல்லும்.
 
அவர்கள் கற்பனையில் இருக்கிறார்கள்............ 
இவர்கள் கற்பனையில் இருக்கிறார்கள்...........
என்று நீங்கள்தான் ஒருவிதமான கற்பனையில் இருக்கிறீர்கள்.
 
தமிழ் மொழியை பயன்பாடிட்கு கொண்டு வரும் போது ..........
அது யாருடைய மொழி ?
அதன் அடையாளம் என்ன?
என்ற கேள்விகளுக்கு  வேண்டுய தேவையும் இறக்கிறது.
 
புலிக்கொடியை போடுங்கள் என்று  கேட்டு அவர்கள் போடவில்லை.
 
ஏன் அவர்கள் புலிக்கொடியை போட்டார்கள்??
உங்களுடைய யதார்த்தம் பாதார்த்தம் சதார்தம் என்ற பனங்காய் பணியாரம் எதையும் உண்ணாமலே  போட்டிருக்கும்போது.
 
நீங்கள் சுட்டு வைத்திருக்கும் யதார்த்த பணியாரத்திட்கு எமக்கு விளக்கம் தேவையாய் இருக்கிறது.
 
"அவர்கள் போட்டார்கள்" அதுதான் யதார்த்தம்.
இப்போது சில சக்திகளின் குறுக்கீட்டால் அதை நீக்க போகிறார்கள்.
இதுதான் செய்தி. 

//நாம் தமிழர்கள்.

எமக்கு என்று சில அடையாளங்கள் இருக்கின்றது.//

மேலே நீங்கள் குறிப்பிட்ட உணர்சிசக்கோ விசயத்துக்கோ பெறுமதி கிடையாது. இதையே நான் சுருக்கமாக சொல்லியிருக்கின்றேன்.

நாம் தமிழர்கள். தமிழன். உண்மைத்தமிழன் இப்படியாக பல உணர்ச்சிமிகு சொற்பிரயோகங்கள் பாவிக்கப்படுகின்றது. இவ்வாறு தன்னை தமிழன் என்று பிரகடனப்படுத்துபவன் தனது பூர்வீக நிலத்திலிருந்து வெளியேறிவிட்டால் அவன் தான் உணரும் தமிழன் என்பதற்கு பெறுமானம் 0

கொடியை அனுமதிக்கட்டும் அல்லது தடைசெய்யட்டும் இவற்றால் எந்தப் பிரயோசனமும் இல்லை. ஏனெனில் பூர்வீக நிலத்தை விட்டு வெறொருவனின் நிலத்தில் கொடியை தூக்கிப்பிடிப்பதால் 0 என்கிற பெறுமானத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது.

ஒன்று தாயகத்திற்கு சென்று கொடியை நிலைநாட்டுதல் இல்லையேல் தாயகத்தில் உள்ளவர்கள் கொடியை நிலைநாட்ட உதவுதல். மாற்றத்திற்கு இதுதான் மார்க்கம்.

நாம் தமிழர் என்று உணர்வதற்கு எதிராக நான் எதையும் எழுதவில்லை ஆனால் அந்த உணர்வுக்கு எந்த ஒரு பெறுமதியும் இல்லை. காரணம் உரிய இடத்தில் நாம் இல்லை. எங்களுக்கு முதுகில் அரித்தால் நாம் தான் சொறியவேண்டும் அடுத்தவன் முதுகை சொறிவதால் அரிப்பு போகாது ஆகவே பாலஸ்தீனம் இஸ்ரேல் குர்திஸ்தானை இதற்கள் இழுத்துவராதீர்கள்.

மொழிக்கு ஒரு கொடி என்பது பொருத்தமில்லாதது.  இதை லண்டன் மெற்றொதான் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களை மொழிகளை  கொடிகளால் பிரத்திந்திதுவப்படுத்தினால் எமக்கு விருப்பமன கொடியை எமது மொழிக்கு முன் போடவேண்டியது அவர்களின் பொறுப்பு
சிங்கள தேசத்திற்கே சிங்கக்கொடி அன்று சிங்கள மொழிக்கானது இல்லை. சிங்கள தேசம் என்று ஒன்று இருந்ததில்லை. சிங்கள அடக்கு முறை மட்டும்தான் இருக்கிறது. மற்றையது இலங்கைத் தீவு. சிங்களம் பேசுவோருக்கான தீவு  என்று இலங்கை என்று இலங்கை அரசியல் அமைப்பு வருணிக்கிறது. ஸ்ரீலங்கா என்பது எங்கும் வரையறுக்கப்படாத நாடு. சிங்கள தேசம் என்றால் அது எது என்றோ ஏன் அந்த பெயர் வந்ததென்றோ எல்லோரும் ஏற்றுக்கொண்ட வரவிலக்கணம் எங்கும் இல்லை.  வங்காளிகள் கூட சிந்து வெளியில் இருந்து துரத்தபட்ட போது தமிழை மறந்து  ஆரியம் பேசத்தொடங்கியவர்களே.  என்வே சிங்கள தேசமோ, சிங்கள் மக்களோ வெறும் உருவகம். 

  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதன்..

உலகக் கால்பந்து போட்டிகள் நடக்கும்போது இத்தாலிய, போர்த்துக்கல் வம்சாவழி கனேடியர்கள் தங்கள் வாகனங்களில் அந்நாட்டுக் கொடிகளைப் பறக்க விடுவதை கண்டுள்ளேன். கனேடிய மண்ணில் பெறுமதியில்லாத அந்தக் கொடிகளை எதுக்குப் பறக்க விடுகின்றார்கள்? இவ்வளவுக்கும் அவர்களும் கனேடியர்கள்தான்.. :unsure:

அடுத்தமுறை அவர்கள் இவ்வாறு செய்யும்போது நிப்பாட்டிக் கேட்கிறன். :rolleyes: அசம்பாவிதம் நடந்தால் சண்டமாருதன்தான் பொறுப்பு.. :(:D

தமிழுக்க்கு முனபாக புலிக்கொடியை எப்படியாவது போடுவித்துவிடப்போகிறார்கள் என்பதால் மொழியை கொடி பிரதிநிதுவப்படுத்த கூடாது என்று விதண்டவாதம் வைக்கிறார்கள். கொடி எதை எதை பிரதிநிதித்துவப்படுத்த கூடாது என்று ஐ.நாவில் தாங்கள்தான் பதிவுகள் செய்து வைத்திருப்பத்தாக கோமாளிக்கதைகள் சொல்ல வருகிறார்கள். 

அப்போ முஸ்லீம் மதக்கொடியை இவர்கள் தூக்கிப்பிடித்தாட்டுகிறார்களே. அது எதற்கு?

Edited by மல்லையூரான்

சிங்கள தேசம் என்று ஒன்று இருந்ததில்லை. சிங்கள அடக்கு முறை மட்டும்தான் இருக்கிறது. மற்றையது இலங்கைத் தீவு. சிங்களம் பேசுவோருக்கான தீவு என்று இலங்கை என்று இலங்கை அரசியல் அமைப்பு வருணிக்கிறது. ஸ்ரீலங்கா என்பது எங்கும் வரையறுக்கப்படாத நாடு. சிங்கள தேசம் என்றால் அது எது என்றோ ஏன் அந்த பெயர் வந்ததென்றோ எல்லோரும் ஏற்றுக்கொண்ட வரவிலக்கணம் எங்கும் இல்லை. வங்காளிகள் கூட சிந்து வெளியில் இருந்து துரத்தபட்ட போது தமிழை மறந்து ஆரியம் பேசத்தொடங்கியவர்களே. என்வே சிங்கள தேசமோ, சிங்கள் மக்களோ வெறும் உருவகம்.

இலங்கை இப் பூமிப்பந்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாடு. அவர்கள் தமககென்று ஒரு நாட்டை உருவாக்கிவிட்டார்கள். வரலாறுகள் புராணங்கள் வரைவிலக்கணங்களை வைத்து எதுவும் செய்யமுடியாது. சிங்கள தேசமும் சிங்கள மக்களும் வெறும் உருவாக்கம் என்பதை எம்மைத் திருப்திப்படுத்த நாம் பேசிக்கொள்ளலாம் தவிர இவ்வுலகம் அதை ஏற்காது.

சண்டமாருதன்..

உலகக் கால்பந்து போட்டிகள் நடக்கும்போது இத்தாலிய, போர்த்துக்கல் வம்சாவழி கனேடியர்கள் தங்கள் வாகனங்களில் அந்நாட்டுக் கொடிகளைப் பறக்க விடுவதை கண்டுள்ளேன். கனேடிய மண்ணில் பெறுமதியில்லாத அந்தக் கொடிகளை எதுக்குப் பறக்க விடுகின்றார்கள்? இவ்வளவுக்கும் அவர்களும் கனேடியர்கள்தான்.. :unsure:

அடுத்தமுறை அவர்கள் இவ்வாறு செய்யும்போது நிப்பாட்டிக் கேட்கிறன். :rolleyes: அசம்பாவிதம் நடந்தால் சண்டமாருதன்தான் பொறுப்பு.. :(:D

அந்த நாட்டுக்கொடிகளை அவர்கள் பிடிக்கின்றார்கள். அவர்களுக்கு நாடு இருக்கின்றது பிடிக்கின்றார்கள். அவர்கள் தேசத்திற்கான கொடி அது.

நீ்ங்கள் தமிழ் மொழிக்கு கொடிபிடிக்கிறதுக்கும் அவர்கள் தங்கள் தேசத்தின் கொடியை பிடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கின்றது

புலிக்கொடியை தமிழ்மொழி பேசுகின்றவர்களின் எத்தனைபேர் தமது கொடியாக ஏற்கின்றனர்? புலிகளால் அகதிகளாக்கப்பட்ட தமிழ்பேசும் இஸ்லாமியருக்கு தமது மொழிக்கொடி புலிக்கொடியா?

இஸ்லாமியரிடம் அப்புறம் வருவோம்.. கீழே உள்ளதை எழுதியது நீங்கள்தான்..

பூர்வீக நிலத்தை விட்டு வெறொருவனின் நிலத்தில் கொடியை தூக்கிப்பிடிப்பதால் 0 என்கிற பெறுமானத்தில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது.

இதற்குத்தான் நான் பதில் எழுதினேன்.. பிரியோசனம் இல்லாத வேலையை ஏன் செய்கிறார்கள் எனக்கேட்டு..

உண்மை என்னவென்றால் இப்போதுள்ள காலகட்டத்தில் தமிழரின் புலிக்கொடியை யாராவது தூக்கிப்பிடித்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்றுதான் பார்க்கிறார்கள். இதுதான் மாற்றம்.

அந்த நாட்டுக்கொடிகளை அவர்கள் பிடிக்கின்றார்கள். அவர்களுக்கு நாடு இருக்கின்றது பிடிக்கின்றார்கள். அவர்கள் தேசத்திற்கான கொடி அது.

நீ்ங்கள் தமிழ் மொழிக்கு கொடிபிடிக்கிறதுக்கும் அவர்கள் தங்கள் தேசத்தின் கொடியை பிடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கின்றது

புலிக்கொடியை தமிழ்மொழி பேசுகின்றவர்களின் எத்தனைபேர் தமது கொடியாக ஏற்கின்றனர்? புலிகளால் அகதிகளாக்கப்பட்ட தமிழ்பேசும் இஸ்லாமியருக்கு தமது மொழிக்கொடி புலிக்கொடியா?

தவறு .......மிக்கத்தவறு.... தமிழ் பேசுபவர்கள் புலிக்கொடியை ஏற்கவேணும் என்னும் அவசியமில்லை சார் .........தமிழனாய் பிறந்ததாலும் தன்மானத்துடன் வாழுபவன் எத்தனை பேர் புலிக்கொடியை ஏற்கிறார்கள் என்று கேட்கணும்  சார் .. :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.