Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்.. அதியசமோ, ஆகாசமோ இல்லை. இனப்பெருக்கத்திற்கான இயற்கையின் இயந்திரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

penguin.jpg

பெண்ணே

கண்ணே

கனியே

கனி அமுதே

கட்டி அணைக்க"வா"

கவ்விக் கொள்ள"வா"

கருணை கொண்ட"வா"

கண் காட்ட"வா"..!

பாசைகள் பலவிதம்

பரிமாறிட

கற்பனை பொங்க

கழிவிரக்கம் தொடங்க

சிந்தை மகிழ

சரசம் தவ்வ

சரீரம் பிணைய

சக்தி பீறிட

பாய்ச்சல் நிகழ்ந்திட

ஆடி அடங்கும்

அகிலத் தொடையில்

அடங்கிடும்

அவன் இனவெறி..!

கன்னி அவளும்

கலவி கண்டு

தேவை முடித்து

சேவை தந்து

அயர்ந்தாள்..

உருகி ஓடும்

திரவங்கள் கலந்திட

முந்தி ஓடும்

ஒற்றை விந்தின்

வெற்றியில்

உயிர் ஒன்றை

உருவாக்கும்

இயற்கையின்..

இயந்திரமாய்

முட்டை தந்து..!

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கியாச்சா................மாத நடுப்பகுதிதானே அலுவலக வேலைகளும் குறைவுதானே.கொல்லுபாட்டுக்கு குறைவிருக்காது 

  • கருத்துக்கள உறவுகள்
சிந்தை மகிழ சரசம் தவ்வ சரீரம் பிணைய சக்தி பீறிட
வேண்டும் இந்த சுகம் மனிதன் வாழ்ந்திட....... :D

நெடுக்ஸ் நீங்கள் சொன்னதன்படி பார்த்தால்....  நீங்களும் அப்படிப்பட்ட ஒரு  இயந்திரத்தின் தயாரிப்புதான். மறந்துவிட வேண்டாம். :rolleyes:

உங்கள் அன்னையை நீங்கள் உண்மையிலேயே மதிப்பவராய் இருந்தால்.... பெண்மையை நீங்கள் மதித்தே ஆகவேண்டும்.

கண்ணே கலைமானே என்றெல்லாம் புகழவேண்டிய அவசியமில்லை. ஆகக்குறைந்தது....ஒரு நல்ல  படைப்பாளியாக,  இப்படியான வார்த்தைகளை  பாவிக்கவேண்டாம் என்பது என் அன்பான வேண்டுகோள்! :)

நெடுக்ஸ் பெண்கள் இயந்திரம் என்றால் அதக்கான எரிபொருள் ஆண்களா ................................   ஒன்றுமே   புரிய வில்லை     என்றாலும்

நெடுக்ஸ் பெண்கள் இயந்திரம் என்றால் அதக்கான எரிபொருள் ஆண்களா ................................   ஒன்றுமே   புரிய வில்லை     என்றாலும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நீங்கள் சொன்னதன்படி பார்த்தால்....  நீங்களும் அப்படிப்பட்ட ஒரு  இயந்திரத்தின் தயாரிப்புதான். மறந்துவிட வேண்டாம். :rolleyes:

உங்கள் அன்னையை நீங்கள் உண்மையிலேயே மதிப்பவராய் இருந்தால்.... பெண்மையை நீங்கள் மதித்தே ஆகவேண்டும்.

கண்ணே கலைமானே என்றெல்லாம் புகழவேண்டிய அவசியமில்லை. ஆகக்குறைந்தது....ஒரு நல்ல  படைப்பாளியாக,  இப்படியான வார்த்தைகளை  பாவிக்கவேண்டாம் என்பது என் அன்பான வேண்டுகோள்! :)

நீங்கள் சமூகத்தளத்தில் இருந்து பெண்களைப் பார்க்கிறீங்க. இந்த ஆக்கம் சமூகம் கலந்த உயிரியல் தளத்தில் இருந்து பார்க்கிறது. ஆரம்பத்தில் சமூகத்தின் பார்வையில்... கண்ணாக.. கனியாக.. அமுதாகத் தெரிவது.. இயற்கையில்..உயிரியலில் என்னவாக அமைகிறது என்பது தான் படைப்பின் அர்த்தமே..!

நாங்களும் சமூகத்தளத்திற்கு இறங்கிட்டா... பெண்களை மதிக்கவே செய்கிறோம். உயிரியல் தளத்தில் நின்றால்.. ஒரு இயற்கையின் இயந்திரமாகத்தான் காண முடிகிறது. உயிரியலில் ஆண்களும் அப்படித்தான்..! :):icon_idea:

கருத்துப் பகிர்ந்து கொண்ட.. பெருமாள்.. புத்தன்.. கவிதை மற்றும் லண்டன் ரஞ்சன் எல்லோருக்கும் நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

சமூகம் சார்ந்த உயிரியல் தளத்தில் பெண்களின் பங்கு
அம்புட்டுத்தானா அல்லது இன்னும் இருக்கா
அல்லது உங்களால் இப்படித்தான் வடிக்க முடியுமா
கவிதையை  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதனைப் பொறுத்த வரை.. சமூகத்தளத்தில் தான் பெண்கள் பற்றிய அபரிமிதமான கருத்துக்கள் கற்பனைகள்.. உலாவ விடப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தான்.. ஆண் - பெண் உறவுகளும் விபரிக்கப்படுகின்றன. ஆனால்..  உயிரியலைப் பொறுத்த வரை.. எல்லாமே biological machine தான்..!  அது எந்த ஆண் - பெண் உயிரினமாக இருந்தாலும் அவற்றின் அடிப்படை நோக்கம் ஒன்று தான். அது இனப்பெருக்கம்..! :):icon_idea:

ஆக சமூகத்தளத்தின் அறிவியலுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில் அறிவியல் சார்ந்த உயிரியலை நோக்க முடியாது..! உயிரியல் அடிப்படையில் நோக்கின் சமூக அடிப்படைகள் பல ஆட்டம் கண்டும் விடும்..! இரண்டையும் கலந்து மொழுகி.. நடந்து கொண்டிருப்பதே இன்றைய மனித வாழ்க்கை..! :icon_idea:

இதேபோலத்தான் தமிழனது சைவ சமயமும்... :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சமயம் தானே சோழி அண்ணா. சமயம் என்பதே சமயம் பார்த்து மாறுவதும் சொல்வதும் தானே..! :)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களோடு நான் சண்டை போட வர இல்லை...ஆனால் ஒரு ஆணையோ,பெண்ணையோ தாய் என்ற ஒரு பெண்ணால் மட்டுமே பெற்றுகொள்ள முடியும்....நீங்களும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து வந்தவர் தானே நெடுக் அண்ணா..பெண் என்றால் அசிங்கமாக பார்க்காதீர்கள்.எழுதி இருப்பது பெண்களைப் பற்றி...ஆனால் கவிதைக்கு படம் ஐந்தறிவு ஜீவன்கள்..பெண்களையும் அதற்குள் அடக்கியாச்சு போல..

உலகத்தில் தங்கள் உணர்வுகளை ஒதுக்கி மற்றவர்கள் வாழ உழைத்தவர்களையும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்...உதாரணத்திற்கு எத்தனையோ பெண்களை எடுத்துக்கொள்ளலாம்..அன்னை தெரேசா,கல்பனா சால்வா,நிவேதிதா,ஏங்கள் எங்கள் நாட்டில் தங்கம்மா அப்பாக்குட்டி...இவர்களும் கலவி,காதல்,கத்தரிக்காய் என்றா திரிந்தார்கள்.....???இவர்களும் பெண்கள் தான் அண்ண...ஆண்கள் அல்ல...

அல்லது பெண்களது வாழ்க்கை நீங்கள் எழுதி இருப்பதோடு மட்டுமே முடிந்து விடுகிறதா இல்லயே...என்ன இப்படி அடிக்கடி பெண்களை தாழ்த்திக்கொள்வதனால் உங்களோடு நல்ல நட்புக்களாக,அன்பாக பழகும் பெண்களின் மனதில் நல்ல எண்ணமற்று செய்கிறீர்கள் அவ்வளது தான்.

கூர்ப்பு என்பது எல்லா மிருக இனத்திலும் உயிர்வாழும் தகவை அதிகரிக்க ஏற்படுத்தும் மாற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் கூர்ப்பு அப்படி ஒரு நோக்கமுடைய மாற்றம் இல்லை. அது உயிர் உள்ளதல்ல எதாவது நோக்கத்துடன் செயல்ப்பட. கூர்ப்பு என்ற சொல்லை விளங்க சூழ் நிலையையும், விலங்கையும் சேர்த்து ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். விலங்கு தனது இயற்கையாக மாறுகிறது. சூழ்நிலை, மாறும் அல்லது மாறாமலும் இருக்கலாம். இதில் சூழ்நிலக்கு ஏற்றபடியகாக மறிய உயிரினம் வாழும்; மற்றவை அழியும். 

இப்படி ஒரு சின்ன மிக எளிமையான உதாரணத்தை பாருங்கள். ஒரு கிராமத்தில் ஒரு சாப்பாட்டுக்கடையில் மட்டும்தான் உணவு இருக்கிறது. அவர்களின் சாப்பாட்டின் விலை $8. அப்போது எட்டு டொலருக்கு கீழே வைத்திருப்பவர்கள் பட்டிணில் இறப்பார்கள். எட்டு டொலருக்கு மேலே வைத்திருப்பவர்கள் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்வார்கள். 5 டொலர் வைத்திருந்தவன் தப்ப போவதில்லை. எட்டு டொலர் உள்ளவனும் தப்பிவிடுகிறான். 10 டொலர் உள்ளவனும் தப்புவது மாதிரியே படுகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டியது என்ன என்றால் சூழ்நிலைக்கு தேவையானதை விட தகவுள்ள மிருகங்கள் இருக்கின்றன. இதையும் கூட பிழையாக விளங்கக்ககூடாது. அதாவது இது சிங்கம் யானை அளவு பருமன் உள்ள் மிருகமாக கனவு காண்பதல்ல. அப்படியான மிருகம் விரைவில் தனது உணவு முதலிடத்தை அழித்து தன்னையும் அழித்துவிடும். 20 மணித்தியாலம் தூங்கும் சிங்கங்கள் தமது முதலிடம் நன்றாக செழித்து வளரத்தக்க பண்புகளையும் கொண்டிருக்கின்றன. அதனால்த்தான் அவை யானை அளவாக இல்லை.

ஆனல் இன்றைய மனிதனில் காணப்படும் ஆற்றல், கலை ஆர்வம், போன்ற சில இயல்புகளை எட்டு டொலர் மட்டும் சாப்பாடுக்கு வைத்திருப்பவர்களாக காண முடியாது. மனிதர்கள் 8$ மட்டும் தேவையாக இருக்க சிலர் மில்லியன்டொடலரை கொண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு எள்வளவு முயன்றும் ஐன்ஸ்டீனின் கணிதத்தை விளங்கும் ஆற்றலை எந்த விதத்திலும் கூர்ப்பு தேவையான இயல்பாக கருதமுடியாது. அது மனித குலத்தில் காணப்படும் மித மிஞ்சிய பணம்.  இதனால் குலம் வாழும் தகவு அதிகரிக்கவோ குறைய இல்லை. இதே போலத்தான் மனித குலத்தில் காணப்படும் இனக்கவர்ச்சி இனப்பெருக்கத்தை தாண்டி செல்கிறது என்பதும் உண்மை. இதனால்தான் மனிதரில் 28 வகையான தன்னினக் கவர்சியும் காண்ப்படுகிறது என்கிறார்கள் மருத்துவ ஆராச்சியில். இது இருப்பதால் மனித இனத்தின் வாழும் தகவு தாக்கப்படவில்லை.  

மனிதன் இன்றைய நாளில், தனது மூளையால் தன்னையும் உலகையும் அழிக்கவும் ஆக்கவும் முடிந்தவனாக இருக்கும் போது, தமது பௌதிக உடல் அமைப்பு வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்திருக்கும் கூர்ப்புடன் இணைந்து செல்லும் மறைய வில்ங்களுடன்  இதை சேர்த்துப்படிப்பது உபயோகமற்ற ஒப்புவமை.

எனவே உலகத்தின் மிகவும் ஆச்சரியமான விலங்காக படைக்கப்படிருக்கும் பெண் இனம் தனிய இனபெருக்கத்துக்கா மட்டும்தான் அப்படி இருக்கிறது என்பது உண்மையல்ல. இது எட்டு டொலர் மட்டுமே தேவைப்படும் போது இந்த இனம் கத்தை கதையாக கடதாசி தாள்களை அடுக்கிவைத்திருக்கிறது. இதில் மிகுதியானவை பார்த்து ரசிப்பதற்கு, ஆச்சாரியப்படுவதற்கு, புகழுவதற்கு  மட்டுமே. அதில் வாழ்ந்து பார்த்துப் பலன் அடைய ஒன்றும் இல்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களோடு நான் சண்டை போட வர இல்லை...ஆனால் ஒரு ஆணையோ,பெண்ணையோ தாய் என்ற ஒரு பெண்ணால் மட்டுமே பெற்றுகொள்ள முடியும்....நீங்களும் ஒரு தாயின் வயிற்றிலிருந்து வந்தவர் தானே நெடுக் அண்ணா..பெண் என்றால் அசிங்கமாக பார்க்காதீர்கள்.எழுதி இருப்பது பெண்களைப் பற்றி...ஆனால் கவிதைக்கு படம் ஐந்தறிவு ஜீவன்கள்..பெண்களையும் அதற்குள் அடக்கியாச்சு போல..

உலகத்தில் தங்கள் உணர்வுகளை ஒதுக்கி மற்றவர்கள் வாழ உழைத்தவர்களையும் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்...உதாரணத்திற்கு எத்தனையோ பெண்களை எடுத்துக்கொள்ளலாம்..அன்னை தெரேசா,கல்பனா சால்வா,நிவேதிதா,ஏங்கள் எங்கள் நாட்டில் தங்கம்மா அப்பாக்குட்டி...இவர்களும் கலவி,காதல்,கத்தரிக்காய் என்றா திரிந்தார்கள்.....???இவர்களும் பெண்கள் தான் அண்ண...ஆண்கள் அல்ல...

அல்லது பெண்களது வாழ்க்கை நீங்கள் எழுதி இருப்பதோடு மட்டுமே முடிந்து விடுகிறதா இல்லயே...என்ன இப்படி அடிக்கடி பெண்களை தாழ்த்திக்கொள்வதனால் உங்களோடு நல்ல நட்புக்களாக,அன்பாக பழகும் பெண்களின் மனதில் நல்ல எண்ணமற்று செய்கிறீர்கள் அவ்வளது தான்.

நாங்க முன்னரே சொன்னது போல.. நீங்கள் எல்லோரும் சமூகத்தளத்தில் மட்டும் நின்று கொண்டு.. பெண் என்பது இது தான் என்று காட்ட விளைகிறீர்கள்.

உங்களிடம் ஒரேயொரு கேள்வி.. மனிதப் பெண்ணாக இருக்கட்டும்.. எந்த உயிரினத்தில் (மரங்களிலும் கூட) என்றாலும்.. பெண் என்பது எதனால்.. பெண்ணென்று அழைக்கப்படுகிறது..????! அதற்கான உயிரியல் பார்வை.. காரணி என்ன..????????! இதற்கு விடை தெரிந்தால்.. இந்த படைப்பின் பொருள் எளிதில் புரிந்து விடும்..!

இப்படைப்பு மனிதப் பெண்களுக்கென்றல்ல... பொதுவாக பெண் என்பதை நோக்கியது..! :):icon_idea:

மல்லையூரனிடமும் இதே கேள்விக்குத்தான் பதில் தேட விளைகிறோம்..!! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கரின் 'பெண்மை' பற்றிய கவிதை 'வெரி சிம்பிளிஸ்டிக் ஆக உள்ளது! :D

இயற்கை பெண்ணை இனப்பெருக்கதிற்காக மட்டும் மட்டுமென்று உருவாக்கவில்லை!

அவ்வாறு இருந்தால், தனியாகப் பெண்களை மட்டுமே 'இயற்கை' உருவாக்கியிருக்கலாம்!

ஆணைத் தனியாக உருவாக்க வேண்டிய தேவை, இயற்கைக்கு ஏன் ஏற்பட்டது?

சில மீன் வகைகளையும், சில பூக்களையும், சில விலங்குகளையும்,  தேவைக்கு ஏற்ப ஆணாகவும், பெண்ணாகவும் மாறக்கூடிய வகையில் வடிவமைத்துள்ள இயற்கைக்கு, இது ஒன்றும் பெரிய விசயமாக இருந்திருக்காது!

கடல் குதிரைகளில் ஆண்கள் தான் கருக்களைச் சுமக்கின்றன! இனப்பெருக்கம் என்பது 'உயிரிகளின்' ஒரு குணாதிசயமாகும்! கீழ்நிலை உயிரிகள் 'பிளவடைதல்'மூலம் பெருகுகின்றன!ஆண், பெண் பேதங்கள், இங்கே இல்லைத் தானே, நெடுக்கர்! எனவே ஆணையும், பெண்ணையும் வேறு, வேறாக இயற்கை உருவாகியதற்கு மிகவும் முக்கிய காரணம் இருக்க வேண்டும்!

அத்துடன் இனப்பெருக்கம் மட்டுமே இயற்கையின் நோக்கமல்ல! சிங்கம் போன்ற மிருகங்கள், புணர்வில் ஈடுபடும் நோக்கத்தோடு, ஏற்கெனவே பிறந்த குட்டிகளை, அடித்துக் கொல்வதும் உண்டு  பூனை சில குட்டிகளைக் கொன்று தின்று விடுகின்றது! கங்காருக்கள் கருப்பையில் வளரும் குட்டிகளுக்குப் பாலூட்டாமல், சிலவேளைகளில் நிறுத்தி, அந்தக் குட்டிகளைக் கொல்வதும் உண்டு!

எனவே பெண்ணென்பவள் தனியே இனத்தைப் பெருக்குவதற்காக மட்டுமல்ல! அதற்கும் மேலே, இன்னுமொரு தேவைக்காகப் படைக்கப் பட்டிருக்கிறாள்! 

கவிதை நன்றாக உள்ளது! ஆனாலும் வெறும் 'ட்றை' ரேஸ்ட் ஆக உள்ளது! :o

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணை நம்பியே ஆணினம்  இருக்கிறது. இள வயதில் என்னதான் முறுக்கிக் கொண்டு திரிந்தாலும் மீசை நரைக்க வெளிக்கிட ஒவ்வொன்றுக்கும் பெண்ணை எதிர்பார்த்து, அந்த வயதிலும் இளம் பெண்களைக் கண்டால் ஆவென்று பார்த்து சுயநலமாய் வாழ்பவன் தான் ஆண். பெண் உங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சுதந்திரமாக வாழ எண்ணினால் ஆண்களின் நிலை எப்படி இருக்கும் என்று கற்பனையில் கூட உங்களால் பார்க்க முடியாது என்பதே உண்மை. என்ன உங்களைப் போல ஒன்றிரண்டு வீம்பு பிடிச்சு கடைசியில ஒன்றுமில்லாமல் நாதியற்றுப் போய் இருக்கவும், பெண் தான் வந்து உதவுவாள் தாதியாக.

பொதுவாகத்தானே எழுதியிருக்கிறேன் என்று பெண்களையே இழிவுபடுத்தி எழுதியுள்ளீர்கள் நெடுக்ஸ். நீங்கள் திருந்தவே மாட்டியள். :(

நாங்க முன்னரே சொன்னது போல.. நீங்கள் எல்லோரும் சமூகத்தளத்தில் மட்டும் நின்று கொண்டு.. பெண் என்பது இது தான் என்று காட்ட விளைகிறீர்கள்.

உங்களிடம் ஒரேயொரு கேள்வி.. மனிதப் பெண்ணாக இருக்கட்டும்.. எந்த உயிரினத்தில் (மரங்களிலும் கூட) என்றாலும்.. பெண் என்பது எதனால்.. பெண்ணென்று அழைக்கப்படுகிறது..????! அதற்கான உயிரியல் பார்வை.. காரணி என்ன..????????! இதற்கு விடை தெரிந்தால்.. இந்த படைப்பின் பொருள் எளிதில் புரிந்து விடும்..!

இப்படைப்பு மனிதப் பெண்களுக்கென்றல்ல... பொதுவாக பெண் என்பதை நோக்கியது..! :):icon_idea:
 
மல்லையூரனிடமும் இதே கேள்விக்குத்தான் பதில் தேட விளைகிறோம்..!! :)

நீங்கள் சமூகத் தளத்தில் மட்டும் நின்று எழுதியிருந்தால் முதல் இரு பந்திகளும் தேவையே இல்லையே நெடுக்ஸ்
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் அண்ணா.. உயர் விலங்குகளிலும் தாவரங்களிலும் ஆண் - பெண் என்றிருக்கக் காரணம்.. மரபணுக்கள் சார்ந்து.. கூடிய மாறல்களுக்கு வழி சமைப்பதும்.. அதன் மூலம்.. சூழலுக்கு ஏற்ப வினைத்திறன் உள்ள இளவல்களை தோற்றிவிப்பதுமே..! மீண்டும்.. இனப்பெருக்கமே முன்னுக்கு வந்து நிற்கிறது.

நீங்கள் இனங்காட்டும்.. அந்த இன்னுமொரு தேவை என்பதற்குள் அடங்குவது யாதோ..???????! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணை நம்பியே ஆணினம்  இருக்கிறது. இள வயதில் என்னதான் முறுக்கிக் கொண்டு திரிந்தாலும் மீசை நரைக்க வெளிக்கிட ஒவ்வொன்றுக்கும் பெண்ணை எதிர்பார்த்து, அந்த வயதிலும் இளம் பெண்களைக் கண்டால் ஆவென்று பார்த்து சுயநலமாய் வாழ்பவன் தான் ஆண். பெண் உங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சுதந்திரமாக வாழ எண்ணினால் ஆண்களின் நிலை எப்படி இருக்கும் என்று கற்பனையில் கூட உங்களால் பார்க்க முடியாது என்பதே உண்மை. என்ன உங்களைப் போல ஒன்றிரண்டு வீம்பு பிடிச்சு கடைசியில ஒன்றுமில்லாமல் நாதியற்றுப் போய் இருக்கவும், பெண் தான் வந்து உதவுவாள் தாதியாக.

பொதுவாகத்தானே எழுதியிருக்கிறேன் என்று பெண்களையே இழிவுபடுத்தி எழுதியுள்ளீர்கள் நெடுக்ஸ். நீங்கள் திருந்தவே மாட்டியள். :(

நீங்கள் சமூகத் தளத்தில் மட்டும் நின்று எழுதியிருந்தால் முதல் இரு பந்திகளும் தேவையே இல்லையே நெடுக்ஸ்

இந்த உலகில் யாரை நம்பியும் யாரும் இல்லை. ஒவ்வொன்றும் தனியன்களாகத் தோன்றி தனியன்களாகவே வாழ்ந்து வருகின்றன. இனப்பெருக்க மட்டும் கூடுகின்றன.. பின்னர் பிரிகின்றன. இதுதான் இந்த பூமிப்பந்தில் இயற்கையில் உயிரியலுக்கான.. வாழ்வியல் நியதி.

நாங்க இதுக்குள்ள சமூகத்தளத்தைத் திணிக்கப் போய் தான் பல சில்லெட்டுப்புக்களோட சக்கரமாச் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

முட்டை தருவது.. அல்லது தரத்தக்கது எல்லாம்.. பெண்ணாகிறது... உயிரியலின் படி. வேறு எந்த வகையிலும் அது பெண்ணாவதில்லை. ஆக மீண்டும் இனப்பெருக்கமே அங்கு பெண்ணை அடையாளப்படுத்துகிறது. பூவில் கூட பெண் பாகம் என்கிறோம்.. எங்கு முட்டை உள்ளதோ அது.. பெண்ணாகிறது..! பனையில் கூட பெண் பனை எங்கிறோம். மீண்டும் எங்கே முட்டை உள்ளதோ அதுவே பெண்ணாகிறது.

எனிப் போய் ஆக்கத்தின் கடைசி வரையை வாசியுங்கள்...! வாசிச்சிட்டு வந்து.. இது உங்களைப் போன்ற பெண்களையா மையப்படுத்தி இருக்குன்னு யோசியுங்க..! முடிந்தால்..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதை பாராட்டும்படியாக இல்லை நெடுக்ஸ். எனது தாயை தாரத்தை, உடன்பிறந்தாள்களை கேவலப்படுத்தியிருக்கிறீர்கள்.

கலவி பற்றி குறிப்பிடுகிறீர்கள், இரண்டு உடல்கள் இணைவதல்ல இரண்டு உயிர்கள் அன்பால் இணைவதுதான் கலவி. ஒரு பெண்ணின் உயிரை வென்று அவளுடன் கலவிசெய்து பாருங்கள் வாழ்க்கையில் வேறெந்தப் பெண்ணையும் நினைத்துக்கூடப் பார்க்கமாட்டீர்கள்.

இறுதியாக கல்வியோ அறிவியல் உண்மைகளோ கணித நிறுவல்களோ நடைமுறை வாழ்க்கைக்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. அய்ந்து அறிவுள்ள விலங்குப் பெண்ணினத்தை ஆறறிவுள்ள மனிதப் பெண்ணினத்துக்கு ஒப்பிடுவது எல்லாச் சமயங்களிலும் சரிவராது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாலி நீங்களும் சமூக தள சித்தாந்தங்களுக்குள் கட்டுண்டு கிடந்து பெண் என்பதைப் பார்க்கிறீர்கள். அதனை கடந்து உயிரியல் ரீதியா பார்த்தால்.. பெண்ணெல்லாம் ஒன்று தான். அதுதான் முட்டை தருவது..! :)

  • கருத்துக்கள உறவுகள்

பெண்.. அதியசமோ, ஆகாசமோ இல்லை. இனப்பெருக்கத்திற்கான இயற்கையின் இயந்திரம்

நன்றி  கவிதைக்கு நெடுக்கு

ஆனால்

பெண்  என்றால்  எனக்கு ஞாபகம் வருவது எனது தாய்தான்.

அந்தவகையில்

இந்த  திரியின்  வார்த்தைகள்

உன் தாய்.. அதியசமோ, ஆகாசமோ இல்லை. இனப்பெருக்கத்திற்கான இயற்கையின் இயந்திரம் என்றுதான் எனக்கு சொல்கிறது.

ஒரு போதும்  என் தாய்க்கு அவமானம் ஏதும் வருவதை நான் அனுமதித்ததில்லை.

இதிலும் அதுவே எனது நிலைப்பாடு.

கவிதை, புங்கையூரான் சொன்ன தாவரங்களை பற்றி கவனத்தில் சரியாக கொள்ளவில்லை.  அதன் "வெறுமையாமையா, அல்லது ஏமாற்றமாக" சித்தரிக்கப்படும் முடிவு, பெரும்பாலும் உயரின விலங்குகளுக்கு மட்டும் தான் பொருந்துகிறது. இவற்றில்தான் மனம் தொழில் படுகிறது. பாடலின் ஆரம்பம் நிச்சயமாக மனிதக் காதலை சுட்டுகிறது. எனவே நான் சொல்வது, யாயினி சொல்லவது எல்லாம் பொருந்தும்.

கீழின விலங்கான மண்புழுவில் ஆண்பகுதியும், பெண்பகுதியும் சேர்ந்து இருக்கிறது. இது பல தாவரங்களுக்கும் பொருந்தும். தாவரங்களில் இனம் பெருக்கம் நடக்க நிச்சயமாக ஆணும் பெண்ணும் காணது . கட்டாயம் கதலில் தூது போகும் தோழிகளான இயறகையின் மற்ற அமைப்புகள் இல்லாவிட்டால் மகரந்த சேர்க்கை, விதை பரம்பல் நடை பெறுவதில்லை.

இனப்பெருக்கத்தை கவிதை கருக்கட்டலாக மட்டும் காட்டுகிறது. ஆனால் உயிரின ரீதியில் இது சிக்கலான நடை முறை. கடலில் விழுந்த தேங்காய் மறைய தீவை வெற்றிகரமாக அடைந்தால்த்தால் தான் அது முளைவிட்டு உயிராக பர்ணமிக்க முடியும். முலையூட்டிகளில் தேங்காய் அடுத்த தீவை அடைந்து முளைவிட்டும் காணாது. பாலூட்டும், காலம் கடந்து தாமாக உணவு தேடும் ஆற்றலை குட்டிகளுக்கு தாய் மிருகம் சேர்த்து விடும் வரை தாயின் இனப்பெருக்க பங்கு தொடர்கிறது.

சிங்கம், யானை, எருமை மாதிரி உயரின விலங்குகளில் மனம் தெளிவாக தொழில் படுவத்தால் (கறையான் எறும்பு போல அல்லாமல்) அவைகள் சமூக விலங்குகளாக இனப்பெருக்கத்துக்கு மட்டும் இணைவனவாக அல்லாமல் மனத்தால் இணைகின்றன. மனிதரில் இது ஒற்றை வரிகளில் சரியாக வரைவிலக்கணப்படுத்தக்கூடுமானதல்லாதா பண்பாக மாறுகிறது. நிச்சயமாக மனிதரில் இருக்கும் ஒன்றுகூடல் இயல்பு எந்த விலங்கினத்தாலும் உதாரணம் கட்டி விளங்கப்படுத்த முடியாதது. பல மனிதர்கள் தனது அன்றைய ஆபிஸ் வேலையை சரியாமுடிப்பதில் அளவுகடந்த திருப்தி அடைகிறார்கள். இப்படியான திருப்தி, யாயினி சொல்லும் சேவை நோக்கம் கொண்ட திருப்திகளை கூட தாண்டி சென்று எந்த ஒரு நோக்க்கமுமே இல்லாத திருப்தியாக காணப்படுகிறது. 

மேலும் மனிதரில் கடவுள் என்ற பாகம் இணைந்திருக்கு. அதை முற்றாக விஞ்ஞானம் பொய் என்று நிரூபிக்க இல்லைகங்கு காதல், பக்தியாக, அன்பாக, பாசமாக பல வடிவங்களில் எடுத்துரைக்கப்படுகிறது.

உங்களிடம் ஒரு பிளா இருந்தால் அதை வைத்து நீங்கள் போதைக்கு கள்ளுக்குடிக்க முடியும், ரசனைக்கு கூழ் குடிக்க முடியும், பசிக்கு கஞ்சி குடிக்க முடியும். உயரின விலங்குகளில் காதல் பல நோக்கங்களை பூர்த்தி செய்கிறது. மேலும் இனபெருக்கம் ஆண் பெண் உறவில்லாமல் செய்துகொள்ள முடியும். இதில் கவிதை எங்கே நிற்கிறது என்பது புரிந்து கொள்ள சிக்கலான விடையம். கவிதை முடிச்சு போடும் இரண்டும் கவிதை தொடாத பல இடங்களிலும் காணப்படுகிறது. கவிதை தான் மட்டும்தான்  "அவை இரண்டு எப்போதும் ஒன்றாகவேதான் இருப்பதாக" காண்கிறது.

கவிதை மனிதக் காதலில் ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் மிக சில வரிகளில், மிக அவசரமாக ஆண் பெண், தாவரம், விலங்கு பாகு பாடு இல்லாத வைரஸ் வரைக்கும் உள்ள இனப்பெங்க்கத்தில் காலை வைக்கிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்.. அதியசமோ, ஆகாசமோ இல்லை. இனப்பெருக்கத்திற்கான இயற்கையின் இயந்திரம்

நன்றி  கவிதைக்கு நெடுக்கு

ஆனால்

பெண்  என்றால்  எனக்கு ஞாபகம் வருவது எனது தாய்தான்.

அந்தவகையில்

இந்த  திரியின்  வார்த்தைகள்

உன் தாய்.. அதியசமோ, ஆகாசமோ இல்லை. இனப்பெருக்கத்திற்கான இயற்கையின் இயந்திரம் என்றுதான் எனக்கு சொல்கிறது.

ஒரு போதும்  என் தாய்க்கு அவமானம் ஏதும் வருவதை நான் அனுமதித்ததில்லை.

இதிலும் அதுவே எனது நிலைப்பாடு.

சமூகத்தளத்தில் அம்மா. உயிரியலின் முன் முட்டை இடும் பெண். வைத்தியம் பார்க்கும் போது.. அம்மான்னு பார்ப்பார்ங்களா.. பெண்ணுன்னு பார்ப்பாங்களா..???! நாங்க மனிதப் பெண்களியே எத்தனையோ சமூக வகைப்படுத்தல்களைக் காண்கிறோம். ஆனால் உயிரியலில் ஒரே வகை.. பெண் தான். :):icon_idea:

கவிதை மனிதக் காதலில் ஆரம்பிக்கிறது. அதன் பின்னர் மிக சில வரிகளில், மிக அவசரமாக ஆண் பெண், தாவரம், விலங்கு பாகு பாடு இல்லாத வைரஸ் வரைக்கும் உள்ள இனப்பெங்க்கத்தில் காலை வைக்கிறது. 

கவிதை.. சமூகத்தளத்தில் ஆரம்பித்து உயிரியல் தளத்தில் நிறைவுறுகிறது.

என்ன தான் ஒரே தாவரத்தில் ஆணும் பெண்ணும் இருந்தாலும்.. பெண் என்பதை முட்டை தருவதை வைச்சுத் தானே வகைப்படுத்திறம்..! இதைத் தானே சொல்லி இருக்கம். பெண் என்பது இயற்கையின் இனப்பெருக்கத்திற்குரிய (முட்டை தரும்) இயந்திரம்..! :lol::icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆம் சில உயிரினங்களில் இனக்கலப்பில்லாத உடற்துண்டு விருத்தி இருந்தாலும்.. அதன் ஆரம்பம்.. முட்டையில் இருந்து அல்லது உடற் கலமே முட்டையாகி திரிந்து வந்த நிலையில் தானே வந்திருக்கும்..??! :)

உதாரணத்திற்கு.. கலங்களின் பிரிவின் போது.. Mother cell and daughter cells என்று தான் சொல்வோம். காரணம்.. அவை பெருக்கலை செய்வதால். ஆகவே தான் குறிப்பிட்டோம்... பெண் என்பது இனப்பெருக்கதிற்கான இயந்திரம் என்று...! அது முட்டை தந்தும் பெருகலாம்.. தானாகவும் பிளவடைந்து பெருகலாம்.

meiosis-and-mitosis-cell-division.jpeg

இங்க கூட அப்பா செல்.. மகன் செல் என்று சொல்லேல்ல..! ஏனோ தெரியல்ல..?! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்வாலி நீங்களும் சமூக தள சித்தாந்தங்களுக்குள் கட்டுண்டு கிடந்து பெண் என்பதைப் பார்க்கிறீர்கள். அதனை கடந்து உயிரியல் ரீதியா பார்த்தால்.. பெண்ணெல்லாம் ஒன்று தான். அதுதான் முட்டை தருவது..! :)

எல்லாவற்றையும் உயிரியல், அறிவியல் அடிப்படையில் ஆராயத்தொடங்கினால் சமுக உட்கட்டமைப்பு என்பதே தகர்த்தெறியப்பட்டுவிடும். பிறகு தாய் - சேய் உறவுகூட அர்த்தமற்றதகப் போய்விடக்கூடும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் உயிரியல், அறிவியல் அடிப்படையில் ஆராயத்தொடங்கினால் சமுக உட்கட்டமைப்பு என்பதே தகர்த்தெறியப்பட்டுவிடும். பிறகு தாய் - சேய் உறவுகூட அர்த்தமற்றதகப் போய்விடக்கூடும். :)

அது உடையாது ஏனெனில் தாய் - தந்தை - சேய் உறவென்பது.. பெரும்பாலான.. பரம்பரை அலகுகளின் நெருக்கத் தொடர்பு சார்ந்து உருவாவது. அதுவும் இயற்கையின் ஒரு இயல்பு தான். உயர் விலங்குகளில் அந்த பாகுபாடு தான் கூர்ப்பை முன்னோக்கி நகர்த்துகிறது..! இயற்கைத் தேர்வுக்கு கூடிய வசதி அளிக்கிறது. :):icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.