Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் சமூகத்தால் புறக்கணிக்கப்பட வேண்டியவர்களா புலம்பெயர்ந்த முன்னாள் போராளிகள் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அந்த போராளிகளாய் இருந்தாலும் சரி ,போராளி இல்லாமல் ஆதரவு கொடுப்போராய் இருந்தாலும் சரி எமது இலட்சியத்தை நோக்கி எத்தனை எத்தனை இடையூறுகள் வந்தாலும் தொடர்ந்து பயனிக்கவேண்டும் .இந்த பயணத்திற்கு எம் அர்ப்பணிப்பையும் ,தியாகத்தையும் எப்பவும் எந்த சந்தர்ப்பத்திலும் வழங்க கூடியவராய் இருக்கவேண்டும் .அதற்கு நாம் தயாராகும் பட்சத்தில் அவை நாம் பதிவிடும் கருத்துக்களில் பிரதிபலிக்கும் .............நன்றிகள் 

நன்றி

  • Replies 50
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தலைப்பை,திரியை ஆரம்பித்தமைக்காக சாந்தி அக்காவுக்கு ஒரு நன்றியை சொல்லிக் கொண்டு விடயத்திற்குப் போவோம்.
 
80/90 களுக்கு முதல் வந்த போராளிகளாக இருக்கட்டும் அல்லது மு.வாய்க்காலில் நின்றுட்டு வந்த போராளிகளாக இருக்கட்டும் புலம் பெயர் நாடுகளில் எப்படி அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்துத் தான் அவர்களை ஏற்க வேண்டுமா அல்லது அல்லது தவிர்க்க வேண்டுமா என்று முடிவு செய்ய வேண்டும்.ஈழத்தில்,தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்கள் [ஒரு சிலரைத் தவிர]80,90 களில் வந்தவர்களும் ஏன் மு.வாய்க்காலில் இருந்து தப்பி வந்தவர்கள் கூட எவ்வளவு கேவலமாக இங்கு நடந்து கொள்கிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறம்.சுபேஸ் சொன்ன மாதிரி எதுவும் இருக்கும் இடத்தில் இருந்தால் தான் சிறப்பு.
 
சாதரணமாக என்னைப் போன்றவர்கள் பிழை செய்தால் என்ட வளர்ப்பு சரியில்லை என்று சொல்லி என்னுடைய பெற்றோரை திட்டுவினம்.ஆனால் இப்படியான ஒரு கட்டுக்கோப்பான அமைப்பில இருந்திட்டு வந்து ஒருவர் பிழை செய்தால் யாரை திட்டுவினம்.இவர்கள் பிழை செய்வதை என்னால் கொஞ்சம் கூட ஏற்க முடியாது.
 
முன்னால் போராளி என்பதற்காக அவர்கள் சொல்வதை, அது தயா அண்ணாவாக இருக்கட்டும் அல்லது உங்கள் அன்புத் தம்பி பகலவனாக இருக்கட்டும் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டும் இல்லைத் தானே!
 
அந்தத் திரியில் நான் கருத்து எழுதியிருந்தேன்.அதில் தயா அண்ணாவைக் காக்க இங்குள்ள சில பெரிய மனிசர்கள் எவ்வளவு கஸ்டப்பட்டார்கள் என்பதையும் பார்த்தேன்.ஆனால் அதில் தயா அண்ணா என்ட போராளியைக் காப்பாற்ற வேண்டும் என்பதை விட தயா அண்ணா ஒரு பழைய உறுப்பினர்கள்,தங்களோடு சேர்ந்து தேசியத்திற்கு ஆதரவாக எழுதுபவர் என்ட முனைப்பே காணப்பட்டது.இப்படி எத்தனையோ திரிகளில் இந்த பெரிய மனிசர்கள் பக்கச் சார்பாக நடந்து கொண்டுள்ளார்கள்.அவர்களுக்கு பிடித்த உறவு,பிடிக்காத உறவொன்றுக்கு கேவலமாக எழுதினால் கண்டும்,காணமல் இருப்பார்கள்....இது போன்ற கண விடயங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.அதுக்கும்,புலிக்கும் சம்மந்தமில்லை என்பது என் கருத்து
 
புலியில் சேர்ந்து போராடப் போகையில் தாங்கள் புலத்திற்கு தப்பி வருவோம் அவர்களை நாங்கள் மதிக்க வேண்டும் அல்லது அவர்கள் கருத்தை ஏற்க வேண்டும் என்று எதிர் பார்த்தா புலியில் சேர்ந்தார்கள் அர்ப்பணிப்புடன் சேர்ந்தவர்கள் இதை எல்லாம் எதிர் பார்க்க மாட்டார்கள்.யாழில் அவர்கள் சொல்வதை மற்றவர்கள் ஏற்கவில்லை,அவர்களுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை.இதனால் யாழை விட்டு ஒதுங்கி விட்டார்கள் என்று சரியான கருத்தில்லை.
 
ஒரு கருத்தை,தங்கள் அனுபவத்தை,உண்மை சொல்வதற்கு எதற்கு பயப்பட வேண்டும்? அவர்கள் சொல்வதை கருத்தாடும் எதிராளி ஏற்க வேண்டும் என்பதை யாழை வாசிக்கும் உறவுகள் வாசித்து எது உண்மை/பொய் என்று பகுத்தறிந்து கொள்வார்கள்.
 
கடைசியாக ஒரு புதுத் திரியில் வந்து தயா அண்ணாவோ அல்லது சாஸ்திரியோ எதாவது பிழையாக எழுதினால் அது பிழை என்று பல பேர் சொல்ல வருவினம்.அவர்கள் தொடர்ந்து யாழில் எழுதும் ஆட்கள் இல்லை.சந்தர்ப்பத்திற்கேற்ப சரி,பிழைகளை சுட்டிக் காட்ட வருவினம்.
 
புலிகள் இருக்கும் போது அவர்கள் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு ஆமாம் போட்டதால் தான் இன்று இந்த நிலை[அதைத் தான் இப்பவும் கொஞ்சப் பேர் யாழில் செய்யினம்].யார் சொல்கிறார்கள் என்று பார்க்காமல் என்ன சொல்கிறார்கள் அது சரியா/பிழையா என்று பார்த்தால் ஒரு பிரச்சனையுமில்லை :)  

ரதி நீங்கள் இங்கு எழுதிய அனைத்தோடும் எனக்கும் உடன்பாடு. மாற்றுக்கருத்தில்லை. தெளிவான கருத்திற்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்களது முழுக்கருத்துடனும் உடன்படுவேன்.

இந்த வரிகள்  இல்லாதவிடத்து..........

முள்ளிவாய்க்காலுக்குப்பின்

இதுவும் ஒரு நடைமுறையாகி  வருகிறது

தனக்குத்தானே துரோகிப்பட்டம்  கொடுத்தபடி தொடங்குவது.

செங்கொடியும் துரோகிப்பட்டம் வழங்கப்பட்டு வாங்கி வைத்திருக்கும் ஒருவர். அதுதான் ஒருக்கா ஞாபகப்படுத்தியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

கொண்ட கொள்கையில் உறுதியுள்ளவர்கள் புகழ்ச்சியையும், புறக்கணிப்பையும் பொருட்படுத்துவதில்லை. பிறரின் அங்கீகாரங்களையும், வசவுகளையும் கண்டுகொள்ளாமல் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

செங்கொடியும் துரோகிப்பட்டம் வழங்கப்பட்டு வாங்கி வைத்திருக்கும் ஒருவர். அதுதான் ஒருக்கா ஞாபகப்படுத்தியிருக்கிறார்.

இதைத்தான்  நான் வேறு ஒரு  இடத்தில் குறிப்பிட்டேன்

இவர்களுக்கு மட்டுமே  பல உண்மைகள் தெரியும்

இது போன்ற  பொது  இடங்களில் வாதிட்டு ஆளை  ஆள் போட்டுத்தாக்குவதைவிட

இவர்கள் முடிந்தவரை தங்களுக்குள்  சந்தித்து உண்மையை  உணர்த்தவேண்டும்.

ஒவ்வொருவரையும்  அவர்கள் முதலில் புரிந்து கொள்ளவேண்டும்.

பின்னர் மக்களுக்கு அதை சொல்லணும்.

அதை

உண்மையில் போராட்டத்தின் மேலும்

மக்கள் மீதும் பாசமிருந்தால்   செய்யணும்.

அதைவிடுத்து

ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு பெயரில் வரக்கூடிய  இது   போன்ற கருத்துக்களங்களில்   வந்து தம்மைப்போராளிகள் என்று சொல்லி  ஆளை  ஆள் குற்றம் சொல்வதும் பகையை  வளர்ப்பதும்

எமக்கு மட்டுமல்ல  எதிரிக்கே நகைப்புக்கிடமானது மட்டுமல்ல

போராளிகள்   என்றாலே வெறுக்கும் அளவுக்கு கொண்டு   போய்விடக்கூடியது.

அத்துடன்  இடையில் இருப்போர்

இந்த இடைவெளியைப்பாவித்து

தாமும் சூழ்ச்சி  செய்து இதற்குள்  ஒவ்வொரு பெயர்களில் புகுந்து விளையாட  நாமே அனுமதித்தவர்கள் ஆவோம்.

தயவு செய்து எல்லோரும் பொறுப்புடன் செயற்படுங்கள் என்று தான் மீண்டும்மீண்டும் கேட்கின்றேன்.

கொண்ட கொள்கையில் உறுதியுள்ளவர்கள் புகழ்ச்சியையும், புறக்கணிப்பையும் பொருட்படுத்துவதில்லை. பிறரின் அங்கீகாரங்களையும், வசவுகளையும் கண்டுகொள்ளாமல் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்வது நல்லது.

நன்றி  கிருபன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொண்ட கொள்கையில் உறுதியுள்ளவர்கள் புகழ்ச்சியையும், புறக்கணிப்பையும் பொருட்படுத்துவதில்லை. பிறரின் அங்கீகாரங்களையும், வசவுகளையும் கண்டுகொள்ளாமல் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்வது நல்லது.

கொள்கைகளோடு வாழ்வோரும் எங்களைப்போல மனிதர்கள்தானே கிருபன்  ?

சமாதான காலத்தில் பீபீசி மாணிக்கவாசகர் தொடக்கம் பல கொழும்பு ஊடகவியலாளர்கள் வன்னிக்கு போயிருந்தார்கள். அவர்கள் கரும்புலிகளை சந்திக்க ஆசைப்பட்டார்கள். சந்திப்புக்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டு கரும்புலிகள் ஊடகவியலாளர்கள் முன் வந்திருந்தார்கள்.

அப்போது ஒரு ஊடகர் கேட்டார் ஒரு கரும்புலியிடம் :- உங்கள் பெயர் என்ன ?

கரும்புலி :- என் பெயர் கரும்புலியென்றான். 

அந்தக் கரும்புலி நகைச்சுவையாவே தனது பெயரை அப்படிச் சொன்னான். உடனே கேள்வி கேட்ட ஊடகருக்கு சிரிப்பு வந்துவிட்டது. குறித்த கரும்புலியும் சிரித்துவிட்டான். உடன் அந்த ஊடகர் மற்றவர்களுக்கு அதிசயமாகச் சொன்னார். இங்கா கரும்புலி சிரிக்குது என.

அவர்களைப் பொறுத்தவரை கரும்புலி ஒரு ஆயுதமாகவே தெரிந்தான். ஆனால் அவன் எல்லோரையும் போன்ற மனிதன் என்பதை அவர்கள் உணராதிருந்தார்கள். அவர்கள் இரும்புகள் என்று நினைத்தார்களோ என்னவோ பின்னர் கரும்புலிகளைத் தொட்டுப்பார்க்க விரும்பி தொட்டுப்பார்த்தார்கள்.

அந்த ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட முகமூடியணிந்த கரும்புலி இன்று ஊனமுற்றவனாக ஒரு ஐரோப்பிய நாட்டில் இருக்கிறான். ஒருமுறை பழைய கதைகள் பற்றிய நினைவு கூர்தலின் போது மேற்படி சம்பவத்தைச் சொல்லி வேதனைப்பட்டான்.

கொள்கையில் பற்றுறுதியும் இலட்சியத்தில் உறுதியோடும் உள்ள ஒவ்வொரு போராளிக்குள்ளும் ஒரு இதயம் ஒரு மனம் மனிதங்களுக்கேயுரிய சகலமும் இருக்கும்.

புலிகளின் சரித்திரத்தை எழுதுவதில் எமக்கு நாமே எதிரிகள்.  :(

எதிரிகளோ அல்லது மாற்றுக் கருத்தாளர்களோ எழுதிவிட்டுப் போகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேர் அடிபட்டுவிட்டு, புலம்பெயர் சமூகம் ஒதுக்குதா என்றால் என்ன அர்த்தம்?? :D முகநூலும், டிவிட்டரும், இலக்கியச் சந்திப்பும் மட்டும் புலம்பெயர் சமூகம் இல்லை.. அப்படி நினைத்தால் அப்படியே கனவுலகில் இருந்துகொள்ள வேண்டியதுதான்.. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதிலை யாழைச் சேர்க்காமல் எஸ்கேப்பான உங்கள் ராஜதந்திரம் என்னை வியக்க வைக்குது மாம்ஸ்.. :D:lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் சமூகத்தை யாழ் களம் முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்யாது. இது ஒரு சமூக வலைத்தளம். முகநூல் போன்று சுய அடையாளத்தை வெளிப்படுத்தி உறுப்பினர்களாக வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே அதிகம் பழகாதவர்கள் மீது இயல்பாகவே ஒரு சந்தேகம், அதுவும் எவரையும் இலகுவில் நம்பாத 2009 மேக்குப் பிறகான கால கட்டத்தில், இருக்கவே செய்யும். அரசியல் பேசும் எவரையும் அவர்களின் பின்புலம் என்ன என்று தெரியாமல் யாரும் ஒரு அபிப்பிராயத்தைக் கூட இப்போது வைப்பது குறைவு. ஆகவேதான் யாழில் புதிதாக இணைந்து ஒருவர் எழுதும்போது அவர் உண்மையிலேயே புதியவரா அல்லது பழையவரா, தேசியத்தின் மீது பற்றுள்ளவரா அல்லது மாற்றுக் கருத்தாளரா என்றெல்லாம் கருத்துக்களை எப்படியான வகையில் கையாள்கின்றார்கள் என்று வைத்துதான் அளவிடமுடியும். இதுவும் பலவேளைகளில் சரியாக இருக்கும் என்று சொல்லமுடியாது.

அதேவேளை ஒருவர் தனது எழுத்துக்கள் மூலம் தன்னை ஒரு போராளி என்று இனங்காட்டினால் அவர் மீது மரியாதையும், பற்றும் உள்ள கருத்துக்கள்தான் யாழ்களத்தில் வருவதுண்டு. எனவே புறக்கணிக்கப்படுகின்றார்கள்/ஒதுக்கப்படுகின்றார்கள் என்பது எல்லாம் சரியான அவதானமாகக் கருதமுடியாது.

நம்பிக்கையீனம் நிறைந்த இந்தக் காலத்தில் நம்பிக்கையைப் பெறக் காலம் எடுக்கும். கருத்தியல் வேறுபாடு உடையவர்கள் மீதுகூட நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கு யாழில் பல உதாரணங்கள் உள்ளன.

  • கருத்துக்கள உறவுகள்

இதிலை யாழைச் சேர்க்காமல் எஸ்கேப்பான உங்கள் ராஜதந்திரம் என்னை வியக்க வைக்குது மாம்ஸ்.. :D:lol::icon_idea:

எழுதும்போது அப்படித் தோன்றவில்லை.. இருந்தாலும் உங்கள் ஆசையை கெடுப்பானேன்?? :unsure:

முகநூல், டிவிட்டர், கூகிள், யாஹூ, யாழ்.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுதும்போது அப்படித் தோன்றவில்லை.. இருந்தாலும் உங்கள் ஆசையை கெடுப்பானேன்?? :unsure:

முகநூல், டிவிட்டர், கூகிள், யாஹூ, யாழ்.. :D

பகிடிக்குத் தான் சொன்னேன் மாம்ஸ். :D

புலம்பெயர் சமூகத்தை யாழ் களம் முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்யாது. இது ஒரு சமூக வலைத்தளம். முகநூல் போன்று சுய அடையாளத்தை வெளிப்படுத்தி உறுப்பினர்களாக வேண்டிய கட்டாயம் இல்லை. எனவே அதிகம் பழகாதவர்கள் மீது இயல்பாகவே ஒரு சந்தேகம், அதுவும் எவரையும் இலகுவில் நம்பாத 2009 மேக்குப் பிறகான கால கட்டத்தில், இருக்கவே செய்யும். அரசியல் பேசும் எவரையும் அவர்களின் பின்புலம் என்ன என்று தெரியாமல் யாரும் ஒரு அபிப்பிராயத்தைக் கூட இப்போது வைப்பது குறைவு. ஆகவேதான் யாழில் புதிதாக இணைந்து ஒருவர் எழுதும்போது அவர் உண்மையிலேயே புதியவரா அல்லது பழையவரா, தேசியத்தின் மீது பற்றுள்ளவரா அல்லது மாற்றுக் கருத்தாளரா என்றெல்லாம் கருத்துக்களை எப்படியான வகையில் கையாள்கின்றார்கள் என்று வைத்துதான் அளவிடமுடியும். இதுவும் பலவேளைகளில் சரியாக இருக்கும் என்று சொல்லமுடியாது.

அதேவேளை ஒருவர் தனது எழுத்துக்கள் மூலம் தன்னை ஒரு போராளி என்று இனங்காட்டினால் அவர் மீது மரியாதையும், பற்றும் உள்ள கருத்துக்கள்தான் யாழ்களத்தில் வருவதுண்டு. எனவே புறக்கணிக்கப்படுகின்றார்கள்/ஒதுக்கப்படுகின்றார்கள் என்பது எல்லாம் சரியான அவதானமாகக் கருதமுடியாது.

நம்பிக்கையீனம் நிறைந்த இந்தக் காலத்தில் நம்பிக்கையைப் பெறக் காலம் எடுக்கும். கருத்தியல் வேறுபாடு உடையவர்கள் மீதுகூட நம்பிக்கை வைக்கலாம் என்பதற்கு யாழில் பல உதாரணங்கள் உள்ளன.

உண்மை தான் கிருபன் அண்ணா.

அதனால் தான் நான் வெளிப்படையாகவே வருவது என்று முடிவெடுத்தேன். ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டி இருக்கு. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

எழுதும் கருத்துக்களையும் பதிவுகளையும் நம்புவதும் நம்பாததும் வாசிப்பவர்களைப் பொறுத்தது.
வாசகர்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நாங்கள் எழுதுவோம் எனபதும் பதிவாளர்களை சிலர் ஓரங்கட்டுகின்றார்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்தாக இல்லை.

துணிந்து நில் தொடர்ந்து செல்
நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் உலகமே உங்கள் பின்  வரும் 

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் எழுதுபவர்கள் மட்டுமே புலம் பெயர் சமூகதின் பிரதிநிதிகளோ அல்லது அவர்களை பிரதி நிதிப்படுத்துபவர்களோ  அல்ல. அதனைத் தாண்டி வெளியே  வேறொரு உலகம் உள்ளது. ஆனால் இங்கு ஒரு சம்பவத்தை சரி எனவும் பிழை எனவும் வாதிட்டவர்கள்  ஒரே அமைப்பை சேர்ந்தவர்களே. நான் ஒரு கருத்தை மட்டும் வைத்து விட்டு அதுவும் புவியியல் ரீதியானது  அந்த கருத்தை வைத்து விட்டு விலகி விட்டிருந்தேன்.  ஆனால்  தொடர்ந்தும்  விவாதம் போய் அந்த திரி பூட்டப் பட்டது. ஆனால் நான் கருத்து வைத்ததற்காகவே  அதனை ஒரு குழு விவாதம் என்று ஒருவரும். நான் தான் கடைசியாய் வந்தவன் என்று  விவாதம் நீண்டு கொண்டே போய்  இன்று ஒரு புது திரி தொடங்கப் பட்டு விவாதிக்கப் படுகின்றது. இங்கு மொத்தத்தில் ஒன்று புரிகிறது  அதாவது  தலைமை என்று ஒன்று இல்லாமல்  தவறிப் போனவர்கள் எல்லாம் தங்களை தாங்களே  நிலை நிறுத்தவே  இப்பொழுது போராடுகிறார்கள். ஆனால் காலம் என்பது வேறு திசையில் போய்கொண்டிருக்கின்றது  அதனை இவர்கள் உணரும் போது  இவர்களை  இவர்களே நிராகரிக்க வேண்டிய  கட்டாயம் வரும்.  இங்கு நான் முன்னை நாள்  பின்னை நாள்  என்பதற்குள்  அடக்க விரும்பவில்லை சாதாரணமாய்  ஒரு கதை எழுதுபவன் அதே போல   யழ்  உறவுகளும் தங்களை  முன்னை நாள்  பின்னை நாள் போராளி  என்று வகைப் படுத்தி  அதற்குள்ளேயே  சுற்றி சுழலாமல்   தங்கள் வெளித் திறைமைகளிற்கூடாக   அவர்கள் தங்களை  தனித் தன்மையோடு அடையாளப் படுத்த வேண்டும்  இல்லையேல் .அவ்வளவுதான்.நன்றி. :icon_mrgreen: :icon_mrgreen:

Edited by sathiri

சம்மந்தப்பட்ட ஒரு திரியில் நானும் எனது கருத்தைப் பதிந்திருந்தேன்.  இரண்டு விடயத்தை எழுதினேன் முன்னாள் போராளிகளின்  கருத்து மதிக்கப்படவேணும் என்றும் அதே நேரம் முன்னாள் போராளிகளின் கருத்து போட்டி நிலைக் கருத்தாடலாக முன்னாள் போராளிகளுக்குள்ளாகவே தொடரும்போது திரியை மூடுவது நல்லது என்றும் எழுதியிருந்தேன்.

முன்னாள் போராளிகள் மதிக்கப்படவேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தி்ல்லை. அதே நேரம் முப்பது வருட போராட்ட வரலாற்றை, கள யதார்த்தங்களை முன்னாள் போராளிகள் தான் எழுதவேண்டும். ஒவ்வொரு போராளிகளிடமும் ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றது. அது அரசியல், போர்க்களம், என்று பலவாக இருக்கின்றது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரதேசங்களிலும் நடந்த சம்பவங்கள் அதில் சம்மந்தப்பட்ட போராளிகளுக்கே தெரிந்தவிடயங்கள். அவரவர்கள் தமக்குத் தெரிந்ததை எழுதுவதும் அவர்கள் செய்யும் கடமைதான். வரவேற்கப்படவேண்டியது. ஆனால் அவ்வாறு எழுதுவது என்பது ஒரு நோக்கத்தைக் கொண்டதாக இருக்கவேண்டும். ஒரு அனுபவப்பதிவாக ஒரு நாவலாக ஒரு சம்பவத்தின் விபரிப்பாக கதையாக எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம். இங்கு நடப்பது அதுவல்ல "நீ சொல்வது பிழை நான் சொல்வது சரி அப்படி நடந்திருக்கமுடியாது இப்படித்தான் சாத்தியம் என்ற தர்க்கம்." இவ்வாறான போக்கால் ஒரு காலத்தை பதிவுசெய்யமுடியாது. எனக்குத் தெரிந்ததை ஏன் நான் எழுதுகின்றேன் என்ற நோக்கில் தெளிவிருந்தால் நிச்சயம் அவர்கள் அனுபவங்கள் வரவேற்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. 

எனது சில வருட அனுபவத்தில் இக் கருத்துக்களத்தில் இரண்டு கருத்துக்கள் அல்லது பல கருத்துக்கள் மோதி முரண்பட்டு ஒரு புதிய புரிதலை ஏற்படுத்தியதாக நான் உணரவில்லை. கருத்தாளர்களே கருத்துக்கள் ஊடாக ஏதோ ஒரு ஏற்ற இறக்க நிலைக்கு செல்கின்றனர். அல்லது முற்படுகின்றனர். கருத்துக்களை விட கருத்தாளர்களே இங்கு முன்நிலையில் உள்ளனர் ஆதலால் உண்மை பொய் அனுபவங்களுக்கு அப்பால் எழுதப்படும் விடயம் கருத்தாடலுக்கு பலம் சேர்ப்பதை விட கருத்தாடுபவருக்கு பிடித்தமானதாக இருக்கவேண்டிய தூரதிஸ்டமான நிலை பெருமளவுக்கு இருக்கின்றது. இது எவ்விதத்தில் முன்னாள் போராளிகளின் அனுபவங்களுக்கும் அது சார்ந்த பதிவுகளுக்கும் சாதகமாக இருக்கும் என்பதை அவரவரே புரிந்துகொள்ளவேண்டியதுதான்.

புலிகள் இருக்கும் போது அவர்கள் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு ஆமாம் போட்டதால் தான் இன்று இந்த நிலை[அதைத் தான் இப்பவும் கொஞ்சப் பேர் யாழில் செய்யினம்].யார் சொல்கிறார்கள் என்று பார்க்காமல் என்ன சொல்கிறார்கள் அது சரியா/பிழையா என்று பார்த்தால் ஒரு பிரச்சனையுமில்லை  :)  

நான் பச்சை போட்டது இந்த கருத்துக்குத்தான் .

புலம் பெயர்த்தவர் சொல்லும் கதைகேட்டு காணமல் போனவர்கள் இவர்கள் நேற்று ஒரு அண்ணனின் நிலை தகவல் .

2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் செல்வராசா கஜேந்திரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவர் 112,077 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

இவருக்கு அடுத்த இடத்தை பத்மினி சிதம்பரநாதனும் (68,240) கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் (60,770) பெற்றுக் கொண்டனர்.

புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் ஆசியோடு இந்த மூவரும் 2010இல் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாகப் போட்...டியிட்டனர். 2004இல் ஏறக்குறைய 240,000 விருப்பு வாக்குளை பெற்றிருந்த இந்த மூவரும் சேர்ந்து உருவாக்கிய கட்சி அந்தத் தேர்தலில் வெறும் 7,544 வாக்குகளையே பெற்றது.

கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் தமது ஆதரவு இல்லை என்பதை தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் முகத்தில் அறைந்தது போல் தெரிவித்திருந்தனர்.

எனோ! தெரியவில்லை! இதையெல்லாம் மீண்டும் சிலருக்கு நினைவுபடுத்த வேண்டும் போல் தோன்றியது. அதுதான் சொல்லியிருக்கிறேன்.

திரியின் தலைப்புக்குச் சற்று வெளியே போனாலும் இவை உண்மையான கருத்துக்கள். நான் இதை வேறொரு திரியில் எழுத நினைத்திருந்தேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் சரித்திரத்தை எழுதுவதில் எமக்கு நாமே எதிரிகள்.  :(

எதிரிகளோ அல்லது மாற்றுக் கருத்தாளர்களோ எழுதிவிட்டுப் போகட்டும்.

புலிகளின் சரித்திரம் வெறும் கற்பனையாகவும் மிகைப்படுத்தப்பட்டும் வராமல் உண்மை வரவேண்டுமென்று விரும்புவோரின் ஆதங்கம் அது புரிந்து கொள்ளப்படவில்லை இணையவன்.

மாற்றுக்கருத்தாளன் மாற்றானாகவே நின்று எழுதிவிட்டுப் போகிறார்கள்.

ஆனால் தன்னையொரு புலிவீரன் என்று அடையாளப்படுத்துகிற ஒரு வீரன் குறைந்தபட்சம் தான் மதித்த இயக்கம் அது தொடர்பான வரலாறு சரியாக எழுதப்படுவதையாவது செய்ய வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாலு பேர் அடிபட்டுவிட்டு, புலம்பெயர் சமூகம் ஒதுக்குதா என்றால் என்ன அர்த்தம்?? :D முகநூலும், டிவிட்டரும், இலக்கியச் சந்திப்பும் மட்டும் புலம்பெயர் சமூகம் இல்லை.. அப்படி நினைத்தால் அப்படியே கனவுலகில் இருந்துகொள்ள வேண்டியதுதான்.. :rolleyes:

இசை,

கருத்துக்களத்தில் மட்டுமல்ல முந்தி வந்தவர்களால் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டுத்தான் இன்று அங்கங்கு 2மாவீரர்நாள் 2செயற்பாடுகள் என பிரிவுகளையும் உருவாக்கிவிட்டுள்ளது. இந்த சில நாலுபேரின் வல்லமைதான்.

 தலைவர் பிரபாகரன் 30வருடம் முதல் போராட்டத்தை ஆரம்பித்த போது ஆயிரக்கணக்கில் அவர் பின்னால் ஆட்கள் இருக்கவில்லை.

ஒற்றைத் துவக்கோடுதான் போராட ஆரம்பித்து சில நாலுபேருடன் தொடங்கிய இயக்கத்தை பலபத்தாக்கி, பலநூறாக்கி, ஆயிரமாக்கி  ,பல்லாயிரமாக்கி  பல்துறைசார் படையணிகளை உருவாக்கி  புலிகள் என்ற அடையாளத்தை நிலைநிறுத்த பல்லாயிரம் பேருக்கான அடையாளம் ஆகி நின்றவர் தலைவர் பிரபாகரன்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை,

1-கருத்துக்களத்தில் மட்டுமல்ல

2-முந்தி வந்தவர்களால் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டுத்தான்

3-இன்று அங்கங்கு 2மாவீரர்நாள் 2செயற்பாடுகள் என பிரிவுகளையும் உருவாக்கிவிட்டுள்ளது.

4-இந்த சில நாலுபேரின் வல்லமைதான்.

சாந்தி

அனுபவ சாலியான தாங்களே  இவ்வாறு பிடிகொடுக்காமல்

தொப்பியை  எறியலாமா???

முக்கியமாக முந்தி  வந்தவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது....

1980களில்?

1990 களில்??

2000 களில்

2002 இல்

அல்லது

2009 இல்...................??? :(  :(  :( 

(2009 இல் அதாவது முள்ளிவாய்க்காலுக்கு முன்)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூற்றாண்டில், இந்த உலகத்தில் வாழும் தமிழர்கள் தங்களைத் தாங்களே பார்த்து அறிந்து கொள்வதற்கு ஒளியாக வந்து உதவியவர்தான் பிரபாகரன். அவர்மூலமாகவே ஈழவிடுதலைப் போராளிகளைக் காணமுடிந்தது. மாவீரர்களை அறியமுடிந்தது. பிரபாகரன் என்ற ஒளியை ஏற்க மறுத்தவர்களையும் உலகம் கண்டது. அந்த ஒளியை அழிக்க அல்லது மறைக்க முயன்றவர்களை துரோகிகளாக, பினாமிகளாக, ஒட்டுக்குழுக்களாக அவ்வொளியே இனம்காட்டியது. இன்று அந்த ஒளி மறைக்கப்பட்டதும் எதனையும் கண்டுகொள்ள முடியாத நிலை..., உண்மையன போராளிகளையும் கூட இனம் கண்டுகொள்ள முடியாத அவலம் ஏற்பட்டுள்ளது.

இனி ஒரு ஒளி தோன்றும்வரையில், இருட்டில் வாழ்ந்தாலும், வாழ்வதற்கு வேண்டியவற்றைத் தேடிக்கொள்வது அவசியம். முத்துச்சிப்பிகளானாலும் அனைத்துச் சிப்பிகளிலும் முத்துக்கள் இருக்காது. அதற்காக சிப்பிகள் முழுவதையும் ஒதுக்கிவிட்டால் ஒரு முத்தும் கிடைக்காது என்பதையும் தமிழர்கள் புரிந்து செயற்பட வேண்டும். இதனால் பாதிப்புகள் ஏற்படலாம், ஏற்படும் என்பதையும் மறுக்க முடியாது. முள்ளிவாய்காலை விடவுமா பெரும் பாதிப்பு வந்துவிடும்?.

  • கருத்துக்கள உறவுகள்

 .

2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் செல்வராசா கஜேந்திரன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். இவர் 112,077 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.

இவருக்கு அடுத்த இடத்தை பத்மினி சிதம்பரநாதனும் (68,240) கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் (60,770) பெற்றுக் கொண்டனர்.

புலம்பெயர் அமைப்புக்கள் சிலவற்றின் ஆசியோடு இந்த மூவரும் 2010இல் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனியாகப் போட்...டியிட்டனர். 2004இல் ஏறக்குறைய 240,000 விருப்பு வாக்குளை பெற்றிருந்த இந்த மூவரும் சேர்ந்து உருவாக்கிய கட்சி அந்தத் தேர்தலில் வெறும் 7,544 வாக்குகளையே பெற்றது.

கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் எந்த ஒரு செயற்பாட்டுக்கும் தமது ஆதரவு இல்லை என்பதை தாயகத்தில் வாழ்கின்ற மக்கள் முகத்தில் அறைந்தது போல் தெரிவித்திருந்தனர்.

எனோ! தெரியவில்லை! இதையெல்லாம் மீண்டும் சிலருக்கு நினைவுபடுத்த வேண்டும் போல் தோன்றியது. அதுதான் சொல்லியிருக்கிறேன்.

பலர் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது தான் உண்மை. கஜேந்திரகுமார் அவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்.

அவர்கள் மக்களால் ஒதுக்கப்படவில்லை

 கூட்டமைப்பு என்பது பல கட்சிகள் சார்ந்து இருந்ததால் மக்கள் அவர்களை முன்னிறுத்தி வாக்களித்தனர்.

தீவிர அரசியலை அன்றைய நிலையில் மக்கள் ஆதரிக்கவில்லை என்பதைவிட

சிங்கள அரசினால் அவர்களுக்கு ஏற்பட்ட தடைகளும்

ராணுவ அச்சுறுத்தல்களுமே காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் அவர்களின் இடத்தில் கஜேந்திரன் அல்லது கஜேந்திரகுமார் போட்டியிட்டிருந்தாலும் அமோகமாக வென்றிருப்பார்கள்..! :rolleyes:

பலர் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது தான் உண்மை. கஜேந்திரகுமார் அவர்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்.

அவர்கள் மக்களால் ஒதுக்கப்படவில்லை

 கூட்டமைப்பு என்பது பல கட்சிகள் சார்ந்து இருந்ததால் மக்கள் அவர்களை முன்னிறுத்தி வாக்களித்தனர்.

தீவிர அரசியலை அன்றைய நிலையில் மக்கள் ஆதரிக்கவில்லை என்பதைவிட

சிங்கள அரசினால் அவர்களுக்கு ஏற்பட்ட தடைகளும்

ராணுவ அச்சுறுத்தல்களுமே காரணம்.

புலிகள் சுட்டு விரலை யாரை நோக்கி காட்டினாலும் அங்கு வாக்கு விழும் அவர் அப்பானா இருந்தாலும் சரி சுப்பனா இருந்தாலும் சரி ரணிலை புறக்கணி என ஒரு வார்த்தை ராஜபக்ஷா அமோக வெற்றி இப்படிதான் மக்கள் புலிகள் மேல் வைத்த நம்பிக்கை அதை தனிமனிதன் தங்களுக்கு சார்பா பாவிக்க முனைத்தால் முடிவு வெளியேற்றப்படுவர் என்பதே கருணாவா இருந்தாலும் கேபியா இருந்தாலும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.